Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதனைகள்

Featured Replies

[size=6]கதிர்காமத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பாதயாத்திரை[/size]

[size=4]கொழும்பு திம்பிரிகஸ்யாயவை சேர்ந்த எம். டேவிட் என்பவர், கதிர்காமம் கிரிவேரவிலிருந்து காங்கேசன்துறை வரையிலான சமாதான பாதயாத்திரையொன்றை ஆரம்பித்துள்ளார். அவர் நேற்று கொழும்பை வந்தடைந்தபோது அவரின் அயலவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் இன்று திங்கட்கிழமை மீண்டும் தனது பயணத்தை தொடரவுள்ளார். [/size]

colo3(3).jpg

colo2(3).jpg

http://www.tamil.dailymirror.lk/--main/46939-2012-08-19-15-00-58.html

  • தொடங்கியவர்

[size=5]இரண்டு காலும் இல்லாத நாற்பத்தி நாலு வயதுள்ள பிரெஞ்சு பிரசை பிலிப்பே குரோசியோன் பல கடல்களை கடந்தார் [/size]

[size=1]

[size=4]அமெரிக்காவுக்கும் உருசியாவுக்கும் இடையிலான குளிரான கடலை நீந்திக்கடந்து புலன்குறைந்தவர்களுக்கு ஊக்கம் தந்துள்ளார். [/size][/size][size=1]

_62104383_bering_straits464x330.gif[/size]

[size=1]

[size=4]ஏற்கனவே பல கடல்களை நீந்திக்கடந்துள்ளார். [/size][/size][size=1]

_62357328_swim.jpg[/size]

[size=1]

http://www.bbc.co.uk/news/world-us-canada-19304810[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

colo3(3).jpg

colo2(3).jpg

பௌத்த கொடியையையும், சிங்கக் கொடியையும்... கட்டிக்கொண்டு போவதற்குப் பெயர் சமாதான யாத்திரையா?

தமிழ்ப்பகுதிக்கு சமாதான‌ பாதயாத்திரை செல்லும் வாகனத்தின் பதாகையில்... மருந்துக்குக் கூட தமிழ் இல்லை.

வேணுமென்றால்.... சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்பு யாத்திரை என்று சொல்லலாம்.

  • தொடங்கியவர்

[size=5]ஜேர்மனியில் ஈழத்தமிழ் சிறுவன் சாருஜனின் சாதனைகள்[/size]

sarujan01.jpg

[size=4]ஜேர்மனியின் டின்ஸ்லாகன் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழ் சிறுவனான சாருஜன் கஜேந்திரன் இவ்வாண்டும் ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் சாதனைகள் படைத்துள்ளார்.[/size]

[size=4]இவர் 02ம் திகதி யூன் மாதம் மாநில ரீதியான போட்டிக்காக நடைபெற்ற தெரிவாளர் போட்டிகளில் கலந்துகொண்டார். இதில் இவரைப்போல் பலநூறு போட்டியாளர்கள் இவரது பத்து வயதுப் பிரிவில் கலந்து கொண்டார்கள்.[/size]

[size=4]இப்போட்டியில் சாருஜன் 50மீ ஓட்டம், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், பந்துஎறிதல், 800மீ ஓட்டம் ஆகிய 5 விளையாட்டுகளிலும் கலந்து கொண்டார்.[/size]

[size=4]இவர் 50அ நீளத்தை 7.87செக்கன்டில், நீளம் பாய்தலில் 4.30மீ தூரம் பாய்ந்தும், உயரம்1.24மீ பாய்ந்தும், பந்து 40.00மீ தூரம் எறிந்தும், 800மீ தூரத்தை 3.04.04 நிமிடத்தில் ஓடி 4 விளையாட்டுகளில் முதலிடத்தையும் பந்து எறிதலில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்.[/size]

[size=4]இப்போட்டி நடைபெற்ற Bottrop நகர மைதானத்தில் 1.24மீ உயரம் பாய்ந்து தனது கழகத்தின் பழைய சாதனையை முறியடித்து தனது புதிய சாதனையையும் நிலை நாட்டினார் என்பதை இதில் குறிப்பிட வேண்டும்.[/size]

[size=4]இவரது சாதனையை ஜேர்மனியில் வெளிவரும் பத்திரிகைகளான NRZ, Rheinschepost ஆகியவை படங்களுடன் பெரிய தலையங்கங்களாகவே பிரசுரித்தன. ஆனாலும் இவரது குறிக்கோள் நீளம் பாய்தலில் புதியசாதனையை நிலைநாட்டவேண்டும் என்பதே.[/size]

[size=4]அக்குறிக்கோள் இம் மைதானத்தில் தவறிப்போனதால் பெரும் கவலையடைந்தார். இவரது கவலையை அறிந்த பெற்றோரும் பயிற்றுவிப்பாளரும் அவருக்கு ஆறுதல் கூறி அடுத்து 30ம் திகதி யூன் மாதம் நடைபெறவிருக்கும் மாநில ரீதியான மெய்வல்லுநர் பேட்டியில் இச்சாதனையை நிலை நாட்டலாம் என ஊக்குவித்தனர்.[/size]

[size=4]இதனால் இவரும் அதி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு 30ம் திகதி Oberhausen நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கலந்துகொண்டார். அங்கு ஒவ்வொரு விளையாட்டிற்கும் அதிசிறந்த வீரர்களான 12 பேர் ஒவ்வொரு போட்டியிலும் கலந்துகொள்வார்கள்.[/size]

[size=4]இவர்களில் எமது சாருஜனும் 5 விளையாட்டுகளிலும் பங்குபற்றினார்.[/size]

[size=4]இவர் அன்று நடைபெற்ற 50மீ ஓட்ட நீளத்தை 7.71செக்கனில் ஓடியும், உயரம் பாய்தலில் 1.24மீ பாய்ந்தும், நீளம் பாய்ந்தலில் 4.48மீ தூரம் பாய்ந்து மூன்று விளையாட்டுகளிலும் முதலிடத்தையும் 38.00மீ தூரம் பந்து எறிந்து இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டு நீளம் பாய்தல், 50மீ ஓட்டம், உயரம் பாய்தல் ஆகியவற்றின் இவ்வாண்டு “Kreismeister” என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.[/size]

[size=4]அது மாத்திரமன்றி தனது குறிக்கோளான நீளம் பாய்தலின் பழைய கழக சாதனையை முறியடித்து தனது புதிய சாதனையையும் நிலைநாட்டி பெற்றோரையும் பயிற்றுவிப்பாளர்களையும் இன்பத்தில் ஆழ்த்தினார்.[/size]

[size=4]இவரது சாதனைகளை வாழ்த்தி மீணடும் ஜேர்மன் பத்திரிகைகள் செய்திகளை பிரசுரித்தன.[/size]

[size=4]இவர் விளையாட்டில் மாத்திரமன்றி படிப்பிலும் தான் சளைத்தவர் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இவ்வாண்டு ஜேர்மனியில் மிகச் சிறந்த Gymnasium பாடசாலைக்கு தனது 5ம் ஆண்டைத் தொடர்வதற்காகத் தெரிவாகியுள்ளார் என்பதையும் சந்தோசத்துடன் இதில் குறிப்பிடுகின்றோம்.[/size]

http://www.eelamview...arujan-germany/

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சாருஜன், சாதனை நிகழ்த்தக் கூடிய... தராதரத்தில் இருப்பதாக ஜேர்மன் பத்திரிகை செய்தி வெளியிட்டதைப் பார்த்து, பெரு மகிழ்ச்சி அடைந்தேன். இவரைத் தயார் படுத்திய... பெற்றோர் கஜேந்திரன் தம்பதிகளுக்கு பாராட்டுக்கள். சாருஜன், பிரேசிலில் நடக்கும்... ஒலிம்பிக்கிற்கு, மெய்வல்லுநர் போட்டிக்கு ஈழத்தமிழனின் பெயரை உலகறியச்செய்ய... இன்னும்... கொஞ்சம் முயற்சி எடுக்க வைக்க வேண்டும். சாருஜன் நான்கைந்து தங்கப்பதக்கங்களை... ஒலிம்பிக்கில் பெறும் போது... ஜேர்மனி மட்டுமல்ல, அகில உலக தமிழ் இனமே... பெரும் ம‌கிழ்ச்சி அடையும். :)

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனின் சாதனைக்கு வாழ்த்துக்கள்.

இதை ஏன் இந்த திரிக்குள் இணைத்தீர்கள் அகோதா???.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனின் சாதனைக்கு வாழ்த்துக்கள்.

இதை ஏன் இந்த திரிக்குள் இணைத்தீர்கள் அகோதா???.

எனது வேண்டுகோளும் அதுதான்... அகூதா.

அந்தப் பையனுக்கு, தனித்தலைப்பை... ஆரம்பித்து, யாழ் களமே... உற்சாகம் கொடுக்க வேண்டும்.

பிற்குறிப்பு: அகூதாவுக்கு, வர,வர... பஞ்சி பிடிச்சிட்டுது போலை கிடக்குது. :D

  • கருத்துக்கள உறவுகள்

எனது வேண்டுகோளும் அதுதான்... அகூதா.

அந்தப் பையனுக்கு, தனித்தலைப்பை... ஆரம்பித்து, யாழ் களமே... உற்சாகம் கொடுக்க வேண்டும்.

பிற்குறிப்பு: அகூதாவுக்கு, வர,வர... பஞ்சி பிடிச்சிட்டுது போலை கிடக்குது. :D

அடிக்கடி திண்ணையில் மினக்கெடுவதால் இருக்கலாம் சிறி....... :lol::D :D

(நம்ம இடத்தை பிடித்துவிடுவார் என்ற பயம்தான் காரணம்)

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி திண்ணையில் மினக்கெடுவதால் இருக்கலாம் சிறி....... :lol::D :D

(நம்ம இடத்தை பிடித்துவிடுவார் என்ற பயம்தான் காரணம்)

அகூதா... திண்ணையிலும், மினக்கெடுவாரா... விசுகு.

சில வேளை... நான் நித்திரை கொண்டாப்பிறகு, சாமத்தில் வருகிறாரோ.... :D:lol:

(திண்ணையின் காவலர், விசுகு, புரட்சி, இசை, நிழலி, சாத்திரி, கோமகன், அலை, துளசி, சுண்டல், குண்டன், நந்தன், தமிழ்ச்சூரியன் அண்ணர்களின் இடத்தைப் பிடிக்க, இந்த உலகத்தில் எவருமில்லை. ஆமா...)smiley-laughing019.gif

  • தொடங்கியவர்

[size=4]இதில் சாதனைகள் என்ற வரிசையில் இவற்றை இணைத்து எமது உறவுக்களுக்கு ஒரு 'பூஸ்ட்' கொடுக்கவே இணைத்தேன்.[/size]

[size=4]இதில் முதலில் இணைத்தவரை அவர் இந்த வயதிலும் இவ்வாறு உற்சாகமாக நடக்க திட்டமிட்டுள்ளதையும்.[/size]

[size=4]பிரெஞ்சு காரர் கால்கள், கைகள் முழுக்க இல்லாமல் நீந்தியதையும், [/size][size=4]எமது புலம்பெயர் சிறுவனின் சாதனையும் இணைத்தேன்.[/size]

[size=4]ஆனால், உண்மையில் சாருஜனின் சாதனையை வேறு இடத்தில் ஒரு தனித்திரியாய் இணைத்திருக்கவேண்டும் என்பதை ஏற்கிறேன்.[/size]

[size=4]அதனால் திண்ணைக்கு நானே எனக்கு ஒரு மணித்தியாலம் தடை போடுகிறேன் :lol: [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இதில் சாதனைகள் என்ற வரிசையில் இவற்றை இணைத்து எமது உறவுக்களுக்கு ஒரு 'பூஸ்ட்' கொடுக்கவே இணைத்தேன்.[/size]

[size=4]இதில் முதலில் இணைத்தவரை அவர் இந்த வயதிலும் இவ்வாறு உற்சாகமாக நடக்க திட்டமிட்டுள்ளதையும்.[/size]

[size=4]பிரெஞ்சு காரர் கால்கள், கைகள் முழுக்க இல்லாமல் நீந்தியதையும், [/size][size=4]எமது புலம்பெயர் சிறுவனின் சாதனையும் இணைத்தேன்.[/size]

[size=4]ஆனால், உண்மையில் சாருஜனின் சாதனையை வேறு இடத்தில் ஒரு தனித்திரியாய் இணைத்திருக்கவேண்டும் என்பதை ஏற்கிறேன்.[/size]

[size=4]அதனால் திண்ணைக்கு நானே எனக்கு ஒரு மணித்தியாலம் தடை போடுகிறேன் :lol: [/size]

நன்றி அகோதா

(இன்னும் ஒரு மணித்தியாலத்தில் திண்ணைக்கு வருவதாக தகவல் கசிந்துள்ளது. இருட்டடிக்கு ஏற்பாடு செய்வோம் சிறி .) :lol::D :D

  • தொடங்கியவர்

[size=6]Sreetharan, pioneer of pop-up robots, named top innovator [/size]

[size=5]A panel of expert judges and the editorial staff of Technology Review, published by MIT, selected him from more than 300 nominees.[/size]

[size=5]Sreetharan recently graduated with a doctorate in Applied Physics from the Harvard School of Engineering and Applied Sciences (SEAS). He also holds an undergraduate degree in Physics from Harvard College.[/size]

[size=5]The founder and CTO at Vibrant Research worked in the Harvard Microrobotics Laboratory directed by Robert Wood, Charles River Professor of Engineering and Applied Sciences at SEAS, who himself was named a TR35 innovator in 2009.[/size]

[size=5]Sreetharan was honored for his co-development of a novel technique inspired by elegant pop-up books and origami that enables clones of robotic insects to be mass-produced by the sheet.[/size]

[size=5]In addition, he played a crucial role in the creation of a millionth-scale differential to govern the flight of minuscule aerial robots that could someday be used to probe environmental hazards, forest fires, and other places too perilous for people.[/size]

[size=5]Sreetharan and the other TR35 winners for 2012 will be featured in the September issue of Technology Review magazine and honored at the 2012 Emerging Technologies Conference, called EmTech, to be held at MIT in Cambridge, Mass., on October 24–25.[/size]

[size=5]In addition to Sreetharan and Wood, past TR35 winners affiliated with SEAS include Donhee Ham, Gordon McKay Professor of Electrical Engineering and of Applied Physics; Erez Lieberman Aiden ’10 (Ph.D.); Aaron Dollar ’07 (Ph.D.); and Kurt Zenz House ’08 (Ph.D.), who worked with faculty member Michael Aziz, Gene and Tracy Sykes Professor of Materials and Energy Technologies.[/size]

[size=5]Additional information about past and present TR35 winners and judges is available at www.technologyreview.com/tr35/. For more information about the Em Tech Conference please visit www.technologyreview.com/emtech/ .[/size]

colo2(3).jpg

பௌத்த கொடியையையும், சிங்கக் கொடியையும்... கட்டிக்கொண்டு போவதற்குப் பெயர் சமாதான யாத்திரையா?

தமிழ்ப்பகுதிக்கு சமாதான‌ பாதயாத்திரை செல்லும் வாகனத்தின் பதாகையில்... மருந்துக்குக் கூட தமிழ் இல்லை.

வேணுமென்றால்.... சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்பு யாத்திரை என்று சொல்லலாம்.

அடி அளக்கிறார். கதிர்காமத்திலிருந்து காங்கேசந்துறைவரை.

சமாதானமாக "மூன்றடி மண் கேட்ட" கிருஸ்ணன்

அடி அளந்த முடிவில் "மூன்றென வைத்தான்" மன்னவன் தலையில்

  • தொடங்கியவர்

[size=6]கால்களை வென்றவன்![/size]

[size=4]%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81.jpg[/size]

[size=4]சர்வதேச அளவிலான தன்னார்வலர் குழு ஒன்றினில் பங்குபெற்று 2008ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஸ்பென்ஸர் வெஸ்ட் கென்யாவுக்கு சென்றார். அங்கிருக்கும் கிராமப்புற மக்களுக்கு உதவும் வகையிலான ஒரு பள்ளியை உருவாக்குவதில் ஸ்பென்சரின் பங்கு அதிகம். இந்தப் பயணத்தின் போது நிறைய ஆப்பிரிக்க இளைஞர்களை அவரால் சந்திக்க முடிந்தது. வறுமையால் தங்களின் ஒவ்வொரு நாளையும் கடக்க அவர்கள் நடத்தும் போராட்டத்தை கண்டார். இவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பதே தான் பிறந்ததற்கான அர்த்தம் என்பதனை உணர்ந்தார்.[/size]

[size=4] கடந்த அறுபது ஆண்டுகளிலேயே மோசமான பஞ்சத்தை கடந்த ஆண்டு கென்யா சந்தித்தது. குடிக்க நல்ல குடிநீரின்றி கிராமப்புறங்களில் கொத்து, கொத்தாக மக்கள் நோய்வாய்ப்பட்டு மடிந்துக் கொண்டிருந்தார்கள். கென்ய கிராமப்புறங்களில் முறையான, நீடித்த குடிநீர் ஆதாரங்களை உருவாக்கும் நோக்கத்துக்காக நிதி திரட்ட ஆரம்பித்தார். இதற்காக உலகின் பார்வை தன் மீது படுவதற்காக அவர் அறிவித்த அறிவிப்புதான் இந்த கட்டுரை எழுதப்படுவதற்கான நியாயத்தைஏற்படுத்துகிறது.[/size]

[size=4]%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.jpg[/size]

[size=4]“ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலையான கிளிமாஞ்சாரோவின் சிகரத்தை எட்டப்போகிறேன்” என்று ஸ்பென்ஸர் அறிவித்ததுமே சர்வதேச பிரபல ஊடகங்கள் பிபிசி, சிடிவி, சிபிஎஸ், டெலிகிராப் போன்றவை பரபரப்படைந்தன. ஸ்பென்சருக்கு கோடிகள் நிதியாக குவிய ஆரம்பித்தது. காரணம், அவருக்கு கால்களே இல்லை என்பதுதான். இரண்டு கால்களுமின்றி தவழ்ந்தே, சுமார் இருபதாயிரம் அடி உயரமுள்ள ஆப்பிரிக்காவின் உயர்ந்த சிகரத்தை எட்டுவேன் என்கிற அவரது அறிவிப்பு பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.[/size]

[size=4]கனடாவின் டொரண்டோ நகரில் பிறக்கும்போதே மரபணு தொடர்பான விசித்திரமான நோயுடன் பிறந்தார் ஸ்பென்ஸர் வெஸ்ட். அவரது மூன்றாவது வயதில் முழங்காலுக்கு கீழ் முழுவதும் அகற்றப்பட்டது. ஐந்தாவது வயதில் இடுப்புக்குக் கீழ் இருந்த பகுதிகளையும் இழந்தார். அப்போது அவரது பெற்றோரிடம் “உயிரோடு இருப்பதைத் தவிர வேறெதையும் உங்கள் மகனிடம் நீங்கள் எதிர்ப்பார்க்காதீர்கள்” என்று மருத்துவர்கள் சொன்னார்களாம். ஆனால் தங்கள் மகன் மீது பெரும் நம்பிக்கை வைத்தார்கள் அவரது பெற்றோர்கள். நம்பிக்கை வீண் போகவில்லை. இன்று ஸ்பென்ஸர் வெஸ்ட் உலகளாவிய அளவில் புகழ்பெற்ற தன்னம்பிக்கை பேச்சாளர்களுள் ஒருவர்.[/size]

[size=4]தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ உச்சியை அடைவது என்பது சாதாரண சாதனை அல்ல. பாலைவனம், காடு, கடும் பனி என்று வித்தியாசமான சூழல்களை கடக்க வேண்டும். உச்சியை எட்டுகிறோம் என்று கிளம்புபவர்களில் ஐம்பது சதவிகிதம் பேர் மட்டுமே இலக்கை அடைகிறார்கள். மீதி பேர் பாதியிலேயே திரும்பிவிடுகிறார்கள். வருடத்துக்கு பத்து பேராவது இந்த மலையேறும் முயற்சியில் உயிர் இழக்கிறார்கள்.[/size]

[size=4]%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.jpg[/size]

[size=4]இப்படிப்பட்ட மலையேற்றத்தை ஸ்பென்ஸர் அறிவித்தது என்பதே பலரையும் ஆச்சரியத்துக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. ஒட்டுமொத்த பயணத் தூரத்தில் இருபது சதவிகித தூரத்தை மட்டுமே வீல்சேர் மூலமாக ஸ்பென்ஸர் கடந்தார். மீதி எண்பது சதவிகிதத்தை கையுறை அணிந்த கைகளாலேயே ஏறினார். இடைவிடாத ஏழுநாள் பயணம். “ஏழாவது நாள் சிகரத்தின் உச்சியை எட்டியிருந்தபோது என்னுடைய கைகள் கன்னிப்போய் இருந்தன. கண்ணீர், இரத்தம், வியர்வை எல்லாம் கலந்த வெற்றி இது” என்று தன்னுடைய இணையத்தளத்தில் இந்த சாகஸத்தைப் பற்றி எழுதுகிறார் ஸ்பென்ஸர்.[size=5] freethechildren.com [/size]என்கிற இணையத்தளத்தில் தன் வாழ்க்கையை எண்ணங்களாக்கி கட்டுரைகளை தொடர்ச்சியாக பதிந்துவருகிறார்.[/size]

[size=4]“கிளிமாஞ்சாரோவை என்னால் எட்ட முடியும் என்று காண்பிப்பதற்காக மட்டுமே நான் மலையேறவில்லை. தடைகளையும், சவால்களையும் எவ்வாறு தாண்டி வாழ்க்கையை வெல்வது என்று மற்றவர்களுக்கு என் வாழ்க்கையையே படமாக்கி காட்ட விரும்பினேன். நம் வாழ்க்கையை மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் உபயோகமாக பயன்படுத்த முடியும் என்பதையும் இந்த சாதனையின் மூலம் உணர்த்தியிருப்பதாக கருதுகிறேன்” என்று மலையிறங்கி வந்தவுடன் சொன்னார் ஸ்பென்ஸர்.[/size]

[size=4]%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D.jpg[/size]

[size=4]“எனக்கு கால்கள் இல்லை என்பதால் என்னை நானே பரிதாபத்துக்குரியவனாக பார்த்துக் கொண்டதில்லை. எல்லோராலும் முடிவது என்னாலும் முடியுமென்று நம்புகிறேன். இதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம்” என்று வெற்றிக்கான சீக்ரட்டை வெளிப்படையாக போட்டு உடைக்கிறார் முப்பத்தோரு வயதான ஸ்பென்ஸர்ஸ் வெஸ்ட்.[/size]

[size=4]நம்மாலும் முடியும்தான் இல்லையா?[/size]

http://www.luckylookonline.com/2012/08/blog-post_23.html

  • தொடங்கியவர்

[size=6]ஜாதவ் பாயெங்[/size]

[size=4]மணல் திட்டுகளை, வளம் கொழிக்கும் காடாக்கி சாதனை படைத்த,ஜாதவ் பாயெங், பிரான்சில் நடக்கும், சர்வதேச மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளார்.

கட்டாந்தரையாகவும், மணல் திட்டுகளாகவும் இருந்த, பெரிய நிலப்பரப்பை, வளம் கொழிக்கும் காடாக மாற்றிக் காட்டியவர், அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாதவ் பாயெங். இவரது சாதனையை பாராட்டும் வகையில், பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் பேராசிரியர் ராமகிருஷ்ணன், இந்தியாவின் வன மனிதர் என்ற, பட்டம் அளித்து கவுரவித்தார்.நீடித்து நிலைத்து நிற்கும் வளர்ச்சி என்ற தலைப்பில், வரும், 22ம் தேதி, பிரான்சில் நடைபெறவுள்ள, சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளும்படி,ஜாதவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில், 33 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு, வளமான காட்டை உருவாக்கிய தன் அனுபவங்கள் குறித்து, ஜாதவ் உரை நிகழ்த்த உள்ளார்.ஜாதவின் சாதனைகளை, அவரது நெருங்கிய நண்பரான ஜீட்டு காலிதா, வெளியுலகத்துக்கு கொண்டு வந்தார். [/size]

[size=4]இதுகுறித்து, தினமலர் நிருபரிடம், காலிதா கூறியதாவது:அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து, 300 கி.மீ., தொலைவில், பிரம்மபுத்திரா நதிக்கு அப்பால், 1,300 ஏக்கர் பரப்பில், மணல் திட்டுக்கள் இருந்தன. 1979ல், வனத்துறை அறிவித்த விசேஷ திட்டத்தின் கீழ், 500 ஏக்கர் பரப்பிலான நிலத்தில், மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கத் துவங்கினார் ஜாதவ். ஐந்து ஆண்டுகளுக்கு பின், இதை, 1,300 ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்தினார்.பாலைவனமாக கைவிடப்பட்டு இருந்த மணல் திட்டுக்கள் எல்லாம், ஜாதவின் அயராத முயற்சியால், சோலைவனமாக மாறின. 33 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், அப்பகுதி, வானுயர்ந்த மரங்களுடன், எழில் கொஞ்சும் பகுதியாக உருவெடுத்துள்ளது.சுற்றுச்சூழலை கருத்தில் கொள்ளாது, காடுகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், தனியொரு மனிதராக அரும்பாடுபட்டு, ஜாதவ் உருவாக்கிய காட்டில், தற்போது நான்கு புலிகள், மூன்று காண்டாமிருகங்கள், நூற்றுக்கணக்கான மான்கள், முயல்கள் மற்றும் குரங்குகள் வாழ்ந்து வருகின்றன.அத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளும், அவ்வப்போது இக்காட்டிற்கு வந்து செல்கின்றன. ஏராளமான பறவைகளுக்கு, இக்காடு சொர்க்கபுரியாகி உள்ளது. [/size]

[size=4]இக்காடு, மூலை கத்தோனி என, பெயரிடப்பட்டு, அசாமின் புகழ் பெற்ற காடாக உருவெடுத்துள்ளது.இக்காட்டில் புகுந்து, அப்பாவி மிருகங்களை சிலர் வேட்டையாடி வருவது, வன மனிதர் ஜாதவை துயரம் அடையச்செய்துள்ளது. இதை ஒடுக்க, அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு காலிதா கூறினார்.[/size]

http://tamil.yahoo.c...-003400554.html

Edited by akootha

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

[size=6]வெண்மைப் புரட்சியின் தந்தை[/size]

[size=2][size=4]1950-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி, கேரா (Kaira) மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முழு நேர ஊழியராக இணைந்தார் வர்கீஸ் குரியன். கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை மேலாளராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.[/size][/size]

[size=2][size=4]தன்னுடைய நிஜமான முதலாளிகள், கிராமத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள்தான் என்பது வர்கீஸ் குரியனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. தன்னை அந்தப் ‘பால்காரர்களின் ஊழியன்’ என்றே பெருமையுடன் அழைத்துக்கொண்ட அவர், இனிமேல் தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும், கேரா மாவட்டப் பால் உற்பத்தியாளர்களின் முன்னேற்றத்தை நோக்கியே இருக்கும் என்று உறுதியாகத் தீர்மானித்துக்கொண்டார்.[/size][/size]

[size=2][size=4]வர்கீஸ் குரியன் நினைத்திருந்தால், அவருக்கு இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ பல பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்திருக்கும். சொல்லப்போனால், அவர் இந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் மேலாளராகப் பொறுப்பேற்றபிறகும்கூட, புதிய வேலை வாய்ப்புகள், பதவிகள் அவரைத் தேடி வந்துகொண்டுதான் இருந்தன. இத்தனைக்கும், கூட்டுறவுச் சங்கத்தில் குரியனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் மிகக் குறைவு. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமேல் இந்தத் துறையில் பணியாற்றிய வர்கீஸ் குரியன் வாங்கிய அதிகபட்ச சம்பளம், மாதம் ஐந்தாயிரம் ரூபாய்தான்![/size][/size]

[size=2][size=4]ஆனால், இதே காலகட்டத்தில்தான், லட்சக்கணக்கான கிராமவாசிகளின் வாழ்த்துகளைச் சம்பாதித்துக்கொண்டிருந்தார் வர்கீஸ் குரியன். தன்னுடைய பணிகளின்மூலம், சமூகத்தில், பால் உற்பத்தியாளர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றம், முன்னேற்றம் கொண்டுவரமுடிகிறது என்கிற இந்த எண்ணம்தான், குரியனை மேலும் மேலும் கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடத் தூண்டியது.[/size][/size]

http://www.tamilpaper.net/?p=6712

[size=4]பால் உற்பத்தியில் மிகவும் பின் தங்கியிருந்த இந்தியாவை, தன்னிறைவு காண வைத்ததோடு உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தியாளர் என்ற நிலைக்கு கொண்டுவந்த பெருமை டாக்டர் குரியனுக்கு உண்டு.[/size]

[size=3][size=4]அவர் உருவாக்கிய அமுல் நிறுவனம் இந்தியாவின் முன்னணி பால் உற்பத்திப் பொருள் நிறுவனமாக வளர்ந்தது. [/size][/size]

[size=3][size=4]அந்நிறுவனத்தை நூறு கோடி டாலர் மதிப்புள்ள ஒரு மாபெரும் தொழிலாக அவர் உருமாற்றினார்.[/size][/size]

[size=3][size=4]கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 1921 ஆம் ஆண்டு பிறந்த குரியன், சென்னை லயோலா கல்லூரியிலும், அப்போதைய கிண்டி பொறியியல் கல்லூரியிலும் பயின்றவர்.[/size][/size]

[size=3][size=4]பால் பண்ணைத் தொழில் பயிற்சி பெற்ற பின்னர் அமெரிக்கா சென்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பால் உற்பத்தி பொறியியலில் நிபுணத்துவம் பெற்று நாடு திரும்பினார்.[/size][/size]

[size=4]குஜராத்தின் கைரா மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் சேர்ந்து அவ்விடத்தில் குரியன் உருவாக்கிய பால் பதனிடும் தொழிற்சாலைதான் அமுல் நிறுவனமாக மலர்ந்தது.[/size]

[size=4]அமுல் கொண்டுவந்த கூட்டுறவு பால் உற்பத்தி முறை பெரும் வெற்றியடையவே. அம்முறை குஜராத் எங்கும் பின்பற்றப்பட்டது.[/size]

[size=4]குஜராத் விவசாயிகளும் கால்நடை வளர்ப்போரும் கூட்டுறவுத் திட்டங்கள் மூலம் வாழ்வில் முன்னேற குரியன் வழிவகுத்தார்.[/size]

[size=4]அப்போதையப் பிரதமர் லால் பகதுர் சாஸ்திரி கேட்டுக்கொண்டதற்கு இணங்க தேசிய பால் வள மேம்பாட்டு வாரியத்தை வடிவமைத்து. அதன் தலைவராக செயல்பட்டு, அமுல் பாணியில் நாடெங்கும் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களை குரியன் கொண்டுவந்திருந்தார்.[/size]

[size=4]1965 தொடங்கி 1998 வரை 33 வருடங்கள் தேசிய பால் வள மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக குரியன் விளங்கினார்.[/size]

[size=4]60களில் வெறும் 20 மில்லியன் மெட்ரிக் டன் பால் மட்டுமே உற்பத்தி செய்துவந்த இந்தியா சென்ற வருடம் 122 மில்லியன் மெட்ரிக் டன் பாலை உற்பத்தி செய்திருக்கிறது என்றால் அதில் குரியனின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று.[/size]

[size=4]இந்திய மக்கள் அனைவரும் பால் அருந்த வழிவகுத்த குரியன், இயல்பில் பால் அருந்த மாட்டார்.[/size]

[size=4]ஆச்சரியமான பல சாதனைகளைச் செய்தவரின் வாழ்க்கையில் இதுவும் ஒரு ஆச்சரியம்தான்.[/size]

http://www.bbc.co.uk/tamil/india/2012/09/120909_kurienobit.shtml

Edited by akootha

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

[size=3][size=4]சீனாவில், 1,300 அடி உயர கண்ணாடி கட்டடத்தில் ஏறி, பிரான்ஸ், ஸ்பைடர்மேன் புதிய சாதனை படைத்துள்ளார்.[/size][/size]

[size=4]பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆலென் ராபர்ட், 50, உலகின் உயரமான கட்டடங்கள் மீதேறி, சாதனை படைப்பதே இவரது பொழுது போக்கு. கயிறு, பாதுகாப்பு சாதனம் எதுவுமின்றி, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்களில், ராபர்ட் ஏறி உள்ளார். இதனால், ஸ்பைடர்மேன் என்ற சிறப்பு பெயரும், இவருக்கு உண்டு. [/size]

[size=4]மிகவும் சவால் நிறைந்த கட்டடமாக கருதப்படும், சீனாவின் செங்சோ நகரில் உள்ள, 1,300 அடி உயரம் கொண்ட, போர்டலேசா டவர் ராபர்ட்டின் அடுத்த குறியாக இருந்தது. இக்கட்டடத்தின் முதல், 400 அடிக்கு மேல், பயங்கரமாக வழுக்கும் தன்மையுடன் கூடிய கண்ணாடி மற்றும் உலோகத்தாலான வெளிப்புறச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கை, கால்களை ஊன்றக்கூடிய வகையில், பிடிமானம் சற்றும் இல்லாததால், இந்த கட்டடத்தின் மீது ஏறுவது மிகவும் சவால் நிறைந்ததாக கருதப்பட்டது. இதனால், வேறு வழியின்றி, கண்ணாடி சுவரில், சில சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு கயிறு போன்றவற்றின் துணையோடு, ராபர்ட், கட்டடத்தின் மீது ஏற ஆரம்பித்தார். முதல், 400 அடியை சிரமமின்றி ஏறி முடித்த ராபர்ட், பின், மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து, இரண்டு மணி நேரத்தில் உச்சியை சென்றடைந்தார். அங்கே, அவருக்காக காத்திருந்த வரவேற்பு குழுவை சேர்ந்தோர், கைதட்டி ஆரவாரம் செய்து, ராபர்டை வரவேற்றனர்.[/size]

[size=4]ராபர்ட்டின் சாகசத்தை, சீன தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ராபர்ட், சீனாவில், இதற்கு முன், 2007ல், ஷாங்காய் மாகாணத்தில் உள்ள, 1,400 அடி உயரம் கொண்ட, ஜின் மாவ் டவரில் ஏறி சாதனை படைத்தார். [/size]

[size=4]கடந்த மார்ச்சில், துபாயில் உள்ள, உலகின் மிக உயர்ந்த கட்டடமான, புர்ஜ் கலிபா டவர் மீது ஏறி, உலக மக்களின் கவனத்தை கவர்ந்து பாராட்டு பெற்றார். 2, 716 அடி உயரம் கொண்ட இக் கட்டிடத்தின் மீது, ராபர்ட் ஏறும் போது, பயங்கர பாலைவனக்காற்று வீசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது சாதனைகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.[/size]

http://tamil.yahoo.c...-195900973.html

Edited by akootha

  • தொடங்கியவர்

542116_501245206554122_1625628294_n.jpg

  • தொடங்கியவர்

[size=4]இடது காலால் பரீட்சை எழுதி புலமைச் பரிசிலில் சித்தி அடைந்த மாற்றுத் திறன் மாணவி"

இடது காலால் பேனாவைப் பிடித்துப் பரீட்சை எழுதி கடந்த தரம் 05 புலமைப் பரிசிலில் திறம்பட சித்தி அடைந்து உள்ளார் மாற்றுத் திறனாளியான சிறுமி ருஷ்மி நிமேஷா குணவர்தன.[/size]

557196_285857958184790_481528967_n.jpg

[size=4]இவருக்கு பிறப்பில் இருந்தே கைகளிலும், வலது காலிலும் நிரந்தர ஊனம். இவர் தெரணியாகலவில் உள்ள தெலுலுவ கனிஷ்ட பாடசாலை மாணவி. இவரது பாடசாலையில் இருந்து 13 மாணவர்கள் இம்முறை பரீட்சை எழுதி இருக்கின்றார்கள். இவர் ஒருவர்தான் சித்தி அடைந்து உள்ளார்.[/size]

[size=4]இவர் பெற்றுக் கொண்ட புள்ளிகள் 153. இப்பாடசாலையின் வரலாற்றில் கடந்த 13 வருடங்களில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்து இருக்கின்ற ஒரே ஒரு மாணவர் இவர்தான். இவரது தகப்பன் டி. ஜி. சரத் குணவர்தன. இப்பாடசாலையில்தான் கற்பிக்கின்றார்.

தாய் தம்மிக்க பொடி மெனிக்கா. இவர் ஒரு சங்கீத ஆசிரியர். மகள் புலமைப் பரிசிலில் சித்தி பெற்றமை இவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்து உள்ளது. ஆயினும் பிள்ளையின் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகளில் ஏற்படக் கூடிய சவால்களை நினைத்து மனம் உடைந்து போய் உள்ளார்.

இச்சாதனை மாணவிக்கு செயற்கைக் கைகள், கால் பொருத்த மனிதாபிமானிகள் உதவி செய்ய வேண்டும் என்று பாடசாலை அதிபர் சமன் விஜேவர்தன ஊடகங்கள் மூலம் கோரிக்கை விடுத்து உள்ளார்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இடது காலால் பரீட்சை எழுதி புலமைச் பரிசிலில் சித்தி அடைந்த மாற்றுத் திறன் மாணவி"

இடது காலால் பேனாவைப் பிடித்துப் பரீட்சை எழுதி கடந்த தரம் 05 புலமைப் பரிசிலில் திறம்பட சித்தி அடைந்து உள்ளார் மாற்றுத் திறனாளியான சிறுமி ருஷ்மி நிமேஷா குணவர்தன.[/size]

557196_285857958184790_481528967_n.jpg

மாற்றுத் திறன் கொண்ட, சிங்கள மாணவியை... பாராட்டா விட்டாலும், இழிவான கருத்துக்களை பதிவு செய்ய.... தமிழன் சிங்களவனைப் அவ்வளவு இழிவானவன் அல்ல.

முள்ளிவாய்க்காலில்... தமிழனை அழித்த பின்பு,

சிங்களவன் தமிழ்ப் பகுதியில்... கட்டும், புத்த கோவில்களும், புதிய குடியேற்றங்களும்... தமிழனை ஒட்டுமொத்தமாக அழிக்க ஆரம்பித்துள்ளதை நினைத்து... கையாலாகத நிலையியுள்ளதை நினைக்க‌, முழுத் தமிழருமே... இப்போ... மாற்றுத் திறனாளிகள் தான்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

[size=5]விவேக பரீட்சையொன்றில் 162 புள்ளிகளை பெற்று பாடசாலை சிறுமியொருவர்[/size]

[size=4]6(1365).jpg

விவேக பரீட்சையொன்றில் 162 புள்ளிகளை பெற்று பாடசாலை சிறுமியொருவர் விஞ்ஞானியான அல்பர்ட் ஜன்ஸ்ரீன் மற்றும் பேராசிரியர் ஸ்டீபன் ஹோக்கிங் ஆகியோரையும் விஞ்சிய மூளைசாலி என்ற பெயரை பெற்றுக்கொண்டுள்ளதுடன் மென்சாவிலும் அங்கத்துவம் பெற்றுள்ளார்.

உலகில் அதிகூடிய மற்றும் பழமை வாய்ந்த விவேக திறனாளிகளை கொண்ட உலக மூளை வலையமைப்பு என்று அழைக்கப்படும் மென்சாவில் மேற்படி சிறுமி இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

லண்டனின் லிவர்பூல் பகுதியை சேர்ந்த ஒலிவியான் மெனிங் என்ற 12 வயது சிறுமியே இவ்வாறான அதி திறமைசாலியாக விளங்குகிறார்.

இவர், விவேக பரீட்சையில் ஜேர்மனைச் சேர்ந்த ஜன்ஸ்ரின் மற்றும் பேராசிரியர் ஸ்டீபன் ஹோகிங் ஆகியோரையும் விட இரண்டு புள்ளிகளை அதிகமாக பெற்று உலகிலே மிகச் சிறந்த விவேகிகள் வலையமைப்பில் சேர்ந்துள்ளார்.

'பலர் என்னிடம் வந்து அவர்களது கற்கை நெறி சார்ந்த வீட்டு வேலைகளை செய்வதற்கு உதவுமாறு கேட்கின்றனர். எனக்கு சவால்கள் என்றால் அதிகம் பிடிக்கும் என மேற்படி சிறுமி தெரிவித்துள்ளார்.

'நாங்கள் அதிகான வேலைகளை செய்யும்படி அவளிடம் ஒப்படைப்போம். ஏன் அவள் அனைத்து புள்ளிகளையும் பெற்றுக்கொள்ளவில்லையென கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும்' என ஆசிரியரான ஸ்டேசி மெய்ன் தெரிவித்துள்ளார்.[/size]

http://www.tamilmirror.lk/2012-05-03-10-09-42/49880--162-.html

  • தொடங்கியவர்

[size=4]மென்சா - அப்படி என்றால் என்ன? .... [/size][size=4]இந்த தளத்திற்கு சென்று பாருங்கள்![/size]

[size=5]http://www.mensa.org/[/size]

  • தொடங்கியவர்

[size=5]ஸ்டீவ் ஒரு சகாப்தம்![/size]

[size=4]இன்றைய தினம் அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் உலகை விட்டு மறைந்து ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.[/size]

[size=4]கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இதே திகதியில் அமெரிக்காவின் மிகப்பெரும் நிறுவனமான அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் காலமானார் என்ற செய்தி வெளியாகியது.[/size]

[size=4]ஸ்டீவ் தனது 56 ஆவது வயதில் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் காலமானார்.[/size]

[size=4]ஜொப்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவரின் ஆயுட்காலம் வைத்தியர்களால் நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் என்ற போதிலும் இச்செய்தி வெளியாகிய சில நிமிடங்களில் தொழில்நுட்ப உலகமே சற்று ஆடித்தான் போனது. [/size]

[size=4]உலகம் முழுவதிலும் உள்ள அப்பிள் பாவனையாளர்கள் குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் மக்கள் வீதிகளிலும், அப்பிள் ஸ்டோர்களின் முன்னாலும் ஸ்டீவுக்கு தங்களது அஞ்சலியைச் செலுத்தத் தொடங்கினர்.[/size]

[size=4]அமெரிக்க ஜனாதிபதி உட்பட உலகத் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் ஸ்டீவுக்த்கு தங்களது அனுதாபச்செய்தியினை ஊடகங்களின் மூலமாக வெளியிடத் தொடங்கினர்.[/size]

[size=4]அப்பிளின் போட்டி நிறுவனங்களின் தலைவர்களும் கூட ஸ்டீவ் ஜொப்ஸுக்கு தமது அஞ்சலியைச் செலுத்தத் தொடங்கினர். [/size]

[size=4]ஸ்டீவ் ஜொப்ஸின் மரணம் குறித்து பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக இணையத்தளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவிந்தன. [/size]

[size=4]ஸ்டீவ் ஜொப்ஸ் [/size]

[size=4] இவர் 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தார்.[/size]

[size=4] ஸ்டீவின் தந்தையின் பெயர் அப்துல்பதா ஜோன் ஜண்டாலி. அவர் சிரிய நாட்டைச் சேர்ந்தவர். தாயார் பெயர் ஜொஹான் கெரோல் சீகிபில்.[/size]

[size=4] இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முன்னர் ஸ்டீவ் ஜொப்ஸ் பிறந்தார். [/size]

[size=4] எனினும் அவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த கிளாரா மற்றும் போல் ஜொப்ஸ் ஆகியோரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்.[/size]

[size=4] கிளாரா மற்றும் போல் ஜொப்ஸ் தம்பதியினர் அதுவரை பெயரிடப்படாத தமது குழந்தைக்கு ஸ்டீவன் போல் ஜொப்ஸ் எனப் பெயரிட்டனர்.[/size]

[size=4] ஸ்டீவின் வளர்ப்புத்தந்தையான போல் ஓர் இயந்திரவியலாளர். அவர் தனது இயந்திரவியல் மற்றும் இலத்திரனியல் அறிவை ஸ்டீவுக்கு சிறுவயது முதலே ஊட்டத் தொடங்கினார்.[/size]

[size=4] தொலைக்காட்சிப்பெட்டி, வானொலிப்பெட்டி முதலானவற்றை எவ்வாறு கழற்றிப் பூட்டுவது என்பது தொடர்பில் ஸ்டீவுக்கு ஜொப்ஸ் கற்றுத்தந்தார்.[/size]

[size=4]அவர்களது வீட்டின் வாகனத்தரிப்பிடத்தில் இலத்திரனியல் பொருட்களுடன் விளையாடும் சிறுவனாக ஸ்டீவ் மாறியதுடன் இதுவே அவருக்கு பின்னாளில் இலத்திரனியல் பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படவும் காரணமாயிற்று.[/size]

[size=4]இளமைக்காலத்தில் வறுமை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பட்டப்படிப்பையும் இடையில் நிறுத்திவிட்டவர் ஸ்டீவ்.[/size]

[size=4]இதன்பின்னர் சிறிது காலம் ஆன்மிக வாழ்க்கையை நாடிய ஸ்டீவ் தன் நண்பரான வொஸ்னியாக்குடன் சேர்ந்து அப்பிள் நிறுவனத்தைத் தனது வீட்டு வாகனத்தரிப்பிடத்தில் ஆரம்பித்தார்.[/size]

[size=4] பல வெற்றிகரமான கண்டுபிடிப்பாளர்களைப் போன்று இவரும் தனது கண்டுபிடிப்புக்களை தனது வீட்டின் வாகனத்தரிப்பிடத்தில் ஆரம்பித்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4] இதனைத்தொடர்ந்து ஸ்டீவ் வாழ்வில் இடம்பெற்ற சில முக்கிய தருணங்கள் :[/size]

[size=4] 1976: அப்பிள் கணனியை ஏப்ரல் முதலாம் திகதி உருவாக்கினார். த அப்பிள் ஐ கணனி 666.66 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனைக்கு வந்தது.[/size]

[size=4] 1977: அப்பிள் நிறுவனம் கூட்டு நிறுவனமாக்கப்பட்டது. த அப்பிள் ஐ கணனி அறிமுகப்படுத்தப்பட்டது.[/size]

[size=4] 1978: ஸ்டீவ் ஜொப்ஸின் மகள் லிஸா பிறந்தார்.[/size]

[size=4] 1980: அப்பிள் நிறுவனம் முதல் முறையாகத் தனது பங்குகளை வெளியிட்டது. 110 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டிக் கொண்டது.[/size]

[size=4] 1982: அப்பிள் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாய் அதிகரித்தது.[/size]

[size=4] 1983: அப்பிளின் லிசா கணனிகள் விற்பனைக்கு வந்தன.[/size]

[size=4] 1984: அப்பிளின் மெகிண்டொஸ் கணனிகள் விற்பனைக்கு வந்தன.[/size]

[size=4] 1985: நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கூலி மற்றும் ஜொப்ஸ் இடையே மோதல், ஜொப்ஸ் மற்றும் வொஸ்னிஹக் ஆகியோர் அப்பிளில் இருந்து பதவி விலகினர்.[/size]

[size=4] 1986: ஜொப்ஸ், 'நெக்ஸ்ட்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததுடன், உயர் தொழில்நுட்பம் கொண்ட கணனிகளை பல்கலைக்கழகங்களுக்கெனத் தயாரிக்கத் தொடங்கினார்.[/size]

[size=4] 1989: முதலாவது நெக்ஸ்ட் கணனி விற்பனைக்கு வந்தது. விலை 6,500 அமெரிக்க டொலர்கள்.[/size]

[size=4] 1991: அப்பிள் மற்றும் ஐ.பி.எம். நிறுவனங்கள் இணைந்து கணனிகளுக்கான புதிய மைக்ரோபுரசசர்கள் மற்றும் மென்பொருட்களை உருவாக்கவுள்ளதாக அறிவித்தன.[/size]

[size=4] பவர்புக் என்றழைக்கப்படும் காவிச்செல்லக்கூடிய மெக்ஸ் கணனிகளை அறிமுகப்படுத்தின.[/size]

[size=4] ஜொப்ஸ், லொரன் பவல் என்பவரை சட்டப்படி மணந்தார்.[/size]

[size=4] 1996: ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அவரது குழு இணைந்து உருவாக்கிய நெக்ஸ்ட் நிறுவனத்தின் இயங்குதளத்தினை 430 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் திட்டத்தினை அப்பிள் அறிவித்தது.[/size]

[size=4] 1997: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாகப பதவியேற்றார்.[/size]

[size=4] 2000: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்றார்.[/size]

[size=4] 2001: முதல் ஐ பொட் விற்பனைக்கு வந்தது. ஐ டியூன்ஸ் மென்பொருளை வெளியிட்டது.[/size]

[size=4] இவ்வாறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தபோதிலும் ஸ்டீவ், தொழில்நுட்ப உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜொப்ஸ் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுத்தார்.[/size]

[size=4] ஸ்டீவின் வாழ்க்கை முடிந்தது எனப் பலரும் தெரிவித்த போதிலும் தனது பணியினை சரிவரச் செய்வதிலிருந்து அவர் தவறவில்லை. ஜொப்ஸ் 2006 ஆம் ஆண்டு டிஸ்னி நிறுவனத்தின் அதிகூடிய பங்குகளைக் கொண்ட தனி நபரானார்.[/size]

[size=4] இதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு அப்பிள் தனது முதல் கையடக்கத் தொலைபேசியான ஐ போனை வெளியிட்டது. கையடக்கத்தொலைபேசி வரலாற்றையே மாற்றியமைத்த சாதனமாக இதைக் குறிப்பிடலாம். அனைவரதும் அமோக வரவேற்பினைப் பெற்ற இது விற்பனையிலும் சாதனை படைத்தது.[/size]

[size=4] அப்பிளின் ஆதிக்கம் தொழில்நுட்ப உலகின் உச்சத்தை அடைந்து கொண்டிந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு ஜொப்ஸ் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுத்தார்.[/size]

[size=4] 2010, 2011 காலப்பகுதியில் ஸ்டீவின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. இதனையடுத்து 2011 ஜனவரி 17 அன்று ஜொப்ஸ் 2 ஆவது முறையாக மருத்துவ விடுமுறையில் செல்வதாக அறிவித்தமையானது ஸ்டீவ் தனது ஆயுட்காலத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதனைக் காட்டியது.[/size]

[size=4]இதன் அடுத்தபடியாக 2011 ஓகஸ்ட் 24 ஆம் திகதி ஜொப்ஸ் தான் அப்பிளின் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன்பின்னர் ஜொப்ஸை வெளியுலகினர் யாரும் காணமுடியாமல் போனதுடன் அவர் தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் பெரிதாக வெளியாகவில்லை[/size]

[size=4] இந்நிலையில் 2011 ஒக்டோபர் 5 ஆம் திகதி ஜொப்ஸ் காலமானதாக அவரது குடும்பத்தாரால் அறிவிக்கப்பட்டது.[/size]

[size=4] எனினும் அவரின் பூதவுடலின் புகைப்படம் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அவரது இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டனர்.[/size]

[size=4] மக்கள் விரும்பியதை உருவாக்கி சந்தையில் வெற்றி பெறுபவர் ஒரு ரகம் என்றால் தாம் உருவாக்கியதை மக்கள் விரும்பச் செய்வது இன்னொரு ரகம். அந்த வகையில் ஸ்டீவ் ஜொப்ஸ் இரண்டாவது ரகம்.[/size]

[size=4] அப்பிளின் புரட்சிகரக் கண்டுபிடிப்புகளை உலகமே ஏற்றுக்கொள்ள வைத்தவர் ஸ்டீவ்.[/size]

[size=4] ஸ்டீவ் கடும்போக்காளர், பிடிவாதக்காரர் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. எனினும் தனது புரட்சிகர கண்டுபிடிப்புக்களை மற்றையோர் ஏற்றுக்கொள்ள வைப்பது என்பது இலகுவானதொரு காரியம் அல்ல. இதனையே ஆங்கிலத்தில் 'You need to be rebellious to be innovative' என்று கூறுவார்கள்.[/size]

[size=4] தனது நவீன சிந்தனைகள் செயல்வடிவம் பெறுவதற்காக அவர் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இது அவரை சற்று கடும்போக்காளராகக் காட்டியது உண்மையே.[/size]

[size=4] எனினும் நாம் ஸ்டீவ் என்ற பெயரைச் சொன்னவுடன் ஞாபகம் வருவது அவரது கண்டிபிடிப்புகளே அன்றி அவரது குணாதியசங்கள் அல்ல.[/size]

[size=4] ஜொப்ஸின் விடாமுயற்சி மற்றும் உழைப்பினாலேயே அப்பிளின் ஐ பொட் முதல் ஐ போன் வரை உருவாகியமையை யாரும் மறுக்கமுடியாது. தற்போது சந்தை மூலதனத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமாக அப்பிள் உள்ளமைக்குக் காரணம் இவரது உழைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனையே ஆகும்.[/size]

[size=4] ஸ்டீவ் ஒரு கடும் உழைப்பாளி. புற்றுநோயால் போராடிக்கொண்டிருந்த தருணத்திலும் தனது நிறுவனத்தின் நலனிலேயே அவர் அக்கறை கொண்டிருந்தார். [/size]

[size=4] ஸ்டீவ் தொழில்நுட்ப பொறியியலாளராக இல்லாத போதிலும் பலருக்கு இல்லாத அசாத்திய அறிவுத் திறமை ஜொப்ஸுக்கு இருந்ததுடன் கண்டுபிடிப்பாளர், முயற்சியாளர், சிறந்த தலைவர், சிறந்த சந்தைப்படுத்துனர், சிறந்த பேச்சாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.[/size]

[size=4] "பசித்திரு. முட்டாளாயிரு" (Stay Hungry, Stay Foolish) என்ற ஸ்டீவின் அறிவுரையானது பல விடயங்களை எமக்குக் கற்றுத்தருகின்றது அதாவது பசித்திருக்கும் போது, பசிபோக்க வேண்டுமென்ற எண்ணம் அதற்கான வழிகளைத் தேடுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ணும். முட்டாளாயிருப்பதனால், ஒவ்வொரு பொழுதும் புதிய விடயங்களை அறிய வேண்டுமென்ற ஆவல் உண்டாகும்.[/size]

[size=4] இது போன்ற பல அர்த்தமுள்ள அறிவுரைகளை உலகுக்கு வழங்கியுள்ள ஸ்டீவின் மறைவு பேரிழப்பாகும். அவரின் மறைவு என்றுமே ஈடுசெய்ய முடியாததாகும்.[/size]

[size=4] தற்போது நாம் உபயோகப்படுத்தும் கணனி, குரலை இனங்காணும் தொழில்நுட்பமான 'Siri' , இணையம் போன்ற பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் தொடர்பாக 1983 ஆம் ஆண்டு ஆற்றிய உரையொன்றில் ஸ்டீவ் குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=4] இத்தகைய தூரநோக்கு சிந்தனையுடன் தொழில்நுட்பம் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் காலப்பகுதியிலேயே எதிர்வு கூறியவர்களில் ஸ்டீவ் ஜொப்ஸ் முதன்மையானவர்.[/size]

[size=4] ஜொப்ஸ் மறைந்த போதிலும் அவரின் ஒவ்வொரு புரட்சிகரப் படைப்பும் அவரை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும். அவர் போன்ற ஒரு புரட்சிகர சிந்தனைகளைக் கொண்ட, தலைமைத்துவப் பண்புடைய, தன்னம்பிக்கையின் முழு உருவமானதொரு நபரை தொழில்நுட்ப உலகம் மீண்டும் பெறுமா என்பது சந்தேகமே![/size]

[size=4]Kavinthan Shanmugarajah[/size]

http://www.virakesari.lk/article/technology.php?vid=60

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

[size=5]கல்வியை மேம்படுத்த ஒரு தனி மனிதனின் போராட்டம்[/size]

62 வயதாகும் T.K. சந்திரசேகரன் ஒரு போராளி. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (ஆர்.டி.ஐ) தன் ஆயுதமாக எடுத்துள்ளார். அதனைக் கொண்டு, கல்வித் துறை சார்ந்த சில தகவல்களை அவர் பெற்றுள்ளார். அரசுப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றுபவர்கள் அனைவரும் தம் குழந்தைகளை எந்தப் பள்ளியில் சேர்க்கிறார்கள்? எத்தனை சதவிகிதம் பேர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்? பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாவட்டக் கல்வி அதிகாரிக்கும் கடிதம் எழுதி சந்திரசேகர் இந்தத் தகவலைச் சேகரித்திருக்கிறார்.

[size=2]

[size=4]சந்திரசேகரன் ஏன் இந்தத் தகவலைச் சேகரிக்கத் தொடங்கினார்?[/size][/size]

[size=2]

[size=4]பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டவர் இவர். பின்னர் சில காலம் தனியார் துறையில் வேலை பார்த்துள்ளார். ஐந்தாண்டுகள் கனடா நாட்டில் வேலை செய்துள்ளார். பிறகு அதனை விட்டுவிட்டு இந்தியா வந்து, கல்வி சார்ந்த துறையில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்க விரும்பினார். அதற்கு ஓர் உந்துகோல் இருந்தது. அவருடைய ஒரு மகன் சிறு வயதிலேயே மூளைக் காய்ச்சலால் இறந்துபோயிருந்தான்.[/size][/size]

[size=2]

[size=4]சந்திரசேகரன் தேர்ந்தெடுத்தது சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில், விடியங்காடு பஞ்சாயத்தில் உள்ள தாமரைக்குளம் என்ற சிறு கிராமத்தை. அங்கு சென்று வசிக்கத்தொடங்கிய அவர் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். கணினிப் பயிற்சி மையம் ஒன்றை நிறுவினார். அதில் படிக்க யாருமே முன்வரவில்லை.[/size][/size]

[size=2]

[size=4]அந்த ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இவரது உதவியை நாடினர். பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்க யாரும் இல்லை. சந்திரசேகரனால் பத்து, பன்னிரண்டு வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர முடியுமா? சரி என்று செயலில் இறங்கினார் சந்திரசேகரன். அந்தப் பள்ளியின் சக ஆசிரியர்கள் சந்திரசேகரனை நட்புடன் வரவேற்றனர்.[/size][/size]

[size=2]

[size=4]பாடம் சொல்லித்தருவதோடு நிற்காமல், ஏன் ஆசிரியர்கள் இல்லை என்பதையும் ஆராயப் புகுந்தார் சந்திரசேகரன். அந்தப் பள்ளிக்கு நியமிக்கப்படும் பல ஆசிரியர்கள் பணிக்கே வருவதில்லை. சில மாதங்கள் அப்படியே இருந்துவிட்டு, மேலதிகாரிகளைக் கெஞ்சி எப்படியாவது டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு வேறு இடத்துக்குச் சென்றுவிடுவார்கள். பிறகு அடுத்த ஆசிரியரை நியமிக்க வெகு காலம் பிடிக்கும். அப்படி ஒருவர் வந்தாலும் அவரும் இதேபோல் பள்ளிக்கு வரமாட்டார். கதை இப்படியே செல்லும்.[/size][/size]

[size=2]

[size=4]பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களைக் கலந்தாலோசித்து அவர்களுடைய அனுமதியுடன் சந்திரசேகரன் ஒரு பெட்டிஷனை மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அனுப்பினார். அப்போது பிடித்தது சனி.[/size][/size]

[size=2]

[size=4]விவரம் தெரிந்த சில ஆசிரியர்கள் சந்திரசேகரனை அடிக்க வந்துவிட்டார்கள். ‘நீ யார்கிட்ட வேணாப் போய் கம்ப்ளெயின் பண்ணிக்கோ’ என்று அசிங்கமாகப் பேசினார்கள். அத்துடன் பள்ளி ஆசிரியர்கள் ஒன்றுசேர்ந்து அவரைப் பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். மாணவர்களுக்குக் கிடைத்து வந்த ஆங்கிலப் பாடமும் ஒழிக்கப்பட்டது. இது சந்திரசேகரன் மனத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தியது.[/size][/size]

[size=2]

[size=4]அப்போது தொடங்கியதுதான் இந்த ஆர்.டி.ஐ யுத்தம்.[/size][/size]

[size=2]

[size=4]ஏன் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள்? கை நிறையச் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அக்கவுண்டபிலிட்டியே இல்லையே? இவர்களுடைய பிள்ளைகள் எல்லாம் தனியார் பள்ளிகளில் படிப்பதால், இவர்கள் தம் பள்ளிகள் நாசமாகப் போவதைப் பற்றிக் கவலைப்படுவே இல்லையா? இதற்கான தகவலைத் திரட்டிப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும்.[/size][/size]

[size=2]

[size=4]அவர் பெற்ற தகவல்கள் மிகத் தெளிவான உண்மையைச் சொல்லின. ஆசிரியர்களின் 73% பேர் தம் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளுக்கே அனுப்புகின்றனர்.[/size][/size]

[size=2]

[size=4]இது ஒருபக்கம் இருக்க, உயர்நிலைப் பள்ளிகளை விட்டுவிட்டு தொடக்கப் பள்ளிகளை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினார் சந்திரசேகரன். சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, ‘ஹல்லோ இங்க்லீஷ்’ என்ற ஆங்கிலம் கற்றுத்தரும் 20 மணி நேரப் பாடம் கொண்ட டிவிடி, ஒரு டிவிடி பிளேயர் ஆகியவை கொடுக்கப்பட்டிருப்பதை செய்தித்தாளில் பார்த்துத் தெரிந்துகொண்டார். அருகில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று விசாரித்ததில் அந்த டிவிடியில் உள்ளதை மாணவர்களுக்குச் சொல்லித்தர ஒரு ஆசிரியருக்கும் தெரியவில்லை என்று தெரிந்துகொண்டார். ஆனாலும் குழந்தைகள் அந்த டிவிடியைப் போட்டுப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதை அவர் பார்த்தார். எனவே பள்ளிகளிடம் அனுமதி பெற்று இவரே அந்த டிவிடியில் உள்ள ஆங்கிலத்தை வரிவரியாகச் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார்.[/size][/size]

[size=2]

[size=4]அப்போது அக்கம் பக்கம் ஆடுமாடு மேய்த்துக்கொண்டிருக்கும் ஆசாமிகள் ‘ஐ! இந்தப் பள்ளிக்கூடத்த கான்வெண்டா மாத்திட்டாங்களா!’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டது இவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது.[/size][/size][size=2]

[size=4]*[/size][/size][size=2]

[size=4]ஒரு பக்கம் தனியார் கல்வி நிலையங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன; அரசுப் பள்ளிகளின் படிப்போரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. மறுபக்கம் அரசு விடாமல் மேலும் மேலும் பணத்தை அரசுப் பள்ளிகளில் கொட்டிக்கொண்டே இருக்கிறது.[/size][/size][size=2]

[size=4]ஒரு மேல்நிலைப் பள்ளியில் வெறும் 17 மாணவர்களே படிக்கின்றனர் என்கிறார் சந்திரசேகரன். இன்னொரு ஆரம்பப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை சேர்த்து மொத்தமே 23 மாணவர்கள்தான். அதில் மேலும் மோசம் புது ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் ஒரு புதிய மாணவர்கூடச் சேர்க்கை இல்லை. ‘ஓர் அரசுப் பள்ளியில் மொத்தமே இரண்டு மாணவர்கள் என்று தினமலரில் படத்துடன் செய்தி வந்துள்ளது’ என்கிறார் இவர்.[/size][/size]

[size=2]

[size=4]தனியார் பள்ளிகளில் மட்டும் கல்வியின் தரம் நன்றாக இருக்கிதா என்று நான் அவரிடம் கேட்டேன். ‘நிச்சயமாக அரசுப் பள்ளிகளைவிடச் சிறப்பாகத்தான் உள்ளது’ என்கிறார் அவர். ‘பள்ளிகளில் மட்டுமல்ல, கல்லூரியிலும் அப்படித்தான். வாலாஜாவில் அறிஞர் அண்ணா கல்லூரி என்று பெண்களுக்கான பிரத்யேக அரசுக் கல்லூரி[/size][size=4]உள்ளது. ஆனால் அங்கு லெக்சரர்களே கிடையாது. வாலாஜா, ராணிப்பேட்டை, ஷோலிங்கர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு 8,000 ரூபாய் கட்டணம் என்றாலும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஏதோ கொஞ்சமாவது சொல்லித் தருகிறார்கள். எங்கள் ஊரில் 12வது படித்தவுடனே பெண்களுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள். ஏன் என்றால் வேலை எதுவும் கிடையாது. ஆனால் இப்போது இந்தத் தனியார் கல்லூரிகள் இருப்பதால் பெண்களை பி.ஏ, பி.காம் என்று எதையாவது படிக்க அனுப்புகிறார்கள்’ என்கிறார் இவர்.[/size][/size]

[size=2]

[size=4]இந்த அளவு கல்வித்துறை சீரழிந்துவருகிறதே, இதற்கு என்னதான் மாற்று என்று நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். கீழ்க்கண்டவற்றையெல்லாம் செய்யவேண்டும் என்பது அவருடைய பதில்.[/size][/size]

  • [size=4]அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஆகவேண்டும் என்றால் அவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கட்டாயம் அரசுப் பள்ளியில்தான் படிக்கவைக்கவேண்டும் என்று வேலை விதியை (Service Rule) உருவாக்கவேண்டும்.[/size]
  • [size=4]மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் என்ன தெரிந்துவைத்திருக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு எவால்யுவேஷன் பரீட்சை வைத்து, அதில் அவர்கள் தேறவில்லை என்றால், ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியரையும் காரணம் கேட்டு, அவர்களுக்குத் தண்டனை தரவேண்டும்.[/size]
  • [size=4]சுற்றியுள்ள மாநிலங்களில் ஆசிரியர்களுக்கு என்ன சம்பளம் என்று பார்த்து நாம் அதிகமாகச் சம்பளம் தருகிறோமா என்பதை ஆராயவேண்டும்.[/size]
  • [size=4]கிராமப்புறத்திலிருந்து வரும் பொறியியல் மாணவர்கள் வேலைக்கு லாயக்கற்றவர்கள் என்பதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அது கிராமப்புற மாணவர்களைக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. ஆனால் இந்த நிலைமைக்கு யார் காரணம்? மாணவர்களா அல்லது ஆசிரியர்களா? குற்றம் முழுதுமே ஆசிரியர்கள்மீதுதான். எனவே இதற்காகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டியது ஆசிரியர்கள்மீதுதான்.[/size]
  • [size=4]ஸ்கூல் சாய்ஸ் சிஸ்டம் (School Choice System) என்ற ஐடியாவை Centre for Civil Society என்னும் அமைப்பு முன்வைத்துள்ளது. அதைக் கேள்விப்பட்டு அதனைப் பற்றிப் படித்துப் பார்த்தேன். அதுகுறித்து முதல்வருக்குக் கடிதமும் எழுதியுள்ளேன். (கீழே இணைக்கப்பட்டுள்ளது.)[/size]

[size=2]

[size=4]ஸ்கூல் சாய்ஸ் சிஸ்டம் என்பது சரியாக வேலை செய்யும் என்று நினைக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டேன். ‘நாம் பல பரிசோதனைகளைச் செய்து பார்க்கவேண்டியுள்ளது. ஏதாவது ஒன்று வேலை செய்யும் என்று நம்புகிறேன்’ என்று பதில் அளித்தார் அவர்.[/size][/size]

[size=2]

[size=4]அவர் இருக்கும் பகுதியிலிருந்து 28 கிமீ தொலைவில் அரசியல்வாதி ஒருவரால் ஒரு தனியார் பள்ளி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறதாம். ஏசி வேனில் இவருடைய கிராமம் வரை வந்து குழந்தைகளை அழைத்துப்போகிறார்கள். ஆனால் ஆண்டுக் கட்டணம் ரூ. 80,000/- ‘பணம் உள்ளவர்கள் எப்படியாவது படித்துப் பிழைத்துவிடுவார்கள். பிரச்னையே ஏழைகளுக்குத்தான்’ என்றார்.[/size][/size]

[size=2]

[size=4]இவருக்குப் பெயரே ‘பெட்டிஷன் மாஸ்டர்’ என்பதுதானாம். சுற்றியுள்ள மக்கள் தன்னை ‘பைத்தியக்காரன்’ என்று அழைக்கிறார்கள் என்றார். ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஒரு சிக்கல் என்றால் இவரிடம் வந்து பெட்டிஷன் எழுதித் தரச் சொல்லிப்போவதுதான் அவர்களுடைய வழக்கம். உள்ளூரில் ஆங்கன்வாடிக்குச் சரியான நபரைப் போடாததை எதிர்த்து கிராம மக்கள் சார்பில் போராடி, மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார். ஆனால் யார் தவறு செய்தாலும் அதனை இவர் எதிர்ப்பதால் இவருடைய பாபுலாரிட்டி அடிமட்டத்தில்தான் உள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]ஆனாலும் தைரியமாகத் தேர்தலில் நின்றுள்ளார். சென்ற ஆண்டு நடந்துமுடிந்த பஞ்சாயத்துத் தேர்தலில் விடியங்காடு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு நின்றார். தேர்தலில் நின்றது மொத்தம் மூன்று பேர். இவர் செலவு செய்தது ரூ. 4,100. கிடைத்த வாக்குகள் 181. கிடைத்த இடம் மூன்றாவது. இரண்டாவது இடத்துக்கு வந்தவர் ஒரு ரைஸ்மில் ஓனர். செய்த செலவு ரூ. 13 லட்சம். பெற்ற வாக்குகள் சுமார் 1,500. முதலிடம் வந்து பஞ்சாயத்துத் தலைவரானவர் செய்த செலவு ரூ. 9 லட்சம். பெற்ற வாக்குகள் சுமார் 1,700.[/size][/size]

[size=2]

[size=4]போட்ட செலவுக்குப் பணத்தை ரெட்டிப்பாகப் பெறவேண்டுமே. என்ன செய்தாரோ தெரியாது. ஆனால் பஞ்சாயத்துத் தலைவர்மீது ஏதோ குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, காசோலையில் கையெழுத்திடும் உரிமை அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. சந்திரசேகரனுக்கு வாக்களித்திருந்தால் அவர் ஒரு பைசா திருடியிருக்க மாட்டார் என்று பொதுமக்களே வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.[/size][/size]

[size=2]

[size=4]அப்படியானால் அடுத்த தேர்தலில் நீங்கள்தானே கட்டாயம் ஜெயிக்கப்போகிறீர்கள் என்றேன். ‘உயிரோடு இருந்தால்…’ என்று பதில் சொன்னார். ‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பதில் பெரும் விரக்தி ஏற்பட்டு, சென்ற டிசம்பரில் நெஞ்சு வலி வந்து, பை பாஸ் சர்ஜரி நடந்தது. இப்போதுதான் மீண்டு வந்துகொண்டிருக்கிறேன். இன்னும் முழுதாக வீட்டை விட்டு வெளியே போகத் தொடங்கவில்லை. மேலும் நான் எல்லோரையும் பகைத்துக்கொண்டுள்ளேன். யதார்த்தவாதி வெகுஜன விரோதி…’ என்றார்.[/size][/size]

[size=2]

[size=4]ஆனால் அவர் தன் நம்பிக்கையை இழக்கவில்லை. மாற்றம் கட்டாயம் வரும் என்று நம்புகிறார். அந்த மாற்றம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்கிறார். ‘தினம் தினம் ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒரு ஜனநாயகம் முதிர்ச்சி அடையக் குறைந்தது 100 ஆண்டுகளாவது ஆகும் என்கிறார்கள். நமக்குச் சுதந்தரம் வந்து 65 ஆண்டுகள்தானே ஆகியுள்ளன. தொடர்ந்து அடிமேல் அடி கொடுத்துக்கொண்டே இருப்போம். மாற்றம் வந்துவிடாதா என்ன?’ என்கிறார்.[/size][/size]

[size=2]

[size=4]மாற்றம் வந்துவிடாதா என்ன?[/size][/size][size=2]

[size=4]*[/size][/size]

[size=4]
சந்திரசேகரன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்

அனுப்புனர்: தா.கோ.சந்திரசேகரன்,

5/894, தாமரைக்குளம் கிராமம் அஞ்சல்

(வழி) எரும்பி, பள்ளிப்பட்டு வட்டம்,

திருவள்ளூர் மாவட்டம், 631302
[/size]

[size=4]
பெறுநர்: மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,

தலைமைச்செயலகம்

சென்னை 600009
[/size]

[size=4]
பொருள்
: கல்வி அளிக்கும் முறையில் ஒரு புதிய அணுகுமுறை.
[/size]

[size=4]
தமிழக அரசு கல்வி அளிப்பது பற்றி பல்வேறு முறைகளை ஆராய்ந்து அவைகளை செயல்படுத்தி வருகிறது. கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் புதிய வசதிகள் மாணவ/மாணவியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டும், நகரங்களில் உள்ள பள்ளிகளில் புதிய வசதிகள் மற்றும் மேலும் ஆசிரியர்கள்/ஆசிரியைகள் நியமனங்கள் செய்தும் முயற்சிகள் பல எடுக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் தான் படிக்க வைக்க விருப்பம் உள்ளவர்களாக இருப்பதால் அரசுக்கு வீண் செலவு தான் ஆகிறது.
[/size]

[size=4]
இதற்கு மாற்றாக புதுடெல்லியில் உள்ள School Choice System முறையை தாங்கள் அறிந்து கொண்டு இது நல்ல முறையில் பயன்படுமா என யோசிக்கலாம். அவர்கள் கொடுத்துள்ள துண்டறிக்கையை இணைத்துள்ளோம். விலாசம் கீழ்க்கண்டவாறு:
[/size]

[size=4]
School Choice Campaign

Centre for Civil Society

A-69, Hauz Khas, New Delhi 110 016

Ph: 011-2653 7456/ 26521882, Fax: 011-2651 2347
[/size]

[size=4]
Email:
[/size]

[size=4]
இம்முறையை சுருக்கமாக சொன்னால் அரசாங்கம் ஒவ்வொரு குழந்தையிடமும் படிப்புக்கு செலவழிக்கும் பணத்தை கணக்கிட்டு ஒரு வவுச்சர் கொடுத்து விடும். அக்குழந்தையின் பெற்றோரகள் அந்த வவுச்சரை தங்களுக்குப் பிடித்த பள்ளியில் கொடுத்துவிட்டு படிக்க வைப்பார்கள். சொல்லிக்கொடுப்பது சரியில்லை என்றால் வேறு பள்ளிக்கு அந்த வவுச்சரை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். எனவே பள்ளிக்கல்வியளிப்பதில், அதாவது அந்த வவுச்சரைப் பெறுவதில், (பணத்தைப் பெறுவதில்) போட்டிகள் உருவாகி நல்ல கல்வியளிக்கும் பள்ளிகள் பல உருவாகும். இம்முறை பல நாடுகளிலும் உள்ளது என அறிகிறோம்.
[/size]

[size=4]
தாங்கள் இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பள்ளிக்குழந்தைகள் சிறந்த கல்வி பெற வழிமுறைகள் செய்திட வேண்டுகிறோம்.
[/size]

[size=4]
இங்கனம் உண்மையுடன்,

தா.கோ. சந்திரசேகரன்

12/10/2012
[/size]

http://www.tamilpaper.net/?p=6967&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+tamilpaper%2FQQvv+%28TamilPaper%29

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.