Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூகுளின் அதிரடி முடிவு!: கலங்கிப் போன மோட்டோரோலா ஊழியர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டோரோலா மொபைலிடி (Motorola Mobility) நிறுவனத்தினை கூகுள் இவ்வருட ஆரம்பத்தில் கொள்வனவு செய்தது.

சுமார் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிலேயே இக்கொள்வனவு இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் தொடர்ச்சியாக நட்டமடைந்து வருவதனைக் கருத்தில் கொண்டு அதிரடி முடிவொன்றினை மேற்கொண்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் 4000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதே அம்முடிவாகும்.

இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியப் படையின் 5 இல் 1 வீதமாகும்.

இப்பணிநீக்கத்தில் 3 இல் 2 பங்கு அமெரிக்காவுக்கு வெளியே இடம்பெறவுள்ளது.

மேலும் மோட்டோரோலா நிறுவனத்தின் உலகளாவிய அலுவலகங்கள் பலவற்றையும் மூடிவிட கூகுள் முடிவுசெய்துள்ளது.

எனினும் பணிநீக்கம் செய்பவர்களுக்குத் தகுந்த நட்ட ஈடு வழங்கப்படுவதோடு, வேறு இடத்தில் தொழிலைப் பெற்றுக்கொள்ள உதவியளிக்கப்படுமெனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/technology.php?vid=20

[size=4]கைத்தொலைபேசி - மிகவும் போட்டிகள் நிறைந்த வியாபாரப்பகுதி. [/size]

[size=4]இங்கே கூகிள் வேண்டியது எதற்காக? [/size][size=4]எனப்பார்த்தால், [/size]

[size=4]மோட்டோரோலாவின் 'காப்புரிமைகளை வைத்து பணம் சம்பாதிக்கவே' [size=5](licences on copyrights). [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

akootha

இங்கே கூகிள் வேண்டியது எதற்காக?

தமக்கான mobile telephony services எதிர்காலத்தில் தேவை என கருதும் Micorsoft, Google, Facebook ஆடும் மிகவும் இடர் மிகு கத்திமுனை விளையாட்டு!

MIcrosoft - Skype

Google - Motorolla

AT&T - T-Mobile

Facebook - ? (ailing Black Berry?)

இங்கே எனது பார்வையில் MIcrosoft ன் Skype கொள்முதல் தூர நோக்கமும், புத்திசாலித்தனமானதும் ஆகத் தெரிகின்றது.

MIcrosoft ன் slate எனும் குளிகைக் கணணி வரும் போது அதன் நோக்கம் தெரியும். (skype will be a default application)

ஏனெனில் slate இணை desktop ஆக வீட்டிலும், அலுவலகத்திலும் வெளியே குளிகைக் கணணி ஆகவும் பாவிக்கலாம் எனும் போது, செலவு இல்லாமல் சக ஊழியர்களுடன் Skype மூலம் பேசலாம் என்பது வியாபார நிறுவனங்களை நம்பி உள்ள பல தொலை பேசி நிறுவனகளுக்கு வயிறினைக் கலக்கும் செய்தி. (As opposed to mobile phones, roaming charges will not be applied with skype when used in abroad)

அதேவேளை இந்த desktop + Pad (குளிகைக் கணணி) இரட்டை பாவனை தன்மை, Microsoft office products உடன் சேரும் போது வியாபார உலகில் அட்டகாசம் பண்ணி, Apple, Samsung. Google குளிகைக் கணணி வியாபாரத்தினை பாதிக்கும்.

Edited by Nathamuni

[size=5]நாதமுனி,[/size]

[size=5]Google's decision to cut 20% of the workers from its Motorola Mobility unit re-ignited fears that Google was primarily after the 17,000 patents Motorola held when it was acquired in May.[/size]

[size=5]"Everyone at Motorola is asking [if Google just wants its patents] and fearing the answer," said Jeff Kagan, an independent analyst. The 4,000 job cuts Google announced are "an earthquake up and down the hallways of Motorola Mobility. Google has never laid off workers like this before so this is also an unsettling feeling in the hallways of Google."[/size]

[size=5]http://www.computerw..._most_to_Google[/size]

[size=4]மேலும் ஸ்கைப்பி பாவிப்பது 'வொய்ஸ் ஓவர் ஐ.பி.' (VoIP) தொழில்நுட்பம். இதை ஒத்த பல தொழில்நுட்பங்கள் உள்ளன. உதாரணத்திற்கு கூகிளின் 'கூகிள் ரோக்' (Google Talk) .[/size]

[size=4]எனவே ஸ்கைப்பி தான் சிறந்தது என்றோ இல்லை தனித்துவமானது என்ற கருத்தை ஏற்கமுடியாது என எண்ணுகிறேன்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

akootha,

நீங்கள் சொல்லும் google + motorola பிரச்சினையின் மூல காரணம் என்னவாக இருக்கும் என்பதே எனது குறிப்பு.

Telephony sevices சொந்தமாக இல்லாத Facebook இன் flotation நன்றாகப் போகவில்லை என்பதனையும் கவனியுங்கள்.

Google வாங்கும் போது என்ன நோக்கத்தினை நினைத்ததோ, அது (வேண்டிய பின்பு) நடக்க கூடியவாறு சந்தை இருக்கவில்லை. சடுதியாக மாறிவிட்டது.

Tech world watchers, microsoft slate + destop and pad (tablet) feature + windows 8 + office products + skype எல்லாம், மற்றைய players களுக்கு ஒரு பெரும் சந்தை தலைவலி என்கிறார்கள்.

பார்ப்போம்!

Google வாங்கும் போது என்ன நோக்கத்தினை நினைத்ததோ, அது (வேண்டிய பின்பு) நடக்க கூடியவாறு சந்தை இருக்கவில்லை. சடுதியாக மாறிவிட்டது.

[size=4]இன்று கைத்தொலைபேசியில் முதலாவது இடத்தில் உள்ள மென்பொருள் - ஆன்றோய்த். அடுத்தது ஆப்பிள் ஐ. ஓ. எஸ்.[/size]

[size=4]இவை இரண்டிலும் கூட மோட்டோரோலாவின் தொழில்நுட்பங்கள் இருக்கலாம். இருந்தால், இவற்றை பாவிக்கும் ஒவ்வொரு கைத்தொலைபேசியும் 'பணம்' கூகிளுக்கு செலுத்தல் வேண்டும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் ஸ்கைப்பி பாவிப்பது 'வொய்ஸ் ஓவர் ஐ.பி.' (VoIP) தொழில்நுட்பம். இதை ஒத்த பல தொழில்நுட்பங்கள் உள்ளன. உதாரணத்திற்கு கூகிளின் 'கூகிள் ரோக்' (Google Talk) .

Akootha,

நாம் நல்ல தோர் கருத்தாடலில் உள்ளோம். நன்றி.

Microsoft's outlook is the popular email system for many business. Google பல நிறுவனங்களில் தடை செய்யப் பட்டு இருப்பதால் Gmail எல்லா நிறுவனங்களிலும் பாவனையில் இல்லாததாலும் 'GoogleTalk' ன் skype எதிரான போட்டி மிகவும் கடினமாக இருக்கும்.

Skype வாங்கியபின் அதில் பெரும் தரமான 'coding' வேலைகளை microsoft செய்கின்றது. இது W8 உடன் 'default' ஆக வர இருப்பதால் அலுவலக உரையாடல்கள் இதன் மூலமே நடக்க போகின்றது என கருத்தப்படுகின்றது.

To save money on telephone charges, if the company changes its policy to use skype only, then it will change the gameplan for other players.

Edited by Nathamuni

[size=4]நன்றிகள் நாதமுனி :D [/size]

[size=4]உண்மை. ஆனால் மேசைக்கணணி, மடிக்கணணி இவற்றை விட கைத்தொலைபேசி/சிலேட்டு கணணி சந்தையே அதிகம் வளர்வதாகவும் போட்டிகள் கூடியதாகவும் உள்ளது.[/size]

[size=4]அதிலே மைக்ரோசொப்ட் மூன்றாவது இல்லை நாலாவது இடத்தில் உள்ளது. ஐம்பது வீதத்திற்கும் அதிகமான சந்தையை கொண்டுள்ளது கூகிள், அதனையே வெல்ல பலரும் பார்க்கும் வேளையில் கூகிள் மேலும் முன்னேற பார்க்கின்றது.[/size]

[size=4]கைத்தொலைபேசி/சிலேட்டு கணணி உலகத்தில் மைக்ரோசொப்ட்டின் ஸ்கைப்பை கூகிளோ இல்லை ஆப்பிளோ பயன்படுத்தப்போவதில்லை, ஆனால் விரும்பியவர்கள் தரவிறக்கம் செய்யலாம். மாற்றாக தமது பொருட்களையே விளம்பரப்படுத்துவர். அதேவேளை மைக்ரோசொப்ட் கைத்தொலைபேசியை ஸ்கைப்பிக்காக யாரும் வேண்டமாட்டர்கள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அதிலே மைக்ரோசொப்ட் மூன்றாவது இல்லை நாலாவது இடத்தில் உள்ளது. ஐம்பது வீதத்திற்கும் அதிகமான சந்தையை கொண்டுள்ளது கூகிள், அதனையே வெல்ல பலரும் பார்க்கும் வேளையில் கூகிள் மேலும் முன்னேற பார்க்கின்றது.

[size=4]Akootha,[/size]

நான் சொல்ல வந்த விடயத்தினை தெளிவாக சொல்லவில்லை என நினைக்கின்றேன்.

நீங்கள் சொல்வது 'இன்று மைக்ரோசொப்ட் நாலாவது இடத்தில் உள்ளது. ஐம்பது வீதத்திற்கும் அதிகமான சந்தையை கொண்டுள்ளது கூகிள், அதனையே வெல்ல பலரும் பார்க்கும் வேளையில் கூகிள் மேலும் முன்னேற பார்க்கின்றது' மிகவும் சரியானது.

நான் குறிப்பிட்டது, நீங்கள் சொல்லும் அந்த கூகுளின் இடத்தினை பிடிக்க நடக்கும் போட்டியில் வெல்ல மைக்ரோசொப்ட் எடுத்துள்ள நடவடிக்கை மற்றும் அதனால் சந்தையில் உண்டான அதிர்வலைகள் குறித்தது.

1. மைக்ரோசொப்ட் கைத்தொலைபேசி எதனையும் விடவில்லை. ஆனால் சிலேட்டு கணணியினை தான் வெளி விடுகின்றது.

2. இங்கே விடயம் என்னவெனில் கூகிள், ஆப்பிள், சாம்சுங் சிலேட்டு கணணிகள் போல் அல்லாது இந்த மைக்ரோசொப்ட் சிலேட்டு கணணியினை மேலதிகமாக மேசைக்கணணி, மடிக்கணணி ஆகவும் பயன் படுத்த முடியும்.

3. அதாவது நீங்கள் அலுவலகத்தில், வீட்டில் 'docking station' இல் வைத்து மேசைக்கணணி, மடிக்கணணி ஆகப் பாவிக்கும் அதனையே, அப்படியே தூக்கிக் சென்று வெளியே, (வேறு நாட்டில் கூட) சிலேட்டு கணணி ஆக பாவிக்கலாம்.

4. cloud technology உடன் வரும் புதிய Windows 8 இதனை சாத்திய மாக்கப் போகின்றது. இத்துடன் பரிச்சயமான MS office, Skype இந்த சிலேட்டு/மேசை/மடி கணணியில் இருக்கப் போகின்றது. இதனால் இது வியாபார உலகில் வேகமாக நுழையும்.

5. மைக்ரோசாப்ட், பெரு சிக்கலில் தவிக்கும் blackberry நிறுவனத்தினை குறிவைத்து உள்ளது என பலர் கருதுகின்றனர். சரியான தருணத்தில், சரியான விலையில் அதனை வாங்கி விட்டால், மைக்ரோசாப்ட், கூகுளுக்கு சரியான போட்டியாக அமையும். (Microsoft will make google run for its money)

6. மைக்ரோசாப்ட், யாஹூ உடன் நெருங்கி இருப்பதனையும், கூகுளின் மிகச் சிறந்த பெண் அதிகாரி அண்மையில் யாஹூ விற்கு சென்றதையும் கவனிக்க வேண்டும். (Google is not a ship in trouble for her to jump but she knows how the tech industry is going to change soonar than later)

7 . கூகுளின் ஒரே பலம் அதன் 'serarch engine ' எனினும் அதனை முதலில் ஆரம்பித்தது யாஹூ. யாஹூ இப்போது பலமடைகின்றது. அதே வேளை கூகிள் அகலக் வைப்பதாக தோன்றுகின்றது.

8. Apple's மறைந்த Steve Jobs , கூகிள் இடம், நீண்ட கால திட்டமிடல் இல்லை என கூறி இருந்தார். அதே வேளை கூகிள் ஆரம்பித்த பல projects இழுத்து மூடப் பட்டன. கூகிள் + தள்ளாடுகின்றது.

இந்த நிலையில் tech உலகில் ஒருவரும் நிலையாக முதலாம் இடத்தில் இருக்க முடியாது என்பதே உண்மை.

Edited by Nathamuni

[size=4]கூகிளின் பலம் அதன் தேடல் இயந்திரம் மட்டுமல்ல, அதனூடாக விளம்பரங்கள் (பணம் ). [/size][size=1]

[size=4]அத்துடன் கூகிளின் பல விடயங்கள் முன்னணியில் உள்ளன : மின்னஞ்சல், வரை படங்கள்,..[/size][/size]

[size=1]

[size=4]ஆனால் கூகிளின் புதுப்பலம் அதன் அன்றோய்த் மென் உலாவி அதனை மென்பொருள் எழுதும் வல்லுனர்களுக்கு கொடுத்து ஊக்குவித்தல், மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கல். இதனால் அது தானும் முன்னேறி மற்றையவர்களையும் முன்னேற வைக்கின்றது. [/size][/size]

[size=1]

[size=4]மற்ற நிறுவனங்கள் தாமே எல்லாவற்றையும் கட்டுப்படுத்த எண்ணுகின்றன.[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.