Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்கும்!– சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நேற்று (14.8.2012) மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு இங்கு கூறினார்.

இங்கு தொடாந்து உரையாற்றிய இரா.சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கணிசமான ஆசனங்களை பெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்போம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் நாங்கள் ஏற்னவே பேசினோம். ஏங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது. அந்த வகையில் கிழக்கு மாகாண சபையில் கணிசமான ஆசனங்களை பெற்று ஆட்சியமைப்போம்.

தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்ததைகளில் ஈடுபட்டிருந்தோம். இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து அரசாங்கம் நழுவிச்சேன்றதே தவிர நாங்கள் இதிலிருந்து நழுவிச் செல்லவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினை சர்வேதசத்திற்கு சென்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கும், ஜெனிவாவுக்குமாக தமிழ் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந் நிலையில் அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரவணைக்க வேண்டிய நிலையிலுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் அதற்கு முழுக் காரணமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் 85 வீதம் வாக்களிக்க வேண்டும் அவ்வாறு வாக்களிக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 உறுப்பினர்களையும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்களையும், அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களையும் பெற்றுக்கொள்ள முடியம்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஏன் நடாத்தப்படுகின்றது எதற்காக நடாத்தப்படுகின்றது என்பது மக்களுக்கு நன்கு தெரியும் ஆகவே தான் இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி, புளொட் இயக்கத்தின் தலைவர் சித்தார்ந்தன். டெலோ இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Www.pagejaffna.com

தமிழ் மக்களின் பிரச்சினை சர்வேதசத்திற்கு சென்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கும், ஜெனிவாவுக்குமாக தமிழ் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந் நிலையில் அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரவணைக்க வேண்டிய நிலையிலுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் அதற்கு முழுக் காரணமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பது அனைவருக்கும் தெரியும்

கக்கீம் மு.கா வின் தலைவராக இருக்கும் போது மு.கா வுடன் இணைந்தால், மு.கா வை அரசுக்கு வெளியே கொண்டு வந்து விடுதலைப் போராடங்களை இயக்க முடியாது. மாறாக த.தே.கூ தான் கக்கீமுடன் சேர்ந்து அரசில் மந்திரி பதவிகளுக்காக இணைய வேண்டி வரும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் காங்கிரசை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புவது...

கழுதை தேய்ந்து.... கட்டெறும்பான கதை.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு அரசாங்க உத்தியோகத்தர் சங்கம் த.தே. கூட்டமைப்பின் வெற்றிக்கு பாடுபட போவதாக அறிவிப்பு!

[size=4]எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 08ஆந் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யும் பிரச்சார வேலைகளில் வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கம் ஈடுபட்டு வருவதாக அதன் செயலாளர் நாயகம் இ.மணிவண்ணன் தெரிவித்தார்.[/size]

[size=4]அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்;[/size]

[size=4]தமிழர்களின் பிரச்சனையை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் சென்ற ஒரே கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பாகும். தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தவிர வேறொரு கட்சியும் மனப்பூர்வமாகச் செயற்படப் போவதில்லை. தமிழர்களின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான இறுதிச் சந்தர்ப்பமாக இத்தேர்தல் உள்ளது.[/size]

[size=4]இச்சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் கிழக்கு மாகாணத்திற்கு தமிழ் முதலமைச்சர் ஒருவர் வருவதென்பது வெறும் கணவாகவே இருக்கும் எனக் கருதும் வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்து கூட்டங்களையும் நடாத்தத் தீர்மானித்துள்ளது.[/size]

[size=4]எனவே ஒவ்வொரு தமிழ் மகனும் நன்கு சிந்தித்து எமது வாக்குகளை சிதறவிடாது ஒரே மனதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டு;க்கொள்வதோடு, எவரும் தங்களது வாக்களிக்கும் உரிமையை விட்டுக் கொடுக்காது சகலரும் இத்தேர்தலில் தங்களது வாக்கு செல்லபடியற்றதாகாத வகையில் சரியாக வாக்களிக்க வேண்டுமென சங்கம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.[/size]

http://metromirror.lk/?p=4138

  • கருத்துக்கள உறவுகள்

அடிவருடி அமைச்சரின் சொந்தக் கோட்டையிலேயே ஓட்டை விழுந்துள்ளது; ஒலுவிலில் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு!

[size=2]

Rauf-Hakeem.jpg

[size=4]கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றுக்கிடையிலான மும்முனைப் போட்டியாக மாறியிருக்கின்றது.[/size]

[size=4]இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் கிராமத்தில் நடைபெற்ற கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.[/size]

[size=4]அவர் மேலும் தெரிவித்ததாவது;[/size]

[size=4]இந்தத் தேர்தல் ஒரு பெரிய கண்டத்தை உருவாக்கியிருக்கின்றது. இந்தக் கண்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு தாண்ட வேண்டியிருந்தால், அதற்குப் பலவீனமான பிரதேசங்களைப் பலப்படுத்த வேண்டும் என்பதாலும் எங்கெல்லாம் மாற்றுக் கட்சிகளுக்கு சற்று இடமிருக்கின்றது என்ற அறிகுறிகள் தென்படுகின்றனவோ அங்கெல்லாம் அவதானத்தைச் செலுத்த வெண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. மாற்றுக் கட்சிக் காரர்களின் ஊருடுவலுக்கு இங்குள்ள கட்சிப் போராளிகளின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் அறவே இடமளிப்பதில்லை.[/size]

[size=4]எல்லா பத்திரிகைகளும் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக என்னைச் சித்திரிக்கின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் முக்கியத்துவத்தை அது உணர்த்துகின்றது. நான் சாதாரண மனிதன் ஒருவனாக இருந்தால் எனது பேச்சுகளுக்கு பெரிய சர்ச்சைகள் உருவாகி இராது.[/size]

[size=4]கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்பார்கள். இவ்வளவு காலமாக மூடுமந்திரமாக இருந்த விஷயங்களை வெளிப்படையாக சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நடந்துவந்த அநீதிகளும் அநியாயங்களும் இதற்கப்பாலும் நடைபெறுவதைத் தடுப்பதற்கு அது உதவும்.[/size]

[size=4]ஆனால் அதனோடு அப்பிரச்சினைகள் முற்றுப் பெற்றுவிடப் போவதில்லை. இவற்றுக்கான காப்பீடு இந்த சமுகத்தின் ஒற்றுமையில் மட்டுமே தங்கியுள்ளது. திருக்குர்ஆன் வலியுறுத்தும் ஒற்றுமையின் அவசியத்தை தாரகமந்திரமாக கொண்டுதான் இத்தனிப்பெரும் கட்சியே உருவானது. ஓற்றுமையை பற்றிப் பிடிப்பதோடு பிரிந்துவிடாதீர்கள் என்றும் வலியுறுத்தும் திருமறை வசனம் எங்களது அரசியல் தலைமைகள் மத்தியில் செவிடன் காதில் ஊதிய சங்காக இருப்பது மிகவும் கவலைக்குரியது.[/size]

[size=4]எங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மையப்படுத்தி அதுவும் தலைமையை மாத்திரம் மையப்படுத்தி காட்டமான விமர்சனங்களை செய்து கொண்டு வருகின்றார்கள். எதெற்கெடுத்தாலும் முஸ்லிம் காங்கிரஸின் தலையில் தேங்காய் உடைப்பதையே அரசாங்கக் கட்சியில் போய் அடைக்கலம் தேடி இருக்கும் மாற்றுக்கட்சித் தலைமைகளின் வேலையாகப் போய்விட்டது.[/size]

[size=4]கடந்த சில நாட்களாக நாங்கள் பேசி வருகின்ற விடயங்கள் அரச மேலிடத்திற்கு சற்று அதிருப்தியை கொடுத்த்pருக்காலாம். மக்கள் மத்தியில் பூசி மெழுகி அரசியல் செய்ய முடியாத காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்பதையும் அரச மேல்மட்டம் உணர்ந்து கொள்ள வேண்டும். மிகப் பொறுப்புணர்ச்சியுடன் நோக்கினால் இந்த உண்மை அரச மேலிடத்திக்கு புரியும்.[/size]

[size=4]ஜனாதிபதி மாளிகையில் நடந்த இப்தார் நிகழ்வில் நான் பங்குகொள்ளாது அதைப் பகிஷ்கரித்ததாக ஞாயிறு பத்திரிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கட்டுரை நன்றாக இருக்கின்றது. ஆனால் ஜனாதிபதியின் இப்தாரில் கலந்து கொள்ளாததற்கு கொஞ்சம் காதும் மூக்கும் வாயும் வைத்து சோடனையாக எழுதப்பட்டுள்ளதை நான் பார்த்தேன்.[/size]

[size=4]உண்மையில் அன்று காலையில் நான் ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தோப்பூரில் இப்தாரில் கலந்து கொண்டு கட்சிப் பிரசாரப் பணிகளிலும் ஈடுபட வேண்டியிருப்பதால் அவரது இப்தாருக்கு வர முடியாதிருப்பதைப் பற்றி தெரிவித்தேன். அதனை அவர் பொருந்திக் கொண்டதோடு எனது பிரச்சாரங்களைப பற்றி அவரது அபிப்பிராயங்கள் சிலவற்றையும் சொன்னார்.[/size]

[size=4]ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல அரசுக்கு அடகு வைக்கப்பட்ட தொன்றாக இருக்க முடியாது என்பதை அவருக்கு மிகத் தெளிவாகக் கூறினேன். அவரோடு உரையாடிய அந்தச் சிலநிமிடங்களில் நான் தெரிவித்தவற்றை அவர் மிகவும் பக்குவமாக புரிந்து கொண்டிருக்கின்றார் என்று நான் நம்புகின்றேன்.[/size]

[size=4]ஆனால் தொடர்ந்தும் ஜனாதிபதியை குழப்புகின்ற நடவடிக்கைகளில் பலரும் ஈடுபடக்கூடும். நான் பேசுகின்ற செய்திகள் பத்திரிகைகளில் வரும் போது அது நான் கூறியதைவிடவும் அழுத்தமாக வெளி வருவதாக ஜனாதிபதியின் குறுகிய உரையாடலில் இருந்து என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. உங்களது அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர் என்ற முறையில் அரசைப் பாதுகாக்கும் விதத்தில் சில விடயங்களை என்னால் சொல்ல முடியுமே தவிர, எல்லாவற்றையும் விமர்சிக்காமல் என்னால் தவிர்ந்து கொள்ள முடியாது என்ற தொனியில் அவரிடம் நான் சொன்னேன். அதனையும் அவர் ஏற்றுக் கொண்ட மாதிரித்தான் எனக்குத் தெரிந்ததது.[/size]

[size=4]அவை ஒருபுறமிருக்க, முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் இந்த கிழக்கு மாகாண தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்ற இச்சந்தர்ப்பத்தில் நாம் பெறப்போகின்ற ஆசனங்களின் எண்ணிக்கைதான் இந்தச் சமுகத்தின் காப்பீடு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே ஏனைய தேர்தல்களைப் போல் இந்த மாகாண சபைத் தேர்தலையும் ஒரு சாதாரண தேர்தல் என நாங்கள் எடைபோட்டால், எந்தவிதத்திலும் அது சரியான கணிப்பீடாக மாட்டாது.[/size]

[size=4]அண்மைக்காலமாக நிகழ்ந்த எந்தத் தேர்தலைவிடவும் வித்தியாசமான ஒரு நிலைமை இப்போது காணப்படுகின்றது. புலிகள் இருந்த காலத்தில் அவர்களது பயங்கரவாதம் எங்களுக்கு எதிரான ஓர் ஆயுதமாக இருந்தது. இன்று புலிப்பயங்கரவாதம் இல்லாத சூழ்நிலையில் இந்த நாட்டில் முழுமையான சமாதானம் நிலவுகின்றது என்ற நம்பிக்கையில் மக்கள் இருக்கின்றனர் என்ற பின்னணியில் நடைபெறும் இத்தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தலாகும்.[/size]

[size=4]யுத்தம் முடிந்த சூழ்நிலையில் தேர்தல்கள் நடந்தன என சிலர் சொல்லலாம். அந்தத் தேர்தல்களுக்கும் இந்தத் தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்? நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி தேர்தல் என்பனவெல்லாம் ஏன் இந்தத் தேர்தலில் இருந்து வேறுபடுகின்றன என சிலர் கேள்வி எழுப்பலாம். உள்ளூரட்ச்சி தேர்தலை ஒருபுறம் வைத்துவிட்டு, ஏனைய தேர்தல்கள் ஒரு அசாத்தியமான சூழலிலேயே நடைபெற்றன. அன்று எல்லோரும் சுதந்திரமாக வாக்களிக்கும் ஒரு நிலைவரம் இருக்கவில்லை. அநேகர் சுதந்திமாக வாக்களித்தாலும், தேர்தலில் பங்குபற்றும் தரப்புகள் நம்பகத்தன்மை வாய்ந்தனவாக இருக்கவில்லை.[/size]

[size=4]கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை முதற்றடவையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்லில் போட்டியிடுகின்றது என்ற விடயம் இந்தத் தேர்லின் நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கின்றது. அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாத சூழ்நிலையில் அரசின் அங்கமாக இருக்கும் தமிழ் ஆயுதக்குழுக்கள் அச்சுறுத்தி அபகரித்த வாக்கு வேட்டையைப்போல் யாரும் இலகுவில் செய்துவிட முடியாது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த அரசியல் பிரவேசம் மாகாண சபைத் தேர்தலை முற்றுமுழுதாக மாற்றியிருக்கின்றது.[/size]

[size=4]தற்பொழுது போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் என மூன்று சமுகங்களினதும் பிரதிபலிப்பு எனப் பார்த்தாலும், அரசாங்கத் தரப்பு முஸ்லிம் அடிவருடி அமைச்சர்கள் என்றும், ஏனைய தமிழ் போராட்டத் தலைமைகள் புலிகளிடத்தில் இருந்து விலகி அரசாங்கத்தில் இரண்டறக் கலந்து அடைக்கலமாகியிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஓரளவு தமிழ் முஸ்லிம் வாக்குகளை கொடுத்து ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற உதவும் தரப்புகளாக மாறியிருக்கின்றார்கள்.[/size]

[size=4]கிழக்கில் பயங்கரவாதத்தை தோற்கடித்துவிட்ட ஆணவத்திற்கு சென்ற மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்திய போது எதிர்க்கட்சியில் இருந்து பாராளுமன்ற ஆசனங்களை தூக்கி எறிந்துவிட்டு அச்சுறுத்தல்களுக்கும் அடாவடித்தனங்களுக்கும் மத்தியில் இச்சமுகத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாங்கள் போட்டியிட்டோம்.[/size]

[size=4]ஆனால் அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் வரையான வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளின் விளைவாக, அம்பாறை மாவட்டத்தை கைப்பற்றுதை இரண்டு ஆசன வித்தியாசத்தில் நாங்கள் இழந்துவிட நேரிட்டது.[/size]

[size=4]அடுத்த தேர்தலில் முஸ்லிம் வாக்குகளையும் இயலுமானவரை சிங்கள வாக்குகளையும் பெற்றுக்கொள்வதற்காக வியூகம் வகுத்து ஐக்கிய தேசியக்கட்சியில் அப்போது நாங்கள் போட்டியிட்டோம். அந்தத் தேர்தலில் எங்களுக்கு நிச்சயம் கிடைத்திருக்க வேண்டிய வெற்றிவாய்ப்பு எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது என்பதை அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டினர்.[/size]

[size=4]இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் போட்டியிடுவதால் நிலைமை மாறியிருக்கின்றது. முன்போல பாரிய தேர்தல் மோசடிகளில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு யாருக்கும் இருக்க முடியாது. எனது பர்வையில் புதிய தேர்தல் ஆணையாளரும் பொலிஸாரும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் என நம்புகின்றேன்.[/size]

[size=4]தேர்தலில் வாக்களிப்பதற்கு எவ்வாறு மக்களை தயார் படுத்துவது, வாக்களிப்பு வீதத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பன போன்ற வியூகங்களை நாங்கள் வகுத்துக் கொண்டிருக்கின்றோம்.[/size]

[size=4]தமிழ் தேசிய கூட்டமைப்பின் இத்தேர்தலுக்கான ஈடுபாடு அதிகரித்திருக்கின்ற நிலையில், முஸ்லிம் காங்கிரசும் தனது வாக்கு வங்கியை இன்னும் கூட்டிக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பு முஸ்லிம் காங்கிரசுக்கு உண்டு. ஆனால் அதற்காக ஓய்வு ஒழிச்சலின்றி பாடுபட வேண்டியிருக்கின்றது. தயார்படுத்தலைச் செய்யவேண்டி இருக்கின்றது. கடந்த மாகாண சபைத் தேர்தலில் மொத்த வாக்களிப்பு 60 வீதத்தை தாண்டாத நிலையில்தான், அம்பாறை மாவட்டத்தை வெற்றிகொள்ளும் வாய்ப்பை இரண்டு ஆசன வித்தியாசத்தில் இழந்தோம்.[/size]

[size=4]பல வாக்குச் சாவடிகளில் நடந்த பாரிய மோசடிகளினால்தான் நாங்கள் அந்த வெற்றி வாய்ப்பை இழந்தோம். இது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயமாகும். அக்கரைப்பற்றை எடுத்துக் கொண்டாலும் அங்கு வேட்பாளர்கள் மூவரை களத்தில் இறக்கியுள்ளோம். அங்கு முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் தவம் எங்களோடு வந்து சேர்ந்துள்ளார். இந்தப் பின்னணியில் ஒரு பாரிய மாற்றம் அடிவருடி அமைச்சரின் சொந்தக் கோட்டையிலேயே ஏற்படப் போகின்றது. கோட்டையில் ஓட்டை விழுந்துள்ளது என மக்கள் பேசத் தலைப்பட்டுள்ளனர். ஆனால் வழமைபோன்று அடாவடித்தனம் நேற்றிரவிலிருந்து கொஞ்சம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. பொலிஸாருடன் உயர்ந்தமட்டத்தில் பேசி, நிலைமையை சுமுகமாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வழமையான அடாவடித்தனமின்றி தேர்தலுக்கு அவரால் முகம்கொடுக்க முடியாது என்ற நிலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் அவரைத் தள்ளியுள்ளது.[/size]

[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்குபற்றுதல் என்பது இந்தத் தேர்தலில் தெளிவான ஒரு இயல்பு நிலையை தோற்றுவித்துள்ளது. தெஹியத்தக்கண்டிய போன்ற சிங்களப் பிரதேசங்களில் நாற்பத்தைந்து முஸ்லிம் காங்கிரஸ் கிளைகளை நாம் ஏற்படுத்தியுள்ளோம். சிங்கள வேட்பாளர்களையும் போட்டியிடச் செய்து அவர்களையும் வெல்ல வைக்க முடியும் என்ற முயற்சியில் நாங்கள் இறங்கியுள்ளோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே சிங்களப் பிரதேசங்களில் இந்த முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். அங்கு மிக வேகமாக சிங்களப் பெண்கள் கூட முஸ்லிம் காங்கிரஸிற்கான பிரசாரப் பணிகளில் ஈடுபடுகின்றனர் என்பதை அங்கு வந்தால் பார்க்கலாம்.[/size]

[size=4]பொதுவாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஆளும் கட்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒரு சவாலே அல்ல. இந்த மாவட்டத்தை கைப்பற்றுவதில் அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும்தான் போட்டி நிலவுகின்றது.[/size]

http://metromirror.lk/?p=4125

[size=4]ஐக்கிய தேசியக் கட்சியினர் அங்குமிங்குமாக முஸ்லிம் வேட்பாளர்கள் சிலரை போட்டியிட வைத்திருந்தாலும், அவர்களால் முஸ்லிம் வாக்கு வங்கியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் என்று ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றதோ அன்றிலிருந்து அதன் முஸ்லிம் வாக்கு வங்கி சூன்யமாகி, வெற்றிடமாகிவிட்டது.[/size]

[size=4]ஆனால் சிங்களப் பிரதேசங்களில் விலைவாசி ஏற்றம், ஊழல் மோசடிகள், இஸட்-ஸ்கோர் விவகாரம் என்பனபற்றி கூறி, ஆளும் கட்சியின் வாக்குகளில் சரிவை ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது. என்னைப் பொறுத்தவரை இத்தேர்தல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றுக்கிடையிலான மும்முனைப் போட்டியாக மாறியிருக்கின்றது.[/size]

[size=4]ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிழக்கு மாகாண சபையில் மூன்று ஆசனங்களுக்கு மேல் வெல்ல முடியாது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் என்பன தலா பத்துக்கு மேற்பட்ட ஆசனங்களை வெல்லும். ஆனால் தனித்து யாரும் ஆட்சியமைக்க முடியாது.[/size]

[size=4]அரசாங்கமோ தமிழ்த் தேசிய கூட்டமைப்போ ஒன்றோடொன்று சேரப் போவதில்லை. என்பது பொதுவாக அரசியல் அவதானிகள் ஏற்றுக் கொள்கின்ற விடயமாகும். ஆகவே அக்கட்சிகளுக்கு கிடைக்கக்கூடிய பத்து அல்லது அதற்கு சற்றுக்கூடிய, அல்லது குறைந்த ஆசனங்களை வைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவின்றி யாரும் ஆட்சியதிகாரத்தை கிழக்கு மாகாணத்தில் கைப்பற்றிவிட முடியாது என்பது பொதுவான அவதானிப்பு ஆகும்.[/size]

[size=4]அரசாங்கம் கிழக்கு மாகாண சபையை கலைத்தபோது முஸ்லிம் காங்கிரஸின் முக்கியத்துவத்தை எவ்வளவு தூரம் கணக்கில் எடுத்தார்களோ எனக்குத் தெரியாது, ஆனால் ஆட்சியின் அங்கமான எங்களை அரசாங்கத்தினர் கலந்தாலோசிக்கவேயில்லை. ஆகவே அதிமேதகு ஜனாதிபதி முதல் அரசாங்கத்திலுள்ளவர்கள் இந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்படுத்தப்போகும் தாக்கம்பற்றி சிந்திக்கத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கு அரசியலில் தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக வேண்டும்!

[size=2]

Inamulla-Masiudeen1-150x150.jpgஅஷ் ஷெய்க் கலாநிதி மஸிஹுதீன் இனமுல்லாஹ் நளீமி

[size=4]இந்த நாட்டில் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் சிங்கள பெரும் தேசிய வாத சக்திகள் சிறு பான்மை தமிழ் முஸ்லிம்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்துவதிலும் அவர்களது உரிமைகளை மறுப்பதிலும் சுமார் ஒரு நூற்றாண்டு காலத்தை விரயமாக்கியுள்ளனர், தமிழ் மக்களது அமைதிப் போராட்டங்கள் தோல்வி கண்டு ஆயுதப் போராட்டமாக வெடித்து இந்த நாட்டின் அமைதி சமாதானம்,பாதுகாப்பு பொருளாதாரம் சமூக கலை கலாச்சார வாழ்வு என சகல துறைகளையும் காவு கொண்டுள்ளது.[/size]

[size=4]இந்த இரண்டு சமூகங்களின் மோதல்களுக்கு மத்தியில் இந்த நாட்டு முஸ்லிம்கள் தமது சொந்த இருப்பையும் பாதுகாப்பையும் தக்க வைத்துக் கொள்வதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர், இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பொழுதும் அதற்கு பிந்திய இரண்டு தசாப்தங்களும் ஓரளவு சிறந்த நிலையில் இருந்த தமிழ் முஸ்லிம் உறவு ஆயுதமேந்திய தமிழ் போராளிகளின் சாணக்கியமற்ற காட்டு மிராண்டித் தனங்களாலும், அரசியல் முதிர்ச்சியுள்ள தமிழ்த் தலைவர்களின் இழப்பினாலும் சிதறுண்டு சின்ன பின்னமாய்ப் போயுள்ளது.[/size]

[size=4]தமது இறுதி இலக்கை அடைந்துகொள்ளும் தவிர்க்க முடியாத மற்றும் இலகுவான மார்க்கம் தமிழ் முஸ்லிம் உறவை கட்டி எழுப்புவதிலேயே தங்கியுள்ளதனை மறந்து அல்லது உணர்ந்து கொள்வதற்கு திராணியில்லாது வட புல முஸ்லிம்களை ஐந்து மாவட்டங்களில் இருந்தும் இருபத்தி நான்கு மனித்தியாலதுக்குள் இனச் சுத்திகரிப்பு செய்து விரட்டியடித்த புலிகள், கிழக்கு மாகாணம் எங்கும் முஸ்லிம் பிரதேசங்களை பிணக் காடாக்கி அவர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ வைத்தமை முஸ்லிம்களுக்கு தமிழ்த் தலைமைகளில் இருந்த குறைந்த பட்ச நம்பிக்கைகளையும் ஆழமான வடுக்களுடன் இல்லாமல் செய்து விட்டது.[/size]

[size=4]சுதந்திரத்திற்குப் பின்னர் தொடர்ந்தேர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசுகள் இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை சமூகங்களை ஒடுக்குவதிலேயே தமது ஜனநாயக அரசியல் போட்டா போட்டிகளை நிலை நிறுத்தி வந்துள்ளனர். சிங்கள மொழிக் கொள்கை, பிரஜா உரிமை சட்டம், திட்டமிட்ட குடியேற்றங்கள், கல்வி மற்றும் அரச தொழிற் துறைகளில் சம சந்தர்ப்பங்கள் வழங்காமை, அபிவிருத்தி திட்டங்களில் புறக்கணிப்பு என இன்னோரன்ன பாகுபாடுகளை மிகவும் கச்சிதமாக செய்து வந்துள்ளனர். சுதந்திரத்தின் போது கிழக்கு மாகாணத்தில் சுமார் 10 வீதத்திற்கும் குறைவாக இருந்த சிங்களவர் இன்று நாற்பது வீதத்தையும் தாண்டியுள்ளது மாத்திரமன்றி பேரு நிலப் பரப்பைக் கொண்ட சிங்களப் பெரும்பான்மை தேர்தல் தொகுதிகள், பிரதேச செயலாளர் பிரிவுகள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைப்பதில் வெற்றியும் கண்டுள்ளனர்.[/size]

[size=4]குறிப்பாக யுத்த நடவடிக்கைகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த பொழுதும், அவை முடிவுற்ற பின்னரும் வட கிழக்குமாநிலங்களில் இராணுவ முகாம்கள் அமைப்பதிலும் , பௌத்த விகாரைகளை கட்டுவதிலும், இஸ்ரேல பாணியில் புதை பொருள் ஆராய்ச்சி செய்வதிலும், சுற்றுலா விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகள் என காணிகளை கரையோரங்களை அபகரிப்பதிலும், ஆக்கிரமிக்கப் பட்ட பாலஸ்தீன் மண்ணில் இஸ்ரேல் அரசு மேற்கொள்வது போன்ற துரித குடியேற்றங்களை மேற்கொள்வதிலும் தற்போதைய அரசு முணைப்புடன் ஈடுபட்டு வருகிறது.[/size]

[size=4]தமிழர்களின் ஒற்றுமை யின்மையை எவ்வாறெல்லாம் தமக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்பதில் அவதானமாக இருக்கும் அரசு முஸ்லிம்களின் பிளவுகளைக் கூட மிகவும் கவனமாக கையாளுகின்றமை நாம் அறிந்த விடயமாகும் அனால் அதைவிடவும் மோசமாக தமிழ் முஸ்லிம் உறவில் உள்ள விரிசல்கள் சிங்கள பேரின அரசியலை அப்பம் பிரிக்கும் குரங்காக இன்று மாற்றியிருக்கின்றமை இரண்டு சிறு பான்மை சமூகங்களினதும் உரிமைப் போராட்டத்திற்கான சாவு மணியாகும். தமிழ் முஸ்லிம் தாயகமான வடக்கு கிழக்கு அரசியலின் தலை விதியை கிழக்கு மாகாண அரசியல் தீரமானிக்க வேண்டும் என்பது இறைவனின் நியதியாக இருக்கின்றமை கடந்த கால வரலாற்றில் நாம் கற்றுக் கொண்ட பாடமாகும்.[/size]

[size=4]எதிர்வரும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களைப் பொறுத்த வரை முஸ்லிம்களே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப் போகிறார்கள், முஸ்லிம்கள் சகலரும் ஓரணியில் நின்று மாகாண அரசைக் கைப்பற்றும் சாத்தியப் பாடு இருந்தாலும் மத்திய அரசின் பங்காளிகளாக இருக்கும் முஸ்லிம் கட்சிகள் தங்களுக்குள் பிளவு பட்டிருப்பதால் சென்ற முறை போன்று இந்த முறையும் மத்திய அரசு தமக்கு சௌகரியமான ஒரு பொம்மை அரசை உருவாக்கிக் கொள்ள முஸ்லிம்களது வாக்குகளை காவு கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை, அனால் எங்களுக்குள் நாம் பிரிந்து நின்று முஸ்லிம்கள் மத்திய அரசுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு முதலமைச்சரைப் பெற்றுக் கொண்டாலும், அல்லது தமிழர்கள் மத்திய அரசுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு முதலமைச்சரைப் பெற்றுக் கொண்டாலும் வடகிழக்கு தமிழ் முஸ்லிம் தாயகத்தில் நமது சமூகங்கள் எதனையும் அடைந்து கொள்ளப் போவதில்லை மாறாக எஞ்சியுள்ள வற்றையும் இழந்து தவிக்கின்ற ஒரு எதிர்காலமே உருவாகப் போகிறது.[/size]

[size=4]போருக்குப் பின்னரான களநிலவரங்களை கவனமாக அவதானிக்கின்ற போது, இனி வரும் காலங்களில் நன்கு ஆராயப்பட்டு யதார்த்தமான அடித்தளங்களில் கட்டி எழுப்பப்படும் தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றினூடாக தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கு முகம் கொடுப்பதன் மூலம் மாத்திரமே வட கிழக்கு தமிழ் முஸ்லிம் தாயகத்தை பேரின ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுக் கொள்வதோடு மொத்த தேசத்திலும் தமிழ் முஸ்லிம் சமூகம் தமது உரிமைகளை வென்றெடுத்து தலை நிமிர்ந்து வாழ முடியும். ஜனநாயக நீரோட்டத்தில் நாம் எமது ஒருங்கிணைந்த பலத்தை வெளிக் கொணராது வெறும் சர்வதேச பிராந்திய சக்திகளின் தலையீடுகளை மாத்திரம் நம்பியிருப்பது தேசிய மற்றும் சர்வதேசிய மேலாதிக்க சக்திகள் நமது சமூகங்களை மென்மேலும் கூறு போட்டு தமது நலன்களை காக்கின்ற விசுவாசிகளூடாக நிலைமைகளை மேலும் சிக்கலாக்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.[/size]

[size=4]தமிழ் சமூகம் இணைந்த வட கிழக்கில் தமக்கான சுயாட்சியை கோருகின்றீர்கள், கிழக்கு மாகாண ஆட்சியை தீர்மானிக்கும் வல்லமையுள்ள முஸ்லிம்கள் விடயத்தில் நீங்கள் மௌனமாக இருக்கின்றீர்கள், கிழக்கு மாகாணத்தில் சுமார் 40 வீதமாயுள்ள முஸ்லிம்களை இணைந்த வட கிழக்கில் 17 வீத அரசியல் வலுவற்ற சமூகமாக மாற்றிவிட எந்த வொரு தேசிய மற்றும் பிராந்திய சக்தி முனைவதனை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அனால் இணைந்த வட கிழக்கில் அதிகாரங்கள் எவ்வாறு பகிரப் பட வேண்டும் என்பதில் தமிழ்த் தலைமைகள் முஸ்லிம்களுடன் ஒரு உடன் பாட்டுக்கு வர முடியுமாயின் யதார்த்தமான அடித்தளங்களில் தமிழ் முஸ்லிம் உறவை கட்டி எழுப்பி தமிழ் முஸ்லிம் தாயகத்தின் சுய நிர்ணய உரிமையினை ஒன்றிணைந்து வென்றெடுக்கலாம்![/size]

[size=4]வட கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் தங்களுக்கிடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என மறைந்த தந்தை செல்வா 1964 ஆம் ஆண்டு திருகோணமலையில் இடம் பெற்ற தமிழரசுக் கட்சியின் 9 ஆவது மாநாட்டில் பேசியதோடு மாத்திரமன்றி முஸ்லிம்களுக்கான அதிகார அலகு ஒன்றின் அவசியத்தையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலி யுறுத்தியுள்ளார், இனங்களுக்கிடையில் நிரந்தர சமாதான சக வாழ்வு ஏற்பட 50 % 50 % தீர்வைக் கோரினார் திரு ஜி ஜி பொன்னம் பலம், 1988ல் பொது முன்னணி ஜனாதிபதி ஸ்ரீமா அம்மையாரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் காங்கிரஸின் உடன் பாட்டுடன் கிழக்கில் முஸ்லிம் பெரும்பான்மை அலகு பற்றி குறிப்பிடப் பட்டிருந்தது. இன்று பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு முஸ்லிம்களைத் தள்ளியவர்கள் யார் என்பது ஒன்றும் இரகசியமல்ல.[/size]

[size=4]எதிர்காலத்தில் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்கள் அகச் சுயாதிக்கம் குறித்த ஒரு உடன் பாட்டிற்கு வரவேண்டும், அல்லதுஇணைந்த வடகிழக்கில் முஸ்லிம் பெரும்பான்மை தனியலகு ஒன்று உருவாக்கப் படுவதனை அவர்கள் உறுதிப் படுத்தவேண்டும். வடகிழக்கு தமிழ் முஸ்லிம் தாயகத்தில் தமிழ் முஸ்லிம் சகவாழ்வு யதார்த்தமான அடித்தளங்களில் கட்டி எழுப்பப் படாவிடின் இன்னும் பல தசாப்தங்களுக்கு முஸ்லிம்கள் மத்திய ஆட்சியாளர்களின் தயவை நாடுகின்ற அல்லது அவர்களை சார்ந்து நிற்கின்ற அரசியலை செய்வதற்கே நிர்ப் பந்திக்கப் படுவர்.[/size]

[size=4]உண்மையில் வடக்கு கிழக்கு அரசியலை தென்னிலங்கை அரசியலிலிருந்து அல்லது தேசிய அரசியலில் இருந்து முஸ்லிம் தலைமைகள் வேறுபடுத்தி சிந்திப்பதும் செயற்படுவதும் மிகவும் சாணக்கியமாகவும் சமயோசிதமாகவும் இடம் பெற வேண்டிய வரலாற்று நகர்வாகவே இருக்கும், வடகிழக்கிற்கு வெளியே தென்னிலங்கையில் வாழும் மூன்றில் இரண்டு பகுதி முஸ்லிம்களது வாழ்விலும் சாதகாமானதும் பாதகமானதுமான எதிர் விளைவுகளை தாக்கங்களை கொண்டுள்ள பல்வேறு பரிணாமங்களைக் கொண்டுள்ள இந்த உத்தேச நகர்வு தமிழ்த் தலைமைகளின் தேசிய பிராந்திய மற்றும் சர்வதேச காய் நகர்த்தல்களில் முஸ்லிம்களுக்கு ஏற்படுகின்ற நம்பகத் தன்மைகளைப் பொறுத்தே காரிய சித்தமாகும் என்பதில் சந்தேகமில்லை.[/size]

[size=4]முஸ்லிம்களின் இந்த உத்தேச அரசியல் நகர்வு அதன் சரியான பெறுமானங்களில் மதிப்பிடப் படுவதோடு வடகிழக்கு இடம் பெரும் வெறும் தேர்தல் கூட்டு என்பதற்கப்பால் இந்த நாட்டு முஸ்லிம் அரசியலின் எதிர்காலம் அவர்களது தேசியம், இனத்துவ அடையாளம், மத காலாசார தனித்துவம் என சகல துறைகளிலும் அடுத்த சமூகங்களுக்கு எவ்விதத்திலும் இரண்டாம் தரமாகாத, சம அந்தஸ்த்தை பேணுகின்ற உத்தரவாதங்கள் அதற்குரிய தேசிய சர்வதேசிய அங்கீகாரங்களுடன் பெற்றுக் கொடுக்கப் பாடுவதிலேயே தங்கியுள்ளது.[/size]

[size=4]இடைக்காலத் தீர்வாக மாத்திரமன்றி நம்பிக்கையை கட்டி எழுப்பும் விதத்தில் எதிர் வரும் கிழக்கு மாகாணத் தேர்தலில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி ஒன்றிணைந்து போட்டியிட தமிழர்கள் முன்வர வேண்டும்![/size]

[size=4]கடந்த காலங்களில் சிங்களப் பிரதேசங்களுக்கு முஸ்லிம்களை விரட்டியடித்ததும், பேரின அரசிடம் பாதுகாப்பும் அபயமும் கேட்டு முஸ்லிம்களை மண்டியிட வைத்ததும் சரணாகதி அரசியல் செய்ய வைத்ததும் போராளிகளும் விடுதலைப் புலிகளும் அவர்களது அரசியல் வாரிசுகளும் தான் இந்த கசப்பான உணமைகளை சீரணித்து அவற்றிற்கான இழப்பீட்டு அரசியலை தமிழ் சமூகம் செய்யத வரையில் தமிழ் முஸ்லிம் உறவு என்பது தொடர்ந்தும் கேள்விக் குறியாகவே இருக்கும்![/size]

[size=4]யதார்த்தமான அடிப்படைகளில் மாத்திரமே தமிழ் முஸ்லிம் உறவு புதுப்பிக்கப் பட முடியும் ![/size]

[size=4]இன்று தமிழ் முஸ்லிம் உறவு மீளக் கட்டி எழுப்பப் பட வேண்டியதன் அவசியத்தை தமிழ்த் தரப்புக்கள் மாத்திரமல்ல முஸ்லிம் தரப்புக்களும் உணர்ந்திருக்கின்றன, முஸ்லிம்களது மனதிலுள்ள ஆழமான வடுக்களை அகற்றுவதற்கான முயற்சிகளை தமிழ்த் தலைமைகள் எடுக்க வேண்டும். கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து விடுங்கள் என்ற வெற்று உபதேசங்களுக்கு அப்பால் தமிழ் சமூகம் குறிப்பாக விடுதலை புலிகளின் இன்றையா வாரிசுகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தமிழர் தேசியக் கூட்டணி, மற்றும் கடல் கடந்த தமிழீழ அரசு முஸ்லிம்களது நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்கான இதய சுத்தியுடனான சில நகர்வுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்![/size]

[size=4]முதலாவதாக முஸ்லிம்களும் இந்த நாட்டின் தேசிய அடையாளமுள்ள தனித்துவ சமூகம் என்பதனையும், இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் பேச்சு வார்த்தைகளில் தனியான ஒரு தரப்பினர் என்பதனையும் உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்டு தேசிய சர்வதேச அரங்குகளில் அதற்குரிய அங்கீகாரத்தை உத்தியோக பூர்வமாக வழங்க வேண்டும்![/size]

[size=4]இரண்டாவதாக வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப் பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது தமது வாழ்விடங்களுக்குச் சென்று வாழ்வதனை அதற்கு அவர்களுக்கு உள்ள உரிமையினை தேசிய சர்வதேச அரங்குகளில் பேசுவதும் இந்திய மற்றும் சர்வதேச சமூகங்கள் வழங்கும் மீள் குடியேற்ற ஒத்துளைப்புகளில் உதவிகளில் -தமது முன்னால் தலைவர்கள் செய்த தவறுகளை ஓரளவாவது ஈடு செய்யும் வகையில்- முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப் பட வேண்டும் என்பதனை அவர்கள் வலியுறுத்த வேண்டும்![/size]

[size=4]விரட்டியடிக்கப் பட்ட முஸ்லிம்களின் வீடுகளில் காணிகளில் குடியேறியுள்ள மாவீரர்களது குடும்பங்களையும், அத்து மீறிக் குடியேறி உள்ளவர்களையும் அங்கிருந்து அவர்களது சொந்த இடங்களுக்கு அல்லது மாற்று இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்,அல்லது அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்![/size]

[size=4]வட கிழக்கில் புலிகளால் ஆக்கிரமிக்கப் பட்டு இன்று வரை முஸ்லிம்களுக்கு வழங்கப் படாத பல்லாயிரக் கணக்கான மேய்ச்சல், பாய்ச்சல் மற்றும் விளைச்சல் நிலங்களை திருப்பி முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும், அல்லது அரசுடன் இணைந்து அவற்றை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்![/size]

[size=4]இறுதியாக அனால் உறுதியாக அதிகாரப் பகிர்வு அல்லது பரவலாக்க யோசனைகளில் முஸ்லிம்கள் குறித்த உங்களது நிலைப்பாடுகளை நீங்கள் சர்வதேச சமூகத்தின் முன் வைக்க வேண்டும், அல்லது அது குறித்து எங்களுடன் நீங்கள் பேச ஆரம்பிக்க வேண்டும்![/size]

[size=4]வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி தமிழ் சமூகம் பேசுவதற்கு முன்னர் வடக்கு கிழக்கு வாழும் முஸ்லிம்களுடன் பேச வேண்டும், 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப் பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கை முஸ்லிம்களின் முதுகில் குத்தப்பட்ட அடிமைச் சாசனம் என முஸ்லிம்கள் கருதியதன் நியாயங்களை புரிந்தும் புரியாதவர்கள் போல் தமிழ் சமூகம் நடந்து கொள்ளக் கூடாது.[/size]

[size=4]அந்த உடன்பாட்டில் முஸ்லிம்களது தேசியம், தனித்துவ அடையாளம் அங்கீகரிக்கப் படவில்லை என்பதற்கு அப்பால் கிழக்கில் 40 % இருந்த முஸ்லிம்களது அரசியல் வலு இணைந்த வட கிழக்கில் ஒரே இரவில் 17 % ஆக மாற்றப் பட்டதோடு முஸ்லிம்களின் தனித்துவ அரசியலின் தாயகமான கிழக்கில் இரண்டாவது பேரினத்தின் அடிமைச் சமூகம் என்ற நிலைக்கு தள்ளப் பட்டது. தொடர்ந்தும் ஈ பீ ஆர் எல் எப் , தமிழ் தேசிய படையணி , விடுதலைப் புலிகள் மற்றும் பல தமிழ் ஆயுதக் குழுக்கள்,ஏன் இந்தியப் படையினர் கூட முஸ்லிம்களை அடிமைச் சமூகமாகக் கூட அங்கீகரிக்க மறுத்து கட்டவிழ்த்து விட்ட காட்டு மிராண்டித் தனங்களை, இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம் உறவுக்காக மன்னித்திருந்தாலும் மறந்து விட்டு எதிர்கால அரசியலை தீர்மானிக்கப் போவதில்லை.[/size]

[size=4]இந்த நாட்டின் குறிப்பாக கடந்த நூற்றாண்டின் அரசியல் வரலாற்றை உண்ணிப்பாக அவதானிக்கின்ற பொழுது, சிங்களத் தலைவர்கள், தமிழ் முஸ்லிம் சமூகங்களின் நியாயமான அபிலாஷைகளை அங்கீகரிக்கத் தவறியுள்ளமை குறிப்பாக சுதந்திரத்துக்குப்பின்னர் இந்த நாட்டின் உணமையான சுதந்திரம், சமாதானம்,சகவாழ்வு பொருளாதார சுபீட்சம் என்பவற்றிற்கெல்லாம் பெரும் சாபக் கேடாக அமைந்துள்ளது போன்று தமிழ்த் தலைமைகள் முஸ்லிம்களது தனித்துவ அடையாளத்தை அங்கீகரிக்காதவரை மொத்த தேசமும் சாப விமோசனம் பெறுவது வெறும் கனவாக மாத்திரமே இருக்கும் என்பதனை எமது கிட்டிய கடந்த கால வரலாறு எமக்கு போதிக்கிறது, இந்த யதார்த்தத்தை உள்வாங்க மறுத்து எந்த வொரு பிராந்திய சர்வதேச சதிகாரர்களிடமும் போய் நமது தலைவிதியை மாற்றி எழுதிக் கொள்ள எந்தவொரு சமூகமும் முயற்சிப்பது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகவே அமையும் ![/size]

[size=4]தமிழ்த் தரப்புக்கள் முஸ்லிம்களது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கின்ற பட்சத்தில், முஸ்லிம் தரப்புகள் தமிழர்களின் இணைந்த வடகிழக்கில் வேண்டி நிற்கும் சுயாட்சி அதிகாரக் கோரிக்கைக்கு முஸ்லிம்கள் இணக்கம் தெரிவிப்பார்கள், அவ்வாறான சுமுகமான அடித்தளம் ஒன்றில் இரு சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் கூடிய விரைவில் சர்வதேச பிராந்திய அனுசரணைகளுடன் சகல இனங்களையும் திருப்திப் படுத்துகின்ற அரசியல் தீர்வு ஒன்றை அடைந்து கொள்ள முடியும்.[/size]

[size=4]பழையன கழிதலும் புதியன புகுதலும் தமிழ் முஸ்லிம் உறவில் இந்த யதார்த்தமான அடிப்படைகளில் தான் நடைபெற வேண்டும்! இன்றேல் இன்னும் பல தசாப்தங்களுக்கும் முஸ்லிம்களது நலன்களுக்கு எதிராக தமிழர்களும் தமிழர்களது நலன்களுக்கு முரணாக முஸ்லிம்களும் அரசியல் செய்கின்ற அநாகரீகம் தொடரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அதனால் நன்மை அடையப் போவது பேரினவாத சக்திகளே.![/size][/size]

http://metromirror.lk/?p=3298

முஸ்லீம் மதவாதவெறியர்களுடன் சேர்ந்து ஆட்சியமைப்பது சாத்தியம் என்றால் சிங்களக்காடையர்களுடன் சேர்ந்து ஆட்சியமைப்பது ஏன் சாத்தியம் இல்லை?

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மதவாதவெறியர்களுடன் சேர்ந்து ஆட்சியமைப்பது சாத்தியம் என்றால் சிங்களக்காடையர்களுடன் சேர்ந்து ஆட்சியமைப்பது ஏன் சாத்தியம் இல்லை?

அதானே... அதுக்கு, ஏன் பின்கதவாலை போகவேணும்.

நேரடியாகவே.... போகலாமே?

எங்களின் நோக்கம் கக்கீம் இல்லாத நேர்மையான ஒரு முஸ்லீம் தலைவரிடம் கிழக்கு மாகாணத்தை கொடுத்துவிட்டு தோற்று போகலாம், ஆனால் பிள்ளையான் மட்டுமல்ல, அரசின் யாரும் வரக்கூடாது. இதற்கு பெரிய தடை இந்த கக்கீம.

கக்கீம் தேர்தலின் பின்னர் கடைசி நேரத்தில் கூட்டமைப்பை ஏமாற்ற சகல திட்டங்களுடனும்தான் ஒவ்வொரு நாளும் ஜனாதிபதியுடன் பேச்சுவாத்தை நடத்தி தேர்தல் வியூகம் போடுகிறார். இப்தார்(நோன்பு விருந்து?) போகாததே தானும் ஜனாதிபதியும் சேர்ந்து போட்ட திட்டம் என்று பகிரங்கமாக மேடைகளில் பேசுகிறார். இவரின் வாக்கு திடலை அதிகரிக்க சில முஸ்லீம்காடைகளை இவருக்கு எதிர்மாதிரி நடிக்க அரசால் ஆயத்தம் செய்யப்படிருக்கிறது. இவர் அரச அடாவடித்தனங்களை ஜனாதிபதியுடன் பேசவில்லையாம். வெறும் போடிபோக்கு பொலிசுடன் மட்டும் தானாம் பேசினார்.

Edited by மல்லையூரான்

கிழக்கு மாகாணசபையில் ஐதேகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி - இரா.சம்பந்தன் நம்பிக்கை [ வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012, 01:36 GMT ] [ மட்டக்களப்புச் செய்தியாளர் ]

sampanthan12.jpgகிழக்கு மாகாணசபையில் ஐதேகவுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

திருகோணமலையில் தமிழ் அமைப்புகளின் பிரநிதிநிதிகளுடன், நடத்திய கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கிழக்கு மாகாணசபையில் 35 ஆசனங்கள் உள்ளன. நாம் பெரும்பான்மையைப் பெறவேண்டுமானால், 17 ஆசனங்களை வெல்ல வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களையும், திருகோணமலையில் 4 ஆசனங்களையும், அம்பாறையில் 2 ஆசனங்களையும் கைப்பற்ற முடியும் என்று நாம் நம்புகிறோம்.

இந்த 11 ஆசனங்களுடன் மேலும் இரண்டு போனஸ் ஆசனங்களும் கிடைக்கும். அதன்மூலம் எமக்கு 13 ஆசனங்கள் கிடைக்கும்.

ஐதேக 7 ஆசனங்களில் வெற்றிபெறுமேயானால், நாம் 20 ஆசனங்களைப் பெறமுடியும்.

இதன்மூலம் கிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மை பலம் கொண்ட- ஐதேக – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்த ஆட்சியை நிறுவலாம்.

ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெறமுடியும் என்று நாம் நம்பவில்லை.

அவை சிறிலங்கா அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளன.

எனவே, நாம் 20 ஆசனங்களைக் கைப்பற்றினால், இலகுவாக முதல்வர் பதவியைப் பெறமுடியும்.

அதன் மூலம் எமது பலத்தை உலகிற்குக் காட்ட முடியும்.

எமக்குள்ள மக்கள் ஆணையை உலகிற்கு நிரூபிக்க இது நல்லதொரு சந்தர்ப்பம்.

அதற்கு உங்களின் வாக்குகளை எமக்கு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20120816106811

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.