Jump to content

முடியுமானால் முயற்ச்சியுங்கள்


Recommended Posts

பதியப்பட்டது

செல் தயாரிக்கும் தொழிச்சாலை ஒன்றில். ஒரு கிலோ செல் தயாரிக்கும் இயந்திரம் 10 உள்ளது அதில் ஒன்று பழுதடைந்து விட்டது. பழுதடைந்ததால் ஒரு கிரம் (1001) கூடுதலாக தயாரிக்கின்றது அதைக்கண்டு பிடிக்க ஒருவர் வந்து பத்து இயந்திரம் செய்த செல்லையும் எடுத்து ஒருக்கா நிறுத்து இத்தனையாவது இயந்திரம் பழுது என்று சொல்லிவிட்டுப்போறார் அவர் எப்படிக்கண்டுபிடித்து இருப்பார்?

விதிமுறை

எத்தனை செல்லும் நிறுக்கலாம் ஒருமுறைதான் நிறுக்கவேண்டும்.

  • Replies 152
  • Created
  • Last Reply
Posted

ஆம்மாம் அப்படி இல்லாட்டி உடன் கண்டு பிடித்து விடலாமே நிலா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

முதலாவது இயந்திரம் தயாரித்த செல்களில் ஒரு செல்லும், இரண்டாவது இயந்திரம் தயாரித்த செல்களில் இரு செல்லும், மூன்றாவது இயந்திரம் தயாரித்த செல்களில் மூன்று செல்லும் என்ற அடிப்படையில் பத்தாவது இயந்திரம் தயாரித்த செல்களில் பத்து செல்லும் எடுத்து தராசில் வைக்கவும்.

பத்து இயந்திரத்திலும் எடுத்த செல்களின் மொத்த நிறை 55 கிலோ.

உதாரனத்திற்கு மொத்த எடை 55.001 ஆனால் முதலாவது இயந்திரம் பழுதெனக் கொள்ளலாம்.

55.002 கிலோ ஆனால் இரண்டாவது இயந்திரம் பழுது

55.003 கிலோ ஆனால் மூன்றாவது இயந்திரம் பழுது

55.004 கிலோ ஆனால் நாங்காவது இயந்திரம் பழுது

55.005 கிலோ ஆனால் ஐந்தாவது இயந்திரம் பழுது

55.006 கிலோ ஆனால் ஆறாவது இயந்திரம் பழுது

55.007 கிலோ ஆனால் ஏழாவது இயந்திரம் பழுது

55.008 கிலோ ஆனால் எட்டாவது இயந்திரம் பழுது

55.009 கிலோ ஆனால் ஒன்பதாவது இயந்திரம் பழுது

55.010 கிலோ ஆனால் பத்தாவது இயந்திரம் பழுது

பதில் சரியா??

Posted

நன்றி சுரேஸ் உங்கள் முயற்சிக்கு விடை சரி

வாழ்த்துக்ள்

Posted

நான் 3 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 5 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 8 லீற்ரர் கொள்கலன் ஒன்றும் வைத்துள்ளேன் அதில் 8 லீற்ரர் கொள்கலனில் 8 லீற்ரர் பால் இருக்கின்றது இன்னொருவர் வந்து தனக்கு 4 லீற்ரர் தரும்டி கேக்கின்றார் நான் இவ் மூன்று கொள்கலன்களையும் வைத்துக்கொண்டு அரைகுறையாக அளக்காமலும் கைக்கணக்கில் ஊற்ராமலும் சரியாக 4 லீற்ரர் பால் கொடுத்து விட்டு மிகுதி 4 லீற்ரர் பாலை நான் கொண்டு போகின்றேன் எப்படி நான் பாலை அளந்து கொடுத்திருப்பேன் முடியுமானால் முயற்சியுங்கள்.

நன்றி

Posted

நான் 3 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 5 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 8 லீற்ரர் கொள்கலன் ஒன்றும் வைத்துள்ளேன் அதில் 8 லீற்ரர் கொள்கலனில் 8 லீற்ரர் பால் இருக்கின்றது இன்னொருவர் வந்து தனக்கு 4 லீற்ரர் தரும்டி கேக்கின்றார் நான் இவ் மூன்று கொள்கலன்களையும் வைத்துக்கொண்டு அரைகுறையாக அளக்காமலும் கைக்கணக்கில் ஊற்ராமலும் சரியாக 4 லீற்ரர் பால் கொடுத்து விட்டு மிகுதி 4 லீற்ரர் பாலை நான் கொண்டு போகின்றேன் எப்படி நான் பாலை அளந்து கொடுத்திருப்பேன் முடியுமானால் முயற்சியுங்கள்.  

நன்றி

1. 8 லீற்றர் பாலை 3 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும்.

2. தற்போது மிகுதி 5 லீற்றர் பால்.

3. 5 லீற்றர் கொள்கலன் வெறுமையாகவுள்ளது.

4. பின்னர் 3 லீற்றர் கொள்கலனுக்குள்ள 3 லீற்றர் பாலை 5 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும்.

5. தற்போது 3 லீற்றர் கொள்கலன் வெறுமையாகவுள்ளது.

6. பின்னர் 8 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள பாலை 5 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும்.

7. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் 2 லீற்றர் பால் மிகுதியாகவுள்ளது.

8. பின்னர் 3 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள பாலை 3 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும்.

9. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் 2 லீற்றரும்

10. 5 லீற்றர் கொள்கலனுக்குள் 5 லீற்றர் பாலும்

11. 3 லீற்றர் கொள்கலனுக்குள் 1 லீற்றர் பாலும் உள்ளன.

12. தற்போது 5 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள பாலை 8 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும்.

13. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் மொத்தமாக 7 லீற்றர் பால் உண்டு.

14. பின்னர் 3 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள 1 லீற்றர் பாலை 5 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும்.

15. தற்போது 5 லீற்றர் கொள்கலனுக்குள் 1 லீற்றர் பாலுள்ளது.

16. தற்போது 3 லீற்றர் கொள்கலன் வெறுமையாகவுள்ளது.

17. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள பாலை 3 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும்.

18. ஊற்றிய பின் 8 லீற்றர் கொள்கலனுக்குள் 4 லீற்றர் பால் மிகுதியாக வரும்.

19. இதை நீங்கள் 4 லீற்றராக விற்றாலும் சரி அடுத்த இரு கொள்கலங்களுக்குள் உள்ள பாலை விற்றாலும் சரி எங்களுக்குப் பரவாயில்லை

20. விற்ற பின் வாழைக்குலை வியாபாரத்திற்குக் கிளிநொச்சிச் சந்தைக்குப் போக வேண்டியது தான்.................

21. பதில் சரியா?

Posted

புயல் என்னால் சந்தைக்கு போகமுடியாது ஏன் தெரியுமா உங்களுடைய பால் கணக்கு செய்முறை பிளை இன்னும் ஒருக்கா முயற்சியுங்யள்.

Posted

புயல் என்னால் சந்தைக்கு

போகமுடியாது ஏன் தெரியுமா உங்களுடைய பால் கணக்கு செய்முறை பிளை இன்னும் ஒருக்கா முயற்சியுங்யள்.

எங்கே பிழை என்பதைச் சுட்டிக் காட்ட முடியுமா...?
Posted

நான் 3 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 5 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 8 லீற்ரர் கொள்கலன் ஒன்றும் வைத்துள்ளேன் அதில் 8 லீற்ரர் கொள்கலனில் 8 லீற்ரர் பால் இருக்கின்றது இன்னொருவர் வந்து தனக்கு 4 லீற்ரர் தரும்டி கேக்கின்றார் நான் இவ் மூன்று கொள்கலன்களையும் வைத்துக்கொண்டு அரைகுறையாக அளக்காமலும் கைக்கணக்கில் ஊற்ராமலும் சரியாக 4 லீற்ரர் பால் கொடுத்து விட்டு மிகுதி 4 லீற்ரர் பாலை நான் கொண்டு போகின்றேன் எப்படி நான் பாலை அளந்து கொடுத்திருப்பேன் முடியுமானால் முயற்சியுங்கள்.

நன்றி

1. 8 லீற்றரை 3 லீற்றருக்குள் ஊற்றவும்.

2. 3 லீற்றருக்குள் ஊற்றியதை 5 லீற்றருக்குள் ஊற்றவும்.

3. மீண்டும் மிஞ்சிய 7 லீற்றரில் 3 லீற்றரை 3 லீற்றருக்குள் ஊற்றவும்.

4. மீண்டும் இரண்டாவது முறை ஊற்றிய பாலை திரும்பவும் 5 லீற்றருக்குள் ஊற்றவும்.

5. தற்போது 3 லீற்றருக்குள் 1 லீற்றர் பால் மிகுதியாக உள்ளது.

6. பின்னர் 5 லீற்றரை 8 லீற்றருக்குள் ஊற்றவும்.

7. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் 7 லீற்றர் பாலுள்ளது.

8. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள 7 லீற்றர் பாலை 3 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும்.

9. தற்போது மிகுதி 4 லீற்றரை விற்ற பின்

10. சந்தைக்குப் போகலாம் தானே, போகலாம் தானே இல்லை போறீங்கள்.

நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்.

Posted

8 லீற்றர் கொள்கலனிலிருந்து

5 லீற்றர் கொள்கலனிற்குள் ஊற்றவும்.

பின் 5 லீற்றர் கொள்கலனிலிருந்து 3 லீற்றர் கொள்கலனிற்குள் ஊற்றவும்

இப்போது 5 லீற்றர் கொள்கலனில் 2 லீற்றர் பால் உள்ளது.

3 லீற்றர் கொள்கலனில் இருக்கும் பாலை 8 லீற்றர் கொள்கலனில் ஊற்றிவிட்டு 5 லீற்றர் கொள்கலனில் இருக்கும் 2 லீற்றர் பாலை 3 லீற்றர் கொள்கலனுள் ஊற்றவும்.

தற்போது,

8 லீற்றர் கொள்கலனில் 6 லீற்றர் பாலும் 5 லீற்றர் கொள்கலன் வெறுமையாகவும் 3 லீற்றர் கொள்கலனில் 2 லீற்றர் பாலும் உள்ளது.

மீண்டும் 8 லீற்றர் கொள்கலனில் இருக்கும் 6 லீற்றர் பாலை 5 லீற்றர் கொள்கலனிற்குள் ஊற்றவும்.

இப்போது 8 லீற்றர் கொள்கலனில் 1 லீற்றர் பாலும் 5 லீற்றர் கொள்கலனில் 5 லீற்றர் பாலும் 3 லீற்றர் கொள்கலனில் 2 லீற்றர் பாலும் உள்ளன.

இனி, 5 லீற்றர் கொள்கலனில் இருக்கும் பாலை 3 லீற்றர் கொள்கலனிற்குள் ஊற்றவும். ஏற்கனவே 3 லீற்றர் கொள்கலனிற்குள் 2 லீற்றர் பால் இருப்பதால் 1 லீற்றர் பாலையே ஊற்றமுடியும்.

ஆகவே இறுதியில், 8 லீற்றர் கொள்கலனில் 1 லீற்றர் பாலும், 5 லீற்றர் கொள்கலனில் 4 லீற்றர் பாலும், 3 லீற்றர் கொள்கலனில் 3 லீற்றர் பாலும் காணப்படும்.

Posted

நன்றி அருபி உங்கள் முயச்சிக்கு வாழ்த்துக்கள் சரியான விடையை தந்ததுக்கு ஆனால் புயல்தான் என்ன குழப்பு குழப்பென்று குழப்பிவிட்டார்

அருவி இதை இன்னும் ஒரு முறையில் செய்யலாம் எப்படி என்றால்

1) 8 லீற்றர் கலனில் உள்ளபாலலை 3 லீற்றர் கலனுக்கு ஊற்ர வேண்டும். பின் 3ற்குள் உள்ளதை 5ற்குள் உற்றர வேண்டும் உற்ரினால்

2) 8 ற்குள் 5 லீற்றர் பாலும் 5 ற்குள் 3 லீற்றர் பாலும் 3 ற்குள் வெறுமையாகவும் இருக்கு

3) பின் 8 ற்குள் இருந்து 3 ற்குள் ஊற்றர வேண்டும்

4) இப்பொழுது 5ற்க 3ம். 3ற்குள் 3ம். 8ற்க 2ம் உள்ளது.

5) இனி 3 ற்குள் உள்ளதை 5 ற்குள் ஊற்ரவேண்டும்.

6) இப்பொழுது 5ற்க 5 லீற்றர பாலும் 3ற்க 1 லீற்றர் பாலும் 8 ற்க 2 லீற்றர் பாலும் உள்ளது

7) அடுத்தாக 5ற்க உள்ளதை 8 ற்க ஊற்றர வேண்டும் இப்;பொழுது 8ற்க 7லீற்றர் பாலும் 3ற்க 1 லீற்றர பாலும் 5து வெறுமையாகவும் உள்ளது

இனி 3ற்க உள்ள 1லீற்றர் பாலை 5ற்க ஊற்றவேண்டும்.

9) இப்பொழுது 8ற்க 7லீற்றர் பாலும் 5ற்க 1லீற்றர் பாலும் 3லீற்றர கலன் வெறுமையாகவும் உள்ளது

10) 8ற்க உள்ளபாலை 3ற்க ஊற்றி 3ற்க உள்ளதை 5ற்க ஊற்றினால் 5ற்க 4லும் 8ற்க 4ம் வரும் சரிதானே அருவி

நன்றி புயல் உங்கள் முயற்சிக்கும் இந்த முறையில்தான் நீங்கள் செய்தநீங்கள் இடையில் பிளை விட்டு விட்டியல்

Posted

தங்கை நிலா

புயல்

சுபித்திரன்

சுரேன் அனைவரும் தயவுசெய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் நான் கேட்ட அப்பக்கணக்கில் தவறு ஒன்று நடந்து விட்டது உங்களை சிரமப்படுத்தியதுக்கு மிகவும் வருந்துகிறேன் மன்னிப்பீர்களா?

இதையும் முயற்ச்சியுங்கள் 20 அப்பத்தை 20 பேருக்கு பங்பிடனும்இ

01) ஆண்கள் இரண்டு அப்பம் சாப்பிடுவார்கள்

02) பெண்கள் அரை அப்பம் சாப்பிடுவார்கள்

03) பிள்ளைகள் கால் அப்பம் சாப்பிடுவார்கள்

20 அப்பத்தை 20 பேருக்கு பங்கிடணும் ஆன்களஇ பிள்ளைகள்இ பெண்கள் அனைவரும் வரனும்

நன்றீ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நான் கணக்கில வீக்

Posted

இரண்டாவது தடவை இதைத் தானே நான் செய்துள்ளேன்.

Posted

இதையும் முயற்சியுங்கள். 20அப்பம் இருக்கு 20 பேருக்கு பங்கிடனும்  

01) ஆன்கள் முழு அப்பம் சாப்பிடுவார்கள்.

02) பெண்கள் அரைப்பங்கு அப்பம் சாப்பிடுவார்கள்.

03) பிள்ளைகள் கால்ப்பங்கு அப்பம் சாப்பிடுவார்கள்

20அப்பத்தை 20 பேருக்கு பங்கிட்டு எத்தனை ஆன்கள் எத்தனை பெண்கள். எத்தனை பிள்ளைகள் என்பதை காட்டுங்கள்

நன்றி

நான் நினைக்கின்றேன்

20 அப்பத்தை 20ஆண்களுக்கு பகிர்ர்ந்தால்தான் 20பேருக்கு கொடுக்கமுடியும். மற்றவர்களுக்கு பகிரும்போது தொகை கூடிவிடுமே? :roll:

Posted

1. 8 லீற்றரை 3 லீற்றருக்குள் ஊற்றவும்.

2. 3 லீற்றருக்குள் ஊற்றியதை 5 லீற்றருக்குள் ஊற்றவும்.

3. மீண்டும் மிஞ்சிய 7 லீற்றரில் 3 லீற்றரை 3 லீற்றருக்குள் ஊற்றவும்

புயல் முதலாவது சரி இரண்டாவத சரி இப்பொழுது 5லீற்றர கலனில் 3 லீற்றர் உள்ளது 3லீற்றர் வெறுமையாக உள்ளது அது எப்படி மூன்றாவதில் மீண்டும் மிஞ்சிய 7 லீற்றரில் 3 லீற்றரை மூன்று லீற்றர் கலனில் உற்றவும் என்றுள்ளீர்கள் ஏக்கனவே 5 லீறறர் கலனில் 3 லீற்றர் இருக்கும் பொழுது எப்படி உங்களுக்கு மிகுதி 7 லீற்றர் வந்தது அதுதான் பிழை

Posted

ஆண்கள.; பெண்கள். பிள்ளைகள் வரவேண்டும் 20 பேருக்குள் முயச்சியுங்கள்.

Posted

ஆண்கள.; பெண்கள். பிள்ளைகள் வரவேண்டும் 20 பேருக்குள் முயச்சியுங்கள்.

வெற்றிச்செல்வன் அண்ணா இக்கணக்கு சரியா? ஒருக்கா வடிவாக பாருங்கோண்ணா. நிறைய தடவை பகிர்ந்து பார்த்தேன் முடியல்லை அண்ணா :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வெற்றிச்செல்வன் அண்ணா இக்கணக்கு சரியா? ஒருக்கா வடிவாக பாருங்கோண்ணா. நிறைய தடவை பகிர்ந்து பார்த்தேன் முடியல்லை அண்ணா :cry:

வெண்ணிலா அக்கா சொல்வது சரி.

ஒன்றில் 20 பேருக்கு கூட இருக்க வேண்டும்.

அல்லது 20 அப்பத்திற்குக் குறைய இருக்க வேண்டும்.

20 அப்பம் 20 பேருக்கு என்றால் இது தான் சரியான பதில்.

20 ஆண்கள்

0 பெண்கள்

0 பிள்ளைகள்

Posted

இதையும் முயற்சியுங்கள். 20அப்பம் இருக்கு 20 பேருக்கு பங்கிடனும்

01) ஆன்கள் முழு அப்பம் சாப்பிடுவார்கள்.

02) பெண்கள் அரைப்பங்கு அப்பம் சாப்பிடுவார்கள்.

03) பிள்ளைகள் கால்ப்பங்கு அப்பம் சாப்பிடுவார்கள்

20அப்பத்தை 20 பேருக்கு பங்கிட்டு எத்தனை ஆன்கள் எத்தனை பெண்கள். எத்தனை பிள்ளைகள் என்பதை காட்டுங்கள்

நன்றி

வெற்றிச்செல்வன் கூடுமானவரை முயற்சி செய்தாகிவிட்டது, என்னால் முடியவில்லை. சிலவேளை வெண்ணிலா கூறியுள்ளது போல....................................... இல்லையென்றால் உங்களின் பதிலைக் கண்டு மீண்டும் முயற்சித்துப் பார்க்கலாம்.

Posted

வெற்றிச்செல்வன் அண்ணா எவ்வளவோ முயற்சித்தும் முடியல்லை. எனவே உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றோம். ஒரு தடவை இப்பக்க்கம் வந்துட்டு போங்கோண்ணா :P

சிலவேளை அண்ணாக்கும் விடை தெரியாதோ? :wink:

Posted

இதையும் முயற்சியுங்கள். 20அப்பம் இருக்கு 20 பேருக்கு பங்கிடனும்

01) ஆன்கள் முழு அப்பம் சாப்பிடுவார்கள்.

02) பெண்கள் அரைப்பங்கு அப்பம் சாப்பிடுவார்கள்.

03) பிள்ளைகள் கால்ப்பங்கு அப்பம் சாப்பிடுவார்கள்

20அப்பத்தை 20 பேருக்கு பங்கிட்டு எத்தனை ஆன்கள் எத்தனை பெண்கள். எத்தனை பிள்ளைகள் என்பதை காட்டுங்கள்

நன்றி

வெற்றி அண்ணா இக்கணக்கு விகித அடிப்படையில் தான் பார்க்கணும். எவ்வளவோ முயன்றும் முடியல்லை. நீங்க சொல்வது

ஒரு ஆண் 1 அப்பம் சாப்பிட்டால் பெண் அரைப்பங்கு சாப்பிடுவாள் குழந்தைகள் கால்ப்பங்கு சாப்பிடுவர்கள். எனவே ஒரு ஆண் 2 சாப்பிடும் போது பெண் 1 சாப்பிடுவாள் அப்படித்தானே? இல்லை ஒரு ஆண் 1 அப்பம் மட்டும் தான் சாப்பிடலாமா? :wink: :?:

என்ன கேள்வியை கேட்டுவிட்டு எங்களை குழப்பி போட்டு உங்களை இந்தப்பக்கம் காணக்கிடைக்குதில்லை. என்னாச்சு? :evil: :evil:

Posted

:roll: :roll: இதென்ன ஒரு பெட்டியை போட்டுட்டு விட்டு இருக்கிறீங்க?

ஹலோ வெற்றிச்செலவன் அண்ணா 20 அப்பம் சுட்டுட்டு 20 பேரை கூப்பிட்டு பிரிச்சு குடுக்க போறியளா இல்லையா? :twisted: :evil: :twisted: :evil: :twisted: :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.