Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட கிழக்கு பிரச்சினையை தீர்க்க வெளிநாடுகள் அவசியமில்லை: கர்தினால் மெல்கம் ரஞ்சித்.

Featured Replies

[size=4]வடக்கு கிழக்கில் பிரச்சினை இருக்கிறது. அதனை தீர்க்க வெளிநாடுகள் அவசியமில்லை என கொழும்பு கத்தோலிக்க திருச்சபையின் தவைரான கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

சில நாடுகள் இப்பிரச்சினையில் சுய இலாபம் தேட முயற்சிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு தம்மிட்ட கார்தினல் கூரே மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"சமயங்கள் என்ற அத்திவாரத்தில் குறிப்பாக பௌத்த சமய அடித்தளத்தில் கட்டியொழுப்பப்பட்ட இலங்கையின் கலாச்சாரம், பொருளாதார நலனுக்காக மாற்றப்பட கூடாது. பொருளாதார அபிவிருத்திக்காக கலாச்சாரமும் சுற்றுச்சூழலும் அழியவிடப்படுமாயின் இலங்கை ஆசியாவின் கழிவு கொட்டும் இடமாகிவிடும். அபிருவித்தி திட்டங்களை வரையும் போது உலக வங்கி போன்ற நன்கொடை நிறுவனங்களின் ஆலோசனையை அரசாங்கம் பின்பற்றக்கூடாது.

எம்மை பிச்சை எடுக்க வைக்கவே அவர்கள் எமக்கு கடன் தருகின்றனர். இதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். பொம்மை ஆட்சி ஒன்றை உருவாக்கும் நோக்கில் சமூகங்களிடையே மோதவை ஏற்படுத்த முயலும் வேறு சர்வதேச சக்திகளும் உள்ளன

இன்று இந்த சக்திகளினால் உருவாக்கப்பட்ட பல பொம்மை அரசாங்கங்கள் உள்ளன.

தமது சமய பிரிவினுள் கத்தோலிக்கர்களை கவர்ந்திளுக்க முயலும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் பற்றி குருமார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . தத்தம் சமுதாயங்களுடம் நெருங்கி வேலை செய்ய வேண்டும்.எல்லோரும் தமது சமயத்தை பற்றி குறிப்பிடுகின்றனர். ஆனால் சமயத்தை பின்பற்றுகிறோமா என்ற கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

ஆன்மீகத்தை பின்பற்றும் போதே மாத்திரம் நற்பண்புகள் வெளிப்படுகின்றன. நீர்கொழும்பில் கத்தோலிக்க மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். பங்குப் பிரிவிற்கும் மக்களுக்கும்; இடையில் நெருக்கம் அதிகரிக்க வேண்டும். கத்தோலிக்க மக்கள் ஏனைய மதத்தவர்கள் தொடர்;பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நீர்கொழும்பு நகரை அண்மித்ததாக விமான நிலையம் மற்றும் சுதந்திர வர்த்தக வலயம் போன்றவை உள்ளன. நகரில் கருக்கலைப்பு, விபசாரம், போதைப்பொருள் வியாபாரம் மற்றும் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படல் ஆகியன அதிகரித்துள்ளன. இவை தொடர்பாகவும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் தொடர்பாகவும் இந்த வருடம் கவனம் செலுத்வுள்ளோம்.

நகரின் பிரதான வைத்தியசாலையில் அமைந்துள்ள எமது மதஸ்;தளம் முன்பாக குப்பை போடப்படுகிறது. இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் அறிவித்துள்ளோம். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இந்த பிரதேச மாகாண அரசியல்வாதிக்கு உத்தரவிட்டுள்ளார். ஆயினும் ஒரு வருடமாகியும் இன்று வரை அங்கு குப்பை கொட்டப்படுகிறது.(படங்கள்:பிரதீப் பத்திரன)

cardinal2.jpg

cardinal3.jpg

cardinal4.jpg

cardinal5.jpg[/size]

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/49892-2012-10-04-14-09-32.html

ஒருவன் மகா கெட்டவன் அவனை அந்த ஊர் பாதிரியார் அடிக்கடி புத்திமதிகளின் மூலம் திருத்த முயற்சித்தார் ..............ஆனால் அது முடியவில்லை .நாளடைவில் அவன் இறந்து நரகத்திற்கு போகிறான் சிலநாட்களின் பின் அந்தப்பாதிரியாரும் இறந்து நரகத்திற்கே போகிறார் ..........அந்த மகா கெட்டவன் பாதிரியாரைப்பார்த்து சுவாமி நீங்களுமா இங்கே என்றுகேட்க .அதற்கு பாதிரியார் ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம்போடாதே பின்னால் பிஷப் [கர்தினால்] நிக்கிறார் .என்றாராம் .....................இதை தான் என்னால் எழுதமுடியும்......................[கத்தோலிக்கன் என்ற வகையில்]

இவர்களெல்லாம் பணம் கொடுத்து தான் உந்தப்பதவிக்கும் வந்திருப்பார்கள் ..............இறைவனை சாட்டி வெள்ளை உடையுடன் நடமாடும் பிசாசுகள் ..................... :(

[size=4]"சமயங்கள் என்ற அத்திவாரத்தில் குறிப்பாக பௌத்த சமய அடித்தளத்தில் கட்டியொழுப்பப்பட்ட இலங்கையின் கலாச்சாரம், பொருளாதார நலனுக்காக மாற்றப்பட கூடாது. பொருளாதார அபிவிருத்திக்காக கலாச்சாரமும் சுற்றுச்சூழலும் அழியவிடப்படுமாயின் இலங்கை ஆசியாவின் கழிவு கொட்டும் இடமாகிவிடும். அபிருவித்தி திட்டங்களை வரையும் போது உலக வங்கி போன்ற நன்கொடை நிறுவனங்களின் ஆலோசனையை அரசாங்கம் பின்பற்றக்கூடாது.[/size]

இந்த பேச்சுக்கு இங்கே சொல்லப்படாத மற்றும் ஒரு கரை இருக்கு. அதாவது வடக்கு-கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் அங்கே பராம்பரியமாக இருக்கும் தமிழ் கலாச்சாரம் அழிக்கப்படுவதை இவர் ஏற்றுக்கொள்கிறார். அது ஏன் எனில் இவரின் வாதம் தமிழ் கலாச்சாரம் இலங்கையில் என்றும் இருக்கவில்லை. இருந்தது பௌத்த கலாச்சாரம் மட்டுமே

[size=4]எம்மை பிச்சை எடுக்க வைக்கவே அவர்கள் எமக்கு கடன் தருகின்றனர். இதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். பொம்மை ஆட்சி ஒன்றை உருவாக்கும் நோக்கில் சமூகங்களிடையே மோதவை ஏற்படுத்த முயலும் வேறு சர்வதேச சக்திகளும் உள்ளன இன்று இந்த சக்திகளினால் உருவாக்கப்பட்ட பல பொம்மை அரசாங்கங்கள் உள்ளன. [/size]

இந்த ஆளின் கதை சீனா தரும் கடன் வாழவைக்கவும், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை கடன் தருவது இலங்கையை பிச்சை எடுக்க வைக்கவுமே என்பது போலிருக்கு.

[size=4]தமது சமய பிரிவினுள் கத்தோலிக்கர்களை கவர்ந்திளுக்க முயலும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் பற்றி குருமார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . தத்தம் சமுதாயங்களுடம் நெருங்கி வேலை செய்ய வேண்டும்.எல்லோரும் தமது சமயத்தை பற்றி குறிப்பிடுகின்றனர். ஆனால் சமயத்தை பின்பற்றுகிறோமா என்ற கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது[/size]

தெளிவாக மன்னர், யாழ்ப்பாண ஆயர்மரை குறிப்பிட்டு இனவாதம் கக்குகிறார்.

இவர் மத குருவாக இருக்க தகுதி இல்லாதவர். இவரின் மேற்கு நாடுகள் எதிர்ப்பு, தமிழர் எதிர்ப்பு போன்ற இன வாத நடத்தைகளை கிறிஸ்த்தவர்கள் ரோமிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்கத்தை இந்தியாவே சீர்குலைக்கிறது; குற்றம்சாட்டுகிறது இலங்கை

india.jpg

இலங்கையில் போருக்குப் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்க இந்தியா தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக இலங்கை அரசு குற்றஞ் சுமத்தியுள்ளது.

இந்திய ஊடகங்களே இவ்வாறான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசு சார்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தேசிய இனப்பிரச் சினைக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதியின் முயற்சியை கடந்த கால முயற்சிகளுடன் ஒப்பீடு செய்வது தவறானது.

80 களில் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இந்தியாவே பயிற்சி அளித்தது. அதுவே இன முரண்பாடுகள் தீவிரமடைய வழிவகுத்தது. 2009ம் ஆண்டு வன்னியில் புலிகளுக்கு எதிரான போர் முன்நகர்வுகளை தடுத்து நிறுத்த இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் தீவிர முயற்சி செய்தன. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி இலங்கை வெற்றிபெற்றது.

இன்று பிரபாகரனோ, பொட்டு அம்மானோ அல்லது சூசையோ உயிருடன் இருந்திருந்தால் சர்வதேச சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கவனத்தில் எடுத்திருக்காது. வடக்கில் எப்போது தேர்தல் நடத்த வேண்டும் என்பது பற்றி இந்திய ஊடகங்கள் இலங்கைக்கு போதிப்பது அதிகபிரசங்கித்தனமான செயல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கை விவகாரம் தொடர்பில் இந்து பத்திரிகை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் இலங்கை அரசுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/News_More.php?id=551031475004622764

  • கருத்துக்கள உறவுகள்

"2009ம் ஆண்டு வன்னியில் புலிகளுக்கு எதிரான போர் முன்நகர்வுகளை தடுத்து நிறுத்த இந்தியாஇ பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் தீவிர முயற்சி செய்தன"

இந்தக் கூற்று உண்மையா என்பது சந்தேகமே! குறித்த காலகட்டத்தில் மேற்குறிப்பிட்ட நாடுகள் போரை நிறுத்துவதற்கு இதயசுத்தியுடன் பாடுபட்டு உழைத்தனவா அல்லது அதற்கு முயற்சிப்பதுபோல் பாசாங்கு செய்தனவா என்பது ஒரு புரியாத புதிர்.

யாரப்பா புதுசா கார்டினால்??'? முள்ளிவாய்க்கால் அழிவின் போது அதை தடுத்து நிறுத்த முடியாத சிறு கண்டனமோ கவலையோ வெளியிட முடியாத ரஞ்சித் பண்டா இப்ப மட்டும் பேசுவாராம். நல்லாய் பேசுங்கோ அப்பு உங்க இரத்தம் சிங்கள ரத்தம் எங்க ரத்தம் தமிழ் தமிழ் தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.