Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீருக்காக ஓர் உலகப்போர்!!!!!!!!!!!!!!

Featured Replies

waterwar.jpg

http://img14.imageshack.us/img14/9148/waterwar.jpg

தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும் உலகில் உயிரினங்களின் அழிவுக்கும் உருவாக்கத்துக்கும் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இக் கொள்கையின் அடிப்படையிலேயே மனிதன் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

வலியது உயிர்பிழைக்கும் ஆனால் எத்தகைய ஆற்றல் மிக்க ஜீவராசியும் உயிரின் ஆதாரமான நீர் இன்றி உயிர் வாழ்வதென்பது சாத்தியமாகாது என்பது நிதர்சனமானது. அவ்வாறானதொரு நிலையிலேயே இன்று நாம் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் வாழப்போகின்றோம்.

ஆனால் இன்று நீரின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை உலக மக்களிடையே பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. இன்று உலகில் தங்கம், வைரம், வைடூரியம் என மதிப்புமிக்க பல பொருட்களாகக் கருதி அவற்றையெல்லாம் சேமிக்கின்றோம். இருப்பினும் இந்த சேமிப்புக்கள் ஒரு போதும் எமது அடுத்த சந்ததியினைக் காப்பாற்றப்போவதில்லை.

2100இல் உலக தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அப்படி இருக்கும் இப்படி இருக்கும் எனக் கனவு காணும் நாம் 2100 க்கு பின்னர் நீர் இருக்குமா என்று ஒருபோதும் சிந்திப்பதில்லை. பதிலாக நீரை சிந்தவிட்டுக்கொண்டிருக்கின்றோம். 2100ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிக விலைமிக்க பொருளாக நீர் அமைந்துவிட்டாலும் ஆச்சரியமில்லை. அந்தளவுக்கு குடி நீரின் அளவு வெகுவாகக் குறைந்து வருவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் ஒரு சில விடயங்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து விடயங்களுக்கும் மாற்றீட்டினை மனிதனால் உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது மறுக்கவோ மறைக்வோ முடியாத உண்மை. ஆனால் இயற்கையின் சித்தம் எதுவாக இருந்தபோதிலும் மனிதன் அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கண்டுபிடிப்புக்களின் உச்சத்தில் மனிதன் இருக்கிறான் என நாம் தற்பெருமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உண்மையில் இயற்கையின் கண்டுபிடிப்புக்களுடன் எமது கண்டுபிடிப்புக்கள் ஒன்றும் ஒருபோதும் உயர்ந்து விட வில்லை என்ற உண்மையை மானிடக் கண்டுபிடிப்புக்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன.

இதனால் கண்டுபிடிப்புக்கள் அவசியமில்லை என ஒரு போதும் கூறிவிட முடியாது. இயற்கைக்கு சவால் விடும் கண்டுபிடிப்புக்களே அவசியமில்லை. ஆனால் மனித வர்க்கத்தின் கண்டுபிடிப்புக்கள் ஒவ்வொன்றும் இயற்கைக்கு சவால் விட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. ஏனெனில் இது வரையில் இல்லாத அளவுக்கு தற்போது இயற்கை மனித குலத்துக்கு மாறு செய்கின்றது. காரணம் நாம் இயற்கைக்கு எதிராக விதைத்தது தினைகளை அல்ல வினைகளைத்தான் என்பது எண்ணிப் பார்க்கும் போதே புரிகிறது.

நாம் செய்த வினைகளின் விளைவில் ஒன்றுதான் பூமியில் மனிதன் வாழ மிக முக்கிய காரணிகளில் ஒன்றான நீர் எம்மை விட்டு செல்ல முனைகிறது. புவி எனும் கிரகத்தைத் தவிர்த்து உயிரினங்கள் வாழ இதுவரையில் மனித குலம் வேறு எந்தக் கிரகத்தினையும் கண்டு பிடிக்கவில்லை.

எனவே ஜீவராசிகள் பயன்படுத்தத்தக்க நீர் இந்தப் பூமியில் இல்லாது போனால் ஜீவராசிகளின் நிலை என்ன? தக்கன பிழைத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. காரணம் உயிரினங்களின் ஆதாரமே நீர் தான்.

நீரின்றி அமையாது உலகெனில் யார்யார்க்கும்

வானின்றி அமையாது ஒழுக்கு.

என்ற வள்ளுவரின் வரிகளும் எமக்கு எடுத்தியம்புவது உயிர்களின் அடிப்படை நீர் என்பதனையே.

உடலில் மட்டுமல்ல உலகிலும் மூன்றிலிரண்டு பங்கு நீர்தான் காணப்படுகிறது. பூமியில் மொத்தம் 71 சதவீதம் நீரின் பகுதியாகும். இதில் 97.5 சத வீதம் சமுத்திரங்களில் காணப்படுகிறது. எஞ்சிய 2.5 சத வீதமான நீரே நிலத்தடி நீராகவுள்ளது. இதிலும் பனிப்பாறைகள், பனித்தரைகளிலிருந்து மிச்சமான 0.26 வீதமான நீரையே உலகிலுள்ள சுமார் 7 பில்லியன் மக்களும் பயன்படுத்துகின்றனர்.

தற்போது வாழும் சனத்தொகையில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றித் தவிக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 2025ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகை 8 பில்லியன்கள் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அப்போதைய நிலைமையை சிந்தித்துப் பாருங்கள். இதனை உணர்த்துவதற்காக 1992 ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தில் உலக நீர் தினத்தினை உருவாக்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த திட்டம் வகுத்தது.

நீரின் தேவை அதிகரிக்கின்ற போதி லும் அதன் உற்பத்தி போதுமானதாக இல்லை. இதற்கு காரணம் இயற்கை அல்ல மனிதர்களாகிய நாமே என்பதில்தான் வருத்தம்.

சொந்த செலவில் சூனியம் வைப்பதில் வல்லவர்கள் நாம். எமது நிலைகளை உயர்த்த தொழிற்சாலைகள், குடியிருப்புக்கள் மற்றும் பல தேவைகளுக்கென ஓங்கி வளர்ந்த மழை தரு காடுகளை அழித்து மழை நீருக்கு முட்டுக்கட்டை போட்டது யார் குற்றம்?

தண்ணீருக்கு மாற்றுப்பொருள் இதுவரையிலும் இல்லை; இனியும் வரப்போவதில்லை என்ற உண்மையை அறிந்திருந்தும் மனிதனின் மழைக்கும் நீருக்கும் எதிரான செயற்பாடுகளை குறைத்ததாகத் தெரியவில்லை. எனவே மனிதனின் தற்போதைய கண்டுபிடிப்புக்கள் மின்சாரம் இல்லாத ஊருக்கு மின்குமிழ் விற்கப்போனவன் கதையாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

water1a.jpg

water1a.jpg

மென்பானங்கள் தயாரிப்புக்கு என நிறுவப்படும் தொழிற்சாலைகளில் நிலத்தடியிலிருந்து குழாய் மூலம் உறிஞ்சப்படும் நீரினால் தொழிற்சாலை அமைந்திருக்கும் குறித்த பிரதேசத்தில் வறட்சி ஏற்படும் என்பது திண்ணம் .இருந்தாலும் மென்பானங்களினால் ஈட்டும் வருமானத்தை நிறுத்த மனிதனுக்கு மனம் இடம் கொடுக்காதது ஏனோ?

இவ்வாறான தொழிற்சாலைகள் உறுஞ்சுவது நீரினை அல்ல மனித இரத்தத்தையும் அடுத்த சந்ததியின் கருமூலங்களையும் என்பதை உணர்ந்தும் இவ்வாறான தொழிற்சாலைகளை தவிர்ப்பதற்கான எவ்வித நடவடிக்கைளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இதே போன்று வேறு சில தொழிற்சாலைகள் தங்களது கழிவுகளை ஆறுகள், குளங்களில் வெளியேற்றுவதனால் இரசாயன மாற்றங்களினால் நீரின் தன்மை மாற்றடைகின்றது. இதனால் பயன்பாட்டுக்கு உகந்த நிலையை நீர் இழக்கிறது.

இப்போதுதான் காற்றிலிருந்து நீரினைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், அசுத்தமான, கடல் நீரிலிருந்து பருகும் நீரினைப் பெற்றுக்கொள்ள இயந்திரம் என எங்களது கண்டுபிடிப்புக்கள் எங்களைப் பாதுகாக்கும். எனவே எப்படியெல்லாம் நீரினை அசுத்தப்படுத்தினாலும் எங்களது கண்டுபிடிப்புக்கள் எங்களைக் காப்பாற்றும் என நிச்சயம் எண்ண வேண்டாம். பயன்படுத்தத்தக்க நீரினைக் குறைக்குமளவுக்கு பயன்படுத்த முடியாத நீரினை அதிகரிக்கவும் காரணமாக நாம் அமைந்துவிட்டோமே. இதனால் ஏற்படப்போகும் ஆபத்து மிகப்பெரியது.

உலக வெப்பமயமாதலினால் துருவப்பனிப்பாறைகள் ஒரு நாளல்ல ஒவ்வொரு நாளும் உருகிக்கொண்டிருப்பதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.இதனால் அடுத்த 90 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் 2 அடி உயரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த 1 தொடக்கம் 2 நூற்றாண்டுகளில் 6 அடி வரை நீர் உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கடல் நீர் மட்ட உயர்ச்சியின் காரணமாக உலகின் பல தீவுகள் அழியும் அபாயத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது.

எனவே கால ஓட்டத்தில் வெப்பமயமாதலினால் பனிப்பாறைகளின் உருகுதல் அதிகரித்து மொத்தப் பனிப்பாறைகளும் உருகினால் உலகில் மனிதன் வாழ நிலப்பரப்புக்களே காணப்படாமல் போய்விடும் சாத்தியம் உண்டென்பதால் எமது கண்டுபிடிப்புக்களை எங்கே சுமந்து செல்வது.

செல்வதற்குத் திக்கற்று நிற்கும் எமக்கு எதற்காக இந்த வீணான வீராப்புக்கள். நீரின் மகத்துவங்களை உணர்ந்த நாம் அதனைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

இனி ஓர் உலகப் போர் ஏற்படுமேயானால் அது நீருக்கான ஒரு போராகவே இருக்குமே அன்றி வேறு எதற்காகவும் அல்ல என கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அறிவியலாளர்களும் சமூக அறிஞர்களும் கூறிவருகின்றார்கள் .உண்மையில் இதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் இன்று காணப்படுகிறது.

முன்னொரு காலத்தில் கோடை காலங்களில் வீட்டுகளுக்கு வெளியே குடங்களில் நீர் நிரப்பி வைப்பார்களாம் தாகத்தில் வரும் வழிப்போக்கர்களுக்காக. இன்றும் வீடுகளுக்கு வெளியே குடங்கள் உள்ளன. ஆனால் இவை எதிர்பார்த்துக்கொண்டிருப்பது வழிப்போக்கர்களை அல்ல நீரின் வருகையை.

இது வீடுகளுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் பொருத்தமாக இருக்கும். 2006ஆம் ஆண்டு ஐ.நா அறிக்கையில் 'அனைவருக்கும் போதுமான நீர் உள்ளது' எனத்தெரிவித்திருந்தது. ஆனாலும் தவறான நிர்வாகம், அரசியல் பின்னணியே தனி நபருக்கான நீரின் அளவை மட்டுபடுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவும் ஒரு வகையில் உண்மையாக இருக்கலாம். இந்தியா என பெயர் வரக் காரணமாக இருந்த சிந்து நதியே இன்று பாகிஸ்தானில் தானே பாய்ந்து கொண்டிருக்கிறது. இந் நதி காஷ்மீர் ஊடாகவும் செல்கின்றது.காஷ்மீரில் ஓடும் முக்கிய 6 நதிகளில் 3 நதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. மீதி 3 நதிகளுக்காக இரு நாடுகளும் முட்டிக்கொண்டுதான் இருக்கின்றன.

இதே போல ஆபிரிக்காவின் பல நாட்டு வயல்களுக்குச் செழிப்பும், மனிதருக்கு உயிரும் ஊட்டுவதுடன், எகிப்தின் நாகரிக வளர்ச்சிக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் உறுதுணையும் புரிந்த உலகின் அதி நீளமான நைல் நதிக்காகவும் குறித்த நாடுகளிடையே பிணக்குகள் காணப்படுகின்றன.

சிங்கப்பூர், மலேசியா இடையே, டைக்ரீஸ், யூப்ரடீஸ் நதிகளால் துருக்கிக்கும் சிரியாவுக்குமிடையே என பல நாடுகளிடையே இன்று நீரினால் பிரச்சினைகள் பல முற்றிக்கொண்டு வருகின்றன.அரசியல் ஆசைகளுக்காகவும் தனிமனிதர்களின் ஆசைகளுக்கு நிலங்களைக் கூறு போட்ட நாம் நீரினைக் கூறு போட முனைவதால் எத்தனை உயிர்கள் மாய்க்கப்படுகின்றன.

தனிமனிதர்களுக்கான ஜீவனை வழங்கும் ஜீவ நதிகள் பல இருந்தும் பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். இம்மாதிரியான செயற்பாடுகளினால் நீரின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாமல் இன்று வளரும் நாடுகளில் 80 சதவீதமானோர் நீர் சார்ந்த நோயிகளினால் பலியாகின்றனர். இப்படி ஒரு நாளைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காரணங்களை அறிந்த பின்பும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் முன்வராவிட்டால் மனிதர்களுக்கு ஆறறிவு என மார்தட்டிக் கொள்வதில் அர்த்தம் இல்லை.எம்மை நோக்கி வந்து மட்டுமல்ல விலகிச் சென்றும் அழிக்கும் வல்லமை கொண்ட நீரினை எம்மை விட்டு விலகிச்செல்லாமல் இருக்க இனியாவது வழி சமைப்போம் இன்றே.

உலகம் மனிதனுக்கானதல்ல. உலகில் ஓர் அங்கமே மனிதன் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டியதொன்று. உலகை நம்பி வாழும் ஒட்டுண்ணிகளில் நாமும் ஒன்று என்பதால் நாம் உலகுக்கு உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரவம் இல்லாமல் இருக்கலாமே.

waterwar2.jpg

waterwar2.jpg

இனி நாம் எதிர்கால சந்ததிகளுக்காகப் பாதுக்காக்க வேண்டியது பெற்றோல், மூங்கில், இயற்கை இறப்பர் என்று எவற்றையெல்லாமோ வகைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் எதிர்கால சந்ததிக்காக விட்டுச்செல்ல மட்டுமல்ல எதிர்கால சந்ததியையே விட்டுவைக்க நாம் பாதுகாக்க வேண்டியது நீர் என்பதனை நினைவில் வைத்து இன்று முதல் எமது கண்முன்னே குழாய் வழியாகச் சிந்தும் நீரினை அடைப்பது முதல் எமது நீருக்கான சேமிப்புக்களை ஆரம்பிப்போம்.

இனியும் வேண்டாம் ஓர் உலகப்போர். காரணம் ஏற்படப்போவது அணுகுண்டால் அல்ல அதனை விட ஆபத்தை விளைவிக்கக் கூடிய நீரினால் என்பதனால்.

- அமானுல்லா .எம். றிஷாத்

http://www.virakesari.lk/article/feature.php?vid=41

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] சிந்திக்க வேண்டிய விடயம். கட்டுரை பகிர்வுக்கு நன்றி [/size]

மனித இனப் பெருக்கமும் கூடுதலான மிருக வளர்ப்பும் பிரயோசனமில்லாத தொழிற்சாலைகளினால் நிறைய நீரை உறிஞ்சுகின்றன. காய்கறி கனி தரும் மரங்கள் பெருக்கத்தால் நீர் செலவும் மிச்ச மாகுது சுழல் மாசும் கட்டுப் படுத்தப் படுகிறது. உணவு தட்டு பாடும் குறைவடையும். ஒரு கிலோ மாடு இறச்சிக்கு நாலாயிரம் லீட்டர் தண்ணி செலவு. இதுவே ஒரு கிலோ அப்பிளுக்கு வெறும் பத்து லிட்டர் தண்ணி காணும். இதை விட செயற்கையான நீர் செலவு செய்வதில் மனிதன் முட்டாளாக இருக்குறான். உலக அளவில் பல ஆறுகள் வீணாக கடலில் கலக்கின்றன. அவற்றை தடுத்து எப்படி எண்ணை வளங்கள் பல நாடுகளுக்கு குழாய் மூலம் பல ஆயிரம் மைல்கள் தூரதித்கு விநியோகிக்கப் படுகிறதோ அதே போன்று கடலுக்குள் கலக்கும் நீரை வழிமறித்து குழாய்கள் மூலம் தண்ணி இல்லாத நாடுகளுக்கு விநியோகிக்கலாம்.

எமது பூமி எமக்கு எல்லா வளத்தையும் தந்தது. பதிலுக்கு நாம் இந்த பூமிக்கு என்ன கொடுத்தோம் என்றால் வெறும் வரட்சி தான்.

  • தொடங்கியவர்

[size=4]சிந்திக்க வேண்டிய விடயம். கட்டுரை பகிர்வுக்கு நன்றி [/size]

வருகைக்கு நன்றி நிலாமதி அக்கா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.