Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளியவளையில் இனம்தெரியதோரினால் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

Featured Replies

முல்லைத்தீவு முள்ளியவளையில் வெள்ளை ஊர்தியில் வந்த இனம்தெரியதோரினால் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.கடத்தப்பட்டவர் ஒரு குழந்தையின் தந்தையான சின்னத்துரை சதீஸ்வரன் என தெரியவருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினரான இவர் சிறீலங்காவின் இன அழிப்பு போரின் இறுதியில் படையிரால் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டு இவ் வருடமே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவர் இனம்தெரியதோரினால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

தனியார் வர்த்தக நிலையத்தில் பணியாற்றி வீடு திரும்பிய நிலையில் கடத்தப்பட்ட அவர் பற்றிய தகவல் எதுவும் இன்னும் தெரியாது உள்ளதாகதெரிவித்துள்ள குடும்பத்தினர் உரிய தரப்புகள் தலையிட்டு விடுதலைக்கு உதவவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://thaaitamil.com/?p=28747

[size=4]இப்படியான செயல்கள் நாளும் நடக்கின்றன. அவர்களும் 'உரியவர்கள்' உதவுங்கள் என கேட்கின்றனர்.[/size]

[size=4]தொடர் பரப்புரைகள், அரசியல் நகர்வுகள் மூலமே சர்வதேசத்திற்கு எமது மக்களின் அவலங்களை எடுத்து செல்லலாம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

HAND-CUB.jpg

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து, சிறிலங்கா படையினரின் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சதீஸ்வரன் (வயது 34) என்ற முன்னாள் போராளியே கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

கடந்த சனிக்கிழமை காலை 7.45 மணியளவில் இவரது வீட்டுக்குச் சென்ற வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவினர், இவரைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

முன்னதாக, அப்பகுதி கிராம அதிகாரியுடன் சதீஸ்வரனின் வீட்டுக்குச் சென்ற சிறிலங்கா காவல்துறையினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதையடுத்து மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்வதாக கூறி, கைதுசெய்யப்பட்டதற்கான பற்றுச்சீட்டையும் அவரது மனைவியிடம் கொடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சதீஸ்வரன் ஐந்து ஆண்டுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த பின்னர், 2000ம் ஆண்டில் அதைவிட்டு விலகியிருந்தார்.

போரின் இறுதிக்கட்டத்தில் ஓமந்தையை சென்றடைந்த அவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த அனைவரும் சரணடைய வேண்டும் என்ற சிறிலங்கா இராணுவத்தினரின் உத்தரவுக்கமைய சரணடைந்தார்.

இதன்பின்னர் சிறிலங்கா படையினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே விடுதலை செய்யப்பட்டார்.

இதன்பின்னர், முள்ளியவளையில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் சிறிலங்கா படையினரால் விசாரணைக்குட்படுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருவது புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் குடும்பங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.puthinapp...?20120814106796

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.