Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவை உண்மையான குடியரசு நாடாக கட்டியெழுப்புதல் எவ்வாறு ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவை உண்மையான குடியரசு நாடாக கட்டியெழுப்புதல் எவ்வாறு ? [ சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 08:22 GMT ] [ நித்தியபாரதி ]

Dr.%20Jayampathy%20Wickramaratne.jpgசிறிலங்காவானது உண்மையான குடியரசு நாடாக திகழவேண்டுமாயின், நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழித்தல் மற்றும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்பன முக்கியமானவையாகும்.

இவ்வாறு சிறிலங்காவின் அரசியல் யாப்பு மற்றும் சட்ட நிபுணரான Jayampathy Wickramaratne* இணைய ஊடகமான Lanka News Webக்கு எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்கா, குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவுற்றுள்ள நிலையில், இரண்டு குடியரசு அரசியல் யாப்புகள் தொடர்பாக மட்டும் நாம் மீளப்பார்க்காது, உண்மையான குடியரசு நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புதல் என்பது தொடர்பாகவும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.

1972ம் ஆண்டு அரசியல் யாப்பு யாருடையது?

1972ம் ஆண்டு அரசியல் யாப்பு கொல்வினின் பங்களிப்பைக் கொண்டிருந்ததால், இது ‘எமது' அரசியல் யாப்பு என இடதுசாரிகளில் பலர் கருதிக்கொண்டனர். இது மிக மோசமான தவறாகும்.

அரசியல் யாப்பு ஒன்று வரையப்படும் போது, அரசியல் சீர்திருத்த விவகார அமைச்சரால் மட்டும் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இருக்கக் கூடாது என கொல்வின் பின்னர் குறிப்பிட்டிருந்தார். இதன் இறுதி வரைபானது பல்வேறு அரசியற் தரப்புக்களாலும் உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில் அரசியல் யாப்பானது ஒற்றைக் கருத்தை சார்ந்ததாக இருந்தாலும் கூட, அது அவ்வாறு தான் இருக்க வேண்டும் என முத்திரை குத்தப்படக் கூடாது என கொல்வின் தெரிவித்திருந்தார்.

ஏனெனில், அரசியல் யாப்பு 'ஒற்றைக் கருத்தை மட்டுமே முதன்மைப்படுத்தியதாக' இருந்தால், எதிர்காலத்தில் அதில் நெகிழ்வுத்தன்மையைக் காட்ட முடியாது என்பது கொல்வினின் கருத்தாகும். இதனால் இந்த அரசியல் யாப்பை சிறிலங்கா சுதந்திரக் கட்சி நிராகரித்தது.

பெரும்பான்மை மக்கள் பின்பற்றுகின்ற பௌத்தமதத்திற்கு, அரசியல் யாப்பில் உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என அடிப்படை பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வலதுசாரிகள், பௌத்தமதத்தை சிறிலங்கா அரச மதமாக பிரகடனப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதன் காரணமாக, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அரசியல் யாப்பு நெகிழ்வுத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு பௌத்தமதத்திற்கு முக்கிய இடம் வழங்க வேண்டும் என்பதை கொல்வின் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் 1972ம் ஆண்டு அரசியல் யாப்பானது யாருடைய அரசியல் யாப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது.

1972ம் ஆண்டும், 1978ம் ஆண்டு அரசியல் யாப்புகளும், தேசிய பிரச்சினையும்:

பிரித்தானிய ஆட்சியிலிருந்து சிறிலங்கா முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டமை, நாடாளுமன்றிற்கு அதிகாரம் வழங்கப்பட்டமை மற்றும் அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டமை போன்றன 1972ம் ஆண்டு அரசியல் யாப்பின் மூலம் கிடைக்கப் பெற்ற நன்மைகளாகும். 1972ம் ஆண்டு அரசியல் யாப்பில் தேசிய பிரச்சினை முதன்மைப்படுத்தப்படவில்லை. இது மிகப் பெரிய பின்னடைவாகக் காணப்பட்டது.

ஐக்கிய சிறிலங்காவிற்கு அப்பால் ஐக்கிய முன்னணியானது வேறெந்த ஆணையையும் கொண்டிருக்காவிட்டால், அது தேர்தல் விளக்கவுரையில் குறிப்பிட்ட சில வாக்குறுதிகளையாவது நிறைவேற்ற வேண்டும் என [பெடரல்] தமிழரசுக் கட்சியின் தர்மலிங்கம் குறிப்பிட்டிருந்தார். அதாவது கச்சேரி முறைமையை நீக்குவது, மாவட்ட மட்டத்தில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுபவர்களை நியமிப்பது போன்றன ஐக்கிய முன்னணியால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளாகும்.

ஆனால் தென் சிறிலங்காவைச் சேர்ந்த எந்தக் கட்சிகளும் இவ்வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பில் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளவில்லை. பதிலாக, பெடரல் கட்சியின் பரிந்துரைகளிற்கு இடையூறு விளைவிக்கின்ற நடவடிக்கைகளை இக்கட்சிகள் முன்னெடுத்தன.

இவ்வாறான விட்டுக்கொடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு, இதன் உடன்பாடுகள் சில நிறைவேற்றப்பட்டிருந்தால், இந்த நாட்டின் வரலாறு வேறு விதமாக அமைந்திருக்கலாம்.

1977ல் மேற்கொள்ளப்பட்ட தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விளக்கவுரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட, ஜே.ஆர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகள் கருத்திலெடுக்கப்படாததால் பிரிவினைவாதம் உருவாக வழிகோலப்பட்டது.

இது போன்று, ஜே.ஆர் தான் ஆட்சிக்கு வரமுன்னர் வழங்கிய 'வட்ட மேசை மாநாடு' தொடர்பான வாக்குறுதி ஆட்சிக்கு வந்த பின்னர் கைவிடப்பட்டது. பதிலாக, ஐக்கிய சிறிலங்கா என்ற கருத்து 1978 அரசியல் யாப்பில் மேலும் வலுவூட்டப்பட்டது.

இந்திய அழுத்தம் காரணமாகவே 13 வது திருத்தச் சட்டத்தின் ஊடாக சில சரத்துக்கள் நிறைவேற்றப்படுவதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இன்று, மத்திய அரசாங்கத்தின் கீழ் மாகாண சபைகள் ஆளப்படுவதுடன், வடமாகாண சபைக்கான தேர்தலை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காண்பிக்கின்றது.

நிறைவேற்று அதிபர் முறைமை:

பூகோள ரீதியாக எழுந்த நவீன-தாராளவாதத்திற்கு ஆதரவு வழங்குவதை அடிப்படையாகக் கொண்டும் தூரநோக்குடன் ஜே.ஆர் நிறைவேற்று அதிகார முறைமையை நடைமுறைப்படுத்தினார்.

1994ல் இடம்பெற்ற தேர்தல் பரப்புரையில் வாக்களித்தது போன்று சந்திரிக்காவால் நிறைவேற்று அதிபர் முறைமையை முடிவிற்கு கொண்டு வரமுடியவில்லை. அல்லது 'மனிதாபிமான முகத்துடன்' பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுக்க முடியவில்லை.

தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசியல் தீர்வொன்று அவசியமானது என்பதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் சந்திரிக்கா வெற்றிகொள்ள முடிந்தாலும் கூட, இது தொடர்பில் நியாயமான தீர்வை இவரால் எடுக்க முடியவில்லை. ரணிலின் சந்தர்ப்பவாதமும் இதில் உள்ளடங்கியிருந்தது.

ஒருவர் இரு தடவைகள் சிறிலங்காவில் அதிராக பதவியேற்க முடியும் என்ற நடைமுறை காணப்பட்டது. 13வது திருத்தச் சட்டமானது நிறைவேற்று அதிபர் முறைமையில் சில கட்டுப்பாடுகளை வழங்குகின்றது. நீதி, மற்றும் சில முக்கிய உயர் மட்ட பதவிகள், சுயாதீன ஆணைக்குழுக்களிற்கு நியமனம் வழங்கும் போது, 17வது திருத்தச் சட்ட நடைமுறைகள் சில இவ்வாறான நியமனங்களில் தேசிய ஒத்துழைப்பை வழங்குவதற்கான வழியை வகுத்திருந்தது.

நிறைவேற்று அதிபர் முறைமை தொடர்ந்தும் நிலைப்பதை ஆதரிக்கின்ற கட்சிகளுடன் இணைந்து இடதுசாரிக் கட்சிகள் ஒருபோதும் போட்டியிடவில்லை. 2009ல் அதிபர் தேர்தலின் முன்னர், நிறைவேற்று அதிபர் முறைமை எதிர்காலத்தில் எவ்வாறிருக்கும் என திஸ்ஸ விதரான மற்றும் DEW குணசேகர ஆகியோர் அதிபர் ராஜபக்சவிடம் வினவியபோது, இந்நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கான உடன்பாடு ஏற்கனவே எட்டப்பட்டுவிட்டதாக பதிலளித்திருந்தார். எனினும், 18வது திருத்தச் சட்டமானது சிறிலங்காவின் நிறைவேற்று அதிபர் முறைமையை மேலும் பலப்படுத்துகின்றது.

நாங்கள் எவ்வாறு மேலும் முன்னகர்வது?

தற்போது தேசிய பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை உருவாக்குவது தொடர்பாக பேசப்படுகிறது. இந்திய அழுத்தம் காரணமாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இத் தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எனினும், தேசிய பிரச்சினை தொடர்பாக சிறிலங்க சுதந்திரக் கட்சியின் தலைமை தெளிவான நிலைப்பாடொன்றை எட்டும்வரை, இது தொடர்பில் எவ்வித பயனுள்ள நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது.

தேசிய பிரச்சினை தொடர்பாக தீர்வு எட்டுமாறு பொது அமைப்புக்கள் மற்றும் ஜனநாயக அமைப்புக்கள் சிறிலங்காவில் காணப்படும் அனைத்து அரசியற் கட்சிகள் மீதும் அழுத்தம் வழங்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள போதிலும், இவ்வாறான தீர்வு எட்டப்படுவதற்கு தீவிர சிங்களவாதிகள் ஆதரவு வழங்கமாட்டார்கள். எனினும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் கட்சிகள் இத்தீர்வை ஆதரித்தால், இது பெரிய பிரச்சினையாக இருக்கமாட்டாது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் ஆர்வமுடன் உள்ளதா? என்பதே தற்போதுள்ள கேள்வியாகும்.

அடுத்த பொதுத் தேர்தல்களில் இடது சாரிக் கட்சிகள் மிக மோசமான பிரச்சினை ஒன்றிற்கு முகங்கொடுப்பர். சிறிலங்காவானது உண்மையான குடியரசு நாடாக திகழவேண்டுமாயின், நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழித்தல் மற்றும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்பன முக்கியமானவையாகும். அடுத்த பொதுத் தேர்தல்களில் இவை மத்திய அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியைக் கொடுக்கும்.

இவ்விரு பிரச்சினைகள் தொடர்பிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கவனமெடுக்காவிட்டால், இக்கட்சியுடனான இடதுசாரிகளின் உறவில் விரிசல் ஏற்படும். நாட்டில் நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழித்தல் மற்றும் தேசிய பிரச்சினைக்கு அரசியற் தீர்வு காணுதல் என்பவற்றில் இடதுசாரிகள் முழுமூச்சில் ஈடுபடுவதே அவர்களின் இன்றைய கடமையாகும்.

இதற்காக அனைத்து அரசியற் கட்சிகளிற்கும் அழுத்தம் கொடுத்து இவ்விரு பிரச்சினைகளையும் தீர்வுக்கு கொண்டுவருவதை இடதுசாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றை அடைவதற்கு இடதுசாரிகள் மந்தமான அறிகுறிகள் மற்றும் பலவீனமான அறிக்கைகள் போன்றவற்றுக்கு அப்பால் மேலே செல்லவேண்டும்.

Dr. Jayampathy Wickramaratne is a President’s Counsel in Sri Lanka and has also served with the Sri Lankan government in various capacities as Senior Adviser to the Ministry of Constitutional Affairs and member of the Sri Lankan Law Commission. He holds a PhD in Human rights and a Master of Public Administration from University of Peradeniya, Sri Lanka. His areas of expertise include Constitutional law, Human Rights, Administrative and Criminal law.

நன்றி - புதினப்பலகை

[size=5]சிறிலங்காவை உண்மையான குடி-அரசு நாடாக கட்டியெழுப்புதல் எவ்வாறு[/size]?

திறந்த பொருளாதாரக்கொள்கையும், தாராள import license களுமே தேவையானது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு மாதிரி எல்லா சாராய கடைகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.