Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பௌத்தர்களிடம் மன்னிப்பு கோருகிறார் அமைச்சர் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]Rauff-Hakeem-60-60(2).jpg[/size]

[size=2][size=4]ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சில நாட்களுக்கு முன் தனது மாகாணசபை பிரசாரத்தின்போது வெளியிட்ட சர்ச்சைக்கு உரிய கருத்து தொடர்பாக மகாசங்கத்திடமும் ஜாதிக ஹெல உறுமயவிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பூரண அறிக்கை:

"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட அறிக்கை.

கல்முனை சாய்ந்தமருதுவில் அண்மையில் நான் கூறிய கருத்து, பௌத்தத் தலைவர்கள் மற்றும் ஜாதிக ஹெல உறுமய உட்பட பௌத்த குருமார் இடையே மிகவும் கடுமையான விசனத்தை தோற்றுவித்துள்ளது.

இழுத்தடிக்கும் முயற்சிகளில் ஈடுபடாமல், நான் இலங்கையில் உள்ள சகல பௌத்த மக்களிடமும் தயக்கம் ஏதும் இன்றி மன்னிப்பு கேட்கின்றேன். நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் இதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றேன். எனவே இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்படி இலங்கை மகாசங்கத்திடம் விசேடமாக கேட்டுக்கொள்கின்றேன்.

முஸ்லிம்களின் மனத்தாங்கல்கள் பற்றி நான் குறிப்பிட்டது குறித்த ஒரு இடத்தில் காணப்பட்ட உள்ளூர் விவகாரத்தோடு மட்டுப்படுத்திய பிரச்சினை பற்றியதாகும். ஆனால் துரதிஷ்டவசமாக குறித்த பின்னணியிலிருந்து விலகிய எனது சொற்பிரயோகம், எமது மக்களின் பிரதான சமயமான பௌத்தத்தின் பாதுகாவலர்களாக மகாசங்கத்தினர் பற்றி தரக்குறைவான கருத்துரைத்தது போன்று அமைந்துவிட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் நான் எப்போதும் முஸ்லிம்கள் இலங்கை தேசத்தின் ஒன்றிணைந்த பகுதியினர் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். நாம் சிங்கள அரசர்கள் காலத்திலிருந்து சிங்கள மக்களின் அரவணைப்பையும் தாராள மனப்பான்மையையும் அநுபவித்துள்ளோம்.

போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்;;களால் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்கிய செனரத் அரசனின் காலத்திலிருந்து சிங்கள பௌத்தர்கள் கடைப்பிடித்துவரும் பன்மைவாத கொள்கையை பற்றி சில மாதங்களின் முன் சர்வதேச தாராண்மை கவுன்ஸிலில் பேசியபோது நான் எடுத்துரைத்தேன்.

பௌத்தர்களுடனும் ஏனைய சமயத்தவர்களுடனும் பூரண ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்னும் முஸ்லிம்களின் விருப்பம் பற்றி நான் நன்கு அறிவேன். இதுவே ஸ்ரீலங்கா தேசத்தில் முஸ்லிம்கள் முழுமையாக இணைந்துகொள்ளவுள்ள ஒரே பாதையாகும்"[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...0-07-19-44.html[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=2][size=4]ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் நான் எப்போதும் முஸ்லிம்கள் இலங்கை தேசத்தின் ஒன்றிணைந்த பகுதியினர் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். நாம் சிங்கள அரசர்கள் காலத்திலிருந்து சிங்கள மக்களின் அரவணைப்பையும் தாராள மனப்பான்மையையும் அநுபவித்துள்ளோம்.

போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்;;களால் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்கிய செனரத் அரசனின் காலத்திலிருந்து சிங்கள பௌத்தர்கள் கடைப்பிடித்துவரும் பன்மைவாத கொள்கையை பற்றி சில மாதங்களின் முன் சர்வதேச தாராண்மை கவுன்ஸிலில் பேசியபோது நான் எடுத்துரைத்தேன்.[/size][/size]

போட்டுட்டாய்யா போட்டுட்டான்.. பெரிய ஐஸ் கட்டியா தூக்கிப் போட்டிட்டான். பதவி தப்பிடும்..! சரியான கோமாளி..! இவர் முஸ்லீம்களின் தலைவர்..! தூ..... :lol::D

Sinhala - Muslin riots of 1915 - Nationwide இப்படி ஒன்று நடந்ததையே மறந்திட்டா... ஆனால்.. வடக்கில் இருந்து அடாவடித்தனம் செய்ய வெளிக்கிட்டு வெளியேறினது மட்டும்.. மறக்கல்ல..! கல்முனைல தமிழங்களைக் கொன்றதை மறந்திட்டா... காத்தான்குடியில நடந்ததை மறக்கல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சநாளுக்கு முன்பு முஸ்லிம்களின் பிரதி நிதி ஒருவர் களத்தில் எழுதிவந்தார் இப்போது அவரை காணவில்லை வந்தால் இதற்கும் நியாயம் எதையாவது எழுதுவார் :D

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் முஸ்லிம்களுக்கு போதும் :D:icon_mrgreen:

[size=4] முஸ்லீம் காங்கிரசுக்கு அதன் தலைமைக்கு ஏதாவது கொள்கை உள்ளதா ? இருந்தால் ஒன்றைக்கூற முடியுமா? [/size]

[size=4]முஸ்லீம் காங்கிரசுக்கு அதன் தலைமைக்கு ஏதாவது கொள்கை உள்ளதா ? இருந்தால் ஒன்றைக்கூற முடியுமா? [/size]

மந்திரிப்பதவிக்காக மட்டும் பேசும் பேச்சுகளும் அறிக்கைளும்தான் இவை.

தலைமை என்று மார்தட்டிகொள்ளும் கக்கீம் இன்று கண்டு கொண்ட பாடம் திரும்ப திரும்ப தமிழர்கள் முஸ்லீம்களை அழிக்கிறார்கள் என்று பிரசாரம் செய்தால் மட்டுமே இலங்கையில் தனிப்பட்ட அரசியல் ஆதாயம் கிடைக்கும். அதேநேரம் இது தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க போகும் முஸ்லீம் மக்களையும் தடுக்கும். ஆனால் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க போகும் முஸ்லீம்களை தடுக்க போனால் அது மகா சங்கங்களிடமிருந்து உயிராபத்து வரையும் கொண்டுவரும் என்பதாகும்.

கூட்டமைப்பு தலைமை இல்லாமல் தவிக்கும் தமிழ் முஸ்லீம் மக்களை அரவணைத்து விடுதலைப் பாதையில் சென்று, தீர்வோன்றை வென்று, அவர்களுக்கும் நியாமான பங்கை கொடுக்க வேண்டும்.

கோஸ்டி சண்டைகளாலும், தெருச்சண்டைகாளாலும் நொய்திருக்கும் முஸ்லீம் தமிழ் உறவுகளை பாவித்து கக்கீம், பதியுதின் போன்றோர் மந்திரிப்பதவிகளை காப்பாற்ற பாவிக்க இடம் அள்ளிக்க கூடாது.

Edited by மல்லையூரான்

கூட்டமைப்பு தலைமை இல்லாமல் தவிக்கும் தமிழ் முஸ்லீம் மக்களை அரவணைத்து விடுதலைப் பாதையில் சென்று, தீர்வோன்றை வென்று, அவர்களுக்கும் நியாமான பங்கை கொடுக்க வேண்டும்.

கோஸ்டி சண்டைகளாலும், தெருச்சண்டைகாளாலும் நொய்திருக்கும் முஸ்லீம் தமிழ் உறவுகளை பாவித்து கக்கீம், பதியுதின் போன்றோர் மந்திரிப்பதவிகளை காப்பாற்ற பாவிக்க இடம் அள்ளிக்க கூடாது.

[size=4]இதை பல முஸ்லீம் மக்களையும் இணைத்து கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே முஸ்லீம் மக்கள் அரசியல் சுதந்திரங்களை பெற முடியும் என்பதை எல்லோருக்கும் சென்றடைய கூற வேண்டும்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.