Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் இலங்கை கால்பந்து அணி திருப்பி அனுப்பப்பட்டது - முதல்வர் அதிரடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்று புரியவில்லை. "மக்களின் அவலம் அவலம் " என்று பலர் ஊளையிடுகிறார்கள். அவர்கள் யாரென்று பார்த்தால்..

01. கருணா, கேபி, டகளஸ் வகையறாக்கள்.

02. காலம் காலமாக புலியெதிர்ப்பு செய்து வந்தவர்கள்

03. முன்பு புலி ஆதரவாளர்களாக இருந்து தற்போத

ு சிங்களத்தின் பக்கம் தாவியவர்கள்.. #

ஆடுகள் நனையுது என்று ஓநாய்களுக்கு கவலை..

புலிகளின் அழிவென்பது லட்சக்கணக்கான மக்களின் அழிவுடன்தான் முடிவுக்கு வரும் என்பது மட்டுமல்ல.. முக்கியமாக அதற்கு பிறகு வரப்போகும் மனிதப்பேரவலத்தை எம்மால் யாராலுமே எதிர்கொள்ள முடியாது. அதை எதிர் கொள்ளவும் சிஙகளம் அனுமதிக்காது என்ற தெளிவான கொள்கையுடன் தான் நாம் புலிகளின் பின் அணிவகுத்தோம்.

ஆனால் அந்த அழிவுக்கு காரணமாக - இந்த அவலத்திற்கு காரணமாக இருந்தவர்கள - அதை ஏதோ வழியில் நியாhயப்படுத்தியவர்கள் இப்போது போடும் கூச்சல் தாங்க முடியவில்லை.

புலிகள் ஒரு நிழல் (நிகர்) அரசை நடத்தினார்கள். அங்கு யாரும் பிச்சை எடுக்கவில்லை. அநாதைகள் இல்லை. ஒரு வேளை தன்னும் உணவு அவர்களுக்கு இருந்தது. செஞ்சோலை, காந்தருபன் அறிவுச்சோலை என்று ஊனமுற்றவர்களுக்காக.. விதவைகளுக்காக. சிறார்களுக்காக எத்தனை வேலை திட்டங்கள்... மனநோளிகளுக்கு என்று "வெற்றி மனை" என்ற நிலையத்தை கூட இறுதியில் தோற்றுவித்தவர்கள் புலிகள். ("வெற்றிமனை" யில் என் பங்களிப்பும் இருந்தது) அதை எல்லாவற்றையும் அழிக்க துணை நின்று விட்டு இன்று அந்த போராளிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது ஒரு கும்பல்.. இந்த அரசியல் எமக்கு தெரியாததல்ல.. புலிகளின் அழிவுக்கு துணைநின்றவர்கள், அதை நியாயப்படுத்தியவர்கள் யாருக்கும் அந்த மக்களுக்காக போராளிகளுக்காக குரல் கொடுக்க எந்த அருகதையும் இல்லை..

(நண்பரின் முகப்புத்தகத்தில் இருந்து)

இங்கே யாழ் களத்தில் புலிவாந்தி எடுப்பவரும்.........

மக்கள் மாக்கள் முன்னாள் போராளிகள் செங்கல்பட்டு என்றுதான் சாகிறார்.

வாசிக்கும்போதெல்லாம் சிரிப்புதான் வரும்.

பத்து வரிகள் கொண்ட ஒரு பந்தியையே பொய்யின்றி அடுத்தவனுக்கு விளங்கும்படி முன் பின் முரணின்றி எழுத தெரியாதவர்கள். எழுதி முடிப்பதெல்லாம் படிக்காதவர்களுக்கு எப்படி விளங்கும் என்றுதான்?

அப்படி ஒரு படிப்பு இருந்தால்.......... அதை படிக்காது விடுவதுதான் மனித பண்பு.

இதெல்லாம் தாம் எதோ மக்கள் அக்கறையுடன் இருப்பதாக அடிக்கும் ஒரு வெள்ளை. அப்படி என்று நாம் சொல்வதேயில்லை எமக்கு அந்த வேலையை அவர்கள் தருவதும் இல்லை. அதை அடுத்த வரிகளில் அவர்களே எழுதுவார்கள்.

  • Replies 54
  • Views 3.6k
  • Created
  • Last Reply

[size=3]இலங்கை விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவது சரியான முடிவல்ல என்று திமுக தலைவரும் முன்னளார் முதல்வருமான கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார். [/size]
கருணாநிதி குத்துக்கரணம் அடிப்பது வழமை. ஆனால் பேசத்தெரியாமல் இந்த மாதிரி தடுமாறியது இதுவரைக்கும் நடந்ததில்லை. இவ்வளவு முட்டள்த்தனமாக கதைப்பார் என்பது எதிர்பார்க்கப்படாதது.

[size=3]இலங்கைத் தமிழர் மீது மிக வன்மையான தாக்குதல் நடைபெற்ற நாளில், இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் விளையாடியது. அவர்களைத் திருப்பி அனுப்பவில்லை. இந்திய அணி இலங்கையில் விளையாடியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று நாம் கேட்கவும் இல்லை. இந்திய-இலங்கை அணியின் கிரிக்கெட் விளையாட்டைத் தமிழ்நாட்டிலுள்ள தொலைக்காட்சிச் சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதிக்கவில்லை. [/size]
இவை மட்டும்தான் தனது ஆட்சிக்காலத்தில் கருணாநிதி செய்த பெருமைகள் அல்ல. கருணாநிதி முத்துக்குமாருவின் சடலத்தை அடக்கம் செய்யக்கூட அனுமைத்தி மறுத்தவர்
[size=3]இத்தகைய தேவையற்ற எதிர்வினைகளால் நாம் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஒருசேரத் துன்பத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.[/size]
தமிழக மீனவரை அடிப்பதும், கொல்வதும் இலங்கையின் விளையாட்டு வீரர்கள் அல்ல. அது இலங்கையின் இராணுவ வீரரகள் என்பதை மறக்கிறார். எப்படி இராணுவத்தினருக்கு பயிற்சியை மறுத்தால் அவர்கள் தமிழக மீனவரை தலையில் வைத்துகூத்தாடுவார்கள் என்று சொல்ல வருகிறார்.
[size=3]இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டாம் என்று கேட்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே பயிற்சி அளிக்கக் கூடாது என்கிறோம். இதனால் நாம் பெறும் பயன் என்ன? ஒன்றுமில்லை. தமிழக மீனவர்களைத் தாக்கத்தான் இந்தப் பயிற்சி பயன்படும் என்று இங்குள்ள சில சிறிய அமைப்புகள் சொல்கின்றன. நாம் வேண்டாம் என்று சொன்னால், இலங்கை ராணுவ வீரர்கள், பெய்ஜீங் போவார்கள். இந்தியர்களைத் தாக்க மிகச் சிறப்பான பயிற்சியை சீனா வழங்கும். தமிழர்களை வெறியுடன் இலங்கை ராணுவம் தாக்கும். பரவாயில்லையா? இதுதான் நமது ராஜதந்திரமா?[/size]
இவரும்தான் இராணுவத்திற்கு பயிற்சி அளிக்க வேண்டாமென்றவர் என்றதை மறந்து போனார். சீனாவை தூக்கத்தில் கண்டாலும் அலறுவார் போலக்கதைக்கிறார். காங்கிரசின் கொள்கையான சீனாவுக்கு பயப்படும் கொள்கையை சிவசங்கர் மேனன் எவுகணை பரீட்ச்சார்த்தத்தின் போது காங்கிரஸ் கைவிட்டுவிட்ட தாக கூறியபின்னரும் கருணாநிதி அதில் கட்டிப்பிடித்து தூங்குகிறார்.
[size=3] இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, பிறகு அவர்களுடன் எப்படி பேச்சு நடத்துவது? ராஜீய உறவுகளுக்கு என்ன அர்த்தம்? இலங்கைக் கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்டுவர, விடுவித்துவர வேண்டுமானால் இலங்கையில் உள்ள இந்தியத் தூதர்தான் போய் நின்றாக வேண்டும். ஒரு ராணுவப் பயிற்சிக்கான ராஜிய உறவுகளைக் கூட சகித்துக்கொள்ள முடியாவிட்டால், இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்னைக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கும் எவ்வாறு தீர்வு காண்பது?[/size]
நெடுமாறனுக்கு மத்திய-மாநில அதிகார வரம்பு தெரியவில்லை என்றவர் மாநிலத்தில் மத்திக்கு எதிர்ப்பாக செய்யப்படும் செய்கைகளை மத்திய ராஜதந்திர நடத்தைகளுடன் கலந்து எது எதுவென்று விளங்காமல் தடுமாறுமாறுகிறார்.
[size=3]இலங்கையுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொள்வது என்பது சாத்தியமே இல்லை. எல்லையில் சுரங்கப்பாதை அமைத்தும், கடல் வழியாக தீவிரவாதிகளை நமது எல்லைக்குள் நுழைத்தும், இணையத்தின் வழியாகப் பீதியையும் கிளப்பும் பாகிஸ்தானிடம்கூட இந்தியா நட்புடன்தான் இருந்தாக வேண்டும்.[/size]
பாகிஸ்தானுடன் தமிழ்நாடு உறவுகளை வைத்துகொள்ளவில்லை பாசிக் கிந்தியர் மட்டும்தான் அதை வைத்துக்கொள்கிறார்கள். ஜின்னா பாகிஸ்த்தானை பிரித்தாலும் காடைகள் அரசுப்பாகிஸ்தானால் கூட கலந்துபோன இனத்தைப் பிரிக்க முடியவில்லை.
[size=3]ராஜபட்ச குடும்பத்தினர் திருப்பதி கோயிலுக்கு வந்தால், அவர்களை அனுமதித்த ஆந்திர அரசு மீது நாம் ஆத்திரப்படவா முடியும்? [/size]
தெலுங்குக் கருணாநிதி பதவில் இருக்கும் போது தமிழ்நாடு மீதே ஆத்திரப்பட முடியவில்லை. எப்படியப்பா தெலுங்கு நாடுமீது நாம் ஆத்திரப்படமுடியும். அங்கே தமிழனா ஆளுகிறான்?

[size=3]அப்படியானால் இலங்கைத் தமிழரைத் தவிர வேறு யாரும் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடாதா?[/size]

அப்படியல்ல; சிங்களவரை தவிர யாருமே வரலாம் என்பதுதான்.
[size=3]பயிற்சிக்காக இலங்கை மருத்துவர்கள் இங்கே வரக்கூடாது. சிகிச்சைக்காக சிங்களத்தவர் வரக்கூடாது. படிப்புக்காக மாணவர்கள் வரக்கூடாது. விளையாட வரக்கூடாது. சாமி கும்பிட வரக்கூடாது. புத்தகயாவில் சிங்களவர் நுழையத் தடை விதிக்க வேண்டும். [/size]
மூத்த ராஜதந்திரியாக கருதப்படும் கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா கூறிப்பிட்டு காட்டியிருக்கும் சட்டசபை பொருளாதாரத்தடையை விளங்கிக் கொள்ள உண்மையாகவேதான் சிரமமாக இருக்கிறதா?

ஆனால், ஈழத்தமிழர்களின் வாழ்வைக் குலைத்த ராஜபட்சயும் அவரது குடும்பத்தினரும் சிங்கள அதிகாரிகளும் பாதுகாப்புடன் வந்து செல்லலாம், அப்படித்தானே?
இது கருணாநிதிகாலத்தில் மட்டும்தான் அவரே தமிழரான ராசபக்சாவின் மைத்துனருக்கே என்ன நடந்தது என்பதை வாய்விட்டுக்கு கூறியிருக்கிறார்.

Edited by மல்லையூரான்

“தமிழகம் வரும் சிங்களர்களை வெளியேற்றுவது தமிழக மக்களின் சனநாயகக் கடமையாகும்!”

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை

சென்னை, 05.09.2012.

தமிழக அரசுக்குத் தெரிவிக்காமலும், உரிய அதிகாரியின் அனுமதி பெறாமலும் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், சிங்களக் கால்பந்தாட்ட அணியினர் விளையாட வாய்ப்பளித்த அதிகாரியை, தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள் இடைநீக்கம் செய்து ஆணையிட வைத்தது வரவேற்கத்தக்கது; பாராட்டிற்குரியது.

தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா கோயிலுக்கு வந்த சிங்களர்கள் 184 பேரை திருப்பி அனுப்பும்படி போராடி அப்போராட்டத்தில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், விடுதலைத் தமிழ்ப்புலிகள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும், இன உணர்வாளர்களுக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பாராட்டுத் தெரிவிக்கிறது.

அதே போல், திருச்சி கலைக்காவிரி கல்வி நிறுவனத்திற்கு கலைப் பயிற்சி என்ற பெயரில் கலந்து கொண்ட, சிங்கள மாணவர்களை வெளியேற்ற போராடிய தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு நம் பாராட்டுகள்!

முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், சிங்களப் படைவீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை எதிர்க்கலாம், ஆனால் சிங்கள விளையாட்டு அணியினர் வருவதை எதிர்க்கக் கூடாது என்று கூறியுள்ளார். தினமணி ஏடு சிங்களப் படையாட்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதையே எதிர்க்கக் கூடாது என்றும், விளையாட்டு, கல்வி மற்றும் வழிபாடு தொடர்பாக தமிழகத்திற்கு வரும் சிங்களர்களை வெளியேற்றக் கோரக் கூடாது என்றும் ஆசிரியவுரை (04.09.2012) எழுதியுள்ளது.

தமிழீழத்தில், 2009ஆம் ஆண்டு ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழ் மக்களை குழந்தைகள், முதியவர், பெண்கள் என்று பாராமல் சகட்டுமேனிக்கு படுகொலை செய்தது இலங்கை அரசு. போரின் கடைசி நாட்களில் 40,000 பேர் கொல்லப்பட்டனர் என்றும் அது மனித குலத்திற்கு எதிராக இலங்கை இராணுவம் இழைத்தக் குற்றம் என்றும், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அமைத்த மூவர் குழு விசாரணை அறிக்கை வழங்கியது.

கடந்த மார்ச் மாதம் 22 அன்று, ஜெனீவாவில் நடந்த மனித உரிமை மன்றக் கூட்டத்தில், இலங்கையில் நடந்த மனிதப் படுகொலைத் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமென அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு பொருளாதாரத் தடை விதித்து, அதே பொருளாதாரத் தடையை மற்ற நாடுகளும் விதிக்க இந்தியா முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று ஒருமனதாக தமிழக அரசு, 2011ஆம் ஆண்டு சூன் மாதம், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அப்பாவித் தமிழ் மக்களை கூட்டம் கூட்டமாகக் கொலை செய்த இராணுவத்தினர் மீதும் மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அத்தீர்மானம் வலியுறுத்தியது.

இப்பின்னணிகளுடன் தான், தமிழ்நாட்டில் சிங்களர் வருகையைத் தடுக்கும் போராட்டமும் சிங்களப் படையாட்களுக்குப் பயிற்சித் தருவதை எதிர்க்கும் போராட்டமும் நடைபெறுவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன ஒதுக்கல் கொள்கையை அரசியல் கொள்கையாகக் கடைபிடித்து, கருப்பின மக்களை நசுக்கி வெள்ளை இனவெறி ஆட்சி நடந்த தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட சோசலிச நாடுகளும், இந்தியா உள்ளிட்ட அணிசாரா நாடுகளும் தூதரக உறவை நீக்கி அந்நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடை, விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பக்தர்கள் உள்ளிட்ட யாரும் போகத் தடை, அதே போல் அங்கிருந்து மக்கள் தங்கள் நாடுகளுக்கு வரத்தடை என்ற தடைகளை விதித்து செயல்படுத்தி வந்தன.

தமிழீழத்தில் எண்ணற்ற இந்துக் கோயில்களையும், கிறித்துவ தேவாலயங்களையும் தகர்த்த இலங்கை அரசின் சிங்கள பௌத்த வெறியை, அந்நாட்டுச் சிங்கள மக்கள் தடுத்து நிறுத்தாமல் அவ்வெறியில் தீவிரம் காட்டிய இராசபக்சேயைத் தான் அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பூண்டி மாதாகோவிலுக்கு வந்த சிங்கள பக்தர்களை திருப்பி அனுப்புவதைக் கண்டிக்கும் ‘தினமணி’ இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இங்கு வரும் சிங்களர்களை ஈழத்தமிழர்களை இலங்கை அரசுத் தாக்கும் என்று ‘தினமணி’ ஏடு கூறுகிறது. இதுவரை, இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்றும் இப்பொழுது தமிழர்களின் சொந்த ஊர்களையும், வீடுகளையும் சிங்களப் படையினரும், சிங்களவர்களும் ஆக்கிரமித்துக் கைப்பற்றி வருவதும் தமிழகம் சிங்களர்களுக்கு பதிலடி கொடுக்காத காலங்களில் நடந்தவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள அரசியல் உறவு ஈழத்தமிழர்களை அழிக்கத்தான் பயன்படுகிறதே தவிர, பாதுகாக்கப் பயன்படவில்லை என்பதை இன்னுமா ‘தினமணி’ புரிந்து கொள்ளவில்லை?

பாலஸ்தீனர்களின் தாயகத்தைப் பறித்துக் கொண்டு, யூத மேலாதிக்கம் செலுத்திய இஸ்ரேலுக்கு எதிராகவும், இதே போன்ற தடைகள் விதிக்கப்பட்டன. அதனுடனும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தூதரக உறவு வைத்துக் கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் நடந்த கொடுமைகளை விட, பன்மடங்கு அதிகமாக இலங்கை அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக இனஒதுக்கல் கொள்கையை கடைபிடித்து வருகின்றது. அவர்களின் தாயகத்தை ஆக்கிரமிப்பதுடன் இலட்சக்கணக்கில் தமிழர்களை ஈழத்தில் இனப்படுகொலை செய்துள்ளது.

மனித உரிமையிலும், தேசிய இனங்களின் தன்னுரிமையிலும் உண்மையான அக்கறை கொண்டிருந்தால் இந்தியாவும், உலக நாடுகளும் இலங்கையுடன் உள்ள தூதரக உறவை நீக்கி, அதற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்பதுடன் சிங்கள இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற கொடிய செயல்களையும் செய்யாமல் இருக்க வேண்டும். மேலே சுட்டிக்காட்டிய நாடுகளிடம் கடைபிடித்த, அதே தடைகளை விதித்து விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், கலைத்துறையினர் ஆகியோரின் போக்குவரத்தையும் தடை செய்திருக்க வேண்டும்.

ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்த சிங்கள இராணுவத்திற்கு இந்திய அரசு, இராணுவ உதவிகளையும், அந்நாட்டுக்கு நிதி உதவி மற்றும் அரசியல் உதவிகளையும் செய்தது. சிங்கள இராணுவம் ஈழத்தமிழர்களைக் கொன்றது மட்டுமின்றி, தமிழகத்தின் மீனவத் தமிழர்களையும் சற்றொப்ப 600க்கும் மேற்பட்டோரைக் கொன்றுள்ளது. இந்த படையாட்களுக்கு, தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் மீண்டும் மீண்டும் பயிற்சி அளிப்பது, மீண்டும் ஈழத்தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் படுகொலை செய்வதற்கான பயிற்சித் தவிர வேறு என்ன? இலங்கை அரசு எந்த நாட்டோடு போர் புரிய வேண்டிய தேவை இருக்கிறது?

இந்திய அரசு, தமிழினப் பகை அரசாக தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்கள் இனத்தைப் பாதுகாத்துக் கொள்ளப் போராட வேண்டியத் தேவை இருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட ஒருமித்தத் தீர்மானம் தமிழக மக்களின் நிலைபாட்டை வெளிப்படுத்தும் தீர்மானமாகும். தமிழக அரசின் அத்தீர்மானத்தை இந்திய அரசு செயல்படுத்த முன்வந்திருக்க வேண்டும். இந்திய அரசு சிங்கள இன ஆதரவுக் கொள்கையும், தமிழின எதிர்ப்புக் கொள்கையும் கடைபிடிக்கும் போது, தமிழக அரசின் தீர்மானத்தையே இறையாண்மையுள்ள ஓர் அரசின் தீர்மானம் போல் செயல்படுத்த வேண்டியப் பொறுப்பு தமிழக மக்களுக்கு இருக்கிறது.

கருப்பின மக்களுக்கு சம உரிமை வழங்காத தென்னாப்பிரிக்காவுடன் இந்தியாவுக்கு தூதரக உறவு இல்லாத போது, தமிழக ஆன்மீகச் சொற்பொழிவாளர் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள், தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அழைப்பின் பேரில் அங்கு ஆன்மீகச் சொற்பொழிவிற்குப் போனார். அவர் மீது இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. விசாரணையும் அவரிடம் நடத்தியது. அதே போல், இஸ்ரேல் நாட்டிலிருந்து எந்த விஞ்ஞானிகளும் இந்தியாவுக்கு வரக்கூடாது என தடை விதித்தது இந்திய அரசு. பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கும்(PLO), இஸ்ரேல் அரசுக்கும் இடையே அமெரிக்காவின் முன்முயற்சியில் ஓர் சமரச உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு தான், இஸ்ரேலுடன் இந்தியா தூதரக உறவு கொண்டது.

இவ்வாறான அரசியல் அணுகுமுறைகள்(இராசதந்திர நடவடிக்கைகள்), தமிழ் இனத்திற்கு எதிராகச் செயல்படும், தமிழர்களை இனப்படுகொலை செய்யும் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகக் கடைபிடிக்க வேண்டியத் தேவை இருக்கிறது. அதைத்தான் தமிழ்நாட்டுத் தமிழர்கள் செய்கிறார்கள். சட்டப்படியான இராசதந்திரம் (De jure diplomacy) இல்லாத போது, செயல்முறைப்படியான இராசதந்திரம்(De facto diplomacy) இருந்து தானே ஆக வேண்டும்?

உயிரைப் பாதுகாக்க மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தாயான, 80 அகவை மூதாட்டி பார்வதியம்மாள் அவர்களை சென்னை விமான நிலையத்தில் கீழே இறங்க விடாமல் வந்த விமானத்தில் திருப்பி அனுப்பிய தமிழினப் பகை அரசான இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு, துணை நின்ற அன்றைய முதல்வர் கருணாநிதி இன்று சிங்கள விளையாட்டு வீரர்களை விளையாட தமிழ்நாட்டில் அனுமதிக்க வேண்டும் என்று கூறுவதில் காட்டிக் கொடுக்கும் கங்காணித் தனம் தான் இருக்கிறதே ஒழிய, அரசியல் நேர்மை கிஞ்சித்தும் இல்லை.

கடந்த கால உலக அனுபவங்களை கவனத்தில் கொண்டு, இந்தியாவின் நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு, ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்யும் பேரினவாத சிங்கள நாட்டிலிருந்து வரும் சிங்களர்களை திருப்பி அனுப்பும் போராட்டத்தை தமிழகத் தமிழர்கள் முழு வேகத்துடனும் வருங்காலத்தில் நடத்த வேண்டுமென தமிழக மக்களை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்.

பெ.மணியரசன்,

தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

(செய்தி: த.தே.பொ.க., செய்திப் பிரிவு, இணைப்பு: அறிக்கை)

http://www.pathivu.com/news/21893/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியவாத்தின் நரித்தோலுக்கு பசுத்தோல் போர்ப்பது ஒன்றே தினமணியின் பிரதான கடன்!

தமிழ் நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று முதல்வராக உள்ள தமிழக முதல்வர் இத்தருணத்தில் தனது கடமைகளை புறக்கணிக்காமல் செயற்படுவதற்கு நன்றிகள்!

[/size]

[size=4]சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் சர்வதேச விதிமுறைகளுக்கு [/size][size=4]எதிராக [/size][size=4] தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிச்சயம் உதவிக்கொண்டே இருக்கவேண்டும் எனக்கேட்பவர்களும் இதில் அடங்குவார்கள். [/size]

உண்மையை தெளிவாகக் கூறி ஒருசிலரின் இரட்டை வேடத்தை தகர்த்துள்ளீர்கள்!

நன்றிகள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.