Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு எதிரான வியூகம் வகுக்க ரணிலுக்கு உதவிய சிஐஏ – கொழும்பு ஆய்வாளர் தகவல்

Featured Replies

விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த உடன்பாடு செய்து கொண்ட பின்னர், அவர்களை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளை சிறிலங்காவுக்கு அழைத்து வந்ததாக சிறிலங்காவின் இராணுவ ஆய்வாளர்களில் ஒருவரான சமிந்திர பெர்னான்டோ தகவல் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, சிறிலங்கா இராணுவத்தினருக்கு நிபுணத்துவ இராணுவ கல்வியை வழங்குவதற்காக அமெரிக்காவை அழைக்க முடிவு செய்தார்.

இதனடிப்படையில் அமெரிக்காவின் சிஐஏ எனப்படும் மத்திய புலனாய்வுச் சேவை பிரதிநிதிகள் உள்ளூர் புலனாய்வு சமூகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக அழைக்கப்பட்டனர்.

உள்ளகப் புனனாய்வுப் பணியக மற்றும் இராணுவப் புலனாய்வுப் பணியக வாராந்தக் கூட்டங்களில் அமெரிக்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள இந்த சர்ச்சைக்குரிய முடிவு வழிவகுத்தது.

புலனாய்வுக் கூட்டங்களில் அமெரிக்கப் பிரதிநிதிகள் அமர்ந்திருப்பது குறித்து முன்னர் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் மெரில் குணரத்ன கவலையை வெளிப்படுத்தியதால் ஐதேக அரசின் சீற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அது தேவையற்ற பிரச்சினைகளை எற்படுத்தும் என்று மெரில் குணரத்ன உணர்ந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது முக்கிய ஆலோசகர்களும் குணரத்னவின் கவலையை நிராகரித்தனர்.

அப்போதைய இராணுவ, பொருளாதார சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடப்பட்ட பின்னரே, அமெரிக்காவை அழைக்க முடிவு எடுக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் மரபுவழி இராணுவ பலத்தை எதிர்கொள்வதற்கு அப்போது சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகத்தில் தங்கியிருப்பதை விட வேறு தெரிவு இருக்கவில்லை.

போருக்குப் பின்னர் தமது சமாதான முயற்சிகள் தோல்வியடைந்ததற்கான காரணங்களை ஆராய நோர்வேயின் மேற்கொண்ட மீளாய்வு அறிக்கையில் (‘Pawns of Peace: Evaluation of Norwegian Peace Efforts in Sri Lanka 1997-2009‘) ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஆலோசகர்களும் அமைதி முயற்சிகளை அனைத்துலக மயப்படுத்தியதாகவும், விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாது என்று அவர்கள் நம்பியதே அதற்குக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் மீண்டும் போரைத் தொடங்கினால், அமெரிக்காவும் இந்தியாவும் தனக்குப் பின்னால் நிற்கும் என்று சிறிலங்கா அரசாங்கம் நம்பியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://thaaitamil.com/?p=30770

[size=4]இதில் அமெரிக்காவும் மகிந்தாவிடம் ஏமாறிவிட்டது.[/size]

[size=4]யு.என்.பி. போல நீண்ட காலமாக அமெரிக்கா + ஜப்பான் என இருந்து வந்த சிங்களம், சீனாவுடன் இவ்வளவு நெருக்கமாக செல்லும் என யாரும் கணக்கிடவில்லை.[/size]

[size=4]இப்பொழுது சி.ஐ.ஏ. உள்ளிட்ட அமெரிக்கா 'பொன்சேகா விடுதலை' என்று கேட்டு பார்த்து, மகிந்தா விடுவித்தாலும் அது எதிர்பார்த்த கணக்கு பிழைத்துவிட்டது.[/size]

[size=4]இன்னரும் அவர்கள் கையில் பல ஆயுதங்கள் உள்ளன: ஐ.நா. தொடர் (போர்க்குற்றம்), ஜி.எஸ்.பி., சர்வதேச நாணய நிதியம்... [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இன்னரும் அவர்கள் கையில் பல ஆயுதங்கள் உள்ளன: ஐ.நா. தொடர் (போர்க்குற்றம்), ஜி.எஸ்.பி., சர்வதேச நாணய நிதியம்... [/size]

[size=2]தமிழர் நலனுக்கா? அல்லது தமது நலன் பேணலுக்கான ஆயுதமா?...........[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]தமிழர் நலனுக்கா? அல்லது தமது நலன் பேணலுக்கான ஆயுதமா?...........[/size]

தமிழர் நலத்தை எவன் கணக்கில் எடுக்கிறான்..? அவையளின் ஆதாயத்துக்குள்ளே எங்கள் ஆதாயத்தைத் தேட வேண்டியதுதான்..

அவையளின் ஆதாயத்துக்குள்ளே எங்கள் ஆதாயத்தைத் தேட வேண்டியதுதான்..

[size=4]இன்றுள்ள நிலையில் எங்கள் விருப்புக்களை அமெரிக்காவோ இல்லை வேறு யாருமோ உணர்ந்து மதித்து நடக்கவேண்டும் என்றால் அது தமிழக தலைமையால் மட்டுமே முடியும். அதுவும் அப்படி ஒரு தலைமை டெல்லியை எமது விருப்புக்கு ஏற்றமாதிரி மாற்ற முடிந்தால் மட்டுமே. [/size]

[size=1]

[size=4]இல்லை இந்தியா 'இதற்கும் மேல் சீனாவை இலங்கையில் காலூன்ற அனுமதிக்க முடியாது' என்று கொள்கையில் வர வேண்டும். அதற்கு இந்த காங்கிரஸ் தலைமை மாற வேண்டும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சீனாவின் பக்கம் அல்லது அமெரிக்காவின் பக்கத்தை எடுக்க வேண்டும்.சிங்களவரின் பக்கம் சீனா இருப்பதால் அமெரிக்காவின் பக்கம் சாய்வது தவிர்க்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.