Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் சத்தியப் பிரமாணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் இளைஞர்களுடைய சிந்தனையே வேறு விதமா தான் இருக்கு இந்த துரோகி பட்டம் கட்டுறதுகள் எல்லாம் தமிழ் தேசியத்த வைச்சு பிளைச்சதுகள்

அதுகளுக்கு மக்கள் மேல அக்கறை இல்லை வீட்ட ஹோம் தியேட்டர்ல இருந்து மானாட மயிலாட பாத்துக்கொண்டு அறிக்கை விடுறவை....

  • Replies 109
  • Views 6k
  • Created
  • Last Reply

கிழக்கு மாகாணத்தில் மட்டுமன்றி முழு வடகிழக்கு மாகாணத்திலுமே உயர் பதவிகள் சுழற்சி முறையில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் ஆண்டனுபவிக்க வேண்டும் என கனவு காண்கின்றேன்.

தாய்மண்ணில் வாழ ஏங்கியபடி அகதிமுகாம்களில் வாடும் சம்பூர் தமிழ் மக்களதும் படுவான்கரை முஸ்லிம் அகதிகளதும் வாழ்வை மீட்டுத்தந்து துன்பப்படும் மக்களின் நம்பிக்கை நட்சதிரமாக நீங்கள் செயல்படவேண்டும். என்பது இந்தக் கவிஞனின் ஆசை.

நமது பாரம்பரிய தாயகமான வடகிழக்கு மண்ணை சூரியனும் சந்திரனும் உள்ள வரைக்கும் காலமெல்லாம் தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடனும் சமத்துவத்துடனும் நீதியுடனும் ஆண்டனுபவிக்கவேண்டும் என்கிற என்னுடைய கனவை வடகிழக்கு மக்கள் மனசில் விதைக்கிறேன்.

எல்லாம் பொயட் ஐயாவின் கனவும் ஆசையுமே தவிர முஸ்லிம்கள் இவர் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.....

தமிழன் ஒருவன் தமிழருக்கு பதவி கிடைக்காமல் முஸ்லிம்களுக்கு கிடைத்து விட்டது என்று சந்தோசப்படலாம். ஆனால் முஸ்லிம்கள் தமக்கு கிடைத்த பதவியை மீண்டும் சுழற்சி முறையில் தன்னும் தமிழனுக்கு விட்டுக்கொடுக்க நினைக்க மாட்டார்கள்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்கள் ஏற்று கொள்ளினாமா இல்லையா தெரியாது ஆனால் நாங்கள் நேசக்கரம் நீட்ட வேண்டியது காலத்தின் கட்டாயாம் அதை நாங்கள் திறந்த மனதுடன் செய்வோம்.... :D

முன்பு கருணா, பிள்ளையான் சொன்ன மாதிரி கூட்டமைப்பு போட்டி போடாது போயிருந்தால் இன்று ஒரு தமிழன் வந்திருப்பான். பிறகென்ன வெண்டவன நோக்கி நேசக்கரம் நீட்டிறது?

இது சரியா? அது சரியா? :D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க இப்ப செய்றது பாலிடிக்ஸ் பாஸ் :D

அதுசரி நீங்க செய்தா பாலிடிக்ஸ். மற்றவன் செய்தா துரோகம்.

புலிகளுக்கு பூத்தூவி அறிவுரை சொன்ன கவிஞர் எல்லாம் பூமராங்காய் மாறி, அறிவுரை கூறியுள்ளார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் யார பாஸ் துரோகி எண்டனான்? Never

சொன்னவர்களே காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறிவிட்டார்கள் என்பதைச் சொன்னேன். :rolleyes:

பாலி ஆறு பாயிது பாஸ் - அதில்

பச்சைத் துரோகங்களும் தெரியுது பாஸ்

மேலே நான் செய்த பதிவில் பச்சை குத்தியிருப்பது எனக்கல்ல, நான் கொண்டு வந்திருந்த கருத்துகென்று வைத்துக் கொள்ளலாம். ஒரு காரணம் கருத்தால் விபரியாத பச்சை, இது போல குழப்பத்தை மட்டும்தான் வரவழைக்கும்.

நான் வேறு சில இடங்களில் செய்திகளை மேய்ந்த போது இதை கண்டேன். நான் இங்கே இதை கொண்டு வந்ததற்கான ஒரே காரணம் செயபாலன் கருத்துக்கள உறவு என்பதினால் மட்டுமே.

நான் இதுவரையில் அந்த ஆக்கத்தில் எது வரையான கருத்தையும் ஏற்படுத்தி கொள்ளவில்லை. பிரதானமாக நான் அந்த கருத்துக்களுக்கு உடந்தை என்பதும் உள்ளடங்களாக. இப்போது பதிவில் பச்சை இருப்பதால் நான் அதை வெளிப்படையாக தெளிய வைக்க வேண்டும்.

இந்த இடத்தில் கடந்து போன திரிகளில் சம்பந்தர் கூறியிருந்த ஒரு விடயத்தை நினவுபடுத்த விரும்புகிறேன். அதை சம்பந்தர் கூறியிருந்த காரணம், "கூட்டமைப்பு, 11 அங்கத்தவர்களை பெற, அதைவிட 4 அங்கத்தவர்களை குறையப் பெற்ற முஸ்லீம் காங்கிரசுக்கு விட்டுகொடுத்து முஸ்லீம் காங்கிரசை அரச கட்டில் ஏற்றுவது மக்கள் ஆணையை கணக்கில் எடுக்கும் போது ஜனநாயகமா?" என்ற கேள்வி எப்போதாவது எழ சந்தர்ப்பம் அமையலாம் என்பதால்த்தான் என்றுதான் நான் கருதியிருந்தேன்.

அதற்கு வரமுதல் சம்பந்தர் தேர்தல் காலத்தில் நினைவூட்டியிருந்த வேறு ஒரு விடயம், அஸ்சிரப் காலத்தில் மு.கா வுக்கும், கூட்டமைப்புக்கும் இடையிலான ஒப்பந்தம். இரண்டு மாகணங்களிலும் ஒவ்வொரு இனத்தவர் ஆட்சியை பொறுப்பேற்பதென்பது என்று. ஆனால், அஸ்சிரபின் பின் வந்த முஸ்லீம் கட்சிகளின் தலைவர்களான கக்கீம், பதியுதீன், அதவுல்லா போன்றோர் அஸ்சிரப்பின் பாதையிலிருந்து எப்போதோ விலகிவிட்டார்கள். கக்கீம் தனது கட்சிக்கு மட்டும், மு.கா என்ற பெயரை தக்க வைக்க முடிந்தது. இது இந்தியாவில் எது உண்மையில் காந்தி கட்டி வைத்த காங்கிரஸ் என்ற நிலை தெரியாமல் போன மாதிரியான நிலை.

கூட்டமைப்பு தெளிவாக கக்கீம் தலைமை வகித்த கட்சியை அஸ்சிரபின் கட்சியாக ஏற்று நடந்தது. ஆனால் கூட்டமைப்பு முஸ்லீம்கள் தமிழர்களின் ஒரு பகுதி என்று நிர்ணயித்தால், யார் முஸ்லீம்களின் அபிலாசைகளை பிரதி பலிக்கிறார்கள் என்றும் எடுத்துக் கொண்டு முஸ்லீம் மக்கள் அளிக்கும் வாக்குகளையும் வைத்துத்தான் எது அஸ்சிரப் காங்கிரஸ், எது அஸ்சிரபை விட்டுப்போன காங்கிரஸ் என்று தீர்மானிக்கலாம். அது சரியாயின் கடந்த தேரதல் கூட்டமைப்புக்கு சரியான ஒரு சவாலை விட்டிருக்கிறது. இதில் கக்கீம் காங்கிரஸ் எடுத்திருப்பது 7 பிரதிநிதிகள். கக்கீம் அல்லாத காங்கிரசிகளின் கூட்டு எடுத்திருப்பதும் 7. இந்த 7ல் நயீப் மயீத்தும், கக்கீமை எதிர்த்து வென்ற காங்கிரஸ் கூட்டத்தில் ஒருவர். இப்போது கூட்டமைப்பு தன்னிடம் திரும்ப கேட்க வேண்டிய கேள்வி அஸ்சிரப் காங்கிரஸ் என்பது யார், அப்படியாராவது இருக்கிறார்களா என்பது.

கக்கீம் காகிரஸ்சும் கக்கீம் அல்லாத காங்கிரசுகளும் தேர்தல் பிரசாரங்களில் வெளியிற்கு தன்னும் ஒன்றை ஒன்று எதிர்த்து தமக்குத்தான் முஸ்லீம் மக்கள் தங்கள் ஆணையை தர வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அரசை எதிர்த்து தேர்தலில் நிற்கும் காங்கிரஸ்தான் அஸ்சிரப் மு.கா. பதியுதீன் போன்றோர், அரசுடன் சேர்ந்து, தமிழருக்கெதிரான தமிழ் பிள்ளையான் போலவே தமிழருக்கு எதிரிகளாக இருந்ததுடன், முஸ்லீம்களுக்கும் எதிரிகளாகவே இருந்து வந்து இருக்கிறார்கள். பிள்ளையான், தேவானந்தா போன்றோர் தமிழரிடம் வாக்குகள் எடுத்திருந்தாலும், ஜனநாய விழுமியங்களின் படி அவர்கள் தமிழர்களின் பிரதி நிதிகளாக கொள்ளப்படுவதில்லை. எனவே கக்கீம் காங்கிரஸ் இல்லாத 7 பிரதிநிதிகளும், அஸ்சிரபின் முஸ்லீம்களுக்கான பிரதிநிதிகளாக கொள்ளப்பட மாட்டார்கள்.

இந்த நினைவுகளுடன் சம்பந்தர் கக்கீமுடன் சில பேச்சு வார்தைகளை நடத்தினார். அதாவது தற்போதைய கூட்டமைப்பின் நினைவுகளில் அஸ்சிரபின் பிரதிநிதிக்கட்சியான கக்கீம் காங்கிரசின் முஸ்லீம் மக்களுக்கான கொள்கைகள், தமிழ் மக்களுக்கான கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு சமாந்திரமானதென்ற நினவில் தான் இந்த பேச்சுவார்த்தைகள் நடை பெற்றன. இதுதான் தேர்தல் பிரசாரமும். இவை எந்த நேரதிலுமோ, அரசில் ஒரு பாகமாக இருக்கும் பதியுதினின், அதவுல்லா காங்கிரசை எற்றுக்கொள்வதற்கு சமன் எனக்கருத முடியாதது. அது போலவே 15 பிரதிநிதிகளை பெற்ற கூட்டில் பிரதிநிதித்துவம் பெற்ற பிள்ளையானை, கூட்டமைப்பு, தமிழ் தலைவனாக ஏற்றுக்கொள்வது தனக்கு தமிழ் மக்கள் அளித்த ஆணையை மறந்து போவது போலான செயலாகும். இந்த விதிகளின் படி நஜீத் ஏ.மஜீத்தானவர், கூட்டமைப்பு எந்த கருதுகோளின் படியும் தொடர்பு வைக்கத்தாக ஒரு பிரதிநிதி அல்ல. கூட்டமைப்பு பிள்ளையானுடன் வைத்திருந்த தொடர்புகளுக்கு மேலாக அவருடன் எந்த தொடர்பும் வைக்க கூடாது.

பிள்ளையான், பதியுதின், நஜீப் ஏ. மஜீத் போன்றோர் ஈட்டிய வெற்றிகள் தமிழருக்கு எதிராவே. இதில் முதலமைசாரராக வந்திருப்பது பிள்ளையானையோ அல்லது நஜீப் ஏ, மஜீத் என்பது நமது கணக்கில் இல்லை. இவர்கள் எப்போது தமிழர் சேர்ந்தியங்கிய அஸ்சிரபுடன் இல்லையோ அப்போது இவர்கள் எமக்கு அரசியல் அந்நியர். பிள்ளையானையோ மஜீத்தையோ நாம் தமிழனாகவோ முஸ்லீமாகவோ கணக்கில் கூட்டிக்கொள்ளபோவதில்லைல்.

இனி கக்கீம் பக்கம் பார்த்தால், கக்கீம், தேவானந்தாவுடன் ஜெனீவா சென்று புலிகள்தாம் தண்டிக்க படவேண்டியவர்கள் என்றும், அரசு குற்றவாளி இல்லை என்றும் வாதாடியவர். இது தனிய தமிழருக்கு எதிரான ஒரு செயலே அல்லாமல் எந்த வகையிலும் முஸ்லீம்களின் நலன்களை முன்னெடுத்த செயல்ப்பாடில்லை. இது பதியுதின் மன்னார் ஆயரை தாக்கியது போன்றது. கக்கீமுக்கு அந்த தவறை திருத்த தேர்தல் சில சந்தர்ப்பங்களை கொடுத்தது. ஆனால் அவர் மீண்டும், பதியுதின் போலவே, அரசுடன் இணைந்து கிழக்குக்கு வரவேண்டிய முதல் அமைச்சர் பதவியை மத்திய அரசுக்கு தாரை வார்த்துக் கொடுத்தவர்.

இந்த தேரதல், தமிழருக்கு உரிமை தேவை இல்லை என்பதை உலகிற்கு எடுத்து காட்ட நடத்தப்பட்டதாக தேர்தலின் பின்னர் கெகெலியவால் வருணிக்கப்பட்டிருந்தது. அதை நடத்த முதலமைசர் பிள்ளையான் கையெழுத்து போட்டு அதிகாரம் வழங்கியிருந்தார். பிள்ளையான் போலவே, ப்தியுதினும், கக்கீமும் முதலமைச்சர் பதவியை அரசுக்குக்கு கொடுத்து பிள்ளையானின் பதையில் வெளிநாடுகளுக்கு தமிழருக்கு எதிரான செய்தியைதான் சொல்ல முயன்றனர். எனவே இவர்களில் இப்போது எவரும் அஸ்சிரப் காங்கிரஸ் இல்லை. இன்றைய 15 முஸ்லீம் பிரதிநிதியகளில் யார் தன்னும் அரசை, பிள்ளையானை, கக்கீமை, அசன் அலியை, அதாவுல்லாவை, பதியுதீனை விட்டு விலகி வந்து, அஸ்சிரப் முஸ்லீம் காங்கிரசை மீள அமைத்து கிழக்கு, கிழக்கு மாகணா அரசை அமைத்தால், கூட்டமைப்பு அவர்களை அஸ்சிரப் காங்கிரசாக ஒத்துக்கொண்டு, தனது அஸ்சிரபிற்கான வாக்குறுதிகளை அவர்களுக்கு நிறைவேற்றலாம்.

கடைசியில் சம்பந்தர் சொல்லியிருப்பது என்னவென்றால், முஸ்லீம்மா அல்லது தமிழரா மு.கா -கூட்டமைப்பின் போது முதலமைச்சர் ஆகவேண்டுமென்பதில்லை. தகுதியானவர் தாம் முதலமைச்சர் ஆகலாம் என்பதுதான் அவர் தனது பேட்டியில் கூறியது. அதன் படி நஜிப ஏ. மஜீத் பிறந்த குடும்பம் மட்டும் இவர் முதலமைச்சராக காணாது. இவரை விட தகுதியானாவர்கள் பலர் தமிழராலும் முஸ்லீம்களாலும் தெரிந்தெடுக்கபட்டிருக்க சிங்களக்கட்சி ஒன்று, முன்னர் பிள்ளையானை வைத்து கிழக்கை கெடுத்தது போன்றே மீளவும் செயய முயன்றால் அது ஜனநாயக விரோதம். எனவே கூட்டமைப்பு நஜீப்.ஏ. மஜீத்துடன் ஒத்துழைக்க மறுப்பதுமட்டுமல்ல, அவரை முதலமைச்சராக ஏற்றுகொள்ளாமல் இலங்கையின் கோடுகளில் தேர்தல் குற்ற வழக்குகள் தொடுக்க வேண்டும்.

நாம் பிள்ளையானை ஏற்றுக்கொள்ளவில்லை. அவனின் தரத்தில் இன்னொருவரை ஏற்றுகொள்ள வேண்டியதில்லை. இதனுடன் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் இருக்க வேண்டிய சகோதரத்துவ ஒற்றுமையை ஒப்பிட முடியாது. நாம் பிள்ளையானை இதுவரை ஏற்கத்தேவை இல்லை என்று எழுதியவர்கள், பிள்ளையானை போலவே இன்னொருவரை, அவர் முஸ்லீம் என்பதற்காக ஏற்கவேண்டும் என்று கூறுவது மட்டுமல்லாமல் , கூட்டமைப்பு தனக்கு தமிழ் மக்கள் இட்ட ஆணையை ஒதுக்கி வைத்து விட்டு, அவரின் செயல்பாடுகளை தாங்கி பிடிக்க வேண்டும் என்று வாதாடுவது சரியான அரசியல் பச்சைபுள்ளத்தனம். இது சோனியாகாந்தியை வெள்ளைதோல் என்று கூறி கிந்தியன் கொண்டாடுவதிலும் கேவலமானது.

அரசோடு சமாதானம் பேசுவதில்லை தவறில்லை. ஆனால் தீர்வு ஒன்று வரத்தக்க வழிகளில் மட்டும்தான் பேசப்படவேண்டும். நோர்வே போன்ற அரசுகள் கேட்டுதற்காக கூட்டமைப்பு, மு.காவை சமாதன பேச்சு வார்த்தைகளுக்கு அழைத்தது. கூட்டமைப்பிடம் கொடுக்க ஒன்றும் இல்லாதால் அங்கே சமாதனம் ஒன்றும் வரவில்லை. அரசுடன் அந்தத மாதிரி பலதடவைகள் பேசியாயிற்று ஒன்றும் வரவில்லை. சீனா, இலங்கை அரசுடன், ஒரு கூட்டத்தில் 16 உடன்படிக்கைகள்வரை கைச்சாத்திடுகிறது. ஆனால் இந்தியா பல வருடங்களாக ஒன்றோ இரண்டு வர்த்தக ஒப்பந்தகளை கைசாத்திட முயல்கிறது. ஒன்றும் நடக்கவில்லை. இந்தியா 3 வருடங்களா தமிழருக்கு 50,000 வீடுகள் கட்டமுயன்று நடை பெறவில்லை. ஒரு மாதத்தில் சீனா 50,000 வீடுகள் வடக்கு கிழக்கு உள்ளடங்கலாக படையினருக்கு கட்ட உடனடியான ஒபந்தங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன.

எனவேதான் சில சமையங்களில் பச்சை பொருத்தமில்லாததொன்று. அதை கவனித்து குத்துவதுதான் சரி. (வேறு ஒருதிரியில் பலர் அவசரமாக ரஜிவின் பாடல் ஒன்றுக்கு பச்சை குத்தினார்கள். அவர் சில சூழ்நிலைகள் காரணமாக அந்த பாடலை வாபஸ் பெற்றுவிட்டார். இப்போ அந்த மில்லியன் டொலர் பச்சைகள் வீணடிக்கப்பட்டுவிட்டன :lol: )

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்கள் ஏற்று கொள்ளினாமா இல்லையா தெரியாது ஆனால் நாங்கள் நேசக்கரம் நீட்ட வேண்டியது காலத்தின் கட்டாயாம் அதை நாங்கள் திறந்த மனதுடன் செய்வோம்.... :D

சுண்டல்

சில நாட்களாக தங்கள் கருத்துக்களை வாசித்தேன்

அதில் சில உண்மைகள் இருப்பதை அறிவேன்.

முள்ளிவாய்க்காலுக்குப்பின்..............

தமிழன் கூட்டமைப்பு ஊடாக ஏதாவது ஒன்றைப்பிடித்து இந்த புதைகுழியிலிருந்து வெளியில் வரணும் என்பதே எனது ஆதங்கம். அதை பலமுறை இங்கு எழுதியுள்ளேன்.

புலம் பெயர் தமிழர் என்ன செய்யணும் என்பதிலும் தெளிவுண்டு.

தாயக மக்கள் எப்போழுதும் தமக்கான பணிகளை எந்த பயமும் இன்றி எந்த இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் மிக ஆணித்தரமாக தம்முடிவை பலமுறை செய்து வருகிறார்கள்.

சிங்களவரும் தமிழரும் என்பது ஒன்றாக இருந்த தம்பதியர் பல பிரச்சினைகளால் விவாகரத்துக்கு நிற்பது போன்றது. இதில் சிங்களம் என்பது தன்னுடன்தான் வாழணும் இல்லாது விட்டால் எவனுடம் வாழக்கூடாது இல்லையென்றால் அழித்துவிடுவேன் என்றநிலை.

இந்த நிலையில் இசுலாமிய தமிழர்களை நோக்கி அடுத்த வாழ்வுக்காக நாம் கையை நீட்டுவது மிகமிக அவசியம். நீட்டியும் உள்ளோம். ஆனால் அவர் இரண்டு பேரையும் வைத்து வாழ்வேன் என்றால் எப்படி???

இது தான் இன்றைய தமிழரின் நிலை.

ஒன்றில் நாம் தனித்து வாழணும். இல்லை

அவர்கள் சிங்களவருடன் சரிவராது என அனுபவப்பட்டு திருந்தி வரும்வரை காத்திருக்கணும்.

இப்பொழுது

தமிழர் அந்த நிலையிலேயே உள்ளனர்.

காலம் தான் பதில் சொல்லணும்

பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.