Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் உறுப்பினர்களின் கபடப் பேச்சுக்களை நம்பி மக்கள் பிழையான வழியில் செல்லக் கூடாது – ஜெயானந்தமூர்த்தி

Featured Replies

கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ் மக்கள் முற்றாகப் புறக்கணித்து வடகிழக்கு இணைந்த தாயகக் கோரிக்கையை சர்வதேசத்திற்கு வலியுறுத்தி எமது உரிமையை வென்றெடுக்க முன்வரவேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழின உணர்வாளருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அன்பான கிழக்கு மாகாண மக்களுக்கு, இக்கட்டான சூழ்நிலையில் நான் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் சர்வதேச மட்டத்தில் எனது அனைத்து நடவடிக்கைகளும் எமது தாயகத்தை மையப்படுத்திய அரசியல் வேலைத்திட்டங்களாகவே உள்ளன.

அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவன் என்ற கோதாவில் கூட்டமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதையும் அது இறுதிவரை தனிநாட்டுக் கொள்கைக்காகவே உழைக்க வேண்டும் என்பதையும் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எனக்குண்டு.

தற்போதுள்ள கூட்டமைப்பின் உறுப்பினர்களின் கபடப் பேச்சுக்களை நம்பி மக்கள் பிழையான வழியில் செல்லக் கூடாது. அதற்கான அறிவூட்டல்களை எனது மக்களுக்கு வழங்க வேண்டியது காலத்தின் கடமை என்பதை நான் உணர்கின்றேன்’ எனத்தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மேல் மட்டத்திலுள்ள சிலர் இன்று சில வெளிநாடுகளின் கைப்பொம்மைகளாகவே செயற்படுகின்றனர். அதிலும் இந்தியாவின் நண்பர்களாக இருந்து இந்தியாவின் விருப்பத்தை தமிழ் மக்களிடம் கொண்டு செல்பவர்களாக உள்ளனர்.

இந்தியாதான் எமது பரம எதிரி என்பது எமது மக்களுக்கு நன்கு தெரியும். தமிழ் மக்களின் ஆழமான மனதில் பதிந்துள்ள அந்த விரோதத்தை மெல்ல மெல்ல அகற்றுவதில் கூட்டமைப்பு நன்கு திட்டமிட்டு செயற்படுகின்றது. அதற்கான அனைத்து வசதிகளையும் இந்தியா செய்து கொடுத்துள்ளது.

இவர்களின் இந்த செயற்பாடுகளை தெரிந்தும் தெரியாததுபோல் ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அவர்களுக்குப் பின்னால் சென்று தமிழ் மக்களை பிழையான திசையில் வழிநடத்துகின்றனர்.

முள்ளிவாய்கால் பேரவலத்தை நடத்தி எமது விடுதலைப்போராட்டத்தை நசுக்கி மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுகுவித்த சிறிலங்கா அரசுக்கு இந்தியா, அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் உதவி புரிந்தன. இப்பேரவலத்திற்குப் பின்னர் உலகத் தமிழர்கள் குறிப்பாக தமிழக உறவுகள் மற்றும் புலம்பெயர் உறவுகள் தமிழர்களுக்குத் தனிநாடே ஒரே தீர்வு என்பதில் உறுதியாகவிருந்து சர்வதேசத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து வருவதுடன் இனப்படுகொலையைப் புரிந்த மகிந்த கூட்டத்தினருக்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனால் இன்று சர்வதேசம் பெரும் சங்கடத்திற்குள்ளாகி உள்ளதுடன் ஐ.நா ஊடாக ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் மக்கள் முழுமையாக வாக்களித்தால் சர்வதேசத்தின் இந்த சாதகமான நிலை நழுவிச்செல்லும் வாய்ப்பு உண்டு. அத்துடன் மகிந்த உட்பட கொலையாளிகளைத் தப்ப வைப்பதற்கும் உலக நாடுகள் தமிழ் மக்களை அழிப்பதற்கு பக்கதுணையாக நின்றனர் என்ற பழியில் இருந்து தப்பிக் கொள்வதற்கும் இடமுண்டு.

இத்தேர்தலில் தமிழ் மக்கள் சிங்களத்திற்கு வாக்களித்தால் தமிழ் மக்கள் தம்முடன் உள்ளனர் என சிறிலங்கா அரசு சர்வதேசத்திற்குப் பரப்புரை செய்து தமிழர்களுக்கு எந்தவிதத்தீர்வும் தேவையில்லை எனக் கூறி தட்டிக்கழிக்கும். மாறாக தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் தமிழ் மக்கள் தனிநாட்டுக்கோரிக்கையைக் கைவிட்டு மாகாணசபை ஆட்சியை விரும்பியுள்ளனர்.

எனவே இதற்குள் தீர்வைப் பெற்றுக்கொடுக்க இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் அழுத்தம் கொடுக்கும். இதனால் எதிர்காலத்தில் தமிழினம் பாரிய பின்னடைவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் மீண்டும் தமிழ் இனைஞர்கள் ஆயதம் ஏந்தும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எனவே இவ்வாறான மோசமான நிலைக்கு எமது இனத்தை இட்டுச்செல்லாமல் எமது மக்கள் கூட்டமைப்பின் நிலையை உணர்ந்து தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு புறக்கணித்தால்தான் தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையிலேயே உறுதியுடன் உள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்த முடியும்.

பிரிந்த வடகிழக்கு மாகாணசபையில் கிழக்கில் போட்டியிடும் கூட்டமைப்பு கிழக்கிலும் வெற்றி பெற்று வடக்கு மாகாணத்தையும் கைப்பற்றி அதன் மூலம் வடகிழக்கு இணைப்புக்கான தீர்மானத்தைப் பெற்று வடகிழக்கு இணைப்பை ஏற்படுத்துவோம் எனவும் மாகாணசபையில் போட்டியிடுவதன் மூலமே சிங்களக் குடியேற்றம், நிலஅபகரிப்பு என்பனவற்றை நிறுத்துவோம் எனவும் சிறிலங்கா அரசு கிழக்கு மாகாணத்தில் வெற்றி பெற்றால் காணி, பொலில் அதிகாரங்களை இல்லாமல் செய்துவிடும் என்றும் கூறிவருகின்றனர்.

இதை 13 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் செய்ய முடியாது என்பதை இவர்கள் அறிந்திருந்தும் இவ்வாறு ஏன் மக்களிடம் பொய் கூறவேண்டும். இதையும் விட கிழக்கு மாகாணசபையில் போட்டியிடுவதன் மூலம் மக்கள் முற்றாக வாக்களிக்க வேண்டும் இதைப் பயன்படுத்தி எமது மக்கள் எம்முடன்தான் இருக்கின்றார்கள் என சர்வதேசததிற்கு காண்பிக்க முடியும் எனவும் கூறி வருகின்றனர்.

தமிழ் மக்கள் 2000 ஆம் ஆண்டிலிருந்து பல தேர்தல்களில் கூட்டமைப்பே எமது ஒரே கட்சி என்பதை பல தடவைகளில் காண்பித்து விட்டனர். இது சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கும் நன்கு தெரிந்த விடயம். எனவே கிழக்கு மாகாணசபையில் போட்டியிட்டுத்தான் மக்கள் எம்முடன் இருக்கின்றனர் என்பதை புதிதாகக் காட்ட வேண்டிய அவசியமில்லை.

எனவே, மாகாணசபைத் தேர்தலை கூட்டமைப்பு முற்றாக நிராகரித்து எமது மக்களுக்கு தனிநாடே தீர்வு என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டியிருக்க வேண்டும். இந்த விடயங்களைத் கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்து கொண்டு இத்தேர்தலை நிராகரித்து சர்வதேசத்திறக்கு எமக்கான தீர்வு மாகாணசபை அல்ல தனிநாடே என்பதைத் தெளிவாகக் கூறவேண்டும். இத்தேர்தலில் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதே கூட்டமைப்புக்கு மக்கள் கற்பிக்கும் பாடமாகவும் அமையும். கூட்டமைப்பிலுள்ள ஒரு சிலா தமது நலன்களுக்காகத் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்து அதை மக்களிடம் திணிக்கும் செயல்களை எதிர்காலத்தில் நிறுத்துவதற்கான வழியாகவும் அமையும்.

இத்தேர்தலில் நாம் போட்டியிடாவிட்டால் முதலைமைச்சராக சிங்களவர் வந்துவிடுவர் அல்லது முஸ்லிம் ஒருவர் வந்துவிடுவார் இல்லையேல் பிள்ளையான்போன்ற ஆயுதக்குழுக்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விடுவார்கள் எனவும் பிரச்சாரத்தின்போது மக்களிடம் கூறிவருகின்றனர். ஆனால் கூட்டமைப்பு முதலமைச்சராக வந்தால் எதைச் சாதிக்கும் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இதையும் விட கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் குறிப்பாக மட்டக்களகப்பு மாவட்டத்தில் உள்ள பலர் கடந்த காலங்களில் ஆயுக்குழுகளுடன் செயற்பட்டவர்களாகவும் பேரினவாத சிங்களக் கட்சிகளில் தேர்தலில் போட்யிட்டவர்களாகவும் தேசியத்திற்கு எதிராக செயற்பட்டவர்களாகவும் கூட்டமைப்பு பாசிசப் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி என்று கூறியவர்களும் ஆயதப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அரசுக்கு முண்டு கொடுத்தவர்களாகவும், வெளிநாட்டில் இருந்து கொண்டு அங்கு புலம்பெயர் மக்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை விமர்சித்தவரும், தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டவரும் உள்ளனர்.

எனவே இவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு கூட்டமைப்பின் கொள்கையில் உறுதியாக இருப்பார்கள் என்பதையும் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு கூட்டமைப்பின் மேல் மட்டத்திற்கு உண்டு. இந்த வேட்பாளர்களின் நிலைமை ஏனைய மாவட்டத்து வேட்பாளர்கள் சிலரிடமும் உண்டு,

மட்டக்களப்பில் இடம் பெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தந்தை செல்வா தலைமையில் அகிம்பை போராட்டம் நடைபெற்றது தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப்போராட்டம் இடம் பெற்றது தற்போது எமது தலைவர் சம்பந்தன் தலைமையில் இராஐதந்திரப்போராட்டம் நடைபெறுகின்றது என அடிக்கடி மேடையில் கூறிவருகின்றார்.

அவரின் தலைவர் சம்பந்தர் (தமிழர்களின் தலைவர் அல்ல) நடத்தும் இராஐதந்திரப்போராட்டம் என்ன என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்காது இனப்படுகொலையாளி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க தமிழ் மக்களைத் தூண்டியது இராஐதந்திரப் போராட்டமா? அதே ஆண்டில் மனித உரிமைகள் அமைப்பு ஐ.நாவில் மனித உரிமைக் கூட்டத்தில் முள்ளிவாய்கால் இனப்படுகொலை தொடர்பாக பிரேரணை கொண்டுவர முயற்சித்தபோது மகிந்தவுடன் பேச்சு நடத்தப்போனது இராஐதந்திரப்போராட்டமா? அமெரிக்காவுக்குச் சென்று இராஐhங்கத் திணைக்களத்திடமும் பின்னர் எமது மக்களிடமும் நாங்கள் வடகிழக்கை தமிழர்களின் தாயகம் என்று ஒருநாளும் கோரியது கிடையாது. புலிகள்தான் அவ்வாறு கூறிவந்தனர் என்று கூறியது இராஐதந்திரப்போராட்டமா? இந்த வருடத்தில் ஐ.நாவில் இடம் பெற்ற மனித உரிமைகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாது நழுவிக் கொண்டது இராஐதந்திரமா? யாழ்ப்பாணத்தில் மேதினக் கூட்டத்தில் சிங்கக் கொடியைத் தூக்கிப்பிடித்து சந்தோசப்பட்டதும் மாவீரர்களின் தியாகத்தை உதாசீனப்படுத்தியதும் இராஐதந்திரமா? அல்லது இறுதியாக எமது தமிழ் மக்களின் தாயகக் கொள்கையை சிதைத்து இந்தியாவின் திட்டத்தின்படி மாகாணசபை ஆட்சிக்குள் மக்களைக் கொண்டு செல்ல முயல்வது இராஐதந்திரப்போராட்டமா? என இந்த உறுப்பினர் மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.

இதற்கான தெளிவை மக்களுக்கு ஏற்படுத்தாமல் வார்த்தை ஐhலங்களால் மக்களை ஏமாற்றக்கூடாது. இதையெல்லாம் விடுத்து அ,ஆ.இ,ஈ.உ கற்பிப்பதை நினைக்கும்போது வேதனையாகவே உள்ளது. இதை எமது மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசத்தின் மட்டத்திற்குக் கொண்டு சென்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பே என இவர்கள் கூறுவது இவர்களுக்கே ஓவராகத் தெரியவில்லையா. எமது பிரச்சினையை உலகுக்கு எடுத்துச் சென்றவர் எமது தேசியத் தலைவரும் மாவீரர்களுமே. இவற்றுக்குப் பலமாக இருந்தவர்கள் புலம் பெயர் தமிழர்களும் தமிழகம் உள்ளிட்ட உலகத்தமிழர்களுமே என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஐக்கிய இலங்கைக்குள் சிங்களவர் விரும்பும் தீர்வையே தாம் கோருவதாகவும் தமிழர்கள் தமிழீழத்தைக் கோரவில்லை அதைப்புலிகள்தான் கோரினார்கள் எனவே கூட்டமைப்பு இதைக்கோரப்போவதில்லை என்பதையே உலகநாடுகளிடம் எடுத்துச் சொல்லியிருந்தனர்.

ஆனால் தற்போது தேர்தல் மேடைகளில் மக்களுக்கு பலவகையான பொய்களைப் பரப்பி வருகின்றனர். இதனால் இத்தனை ஆண்டுகளாக பல தியாகங்களைப் புரிந்து நடததிய எமது தேசிய விடுதலைப்போராட்டமும் கொச்சைப்படுத்தப்படுகின்றது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒருசிலர் (முன்ளாள் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள்) கூட்டமைப்புக் கிளைகளை அமைத்துக் கொண்டு கூட்டமைப்புக்கு புலம் பெயர் தமிழ் மக்கள் ஆதரவு எனக் கூறிவருவதும் அறிக்கைகள் விடுவதையும், கூட்டங்கள் நடத்துவதும் மாகாணசபைத் தேர்தலுக்கு கூட்டமைப்பு செல்வதே சிறந்த சிந்தனை என்று கூறுவதையும் எமது தாயக மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் எக்காலத்திலும் உறுதியான கொள்கையில் இல்லாததாலேயே இவ்வாறு செயற்படுகின்றனர். ஏனெனில் கூட்டமைப்பின் கொள்கை என்ன என்பதை புரியாதவர்களாகவே உள்ளனர் என்பதையும் எமது மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். புலம் பெயர் மக்கள் என்றுமே தாயகக் கொள்கையில் உறுதியாக உள்ளனர் எமது தாயக உறவுகளுக்குப் பின்னால் இருக்கின்றனர் என்பதை மறந்துவிடக் கூடாது.

கருணா, பிள்ளாயான் போன்றோர் எமது போராட்டத்தைச் சிங்களத்திற்குக் காட்டிக்கொடுத்தவர்கள். மகிந்தவின் செல்லப்பிள்ளைகள் ஆனால் தமிழர்களின் செல்லாக்காசுகள். இவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கருணாவின் சகோதரி மற்றும் பிள்ளையான் போன்றோர் இம்முறை படுதோல்வியைச் சந்திப்பார்கள்.

எனவே தாயக் கொள்கையை சிதைத்து மாகாணசபையை ஆதரிக்க மக்களை வழிநடத்தும் கூட்டமைப்புக்கு எமது மக்கள் தக்கபாடம் கற்பித்து சர்வதேசத்திற்கு நாம் மாகாணசபையை ஆதரிக்கவில்லை தனிநாட்டையே வேண்டி நிற்கின்றோம். இதுவே தமிழர்களின் தணியாத தாகம் என்பதை எடுத்துக் காட்ட வேண்டும்.

இதுவே இதுவரை காலமும் எமது மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தமது உயிரைத் தியாகம் செய்த மாவீரர்களுக்குச் செய்யும் மரியாதையாகவும் அமையும். மாவீரர்களும் மக்களும் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தது மாகாணசபை ஆட்சி முறைக்கு அல்ல. அவர்கள் தனிநாட்டுக்காகவே தம்மை ஆகுதியாக்கினார்கள். இதை மக்கள் மனதில் நிறுத்தி அந்த தியாகங்கள் என்றுமே வீண்போகாது என்பதையும் நினைத்து செயற்பட வேண்டும்.’ என அந்த அறிக்கையில் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எஸ்.ஜெயானந்தமூர்த்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (த.தே.கூ)

மட்டக்களப்பு மாவட்டம்.

http://thaaitamil.com/?p=30719

  • கருத்துக்கள உறவுகள்

கருணா.. பிள்ளையான் ஆடிற போது மெளனமாக இருந்தவர்.. சம்பந்தன் அதே மேடையில் ஏறி ஆடிறது தானா.. தப்பா தெரியுது..! கூட்டமைப்பு அதன் ஆரம்பகால இலக்கில் இருந்து பிறழ்ந்து.. சில ஆண்டுகள் கடந்து போயாயிற்று..!

இன்றைய தாயக தமிழர்களின் அரசியல் இடைவெளியை நிரப்ப கூட்டமைப்பைத் தவிர வேறு யாரும் திடமாக இல்லை என்ற நிலையில் கூட்டமைப்பின் கூத்துக்கள் மத்தியிலும் மக்களுக்கு அதனை ஆதரிக்க வேண்டிய நிலை..!

பிசாசுகளை காட்டிலும் மோகினிப் பேய் பறுவயில்லை என்று நினைக்கும் நிலையில் மக்கள்..!

கூட்டமைப்பு மீதான புலம்பெயர் மக்களின் அழுத்தம் பிரயோகிக்கும் நிலை வலுப்பெற்றால் அன்றி கூட்டமைப்பை அவ்வளவு இலகுவாக புலம்பெயர் மக்கள் வழிநடத்த முடியாது. அது இங்கிலாந்தில் மனைவி குடும்பமாக அசைலம் அடிச்ச ஜெயானந்த மூர்த்திக்கும் தெரியும்..! :icon_idea::lol:

ஜெயானந்தமூர்த்தி சொல்வது எதுவும் புலம் பெயர் தமிழருக்கு புதியதல்ல. அவர்களில் எல்லோரும் பொது அறிவும் பெரும்பாலானவர்கள் படிப்பறிவும் உள்ளவர்கள். கிழக்குமாகணத் தேர்தலில் பேசுவோரின் பேச்சை போன்றல்லாமல் கச்சிதமாக காரணங்களை காட்டி புலம் பெயர் மக்களின் தரத்திற்கேற்ற தெளிவான அறிக்கை ஒன்றை வெளிவிட்டிருக்கலாம். கூட்டமைப்புடன் தனிக்கடிதங்களில் தன் நியாயத்தை வாதாடியிருக்கலாம். கூட்டமைப்பை கண்டிக்க தேர்தல் காலத்தை தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் ஜெயானந்த மூர்த்தி கூட்டமைப்பு ஏன் தேர்தலில் நிற்ககூடாது என்று விளங்கவைக்கவில்லை. இவ்வளவு காலம் தாழ்த்தி விடும் அறிக்கை கூட்டமைப்பை தோற்கடிக்க மட்டுமே உதவும். தேர்தலில் நின்று விலகி இன்னொரு நியாயத்தை எடுத்துரைக்க இனி அது பயன்படாது.

இனி நாம் ஆயுதம் ஏந்தி போராடப்போவது இன்று, நாளைய கதை அல்ல. அது தேர்தலை கைவிட ஒரு காரணமாக முடியாது. வெளிநாடுகளுக்கு பிரச்சனையை விளங்கவைத்து தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் அதன் ஒருபாகம். வெளிநாடுகள் கூட்டமைப்புடன் அதில் சேர்ந்து செயல்ப்படுகின்றன.

பாங்கி மூன் தலைமையில் உள்ள ஐ.நா, சோனியா காங்கிரசின் இந்தியாவிட எதுவும் பெரிதல்ல.. துணிச்சலாக புலிகள் மீது பழியை போட்டு பொய்களை மட்டும் கூறித்திருந்த கருணாநிதி இப்போ அந்த ஒவ்வொரு பொய்களையும் மறைப்பதற்கு அதை தொடர்ந்து வரும் ஒன்பது பொய்களை சொல்லும் காலத்திற்கு வந்துவிட்டார். இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்பதால் காங்கிரஸ் அடக்கி வாசிக்கும் அறிகுறிகள் காணப்படுகிறது. மேலும் 2009 ல் துரோகி இந்தியாவிடம் தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு ஒடிய நிலையிலும் சம்பந்தர் இல்லை. எனவே இப்போ சம்பந்தர் இந்தியாவின் சேவகனாக தொழில்ப்படவில்லை.

அமெரிக்கா இல்லாமல் ஐ.நா இல்லை. உலகில் அத்தனை நாடுகளும் பலஸ்தீனுக்கு ஆதரவு கொடுத்தும், அமெரிக்கா பச்சைகொடி காட்டாததால் அது திரிசங்கு சொர்க்கமாக இருக்கிறது. ஒன்றில் ஐ.நா அமெரிக்கா இரண்டையும் விட்டுவிட்டு தீர்வொன்று காண வேண்டும். இல்லையேல் அமெரிக்காவூடாக ஐ.நாவை உசுப்பேத்தி தீர்வு காண வேண்டும். அமெரிக்காவை எதிர்த்துக்கொண்டு ஐ.நா. மூலம் தீர்வு பெறலாம் என்று ஜெயானந்த மூர்த்தி சொல்வது, இவர் இன்னமும் புலம் பெயர் நாடுகளில் சரியாக காடலடி எடுத்துவைக்கவில்லை எனபதைத்தான் காட்டுகிறது.

ஜெயானந்தமூர்த்தி இன்னமும் ரகுநாதனின் பதிவை படிக்கவில்லை போலும். ஜெயானந்தமூர்த்தி அதற்கு ஒரு தீர்வை சொன்னால் நல்லது.

http://www.yarl.com/...howtopic=107381

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

/இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்பதால் காங்கிரஸ் அடக்கி வாசிக்கும் அறிகுறிகள் காணப்படுகிறது/ -yesterday's NDTV midterm polls showed 127 seats for Congress compare to 216 in the last election.

/இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்பதால் காங்கிரஸ் அடக்கி வாசிக்கும் அறிகுறிகள் காணப்படுகிறது/ -yesterday's NDTV midterm polls showed 127 seats for Congress compare to 216 in the last election.

அருமையான செய்தி. நன்றி குயின்

[size=4]இப்படி ஒரு செய்தி நேற்று ஊடகங்களில் வந்திருந்தது.[/size]

[size=5]பிள்ளையானை வெற்றிபெற செய்ய வேண்டும் என கங்கணம் கட்டி நிற்கும் ஜெயானந்தமூர்த்தி ![/size]

[size=5]Published on September 1, 2012-10:14 am · No Comments[/size]

[size=5]பிள்ளையானையும் கருணாவின் சகோதரியையும் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதற்காக லண்டனில் தற்போது இருக்கும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.[/size]

[size=5]கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்காது புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.[/size]

[size=5]இதன் மூலம் தனது மனைவியின் மைத்துனரான பிள்ளையானும், தனது ஊரைச்சேர்ந்த கருணாவின் சகோதரியும் வெற்றிபெற வேண்டும் என்ற தீவிர பிரசாரத்தில் தற்போது ஈடுபட்டுள்ளார். தற்போதுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் கபடப் பேச்சுக்களை நம்பி மக்கள் பிழையான வழியில் செல்லக் கூடாது. அதற்கான அறிவூட்டல்களை எனது மக்களுக்கு வழங்க வேண்டியது காலத்தின் கடமை என்பதை நான் உணர்கின்றேன் என ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.[/size]

ஜெயனந்தமூர்த்தி இப்போ நிரந்தர வதிவிடவுரிமை பெற்றுவிட்டாரா?

[size=5]சிறீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பையும் தேசிய கீதத்தையும் சிங்கக்கொடியையும் நடாளுமன்றத்தையும் ஏற்று அதற்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் நடப்பேன் என்று சத்தியப் பிரமாணம் செய்த எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே![/size]

[size=5]தமிழீழ தேசியக் கொடிக்கும் தமிழீழ தேசிய கீதத்துக்கும் மதிப்பளிக்கும் மாவீரர்களின் ஈகத்தில் உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் எவரும் தமிழத்தை அழித்த சிறிலங்கா அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் நாடாளுமன்றத்தின் முன்நாள் இந்நாள் உறுப்;பினர் என்று சொல்லமாட்டார்கள்.அப்படிச் செல்வதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள்.[/size]

[size=5]விடுதலைப்புலிகள் இயக்க சார்பான சிலர் சிறீலங்கா நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டிருந்தால் அது அவர்களுக்கு தேசியம் சார்ந்து கொடுக்கப்பட்ட கடமை. அந்தக் கடமை முடிந்த பின்பு அவர்கள் உண்மையில் விடுதலையை நேசிப்பவர்களாக இருந்தால் நாங்கள் விடுதலைச் செயற்பாட்டாளர்கள் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்வதைத்தான் பெருமையாகக் கொள்வார்களேயன்றி தமிழர்களை அழித்த தமிழர்களை கொலை செய்த ஒரு நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் என்று சொல்லமாட்டார்கள். அப்படிச் செல்வதற்கு அவர்களது மனம் கூசும்.[/size]

[size=5]விடுதலைப்புலிகளுக்கு எதிரான மாற்றுக் குழு உறுப்பினர்கள் கூட நான் இன்ன குழுவின் உறுப்பினன் என்று தான் சொல்வார்களே தவிர சிறீலங்கா அரசாங்கத்தை பிரதிநித்தவப்படுத்தும் ஒரு அமைப்பின் முன்நாள் இன்நாள் உறுப்பினர்கள் என்று சொல்ல கொஞ்சம் தயங்குவார்கள்.[/size]

[size=5]சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நாங்கள் பிரதிநிதித்துவம் பெறுவது எங்களுக்கு பெருமையல்ல.அது ஒரு சுமை. இனத்துரோகிகள் அதற்குள் சென்று தாங்கள் தான் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சர்வதேசத்துக்கு சொல்லிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தேசிய செயற்பாட்டாளர்கள் உணர்வாளர்கள் என்று சொல்பவர்களை தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற வைக்கிறோம். அந்த நபர்கள் நாங்கள் தமிழ் தேசித்தின் பிரதிநிதிகள் என்று சொல்வதற்க பதிலாக சிறீலங்கா நாடாளுமன்றத்தின் முன்நாள் இந்நாள் உறுப்பினர் என்று தங்களை அடையாளப் படுத்தினால் கருணா பிள்ளையான் டக்ளஸ் போன்றவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணம் போன்றதல்ல.அங்கு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் பெருமளவு சிங்கள வாககாளர்களும் பெருமளவு முஸ்லிம் வாக்காளர்களும் இருக்கிறார்கள்.இந்த நிலையில் தமிழ் மக்கள் மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணித்தால் ஒரு சிங்களக் கட்சியின் அல்லது முஸ்லிம் காங்கிரசினது உறுப்பினர்தான் கிழக்கின் முதலமைச்சராக வர முடியும்.முஸ்லிம் காங்கரஸ் உறுதியற்ற நிலைப்பாட்டைக் கொண்டது.இந்தத் தேர்தலில் வென்று ஆட்சி அமைப்பதன் மூலம் தமிழ் மக்கள் எனது ஆட்சியை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று உலகுக்காட்ட மகிந்தர் முயற்ச்சிக்கிறார்.அதனால் வடக்கு மாகாணத் தேர்தலை நடத்தாது கிழக்கு மாகாணத்தேர்தலை நடத்துகிறார்.அதவும் ஒரு வருடத்துக்கு முன்னே நடத்துகிறார்.இந்த மாதம் ஜெனிவாவுக்கு ஒரு செய்தியைச் சொல்வதற்காகவே இதனை நடத்துகிறார்.விகிதசாரத்ஈதர்தலில் மக்கள் வாக்களிக்கும் எண்ணிக்கை குறைந்தால் அற்ப சொற்ப வாக்குகளைப் பெற்ற கட்சிகள் கூட உறுப்பினர்களைப் பெற்றக் கொள்ள முடியும்.முஸ்லிம்களும் சிங்களவர்களும் முழுமையாக வாக்களிப்பார்கள். அக தமிழரின் பிரதிநிதித்துவம் ஓர சிங்களக் கட்சிக்கோ முஸ்லிம் கட்சிக்கோ போய்விடும் ஆபத்து இருக்கிறது. ததேகூட்டமைப்பு ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும் இந்தத் தேர்தலில் ததேகூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டியது தமிழரின் கடமை.தமிழரின் கையில் உள்ள தற்போதுள்ள ஒரே ஆயுதம் வாக்குச் சீட்டு மட்டுமே.

இதனை நாம் பயன்படுத்தி தமிழர்கள் சனநாயக அரசியல் மீது நம்பிக்கை உள்ளவர்கள் என்பதையும் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதையும் உலகுக்கு உணர்த்துவோம்.தமிழ் கூட்டமைப்பின் சில தவறுகளை விமர்சிக்கும் நேரம் இதுவல்ல.ஆகவே மக்களே எல்லோரும் திரண்டு வந்து வீட்டுச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.