Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றிலைக்கேணியில் டோரா தாக்கியழிப்பு

Featured Replies

எப்படி வசிண்ணாவுக்கு மட்டும் இப்படி யோசிக்க தோன்றுகின்றது??

4 ஆம் இணைப்பு) புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட 700 படையினர் இந்தியப் பகுதிக்கு தப்பினர்- 20 பேர் பலி!

யாழ். வடமராட்சி கிழக்கில் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை நடந்த மோதலில் கடற்படைக் கப்பலில் இருந்த 710 கடற்படையினர் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்கள் இந்திய கடற்பிரதேசத்துக்குச் சென்று தப்பினர்.

திருகோணமலையிலிருந்து 700-க்கும் மேற்பட்ட சிறிலங்கா கடற்படையினரை வட பகுதிக்குக் கப்பலில் அனுப்பிய போது போது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் 2 டோரா படகுகள் அத்துமீறி உள்நுழைந்தன.

இதையடுத்து சிறிலங்கா கடற்படையினரை தமிழீழ விடுதலைப் புலிகளின் 20-க்கும் மேற்பட்ட கடற்படைப் படகுகள் சுற்றி வளைத்தன.

இதனால் தமிழீழ கடற்படையினர் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.

விடுதலைப் புலிகளின் பதிலடித் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் கப்பலுக்குப் பாதுகாப்பாக வந்த இரு படகுகளும் பருத்தித்துறையில் மாலை 5 மணியளவிலும் அதன் பின்னர் வெற்றிலைக்கேணி பகுதியில் மாலை 5.15 மணியளவிலும் அழிக்கப்பட்டன.

இதனையடுத்து 700க்கும் மேற்பட்ட படையினருடனான கப்பல் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தக் கப்பல் இந்தியப் பகுதிக்கு பத்திரமாக தப்பிச் சென்றதாக சிறிலங்காவின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அழிக்கப்பட்ட டோராப் படகு ஒன்றிலிருந்த 15 முதல் 20 வரையிலான கடற்படையினர் கொல்லப்பட்டிருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்கா இராணுவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலில் 4 கடற்புலிகள் வீரச்சாவடைந்ததாகவும் இரு போராளிகள் படுகாயமடைந்திருப்பதாகவும் தமிழ்நெற் இணையதளம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து திருமலை, யாழ். மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சிங்கள முப்படைகள் தாக்குதல் நடத்தின.

இச்சம்பவம் குறித்து சிறிலங்கா இராணுவம் வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் 15-க்கும் மேற்பட்ட தற்கொலைப் படகுகளால் பெருந்தொகையான கடற்படையினரை ஏற்றி வந்த கப்பல் "பேர்ள்குரூசர்" வெற்றிலைக்கேணி கடற்பிரதேசத்தில் இன்று மாலை 4 மணயளவில் தாக்குதலுக்குள்ளானது. கடற்படையினர் திருப்பித் தாக்கியதில் மூன்று தற்கொலைப் படகுகள் முற்றாக அழிக்கப்பட்டன.

விமானப் படையினரது உதவியுடன் கடற்படை நடத்திய பதில் தாக்குதலில் மேலும் 4 படகுகள் சேதமடைந்தன. இதில் படைத்தரப்பின் 15 பேருடன் இருந்த ஒரு டோரா படகு பாதிக்கப்பட்டது.

விமானப் படையின் உதவியுடன் அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சம்பவத்தின் போது படையினரது கப்பலிலும் டோராப் படகிலும் இரு போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரும் இருந்தனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

எமது நிர்வாக கடற்பிரதேசத்தில் எமக்கு உரிமை உண்டு: கண்காணிப்புக் குழுவுக்கு புலிகள் பதில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய எமது நிர்வாக கடற்பிரதேசத்தில் எமது கடற்புலிகளின் நடவடிக்கைகளுக்கு உரிமை உண்டு என்று இலங்கைப் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பதிலளித்துள்ளனர்.

யாழ். வெற்றிலைக்கேணி கடற்சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர், விடுதலைப் புலிகளுக்கு இலங்கைக் கடலில் உரிமை இல்லை என்று தெரிவித்திருந்தனர்.

இதற்குப் பதில் தெரிவித்து கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹென்றிக்சனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அனுப்பியுள்ள கடிதம்:

மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன்

தலைவர்

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு

பொருள்: மே 11ஆம் நாள் நடைபெற்ற் கடற் சம்பவம் மற்றும் வன்னி பிரதேசம் மீதான குண்டு வீச்சு

யுத்த நிறுத்த ஒப்பந்தமானது இராணுவச் சமநிலையினை அடிப்படையாகக் கொண்டது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர இராணுவச் சமநிலை அவசியமானது என்பது சாதாரண உண்மை.

இந்த இராணுவச் சமநிலைக்கு யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்னரே கடற்புலிகள் பங்களிப்புச் செய்துள்ளனர். எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் கடற்பிரதேசங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த உண்மையை கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாள் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு வெளியிட்ட அறிக்கையிலும் உறுதிபடுத்தப்பட்டது.

"யுத்த நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் நாள் கைச்சாத்திடப்பட்டபோது தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது கடற்புலிகளையும் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் இருப்பானது ஒரு அறிவிக்கப்படாத கடற்படையாகும். தற்போதைய யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு இராணுவச் சமநிலை என்பது அடிப்படையானது. இருதரப்பினரும் தங்களது படையினரை தொடர்ந்து வைத்திருக்கும்போது இருதரப்பினரும் தங்களது பிரதேசங்களில் பயிற்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிமை உண்டு"

என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச கடற்பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைக் கலங்கள் ஆயுதங்களுடன் பயணிக்கும் என்று பேச்சிலும் எழுத்திலும் பலமுறை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவுக்கு நாம் தெரிவித்திருந்தோம்.

மேலும் எமது நடவடிக்கைகளில் சிறிலங்கா கடற்படையினர் இடையூறு விளைவிக்கும் போது நாம் பதில் நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் திரும்ப திரும்ப கண்காணிப்புக் குழுவுக்குத் தெரிவித்திருந்தோம். இந்தக் காரணத்துக்காகவே சிறிலங்காவின் கடற்கலங்களில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் கடல் கண்காணிப்பாளர்கள் பயணிக்க வேண்டாம் என்றும் நாம் எச்சரித்திருந்தோம்.

இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டு எம்மால் அனுப்பி ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களையும் நாம் இத்துடன் இணைத்துள்ளோம்.

இந்தப் பின்னணியில், மே 11ஆம் நாளன்று எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் கடற்பிரதேசத்தில் நாங்கள் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது எமது நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா கடற்படையினர் இடையூறு விளைவிக்கவும் தாக்குதல் நடத்தவும் முனைந்தனர். ஆகையால்; நாம் பதில் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்தோம்.

சிறிலங்கா கடற்படையினரால் கடற்புலிகளின் கலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எமது 4 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இரு போராளிகள் படுகாயமடைந்துள்ளனர்.

மே 11ஆம் நாளன்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் இது தொடர்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சிறிலங்காவைச் சுற்றியுள்ள கடற்பிரதேசமானது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். இதனை சர்வதேச விதிகளுக்கமைய கண்காணிப்புக் குழுவின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். அரச சார்பற்ற சக்திகள் கடற்பிரதேசத்தையோ வான்பரப்பையோ நிர்வகிக்க முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அத்தகைய உரிமை இல்லை" என்று அதில் தெரிவித்திருந்தனர்.

இராணுவச் சமநிலையில் கடற்புலிகளும் ஒரு அங்கம் என்றும் அவர்கள் தங்களது பயிற்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிமை உண்டு என்றும் முன்னர் கண்காணிப்புக் குழு வெளியிட்டிருந்த அறிக்கைக்கு இது முரணானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதனடிப்படையிலும் எமது எச்சரிக்கைகளின் அடிப்படையிலும் சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்களுக்குப் பாதுகாப்பாக கண்காணிப்புக் குழுவின் கடற்கண்காணிப்பாளர் பயணிப்பது ஆபத்தானது. அதே நேரத்தில் எமது கடற்படையின் கடற்கலங்களுக்கோ எமது போராளிகளுக்கோ கண்காணிப்புக் குழுவினர் பாதுகாப்பு வழங்கவில்லை. இதிலும் மோசமாக, இச்சம்பவமானது யுத்த நிறுத்த மீறலாக எமக்கு எதிராக கூறப்பட்டுள்ளது.

மே 11ஆம் நாள் கடல் சம்பவத்தைத் தொடர்ந்து சிறிலங்கா விமானப் படையினர் வன்னி பிரதேசம் மீது குண்டுகளை வீசினர்.

திருகோணமலை சம்பூர் பகுதியில் மக்கள் குடியிருப்புகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமான எறிகணை மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தினர்.

இந்தத் தாக்குதல்கள் பாரிய யுத்த நிறுத்த மீறல்களாகும். இருப்பினும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் இந்த பாரிய யுத்த நிறுத்த மீறல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கல்லை.

கண்காணிப்புக் குழுவினரது இந்த பாரபட்ச செயற்பாடானது எமக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் அதிருப்தியளிப்பதாகவும் உள்ளது.

தங்கள்

சு.ப.தமிழ்ச்செல்வன்

பொறுப்பாளர்

தமிழீழ அரசியல்துறை

இக்கடிதத்துடன் ஏப்ரல் 18, மே 10 மற்றும் கடைசி எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட மே 11ஆம் நாள் கடிதங்களை மீண்டும் கண்காணிப்புக் குழுவுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அனுப்பி வைத்துள்ளார்.

- புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் நீத்த போராளிகளுக்கு எனது வீர அஞ்சலி

மேற்கோள்:

தமிழீழ விடுதலைப் புலிகளின் 15-க்கும் மேற்பட்ட தற்கொலைப் படகுகளால் பெருந்தொகையான கடற்படையினரை ஏற்றி வந்த கப்பல் "பேர்ள்குரூசர்" வெற்றிலைக்கேணி கடற்பிரதேசத்தில் இன்று மாலை 4 மணயளவில் தாக்குதலுக்குள்ளானது.

மனசு கொஞ்சம் நிறையுது.....

வாழ ஆசைபட்டு - கஸ்டப்பட்டு முன்னேற நினைச்ச -அப்பாவிகளையெல்லாம் - சுட்டு ரோட்டோரம் .....வீசினது..

ஒரு வேளை அந்த ஆத்மாக்களுக்கு - இது காணிக்கையோ என்னமோ!

எது எப்பிடியோ - உணர்வற்ற சடப்பொருளாய் - எங்க இனம் போகாமல் வாழ - இத் தாக்குதலில் உயிர் நீத்த - அந்த நெருப்பு பூக்களுக்கு -கண்ணீர்- கெளரவத்தோடு சேர்ந்த -

வீரவணக்கங்கள்!

3 ஆவது ஈழப்போரின் இறுதிப் பகுதிகளிலேயே டோரா படகுகளிற்கு தற்கொலைத் தாக்குதல் நடத்த வேண்டிய தேவை பொரும்பாலும் இல்லாமல் போய்விட்டது. காரணம் கடற்புலிகளின் சுட்டுத்திறன் சிறீலங்கா கடற்படையின் சுட்டுத்திறனுக்கு ஒப்பிடக்கூடிய அளவிற்கு வழர்ந்திருந்தது. அதனால் தான் சிறீலங்கா கடற்படை அதைவிட கூடிய தூரத்திலிருந்து தாக்கக்கூடிய பீரங்கிகளை பொருத்துவதற்கு முயற்சித்தது. பின்னர் அவற்றை கொள்வனவு செய்வதில் முன்னாள் கடற்படைத் தளபதி தயா சந்தகிரி சம்பந்தப்பட்டு ஊழலில் சிக்கியிருந்தார். அத்தோடு சிறீலங்கா கடற்படை படகுகளை தேடி தாக்கி அழிக்கும் ஏவுகணையையும் (அவை பொருத்தப்பட்ட missile boats)வேண்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த 4 வீரச்சாவுகளும் பயிற்சியில் ஈடுபட்டிருந்து கொண்டிருந்த கடற்புலிகள் மீது எதிர்பாராத முறையில் நடத்திய ஆரம்பத் தாக்குதலில் தான் கொல்லப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. சிறீலங்கா தரப்புத்தான் இதை தற்கொலத்தாக்குதலாக பிரச்சாரித்து மேற்குலகில் அவர்கள் கிலி கொண்டுள்ள தற்கொலைத்தாக்குதல்களோடு முடிச்சுப் போட்டு அனுதாபம் பெறமுயலுகிறது போலுள்ளது.

துருப்புக் காவியும் அதற்கு பாதுகாப்பு வழங்கிய டோராக்களும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலைக்கு சென்றார்களா இல்லை திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறைக்குச் சென்றார்களா? 1வது டோரா மூழ்கடிக்கப்பட்டது பருத்தித்துறைக் கடலில். 2 வது வெற்றிலைக் கேணி கடலில். அதன்படி பார்த்தால் சண்டை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்திருக்கிறது போலுள்ளது. வெற்றிலைக் கேணிவரை புலிகளின் படகுகளை கலைத்துக் கொண்டுவரும் அளவிற்கு சிறீலங்கா கடற்படையின் கை ஓங்கியிருந்தால் சர்வதேசக்கடலுக்கு தப்பிச் சென்று பின்னர் இந்தியக் கடற்படையின் பாதுகாப்புடன் திருகோணமலை செல்ல வேண்டியிருந்திருக்காது. உண்மையில் நடந்தது என்ன? :roll:

இந்தியக் கடற்படையின் உதவியுடன் 700 படையினரும் திருமலை சென்றனர்.

வடமராட்சி கிழக்கில் கடற் பயிற்சியில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா கடற்படையினரின் மேற்கொண்ட வலிந்து தாக்கும் நடவடிக்கை கடற்புலிகளால் நேற்று முறியடிக்கப்பட்டது.

இதனை அடுத்து கடற்புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட பேர்ள் குறூஸ் எனும் துருப்புக்காவி இருந்து 700 பேரும் கடற்புலிகளால் செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னர் சர்வதேச கடற்பரப்புக்கு நகர்ந்து இந்திய கடற்படையினரின் பாதுகாப்போது திருமலை சென்றடைந்துள்ளது.

தாக்குதலை அடுத்து சிறீலங்கா படைத்துறைச் செயலகத்தினால் கடற் சமரை முறியடிக்க இந்திய கடற்படையினரின் உதவி நாடப்பட்ட பொழுதும் இதற்கு இந்திய கடற்படையினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்திய கடற்படையினர் சர்வசேத கடற்பரப்பிற்குள் வந்தால் மட்டுமே தம்மால் பாதுகாப்ப வழங்கப்படமுடியும் என வலியுறுத்தப்பட்டதை அடுத்து 700 பேருடன் சர்சதேச கடற்பரப்பிற்கு நகர்ந்த பேர்ள் குறூஸ் எனும் துருப்புக்காவி கடற்கலம் பின்னர் இந்திய கடற்படையினரின் உதவியோடு திருமலை சென்றடைந்துள்ளது.

-பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

உப்படிப் போகும்போது வெக்கம் ஒண்டும் இல்லாமல் போகினமோ? :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்படிப் போகும்போது வெக்கம் ஒண்டும் இல்லாமல் போகினமோ? :evil: :evil:

எப்பதான் அவைக்கு வெக்கம் இருந்திருக்கு, இப்ப மட்டும் வெட்கம் வந்து சேருவதற்கு :twisted: :twisted:

எப்பதான் அவைக்கு வெக்கம் இருந்திருக்கு, இப்ப மட்டும் வெட்கம் வந்து சேருவதற்கு :twisted: :twisted:

அவைக்குத் தெரியாததை எல்லாம் நீங்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறியள் போலை கிடக்கு.....

உண்மையில் நடந்தது என்ன? :roll:

தமிழ் ஈழ கடற்பிரதேசத்தில் பயிற்ச்சியில் ஈடு பட்டுக் கொண்டிருந்த தமிழ் ஈழ கடற்கலங்கள் மேல் தாக்குதல் மேற் கொள்ளப் பட்டது.

பதில் தாக்குதலில் ஒரு சிறிலங்கா கடற்படயின் படகு வெற்றிலை கேணியில் அழிக்கப்பட்டது.மற்றப்படகு சேதம் ஆக்கப் பட்டது.சேதமாக்கப்பட்ட படகு கான்கேசந்துறை நோக்கிச் செல்லும் வழியில் மூழ்கியது.அதில் இருந்த கண்காணிப்புக் குழு உறுப்பினரும் மற்றும் படயினரும் இன்னொரு படகில் ஏற்றப் பட்டனர்.

எதுவித பாதுகாப்பும் அற்ற நிலையில் இருந்த கப்பல், விடுதலைப் புலிகளினால் சர்வதேச கடல் எல்லைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது.அதில் இன்னொரு கண்காணிப்புக் குழு உறுப்பினர் இருந்தார்.

தமிழ் ஈழ கடற்படயின் பலம் இப்போது நிருபீக்கப்பட்டுள்ள நிலயில் , கடல் சார் சுயாதிப்பத்தியம் சம்பந்தமாக கண்காணிப்புக் குழு விட்ட பிழையான அறிக்கை திருத்தப்பட வேண்டும்.புதிய உடன் படிக்கை ஒன்று இது சம்பந்தமாக எட்டப் பட வேண்டும்.அல்லாவிட்டால் தொடர்ந்தும் இவ்வாறான மோதல் சம்பவங்கள் நடைபெறும். இலங்கைக் கடற்படை சர்வதேச கடற்பிராந்தியத்திலயே பயனிக்க வேண்டியதாக இருக்கும்.இது குடா நாட்டில் உள்ள படையினருக்கு பல வழங்கல் சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.கண்காணிப்புக் குழு உறுபினர்கள் கூட தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த புலிகளுடன் உடன் பாட்டுக்கு வரவேண்டி இருக்கும்.உடன் பாடு இன்றி அவர்கள் பயணித்தால் அது உயிராபத்தான விடயமாகவே முடியும்.மொத்தத்தில் இன்னொரு ஆப்பு வைக்கப் பட்டுள்ளது,கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்பினூடாக.

இவற்றைத் தவிர்க்க இலங்கை அரசாங்கம் நோர்வேயுனூடாக புலிகளுடன் பேசி ஒரு தீர்வுக்குவரவேண்டி இருக்கும்.இதன் சாத்தியக் கூறுகள் குறைவான நிலயில் , குடா நாட்டில் நிலை கொண்டுள்ள படையினரின் வழங்கல் தொடர்ந்தும் பிரச்சினைக்குள்ளதாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் கொடுக்கப் போகும் விலை!!

வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் கடற்புலிகளிடம் பெருத்த அடி வாங்கி அவமானகரமான தோல்வியை சந்தித்த சிறிலங்கா கடற்படை தீவுப் பகுதியில் வெறியாட்டம் ஆடி வருகிறது. அல்லைப்பட்டியில் 9 பேரும் புளியங்கூடலில் 4 பேரும் சிங்களக் கடற்படையினரால் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பச்சைக் குழந்தைகள் கூட இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டிருப்பது நெஞ்சத்தை பதற வைக்கிறது. விடுதலைப்புலிகள் வயது குறைந்தவர்களை படையில் சேர்ப்பதாக கூக்குரல் இடும் சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும், இதுவரை இந்தக் கொலைகளைக் கண்டிக்கவில்லை.

கண்காணிப்புக் குழுவும் இந்த கோரக் கொலைகள் குறித்து இதுவரை எதுவும் சொல்லவில்லை. ஆனால் இதே கண்காணிப்புக் குழு வெற்றிலைக்கேணியில் நடந்த தாக்குதலை விழுந்தடித்து கண்டித்தது. விடுதலைப்புலிகளின் கடற்படையின் பலத்தை உணர்ந்து கொண்ட சர்வதேசத்திற்கு, அது எந்த விதத்திலும் உவப்பானதாக இருக்கவில்லை. அதனால் கோபி அனான் தொடக்கம் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா என்று அனைவரும் விடுதலைப்புலிகளை கண்டித்தார்கள்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஆழிப்பேரலை பேரழிவில் கடற்புலிகளின் பலம் சிதைந்து போய்விட்டதாகவே இதுவரை சர்வதேச, சிறிலங்கா ஊடகங்கள் கூறி வந்தன. அத்துடன் நான்கு வருடங்களாக சண்டைகளில் ஈடுபடாத கடற்புலிகளின் சண்டையிடும் ஆற்றல் நீர்த்துப் போயிருக்கலாம் என்றும் சில ஆய்வாளர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இரு வாரங்களிற்கு முன்னர் கடற்புலிகளின் பீரங்கிப் படகுகள் சிறிலங்கா கடற்படையை விரட்டி அடித்து விட்டு முல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு சென்று திரும்பின. அப்பொழுது பெரும் மோதல் எதுவும் ஏற்படாததால், கடற்புலிகளின் சண்டையிடும் திறன் சரியான முறையில் உணரப்படவில்லை. பின்பு 05.05.06 அன்று கற்பிட்டிக் கடற்பரப்பில் கடற்புலிகளின் படகு ஒன்றை மூழ்கடித்துவிட்டதாக சிறலங்கா கடற்படை அறிவித்தது. இத் தாக்குதலில் விமானப்படையினரும் ஈடுபட்டதாகவும், கடற்புலிகள் தாக்குப்பிடிக்க முடியாது பின்வாங்கி விட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு அடுத்த நாள் கடற்படைத் தளபதி "சிறிலங்கா கடற்படை கடற்புலிகளை வெற்றி கொள்ளும் வல்லமை கொண்டது" என்று இறுமாப்பாக அறிவித்திருந்தார்.

ஆனால் கடந்த 11.05.06 அன்று வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் நடந்த சமர் கடலாதிக்கம் யாரிடம் இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டிவிட்டது. கடற்படையின் இரண்டு டோராக்களும் 18 கடற்படையினரும் அழிக்கப்பட்டனர். 700 கடற்படையினருடன் வந்த துருப்புக்காவிக் கப்பல் இந்தியக் கடற்பகுதிக்குள் ஓடித் தப்பியது. இத்தனைக்கும் வெற்றிலைக்கேணியை விரைவாக சென்றடையும் வண்ணம் மிக அருகில் காங்கேசந்துறை கடற்படைத் தளமும், காரைநகர் கடற்படைத் தளமும் அமைந்துள்ளன. உடனடியாகவே விமான உதவிகளை வழங்குவதற்கு ஏற்றபடி பலாலி விமானத் தளமும் மிக அருகிலேயே அமைந்துள்ளது. உண்மையில் கடற்படைக்கு சாதகமான ஒரு கடற்பிரதேசத்தில் கடற்புலிகள் இந்த சண்டையை நிகழ்த்தி இருக்கிறார்கள். கடற்படையினருக்கு அனைத்துவிதமான உதவிகளும் உடனடியாகக் கிடைத்தும், கடைசியில் துருப்புக்காவி ஓடித் தப்பி, இந்தியக் கப்பல்களின் உதவியுடன் திருகோணமலைத் துறைமுகத்தை வந்து அடைய வேண்டியிருந்தது என்றால், கடற்புலிகளின் தாக்குதலின் அகோரத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

விடுதலைப்புலிகளின் தாக்குதலினால் ஆடிப் போன சிங்கள அரசுக்கு முண்டு கொடுக்கும் வண்ணம் சர்வதேசம் உடனடியாக விடுதலைப்புலிகளை கண்டித்து அறிக்கை வெளியிட்டது. கண்காணிப்புக் குழுவும் விடுதலைப்புலிகளை கண்டித்தது. இதை அடுத்து சுப. தமிழ்செல்வன் கண்காணிப்புக் குழுத் தலைவரை கிளிநொச்சிக்கு அழைத்து கடுமையான தொனியில் காலம் கடந்து விட்டதை தெளிவு படுத்தி அனுப்பினார். விடுதலைப்புலிகள் தமது மென்போக்கை கைவிட்டு விட்டதை உணர்ந்த கண்காணிப்புக்குழுவும் தமது கடற் கண்காணிப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

கண்காணிப்புக் குழுவின் துணையோடு யாழ் குடாவிற்கு படைகளையும் அனுப்பி வினியோகங்களையும் செய்யலாம் என்ற சிறிலங்கா அரசின் திட்டத்தை விடுதலைப்புலிகள் சிதறடித்து விட்டார்கள். தமிழீழக் கடல் தமிழருக்கு சொந்தமானது என்பதையும் "அடித்து" சொல்லிவிட்டார்கள். அவமானத்தால் ஆத்திரம் அடைந்திருக்கும் சிங்களக் கடற்படை தீவுப் பகுதிகளில் வெறியாட்டம் போட்டு வருகிறது. இதற்கு சிங்களம் கொடுக்கப் போகும் விலை மிக மிக அதிகமாக இருக்கும்.

-வெப்பீளம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.