Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளை மாளிகை நோக்கி ஒர் வேண்டுகோள் !

Featured Replies

வெள்ளை மாளிகை நோக்கி ஒர் வேண்டுகோள் !

By naatham On 4 Aug, 2012 At 03:32 PM |

wh-300x146.jpgஎதிர்வரும் ஒக்ரோபர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா தொடர்பிலரான மீளாய்வுக் கூட்டத் தொடரினை மையப்படுத்திஅமெரிக்காவின் வெள்ளைமாளிகையினை நோக்கி மின்னொப்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஐ.நா மீளாய்வு விவாத்தில் இலங்கையின் மனித உரிமைகளின் முன்னேற்றங்களை பற்றி 2008ம் ஆண்டய அறிக்கையில் சபையால் கவனயீர்ப்புச் செய்யப்பட்டு இருப்பவற்றின் தொடராகவே இருக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது.

ஆனால் அந்தக் கவனயீர்ப்புக்குப் பிந்திய காலப்பகுதியில் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் பெரும் இனப்படுகொலையே நடந்தேறியுள்ள நிலையில் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை விவாதக்களத்தில் அமெரிக்காவின் காத்திரமான வகிபாகத்தினைக் கோரும் வகையில் இந்த மின்னொப்பத்திற்கான அழைப்பு வந்துள்ளது.

https://petitions.wh...rently/JSWTndkJ என்ற வெள்ளை மாளிகைத் தளத்திற்குச் சென்று பயனர் பதிவொன்றினை ஏற்படுத்தி குறித்த http://wh.gov/r5py இந்த இணைய முகவரியில் மின்னொப்பம் இடுமாறு கோரப்பட்டுள்ளது.

ஒகஸ்ற் 30ம் நாளுக்கு முன்னர் இதனை மேற்கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமெரிக்கப் பிரதிநிதிகளில் ஒருவரான துணை அமைச்சர் சுபா சுந்தரலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்

http://naathamnews.com/?p=7382

http://www.yarl.com/forum3/index.php?showtopic=105911

Edited by மல்லையூரான்

தொழாரே இதை பற்றி விரிவாக சொல்ல முடியுமா..... எமக்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை .... தயவு செய்து பதில் அனுப்பவும் .....

  • தொடங்கியவர்

[size=4] ஐநா மனித உரிமைகள் சபையில் சுழற்சி முறைப்படி அங்கத்துவ நாடுகளை அவதானித்து சமர்ப்பிக்கும் அறிக்கைக்கு இலங்கையின் தடவை வருகிற ஒக்டோபரில் ஆரம்பமாகும் கூட்டத்தொடரில் வருகிறது. இது அங்கத்தவர்களால் அங்கத்தவர்களை அவதானிப்பது. கடந்த தடவை 2008 இல் இலங்கை பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை இலங்கை தனது பிரபல அட்டூளிய்ங்களை ஆரம்பிக்க முதல் ஆகும்.

ஆனால் இந்த முறை அறிக்கையில் அது வந்த பின்னர்தான் அதில் இலங்கையின் என்ன குளறுபடிகள் சொல்லப்படுகின்றது என்பது தெரிய வரும். மேலும் விசாரித்த நாடுகளில் இந்தியா போன்ற இலங்கையின் நண்பர்களும் அடங்கியிருந்தார்கள். எனவேதான் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அறிக்கை எவ்வளவு பிரயோசனமாக இருக்கும் என்பது தெரியாது.

நாடுகடந்த அரசு அமெரிக்காவின் கவனத்தை இலங்கை அறிக்கை மீது திருப்ப முயல்கிறது. அமெரிக்கா தனது அரசியல் மூலம் கிட்டத்தட்ட எல்லாநாடுகளின் அரசியலிலும் தலையிடுவதால் இதையும் நூறில் ஒன்றாக போகவிட்டுவிடாமல் இருக்க ஒருமுயற்சியாக நாடுகடந்த அரசு இந்த மனுவை அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்க முயல்கிறது. அது வெள்ளை மாளிகையால் கவனத்தில் எடுக்கப்பட 25,000 கைழுத்துக்கள் தேவை. ஆனால் இது வரையில் 29 நபர்கள்தான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

நீங்கள் வெள்ளை மாளிகையில் உங்கள் மின்னல் அஞ்சல் முகவரியை பதிவு செய்தவராயின் இந்த முகவரிக்கு நேரே சென்று அதில் காட்டப்படும் முறைகளின் படி கையெழுத்திடலாம்.

https://petitions.wh...rently/JSWTndkJ

நீங்கள் இதுவரையில் வெள்ளைமாளிகையில் உங்கள் மின்னல் அஞ்சலை பதிவுசெய்யாதவராயின் கீழே உள்ள இணைப்பை பாவித்து பதிவு செய்துகொள்ளுங்கள். நீங்கள் பதிவு செய்தபின்னர் உங்களுக்கு வெள்ளை மாளிகை ஒரு மின்னல் அஞ்சல் அனுப்பிவைக்கும். அதில் இருக்கும் கடவுஇலக்கம் முதல் முறை உள்செல்ல தேவையாயிருக்கும். பதிவு செய்து 15 நிடங்களுக்குள் உங்கள் மின்னல் அஞ்சல் பெட்டியில் உள்வருகை பெட்டி, ஜங் மெயில் பெட்டி எல்லவற்றையும் தேடிப்பாருங்கள் வெள்ளை மாளிகையின் கடவு இலக்கத்திற்கு.

உங்கள் நண்பர்கள், குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரையும் வாக்களிக்க கேட்டுப்பருங்கள். வாக்களிப்பவருக்கு ஒரு மின்னல் அஞ்சல் விலாசம் இருக்க வேண்டும்.

நாதம் நியூஸின் இணைப்புகள் சில பிழையான பக்கத்திற்கும் இட்டு செல்வத்தால் இதில் இருக்கும் இணைப்பை பாவித்துவிட்டு மேலதிக உதவி தேவையாயின் எழுதவும்.

https://petitions.wh...rently/JSWTndkJ

[/size]

[size=3][size=4]கையெழுத்து இட்டபின் இப்படி ஒரு செய்தி வரும். [/size]

WE PETITION THE OBAMA ADMINISTRATION TO:

pay close attention to upcoming UPR of SriLanka at UNHRC, and lawlessness and impunity prevailing currently there

[size=1]Since the end of civil war on May 19, 2009, Sri Lankan Government has been increasingly manifesting its racist, militaristic, despotic tendencies. The life of Tamils in North and East of Sri Lanka has already reached a nadir there.[/size]

[size=1]We believe that only a timely intervention by the US President in the UPR-2012 of Sri Lanka in UNHRC, Geneva in Oct.-Nov.2012, can eliminate Sri Lanka's chance of twisting this session into another congratulatory meeting for its genocidal activities[/size]

[size=1]Sri Lanka needs to be admonished for impunity, lawlessness and systemic genocide in regard to[/size]

[size=1]Illegal detentions, enforced disappearances,[/size]

[size=1]Nazi style Lebensraum" and Anschluss happening in ancestral Tamil lands, destruction or conversion of heritage, religious & archeological sites and Suppression of press freedom[/size]

Created: Aug 02, 2012

Issues: Civil Rights and Liberties, Foreign Policy, Human Rights[/size]

SIGNATURES NEEDED BY SEPTEMBER 02, 2012 TO REACH GOAL OF 25,000

[size=1]24,971[/size]

TOTAL SIGNATURES ON THIS PETITION

[size=1]29[/size]

[size=3] You've signed this petition

[size=2]Thank you for participating. Find other petitions you're interested in or start your own[/size][/size]

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

தமிழீழ அரசின் கோரிக்கையின் ஆங்கில வடிவம்

[size=4]Dear Fellow Members of Tamil Diaspora, Well-Wishers, and Friends of the Community.[/size]

[size=4] The Universal Periodic Review of Sri Lanka in UNHRC-Geneva is well-nigh on hands. This particular review is likely to be a follow-up on some demands made in the last review held in the year 2008, on Sri Lanka regarding improvements to be done to the human rights conditions in that country. Well, we all know that, much water has flowed under the bridge since then. [/size]

[size=4] There is no need for a long-winded sermon on matters such as mass arrests, white van terrors, enforced disappearances, illegal land grab, criminal destruction of cultural and heritage property, threats to religious freedom, personal threats, and on and on, in order to convince you that what is going on now in Sri Lanka under the very nose of the international community is a structural genocide planned with a masterly stroke of subtlety, efficacy and intense cruelty and then executed with extreme efficiency and superb coordination. The intensity of the attendant vicious propaganda, the sole aim of which is supposed to be covering up the dirty deeds, alone is enough to stifle for the duration of a decade, our genuine efforts to render help to our long suffering brethren of homeland. Most of the human rights defenders like religious dignitaries Archbishop Dr. Rayappu Joseph, peoples’ representatives Hon. Mr. Sivagnanam Shritharan, M.P.,Journalists like Frederica Jansz and intellectuals like Dr. Packiasothy Saravanamuthu have all, at much peril to their skin, done their best to tear off that mask of verbose diplomacy that sheaths the cruel face of Rajapakse tyranny. They have all proven beyond all doubts that “post-May 2009” human rights situation is incomparably worse than “pre-May 2009” situation.

The question that looms above us now like the proverbial Damocles’ Sword is that will the Human Rights Council take due note of all these! Are we going to let past one more opportunity to stall Sri Lanka and its friends from literally getting away with murder! It may be too late in the day to file a mass signature campaign with the UNHRC. But it is not too late yet to file a petition with the President of the USA who would still be able to take up our cause. If we fail in this, please, note that Sri Lanka will manage to wrestle one more congratulatory resolution from the UNHCR for having promoted and defended human rights in an exemplary manner. Are you willing to give in to the travesty of justice one more time? Are you willing to throw in the towel and say “I surrender!”? If not, let’s join forces.

It is a massive job to gather 25,000 signatures within a month. But if we could not manage to unite ourselves to gather it from a million strong Diaspora, then all our talk of helping home-landers would be interpreted as empty talk. So, please, do your best in this regard. If you do not have a Whitehouse Account, please visit [/size]https://petitions.wh...rently/JSWTndkJ

[size=4]to open one. [/size]

[size=4]Please visit to sign this petition. [/size]https://petitions.whitehouse.gov/petition/pay-close-attention-upcoming-upr-srilanka-unhrc-and-lawlessness-and-impunity-prevailing-currently/JSWTndkJ

[size=4]Please circulate this email to everyone you know including every non-Tamil in your country who knows and understand the plight of Ealam Tamils. Please, treat this as a non-negotiable duty of you and me and all true friends around us and press as many as possible in the service of Mother Ealam. Please ensure that everybody signs this petition before Aug.30, 2012 so that the Whitehouse will take it into consideration. [/size]

[size=4]Wishing all a good summer in addition to total success in this endeavor,[/size]

[size=4]Sincerely

Suba Suntharalingam[/size]

Edited by மல்லையூரான்

கையோப்பமிட்டவர்களின் பெயர், என்ன திகதி கையொப்பமிட்டார்கள் என்று கீழே போட்டிருக்கிறார்கள். :D

கையோப்பமிட்டவர்களின் பெயர், என்ன திகதி கையொப்பமிட்டார்கள் என்று கீழே போட்டிருக்கிறார்கள். :D

:lol: :lol: :D

  • தொடங்கியவர்

நீங்கள் வக்காளித்திருப்பதை அறியவிட வேண்டாதவர்கள் புனைபெயரில் வாக்களிக்கலாம். வெள்ளை மாளிகை தளத்தில் நீங்கள் புனை பெயருடனும் பயணிக்கலாம். அமெரிக்காவில் இருப்போர் நீண்டகால நன்மையைக் கருத்தி முழுவிபரங்களையும் சேர்த்து பதிவது நல்லது. வெள்ளை மாளிகை அறிவிப்பு, அவசர நடவடிக்கை போன்றவற்றுக்கும் இதையே உபயோகப்படுத்துமென்பதால் உங்களை நீங்கள் தெளிவாக அடையாளப்படுத்துவது அனர்த்தநேரங்களில் உங்களுக்கு உதவியாகமுடியலாம். வெளியோர் இதில் அதிகம் அக்கறை காட்டுவதால் ஏதும் பிரயோசனமோ தெரியாது. எனவே அவர்கள் புனை பெயரில் போனால் அதிகம் இழக்க இல்லை. ஆனால் உங்களுக்கென்று ஒரு மின்னல் அஞ்சல் வைத்திருக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

புலம் பெயர்ந்து வாழ் தமிழ்ச் சமூகத்தின் சக அங்கத்தினர்களுக்கும், மற்றும் தமிழ்ச் சமூகத்தின் நண்பர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் இலங்கைமீதான புதிய காலாவர்த்தன பொது மீளாய்வு அறிக்கை திரும்பவும் எல்லோர் கைகளிலும் தவழப்போகிறது. இந்த மீளாய்வு அறிக்கையும் இலங்கையின் மனித உரிமைகளின் முன்னேற்றங்களை பற்றி 2008ம் ஆண்டய அறிக்கையில் சபையால் கவனயீர்ப்புச் செய்யப்பட்டு இருப்பவற்றின் தொடராகவே இருக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் அந்தக் கவனயீர்ப்புக்குப் பின்னாலாய காலப்பகுதியில் வெகு துன்பமான பல நிகழ்வுகள் நடந்து முடிந்துவிட்டதையும் நாம் அறிவோம்.

காவல் இருக்கும் அனைத்துலகின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, வெளியில் தெரியாதபடி, மிக குரூரமாகவும், வலுக்கூடிய வழிகளில், கட்டுக்கோப்பாகவும் ஒருங்கிணைக்கப்பட்டு, நடந்துவரும் இனக்கட்டுமானத்தின் அழிப்பைப்பற்றி விளங்கவைக்கவெனில், நாட்டில் நடந்துவரும் குற்றச்செயல்களான வகைதொகையற்ற கைது, வெள்ளைவான் கடத்தல்கள், காணாமற்போகவைத்தல், நில அபகரிப்பு, பண்பாட்டு சின்னங்களின் சிதைப்பு, மத சுதந்திரம் பறிப்பு, தனி நபர் மீதான தாக்குதல்கள் என்றெல்லாம் ஒரு முழுப் புராணமே பாடவேண்டிய தேவையில் யாருமே இங்கில்லை. தமது கொடூரத்தனங்களை மூடி மறைக்க வென்று அங்கு நடாத்தப்படும் பிரச்சார ஆர்ப்பாட்டப் பேரணிகள் தாயகத்தில் எமது உறவுகள் படும் அவஸ்தைகளை நிவிர்த்திக்க நாம் முன்னெடுக்கும் உதவிகளைக் கூடத் திக்குமுக்காட வைக்கிறது. மனித உரிமை பாதுகாவர்களான வணக்கத்திற்குரிய கலாநிதி ராயப்பு, மக்கள் பிரதிநிதி கௌரவ பா.உ.சிவஞானம் சிறீதரன், பத்திரிகையாளர் பிரெட்றிக்கா ஜான்ஸ், புத்திஜீவிகளான பாக்கியயோதி சரவணமுத்து போன்றோர், தமது உயிரைப்பணயம் வைத்து, கொடுங்கோலர்கள் ராஜபக்சாக்களின் ராஜதந்திர முகத்திரைகளை கிழித்து அதன் பின்னால் மறைந்திருக்கும் கொடிய முகத்தை வெளிக்காட்டத் தம்மால் இயன்றளவு முயன்றுள்ளார்கள். எல்லா முயற்சிகளும் இலங்கையில் மனித உரிமைகளின் சீரழிவு 2009 போருக்கு முன்னான காலத்தை விடப் போருக்குப் பின்னான காலத்தில் மிகவும் மோசமடைந்திருப்பதை ஐயத்துக்கிடமின்றி நிரூபித்திருக்கின்றன.

இங்கே எம்மை வாட்டும் தலையாய கேள்வி ஐ.நா.மனித உரிமைகள் சபையானது இவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளுமா என்பதேயாகும். இல்லையேல் இப்படியே கொலைகாரத்தனம் வாய்ந்த இலங்கையைத் தப்பவிட்டு அதன் காரணமாக இன்னுமொரு சந்தர்ப்பத்தையும் தவறவிடப்போகின்றோமா என்பதுதான்!

கையெழுத்து வேட்டை ஒன்றை நடத்தி அதை மனித உரிமைகள் சபைக்கு அனுப்பிவைக்கவெனில் இப்போது அதற்குக் காலதாமதம் ஆகிவிட்டது. ஆனாலும் அமெரிக்க அதிபருக்கு இந்தப் பிரச்சனையைக் கையிலெடுக்கும்படி கேட்டு மனு ஒன்றை சமர்ப்பிக்கவெனில் இன்னமும் காலதாமதமாகவில்லை. இதனையும் நாம் தவறவிட்டுவிட்டால், 2009ம் ஆண்டு போன்று, இலங்கை தனக்குத் தானே இன்னுமொரு புகழ்மாலைப் பிரேரணையை ஐ.நா.மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றுவித்தாலும் அதையிட்டு நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. முழந்தாளில் மண்டியிட்டு அநீதிக்கு இன்னொருதடவை விட்டுக்கொடுப்பதா, இல்லை அல்லது எம்மனைவரின் பலத்தையும் ஒருத்திரட்டிப் போராட்டத்தை முன்னேடுத்துச்செல்வதா என்பதை இப்போது தீர்மானித்துக் கொள்வோமாக.

25,000 கையெழுத்துக்களை திரட்டுவதென்பது இலகுவாக இருக்கப்போவதில்லை. ஆனால் ஒரு மில்லியன் தொகையான புலம்பெயர் மக்கள் வாழும் இடங்களிலிருந்து இப்படியான ஒரு உதவி வந்து சேராவிடால், நாம் இது வரையும் தாயக மக்களுக்கு உதவிசெய்வதென்று புலம்புவதெல்லாம் வெறும் வெற்றுப்பேச்சாகத்தான் வந்து முடியும். எனவேதான், தயவு செய்து, அனைவரும் இந்த மனுவில் ஒப்பமிட்டு இதனை ஒப்பேற்றி வையுங்கள்.

உங்களிடம் வெள்ளை மாளிகைப் பயனர் கணக்கு இல்லாவிட்டால் இப்போதே

https://petitions.wh.../create����என்ற தளத்திற்குச் சென்று ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். தயவுசெய்து இதை உங்களது எனது, எல்லோருடையதுமான தாயகத்தின் கடமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஆகஸ்ட் 30க்கு முன்னர் அனைவரும்

http://wh.gov/r5py .என்ற விலாசத்தில் உள்ள இந்த மனுவுக்கு கைநாட்டிட முயற்சி பண்ணுங்கள். உங்கள் வீட்டில், அயலில், நாம் வாழும் நாட்டின் இனக்குடி மக்கள் அனைவரையுமே இதில் பங்கெடுக்குமாறு அழையுங்கள்.

என்றும் அன்புடன்

சுபா சுந்தரலிங்கம்

[size=4]

நீங்கள் வக்காளித்திருப்பதை அறியவிட வேண்டாதவர்கள் புனைபெயரில் வாக்களிக்கலாம். வெள்ளை மாளிகை தளத்தில் நீங்கள் புனை பெயருடனும் பயணிக்கலாம். அமெரிக்காவில் இருப்போர் நீண்டகால நன்மையைக் கருத்தி முழுவிபரங்களையும் சேர்த்து பதிவது நல்லது. வெள்ளை மாளிகை அறிவிப்பு, அவசர நடவடிக்கை போன்றவற்றுக்கும் இதையே உபயோகப்படுத்துமென்பதால் உங்களை நீங்கள் தெளிவாக அடையாளப்படுத்துவது அனர்த்தநேரங்களில் உங்களுக்கு உதவியாகமுடியலாம். வெளியோர் இதில் அதிகம் அக்கறை காட்டுவதால் ஏதும் பிரயோசனமோ தெரியாது. எனவே அவர்கள் புனை பெயரில் போனால் அதிகம் இழக்க இல்லை. ஆனால் உங்களுக்கென்று ஒரு மின்னல் அஞ்சல் வைத்திருக்க வேண்டும்.

[/size]

[size=4]நான் சொந்தப்பெயரில் வாக்களித்தேன். [/size]

[size=4]முகநூலிலும் இணைத்துள்ளேன். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

Signatures needed by September 02, 2012 to reach goal of 25,000

24,928

Total signatures on this petition

72

[size=4]நான் சொந்தப்பெயரில் வாக்களித்தேன். [/size]

[size=4]முகநூலிலும் இணைத்துள்ளேன். [/size]

நானும் தான்

  • தொடங்கியவர்

ஏழுமலை, துளசி, தமிழ்சூரியன்,விசுகு அண்ணா, அகுத நன்றி.

[size=4]முகநூலிலும் இணைத்துள்ளேன். [/size]

வக்களிப்பு மிக மந்தமாகத்தான் போகிறது. ஒருநாளைக்கு 1000 வாக்குகளாவது வேண்டும்.

உங்களின் செயல் வாக்களிப்பை துரிதப்படுத்தும் என்று நினக்கிறேன்.

என்னிடம் முகநூல் இல்லை. முகநூல் இருக்கும் மற்றவர்களும் இணைப்பதால் தொடந்து நினைவூட்டப்படலாம்.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்லையூரான் அவர்களுக்கும், மற்றும் இதுவரை கையொப்பமிட்டவர்களுக்கும் எனது நன்றிகள். பெருந்தொகை தமிழர்கள் வாழும் இடங்களில் 25,000 கையொப்பம் பெறுதல் மிகவும் இலகுவானது என்று நம்பினேன். எனது நம்பிக்கை வீண் போகாது என்று நம்புகிறேன்.

தயவு செய்து இது சுபா தொடக்கியவர் என்று எண்ணாமல், எமது துன்பப்படும் தாயக உறவுகளுக்காக உருவாக்கப்பட்டது என்று எண்ணி

உங்களது கையொப்பங்களை அளியுங்கள்.

LETS MAKE 1000 SIGNATURES PER DAY!

நன்றி

சுபா

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சிக் கோட்டைச் சிங்கமும், ஹரியும், நொச்சியும் உடனடியாகக் களத்துக்கு வரவும்!!!

நன்றிகள் சுபா! நான் கையெழுத்து வைத்து விட்டேன்!

  • தொடங்கியவர்

இன்னமும் 100 யை அடையவில்லை.

இன்று தான் 100 ஐ எட்டியுள்ளோம். :(

  • தொடங்கியவர்

இன்று ஆக 106 குத்தான் போயிருக்கிறது. ஒலிம்பிக்ஸ்சில் இதை பற்றி ஒரு துண்டு பிரசுரம் வினியோகிக்க முடியுமானால் நல்லது.

  • தொடங்கியவர்

இன்றுதான் 127க்கு போயிருக்கிறது.

Google, Yahoo போன்றவற்றில் பொது "குழு மின்னல் அஞ்சல் விலாசங்கள்" இருப்போர் தயவு செய்து இதை குழுக்களுக்கு அனுப்பி வைக்கவும். இல்லையேல் எனக்கு தனிமடலில் அத்தகைய விலாசங்களை அனுப்பி வத்தால் நான் அவர்களுக்கு இந்த கோரிக்கையை அனுப்பி வைக்கலாம்.

நன்றி

  • தொடங்கியவர்

இன்னும் இரண்டு கிழைமைகள்தான் இருக்கு. தயவு செய்து எல்லா உறவுகளும் வாக்களிக்கவும் 139

Edited by மல்லையூரான்

யாழ் உறவுகளில் ஒரு சிலர் தவிர ஏனையோர் தமிழீழ விடயங்களில் ஆர்வம் காட்டவில்லை. எனவே யாழ் உறவுகளை மட்டும் நம்பி பிரயோசனமில்லை.

இப்பொழுது பிரச்சினை,

யாழின் முகப்பில் இந்த திரி காட்டப்படாதது. காட்டப்பட்டாலாவது வாசகர்களில் சிலராவது கையொப்பமிடுவார்கள்.

அடுத்தது account open செய்து அதனை conform செய்து பின்னர் கையொப்பமிடுவதற்கு பலருக்கு அலுப்பு. இது எதுவுமில்லாமல் சும்மா எடுத்ததும் கையொப்பமிடுவதென்றால் பலர் இடுவார்கள்.

யாழில் இன்னும் சில உறவுகளும் கையொப்பமிடும்படி பலருக்கு mail / தனிமடல் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களில் சிலரே கையொப்பமிட்டுள்ளார்கள். ஏனையோர் பார்வையாளர்களாக இருக்கிறார்கள்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று நான் 140

  • தொடங்கியவர்

144. உறவுகளே தொடர்ந்து வாக்களியுங்கள்.

[size=1]

[size=4]மீண்டும் ஒருமுறை புதிதாக பார்க்கும் ஒருவர் எவ்வாறு வாக்கை பதியலாம் என பதிந்துவிடுங்கள். [/size][/size][size=1]

[size=4]நான் உள்ள செய்திக்குழுமங்களில் போட்டு விடுகிறேன் [/size][/size]

[size=4]இந்த இணைப்பில் சென்று create an account [/size]என்பதை அழுத்தி [size=4]account open செய்யுங்கள். (email address தேவை.)[/size]

https://petitions.wh...rently/JSWTndkJ

[size=4]சிறிது நேரத்தில் conform பண்ண சொல்லி உங்களுக்கு mail அனுப்புவார்கள். உரிய link ஐ அழுத்தி conform பண்ணிய பின் தான் கையொப்பமிட அனுமதி கிடைக்கும். sign this petition [/size]என்பதை அழுத்தி [size=4]கையொப்பம் இடுங்கள். [/size]உங்கள் பெயர் கீழே காண்பிக்கப்படும். (உண்மைப்பெயரில் கையொப்பமிட விரும்பாதோர் புனை பெயரில் account open செய்து கையொப்பமிடலாம். )

[size=4]2 september 2012 இன் முன் 25, 000 கையொப்பம் தேவை. [/size]அனைவரும் [size=4]உங்கள் நண்பர்களையும் கையொப்பமிட சொல்லுங்கள்.[/size]

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
:D

எனக்கு எழுத தெரியாது. எனக்கு தெரிந்த தமிழில் எனக்கு தெரிந்தபடி எழுதியுள்ளேன். ஏதும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் நீங்கள் மாற்றம் செய்து போடுங்கள் அகூதா அண்ணா.

:D

என்ன சிரிப்பு? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.