Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழனை கொல்லலாம் ஆனால் மிருகபலி கொடுக்க கூடாது- பிக்குகளின் காரூண்யம்.

Featured Replies

சிலாபம், முன்னேஸ்வரம் காளி கோயிலில் வருடாந்தம் இடம்பெறும் மிருகபலிப் பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்குகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கோயிலுக்கு முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெருமளவாள புத்தபிக்குகள் ஈடுபட்டுள்ளோர். மிருகபலிக்கு எதிராக புத்தபிக்குகளின் காரூண்யம் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் இதே பிக்குகள்தான் தமிழர்களை கொல்ல வேண்டும் என போர்க்கொடி பிடித்திருக்கிறார்கள்.

http://thaaitamil.com/?p=30139

  • கருத்துக்கள உறவுகள்

இது பிக்குகளின் காரூனியம் மட்டுமல்ல மேற்கு நாட்டவர்களின் காரூனியமும் இதுதான் :D

[size=3]எழுத்து பிழை திருத்தி உள்ளேன் [/size]

Edited by தமிழரசு

அவர்கள் இதை புத்தத்தை பரப்ப ஒரு வழி முறையாகவே செயல்படுத்தி வருகிறார்கள். இத பின்னணி இந்துசமயம் ஒரு காட்டிமிராண்டி சமயம் என்பதும் மக்கள் அதை கைவிட அரசு தலையிட வேண்டும் எனபதும் அவர்களின் வற்புறுத்தல். இல்லையேல் தாங்கள் பள்ளிவசல்களை உடைக்குமாப்போல் தங்கள் பலத்தை காட்டியே தீருவார்கள். இது பல வழிகளில் இந்துகள், நாடு அடங்களும், பௌத்த நடத்தைகளை பின்பற்ற வேண்டும் என்ற ஆர்பாட்டத்திற்கு முன்னரங்கு.

இதை B.B.C. ஊடகவியலார் தான்தோன்றித்தனமான மேர்வில் சில்வாவின் தலைமையின் கீழ் சமய சுதந்திரத்தில் ஈடுபடுதல் என்று பொருள் பட எழுதியிருந்தார். புத்த சமயத்தில் கொல்ல முடியாது ஆனால் உண்ணலாம் எனது பிக்குகளின் வாதம். இதை வருங்க்காலங்களில் இந்துக்கள் பின்பற்ற வேண்டும்

வேள்விக்கும் மூடிய அறையில் 1000,-2000 மிருகங்களை கொல்வதற்கும் சமய விளக்கத்தில் வேறுபாடு இல்லை. இரண்டிலும் மிருகங்கள் வேதனை இன்றி ஒருதடவையில் கொல்லப்படுகின்றன. ஆனால் மேற்கு நாட்டு நாகரிகத்தில் மூடிய அறை, திறந்த இடம் இரண்டுக்கும் நாகரிக வேறுபாடு உண்டு. இதற்கும் சமயத்திற்கும் தொடர்பு கிடையாது. இந்தக் கோட்பாடு புத்ததில் கிடையாது. அதில் காணப்படுவது பிக்குளின் குழப்ப சிந்தனை.

நான் வாழ்நாள் முழுவதும் சுத்தசைவமாக சாப்பிட்டு வாழ்ந்தவன்-வாழ்பவன். ஆனால் வேள்வி சமையத்தின் ஒருபகுதி.அதை ஏற்பதும் தள்ளிவிடுவதும் எனது சுதந்திரமாக இருக்க வேண்டும். தற்கால நாகரிகத்தில் அதை கைவிடுதல் அந்த சமயத்தை பின்பற்றும் மக்களின் முடிவாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க மரக்கறியா அண்ணா? உங்கள் வாழ்கையில பாதிய இழந்திட்டிங்க போங்க

நீங்க மரக்கறியா அண்ணா? உங்கள் வாழ்கையில பாதிய இழந்திட்டிங்க போங்க

இந்த பிறவின் பாதி வாழ்க்கையை மட்டுமல்ல மற்ற பிறவி வாழ்க்கை எல்லாவற்றையுமல்லவா இந்து சமயம் இழக்க வேண்டும் என்கிறது.

அப்போ நான் கிட்ட கிட்ட....? :D

Edited by மல்லையூரான்

'ஜனாதிபதி உத்தரவிட்டால் மிருகபலியை நிறுத்தமுடியும்'

120826142843_protest_in_negombo_munneswaram_against_animal_sacrifice_144x81_bbc_nocredit.jpg

இலங்கையில் வடமேல் மாகாணத்தில் சிலாபம் நகருக்கு அருகே அமைந்திருக்கின்ற புகழ்பெற்ற முன்னேஸ்வரம் காளிகோயிலில் எதிர்வரும் முதலாம் திகதி மிருகபலி பூஜையை நடத்தக் கூடாது என்று பௌத்த அமைப்புகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன.

இந்த நிலையில், ஆண்டாண்டு காலமாக தாம் நடத்திவரும் மிருகபலி பூஜை மற்றும் வேள்வியை இம்முறையும் நடத்துவதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தாம் ஏற்கனவே கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

வேள்வி பூஜையை நடத்தக்கூடாது என்றுஅமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினரிடமிருந்து தமக்கு வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு பூஜையை நடத்தக்கூடாது என்று தம்மிடம் கூறினால் அதனை ஏற்கத்தயார் என்று கோயிலின் தலைமை மதகுரு காளிமுத்து சிவபாதசுந்தரம் பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.

பெளத்த அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

இன்று காலை முன்னேஸ்வரம் கோயிலின் திருவிழா பூஜைகள் நடந்துகொண்டிருந்தபோது, சிலாபம் நகரிலிருந்து கோவில் முன்றலுக்கு ஊர்வலமாக வந்த பௌத்த பிக்குகள் அடங்கலாக நூற்றுக்கணக்கானோர் கோயிலில் மிருகபலி பூஜையை நடத்தக்கூடாது என்று கோசமிட்டார்கள்.

முன்னேஸ்வரம் சிவன் கோயில் முன்றலில் நின்று கோசமிட்டவர்கள் பின்னர் பலிபூஜை நடக்கவுள்ள காளிகோயில் பகுதிக்குள் நுழையமுற்பட்டபோது அதற்கு அங்கு கூடியிருந்த பொலிசார் அனுமதிக்கவில்லை என்று கோயில் நிர்வாகத்தினர் பிபிசி தமிழோசையிடம் கூறினா்.

அதன்பின்னர் திரும்பிச்சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் திரும்பிவந்து தகராற்றில் ஈடுபடமுனைந்த போது, அவர்களுக்கும் அங்கு கோயிலில் கூடியிருந்த பொதுமக்களுக்கும் இடையே முறுகல்நிலை ஏற்பட்டபோது பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியதாக அங்கு நின்ற உள்ளூர் செய்தியாளர்கள் கூறினர்.

ஜாதிக்க சங்க சம்மேளனய என்கின்ற பௌத்த அமைப்பைச் சார்ந்தவர்கள் நடத்திய இந்த ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் தெற்கே காலி, மாத்தறை, தங்கல்ல போன்ற தூர பிரதேசங்களிலிருந்து 6 பஸ்களில் வந்தவர்களே கலந்துகொண்டதாகவும் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

மேர்வின் சில்வா

கடந்த ஆண்டில் முன்னேஸ்வரம் காளிகோயிலில் மிருகபலி கொடுப்பதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.

அவ்வேளையில் கோயில் வளாகத்துக்குள் சென்ற அமைச்சர் மேர்வின் சில்வா, அங்கு பலி பூஜைக்காக காத்திருந்த மிருகங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பூஜையை தடுத்திருந்தார்.

இம்முறையும் இந்த பலிபூஜை நடக்கக்கூடாது என்றும் அப்படி நடந்தால் அதனை தான் தடுக்கவுள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய முன்னேஸ்வரம் காளி கோயிலின் தலைமை மதகுரு காளிமுத்து சிவபாதசுந்தரம், பலிபூஜையை தடுப்பதன் மூலம் தமது பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் தலையிடுவதாக சுட்டிக்காட்டினார்.

காவல்துறையின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் முதலாம் திகதி பலிபூஜை நடத்துவதற்கு தமது கோயில் பக்தர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதிக்கு இந்தப் பிரச்சனை பற்றி அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி நேரடியாக தமது பலிபூஜை வேள்வியை நிறுத்தச் சொன்னால் அதனை ஏற்கமுடியும் என்றும் காளிமுத்து சிவபாதசுந்தரம் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk...nneswaram.shtml

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/08/120826_munnes.shtml

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

Muniswaram.jpg

முதலில்... இந்த பிக்குகளை, பலி கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Muniswaram.jpg

முதலில்... இந்த பிக்குகளை, பலி கொடுக்க வேண்டும்.

வசதிப்பட்டால், அகாசியையும் சேர்த்து விடவும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.