Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செவ்வாய் கிரகத்தில் அட்டகாசமாக தரையிறங்கியது 'க்யூரியாசிட்டி'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

0608_mars_curiosity1_420_fitwidth_420.jpg

செவ்வாய் கிரகத்தில் படிந்த மனிதனின் சாதனை நிழல்!

பாசதீனா, கலிபோர்னியா: மனிதனின் மாபெரும் அறிவியல் சாதனைகளில் மற்றும் ஒன்று இன்று அரங்கேறியுள்ளது. பூமியில் அல்ல - நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில்.

அமெரிக்காவின் நாசா அனுப்பிய மார்ஸ் ரோவரான, மார்ஸ் கியூரியாசிட்டி விண்கலம் இன்று செவ்வாய் கிரகத்தில் அழகாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. மனித குலத்தின் மிகப் பெரிய மைல் கல் சாதனையில் இதற்கும் மிகப் பெரிய முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.

ஒரு டன் எடை கொண்ட இந்த கியூரியாசிட்டி விண்கலம்தான் இதுவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப்பட்ட விண்கலங்களிலேயே பெரியதாகும்.

8 மாத கால பயணத்தை முடித்து இன்று பத்திரமாக செவ்வாய் கிரகத்தில் லேண்ட் ஆகியுள்ள இந்த விண்கலம் அடுத்த 2 ஆண்டு காலத்திற்கு செவ்வாய் கிரகத்தை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து அனுப்பப்போகும் படங்களும், வீடியோக்களும், ஆய்வுத் தகவல்களும் மனித குலத்தை மாற்றிப் போடப் போகும் முக்கிய விஷயமாகும்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளது, உயிர் வாழத்தகுதியானதாக அது இருக்கிறதா, உயிரினங்கள் ஏதேனும் அங்கு இருக்கின்றனவா என்பது குறித்த முக்கிய ஆய்வுக்கு இந்த கியூரியாசிட்டி உதவப் போகிறது.

இந்த விண்கலத்தில் 10 விதம் விதமான அறிவியல் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.இவைதான் ஆய்வுக்குப் பயன்படப் போகின்றன. இதற்கு முன்பு அனுப்பப்பட்ட மார்ஸ் ஸ்பிரிட், ஆப்பர்சூனிட்டி ஆகிய விண்கலங்களில் பொருத்தப்பட்டிருந்த சாதனங்களை விட இவை 15 மடங்கு அதிக எடை கொண்டவையாகும்.

மேலும் சில உபகரணங்கள் இதுவரை அனுப்பப்படாத புதிய சாதனங்கள். குறிப்பாக லேசர் பயரிங் சாதனம். இது பாறைப் பகுதியின் வேதித் தன்மையை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து ஆராயும் வல்லமை படைத்ததாகும்.

மேலும் கியூரியாசிட்டியின் கைகள் போல செயல்படும் ரோபாட்டிக் இயந்திரங்கள் செவ்வாய் கிரகத்தின் தரை மற்றும் பாறைப் பகுதியில் துளையிட்டு ஆய்வு நடத்தக் கூடியவையாகும். மேலும் செவ்வாய் கிரக மண்ணை அள்ளி எடுத்து சோதனை செய்யவும் இது உதவும். இந்த சோதனைக்கான அத்தனை வசதிகளும் கியூரியாசிட்டியிலேயே உள்ளன. எனவேதான் இதை ஒரு குட்டி ஆய்வகமாக கூறுகிறோம். அதாவது இந்த விண்கலமே அத்தனை ஆய்வுகளையும் செய்யும் வகையில் வடிவமைத்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

எனவே கியூரியாசிட்டியின் இந்த பயணம் மனித குலத்திற்கு மிக மிக முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. மேலும் மனிதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் முயற்சிகளுக்கும் இந்த வி்ண்கலத்தின் பயணம் மிக மிக முக்கியமானது.

2030ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ஏற்கனவே அமெரிக்கா அறிவித்துள்ளது. அதற்கான திட்டமிடல்களும், ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனவே கியூரியாசிட்டி தரப் போகும் தகவல்கள் மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.

செவ்வாய் கிரக நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் அது கியூரியாசி்ட்டி தரையிறங்கியுள்ளது. கேல் கிரேட்டர் பகுதியில், ஒரு மலைக்கு அருகே இந்த விண்கலம் தற்போது இறங்கி நிற்கிறது.

இனிமேல்தான் தனது ஆய்வுகளை அது தொடங்கவுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கிறதா என்ற மிக முக்கியமான ஆய்வைத் தொடங்கப் போகும் கியூரியாசிட்டி மனித குலத்தை எந்த அளவுக்கு மாற்றி அமைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தற்போது செவ்வாய் கிரகத்தில் இறங்கியபோது தனது நிழல் கிரகத்தின் தரையில் படிந்ததை படம் எடுத்து அனுப்பியுள்ளது கியூரியாசிட்டி. இது அந்த விண்கலத்தின் நிழல் அல்ல, மாறாக மனித குலத்தின் சாதனை நிழல் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நன்றி தற்ஸ்தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் கிரகத்தில் அட்டகாசமாக தரையிறங்கியது 'க்யூரியாசிட்டி' விண்கலம்: முதல் படத்தை அனுப்பியது!

செவ்வாய் கிரகத்துக்கு (Mars) அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு அனுப்பியுள்ள 'க்யூரியாசிட்டி' விண்கலம் இன்று அட்டகாசமாக தரையிறங்கியது.

பூமியிலிருந்து ஏவப்பட்டு 8 மாத பயணத்துக்குப் பின் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்து, பத்திரமாக தரையிறங்கியுள்ளது.

அணு சக்தியில் இயங்கும் இந்த ஒரு டன் எடை கொண்ட விண்கலம் ஒரு நடமாடும் ஆய்வுக் கூடமாகும். 6 சக்கரங்கள் கொண்ட இந்தக் கலன் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளது.

கடந்த 8 மாதங்களில் 567 மில்லியன் கி.மீ. தூரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ள க்யூரியாசிட்டி அந்த கிரகத்தின் தென் பகுதியில் உள்ள கேல் கிரேட்டர் எனப்படும் மாபெரும் பள்ளத்தாக்கில் தரையிறங்கியுள்ளது. இது ஒரு பெரிய மலைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது.

மணிக்கு 13,000 கி.மீ. வேகத்தில் பயணித்து வந்த இந்த விண்கலத்தின் வேகம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியவுடன் அதன் ஈர்ப்பு விசை காரணமாக அதிகரித்தது. இருப்பினும் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி மிக மிக பத்திரமாக தரையிறக்கியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரையிறங்கிய நேரம் அங்கு பிற்பகலாகும். இப்போது செவ்வாய் கிரகத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஐஸ் கட்டிகளால் ஆன மேகங்கள் சூழ்ந்த இந்த கிரகத்தில் இப்போதைய வெப்ப நிலை மைனஸ் 12 செல்சியல் ஆகும்.

கிட்டத்தட்ட ரூ. 12,000 கோடி செலவில் இந்த விண்கலத் திட்டத்தை நாஸா செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அமெரிக்கா தவிர 12 நாடுகளும் நிதியுதவி செய்துள்ளன.

2030ம் ஆண்டில் இந்த கிரகத்துக்கு மனிதரை அனுப்ப வேண்டும் என அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ள நிலையில் இன்றைய விண்கல சோதனை நாஸாவுக்கு மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

க்யூரியாசிட்டி விண்கலம் ஒரு astrobiology கலமாகும். இதன் முக்கியப் பணி செவ்வாய் கிரகத்தில் நுண்ணியிர்கள் உள்ளனவா என்பதை சோதனையிடுவதே.

லேசர் துப்பாக்கிகள், ரசாயன, உயிரியல் ஆய்வுக் கருவிகள், பெரும் சக்தி படைத்த டெலஸ்கோப் உள்ளிட்டவையோடு செவ்வாயில் தரையிறங்கிய இந்த விண்கலத்தை கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டிலான ஆட்டோ பைலட் தான் இயக்கியது.

செவ்வாய் கிரகத்துக்குள் நுழையும்போது இதன் வேகம் 20,921 கி.மீயாக இருந்தது. இது ஒலியின் வேகத்தை விட 17 மடங்கு அதிகம். இந்த பயங்கரமான வேகத்தில் கிரகத்துக்குள் நுழைந்த க்யூரியாட்சிட்டி கிட்டத்தட்ட 7 நிமிடங்களில் தரைப் பகுதியை நெருங்கியது.

இதையடுத்து அதன் பாராசூட்களும் ராக்கெட்களும் செயல்பட்டு அதன் வேகத்தை மட்டுப்படுத்தின. இதைத் தொடர்ந்து விண்கலம் தரையைத் தொடும் முன் அதிலுள்ள ஒரு கிரேன் முதலில் வெளியே எட்டிப் பார்த்தது. பின்னர் அந்த கிரேனிலிருந்து நைலான் கயிறுகள் மூலம் க்யூரியாசிட்டி விண்கலம் தரையில் பத்திரமாக இறங்கியது.

இதையடுத்து கிரேனில் உள்ள ராக்கெட்டுகள் செயல்பட்டு அதை விண்கலத்தில் இருந்து சில கி.மீ. தூரத்தில் தூக்கி எறிந்தன.

இதையெல்லாமே விண்கலத்தின் கம்ப்யூட்டர்களில் உள்ள புரோகிராம்கள் செயல்படுத்தின. கிரகத்துக்குள் நுழைந்த 7 நிமிடங்களில் இது எல்லாம் நடந்து முடிந்து க்யூரியாசிட்டி தரையில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.

விண்கலத்தின் வெளிப்புற பாதுகாப்பு கவசத்தைத் திறப்பது. பாராசூட்டை திறப்பது, கிரேனை செயல்பட வைப்பது ஆகிய பணிகளை 79 சிறிய வெடிகள் (pyrotechnic detonations) செய்தன.

க்யூரியாசிட்டி பத்திரமாக தரையிறங்கியுள்ளதை, அதை செவ்வாய் கிரகத்தை ஏற்கனவே சுற்றி வரும் நாஸாவின் மார்ஸ் ஒடிஸி செயற்கைக் கோளுக்குத் தெரிவித்தது. பின்னர் அங்கிருந்து பூமிக்கு அடுத்த சில வினாடிகளில் தகவல் வந்து சேர்ந்தது.

இந்த அரிய சாதனையை நாசாவில் கூடியிருந்த 1,400க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உற்சாகக் கூக்குரலிட்டு வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விண்வெளி ஆய்வுகளிலேயே கியூரியாசிட்டிதான் மிகவும் துணிச்சலானது என்றும் நாசா விஞ்ஞானிகள் உற்சாகத்துடன் கூறினர்.

க்யூரியாசிட்டி விண்கலம் நடத்தும் சோதனைகள், அதன் முடிவுகளை எல்லாம் ஒடிஸி தான் முதலில் அறிந்து, அதை பூமிக்கு ஒலி-ஒளிபரப்பு செய்யும்.

நாஸாவில் ஒரு பழக்கம் உண்டு. நல்ல காரியம் நடக்க நாம் தேங்காய் உடைத்து, சாமி கும்பிடுவது மாதிரி நாஸாவின் விண் திட்டங்கள் அதன் இலக்கை அடையும் நாளில் வறுக்கப்பட்ட நிலக்கடலைகள் கொண்ட டப்பாக்களை உடைப்பர். இன்றும் பல டப்பாக்கள் உடைக்கப்பட்டன.

நன்றி தற்ஸ்தமிழ்.

Edited by தமிழ் சிறி

இணைப்பிற்கு நன்றி த.சி.அண்ணா ...........மகிழ்ச்சியான ஓர் செய்தி .........பொறுத்திருந்து பார்ப்போம் ..என்ன நன்மைகள்,அல்லது தீமைகளை நாம் பெறுவோம் என்று.............

சரி அண்ணா முன்பு ஒரு திரியில் வாசித்த நினைவி .........நீல் ஆம்ஸ்ராங் அவர்கள் எதோ ஒரு பாலைவனத்தில் நின்று சூட்டிங் காட்சியாக எடுத்துவிட்டு அதை படமாக போட்டிருக்கிறார்கள் என்பது போல் சந்தேகங்கள் இந்த செய்தியிலும் வராதுதானே.....

:D ஏனனில் அங்கும் நிழலை காட்டினார்கள் ,இங்கும் நிழலை காட்டுகிறார்கள்.ஒட்டுமொத்தத்தில் நிழலாலேயே இவாளவு பிரச்சனையும் போல.... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி த.சி.அண்ணா ...........மகிழ்ச்சியான ஓர் செய்தி .........பொறுத்திருந்து பார்ப்போம் ..என்ன நன்மைகள்,அல்லது தீமைகளை நாம் பெறுவோம் என்று.............

சரி அண்ணா முன்பு ஒரு திரியில் வாசித்த நினைவி .........நீல் ஆம்ஸ்ராங் அவர்கள் எதோ ஒரு பாலைவனத்தில் நின்று சூட்டிங் காட்சியாக எடுத்துவிட்டு அதை படமாக போட்டிருக்கிறார்கள் என்பது போல் சந்தேகங்கள் இந்த செய்தியிலும் வராதுதானே.....

:D ஏனனில் அங்கும் நிழலை காட்டினார்கள் ,இங்கும் நிழலை காட்டுகிறார்கள்.ஒட்டுமொத்தத்தில் நிழலாலேயே இவாளவு பிரச்சனையும் போல.... :D

நாஸாவில் ஒரு பழக்கம் உண்டு. நல்ல காரியம் நடக்க நாம் தேங்காய் உடைத்து, சாமி கும்பிடுவது மாதிரி நாஸாவின் விண் திட்டங்கள் அதன் இலக்கை அடையும் நாளில் வறுக்கப்பட்ட நிலக்கடலைகள் கொண்ட டப்பாக்களை உடைப்பர். இன்றும் பல டப்பாக்கள் உடைக்கப்பட்டன.

தமிழ்ச்சூரியன், நாஸா கச்சான் கடலைப் பேணிகளை... உடைத்த படியால், இது உண்மை என நம்பலாம். :D:lol::icon_idea:

big_12527257_0_596-259.jpg

Edited by தமிழ் சிறி

  • 2 weeks later...

_62276104_62276103.jpg

[size=5]Curiosity's view towards the[/size] [size=5]base of Mount Sharp, the rover's ultimate goal. This high-resolution image has been "white balanced" to provide colours more recogniseable to the human eye [/size]

[size=5]_62045548_mars_science_lab_624in.jpg[/size]

  • [size=5](A) Curiosity will trundle around its landing site looking for interesting rock features to study. Its top speed is about 4cm/s[/size]
  • [size=5](B) This mission has 17 cameras. They will identify particular targets, and a laser will zap those rocks to probe their chemistry[/size]
  • [size=5]© If the signal is significant, Curiosity will swing over instruments on its arm for close-up investigation. These include a microscope[/size]
  • [size=5](D) Samples drilled from rock, or scooped from the soil, can be delivered to two hi-tech analysis labs inside the rover body[/size]
  • [size=5](E) The results are sent to Earth through antennas on the rover deck. Return commands tell the rover where it should drive next[/size]

_56934780_mars_sl_image624.gif

  • 2 weeks later...

[size=3]

[size=5]01f936d24b34b1d78ae040aad0ab.jpg[/size][/size][size=3]

[size=5]

PHOTO COURTESY OF NASA/REUTERS

NASA picture shows tracks left by the Curiosity rover on Mars on Wednesday. Curiosity is about six metres from its landing site, now named Bradbury Landing. (Aug. 22, 2012)[/size][/size]

[size=6]செவ்வாய் கிரகத்தில் காணப்படும் மர்ம பொருள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு[/size]

[size=4]செவ்வாய் கிரகத்தில் காணப்படும் மர்மமான பொருள் குறித்து, விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பூமியில் இருந்து, 57 கோடி கி.மீ., தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சூழல் குறித்து ஆராய, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பப்பட்டது. [/size]

[size=4]செவ்வாயின் சுற்றுச்சூழல் அமைப்பு, பாறைகள் மற்றும் மண்ணுக்கு அடியில் ஹைட்ரஜன் அளவு போன்ற பல்வேறு அம்சங்களை ஆராய, 10 உபகரணங்களுடன் கடந்த, 6ம் தேதி செவ்வாயில் தரையிறங்கிய, கியூரியாசிட்டி திட்டமிட்டபடி, தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக, செவ்வாயின் நிலப்பரப்பை பல்வேறு திசைகளில் இருந்து படம் பிடித்து, பூமிக்கு அனுப்பியது.[/size]

[size=6][size=4]செவ்வாய் கிரகத்தின் அடிவானத்தில், மர்மமான யு.எப்.ஓ., எனப்படும் அடையாளம் காண முடியாத புதிரான பொருள், அங்குமிங்கும் அசைந்தாடுவதை, கியூரியாசிட்டி படம் பிடித்துள்ளது. [/size][/size]

[size=6][size=4]வேற்று கிரகவாசிகள் தான், செவ்வாயில் மனிதனின் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதாக, யூ.எப்.ஓ., ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இது, வழக்கமாக கிராபிக் தொழில்நுட்பத்தில் காணப்படும், டெட் பிக்சல்கள் என, விஞ்ஞானிகள் விளக்கம் தருகின்றனர். [/size][/size]

[size=6][size=4]வேற்று கிரகவாசிகள் மற்றும் விண்வெளியில் உள்ள அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பொருட்கள் குறித்து ஆய்வு செய்து வரும், பிரிட்டனைச் சேர்ந்த, அலீன் டிஸ்க்ளோசர் அமைப்பின் ஸ்டீபன் ஹன்னார்டு என்பவர், கியூரியாசிட்டி அனுப்பிய வீடியோ படங்களை தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்.[/size][/size]

[size=6][size=4]சமீபத்தில், கியூரியாசிட்டி அனுப்பிய படத்தில், செவ்வாயின் அடிவானத்தில் அடையாளம் காண முடியாத, பறக்கும் தட்டு போன்ற ஒரு மர்மப் பொருள், வெள்ளை நிறத்தில் அங்குமிங்கும் பறந்து திரிவதை ஹன்னார்டு கண்டுபிடித்துள்ளார். அவர் கூறுகையில், கியூரியாசிட்டி அனுப்பிய வீடியோவில், செவ்வாய் கிரகத்து வானில் நான்கு பொருட்களை காண முடிகிறது. அவை என்ன? அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களா, துகள்களா? எனத் தெரியவில்லை, என்றார். [/size][/size]

[size=6][size=4]ஆனால், செவ்வாயில், புவிகிரகவாசிகளின் நடவடிக்கைகளை வேற்று கிரக சக்திகள், பறக்கும் தட்டுகளின் மூலம் வேவு பார்ப்பதையே கியூரியாசிட்டியின் வீடியோ பதிவுகள் காட்டுவதாக, யூ.எப்.ஓ., ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே, செவ்வாயில் தரையிறங்கிய இடத்தில் இருந்து, ஆறு மீட்டர் தூரத்துக்கு, கியூரியாசிட்டி ரோவர் நகர்ந்து சென்று, ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாக, நாசா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.[/size][/size]

[size=3]http://tamil.yahoo.c...-151900429.html[/size]

Edited by akootha

[size=5]பதினான்கு பில்லியன்கள் வருட விண்வெளியினை இரண்டு நிமிட கணணி வடிவமைப்பில் பார்க்கலாம் [/size]

http://www.thestar.com/news/world/article/1244486--watch-the-birth-of-the-universe-in-less-than-2-minutes

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.