Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்நிதி முருகன் ஆலயத்தில் பறந்தது புலிக்கொடி! இராணுவத்தின் சதியா?: பதற்றத்தில் மக்கள்.

Featured Replies

சந்நிதி முருகன் ஆலயத்தின் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் ஆலயச் சூழலில் புலிககொடி பறக்கவிட்டிருந்தததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பூங்கா திருவிழாவான நேற்றைய தினம் ஆலயத்தில் உள்ள தேர் முட்டியிலேயே இவ்வாறு புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.

பெருமளவு பொலிஸாரும் படையினரும் புலானாய்வாளர்களும் சூழ்ந்திருக்கும் இவ்விடத்தில் புலிக்கொடியைப் பறக்க விட்டது. யார்? என்ற சந்தேகம் ஏற்பட்டதோடு, இதனை படையினரே பறக்க விட்டிருக்கலாம் என்னும் சந்தேகம் வெளியிடப்படுகின்றது

குறிப்பாக வலிகாமம் வடக்கு பாதுகாப்பு வலயத்தின் எல்லையை அண்மித்திருப்பதாலும், தொண்டமனாறு துருசு மற்றும் புதிதாக நிர்மானிக்கப்படும் பாலத்திற்கு பாதுப்புக்கு படையினர் நிலை கொண்டுள்ள நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கடும் பாதுகாப்பு மற்றும் கெடுபிடிகளுக்கு மத்தியில் பறக்க விடப்பட்ட கொடியை படையினரும் பொலிஸாரும் புடைசூழ வந்து எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் குழப்பபும் ஏற்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.com/?p=30345

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சிலர்.. அதுவும் புலம்பெயர் தமிழர்கள் சிலர்.. புலிக்கொடியை சுருட்டி அடிப்பெட்டிக்க போடுன்னு சொல்லுற அளவிற்கு வளர்ந்திருக்கிற நிலையில்.. சிங்களவன் புலிக்கொடியை மறக்காமல்.. முக்கிய நிகழ்வுகள் எங்கும் ஏதோ நோக்கத்தோடு பறக்கவிட்டு.. புலியை.. கொடியை நினைவு படுத்திக்கிட்டு இருக்கிறான். அந்த வகையில் அவனுக்கு நன்றி. :)

Edited by nedukkalapoovan

... ஓரிரு தினங்களுக்கு முன் இங்கு, அங்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு உதவ என்று சிறுவர்களின் விளையாட்டுப்போட்டியின் பின்னணியில் நிதி சேகரிப்பு ஓர் அமைப்பினால்!!!

... அங்கு வார்த்தைக்கு வார்த்தை "தமீழத்தில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ... உதவ ... உதவ ... தமிழீழம் ... தமிழீழம் ... தமிழீழம் ..." இரு சொற்களும் பறந்து கொண்டிருந்தது.

... ஆனால் அங்கு பெரிய பாரிய மனிதர்களாக நின்றவர்கள் எல்லாம் ... டக்லஸுகள், கேபிக்கள், .... இவர்களுடன் ... தேசிய நினைவெழுச்சி நாள் - 2011 நடத்தியோரும்/2012 நடத்த இருபோரும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினர்!!! .... மிக மிக அன்யோன்யமாக கூடிக் கழித்தார்கள் ... யாரும் விரும்பின் புகைப்பட ஆதாரங்களும் தரலாம்!!! ......... ஆமா இவர்களுக்குள் உள்ள தொடர்பென்ன???????????? தமிழீழமா????????? உதவுவதிலா?????????

நாங்கள் புலமெங்கும் தமிழீழம் ... தமிழீழம் ... மாவீரர் ... மாவீரர் ... புலிக்கொடி ... புலிக்கொடி ... வாய் கிழிய கதைத்து/பேசி/ஆடிப்பாடி ....... விபச்சாரமாடுகிறோம்!! ... அப்படி பார்க்கையில் சிங்களவன் மேல்!!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

அரசுடன் இயங்க்குபவர்களோ புலனாய்வு பிரிவினரோ தமது சுயநலத்துக்காக புலிக்கொடியை ஏற்றினாலும் அது மக்கள்மத்தியில் மீண்டும் மீண்டும் எமது இலட்சியம் என்னும் நிறைவேறாது இருப்பதை ஞாபகப்படுத்துவதாக உள்ளது ....

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு கடும் பாதுகாப்பு மற்றும் கெடுபிடிகளுக்கு மத்தியில் பறக்க விடப்பட்ட கொடியை படையினரும் பொலிஸாரும் புடைசூழ வந்து எடுத்துச் சென்றனர்.

அடுத்த பூங்காவனத் திருவிழாவுக்கு, மீண்டும்... புலிக் கொடியை ஏற்ற, பத்திரப் படுத்தி வைத்திருக்கக் கொண்டு போயிருப்பார்கள்.

அண்மையில் நெல்லியடி பகுதியில் சிங்கள அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் புலிக்கொடியுடன் சிலர் மோட்டார் சைக்கிளில் சென்றதை ஊடகங்கள் எல்லாம் பதிந்தன ...

323498442ltte.jpg

... அங்குள்ள மக்களை கேட்டால் ... யாழ்/பருத்தித்துறை வீதியிலுள்ள சுப்பையா அன்ட் சன்ஸின் உரிமையாளர் வீட்டில் முகாமிட்டிருக்கும் சிங்கள புலனாய்வுத்துறையினரே கொடியுடன் வந்ததாகவும், பின் அங்கே சென்றதாகவும் பார்த்ததாக சொல்கிறார்கள். அவன் வெளிப்படையாக செய்கிறான். ஆனால் நாமோ????

என்ன என்னத்தை ... தமிழீழம்/புலிக்கொடி/மாவீரர் ... நாம் தமிழ்த்தேசியத்தின் அடையாளம் என்றோமோ!!! ... அவைகளையே இன்று சிங்களம் ஆயுதமாக்கி இருக்கிறான்!!!

குறிப்பாக வலிகாமம் வடக்கு பாதுகாப்பு வலயத்தின் எல்லையை அண்மித்திருப்பதாலும், தொண்டமனாறு துருசு மற்றும் புதிதாக நிர்மானிக்கப்படும் பாலத்திற்கு பாதுப்புக்கு படையினர் நிலை கொண்டுள்ள நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எல்லாம் புல நாய்களின் வேலையாய் இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.