Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன் 1983

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Dear Mohan/Ezili Please transfer my research report (National question and Muslim people 1983) to appropriate side

Jayapalan.

இது என்னுடைய முதல் ஆய்வு நூல். 1983 டிசம்பரில் வெளிவந்தபோது பல்வேறு இயக்கங்களும் இப்புத்தகத்தை தங்கள் நூலகத்துக்காக வாங்கின. தோழர் அஸ்ரப் அவர்கள் என்னுடைய மேற்படி புத்தகம் தன்னை பாதிததாகவும் முஸ்லிம் காங்கிரசின் உருவாக்கத்திற்க்கு பங்களிப்பு செய்ததாகவும் தெரிவிதிருக்கிறார். முஸ்லிம்கள் தொடர்பான என் ஆய்வுகலை தொகுக்க விரும்புகிற இந்த சமயத்தில் உங்கள் கருத்துக்களுக்கும் ஆல்லோசனைகளுக்குமாக புத்தகத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

பதிப்புரையையும் என்னுரையையும் தொடர்ந்தௌ PDF வடிவத்திலேயெ இந்த புத்தகம் உள்ளது. என்னிடமும் மூல பிரதி இல்லை. யாராவது எனக்காக நேரம் ஒதுக்கி இந்த புத்தகத்தை கணனியில் தட்ட்ச்சில் பதித்துத் தர முடியுமாயின் ம்கிழ்வேன்.

TO READ THE WHOLE BOOK IN PDF FORM: : http://noolaham.net/.../04/343/343.pdf

தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்

[size=2]வ. ஐ. ச. ஜெயபாலன்[/size] தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்

வ. ஐ. ச. ஜெயபாலன்

++++++++++++++++++++

தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்

வ. ஐ. ச. ஜெயபாலன்

அலை வெளியீடு

48, சுய உதவி வீடமைப்புத் திட்டம்,

குருநகர், யாழ்ப்பாணம்

+++++++++++++++++++

அலை வெளியீடு

மார்கழி 1985

விலை ரூபா 5-00

The National Question and the Muslims

(A Socio-Political analysis in Tamil)

By V. I. S. Jayapalam

Published by Alai Veliyeedu

48, Self-Help Housing Scheme,

Gurunagar, Jaffna.

Printed at

Pats Printers

601, K. K. S. Road, Jaffna.

Cover Design by G. Kailasanathan

First Edition: December, 1983

Price: 5-00

+++++++++++++++++++

பதிப்புரை

பாரம்பரியப் பிரதேசங்கள் என்ற கருத்தாக்கத்தை முன்னிறுத்துகின்ற தமிழ் மக்களிலும், தேசிய ஐக்கிய மாயையிலும் மூழ்கியுள்ள முஸ்லிம் மக்களிலும் பெரும்பான்மையோர், தத்தமது பிரதேசங்களின் பல்வேறு நிலைமைகள் பற்றியும் சரியான பிரக்ஞையினைக் கொண்டுள்ளனர் என்று சொல்வதற்கில்லை. 'யாழ்ப்பாண நோக்கு நிலையினைக்' கொண்டுள்ளவர்கள் கிழக்கு மாகாணத்தைக் குறிப்பாக முஸ்லிம் மக்களை நடைமுறையில் மறந்தே போய் விடுகின்றனர். எமது பிரதேசங்கள் சார்ந்த சமூக, அரசியல், பொருளாதார ஆய்வுகள் சரிவர மேற்கொள்ளப்படாமை இதற்கான காரணிகளுள் ஒன்றாக அமையும்.

தமிழ்-முஸ்லிம் மக்களின் 'இருப்பு நிலை' அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையிலாவது போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமலிருப்பது துர்ப்பாக்கியமானதே. இந்தப் பின்னணியிலேயே பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி, இளம் ஆய்வாளரான வ. ஐ. ச. ஜெயபாலனின் முஸ்லிம் மக்களைப் பற்றிய இச் சிறு வெளியீட்டினைக் கொண்டு வருகிறோம். ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாறுதல்களின் மூலம் பிரச்சினையின் உண்மைத்தன்மை மேலும் துலங்குவதற்கு இது தூண்டுதலாக அமையுமெனவும் எதிர்பார்க்கிறோம்.

பின் அட்டையிலுள்ள கவிதை வரிகள் 'அஷ்ஷுரா' சஞ்சிகையிலிருந்து எடுக்கப்பட்டவை. பாக்கிஸ்தானியக் கவிஞரின் இக் கவிதையினைத் தமிழாக்கியவர், முஸ்லிம் கவிஞரான 'பண்ணாமத்துக் கவிராயர்'

நூலாசிரியருக்கும், முகப்பினை வடிவமத்த கோ. கைலாசநாதனுக்கும், விரைவில் அச்சேற்றிய அச்சக ஊழியருக்கும் எமது நன்றிகள்.

அலை வெளியீட்டினர்

குருநகர்

31-12-83

+++++++++++++++++++

என்னுரை

ஒடுக்குதல்களுக்கு எதிராகப் போராடும் வர்க்கங்களோ அல்லது தேசிய இனங்களோ, தமது சமூக அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக சமகாலத்தில் நிலவும், தேசிய சர்வதேசிய நிலைமைகளையும் முரண்பாடுகளையும் விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து தெளிவதன் மூலம் மட்டுமே, தமது போராட்டம் தொடர்பாகவும் தாம் எதிர்நோக்கும் நிர்மாணப் பணி தொடர்பாகவும், சரியானதும் தொலைநோக்குள்ளதுமான மூல உபாயத்தையும் தந்திரோபாயங்களையும் வகுத்தல், சாத்தியப்படும்.

பல்லாயிரம் மக்களின் தலைவிதி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இவ்வகையில் மட்டுமே, பொறுப்புள்ளதும் இறுதி வெற்றிக்கான மார்க்கத்தில் பொருந்துவதுமான தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும், இயக்க ரீதியாக மேற்கொள்ளுதல் இயலும்.

ரஷ்யா, சீனா, வியட்னாம், அல்பேனியா, கியூபா, நிக்கரகுவா போன்ற நாடுகளில் மக்கள் தலைமைகள் விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையிலேயே தமது தேசியப் போராட்டம், தேச நிர்மாணம் தொடர்பான மூல உபாயங்களை வகுத்துக் கொண்டன. இவற்றை மேற்படி காலகட்டங்களில் மேற்படி நாடுகள் சார்ந்து நிலவிய தேசிய, சர்வதேசிய முரண்பாடுகள் தொடர்பாகப் புரிந்து கொள்ளுதல் மூலம், பயனுள்ள சர்வதேச அனுபவங்களை நாமும் பெறுதல் அவசியமாகும்.நாடுகளிடையே சமூக, கலாசார, பொருளாதார நிலைமைகள் மாறுபடுவதையும்; இயங்கியல் போக்கில் பல்வேறு வகைகளிலும் காலகட்டங்கள் மாறிச் செல்வதையும், நாம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக சர்வதேச அணுபவங்கள் பலவும் பலதேசிய இனங்கள் வாழும் நாடுகளில் (Multi-Nations Countries) புரட்சிகளின் போது இடம்பெற்ற விவாதங்கள், ஆய்வுக்கட்டுரைகள் என்பவற்றின் ஊடாகவே நமக்குக் கிட்டுகின்றன. ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம் வேறு மார்க்கங்கள் அற்றுப்போன நிலையில் தனது இருப்புக்கும், தேசிய விடுதலைக்குமாகப் போராடும் நிலைமைகளில் போதிய அளவு பங்களிப்பு, சர்வதேச ரீதியில் இடம்பெறவில்லை. பெரும்பாலான தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் 1840களின் பின் முதன்மை பெற்று ஒரு நூற்றாண்டினுள்ளேயே பெரும்பாலும் நடந்து முடித்து விட்டன. அது வளர்ச்சியடைந்த நாடுகளின் முதலாளித்துவ வளர்ச்சிக் காலகட்டம் என்பதும் கருத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.

போராடும் நமது தேசிய இனம் சார்பாகவும், இந்து சமுத்திரத்தில் மையப்பட்ட சர்வதேச நிலைமைகள் சார்பாகவும் சமகால நிலைமைகளை ஒட்டிய தகவல்களை விஞ்ஞான ரீதியாகத் திரட்டிப் பகுப்பாய்ந்து நமது விடுதலையின் மார்க்கத்தைக் கண்டு கொள்ளுதல் மூலம் மட்டுமே நமக்கும், சர்வதேசியத்துக்கும் உருப்படியான வரலாற்றுப் பங்களிப்பை நாம் செய்தல் கூடும்.

நான் எழுதி வரும் எமது மண்ணும் எமது வாழ்வும் என்ற நூலின் ஒரு பகுதியான 'தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்' என்ற அத்தியாயத்தை, அவசியம் கருதிச் சிரமம்பாராது வெளியிட முன்வந்தமைக்காக அலை வெளியீட்டாளர்களுக்கு எனது நன்றிகள்.

எனது சிரமம் நிறைந்த பொருளாதார நிலையில், இந்த ஆய்வுகளைத் தொடர பல்வேறு வகைகளிலும் உதவியாக இருந்த அம்மாவுக்கும், சகோதரிகளுக்கும் எனது நன்றிகள். திக்குவல்லையில் இருந்து யாழ்ப்பாணம் வரைக்கும், பேருவலையில் இருந்து கல்முனை வரைக்கும் சகல விதத்திலும் எனக்கு கற்பித்த முஸ்லிம் மக்களுக்கும், முஸ்லிம் நண்பர்களுக்கும் எனது விசேட நன்றிகள்.

எதிர்காலத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு பணியாற்றப் போகிற தமிழ், முஸ்லிம், மலையக இளைஞர்களுக்கு இந்நூல் காணிக்கை.

வ. ஐ. ச. ஜெயபாலன்

61, 4ம் குறுக்குத் தெரு,

யாழ்ப்பாணம்.

25-12-1983

+++++++++++++++++++++

http://noolaham.net/.../04/343/343.pdf

Edited by poet

[size=4]இந்த புத்தகத்தை இருபத்தி ஒன்து வருடங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளீர்கள். [/size]

[size=1]

[size=4]இப்பொழுது சோவியத் ஒன்றியம் இல்லை, கிழக்கு ஜெர்மனி இல்லை ... இப்படி பல உலக அரசியல் மாற்றங்கள். அடுத்து ஒருவரும் எதிர்பார்க்காத 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்', 'மேற்குலம் முஸ்லீம்களுக்கும் எதிரான யுத்தம்' என்ற நிலை. [/size][/size]

[size=1]

[size=4]அடுத்து தமிழர்கள் தாயகத்தில் அனாதைகளான நிலை. இதில் இந்த பரிதாப நிலையிலும் அவர்கள் மீது சவாரி செய்யும் முஸ்லீம் அரசியல் தலைவர்கள். [/size][/size]

[size=1]

[size=4]உங்கள்[size=5] 1983 [/size]ஆம் ஆண்டின் எதிர்பார்ப்புக்கள் இன்றைய நிலைமையில் எதிர்பார்த்த ஒன்றா? [/size][/size][size=1]

[size=4]இன்றைய நிலைமையில் இலங்கை முஸ்லீம்களின் தலைவர்கள் செல்லும் பாதை எவ்வாறான ஒரு எதிர்காலத்தை தரும்? [/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகோதா அவர்களுக்கு,

உண்மைதான் ஒரு சுனாமிபோல எழுந்த கால அலைகளின் ஓட்டத்தில் தேசிய சர்வதேசிய அரங்குகளில் நிறையவே நிகழ்ந்துவிட்டது.

ஆனால் எல்லாமே பாதகமானவையல்ல. நல்லவையும் நிறைய இடம்பெற்றுள்ளது. அமரிக்காவின் புழக்கடையிலேயே நிக்காரக்குவா எல்சல்விடோர் போன்ற நாடுகளில் இடதுசாரிப் போக்குள்ளவர்ள் வெற்றி பெற்றார்கள். எரித்திரியா, குறைசியா, லிதுவேனியா, லட்வியா கிழக்கு தீமோர், கொசோவோ. தெற்க்குச் சூடான் போன்ற பல நாடுகளில் தேசிய இனப்போராட்டங்களும்வெற்றிபெற்றுள்ளது.இதில் சில தேசிய இன விடுதலி வெற்றிகள் 9/11 தாக்குதலின் பின் உருவாகின.

உலக முஸ்லிம்கள் மத்தியில் அமரிக்கா மேற்குலகம் பற்றிய விமர்சனம் உயர்ந்து சென்ற காலத்தில் பொஸ்னியா கொசோவா ஈராக்கிய குர்திஸ்தான் போன்ற விடுதலைக்குப் போராடிய முஸ்லிம் தேசங்கள் பலமான அமரிக்க ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்து எதிரியை தனிமைப் படுத்துவதை மட்டுமே முன்னிலைப் படுதி அணி சேர்ந்தன. மேற்படி தேசங்கள் முதல் எதிரியை வெற்றி பெறுவதை மட்டுமே முன்னிலைப் படுதியது. எரித்திரியா முஸ்லிம் சிறுபாண்மையினரை வெல்ல பதவிகளை அமைப்பு ரீதியாக பகிந்து கொண்டது. மேலும் கிறிஸ்தவ பெரும்பாண்மையினரின் ரிகிறினி மொழியோடு அரபு மொழியையும் அரச மொழியாக்கியது

அவர்கள் பல்வேறுபட்ட அரசியல் இராசதந்திர இராணுவச் சூழலில் வெற்றி பெற்றுள்ளனர். முதல் எதிரி தொடர்பாக அவர்கள் எம்மைப்போல ஒருபோதும் குழம்பவில்லை. முதல் எதிரி தவிர்ந்த எல்லோரோடும் தேசிய சர்வதேசிய ரீதியாக அவர்கள் கூட்டுச்சேர தயாராக இருந்தமைதான் அவர்களது வெற்றியாகியது.

அவர்கள் எம்மைப்போலவே சர்வதேச பிராந்திய ரீதியான சாவல்கள் பலவற்றை எதிர்கொண்ட்டார்கள். சித்தந்த அல்லது கருத்து நிலைகளைவிட மாறிவரும் தேசிய சர்வதேச சூழலில் யாருடன் சார்ந்தேனும் எப்படியும் எதிரியைத் தனிமைப் படுத்தி வெற்றிபெறுவதையே கருத்தாகக் கொண்டு இராசதந்திரத்தோடு செயல்பட்டார்கள். .

அவர்கள் பலரது சவால்களை நாமும் எதிர்கொண்டோம், அவர்களுக்கு கிட்டிய சந்தர்பங்கள் வேறுவடிவில் எமக்கும் கிட்டியது. இருந்தும் நாம் ஏன் தோற்றுப்போனோம்?

அகோதா, யாழில் எழுத முன்னம் பலமுறை யோசிக்க வேண்டியுள்ளது. இடைக்கிடையே கருத்துச்சொல்லி சிலரோடு மோத விருப்பமும் இல்லை நேரமும் இல்லை எனக்கு அதற்கான அவசியமுமில்லை. .அது திசை திருப்பிவிடும்.

எல்லார் கருத்துக்களையும் வாசித்துவிட்டு இறுதியில் பதில் எழுதுகிறேன். அப்போது உங்கள் கருத்துக்களையும் பரிசீலிப்பேன். தோழரே.

Edited by poet

[size=4]இந்த புத்தகத்தை இருபத்தி ஒன்து வருடங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளீர்கள். [/size]

[size=1][size=4]இப்பொழுது சோவியத் ஒன்றியம் இல்லை, கிழக்கு ஜெர்மனி இல்லை ... இப்படி பல உலக அரசியல் மாற்றங்கள். அடுத்து ஒருவரும் எதிர்பார்க்காத 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்', 'மேற்குலம் முஸ்லீம்களுக்கும் எதிரான யுத்தம்' என்ற நிலை. [/size][/size]

[size=1][size=4]அடுத்து தமிழர்கள் தாயகத்தில் அனாதைகளான நிலை. இதில் இந்த பரிதாப நிலையிலும் அவர்கள் மீது சவாரி செய்யும் முஸ்லீம் அரசியல் தலைவர்கள். [/size][/size]

[size=1][size=4]உங்கள்[size=5] 1983 [/size]ஆம் ஆண்டின் எதிர்பார்ப்புக்கள் இன்றைய நிலைமையில் எதிர்பார்த்த ஒன்றா? [/size][/size]

[size=1][size=4]இன்றைய நிலைமையில் இலங்கை முஸ்லீம்களின் தலைவர்கள் செல்லும் பாதை எவ்வாறான ஒரு எதிர்காலத்தை தரும்? [/size][/size]

எமது நாட்டுப்பிரச்சனை என்று பார்க்கும் போது எத்தனையாம் ஆண்டு எழுதியது என்ற பிரச்சனையில்லை என நினைக்கின்றேன்.பிரச்னைக்கான காரணிகள் இன்றும் அதே நிலையில் தான் இருக்கின்றன .

சோவியத்யூனியன் உடைந்து போனதால் தமிழர்கள் பிரச்சனை இல்லாமல் அல்லது திசை மாறிவிட்டது என்று அர்த்தம் கொள்ள முடியுமா?

எமது நாட்டுப்பிரச்சனை என்று பார்க்கும் போது எத்தனையாம் ஆண்டு எழுதியது என்ற பிரச்சனையில்லை என நினைக்கின்றேன்.பிரச்னைக்கான காரணிகள் இன்றும் அதே நிலையில் தான் இருக்கின்றன .

சோவியத்யூனியன் உடைந்து போனதால் தமிழர்கள் பிரச்சனை இல்லாமல் அல்லது திசை மாறிவிட்டது என்று அர்த்தம் கொள்ள முடியுமா?

[size=4]அர்யுன் அண்ணா, [/size]

[size=4]அரசியல் விடுதலை தேவை என்ற காரணம் இருந்தாலும் இன, அரசியல், பொருளாதார, இராணுவ சமநிலமைகள் மாறியுள்ளன. இதனால் எமது தலைவிதியும் மாற்றம் கண்டுள்ளது.

சோவியத் யூனியன் பலமான நிலையில் ஒரு நாடாக இருந்திருந்தால், கொசாவா உட்பட பல யூகோசிலாவியா நாடுகள் உருவாகி இருக்க மாட்டா. சீனா பாரிய பொருளாதார வல்லரசாக வளராமல் இருந்திருக்கலாம். இலங்கையில் சீனாவின் காலூட்டம் கூட இருந்திருக்காது. [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அர்ஜுன் நன்றி அகோதா,

1.முஸ்லிம் மக்களும் ஈழ விடுதலையும் - தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் மற்றும் கட்டுரைகளும். 2. இலங்கைத் தமிழர்கள் சமுக பொருளாதார அமைப்பும் வரலாறும். 3 ஈழம் - போரும் சூழலும். 4. ஈழ விடுதலைப் போரின் முறிவு - . அடிப்படை மூல உபாயம் தந்திர உபாய பிரச்சினைகள். 5 உலகமயமாதலும் மாறிவரும் இந்து சமுதிர வலு அரசியலும். - ஈழத்துக்கான வெளிபற்றிய தேடல்..

என்கிற தலைப்புகளில் என்னுடைய கடந்த கால ஆய்வுகளை பூர்த்தி செய்தும் தொகுத்தும் வெளியிட விரும்புகிறேன்.தனி ஒருவனாக என்னால் எதிர்கொள்ள முடியாத சவாலாக உள்ளது. ஆய்வு உதவியாளர்களுடன் உதவியுடன் நிறுவன ரீதியாக பணியாற்ற வேண்டியுள்ளது. என்னுடைய ஆய்வுகளை தொடரவும் வெளியிடவும் உதவக்கூடிய நிறுவனக்கள் பங்குபெற விரும்பும் தனியாரின் தொடர்புகளை வரவேற்க்கிறேன்.

ஜயா முதலில் உங்களை பற்றி தெளிவு படுத்துங்கள்;

சில நேரங்களில் உங்கள் கருத்துக்கள் ஈழப்பிரச்சனையில் உங்களை விட்டால் சரியான அனுபவசாலி இல்லாத மாதிரியும் சில நேரம் ஜதார்த்ததை உணர்ந்து கருத்து சொல்லுபவர் போலவும் சில நேரம் கோமாளி போலவும் இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.