Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் - எதிர்கொள்ளும் தயாரிப்பில் சிறிலங்கா

Featured Replies

[size=5]இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் - எதிர்கொள்ளும் தயாரிப்பில் சிறிலங்கா[/size]

[size=4]இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்துவதை நோக்காகக் கொண்டு இந்தியாவிற்கு அமெரிக்காவால் வழங்கப்படும் ஒத்துழைப்பானது சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கை வட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். [/size]

[size=4]இவ்வாறு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்குகிறார் Dr Kamal Wickremasinghe. சிறிலங்காவை தளமாகக்கொண்ட Lakbimanews ஊடகத்தில் வெளிவந்த அந்த ஆய்வை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

மார்ச் 2012ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவிற்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தமையானது பல்வேறு வெளிநாட்டு கொள்கை வகுப்பு வல்லுனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தியா தான் வழமையாக கடைப்பிடிக்கின்ற நிலைக்கு மாறாக, பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து, சிறிலங்காவிற்கு எதிராக வாக்களித்திருந்தது.

மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் உள்விவகாரங்களை விமர்சிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் எதிர்த்து வாக்களிப்பதில்லை என்கின்ற இந்தியாவின் வழமையான நிலைப்பாடு சிறிலங்காவிற்கு எதிராக வாக்களித்ததன் மூலம் மாற்றமடைந்துள்ளது. அத்துடன் ஐ.நாவில் அங்கத்துவம் வகிக்கும் நவீன-கொலனித்துவ சக்திகள் சிறிலங்காவை எதிர்த்த போதெல்லாம் இந்தியா சிறிலங்காவிற்கு தனது ஆதரவை வழங்கியிருந்தது.

இந்நிலையில், உலக வல்லரசான அமெரிக்காவின் தலைமையில் கடந்த மார்ச் 2012ல் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததானது அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த அரசியல் வல்லுனர்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியாவின் இந்த மாற்றமானது, இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்காப் போரில் படுகொலை செய்யப்பட்ட, விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்ப உறுப்பினர்களின் ஒளிப்படங்களை சோனியா காந்தி பார்த்த பின்னர் அவரது பிரதிபலிப்பு மாறுபட்டதாக காணப்பட்டது. இதேபோன்றே ஓகஸ்ட் 2011ல் இந்திய வெளியுறவுச் செயலராக றஞ்சன் மத்தாய் நியமிக்கப்பட்டமையும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதை காண்பிக்கின்றது.

பாதுகாப்பு மற்றும் ஆய்வு மையத்தால் 'அடுத்த இரு பத்தாண்டுகளில் இந்தியாவின் அண்டை நாட்டு சவால்கள்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்திய வெளியுறவுச் செயலர், இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை தொடர்பாக மேலோட்டமாக விளக்கியிருந்தார்.

இவரது இந்த உரையிலிருந்து மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவானது சிறிலங்காவிற்கு எதிராக வாக்களித்தமையானது இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை தொடர்பில் புதிய திசை நோக்கிப் பயணிக்கின்றது என்பதை சுட்டிக்காட்டுகின்றது. சிறிலங்காவிற்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் ஈரானிய எண்ணெய் கொள்வனவு மீதான ஈரானியத் தடை போன்றன இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு வருவதை உறுதிப்படுத்துகின்றன.

ஆறு மாதங்களின் முன்னர் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லியோன் பனெற்றவால் பாதுகாப்பு கற்கை மற்றும் ஆய்வு மையத்தில் மேற்கொண்ட புதிய அமெரிக்க மூலோபாயத்தை பிரதிபலிக்கும் முகமாகவே இந்தியா தொடர்பான றஞ்சன் மத்தாயின் புதிய நோக்கு அமைந்துள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

சிறிலங்காவிற்கான அமெரிக்காவின் முன்னாள் தூதரும், பின்னர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தென்னாசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலருமான றொபேற் ஓ பிளேக், அமெரிக்காவின் இப்புதிய மூலோபாயத்தை வரைந்தவர்களில் முதன்மையானவர் எனக் கருதப்படுகிறது.

மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை அடுத்து, இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்களுடன் சிறிலங்கா எவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொள்ளப் பேகின்றது என்பது தொடர்பாகவும் இவ் அணுகுறைகள் அமெரிக்காவின் நவீன கொலனித்துவ பொறிமுறையால் எவ்வாறான சிக்கல்களுக்கு முகங்கொடுக்கப் போகின்றன என்பது தொடர்பாகவும் மத்தாயின் புதிய வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்னாசியா நோக்கிய புதிய அமெரிக்க மற்றும் இந்தியக் கோட்பாடுகளிற்கிடையிலான தொடர்பை நோக்கும்போது, புதிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் திருப்புமுனையானது ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் 'மீள்சமநிலைப்படுத்தலை' ஏற்படுத்துவதாகும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பனெற்றா தெரிவித்துள்ளார். அதாவது இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும், தென்னாசியாவிலும் அமெரிக்க இராணுவம் நிலைகொள்வதற்கான விரிவுபடுத்தலை இது குறிக்கின்றது.

அனைத்துலக பாதுகாப்பு மற்றும் செழுமையை பராமரிக்க உதவுகின்ற கோட்பாடுகளை உருவாக்குவதற்காகவே இந்தியாவுடன் அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது. ஆழ்கடலில் ஏற்படும் கடற்கொள்ளை, தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காகவும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கின்ற பாரிய ஆயுத நடவடிக்கைகளை தடுப்பதையும் நோக்காக் கொண்டு அமெரிக்காவானது இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றது. இந்தியாவுடனான அமெரிக்காவின் பாதுகாப்புச் செயற்பாடுகளை நாளாந்தம் முன்னேற்றுவதற்கான திட்டத்தை பனெற்றா கொண்டுள்ளார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்துவதை நோக்காகக் கொண்டு இந்தியாவிற்கு அமெரிக்காவால் வழங்கப்படும் ஒத்துழைப்பானது சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கை வட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தென்னாசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் புதிய திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிற்கும் இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும்.

வருகின்ற பத்தாண்டுகளில், இந்திய வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய 'நண்பன்' ஒருவரை அமெரிக்கா அடையாளங் கண்டுள்ளமை தெளிவாகத் தெரிகிறது. இந்திய வெளியுறவுச் செயலர் மத்தாயின் கடந்த கால பதவி நிலைகள் அமெரிக்க சார்புடையதாக காணப்படுகின்றன.

கேரளாவைச் சேர்ந்த 60 வயதான றஞ்சன் மத்தாய் பூனா பல்கலைக்கழக பட்டதாரி ஆவார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக இந்திய வெளியுறவு சேவைகளில் பல்வேறு பதவி நிலைகளை வகித்துள்ளார். இவர் மேற்குலக நாடுகளிற்கான தூதராகச் செயற்பட்டுள்ளார். 1998-2001 வரை இஸ்ரேலிற்கான இந்தியத் தூதரகவும், 2001-2005 வரை வரை கட்டார் நாட்டிற்கான தூதராகவும் பதவி வகித்துள்ளார். அத்துடன் 2005-2007 வரை பிரித்தானியாவிற்கான துணை உயர் ஆணையாளராகவும் 2007-2011 வரை பிரான்சிற்கான தூதராகவும் செயற்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கொழும்பு, வோசிங்ரன், தெக்ரன், பிறசில்ஸ் போன்ற தலைநகரங்களிலும் பணிபுரிந்துள்ளார். பங்களாதேஸ், சிறிலங்கா, மியான்மார் மற்றும் மாலைதீவு போன்றவற்றுடன் தொடர்புகளைப் பேணும் இந்தியக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

றஞ்சன் மத்தாய், அமெரிக்காவின் கருத்தியலால் உந்தப்பட்டு செயற்படும் இந்திய அதிகாரியாவார். அடுத்த இரு பத்தாண்டுகளில் இந்தியாவின் அண்டை நாடுகளின் பூகோள அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதே இவரது அடிப்படை நோக்காகும். சிறிலங்கா, பங்களாதேஸ், பூட்டான், நேபாளம் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு சவாலாக உள்ளன. தீவிரவாத மற்றும் நாடு கடந்த தேசியவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்க இடையில் பிளவை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்ட அமெரிக்காவின் பரப்புரையை மாத்தேயும் செயற்படுத்துவது போல் தெரிகிறது.

இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கையானது தன்னைச் சூழவுள்ள சிறிய நாடுகளுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துவதாக உள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு அரசியலிலும் தாக்கத்தைச் செலுத்துகின்றது. இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை தொடர்பாக இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் கவனத்தில் எடுக்க வேண்டிய தேவையுள்ளது. அத்துடன் இந்தியாவின் வரலாற்று செல்வாக்கு மற்றும் அதன் புதிய உறவுகள் தொடர்பிலும் கவனத்திற் கொள்ளவேண்டும்.

[size=5]திரு.மத்தாயின் வேண்டுகோளின் படி, புதிய வெளியுறவுக் கொள்கையானது பிராந்திய ரீதியாக ஆராயப்பட்டு அது தொடர்பில் பிராந்திய நாடுகளின் பின்னூட்டல்கள் பெறப்படவேண்டும். இந்தியாவின் நலனையும், பிராந்தியத்தின் சிறப்பையும் பேணக்கூடியவாறு இந்தியாவின் பாரம்பரிய வன்முறையற்ற அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டுக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என சிறிலங்கா இந்தியாவிற்கு தெரியப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. [/size]

[size=5]பொருளாதார சுரண்டல், ஆயுத உற்பத்தி போன்றவற்றை உள்ளடக்கிய அமெரிக்காவின் கோட்பாட்டைத் தழுவியதாகவே இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கையும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கோட்பாடானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வரவேற்பைப் பெறாத ஒன்றாக காணப்படும். சிறிலங்காவானது தனது நாட்டின் நலன் இப்புதிய வெளியுறவுக் கொள்கை மூலம் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து இதற்கெதிராக தனது எதிர்ப்பை மிக வலுவாக முன்வைக்க வேண்டிய தேவையுள்ளது.[/size][/size]

http://www.puthinappalakai.com/view.php?20120808106758

  • தொடங்கியவர்

[size=5][size=6]இரஞ்சன் மத்தாய் [/size]- இந்திய அயலுறவுத்துறைச் செயலர்[/size]

[size=5]இவர் முன்னர் நிருபாமா ராவ் வகித்த பதவியை வகிக்கின்றார் [/size]

[size=3][size=5]Ranjan Mathai is a 1974 batch Indian Foreign Service Officer. His term of office will be for two years. He succeeds Nirupama Rao, who is now India's Ambassador to the United States of America.[/size][/size]

[size=3][size=5]He joined the IFS after completing post graduate studies in Political Science at the University of Poona. He has served in Indian Embassies in Vienna, Colombo, Washington, Tehran and Brussels.[/size][/size]

[size=3][size=5]As Joint Secretary (BSM) in the Ministry of External Affairs in New Delhi (January 1995 to February 1998), he headed the Division dealing with India’s relations with Bangladesh, Sri Lanka, Myanmar and Maldives. Mathai has also served as Indian Ambassador to Israel – February 1998 to June 2001, and was the Indian Ambassador in Qatar from August 2001 to July 2005. He held the post of Deputy High Commissioner of India to the UK in London from August 2005 to January 2007.[/size][/size]

[size=3][size=5]He became Ambassador of India to France in January 2007.[/size][/size]

[size=3][size=5]On 1st August 2011 he assumed charge as India's Foreign Secretary.[/size][/size]

400px-Ranjan_Mathai.jpg

http://en.wikipedia.org/wiki/File:Ranjan_Mathai.jpg

  • தொடங்கியவர்

[size=6]India’s new foreign policy demands responses from Sri Lanka[/size]

[size=5]Dr Kamal Wickremasinghe[/size]

[size=5]The decision by India to vote for the US resolution against Sri Lanka at the UN Human Rights Council sessions in Geneva in March 2012 surprised many foreign policy pundits. The Indian decision to vote for the resolution, albeit a much diluted version of the original, marked a significant deviation from the usual Indian stance of not voting for resolutions critical of individual member countries, as well as from ‘standing by’ Sri Lanka during attacks by neo-colonial powers at UN forums.[/size]

[size=5]The changed stance of India has been variously attributed to causes ranging from Indian domestic politics to Sonia Gandhi’s reaction to seeing the photos of the dead family of the dreaded terrorist lynchpin; the possible influence of the appointment of Ranjan Mathai as foreign secretary in August 2011 was not among the factors being considered.[/size]

[size=5]A comprehensive overview of the new foreign policy agenda for India recently spelt out by the Indian Foreign Secretary Ranjan Mathai during the release of a book titled India’s Neighbourhood Challenges in the Next Two Decades, at the Institute for Defence Studies and Analyses (IDSA), shows that the UN vote against Sri Lanka was the first indication that under Mathai, the Indian foreign policy was beginning to head in a significantly new direction. Other policy ‘reversals’ since the UN vote on Sri Lanka, such as the issue of Iranian oil purchases following the US ‘sanctions,’ confirms such a view.[/size]

[size=5]Critics argue that Ranjan Mathai’s new vision for India essentially reflects a new US defence strategy outlined by the US Defence Secretary Leon Panetta (formerly the Director of the CIA) at IDSA just six months ago. The former US ambassador to Sri Lanka, Robert O. Blake, who after Sri Lanka became the assistant secretary for South Asian Affairs at the US State Department is considered one of the chief architects of the new US policy.[/size]

[size=5]The important aspect of Mathai’s new policy approach to South Asia from a Sri Lankan point of view is that, as the March events forestalled, Sri Lanka’s considerations to dealing with India, China and the UN agencies are going to be further complicated by the US neocon establishment’s new friend within the ‘bowels’ of the Indian foreign policy establishment.[/size]

http://www.lakbimanews.lk/index.php?option=com_content&view=article&id=6421:indias-new-foreign-policy-demands-responses-from-sri-lanka&catid=35:news-features&Itemid=37

தமிழின விரோத ஹிந்தியாவின் இன்னொரு ஏமாற்று நாடகம்.

அமெரிக்காவை கண்மூடித்தனமாக நம்பும் ஈழத் தமிழர் சிலரும் இப்போது அமெரிக்க - இந்திய கூட்டு நடவடிக்கை என்ற கற்பனையில் மீண்டும் ஏமாற தயாராகிறார்கள்!

காட்டுமிராண்டிக் குணத்தை தமது பண்பாடாகக் கொண்ட இந்தியா, ஈழத் தமிழர் இனவழிப்புப் போரில் மேற்குலகை ஏமாற்றியது! இதில் மேற்குலகிற்கு பெரும் இழப்பில்லை. இழந்தது ஈழத்தமிழரே! எனவே அமெரிக்கா தொடர்ந்து இது போன்ற விடயங்களில் இந்திய காட்டுமிராண்டி அரசின் ஏமாற்றுதல்களை பெரிதுபடுத்தப் போவதில்லை.

சீனாவைப் பார்த்து நடுகிப்போயிருக்கும் இந்தியாவை முடிந்தளவு சீனாவுக்கு எதிராக பயன்படுத்த, இந்தியாவுடன் கூட்டு என்று நடிக்க அமெரிக்கா எப்போதும் தயாராகவே இருக்கும். இதை விளங்காத அமெரிக்க கண்ட ஈழத்தமிழர் சிலர் தாமும் தமிழின விரோத இந்தியக் காடையர்களின் கைகளில் ஈழத் தமிழரின் தீர்வு என்று நம்பத் தொடங்கியுள்ளனர்.

இந்தியக் காடையர்கள் ஜெனீவா தீர்மானத்தை வைத்து தமது சீபா வர்த்தக உடன்படிக்கையை சிங்கள அரச பயங்கரவாதிகளுடன் நிறைவேற முயல்கின்றனர். இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடாமல் பலவருடங்களை இழுத்தடித்து சிங்கள அரச பயங்கரவாதிகள் இந்தியக் காடையர்களை வெற்றிகரமாக ஏமாற்றிவிட்டார்கள். ஜெனீவ தீர்மானத்தை வைத்து இந்தப் போக்கை மாற்ற முயலும் இந்தியக் காடையர்கள், தமிழருக்கு எதிராக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளனர். இதன் மூலம் மீண்டுமொருமுறை ஈழத் தமிழர் ஏமாற்றப்படும் சூழல் ஏற்படலாம்! மாறாக நன்மைகள் எதுவும் விளையப் போவதில்லை.

எனவே அமெரிக்க - இந்திய கூட்டு முயற்சியில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் ஈழத்தமிழரை அழிவுக்கு இடுச்செல்லும் சூழலை உருவாக்கலாம்.

எனவே ஐரோப்பா - அமெரிக்கா - கனடா - ஆஸ்திரேலியா சேர்ந்த மேற்குலக கூட்டுப் பொறுப்பை சம்பந்தப் பட்டவர்கள் ஏற்படுத்த முயல்வதே சிறந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

பிராந்தியத்தில் இந்திய-அமெரிக்க-சிறீலங்கா கூட்டுக்காகப் பாடுபடுகிறார்கள்.. இலங்கை மூலைக்குள் தள்ளப்பட்டு இந்த நிலையை வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொள்ளும் நிலை வரும்.. :D

இவறும் மலையாளியா!!!

  • தொடங்கியவர்

[size=6]US, India face Sri Lanka challenge

[size=5]By Anuradha Sharma and Vishal Arora [/size][/size]

[size=5]- The overall atmosphere of the country is also gloomy, affecting all, including the Sinhalese people in the south. The media, the civil society, the judiciary and the opposition have all been rendered powerless. [/size]

[size=5]- The fear of India and the US is based on the high strategic importance of the Indian Ocean Region, where China has managed to have an edge over them. [/size]

[size=5]- It's time Washington and New Delhi re-evaluated their paranoia over Beijing's ability to marginalize them, and began to flex their diplomatic muscles with Colombo, provided they truly believe in promoting democracy and civil rights in the world. [/size]

http://www.atimes.com/atimes/South_Asia/NH10Df01.html

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் - எதிர்கொள்ளும் தயாரிப்பில் சிறிலங்கா[/size]

தோழர் . எனக்கு தெரிந்து தமிழன விரோத கொள்கையில் இருந்து கிந்தியா மாற போவது இல்லை.. இது ஒரு அடிப்படை (பேசிக்கு).. இந்த உண்மை எல்லாருக்கும் தெரியும் ..

முன்னர் தீவிரவாதம் பயங்கர வாதம் என்று வெளியுறவு கொள்கையில் இருந்தது.. அப்படியென்றால் இப்ப புதுசா தமிழின விரோதம் பற்றி டிஸ்கசன் செய்து டிசைன் டிசைனாக புதியதாக் வெளியுறவு கொள்கையை மாற்றி அமைக்க போகிறார்கள் ..அதற்கேற்றவாறு சொறிலங்கா எதிர் கொள்ள தயாராகி வருகிறது என்று சொல்ல வருகிறது இந்த கட்டுரை..

டிஸ்கி:

ஒ.கே ஐ அண்டர் ஸ்டேண்டு...

ஓபாமா போகும் இடம் வெல்லும். போனதடவை 51 தங்கம் எடுத்து அமெரிக்காவை 15 தங்கத்தால் வென்ற சீனா ஏற்கனவே 37 ற்கு வந்தும் இன்னமும் தள்ளாடுகிறது.

அசாத் பதவி விலகினால் அத்துடன் தன்னுடைய உடம்பில் நோகாமல் பல எதிரிகளுக்கு அடி கொடுத்துவிட்டார் ஒபாமா. இலங்கையின் மூன்றாம் சுப்பபவர் விளையாட்டுகள் இந்தியாவுடன் மட்டும்தான் எடுபடும்.

அதாவது ஒபாமா தமிழருக்கு உரிமை என்று உச்சரித்தால் அது கொடுபட்டதாயிற்று. ஆனால் தேர்தல் வரைக்கும் எதுவும் நடக்காது.தேர்தல் முடிய உலகத் தமிழர் எல்லொரும் இணைந்து மேற்கு நாடுகளை இந்த விடையத்தில் அக்கறை கொள்ள செய்ய வேண்டும். ஒபாமா இறங்கினால் நிச்சயமாக செய்து முடிக்கும் வலு இருக்கிறது. அது பல இடங்களில் வெளிக்காட்டுப்பட்டுவிட்டது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.