Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயதான கனடா நக்கீரனின் கருத்துக்கு தாயகத்திலிருந்து தமிழ்மாறன் பதிலடி.

Featured Replies

ஜெயானந்தமூர்த்தி தொடர்பாக கனடா நக்கீரனின் கருத்துக்கு தாயகத்திலிருந்து தமிழ்மாறன் பதிலடி. கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முற்றாகப் புறக்கணிக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்டததின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்கள் விடுத்த வேண்டுகோள் இன்றைய காலத்திற்கும் எமது கொள்கைக்கும் முற்றிலும் பொருத்தமானது என்பதை என்னைப்போன்ற பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதிலும் கிழக்கு மக்களில் பலர் இந்தத் தேர்தல் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையோ அல்லது உண்மையான தீர்வையோ பெற்றுக் கொள்ள முடியாது என்பதையும் உணர்ந்துள்ளனர்.

நான் எமது கொள்கைக்காகவும் எமது தேசத்திற்காகவும் பதினேழு ஆண்டுகள் என்னை அன்பணித்ததுடன் இறுதிவரை நின்று இன்றும் அதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் கிழக்கு மண்ணிலேயே மக்களோடு மக்களாகவே வாழ்ந்து வருகின்றேன். ஆனால் தமிழ் மக்களை ஒழுங்கான பாதையில் வழிநடத்த வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று நடத்தும் தேர்தல் திருவிழாவைப் பார்க்கும்போது மிகவும் சலிப்படைந்தவனாகவுள்ளேன். எமது மாவீரர்கள் இதற்காகத்தானா தமது உயிரைத் தியாகம் செய்தனர் என சில வேளைகளில் எண்ணத்தோன்றுகின்றது.

ஜெயானந்தமூர்த்தி அவர்கள் கூறியதுபோன்று அன்னிய சக்திகளின் நலன்களுக்காக எமது மக்களின் அரசியலை அடகுவைத்து எமது மக்களை அரசியல் அனாதைகளாக்கவே கூட்டமைப்பினர் முற்படுகின்றனர் என்ற உண்மை புலனாகின்றது. எமது மக்களின் தலைவிதியை அவர்கள் மாற்ற முற்படுவதுடன், எமது இனத்தின் இலட்சிய விடுதலைப் பாதையையும் மாற்றி மக்களை படுபாதாளக் குழிக்குள் தள்ளவே கூட்டமைப்பு முற்படுகின்றது.

உண்மையில் மக்களுக்கு சரியான பாதையைக் காட்ட வேண்டிய கூட்டமைப்பினரே இல்லாத ஒன்றை கற்பனையில் உருவாக்க முயற்சிக்கின்றனர். இந்த உண்மைகளை, யதார்த்தத்தை மக்களுக்குச் சொல்வது காலத்தின்தேவையாகும். அதை ஜெயானந்தமூர்த்தி அவர்கள் செய்துள்ளார். ஆனால் ”காய்க்கும் மரம் கல்லெறிபடும்” என்பதுபோல் அவர் மீது சேறடிப்பது தற்போது சிலருக்கு வேலையாயிற்று. அந்த கடமையை சில இணையத்தள செய்தி ஊடகங்களும் செய்து வருகின்றன.

தினக்கதிர் என்ற இணையத்தளத்தில் நக்கீரன் என்பவர் ஜெயானந்தமூர்ததி அவர்கள் தொடர்பாக எழுதியுள்ள அவரின் மலட்டுத்தனமான விமர்சனம் அவரின் வயதுக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்றாப்போலில்லை. முதலில் இந்த நக்கீரன் தொடர்பாக நான் கூறவேண்டும்.

இவர் தேசியம் தொடர்பாக எந்தவித அக்கறையும் இல்லாத சம்பந்தன் ஐயாவின் விசுவாசி. சம்பந்தன் ஐயா முயலுக்கு மூன்றுகால் என்று கூறினால் நக்கீரன் அதுதான் உண்மை என்பார். ஏனென்றால் அவரின் நடவடிக்கைகள் அப்படித்தான் உள்ளது.

குறிப்பிட்ட ஒரு சில இணையத்தளங்களின் இவரின் ஆக்கங்களை நான் பார்த்ததுண்டு. மக்களுக்கு தேவையான எந்தவொரு விடயத்தை யார் எழுதினாலும் அதற்கு எதிர்மாறாக அல்லது அதை விமர்சனம் செய்து எழுதுவது இவரின் தொழில் இதைவிட இவர் எமது சமுகத்திற்குச் செய்தது என்று எதுவுமில்லை. இதை நான் மாத்திரமல்ல என்னைப்போன்ற பலரும் பார்த்திருக்கின்றோம் அது தொடர்பாக பேசியிருக்கின்றோம்.

இவரோ அல்லது இவரைப்போன்றோரோ ஜெயானந்தமூர்த்தி அவர்களை விமர்சனம் செய்வதற்கு எந்தவிதத்திலும் அருகதையற்றவர்கள். ஏனென்றால் ஜெயானந்தமூர்த்தி தொடர்பாகவும் அவர் தமிழ் தேசியத்தின் மீது கொண்ட உறுதி, கொள்கைப்பற்றுத் தொடர்பாகவும் எனக்கு நன்கு தெரியும்.

அவர் நீண்டகாலம் தொடக்கம் இன்று வரை எமது தேசியத்திற்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டு வரும் ஒருவர். அது மாத்திரமின்றி இன்றும் தமிழீழமே எமக்கான தீர்வு என்பதில் உறுதியாக இருந்து செயற்படுவதுடன் அதற்காக இலண்டனில் இருந்து கொண்டும் செயற்பட்டு வருபவர். இதையெல்லாம், நக்கீரன் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்குக் காலம் பதில் சொல்லும்.

எனினும், ஜெயானந்தமூர்த்தி அவர்கள் மீதான நக்கீரனின் சாடலுக்கு நான் இதைக் குறிப்பிட்டாகவே வேண்டும்.

அரசியல் என்றால் ஈணவும் வேணும் நக்கவும் வேணும் என்று கூறியுள்ளார். நக்கீரன் சொன்னது சரி ஜெயானந்தமூர்த்திக்கு அது தெரியாதுதான். ஆனால் சம்பந்தர் ஐயா குழுவினர் அதை நன்றாகவே செய்து வருகின்றனர். ஒழுங்காகவே நக்குகின்றனர்.

இன்னுமொன்றை நக்கீரன் போன்றோர் அறிந்திருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2004 ஆம் ஆண்டு கருணாவின் பிரிவுடன் உடைந்திருக்க வேண்டும். ஆனால் அதைக் காப்பாற்றிய பெருமையும் ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கே உண்டு. 2004 ஆம் ஆண்டு சித்திரை மாதம் தேர்தல் முடிந்து அவர் வெற்றி பெற்றவுடன் அவர் தேசியத்திலும் எமது தலைமையிலும் உறுதியாக இருக்கின்றார் என்பதை உணர்ந்து கொண்ட கருணா ஜெயானந்தமூர்ததி அவர்களை குடும்பிமலையில் உள்ள அவரின் முகாமுக்கு வருமாறு அப்போது அரசியல் பொறுப்பாளராக இருந்த விசு மூலமாக அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு ஜெயானந்தமூர்த்தி மறுப்புத் தெரிவிக்கவே பிள்ளையானின் தலைமையில் சிலரை அனுப்பி அவரைக் கடததி வருமாறு உத்தரவிட்டிருந்தார். அக்கடத்தலில் இருந்து தப்பி அன்று ஜெயானந்தமூர்த்தி அவர்கள் எடுத்த உறுதியான முடிவே கூட்டமைப்பைக் காப்பாற்றியது.

அன்றைய இக்கட்டான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் காப்பாற்றியவர் ஜெயானந்தமூர்த்தி” என எமது தேசியத் தலைவர் அவர்கள் கிளிநொச்சியில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்த முதல் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

இதையெல்லாம் நக்கீரன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஜெயானந்தமூர்ததி மீது அவதூறு விளைவிக்கும் வகையில் அக்கால கட்டத்தில் தலைவருக்கு எதிராக செயற்பட்டார். அவரின் படத்தை எரித்தார் என்றெல்லாம் கதைகள் பரப்பப்பட்டன. அவ்வாறு அவர் செயற்பட்டிருந்தால் அவருக்கான தண்டனை கிடைத்திருக்குமே தவிர தலைவரால் புகழப்பட்டிருக்கமாட்டார். இதுதான் யதார்த்தம். இதைவிட இன்னும் எத்தனையோ சாதனைகளை செய்தவர் இதனால் பல சோதனைகளைச் சந்தித்தவர். இவையெல்லாம் மக்களுக்கு தெரிந்த விடயம். நான் குறிப்பிட வேண்டுமென்ற அவசியமில்லை.

இன்னுமொன்றை நான் இக்கட்டத்தில் சொல்லவேண்டும். ஜெயானந்தமூர்த்தி அவர்களை இலண்டனுக்கு அனுப்பி வைத்ததே எமது தேசியத் தலைவர்தான். தலைவரின் தீர்க்க தரிசனம் காரணமாகவே இன்று ஜெயானந்தமூர்த்தி உயிருடன் இருக்கின்றார். இதற்கு என்ன ஆதாரமென நக்கீரன் தனது சொதப்பைப் பாணியில் கேள்வி கேட்கலாம்.

என்னைப்போன்ற தாயகத்தில் இருப்பவர்களுக்கும் புலம் பெயர் நாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் என்னைப்போன்றவர்களுக்கும் நன்கு தெரியும். அது மாத்திரமின்றி இந்த உண்மைகள் தற்போது தாயகத்தில் நிற்கும் ஒருசில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியும். ஜெயானந்தமூர்த்தி அடிக்கடி வன்னிக்கு வந்துபோவார். அதுபோன்றே 2008 இல் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தபோது வன்னிக்கு வந்திருந்தார்.

ஒரு மாதகாலத்திற்கு மேலாக எங்களுடன் நின்றிருந்தார். அரை சந்தித்து உரையாடிய எமது தேசியத் தலைவர் உடனடியாக கொழும்புக்குத் திரும்பிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டதுடன், வெளிநாட்டுக்கு செல்லுமாறும் கூறியிருந்தார்.

தலைவரின் ஆணையை ஏற்றே அவர் வெளிநாடு சென்றார். அவர் அங்கு இருக்கும் காரணமாகவே இன்று புலம்பெயர் நாடுகளில் எமது விடுதலைக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார். அவர் இலண்டனில் இருந்து கொண்டு என்ன செய்கின்றார் என நக்கீரன் கேள்வி கேட்டிருக்கின்றார் கனடாவில் குடியேறி வசித்துக் கொண்டிருக்கும் நக்கீரனுக்கு இது தெரியாமல் இருப்பது வேதனைதான். இப்படியானவர்களுக்கு உண்மை நிலை எங்கே தெரியப்போகின்றது.

நக்கீரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன், செல்வராஐ, யோகேஸ்வரன் பற்றியும் அவர்கள் மக்களோடு நின்று செயற்படுவதாகம் கூறியிருந்தார். நல்லது. அவர்களின் பல முகங்கள் இங்குள்ள எமக்கும் மக்களுக்கும்தான் தெரியும். நாம் தொடர்ந்து அவர்களை அவதானித்துக் கொண்டே வருகின்றோம்.

அரியநேந்திரன் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் படுதோல்வியடைந்தவர். அவரை புலிகள்தான் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக்கினார்கள். ஆனால் அவர் என்ன செய்கின்றார் என்பதை இப்போது பாருங்கள். சரத்பொன்சேகாவை சிறீலங்கா அதிபராக்க வேண்டும் என்பதில் உறுதியா நின்று செயற்பட்டவர். அதற்குப் பின்னர் தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக சம்பந்தர் ஐயாவுக்கு வாக்காலத்து வாங்கிக் கொண்டு மக்களை ஏமாற்றித் திரிகின்றார்.

யோகேஸ்வரனை நாம் எமது செயற்பாடுகளில் கண்டதேயில்லை. தேசியம்பற்றி அவர் என்ன நினைத்துள்ளார் என்பதே தெரியாது. கோயில் பூசகரான அவர் 2008 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் பிள்ளையான் வெற்றிபெறவேண்டுமென பூசைசெய்து கையில் நூலும் கட்டிவிட்டவர். பிள்ளையானின் வெற்றிக்காக உழைத்தவர். இன்று தேசியவாதியாக மக்களை ஏமாற்றி வருகின்றார். செல்வரசாவும் இதற்கு சழைத்தவரில்லை. பிள்ளையானுக்கு ஆதரவாக செயற்பட்டவர்.

2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்வரை பிள்ளையானுடன் ஆதரவாக இருந்து பின்னர் தேர்தலில் தனது வெற்றிக்காக சுயநல நோக்கோடு கூட்டமைப்பில் இணைந்தவர். ஆனால் கேட்டால் தான் தமிழரசுக் கட்சியின் ஆரம்ப உறுப்பினர் என்று கூறுகின்றார். இவர்களின் கபடத்தனங்களை நக்கீரன் அறிந்து கொள்ள வேண்டும்.

அதை விடுத்து ஏதோ தான்தான் தேசியவாதி போலவும் விடுதலைக்காக உழைத்தவர் போலவும் இன்று கதைவிடுகின்றார். உண்மையில் இப்போது கதைக்கும் இவரெல்லாம் எமது போராட்ட காலத்தில் என்ன செய்தனர் என்பதைக் கூறவேண்டும். அப்போதெல்லாம் ஒழித்திருந்தவர்கள். எந்தவொரு பங்களிப்பும் செய்யாதவர்கள். மாறாக இவரோ இவரைப்போன்றோரோ பங்களிப்புச் செய்திருந்தால் எமது விடுதலை எப்போதோ கிடைத்திருக்கும்.

இதைவிடுத்து தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற வகையிலும் தமிழில் பெரும் பண்டிதன் போன்ற நினைப்பிலும் மக்களைக் குழப்பாமல் ஆனமான காரியங்களைச் செய்யவும். இவர் மாத்திரமின்றி தினக்கதிர் தளம் பற்றியும் இதை நடத்துபவர் பற்றியும் எமக்குத் தெரியும். எமது விடுதலைப்போராட்டத்தையும் தேசியத்தலைவரையும் கேவலப்படுத்தும் வகையில் அவரின் எழுத்துக்கள் அன்று தொடக்கம் இன்றுவரை உள்ளன. எல்லாவற்றையும் நாம் அவதானித்துக் கொண்டே வருகின்றோம். அண்மையில் ஒரு செய்தியில் தலைவரின் ஆவி சிங்களப் பெண்ணைக் கொன்றதாக எழுதியிருந்தார் இரா.துரைரெத்தினம். இதிலிருந்து இவரின் மனநிலையும் இவரின் பின்னணியையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தாயகத்திலும் சரி புலத்திலும் சரி களிசறைகளை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ள வேண்டும்.

நன்றி

தமிழ்மாறன்.

தென்தமிழீழம்

http://thaaitamil.com/?p=30950

[size=3]இப்போது புலத்திலே சிலர் தாங்கள் சிறிலங்காவின் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று சொல்லிக் கொண்டு தமிழ்Nதிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்[/size]

[size=3]உண்மையில் சிறீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பையும் நடாளுமன்றத்தையும் தேசிய கீதத்தையும் சிங்கக்கொடியையும் ஏற்று அதற்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் நடப்பேன் என்று சத்தியப் பிரமாணம் செய்த எல்லோரும் ஒரே கு[/size][size=3]

ட்டையில் ஊறிய மட்டைகளே!

தமிழீழ தேசியக் கொடிக்கும் தமிழீழ தேசிய கீதத்துக்கும் மதிப்பளிக்கும் மாவீரர்களின் ஈகத்தில் உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் எவரும் தமிழீழத்தை தமிழர்களை அழித்த சிறிலங்கா அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் நாடாளுமன்றத்தின் முன்நாள் இந்நாள் உறுப்;பினர் என்று சொல்லமாட்டார்கள்.அப்படிச் செல்வதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள்.

விடுதலைப்புலிகள் இயக்க சார்பான சிலர் சிறீலங்கா நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டிருந்தால் அது அவர்களுக்கு தேசியம் சார்ந்து கொடுக்கப்பட்ட கடமை. அந்தக் கடமை முடிந்த பின்பு அவர்கள் உண்மையில் விடுதலையை நேசிப்பவர்களாக இருந்தால் நாங்கள் விடுதலைச் செயற்பாட்டாளர்கள் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்வதைத்தான் பெருமையாகக் கொள்வார்களேயன்றி தமிழர்களை அழித்த தமிழர்களை கொலை செய்த ஒரு அரசின் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் என்று சொல்லமாட்டார்கள். அப்படிச் செல்வதற்கு அவர்களது மனம் கூசும்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான மாற்றுக் குழு உறுப்பினர்கள் கூட நான் இன்ன குழுவின் உறுப்பினர்கள் என்று தான் சொல்வார்களே தவிர சிறீலங்கா அரசாங்கத்தை பிரதிநித்தவப்படுத்தும் ஒரு அமைப்பின் முன்னாள் இன்நாள் உறுப்பினர்கள் என்று சொல்ல கொஞ்சம் தயங்குவார்கள்.

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நாங்கள் பிரதிநிதித்துவம் பெறுவது எங்களுக்கு பெருமையல்ல.அது ஒரு சுமை. இனத்துரோகிகள் அதற்குள் சென்று தாங்கள் தான் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சர்வதேசத்துக்கு சொல்லிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தேசிய செயற்பாட்டாளர்கள் உணர்வாளர்கள் என்று சொல்பவர்களை தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற வைக்கிறோம். அந்த நபர்கள் நாங்கள் தமிழ் தேசித்தின் பிரதிநிதிகள் என்று சொல்வதற்குப் பதிலாக சிறீலங்கா நாடாளுமன்றத்தின் முன்நாள் இந்நாள் உறுப்பினர் என்று தங்களை அடையாளப் படுத்தினால் கருணா பிள்ளையான் டக்ளஸ் போன்றவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.[/size]

வயதான நக்கீரனுக்கு வயது வராத தமிழ்மாறன் நல்ல பதிலடி கொடுத்திருக்கிறார்

யாரும் ஒருவரியில் தாக்குதல் எழுதலாம். அது அரசியலும் அல்ல. வருங்கால போராட்டத்திற்கு அது சேர்த்துவைக்கதக்க பெரும் கலைகழஞ்சிய செல்வமுமல்ல.

ஆனால் அடி கொடுப்பதும் அடி வாங்குவதும் ஒரு தனிக்கலை. அடிவிழுவதை அறியாமல் அதை வாங்கிக்கொண்டு மத்தியில் நின்று தடுமாறுவது ஒரு மலட்டுத்தனம்.

Edited by மல்லையூரான்

ஜெயானந்தமூர்த்தி தொடர்பாக கனடா நக்கீரனின் கருத்துக்கு தாயகத்திலிருந்து தமிழ்மாறன் பதிலடி. கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முற்றாகப் புறக்கணிக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்டததின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்கள் விடுத்த வேண்டுகோள் இன்றைய காலத்திற்கும் எமது கொள்கைக்கும் முற்றிலும் பொருத்தமானது என்பதை என்னைப்போன்ற பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதிலும் கிழக்கு மக்களில் பலர் இந்தத் தேர்தல் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையோ அல்லது உண்மையான தீர்வையோ பெற்றுக் கொள்ள முடியாது என்பதையும் உணர்ந்துள்ளனர்.

நன்றி

தமிழ்மாறன்.

தென்தமிழீழம்

[size=4]

இத்தேர்தலில் நாம் போட்டியிடாவிட்டால் முதலைமைச்சராக சிங்களவர் வந்துவிடுவர் அல்லது முஸ்லிம் ஒருவர் வந்துவிடுவார் இல்லையேல் பிள்ளையான்போன்ற ஆயுதக்குழுக்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விடுவார்கள் எனவும் பிரச்சாரத்தின்போது மக்களிடம் கூறிவருகின்றனர். ஆனால் கூட்டமைப்பு முதலமைச்சராக வந்தால் எதைச் சாதிக்கும் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். - ஜெயானந்தமூர்த்தி[/size]
http://www.yarl.com/forum3/index.php?showtopic=107372

[size=4]உண்மையில் த.தே.கூட்டமைப்பின் மேற்படி அறிவிப்பானது - அதுவரை அடுத்தது என்ன என்றதொரு கேள்வியுடன் கழிந்துகொண்டிருந்த ஈழத் தமிழர் அரசியல் சூழலில், ஒரு நம்பிக்கையாகவும் ஒரு முன்னேறிய நகர்வாகவும் அமைந்திருந்தது. இங்கு நிலைமைகள் தொடர்பாக அறிக்கையிடுவதற்கும், குறிப்பிட்ட சூழலில் ஒரு செயல் மூலமாக அரசியலைக் கையாள முயற்சிப்பதற்கும் இடையில் அடிப்படையிலேயே அதிக வேறுபாடுண்டு. இன்று மாகாணசபை தேர்தலில் த.தே.கூட்டமைப்பு பங்கு கொள்வதானது, இரண்டாவது வகையைச் சார்ந்தது. மாகாண ஆட்சியில் பங்கு கொள்வதன் மூலம் கூடுதல் அதிகாரங்களை பெறுவதற்கான ஒரு புதிய அரசியல் களத்தை திறப்பதற்கான முயற்சியிலேயே இப்போது கூட்டமைப்பு களமிறங்கியிருக்கிறது. த.தே.கூட்டமைப்பு இப்படியொரு முயற்சியில் இருக்குமாயின் மட்டும்தான், அது சரியான அரசியலை நோக்கிப் பயணிப்பதாகவும் அர்த்தம் கொள்ளலாம்.- யதீந்திரா[/size][size=4]
[/size]http://www.yarl.com/forum3/index.php?showtopic=107479

[size=4]கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நிற்கிறார்கள். வடக்கு-கிழக்கு இணைப்பை ஆதரித்து நிற்கிறார்கள் என்னும் ஒரு நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். வடக்காய் இருந்தாலும் கிழக்காய் இருந்தாலும் தமிழ் மக்கள் ஒரே சிந்தனையில் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் மீண்டும் இந்த அரசிற்கும், உலகிற்கும் உணர்த்தப்பட வேண்டும். ஆகவேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தது. - [/size]

சுரேஷ். க. பிரேமச்சந்திரன்

http://www.tnaglobal.org/

வயதான நக்கீரனுக்கு வயது வராத தமிழ்மாறன் நல்ல பதிலடி கொடுத்திருக்கிறார்

[size=4]ஒருவரின் வயதை குறிப்பிட்டு கருத்து கூறுவது என்பது அநாகரீகம். கட்டுரையை வரைந்த 'தாயகத்தில் உள்ள தமிழ்மாறனுக்கு' அது தெரியாமல் இருக்கலாம் ஆனால் புலம்பெயர் தேசங்களில் வாழும் எங்களுக்கு தெரியும் அது தவறு என்று. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.