Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு பிரபாகரன் மட்டும் காரணமல்லர் - ஹரிகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் காரணமல்லர் என இலங்கையில் இந்தியப்படைகள் கடமையில் ஈடுபட்டிருந்த போது அதில் பணியாற்றிய கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய உடன்படிக்கையின் வெற்றிக்கு புலிகள் மிகப் பெரிய தடையாக இருந்திருப்பார்கள் என்பதை எவரும் நியாயப்படுத்த முடியாது. இந்திய அரசு, புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் தமிழீழத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஆயுதக்குழுவை வழிநடத்திய பிரபாகரனின் ஒற்றை மனப்போக்கை புரிந்து கொள்ளத் தவறிய இராணுவத்தினர் போன்ற பலரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு காரணமாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனா ஆகியோருக்கு இடையே 1987 ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் அந்த ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து கேணல் ஹரிகரன் நடத்திய மதிப்பீட்டு அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரச்சினை தொடர்பில் நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதில் இலங்கை இந்திய உடன்பாடு தவறியுள்ளதாயினும், இலங்கை அரசமைப்பில் 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது, வடக்குக் கிழக்கு மாகாணம் உருவாவதற்கான வழியை இந்த உடன்பாடு வகுத்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றுசேர்த்து வடகிழக்கு மாகாணத்தை உருவாக்குவதற்கு கருத்து வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் தெளிவின்மை காணப்படுகின்றது.

தமிழ் சிறுபான்மை மக்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காகவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஆனால் தமிழ் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் இந்த உடன்பாட்டில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. தமிழ் மக்களின் உரிமை இதில் தட்டிக்கழிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஆயுதக் குழுக்களும், தமிழ் அரசியற் கட்சிகளும் தமது போராட்டத்தை நடத்திச் செல்வதற்கு இந்தியாவின் நல்லெண்ணத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்நிலையில் இத்தமிழ் பிரதிநிதிகள் தமது சொந்தக் கருத்துக்களுக்க அப்பால், இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆனால், இந்த உடன்பாட்டை பிரபாகரன் ஏற்றுக் கொள்வதற்கான நிர்ப்பந்தத்தை வழங்க வேண்டியிருந்தது. அவர் இந்தியாவின் நோக்கம் தொடர்பில் சந்தேகம் கொண்டிருந்தார். ஏனையவர்களுடன் பிரபாகரனை இணைப்பதற்கு, பிரபாகரனுடனான எம்.ஜி.ஆரின் செல்வாக்கை இந்தியா பயன்படுத்திக் கொண்டது.

இந்த உடன்பாட்டை நிறைவேற்றுவதில் இலங்கையும் தவறிழைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், இரு நாட்டுத் தலைவர்களும் இந்த உடன்படிக்கையின் பொதுநோக்கத்தை நிறைவுபடுத்துவதற்குப் பதிலாக தமது சொந்த நோக்கை அடைந்தகொள்வதற்காகவே இதனைப் பயன்படுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=49

  • கருத்துக்கள உறவுகள்

[size=1] [size=5]இந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா?[/size][/size]

[size=1][size=1][size=1][size=1]
120729173123_rajiv_jayawardane_304x171_dbsjeyaraj_nocredit.jpg

[size=4]
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் இரு தலைவர்கள்
[/size][/size][/size][/size][/size]

[size=4]இலங்கையில் தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனாலும் அந்த ஒப்பந்தம் வெற்றியா அல்லது தோல்வியா என்கிற கேள்விகள் இன்றும் தொடருகின்றன.

எனினும் அந்த ஒப்பந்தம் இன்றளவும் இந்தியாவின் மிகப்பெரிய ராஜந்திர தோல்வி என்றே விமர்சிக்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னெடுப்பில் உருவாகி, ராஜீவ் காந்தி-ஜெ ஆர் ஜெயவர்தன ஆகியோரிடையில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானாலும், அதை நடைமுறைபடுத்த எத்தரப்பும் முழுமையாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு இன்னும் உள்ளது.

"புலிகளும் பிரேமசாசவும் ஒத்துழைக்கவில்லை"[/size]

[size=4]
120729183329_prabakaran_suthumalai_304x171_bbc_nocredit.jpg

ஒப்பந்தம் புலிகள் மீது திணிக்கப்பட்டதாக சுதுமலை கூட்டத்தில் கூறினார் பிரபாகரன்
[/size]

[size=4]தமிழீழ விடுதலைப் புலிகளும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் இலங்கைத் தரப்பில் அதற்கு பெரும் தடைகளை ஏற்படுத்தினர் என்பதை மறுக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதே போல தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் அவர்கள் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமனதை அடுத்து தமிழகத்திலும், புதுடில்லியிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்தியத் தரப்பால், அந்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்த, இலங்கை மீது போதிய அழுத்தங்களை கொடுக்க முடியவில்லை என்று கூறுகிறார், இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வு பிரிவுக்கு தலைவராக இருந்த கர்ணல் ஹரிஹரன்.

13 ஆவது திருத்தச் சட்டம்[/size]

[size=4]
120729183820_poster_indolankaaccord_304x171_bbc_nocredit.jpg

இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு இன்றும் இலங்கையில் எதிர்ப்பு உள்ளது
[/size]

[size=4]இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் 13 ஆவது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதை தவிர பெரும்பாலும் அந்த ஒப்பந்தம் தோல்வியே அடைந்தது என்றும் ஹரிஹரன் கூறுகிறார்.

எனினும் அந்த ஒப்பந்தம் இறந்து போகவில்லை என்றும், அப்படி அது இறந்து போகவும் முடியாது என்றும் கூறும் சம்பந்தர், இந்தியா ஏற்படுத்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறை படுத்துவது இந்தியாவின் கடமை என்றும்,அதிலிருந்து இந்தியா தவறக் கூடாது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியா விடுதலைப் புலிகளைசுலபமாக வழிக்கு கொண்டுவந்து விடமுடியும் எனக் கருதியது என்றும், அந்தக் கணிப்பீடு தவறாகச் சென்றதும், ஒப்பந்தம் செயலிழந்து போனதற்கு ஒரு முக்கிய காரணம் எனவும் ஹரிஹரன் கூறுகிறார்.

இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் புதுடில்லிக்கு சரியான கணிப்பீடுகளை வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியா என்ன செய்யப் போகிறது?[/size]

[size=4]
120322150650_manmohan_mahinda_304x171_bbc_nocredit.jpg

இந்த இரு தலைவர்களும் என்ன செய்யப் போகிறார்கள்?
[/size]

[size=4]13 ஆவது அரசியல் சாசனத் திருத்தம் மட்டுமே முழுமையான அதிகாரப் பகிர்வு மற்றும் பரவலாக்கத்தை அளிக்காது என்றும், அந்தக் கருத்தில் இப்போதும் எந்த மாறுதலும் இல்லை என்றும் சம்பந்தர் கூறுகிறார்.

எனினும் இந்தியாவுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், அதற்கு மேலே சென்று அதிகாரப் பகிர்வை அளிப்பதாகக் கூறும் இலங்கை அரசு அதை மனப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்றும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஆதரவு அளிக்கும் எனவும் சம்பந்தர் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk...cord25yrs.shtml[/size]

Edited by nunavilan

கபோதிகளின் ஒன்றுக்கும் உதவாத காலம் கடந்த ஞானம்!

ஒப்பந்தம் இருக்கா இல்லையா, வெற்றியா தோல்வியா என்ற கேள்விகளுக்கு இலங்கை அரசு சூசகமாக எப்போதோ பதில் சொல்லிவிட்டது. அதாவது இனப்பிரச்சனைக்கு யாருடனும் எந்த ஒப்பந்தமும் செய்ய போவதில்லை என்பதாகும். இருக்கும் ஒப்பந்தம் ஒன்றை பற்றி பிரஸ்தாபிக்காமல், புதிய ஒப்பந்தங்களும் ஒன்றும் செய்ய ஆயத்தம் இல்லை என்பது பழையை ஒன்று இருப்பதை மறுப்பதாகும்.

ஒப்பந்தம் கையெழுத்திட வந்து அடிவாங்கிய ரஜீவ், அரசியல் ஞானம் இருந்தால் கையெழுத்திடாமல் திரும்பிபோயிருப்பார். தனது உடன் படிக்கைக்கு சிங்கள மக்கள் என்ன வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதையும், ஜனநாயக வாக்குரிமையை பாவித்து உடன்படிக்கைக்கு எதிராக நாளடைவில் செயல்ப்படுவார்களா என்பதையும் கவனிக்க தவறிவிட்டார். மேலும் அந்த அடியிக்கும் JRக்கும் என்ன தொடர்பென்றால், குட்டிமணி காலத்திற்கு முன்னர் தொடங்கி நிலமலரூபன் சிறையில் அடித்து கொல்லப்பட்டது வரையும் உள்ள சம்பவங்களும் அதை அன்றைய தலைவர்கள் எப்படி வரவேற்றார்கள் என்பதுவும் சாட்சியம். பாதுகாப்புப்படை கூலிகளை வைத்து அடித்து கொலை செய்வது இலங்கையில் நடை முறையில் தொடர்ந்து இருப்பது. இப்படியேதான் கதிர்காமர், அஷ்சிரஃப் கொல்லப்பட்டனர். இதே முயற்சிதான் ரொபேட் பிளெக்கை குடும்பி மலைக்கு அனுப்பிவிட்டு மட்டக்களப்பு விமானத்தளத்தில் செய்யபட்டது. ரஜிவை புரோகிதர்கள் மட்டும் புடை சூழாமல் புலநாய்வு அதிகாரிகள் என்று அருகில் இருந்திருந்தால் நிச்சயமாக கையெழுத்திடாமல் பாதுகாப்பாக இந்தியாவுக்கு திருப்பி அழைத்துக்கொண்டு போயிருப்பார்கள். ராஜிவின் உயிரை ஒப்பந்தம் மூலம் பந்தாடியது சுற்றியிருந்த புரோகிதர்களே.

இந்தியாவை JR எப்படி மதித்தார் என்பதை இந்திரா காந்தியை ஆட்சியிலிருக்கும் "பெண் பிசாசு" என்று அழைத்ததை வைத்து கண்டுகொள்ளலாம். இந்தியா அருகில் இருக்க பிருத்தானியாவில் ஆயுத உதவி கேட்ட JR ஐ தட்சர் இலங்கைக்கு அப்படியான உதவி ஒன்றை இந்தியாதான் செய்ய வேண்டும் என்று திருப்பி அனுப்பியிருந்தார். அதிகம் JR பற்றி பேசத்தேவயில்லை. அவர் எந்த நேரத்திலும் உடன்படிக்கைக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்பதைக்காட்ட அவர் 1983ம் ஆண்டு கலம்பகம் தொடங்கிய பின்னர் பேசிய பேச்சான "சண்டையா சமாதானமா" என்பதே காணும். பண்டாராநாயக்காவோ அல்லது டட்லியோ உடன்படிக்கைகளை தங்களால் நிறைவேற்ற முடியுமா என்று ஆராய்ந்து பார்த்துத்தான் உடன்படிக்கைகளில் கையேழுத்திட்டார்களா என்றால் அது இல்லை. ஆனால் லிங்கன் மாதிரி சிறுபான்மை பிரச்சனையை தீர்க்க ஒரு Civil War ஒன்றை நடத்தி முடிக்க தயாராக இருந்திருக்காவிட்டாலும், கென்னடி மாதிரி, National Guard யை தன்னும் அனுப்பி கலகம் அடக்க தன்னும் தயாராக இருக்கவில்லை என்பது உண்மை. கையெழுத்திடும் போது தமது அரசியலை அந்தநேரம் கொண்டு போகத்தான் கையெழுத்திட்டார்கள். அதனால்தான் நடை முறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் அவற்றை கிழித்தும் எறிந்தார்கள்.

இந்த பழைய அனுபவங்களை பாவித்துதான் JR கையெழுத்திட்டார். ரஜிவ்காந்தி, தமிழ்த்தலைவர்களின் அப்பாவித்தனத்தை வைத்து தமிழீழத்தை 21½ யாவது மாகணமாக இந்தியாவுடன் இணைப்பதை தடுக்க வேண்டும் என்று அவசரப்பட்டார். அதனால்த்தான் 13ம் திருத்ததிற்கு உடன் படுவதாயும், தமிழருக்கு உரிமைகள் ஒரு அளவில் தன்னும் கொடுக்கத்தாயாரக இருப்பதாகாவும் நடித்தார். அவர் எப்போதுமே இந்தியாவை எதிரியாகத்தான் பார்த்தார். முன்னைய அரசியல் தலைவர்கள் தந்திர நடத்தையாக விரும்பி எழுத்திய ஒப்பந்தக்கள் போலன்றி இந்தியா பலப்பிரயோகம் செய்த்துதான் 13ம் திருத்த ஒப்பந்தம் விரும்பாமல் எழுதுவித்தாகவேதான் பார்த்தார். எனவே ஒரு பக்கம் விரும்பாமல் கையெழுத்துப்போடும் ஒப்பந்தங்கள் நடை முறைக்கு செல்லுபடியாகது என்பது போலவே ரஜீவ்-JR ஒப்பந்தம் சட்டப்படி ஒருபோதும் இருப்பிற்கு வருவுமில்லை. ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை.

இதேபோலவே பலதடவை ரொபேட் பிளேக் இலங்கையிடம் பல வாக்குறுதிகள் வாங்கியபின்னர் ஏமாந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது. அமெரிக்கா தனது அரசியல் மிடுக்கைப் பாவித்து இலங்கையை வழி நடத்த அது ஒரு போதும் இசையாது என்பதைதான் இங்கும் காட்டுகிறது. இ்லங்கை எப்போதுமே தான் விருப்பிய பாதையில் தான் போகும். அதில் அதனுடன் செய்துகொள்ளும் எந்த ஒப்பந்தங்களும் செயல் பாடற்றவையே. இதை தெரிந்துகொண்டுதான் அதனுடன் ஒப்பந்தம் செய்யும் நாடுகள் செய்துகொள்ள வேண்டும்.

மற்றைய புலிகள் சம்பந்தபடாத வியயாபார ஒப்பந்தங்களான: எண்ணைக்குத ஒப்பந்தம், 50,000 வீடுகள், பலாலி விமானத்தளம்- எல்லாவற்றிக்குமே ஒரு முடிவுதான். ஆனால் இவை புலிகள் அரசியலில் இருந்து ஒதுங்கிய பின்னர் செய்யபட்ட பூ சுத்தல்கள். மேலும் இந்த பூ சுத்தல்களை செய்து கிந்தியாவை ஏமாற்றியவர்கள் மலையாளத்து கோயில்புரோகிதங்களே.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.