Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா பக்கம் வீசும் இலங்கைக் காற்று

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://eelampakkam.blogspot.no/2012/09/blog-post_11.html

ஐரோப்பா, ஆசியாவை மையப்படுத்தியிருந்த இலங்கையின் இராஜதந்திர முனைப்புகள் இப்போது ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா நோக்கித் திரும்பியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, ஆபிரிக்காவில் உள்ள புர்கினா பாசோ, கமரூன், கேப் வேடே, மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட், ஐவரிகோஸ்ட், டிஜிபோடி, ஈக்வடோரியல் கினியா, காபோன், காம்பியா, மலாவி, மொரிடானியா, நைகர், சியராலியோன், டோகோ ஆகிய 15 நாடுகளுடன் இலங்கை புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை முற்றாக மீளாய்வு செய்யப்பட்டதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான செசெல்ஸ் ஜனாதிபதி ஜேம்ஸ் அலிக்ஸ் மிக்கேல் கடந்த வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் செசல்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன் போல் அடம் கொழும்பு வந்திருந்தார். அதேபோல சுவாசிலாந்து மன்னரும் அண்மையில் கொழும்பு வந்திருந்தார். அதேவேளை, நைஜீரியா விரைவில் கொழும்பில் ஒரு தூதரகத்தை திறக்கவுள்ளது. இலங்கைக்கான நைஜீரியாவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஒயேபோலா குகு அண்மையில் கொழும்பு வந்து, வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளை சந்தித்து தூதரகத்தை அமைப்பதற்கான இடம் குறித்து ஆராய்ந்திருந்தார். 160 மில்லியன் மக்களையும், பலமான பொருளாதாரத்தையும் கொண்ட நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் இலங்கை இந்த ஆண்டில் தூதரகத்தை நிறுவவுள்ளது. தென்னாபிரிக்க உயர்மட்டக் குழுவும் கூட அண்மையில் கொழும்பு வந்திருந்தது. இவ்வாறாக, அபிரிக்க நாடுகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும் நகர்வுகளை இலங்கை தீவிரப்படுத்தியுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னதாக, 15 ஆபிரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு அனுமதி கோரும் பத்திரத்தை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதி பெற்றிருந்தார். திடீரென ஆபிரிக்க நாடுகளுடனான உறவுகளை இலங்கை வலுப்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளின் பக்கம் மட்டுமன்றி, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பக்கமும் தான் இலங்கை சாயத் தொடங்கியுள்ளது. 13 இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. கௌதமாலா, பெலிஸ், நிக்கரகுவா, பார்படோஸ், கிரெனடா, சென்.கிட்ஸ் அன்ட் நெவிஸ், சென்.வின்சென்ட் அன் கிரெனடின்ஸ், சூரினாம், ஹொண்டூராஸ், அன்டிகுவா அன் பர்புடா, டொமினிக்கா, ஹெய்டி, சென்.லூசியா ஆகிய நாடுகளுடனேயே இலங்கை அரசாங்கம் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவுள்ளது.

இலத்தீன் அமெரிக்காவில் உள்ள 33 நாடுகள் ஐ.நாவில் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 20 நாடுகளுடன் இலங்கை இராஜதந்திர உறவுகளை வைத்துள்ளது. ஆபிரிக்காவில் மொத்தம் 54 நாடுகள் உள்ளன. அவற்றில் இரண்டு நாடுகளில் தான் இலங்கைத் தூதரகம் இருந்து வந்தது. இப்போது மேலும் 15 நாடுகளுடன் இராஜதந்திரத் தொடர்புகளை எற்படுத்தவுள்ளது இலங்கை.திடீரென ஆபிரிக்கா இலத்தீன், அமெரிக்கா பக்கம் இலங்கை சாய்வதற்கு பொருளாதார அல்லது வர்த்தக காரணம் ஏதுமில்லை.எல்லாமே அரசியல் காரணம் தான்.

இலத்தீன் அமெரிக்காவில் 33, ஆபிரிக்காவில் 54 என மொத்தம் 87 நாடுகள் என்பது ஐ.நாவில் சாதாரணமான எண்ணிக்கையல்ல. ஐ.நாவில் உள்ள சுமார் 194 உறுப்பு நாடுகளில், 87 நாடுகள் இந்த பிராந்தியங்களைச் சேர்ந்தவை. சர்வதேச அரங்கில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே, இந்த நாடுகளுடனான பிணைப்பை இலங்கை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. இலங்கையின் வெளிவிவகார கொள்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களின் முதற்படி தான் ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்காவை நோக்கிய இந்த அசைவு. இந்த மாற்றம் கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தான் தொடங்கப்பட்டது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதற்கு ஆதரவாக இலங்கையால் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகள் வெறும் 15 மட்டும் தான். 47 நாடுகளைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் 24 வாக்குகள் தீர்மானத்துக்கு ஆதரவாக கிடைத்தன. தலைகீழாக நின்றபோதும் இலங்கையால் அந்த தீர்மானத்தை தோற்கடிக்க முடியவில்லை. காரணம் இலங்கைக்கு சார்பான நிலையை உருவாக்க முடியாது போனது தான்.

இலங்கை ஒரு காலத்தில் மேற்கு நாடுகளின் தயவில் தங்கி நின்றது. அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி, போன்ற மேற்கு நாடுகள் இலங்கைக்கு தாராளமாக உதவிகளை வழங்கின. போருக்கான ஆயுதங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தன.பின்னர் அது ரஸ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பக்கம் சாய்ந்து கொண்டது. இப்போது இலங்கை பிரதானமாக சீனாவையும் அதற்கடுத்து ரஸ்யா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளையும் சார்ந்து நிற்கிறது. இலங்கைக்கு மேற்கு நாடுகள் இப்போது வேண்டப்படாத நாடுகளாக உள்ளன.மேற்கு நாடுகளுடன் உறவுகளை வைத்துக் கொள்வதால் ஒன்றும் சாதிக்க முடியாது என்ற கட்டத்தில், இலங்கை இப்போது ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஆசிய நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. ஆபிரிக்காவுக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் 13 ஆசனங்கள் உள்ளன. இலத்தீன் அமெரிக்காவுக்கு 8 ஆசனங்கள் உள்ளன. ஆசியாவுக்கு 13 ஆசனங்கள் உள்ளன. கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவுக்கு 6 மற்றும் 7 ஆசனங்கள் தான் உள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையுடனான பிணக்குகள் இப்போதைக்கு தீரப்போவதில்லை.ஏனென்றால், போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் விவகாரம் உடனடியாகத் தீர்க்கப்படக் கூடிய பிரச்சினையல்ல. பல நாடுகளில், பல தசாப்தங்கள் கழிந்து கூட போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எனவே, இலங்கையில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கான அழுத்தங்கள் தற்போது இருந்தாலும் கூட, அது செயல் வடிவம் பெறுவதற்கு பலகாலம் செல்லலாம். எனவே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையுடனான உறவுகள் சீராக இருக்க வாய்ப்புகள் குறைவு. இதனால் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தனக்கான பாதுகாப்பு வளையம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு போதியளவு பாதுகாப்பு உள்ளது. அங்கு சீனாவும்,ரஸ்யாவும் இலங்கைக்கு எதிரான எந்த நகர்வையும் தடுத்து விடும். அவற்றுக்குள்ள வீட்டோ அதிகாரங்களை மீறி மேற்குலகினால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிலைமை அவ்வாறு இல்லை. அங்கு வீட்டோ அதிகாரம் யாருக்கும் கிடையாது. உறுப்பினராக இருக்கும் 47 நாடுகளில் பெரும்பான்மையானவற்றின் கருத்துகளே கணக்கில் எடுக்கப்படும்.அங்கு மேற்கு நாடுகளின் செல்வாக்குத் தான் அதிகம். அதனால் தான் அமெரிக்கா சுலபமாக அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. இலங்கை கடுமையாக முயன்றும் தோல்வியடைந்தது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் மாதம் வரப்போகின்ற மீளாய்வுக் கூட்டம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை என்பன இலங்கை அச்சம் கொள்ள வேண்டிய விடயங்களாக உள்ளன. இத்தகைய கட்டத்தில், அடுத்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்பார்ப்பை இலங்கை பூர்த்தி செய்யாது போனால் அடுத்து என்னவாகும் என்ற கேள்வியும் இருக்கிறது. இதனால், ஜெனிவாவில் இலங்கையைக் காப்பாற்றுவதற்கான ஒரு வளையத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இது கடந்த மார்ச் மாதம் வெகுவாக உணரப்பட்டது. இந்தநிலையில் தான், ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா பக்கம் இலங்கை நகர்ந்துள்ளது.

ஆபிரிக்காவில் இலங்கை உறவு வைத்துக் கொள்ளப் போகும் சில நாடுகளில் ஐந்தாறு இலட்சம் பேர் தான் சனத்தொகை. இந்த நாடுகளின் மூலம் இலங்கைக்கு பொருளாதார, வர்த்தக நலன்கள் ஒன்றும் கிடைத்து விடாது. ஆனாலும் இலங்கை பொருளாதாரச் அந்த நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்தப் போகிறது, இதற்கெல்லாம் ஒரே காரணம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தான். ஐ.நா மனித உரிமைகள் பேரவை என்பது அரசாங்கத்தின் நிம்மதியைக் கெடுக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. அதனை சமாளிக்கும் வகையில் தான் இந்தப் புதிய இராஜதந்திர வழிமுறை. இது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கட்டுரையாளர் தொல்காப்பியன் இன்போ தமிழ் குழுமம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா பக்கம் வீசும் இலங்கைக் காற்று

இதெல்லாம் ஆர் குடுத்த ஐடியா எண்டு நினைக்கிறியள்???? சீனா எண்டு நான் நினைக்கிறன் :rolleyes: ....ஏனெண்டால் அவையள்தான் அந்தப்பக்கம் நிண்டு மரவள்ளிக்கிழங்குத்தோல் உரிக்கினம் :):icon_idea:

[size=4]ஆபிரிக்காவில் இலங்கை உறவு வைத்துக் கொள்ளப் போகும் சில நாடுகளில் ஐந்தாறு இலட்சம் பேர் தான் சனத்தொகை. இந்த நாடுகளின் மூலம் இலங்கைக்கு பொருளாதார, வர்த்தக நலன்கள் ஒன்றும் கிடைத்து விடாது. ஆனாலும் இலங்கை பொருளாதாரச் அந்த நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்தப் போகிறது, இதற்கெல்லாம் ஒரே காரணம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தான். ஐ.நா மனித உரிமைகள் பேரவை என்பது அரசாங்கத்தின் நிம்மதியைக் கெடுக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. அதனை சமாளிக்கும் வகையில் தான் இந்தப் புதிய இராஜதந்திர வழிமுறை. இது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
[/size]

[size=4]வரும் ஐ.நா. அமர்வில் அமெரிக்கா ஒரு நகர்வை சிங்களத்திற்கு எதிராக மேற்கொண்டால், இந்த நாடுகளில் பலவும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். [/size]

[size=4]அதேவேளை சில இலத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவையும் மீறி ஆதரவளிக்கும். [/size]

இனப்படுகொலையாளர்களை மனிதாபிமானம் உள்ள எவரும் அரசியலுக்காகக் கூட ஆதரிக்க மாட்டார்கள்!

எதிர் அரசியல் நடவடிக்கைகளை தாமதிக்காது மேற்கொள்ள வேண்டியது, கோவில்களில் பிரார்த்தைகளை செய்துவிட்டு நித்திரை கொள்ளும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பொறுப்பு!

மற்றவர்களை மடையர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்று நினைப்பது தான் எம் சிறப்பு குணம் .அதைவிட காசை எறிந்தால் எதையும் வாங்கலாம் என்பது புலம் பெயர்ந்த புண்ணாக்குகளின் சிந்தனை .

மற்றவர்களை மடையர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்று நினைப்பது தான் எம் சிறப்பு குணம் .அதைவிட காசை எறிந்தால் எதையும் வாங்கலாம் என்பது புலம் பெயர்ந்த புண்ணாக்குகளின் சிந்தனை .

உங்கள் சிறப்புக் குணங்களை அடிக்கடி கூறுவதில் உங்களுக்கு நிகர் வேறொருவரும் இல்லை! :D

எட்டாம் வகுப்பிற்கு மேலே போகாததேல்லாம் ஒன்று சேர்ந்ததும் ஒரு சிறப்பு குணம் தான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.