Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்?

Featured Replies

post-8572-0-78171900-1349121552_thumb.jp

[size=5]தம் பிள்ளைகள் எதிர்காலத்தில் மற்றையவர்களை விட பெரியவர்களாக, வாழ வேண்டும் என்றும், அதனால் தாங்களும் மதிப்பும், மரியாதையுமுடன் வாழலாம் என்ற அவாவில், ஒளிதரும் மெழுகு வர்த்திபோல் தம்மை உருக்கி உருக்கி உழைத்த முதியவர்கள் பலர் கவனிப்பாரற்று முதியோர் இல்லங்களிலும், கருணை இல்லங்களிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சம் புகுந்து வாழ்வதை இன்று நாம் பார்க்கின்றோம்.[/size]

[size=5]வயதான காலத்தில் தம் பிள்ளைகள் தம்மை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை அனேகமாக எல்லா பெற்றோர்களிடத்திலும் ஏற்படுவது இயற்கையே. தாம் தம் பெற்றோருக்கு செய்ததை தமக்கும் தமது பிள்ளைகள் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடனே அவர்கள் வாழ்லின்றார்கள். பெற்றோர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பிள்ளைகளுடன் வாழ்வதையே விரும்புகின்றார்கள். அவர்களுக்கு தனிமை வேதனையைக் கொடுக்கின்றது. அதாவது கஸ்டப்பட்டு ஆக்கிய கூளை கூடியிருந்து குடிக்கும் பருவமது. ஆனால் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் தற்போதுள்ள தலைமுறையினரில் சிலர் அவர்களைப் பிரித்து வாழ வைக்கின்றனர் அல்லது தனித்து வாழ விட்டு விடுகின்றனர்.

தங்களுடைய தகுதிக்கும், அந்தஸ்திற்கும் தங்களோடு சேர்ந்து வாழ அவர்கள் தகுதியில்லை என்பதும். நாங்கள் எங்கள் பிள்ளைகளையே பார்க்க முடியாமல் இருக்கின்றோம் அவர்களைப் பார்க்க எங்களுக்கு நேரம் இல்லை என்பதும் காரணங்களாக கூறப்படுகின்றன.

முதியோருக்கு 2 பிள்ளைகளுக்கு மேல் இருந்துவிட்டால் அவர்கள் பாடு அதோகதிதான். மற்றப் பிள்ளைகள் வைத்திருந்தால் என்ன? இவர்கள் வைத்திருந்தால் என்ன? என்ற போட்டி தோன்றி கடைசியில் அவர்களைப் பார்ப்பதற்கு ஒருவருமே முன்வராத நிலையில் தாமாகவோ அல்லது எல்லாப்பிள்ளைகளும் சேர்ந்து அவர்களை முதியோர் காப்பகத்தில் அல்லது கருணை இல்லங்களில் சேர்த்து விட்டு தாம் சுக போலங்களை அனுபவிக்கின்றனர்.

அல்லது ஆளுக்கு ஒருவராக வைத்திருக்க முன்வருகின்றனர். அதிலும் தாய் கொஞ்சம் சுகதேகியாக இருந்து விட்டால் அவவை வீட்டு வேகைக்காரி போல் எடுக்க அதிலும் பிள்ளைகளுக்குள் போட்டி. அம்மா தலைமகன்/மகள் வீட்டில் ஒரு மாதம் இருந்தால், அப்பா இளையவன்/இளையவள் வீட்டில் இருப்பார். அடுத்த மாதம் இருவரும் இடமாறிவிடுகிறார்கள். இருவரையும் ஒரே வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ள பிள்ளைகள் சம்மதிப்பதில்லை. வயதான காலத்தில் பழைய அனுபவங்கள் பற்றி பேசி மகிழ்வதும், பேரக்குழந்தைகளுடன் விளையாடுவதும்தான் அவர்களுக்கு இன்பம். அந்த இன்பத்தைக் கூட பிள்ளைகள் பெற்றோருக்கு கொடுக்க மறுக்கின்றனர்.

ஒன்று தந்தையையும், தாயையும் பிரித்துவிடுகின்றனர். இல்லை என்றால் எங்களால் உங்களைப் பார்த்துக் கொள்ள முடியாது என்று முகத்தில் அடித்தது போல் கூறி அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகின்றனர். இவ் வழமை தற்போது பல வசதி படைத்த குடும்பங்களில் காணாப்படும் நாகரிகமாகிவிட்டது.

பெற்ற பிள்ளைகளை பல எதிர்பார்ப்புடன் பல கஷ்டங்களை தாங்கி படிப்பித்து அல்லது வெளிநாட்டிற்கு அனுப்பி பெரியவர்களாக்குகின்றார்கள். ஆனால் அந்த பதவியும் அந்தஷ்தும் பின்னடிக்கு தங்களுக்கு இடைஞ்சலாக அமையும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை,

டாக்டராக, வழக்கறிஞராக, அல்லது எஞ்ஜினியராக பெரும் பதவிகளில் பிள்ளைகள் இருக்கும் போது அவர்களின் பெற்றோர் முதியோர் இல்லத்தில் அல்லது உறவினர் வீடுகளில் வசிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டு விடுகின்றது. அதை நினைத்து நினைத்து பெற்றோர் தினமும் கண்ணீர் வடிக்கின்றனர்.

என் பிள்ளையை எப்படியெல்லாம் ஆசையாய், அன்பாய் வளர்த்தோம், பின்னடிக்கு எங்களை பார்ப்பான் என்று கனாக்கண்டோம். இப்படி எங்களை கடைசிக் காலத்தில் வீட்டை விட்டு துரத்தி விட்டுவிட்டானே என்று நினைந்து நொந்தே சாகின்றனர்.

தங்கள் வயது முதிர்ந்த பெற்றோரை வருத்தும் இளம் பெற்றோரும் முதுமையாகும்போது இன்நிலைமை ஏற்படுமா?

இதனை உணர்த்தும் ஒரு சிறுகதை.

இராசன் என்பவன் இராசாத்தி என்னும் பெண்ணை விவாகம் செய்து கூலி வேலையில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு மகிழ்வோசு வாழ்ந்து வந்தான். அவனுக்கு வரதன் எனும் ஆண் மகன் இருந்தான். அவன் படிப்பில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்ததனால் பாடசாலையிலும் கெட்டிக்கர மாணவன் என்ற பெருமையும் அவனுக்கு கிடைத்தது. இதனை அறிந்த பெற்றோருக்கு பெருமகிழ்ச்சி. அவனை எப்படியாவது படிப்பித்து பெரியவனாக்கி நல்ல அரச வேலையில் சேர்க்க வேண்டும் என்று எண்ணினார்கள். அதனால் மேல்படிப்பிற்கு அதிக பணம் செலவாகும் என்பதனால் தாயும் தந்தையும் சேர்ந்து அதிக நேரம் கூலி வேலை செய்து மகனின் பட்டப் படிப்புக்கு செலவு செய்து படிப்பித்து வந்தனர்.

அவனும் ஊக்கமாக படித்து பட்டம் பெற்றதும் அவனுக்கு உதவி அரச பதவியும் பட்டணத்தில் கிடைத்தது. அதனால் அவன் தன் பெற்றோருடன் பட்டினத்திற்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டி ஏற்பட்டது, அக்கால கட்டத்தில் அவனுக்கு திருமணமும் நிகழ்ந்தது. சில நாட்களில் அவனுக்கு உயர்ந்த அரச பதவிக்கு பதவி உயர்வும் கிடைத்தது, அதனால் அவன் மனைவி, பிள்ளைகள், பெற்றோருடன் அரச பங்களாவிற்கு சென்று வசித்து வந்தான்

அவன் அந்தப் பகுதி உயர் அதிகாரியாக இருந்ததினால் அவனைச் சந்திக்க பல பிரமுகர்களும் பிரபுக்களும் நண்பர்களாகி பங்களாவிற்கு வர ஆரம்பித்தார்கள். ஒருநாள் வீட்டிற்கு வந்த பிரபு ஒருவர் அவனின் பெற்றோரைப் பார்த்து யார் இவர்கள் என்று விசாரித்தார். அவர்கள் வயதில் முதிந்தவர்களாகவும், நாகரீகம் தெரியாதவர்களாகவும், படிப்பறிவு குறைந்தவர்களாகவும் இருந்தமையால் அவர்கள்தான் தன் பெற்றோர் என சொல்லமுடியாத தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.

மறுநாள் அவன் அவர்களுக்காக பங்களாவின் பின்பகுதில் ஒரு இடத்தை ஒதுக்கி அதில் அவர்களை தங்க வைத்து அந்த இடத்தை தாண்டி எதுவித காரணம் கொண்டும் பங்களாவிற்கு வரக்கூடாது எனவும் கட்டளை போட்டான். அவர்கள் சாப்பிடுவதற்கும், தண்ணிர் குடிப்பதற்கும் வேறு பாத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஒருநாள் வேலைக்காரி அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க அவர்களின் சாப்பாட்டுத் தட்டை தேடினாள். அவை வழமையாக வைக்கும் இடத்தில் காணப்படவில்லை. எஜமானின் பெற்றோரைக் கேட்டபொழுது அவர்கள் அவை வைக்கும் இடத்தில் தாங்கள் வைத்ததாக சொன்னார்கள். அனால் அவை அங்கேயும் காணப்படாததால் எஜமானிடம் வந்து முறையிட்டாள்.

எஜமானும் பெற்றோரிடம் போய் விசாரித்தார், பெற்றோரும் அவை வைக்கும் இடத்தில் வைத்ததாக கூறினர். அதன் பின் தன் மூத்த மகனை அழைத்து அந்த கோப்பைகளை யார் எடுத்தது என வினவினார். அதற்கு, மகன் நான்தான் அப்பா அதை எடுத்தேன் என்று கூறினான். அந்த அசிங்கமான கோபைகளை ஏன் எடுத்தாய் என்று தகப்பன் அடிக்க கையோங்கினார். [/size]

[size=5]அப்போது, அது அப்பா நீங்களும் அவர்களைப் போல வயதான பிறகு உங்களுக்கு நான் சாப்பாடு தரத்தான் எடுத்து பத்திரமாக ஒழித்து வைத்திருக்கிறேன் என பதிலளித்தான். அப்போதுதான் தந்தையான எஜமானின் கண்திறந்தது. இதன் பின்னால் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பார்க்கலாம். உங்கள் எண்ணத்தில் உதிப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவற்றைக் கருத்திலும் பதிவிலிடலாம்.[/size]

[size=5]இது ஒரு கற்பனைக் கதை. பெயர்கள் யாவும் கற்பனையே.[/size]

[size=5]http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=3809:2011-11-10-05-03-42&catid=99:2010-10-03-03-49-37&Itemid=508[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வேதனை தரும் விடையம் என்றாலும் அனேகமான பெற்றோர்கள் தங்கள் பெருமைக்காகவும் சுயநலத்துக்காகவும் பிள்ளைகளை அளவுக்கு மீறி வருத்தி படிப்பிற்கிறார்கள். அதே நேரம் அளவுக்கு அதிகமாக எதிர் பார்ப்பும் வைக்கிறார்கள்.

பொய்கதையோ உண்மைக்கதையோ இது பஞ்சதந்திர கதை மாதிரி முதியோர் பாணியில்(Books of Virtue) சொல்லப்படுவதை கேட்டிருக்கிறேன்.

Oct 1, 2012

ஒக்டோபர் 1ம் திகதி, சர்வதேச முதியோர் தினம்!

muthijor.jpgசுருங்கிய தோல்கள், மங்கிய கண்கள், நரைத்த முடி ஆகியவற்றுடன் அனைவரது குடும்பத்திலும் இருக்கின்றனர் முதியோர். வாழ்க்கைப் பயணத்தில் இவர்கள் பெற்ற குழந்தைகளுக்காக உழைத்து, முதிர்ந்த வயதில் தள்ளாடி நிற்கின்றனர்.

இவர்களின் உழைப்பு மற்றும் தியாகத்தை மறக்காமல், அவர்களிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டுதோறும் ஒக்டோபர் 1ம் திகதி, சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.

முதியோரை மேன்மைப்படுத்தும் வகையில் கடந்த 1990ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் திகதியை உலக முதியோர் தினமாக ஐ.நா. அறிவித்தது. கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக, கலாச்சார, அரசியல்ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

21ஆம் நூற்றாண்டில் வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளக்கூடிய சவால் மற்றும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டும், அனைத்து வயதினரையும் முன்னிலைப்படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

உலக மக்கள்தொகையில் 10ல் ஒருவர் 60வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். இது, 2050ல் ஐந்தில் ஒருவராகவும், 2150ல் மூன்றில் ஒருவராகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முதியோரும், குழந்தையும் மனதால் ஒன்று எனக் கூறுவர். ஞாபக மறதி காரணமாக, நம்மிடம் கேட்டவற்றையே திரும்ப திரும்ப கேட்பர். இதற்கு அவர்களிடம் கோபம் காட்டாமல், பரிவுடன் உதவ வேண்டும். முதியோரை இதுநாள் வரை, கவனிக்க மறந்து விட்டாலும், இத்தினத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அவர்களிடம் அன்பு செலுத்த முன் வரவேண்டும். நாமும் நாளை முதியோர் ஆவோம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.

http://www.pathivu.com/news/22178/57/1/d,article_full.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்?

இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற "பொன்வாய்க்கியம்" :D

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்?

அப்பா சொல்லித் தந்தது. அத்துடன் இன்னுமொன்று சொல்லித் தந்தார்

"ஆலயம் தொழுவது வேலை மினக்கேடு" :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

வயதானவர்களுக்கு என்றான வாழ்க்கை முறைக்குள் இளையவர்கள் தம்மை இசைவு படுத்திக் கொள்ளும் பக்குவத்தை அடைவது அவசியவம். அவர்களால் அது முடியும். ஆனால் அவர்கள் அதனைச் செய்யத் தூண்டப்படுவதில்லை..!

கெயர் ரேக் சென்ரரில் காசுக்கு வயதானவர்களை பராமரிக்கும் இளையவர்கள்.. வீட்டில் பெற்றோரை கவனிக்கிறார்கள் இல்லை..! இது தான் வியப்பாக இருக்கிறது.

சமூக எழுத்தாளர்களைக் கேட்டால் அது தலைமுறை இடைவெளி என்றிட்டு போயிடுறார்கள். வேலை என்று போகும் இடத்தில் காசைக் கண்டதும் இல்லாமல் போகும் தலைமுறை இடைவெளி.. ஏன்.. வீட்டில்.. வருகுது..???!

எல்லா உயிரினமும் சூழலுக்கு இசைந்து வாழக் கற்றுக் கொள்ளும் போது ஏன் இளைய தலைமுறையினரால் அது முடியல்ல. முடியும். ஆனால் அதை தடுப்பதில் தலைமுறை இடைவெளி எழுத்தாளர்கள் உட்பட பலர் நல்லாவே "சோ" காட்டிக்கிட்டு இருக்கிறாங்க..!

இன்றைய வயதான பெற்றோரின் கவனிப்பாரற்ற வாழ்வுக்கு காரணம்.. இளைய தலைமுறையினருக்கு சரியான சமூக வழிகாட்டி இன்மையே அன்றி.. அவர்களால் பெரியவர்களோடு இசைந்து வாழ முடியாது என்பதல்ல..!

இதற்கு உண்மைக் காரணம்.. சமூகம்..! சமூகம் தானே தன் தலைமீது வாரி இறைத்த புழுதி இது. அதனை அதுதான் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்..!

அதுவரை கெயர் ரேக்கர் சென்ரர்கள் மூலமாவது வயதானவர்களுக்கு உதவ இளையவர்கள் தூண்டப்படுவதும்.. வயதானவர்கள் வாழ்வு செழிப்புறுவதும் நடக்கட்டும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.