Jump to content

காலி சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் மீது வன்முறைகள் - கோமா நிலையில் இளைஞர் வைத்தியசாலையில் :


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலி சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் மீது வன்முறைகள் - கோமா நிலையில் இளைஞர் வைத்தியசாலையில் :

27 ஆகஸ்ட் 2012

வவுனியா சிறைச்சாலையினை தொடர்ந்து காலி சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது கடந்த வாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. தமிழ் அரசியல் கைதிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைத்தாக்குதலில் கோமா நிலையில் மயக்கமுற்ற இளைஞரொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்தே உண்மைகள் வெளிவந்துள்ளது.

யாழ்ப்பாணம் கண்டி வீதி கொடிகாமம் பகுதியை சேர்ந்தவரான சுந்தரம் சதீஸ்குமார் (வயது34) என்பவரே இவ்வாறு கோமா மயக்க நிலையில் காலி களுவாப்பிட்டிய அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திருமணமான இவருக்கு கவிதா எனும் மனைவியும் சாகித்யா எனும் சிறு குழந்தையும் உண்டு.இது வரை காலமும் புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் கடந்த 21ம் தகிதியே காலி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 24ம் திகதி வெள்ளிக்கிழமை வழைமை போன்று தனது கணவனை பார்வையிடப்போன கவிதாவிற்கு அவர் காலி சிறைக்கு மாற்றஞ்செய்யப்பட்டமை தொடர்பாக அறியத்தரப்பட்டது. அதையடுத்து காலி நிறைக்கு தேடி சென்றவேளையிலேயே கோமா நிலையினில் தனது கணவரை அவர் கண்டுள்ளார். எனினும் தாக்குதலுக்குள்ளானவர்களில் ஏனையோர் பற்றியோ தகவல்களை பெறமுடியாதுள்ளது.எனினும் பலர் சிகிச்சை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையினில் சிறைகளள் தடுத்து வைக்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82089/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

இதை கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் வெளியிட வேண்டும். கிழக்கு மாகாணத்தேர்தலில் மக்களுக்கு அறியக்கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

[size=5]சுயநினைவற்ற தமிழ் அரசியல் கைதி சதீஷ்குமாரை உடன் கொழும்புக்கு கொண்டுவாருங்கள்: மனோ கோரிக்கை[/size]

[size=4]மருத்துவமனையில் சுயநினைவு அற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதி சதீஷ்குமாரை உடனடியாக காலி கராபிட்டிய மருத்துவமனையிலிருந்து கொழும்பு பொது மருத்துவமனைக்கு கொண்டுவர ஆவன செய்யும்படி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவை தான் கோரியுள்ளதாக மக்கள் கண்காணிப்பு குழு அமைப்பாளரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,

கொழும்பு மகசின் சிறைசாலையிலிருந்து வழக்கு விசாரணைக்காக காலி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சுந்தரம் சதீஷ்குமார் என்ற தமிழ் அரசியல் கைதி வலது காது பகுதியில் கட்டு போடப்பட்ட நிலையில் தற்போது காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கீழே விழுந்ததால் இந்த காயம் ஏற்பட்டதாக, நேற்று அவரை சென்று பார்வையிட்ட கைதியின் மனைவியிடம் அதிகாரிகள் தெரிவித்ததாக, கைதியின் மனைவி என்னிடம் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட தமிழ் கைதிகள் நிமலரூபன், டில்ருக்ஷன் ஆகியோரை அடுத்து தற்போது சதீஷ்குமாருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை, தமிழ் அரசியல் கைதிகளின் பரிதாப நிலைமையினை படம்பிடித்து காட்டுகின்றது.

கொழும்பிலிருந்து நல்ல நிலைமையில் வழக்கு விசாரணைக்காக காலிக்கு அழைத்து செல்லப்பட்ட இந்த கைதி, எவ்விதம் சுயநினைவற்ற நிலைமையில் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதுபற்றி குழப்ப நிலை நிலவுகின்றது. அவரது வழக்கை முன்னெடுக்கும் சட்ட மற்றும் மனிதவுரிமை நிறுவனத்திற்கும் நான் இதுபற்றி அறிவித்துள்ளேன்.

கொடிகாமத்தை பிறப்பிடமாக கொண்ட சதீஷ்குமாரின் மனைவி வவுனியாவை சேந்தவர். மக்கள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினரும், நாடாளுமன்ற உருப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனின் கவனத்திற்கு, கைதியின் மனைவி இது தொடர்பில் தகவல்களை அறிவித்த நிலையிலேயே, இந்த விடயம் எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக தகவல்களை நாம் எதிர்நோக்கி உள்ளோம்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/47455-2012-08-27-10-01-10.html

Link to comment
Share on other sites

[size=6]Another brutal attack sends Tamil political prisoner to coma[/size]

[size=5]Following the attack on the Eezham Tamil prisoners in Vauniyaa resulting in the death of two and injury of many, details of the case of a new attack in the Galle prison last week, leaving a prisoner in coma status and others suspectedly injured, have started trickling out now. The Tamil prisoner in coma is identified as 34-year-old Sundaram Satheeskumar, father of a 10-year-old child. The victim was arrested at his residence in Kodikaamam in 2008 by the occupying SL military, handed over to the SL police and was kept in the New Magazine prison in Colombo without any charges filed against him. Last week, on 21 August, he was transferred to the Galle prison.

When his wife, Ms. Kavitha and his 10-year-old daughter Sahitya went to see him on Friday, they were told of the transfer, and when they went to Galle, the family found him in a state of coma admitted in the Karapitiya hospital in Galle.

SL prison authorities in Galle prion had also attempted to get signature from the wife of the victim in documents in Sinhala. Kavitha had refused to put her sign on papers, informed sources told media.

The prisoner had sustained serious injuries to his head in addition to other injuries elsewhere in his body that revealed brutal torture meted out to the victim, the sources further said.

In the meantime, unconfirmed reports said that the SL prison authorities have denied treatment to other prisoners who had sustained injuries.[/size]

http://tamilnet.com/art.html?catid=13&artid=35503

Link to comment
Share on other sites

[size=4]The victim was arrested at his residence in Kodikaamam in 2008 by the occupying SL military, handed over to the SL police and was kept in the New Magazine prison in Colombo without any charges filed against him.
[/size]

[size=4]சிங்களத்தால் சிறையில் வைத்து தாக்கப்பட்டு கோமாவில் உள்ள இவர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக மேலே உள்ள செய்து கூறுகின்றது.[/size]

[size=4]சில இடத்தில் இவர் கொழும்பில் கைதானபொழுது [/size][size=4]சயனைட் கடித்தாதாக கூறப்படுகின்றது.[/size]

[size=4][size=4]எது உண்மை?[/size][/size]

Link to comment
Share on other sites

[/size]

[size=4]சிங்களத்தால் சிறையில் வைத்து தாக்கப்பட்டு கோமாவில் உள்ள இவர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக மேலே உள்ள செய்து கூறுகின்றது.[/size]

[size=4]சில இடத்தில் இவர் கொழும்பில் கைதானபொழுது [/size][size=4]சயனைட் கடித்தாதாக கூறப்படுகின்றது.[/size]

[size=4][size=4]எது உண்மை?[/size][/size]

அடித்து போட்டு ஆபத்தான நிலை வந்த பின்னர் சயனட்டை ஏற்றியிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

[size="4"]The Tamil prisoner in coma is identified as 34-year-old Sundaram Satheeskumar, father of a 10-year-old child. The victim was arrested at his residence in Kodikaamam in 2008 by the occupying SL military, handed over to the SL police and was kept in the New Magazine prison in Colombo without any charges filed against him. [/size]

[size=4]சிங்களத்தால் சிறையில் வைத்து தாக்கப்பட்டு கோமாவில் உள்ள இவர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக மேலே உள்ள செய்து கூறுகின்றது.[/size]

[size=4]சில இடத்தில் இவர் கொழும்பில் கைதானபொழுது [/size][size=4]சயனைட் கடித்தாதாக கூறப்படுகின்றது.[/size]

[size=4][size=4]எது உண்மை? [/size][/size]

சதீஸ் செத்துக் கொண்டிருக்கிறான்.

2008ம் ஆண்டு கொழும்பில் கைதாகி சயனைட் உட்கொண்டு உயிர் தப்பவைக்கப்பட்ட சுந்தரம் சதீஸ் வழக்கிற்காக கழுத்துறைக்கு 21.08.2012 கொண்டு செல்லப்பட்டான். காரணம் தெரியாது காயங்களுடன் மரணப்படுக்கையில் கிடக்கிறான். அவனுக்கு என்ன நடந்ததென்றது புதிராகவே இருக்கிறது. சுயநினைவை இழந்து போயிருக்கிறான்.

வழக்கிற்காக வளமையாக காலிக்கு போய் வருகிறவனுக்கு என்ன நடந்தது ?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107184

Link to comment
Share on other sites

[/size]

[size=4]சில இடத்தில் இவர் கொழும்பில் கைதானபொழுது [/size][size=4]சயனைட் கடித்தாதாக கூறப்படுகின்றது.[/size]

[size=4][size=4]எது உண்மை?[/size][/size]

[size=6]Posted 04 November 2010 - 12:49 PM[/size]

Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்…..

அழைப்பில் போனதும்…அக்கா…..எங்கை சத்தத்தை காணேல்ல….? என அவன்தான் பேச ஆரம்பிப்பான். எப்பிடியிருக்கிறீங்கள்….? வளமையான எனது விசாரிப்புக்கான பதிலாக அன்றும் சிரித்தபடி சொன்னான். உயிரோடை இருக்கிறனக்கா….காதொண்டு கேக்குதில்லை…ஒரே வலியாக்கிடக்கு…..என்றான். அப்ப மருந்தெடுக்கேல்லயா….? எங்களுக்கென்னக்கா மருந்து பனடோல்தான் தருவினம். அதையும் சிரித்தபடிதான் சொன்னான்.

ஆரும் கதைச்சவையோக்கா ? அவனது விசாரணைகளுக்கு பதில் சொல்லி முடியச் சொன்னான். முயற்சியை விடாதையுங்கோக்கா….! இருக்கிற கடைசி நம்பிக்கை நீங்கள்தான்…..! எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குதக்கா….! கட்டாயம் வெளியில வருவன்….! நானும் வாழ்ந்து காட்டுவன்….! சற்று அழுத்தமாகச் சொன்னான். இந்த நம்பிக்கையோடையிருங்கோ… கடைசிவரையும் முயற்சிப்போம்…. நம்பிக்கை உடையாத அவனது நம்பிக்கைக்கு உறுதியாய் சொன்னேன். அதற்கும் அவனது பதில் சிரிப்பாகத்தான் வந்தது.

இவனா இதுவெல்லாம் செய்தான் ? அதிசயிக்கும்படியாகவே அவனை விசாரணை செய்வோரெல்லாம் வினவுவார்களாம். இன்று ஏன்….? எதற்காக…..? எதுவும் புரியாது தண்டனை பெறும் தனது விதியைப்பற்றியும் இந்த விதியை எழுதியோர் பற்றியும் பேசுகின்ற போது எல்லைமீறிய கோபங்களை பொல்லாத சொற்களால் சபித்துக் கொள்வான்.

எத்தனையோ சாதனைகளின் பின்னின்ற சரித்திரம் அவன். அவன் படைத்த வெற்றிகளுக்காக வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சந்தோசங்களைப் பரிமாறும் முகமாக அவனுக்கு அவசரத்தபால்களில் கிடைத்த இனிப்புகள் அனுப்பியவர்களின் பாசம் நடிப்பாகிப்போனது பற்றி நிறையவே வலியுற்று அழுதிருக்கிறான்.

வெளியில் இருந்தவரை வாழ்த்துக்களும் அவனுக்குச் சூட்டப்பட்ட அடையாளங்களும் இன்று அசுமாத்தமின்றிப் போனது மட்டுமில்லாமல் ஒரு ஆறுதலுக்குக் கூட அவனுடன் பேசாமல் பதுங்கிக் கொண்டு விட்டார்கள். அவரவர் சொத்துக்களுடனும் தங்கள் சுகபோக வாழ்வுகளுடனும் மிதக்க இவனோ பலகோடிகள் கையில் புரண்டபோதெல்லாம் இலட்சியங்களுக்காக ஒரு துறவியாகவே மாறியதை நினைக்கின்ற போது எரிச்சலாகத்தானிருக்கும்.

கடைசிவரை கம்பிகளுக்குள் வரும்வரை அவன் வாழ்ந்தது தன்னை வருத்தியது யாவும் கனவுகளுக்காகவே என்பதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் அவனது தொடர்புகளையெல்லாம் அறுத்துக்கொண்டு சுயநலங்களாய் மாறிப்போனவர்களையெல்லாம் தனது கோபம் அடங்கும் வரை திட்டித்தீர்ப்பான். இவங்களை நம்பின என்னைச் செருப்பாலையடிக்க வேணுமக்கா….என வெறுப்போடும் வேதனையோடும் சொல்லிக் கொள்வான்.

வீரமாய் வெளிநாடுகளிலிருந்து அவர்கள் பற்றி அவரவர்களின் கற்பனைகளுக்கு ஏற்ப கதையளந்த ஆய்வாளர்களையும் ஊடகப்புயல்களையும் காணுமிடத்துக் கொன்றுபோடும் கோபம் அவனிடமிருக்கிறதைக் கூறும்போது…, ஓர் இயலாமையை தன்னால் எதையும் செய்ய முடியாத ஆற்றாமையை வெளிப்படுத்தும் அவனது குரல்.

என்று வீட்டை விட்டுப்போனானோ அன்றிலிருந்து அந்தக் கொடிய விடியற்காலைவரை அவன் மிடுக்கோடும் இலட்சியத் துடிப்போடுமேயிருந்தான். காற்று நுளையாத இடங்களிற்குள் எல்லாம் சென்று அவன் மூச்சையே நிறுத்திவிட்டு வந்ததையெல்லாம் கதைகளாய் எழுதுவதாயின் அதுவே ஒரு பெரும் வரலாறு நிறைந்த திகில்.

ஆனால் இன்று அவன் வேண்டுவதெல்லாம் தனது விடுதலை. எதுவுமே அறியாத அவனது காதல் மனைவியும் அவன் தன்னிலும் மேலாய் நேசிக்கும் 2வயதுக்குழந்தையும் தன்னால் நரகம் அனுபவிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை.

அந்தக்காலையில் விழுங்கிய நஞ்சு தன்னைத் தின்றிருந்தால் எதையும் தெரியாமல் போயிருப்பேனென்று துயரமுறும் அவனைத் தேற்றுவதற்கு வார்த்தைகள் வருவதேயில்லை. கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக கலியாணம் செய்து கொண்டதும் கடமைகளுக்காக தன்னைப்பற்றிய உண்மைகள் எதையும் சொல்லாமல் அவளைக் காதலித்ததும் தனது துரோகங்களில் முதன்மையானதென மனதால் அழுகின்றான். ஏதோவொரு துணிச்சலில் ஏதோவொரு நம்பிக்கையில் எல்லாவற்றையும் செய்து முடித்து இன்று…..அவனை விடுதலை செய்யாதிருக்கும் கம்பிகளுக்கு நடுவிலிருந்து அவனது அவளுக்காகவும் அவனது குழந்தைக்காகவும் வாழவேண்டுமென்றே விரும்புகின்ற ஒரு கைதி.

அவனாலே சிறைக்கு வந்தும் அவனுக்காகவே அடுத்த சிறையின் கம்பிகளின் பின்னால் காவலிருக்கும் மனைவியும் குழந்தையும் பற்றிய துயரம் அழுத்துகிற போதெல்லாம் உயிர்மீதான பிடிமானம் இன்னும் அதிகமாய் ஒட்டிக் கொள்கிறது. சாவை தன்னோடு கூட்டித் திரிந்தவன் இன்று சாவை வெறுக்கிறான். சுருங்கச் சொன்னால் சாகப்பயப்பிடுகிறான்…..வாழ விரும்புகிறான்…..எத்தனையோ கற்பனைகள் எத்தனையோ கனவுகள் அவனுக்குள் நிறைந்து கிடக்கிறது. மனவெளியெங்கும் அவனது புதிய வாழ்வுபற்றிய ஏக்கங்கள் நிறைந்து வழிகிறது.

எப்பெயப்பா நாங்க வீட்டை போவம்….? என்னோடை வாங்கப்பா…! வாரம் ஒருமுறை சந்திக்கும் போது கெஞ்சும் அவனது குழந்தை அவனது கையணைப்பிலிருந்து அவனை விட்டுப் பிரிக்கப்படும் வினாடிகளில்…..அழுதபடி குழந்தை கம்பிகளை உதைத்துக் கொண்டு போகின்ற காட்சியை காணும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன்படுகின்ற துயரத்தை யாரால் உணர்ந்து கொள்ள முடியும் ?

கூடப்பிறந்த சகோதரங்களே அவனை மறந்து அவனுக்கு எதுவித உதவிகளும் செய்ய முடியாதென்று கைவிரித்து…. நம்பியவர்களும் நடந்து முடிந்த முடிவுகளோடு நரபலியெடுக்கப்பட்டு சுடுகாட்டின் நடுவே கைவிடப்பட்ட துயரங்களும் உயிர்களும் அவலங்களாயிருக்க அவனை யாராவது வெளியில் எடுத்துவிட்டால் போதுமென்ற முயற்சியில் இறங்கியிருக்கிறான்.

ஆயுளுக்கும் வெளியேற முடியாதவற்றையெல்லாம் அவன் பெயர் பதிவேற்றிருக்கும் அவநம்பிக்கையை விட்டு நம்பிக்கையோடிருக்கும் அவன் மீள்வதானால் பல லட்சங்கள் தேவைப்படுகிறது. சொந்த உறவுகளும் கைவிட்ட நிலையில் தன்னைத் தமிழர்கள் காப்பார்களா ? எனக் காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் தனக்காக எதையாவது செய்யச் சொல்லும்படி வேண்டுகிறான். அவைகளும் அரசுகளும் காணுகின்ற இன்றைய கனவுகளுக்காக என்றோ தன்னை இணைத்து இன்று இருளில் மூழ்கி உயிரோடு வதைபடும் இவனது வேண்டுதல்களை உரியவர்களிடம் விட்டுவிடுகிறேன்…..ஈரமிருந்தால் இவனுக்காக உயிர் தர வேண்டாம் பிணைவரவேனும் உரு உதவி போதும்.

அன்று சப்பிய நஞ்சு இவனைக் கொன்றிருந்தால் இவன் ஒரு அதிசயப்பிறவி….அனாமதேயமாய் வணங்கப்படும் ஆழுமையின் பேரொளி…..எதிரியின் நெஞ்சுக்கூட்டை உலுக்கிய மாவீரன்….உயர்ந்த வீரமரபுக்குரிய வெளிச்சம்….! இப்படி நிறைய இவனுக்காக எழுதியும் வீரப்பாக்கள் படித்தும் இவனை ஒரு வீரமாகப் பதிவு செய்திருப்போம்…..ஆனால் இன்று எவருமற்று ஒரு சவர்க்காரத்துக்கும் எவராவது தருவார்களா எனக் காத்திருக்கும் அவமானத்தையும் அவனது குழந்தைக்கு ஒருநேரச் சோற்றைக் கொடுக்கவே எவரையோ எதிர்பார்க்கும் இயலாமையை எங்கு போய்ச் சொல்ல…?

இலட்சியத்துக்காக வாழ்ந்தவனை இலட்சியத்துக்காகவே இரண்டு வருடங்களாய் வதைபடுபவனை ஆயுள் முழுமையும் இப்படியே ஆக்கிவிடப்போகும் அவனது விதியை மாற்றுவோர் யார்…?

இப்போதைக்கு அவனுக்காக அழவும் சிரிக்கவும் வார்த்தைகளால் ஆறுதல் கொடுக்கவும் வழியமைத்த விஞ்ஞானம் தந்த செல்லுலாபேசிக்கு மட்டுமே எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

தோழனே உனக்காக உனது மனைவிக்காக உனது குழந்தைக்காக…..எவ்வளவோ செய்ய வேண்டுமென்கின்ற மனசு மட்டுமேயிருக்கிறது….வெறுங்கையோடு நானும் கனவு காண்கிறேன்… உனக்காகவும் உனது குழந்தைக்காகவும் ஒரு அதிர்ஸ்டம் அடிக்காதா….?????

04.11.10

[size=5]http://mullaimann.blogspot.de/2010/11/blog-post_04.html[/size]

Link to comment
Share on other sites

நன்றி அகுதா. நான் இந்த திரியில் சத்தீசை பற்றி வாசித்ததால் அந்த திரியிற்கு போகவில்லை

[size=4]ஆம், ஒரு செய்திக்குறிப்பில் இவர் [size=5]2008 [/size]ஆம் ஆண்[/size][size=4]டு [/size][size=4]கொடிகாமத்தில் உள்ள இவரின் வீட்டில் [/size][size=4]வைத்து கைதாகியுள்ளார் என உள்ளது.[/size]

[size=4]இன்னொரு குறிப்பில் அதே ஆண்டு கொழும்பில் கைதானார் என உள்ளது.[/size]

Link to comment
Share on other sites

[size=4]ஆம், ஒரு செய்திக்குறிப்பில் இவர் [size=5]2008 [/size]ஆம் ஆண்[/size][size=4]டு [/size][size=4]கொடிகாமத்தில் உள்ள இவரின் வீட்டில் [/size][size=4]வைத்து கைதாகியுள்ளார் என உள்ளது.[/size]

[size=4]இன்னொரு குறிப்பில் அதே ஆண்டு கொழும்பில் கைதானார் என உள்ளது.[/size]

sathesh2008.jpg

Link to comment
Share on other sites

D30916056.jpg

Link to comment
Share on other sites

[size=4][size=5]தாக்குதலுக்குள்ளான தமிழ் அரசியல் கைதி சதீஸின் நிலை கவலைக்கிடம்[/size]

தாக்குதலுக்குள்ளாகி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சுந்தரம் சதீஸ் என்ற அரசியல் கைதி நேற்றிரவு அவசரமாக கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில்...

“தீவிரமான தாக்குதலுக்குள்ளான சதீஸ் - கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவரது நிலைமை மோசமடைந்திருப்பதால் அவசரமாக கொழும்புக்கு நேற்றிரவு அழைத்துவரப்பட்டிருக்கிறார். சதீஸின் இடதுபக்கம் பரலைஸ் நிலையில் காணப்படுவதாகவும் தாக்குதலில் நரம்பு பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாகவும் அவரது மனைவி கவிதா எம்மிடம் தெரிவித்தார். மிலேச்சத்தனமாக இத்தாக்குதல் சம்பவத்துக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றோம்” என்று மனோ கணேசன் கூறினார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/47558-2012-08-29-03-05-52.html

Link to comment
Share on other sites

மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான சுந்தரம் சதீஸ் நேற்று கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு திடீரென மாற்றப்பட்டார்.

வழக்கு விசாரணை ஒன்றுக்காக காலி நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சதீஸ் வழக்குத் தவணையின் பின்னர் சுயநினைவற்ற நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவர் நேற்று கொழும்பு தேசிய வைத்திய சாலையின் 50 ஆவது விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அரசியல் கைதியான சதீஸின் மனைவி தனது கணவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவுடன் மனோ கணேசன் நடத்திய பேச்சின் அடிப்படையில் சதீஸ் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை கொழும்புக்கு மாற்றப்பட்ட தழிழ் அரசியல் கைதியை மனோ கணேசன் குழுவினர் மற்றும் நாடாளுமுன்ற உறுப்பினரான ஜயலத் ஜெயவர்த்தன ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது அரசியல் கைதியான சதீஸின் தலையில் கட்டுப் போடப்பட்டுள்ளதுடன் கண் விழித்திருந்தாலும் வருபவர்களை அடையாளம் காணக்கூடிய நிலையில் அவர் இல்லை எனவும் அவரது கால்களில் சங்கலிப் பூட்டுப் போடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.

இதன்போது கடமையில் இருந்த வைத்தியர் ஒருவரிடம் சதீஸின் நிலைமை குறித்துக் கேட்டபோது தலையில் கடுமையாக அடி பட்டுள்ளது. மூளையில் இருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மூளை தொழிற்பாடு குன்றியுள்ளது எனத் தெரிவித்ததாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

http://www.sankathi24.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகோதவின் கேள்விக்கு பதில் கிடைத்ததோ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சோறு மத்தியானம் மட்டுமே. மற்றும்படி இலகுவான ஆரோக்கியமான உணவான புட்டு  இடியப்பம் இரண்டு வேளை  சாப்பிடுகின்றோம் எல்லோ என்ற நம்பிக்கை அவர்களிடம் நிலவுகின்றது 😟
    • அடுத்த‌ விளையாட்டில் எல்லாருக்கும் இர‌ண்டு புள்ளி கிடைக்கும் உற‌வுக‌ள் ப‌த‌ட்ட‌ ப‌ட‌ தேவை இல்லை ஹா ஹா😁.........................வெஸ்சின்டீஸ் அணிக்கு ம‌ட்டைய தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைச்சா இன்று ர‌ன்ஸ் ம‌ழை தான்😂😁🤣..........................................................................
    • T20 WorldCup : சொந்த மண்ணில் அமெரிக்கா சாதனை வெற்றி! Jun 02, 2024 10:40AM IST டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் கனடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்கா அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று (ஜூன் 2) தேதி தொடங்கி வருகிற ஜூன்-29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியாக ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளான கனடா அணியும், போட்டியை நடத்தும் அமெரிக்கா அணியும் மோதின. அமெரிக்காவில் உள்ள டல்லாஸ்  கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கனடா அணி அதிரடியாக விளையாடி, 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக  தொடக்க வீரர் நவ்நீத் தலிவால் 61 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் நிக்கோலஸ் கிர்டோன் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அமெரிக்கா அணியில் அலிகான், ஹர்மீத் சிங் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். தொடர்ந்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது அமெரிக்கா அணி. தொடக்க வீரர்கள் ஸ்டீவன் டெய்லர்(0) மற்றும் மோனங்க் பட்டேல்(16) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். எனினும் அடுத்த இணைந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் ஜோடி ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபக்கம் கனடா பவுலர்களை துவம்சம் செய்த ஆரோன் ஜோன்ஸ் சிக்சர் அடித்து அமெரிக்க அணியை வெற்றி பெற செய்தார். இதன்மூலம் அமெரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 94 ரன்கள் ஆரோன் ஜோன்ஸ்  ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற தனது முதல் போட்டியிலேயே  அமெரிக்கா அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. https://minnambalam.com/sports/t20-worldcup-americas-record-win-at-home/
    • இது மாதிரி  தமிழர்களின் பிரபல்யமான நடிகர்கள் சமந்தா, திருசா என்ற இருவரும் இலங்கையில்  கடைசியாக தமிழர்களுக்கு பேரழிவு நடந்த போது  குரல் கொடுக்கவில்லையாம்.  ஆனால் இப்போது பலஸ்தீனர்களுக்காக பொங்கி எழுந்துள்ளனராம். வட்சப் குழுவில் வந்த தகவல்.
    • ப‌க‌ல் க‌ன‌வு காண்ப‌தில் த‌ப்பில்லை அண்ணா ஹா ஹா😁............................................. எங்க‌ளுக்கு நேர‌ வித்தியாச‌ம் அதிக‌ம்  ஆன‌ ப‌டியால் என்னால் விளையாட்டு பார்க்க‌ முடிய‌ வில்லை   அமெரிக்கா 5ஓவ‌ர் விளையாடிட்டு இருந்த‌ போது கைபேசியில் இருந்து இஸ்கோர‌ பார்க்க‌ இவ‌ங்க‌ள் ஆப்ப‌டிக்க‌ போகின‌ம் என்று மீண்டும் தூங்கி விட்டேன்    காலையில் எழும்பி பார்க்க‌ ச‌ந்தோஷ‌மாய் இருந்திச்சு🙏🥰.....................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.