Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் - மீண்டும் ஆரம்பமாகவுள்ளது கூட்டமைப்பு அரசுக்கு இடையிலான பேச்சுவார்த்தை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA_logo_sithy%20(1).jpg

[size=4]நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இருதரப்புப் பேச்சுக்களை இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.[/size]

[size=4]சமநேரத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டுடன் இந்தப் பேச்சுக்களை இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.இதுதொடர்பாக அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் விரிவாக ஆராய்ந்துள்ளார்.[/size]

[size=4]நேற்று புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பேர்கொண்ட குழுவுக்கு மகிந்த ராஜபக்ச - மன்மோகன் சிங் சந்திப்பு தொடர்பாக, இந்தியா விளக்கமளிக்கவுள்ளது.[/size]

[size=4]புதுடெல்லி சென்றுள்ள குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இதன்போது இருதரப்பு பேச்சுக்கள் மற்றும் தெரிவுக்குழுவில் சமநேரத்தில் பங்கேற்பதை இந்தியா உத்தரவாதப்படுத்தவுள்ளது,[/size]

[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், புதுடெல்லியில் முக்கியமாக இந்திய மத்திய அமைச்சர்கள் நாராயணசாமி, எஸ்.எம்.கிருஸ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்திக்கவுள்ளனர்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

sampanthan%20tna.jpg

[size=4]மீண்டும் நாம் ஏமாற்றப்பட உள்ளோம் <_<[/size]

[size=4]இந்தமுறை ஏமாற்றத்தை குறைக்க இந்தியாவின் உறுதிப்பாடுகளை தமிழர்தரப்பு பகிரங்கப்படுத்த வேண்டும், ஒவ்வொரு பேச்சு வார்த்தை வட்டத்தின் பின்னரும் பகிரங்கமாக பத்திரிகையாளர் மாநாடு நடாத்தவேண்டும். [/size]

[size=6]India works out deal with President[/size]

[size=5]The Government is to resume bilateral talks with the Tamil National Alliance (TNA) simultaneously whilst the latter will agree to participate in the proposed Parliamentary Select Committee (PSC) in terms of a deal being brokered by India.[/size][size=1]

[size=5]The broad outlines were discussed when President Mahinda Rajapaksa held talks with Indian Prime Minister Manmohan Singh recently.[/size][/size][size=1]

[size=5]A five-member TNA delegation headed by its leader Rajavarothayam Sampanthan left yesterday for New Delhi at the Indian government’s invitation to be briefed on the outcome of the Rajapaksa- Singh talks. In essence, India is to stand guarantee to ensure the bilateral talks and TNA’s participation in the PSC. The twin track dialogue is to evolve a political package to address Tamil issues and is a major step in the UPFA government’s reconciliation programme.[/size][/size][size=1]

[size=5]The TNA delegation’s main talks will be with V. Narayanaswamy, Minister of State in the Indian PM’s Office, External Affairs Minister S.M. Krishna and National Security Advisor Shivshankar Menon. They will also call on Prime Minister Singh.TNA leader Sampanthan told the Sunday Times, “The present stalemate is because the government has not kept to its promise. Although we agreed for talks in January this year, nothing materialised.” Other members of the TNA delegation are Mavai Senathirajah, Suresh Premachandran, Selvan Adaikalanathan and M.A.Sumanthiran – all parliamentarians.[/size][/size][size=1]

[size=5]The Rajapaksa-Singh talks took place when the President visited New Delhi en route to Bhopal last month. Rajapaksa laid the foundation stone of the Sanchi University of Buddhist and Indic Studies.The Indian government ordered special security precautions during President Rajapaksa’s visit to Bhopal. Indian Air Force aircraft hovered over the skies of Sanchi in Madhya Pradesh whilst trains were banned from stopping between Bhopal and Videsha including Sanchi.[/size][/size][size=1]

[size=5]The President told the Sunday Times he was “very pleased” with all arrangements made by the Government of India for his visit. He said he was particularly touched by Premier Singh’s speech during a banquet, where he said “petty issues” should not mar the long standing relationship between Sri Lanka and India.[/size][/size][size=1]

http://www.sundaytimes.lk/121007/news/india-works-out-deal-with-president-15664.html[/size]

[size=4]பல்லாயிர கணக்கான உயிர்கள் கொல்லப்பட்ட போது இந்தியாவின் உறுதிப்பா[/size]டு எப்படி இருந்தது என [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு[/size] நன்கு அறிந்திருந்தும். வெறுமனே பேச்சு வார்த்தைக்காக இந்தியாவை நம்புவது என்பது முட்டால் தனம்.

[size=4]இதில், பேச்சுவார்த்தையில், ஐ.நா.வையும் உள்வாங்க வேண்டும்.[/size]

[size=4]இதில், பேச்சுவார்த்தையில், ஐ.நா.வையும் உள்வாங்க வேண்டும்.[/size]

உண்மைதான் அகோத இந்தியாவை புரக்கணித்து [size=4]ஐ.நா.வையும் உள்வாங்க வேண்டும்.[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]

[size="3"][size=3]பொருத்தமற்ற தீர்வுக்குள் நியாயங்களைத் தேடுகிறதா கூட்டமைப்பு?[/size][/size][/size]

[size=3]

-இதயச்சந்திரன்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், மகிந்த ராஜபக்சவின் தம்பியுமான பசில் ராஜபக்சவின் பேரினவாதச் சிந்தனையிலிருந்து பிரசவித்த 'திவி நெகும' என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்த சிங்களம் முனைப்புக் காட்டுகிறது.[/size][size=3]

நாட்டின் அபிவிருத்தி, வளர்ச்சி என்பது போலான கருத்துருவத்தைக் கொண்ட இந்த 'திவி நெகும', ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு சில அதிகாரங்களையும், மாகாணசபை பட்டியலில் இருந்து உருவிக் கொள்வதற்கு முயற்சிப்பதாக, 13 வது திருத்தச் சட்டத்தை தீர்வாக நம்புவோர் கவலையடைகின்றனர்.[/size][size=3]

அடிக்கடி பேசப்படும் காணி, காவல் துறை அதிகாரங்களுக்கு அப்பால், புதிதாக முளைத்துள்ள இந்த 'திவி நெகும', மத்தியில் ஆட்சி அதிகாரத்தைக் குவிக்கும் இன்னுமொரு கருவியாக மாறுமென்பதே உண்மை.

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தால் , மத்தியிலுள்ள அமைச்சர்களுக்கு என்ன வேலை என்பதுதான் பசிலின் பிரச்சனை போல் தெரிகிறது.[/size]

[size=3]

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் நாடாளுமன்றில் கொண்டுவரப்படவிருந்த இச் சட்டமூலத்தை உயர் நீதிமன்றம் நிறுத்தியது.

அதாவது அரசியலமைப்புச் சட்டத்தின் 120 ஆவது சரத்தின் பிரகாரம், மாகாணசபைப் பட்டியலிலுள்ள அதிகாரங்களை இச்சட்டமூலம் மீறுவதால், சபைகளின் அங்கீகாரம் இதற்குத் தேவை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

அரசியலமைப்பிலுள்ள சரத்து 154 [G] [3] இற்கு அமைய . இப்புதிய சட்டமூலம் குறித்து, சனாதிபதி என்பவர் , மாகாணசபைகளுக்குத் தெரியப்படுத்தி ,அவற்றின் ஒப்புதலைப் பெற வேண்டும்.[/size][size=3]

இதற்கமைய மேல் மாகாணசபை, வடமேல் மாகாணசபை, ஊவா மாகாணசபை மற்றும் கிழக்கு மாகாணசபை என்பன , 'திவி நெகும' சட்டமூலத்திற்கான அங்கீகாரத்தை வழங்கி விட்டன.

மத்தியில் ஆட்சிபுரிவோர் இம் மாகாணசபைகளில் பெரும்பான்மையாக இருப்பதால் , இலகுவாக இதனை நிறைவேற்றிவிட்டார்கள்.[/size][size=3]

இதில் வேடிக்கை என்னவென்றால், 18 வது திருத்தச் சட்டம் உட்பட எந்தவிதமான சட்டங்களையும் நிறைவேற்ற, நாடாளுமன்றிலும் மாகாணசபைகளிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்திருக்கும் அரசு , இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு மட்டும் , நாடாளுமன்றத் தெரிவுக் குழுவே அதனைத் தீர்மானிக்கும் வல்லமையுடையதென நாடகமாடுகிறது.[/size]

[size=3]

அதேவேளை 'திவி நெகும' சட்டமூல உருவாக்கத்தின் பின்புலத்தை உற்று நோக்கினால், அதிகார மையத்திலிருக்கும் மகிந்த சகோதரர்களுக்கு இடையிலான பனிப்போரின் முரண்நிலைகள் தெளிவாகத்தெரியும்.[/size]

[size=3]

2013 ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், நாட்டின் மொத்த செலவீனம் 2520 பில்லியன் ரூபாவாகவும், மொத்த வருமானம் 1280 பில்லியன் ரூபாவாகவும் மதிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.

அதில் கோத்தபாய செயலாளராகவிருக்கும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சிற்கு 290 பில்லியன் ரூபாய்கள் [ 29,000 கோடி] ஒதுக்கப்பட்டுள்ளது.[/size][size=3]

ஆகவே அண்ணனிற்கு பாதுகாப்பு அமைச்சோடு நகர அபிவிருத்தியும் இணைக்கப்பட்டது போன்று, தனது பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு ஏன் 'திவி நெகும' என்கிற அபிவிருத்தி திணைக்களத்தை இணைக்கக்கூடாதென பசில் கேள்வி எழுப்பியிருக்கலாம்.[/size][size=3]

கிராமிய மற்றும் நகர அபிவிருத்திக்கென , வெளிநாடுகளிலிருந்து வரும் பெரும் தொகைப்பணத்தை தன்னகத்தே வைத்திருக்கும் சமுர்த்தி அதிகாரசபை, மலையாக அபிவிருத்தி சபை, மற்றும் தென்னிலங்கை அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றை ஒன்றிணைத்து 'திவி நெகும' அபிவிருத்தி திணைக்களம் உருவாகிறது. இதுதான் இச் சட்டமூலத்தின் அடிப்படையான விடையம்.[/size][size=3]

சமுர்த்தி வங்கியிலுள்ள 53 பில்லியன் ரூபாய்களும், 'திவி நெகும' ஊடாக, பசிலின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு சென்றடையுமென மங்கள சமரவீர கிண்டலடிப்பது இவர்களின் நோக்கங்களை உறுதி செய்கிறது.[/size][size=3]

ஆக மொத்தம், கிராமிய அபிவிருத்தி மற்றும் மக்கள் நலனை உள்ளடக்கிய , சகல அதிகாரங்களும் ஓரிடத்தில் குவிக்கப்பட்ட அமைச்சொன்றினை உருவாக்குவதுதான் 'திவி நெகும' என்கிற மகிந்த சிந்தனையின் நோக்கமாகும்.[/size][size=3]

இருப்பினும் சிங்கள இறைமையை நாடளாவிய ரீதியில் உறுதிப்படுத்த மகிந்த சகோதரர்கள் முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு அப்பால், மாகாணசபை அதிகாரங்கள் முதல்படி, அடுத்து இரண்டாம் படியில் ஏறிநின்று சர்வதேசத்தின் உதவியோடு, மேலும் பல அதிகாரங்களைப் பெறலாமென வியாக்கியானமளிப்போர், இந்தியாவின் உத்தரவாதத்தோடு மகிந்தரின் 'நாடாளுமன்ற தெரிவுக் குழு' என்கிற மீளமுடியாத பொறிக்குள் விழும் சோக நிகழ்வும் நடைபெறத்தான் போகிறது.[/size][size=3]

இவைதவிர, 13 வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாணசபைகளால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை, மத்திய அரசின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சே , 'திவி நெகும' ஊடாக மேற்கொள்ளுமென சம்பந்தன் அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் மாகாணநிதியத்திற்கு நிதி ஒதிக்கீடு செய்யும் அதிகாரம் யார் கையில் இருக்குமென்பதை 13 வது திருத்தச் சட்டம் தெளிவாகச் சொல்லிவிட்டது. மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரியின் செயலாளர் மற்றும் நிதி-சட்டம்-நிர்வாகம்-வணிகம் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மூவர் ஆகியோரைக்கொண்ட குழுவே , மகிந்தர் மற்றும் ஆளுநரின் வழிகாட்டலில் இயங்குவார்கள்.[/size][size=3]

ஆகவே 'திவி நெகும' வந்தாலும் அல்லது வராவிட்டாலும் , அபிவிருத்திப் பணிக்கான காஜானாவின் சாவி எப்போதும் மகிந்தர் மற்றும் நாடாளுமன்றின் சட்டைப் பைகளிலேயே இருக்கும்.

[/size][size=3]

வடமாகாணசபைக்கான தேர்தலை நடாத்தும்படி மகிந்தரை வற்புறுத்தும் இந்தியாவிற்கும், மேற்குலகிற்கும் இது புரியும்.[/size][size=3]

ஏனெனில் சென்னையிலுள்ள அமெரிக்கத்தூதுவர் ஜெனிபர் அவர்கள் அண்மையில் கூறியது போன்று, அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதே அவர்களின் குறிக்கோள். மாகாணசபைக்கு அதிகாரங்கள் இருக்கிறதா, தமிழ் தேசியத்தின் இறைமை பாதுகாக்கப்படுகிறதா என்பதல்ல அவர்களின் பிரச்சினை. நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்பதுதான் இந்தியா மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாடு.[/size][size=3]

'திவி நெகும' ஊடாக, மாகாணசபைகள் மாநகர சபைகளாக மாறுவது குறித்தும் இவர்களுக்கு கவலை இல்லை.[/size][size=3]

சனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர், வடமாகாண சபை சார்பாக இச் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்குவது அரசியலமைப்பிற்கு முரணானது என்பதைப் புரிந்தாலும் இவ் வல்லரசுகள் இது குறித்து வாய்திறக்காது.[/size][size=3]

இயக்கமற்றநிலையில் வட மாகாணசபை இருக்கும்போது, அதனுடைய அங்கீகாரம் இல்லாமல் ஏனைய சபைகளின் ஒப்புதலோடு மட்டும் இச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடியுமா என்கிற சட்டச் சிக்கல் எழுகிறது.

இதற்காகவும் உயர்நீதிமன்றில் வழக்கொன்று பதிவு செய்யப்படுமென்று எதிர்பார்க்கலாம்.[/size][size=3]

இருப்பினும், வடகிழக்கில் பூர்வீகமாக வாழும் இறைமையுள்ள தமிழ் பேசும் மக்களிற்கான அரசியல் தீர்வு, 13 வது திருத்தச் சட்டமல்ல என்பதனை, திணிக்கப்பட்ட 18 வது திருத்தச் சட்டங்களும், புதிதாக முளைத்துள்ள 'திவி நெகும' சட்ட மூலங்களும் உறுதிப்படுத்துகின்றன.[/size][size=3]

பிழையான தீர்விற்குள் நியாயங்களைத் தேடி, காலத்தை விரயம் செய்வதை தமிழ் அரசியல் தலைமைகள் கைவிட வேண்டும்.

சிங்களத்தின் அரசியலமைப்பிற்கு உட்பட்டுப் போராடும் அரசியல் வெளி குறுகிச் செல்கிறது.[/size][size=3]

இனி 13 வது திருத்தச் சட்டத்தில் எஞ்சியிருக்கும் அதிகாரங்களிற்காக, சாத்வீகப் போராட்டங்களை நடாத்துவதே கூட்டமைப்பின் அரசியல் பாதையாக இருக்கப்போகிறதா? .

-இதயச்சந்திரன்[/size]

இந்தியா என்ன செய்கிறதென்பது எல்லோருக்கும் தெரியும் நொவெம்பரில் வரவிருக்கும் காலாவர்த்தணை மீளாய்வு இந்தியாவின் கையில் இருக்கிறது. இதில் கடைசி நொவெம்பர் வரையாவது கூட்டமைபை இந்தியாவால் இறுக்க முடியும். ஆனால் வரும் மார்சில் இந்தியாவின் கையில் பெரிதாக ஒன்றும் இல்லை.

தெரிவு குழு வெற்றிகரமாக இலங்கையில் தீர்வு கொண்டு வந்தாலும் எமது நோக்கம் ஒரு நாள் மகிந்தா பொறுப்பு கூற வேண்டும் என்பது. இதில் பிளேக் திடமாக இருக்கிறார். ஐ.நா.நிபுணர்கள் தெளிவாக இருக்கிறார்கள். மேற்கு நாடுகளின் பிரேரணை இதில் தெளிவாக இருக்கிறது.

சீன விடயத்தில் இலங்கை என்ன செயய போகிறது? ஈரானை இலங்கை கைவிட்டுவிட்டு அமெரிக்கா சொன்னது போல கேட்டு நடக்கிறது. எண்ணை வர்த்தகத்தை அமெரிக்கா தொடர்ந்து கையாளாப்போகிறது. எனவே அணு உலை கட்டுவது என்பது உண்மையா?

[size=5]ததேகூ13ஆவது சட்டத் திருத்ததை எப்போதுமே ஓர் அரசியல் தீர்வாக ஏற்றதில்லை: சம்பந்தர்[/size]

[size=3][size=1][size=1][size=1]111201170809_sampanthar_tna_304x171_bbc_nocredit.jpg

[size=2]இரா. சம்பந்தர்[/size][/size][/size]

[size=4]இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின்படி கொண்டுவரப்பட்ட 13 ஆவது சட்டத் திருத்தத்தை தமிழர் இனப் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாக தாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும், ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள, நடைமுறை சாத்தியமுள்ள ஒரு தீர்வையை தாம் நாடுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.[/size]

[size=3]இலங்கையில் அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி பேசுவதற்காக அடுத்த சில தினங்களுக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புது தில்லிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.[/size]

[size=3]இந்தியா,13 ஆவது சட்டத் திருத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களை இலங்கை அரசு அமல் படுத்த வேண்டும், போரால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்கள் மீண்டும் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இலங்கை அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.[/size]

[size=3]அரசியல் தீர்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசு போதிய அக்கறை காட்டவில்லையென தமிழகத்தில் குரல்கள் அதிகமாக எழுந்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தில்லி செல்கின்றனர்.[/size]

[size=3]இந்த விஜயம் தொடர்பாக இரா. சம்பந்தர் தற்போது கொழும்பு சென்றுள்ள தமிழோசை தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணனுக்கு அளித்த செவ்வியில், 13 ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றத் தயார் என்று அரசு கூறவில்லை, அதை அரசியல் தீர்வாக அவர்கள் முன்னிறுத்தவும் இல்லை என்று சம்பந்தர் சுட்டிக்காட்டினார்.[/size]

[size=3]ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச அதிகாரங்களைப் பறிக்கவே திவீ நெகும சட்ட மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், இந்நிலையில் அரசியல் பிரச்சனைக்கு 13 ஆவது சட்டத் திருத்தம் தீர்வாகாது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.[/size]

[size=3]அதேநேரம் இந்தியப் பிரதமரை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பார்களா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை.[/size]

[size=3]இலங்கை ஜனாதிபதி அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியாவுக்கு வழங்கிய பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் சம்பந்தர் தெரிவித்தார்.[/size]

[size=3]நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் சேரச் சொல்லி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியாவிடமிருந்து அழுத்தம் ஏதும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்[/size]

[size=3]http://www.bbc.co.uk...ndiavisit.shtml[/size][/size][/size]

Edited by மல்லையூரான்

தீர்வு என்பது ஆட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்களிடமிருந்து வரவேண்டுமே தவிர , அதிகாரம் ஏதுமில்லாத பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமாக அல்ல . அப்படி இல்லை , பாராளுமன்ற தெரிவுக்குழு மூலம் தான் தீர்வு என்றால், அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்க வேண்டும் என்று கூட்டமைப்பு தலைவர்கள் இந்தியாவை வலியுறுத்த வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பேச்சுவார்த்தையை மூன்றாம் தரப்பின் முன்னிலையிலையே பேசவேண்டும் அந்த மூன்றாம்தரப்பு நிச்சயமாக இந்தியா, சீனா, ரஷ்யாவாக இருக்கக்கூடாது.

Edited by தமிழரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.