Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியா தமிழீழ தேசிய மாவீரர் நாள் இடம் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

London-071012-seithy-150.jpg

பிரித்தானியாவில் இவ்வருட தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வினை ஒன்றிணைந்த மக்களின் எழுச்சியோடு சிறப்புற நடாத்துவதற்கான மக்கள் சந்திப்பு ஒன்று லண்டனில் நடைபெற்றது.

தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் இவ் வெளிப்படையான மக்கள் சந்திப்பு பிரித்தானியாவில் உள்ள வடமேற்கு லண்டன் Nower Hill High School. George V Avenue. Pinner. HA55RP எனும் இடத்தில் 07.10.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் மாலை 7:30 மணிவரை நடைபெற்றது.

தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலை தொடர்ந்து தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவி திருமதி.இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து லெப்.கேணல் புலேந்திரன், லெப்.கேணல் குமரப்பா உட்பட்ட பன்னிரு வேங்கைகளுக்கும் ஈகச்சுடரேற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மக்களின் மலர்வணக்க நிகழ்வோடு ஆரம்பமானது.

இவ் மக்கள்சந்திப்பை திரு. ஞானம் அவர்கள் தலைமைதாங்கி நடாத்தினார். தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம், திரு.அ.மாறன், கலாநிதி. வசந்தகுமார் அவர்களும் இச்சந்திப்பில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு, கடந்த வருடம் இடம்பெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு தொடர்பாகவும், இவ்வருட தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கான முன் ஏற்பாடுகள், மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.

இச்சந்திப்பில் முக்கியமாக மாவீரர்களுக்குரிய தேசிய நினைவெழுச்சி நாளை பிரிவினைகளை தவிர்த்து, ஒன்றுபட்டு செய்யவேண்டியதன் அவசியத்தையும், அதற்காக தாம் எடுத்த, எடுத்துவரும் முயற்சிகளையும் விரிவாகவும், விளக்கமாகவும் திரு.மாறன் அவர்கள் எடுத்துக்கூறினார்.

இறுதியாக உறுதியேற்புடன் தேசியக்கொடி இறக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவுபெற்றது.

  • London-071012-seithy-001.jpg

  • London-071012-seithy-003.jpg

  • London-071012-seithy-004.jpg

  • London-071012-seithy-005.jpg

  • London-071012-seithy-006.jpg

  • London-071012-seithy-007.jpg

  • London-071012-seithy-008.jpg

  • London-071012-seithy-009.jpg

  • London-071012-seithy-002.jpg

http://www.seithy.co...&language=tamil

Edited by நிழலி

நல்லவிடயம் ...ஒவ்வொருவரும் புரிந்துணர்வுடன் எமக்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த அந்த புனிதர்களை மாவீரர் தினமதில் நினைவு கூறுவோம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MN-TNRF27NOV2012-150.jpg

பிரித்தானியாவில் எதிர்வரும் 27-11-2012 செவ்வாய்க்கிழமை அன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமைபோல் மக்களின் எழுச்சியோடு நடைபெறவுள்ளது. கடந்த கால பட்டறிவுகளின் அடிப்படையில் வெளிப்படைத் தன்மையுடன் இவ்வருட மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2012 ற்கான ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக் குழு அமைப்பதற்காக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் முக்கிய தமிழ் அமைப்புக்களான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), உலகத் தமிழர் பேரவை (GTF), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), தமிழ் இளையோர் அமைப்பு (TYO-UK), பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் (BTU), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC-UK) ஆகிய அமைப்புக்களுக்கு எம்மால் (TNRF) 03.09.2012 அன்று அழைப்பிதழ் கடிதம் ஒன்று தனித் தனியாக அவர்களின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதன் பின் 4 வாரங்களின் பின்னராக கடந்த 07.10.2012 அன்று முற்கூட்டியே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டமைக்கு அமைய வெளிப்படையான மக்கள் சந்திப்பு ஒன்றும் எம்மால் நடாத்தப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் எமது அழைப்பிதழ் கடிதங்களுக்கு கிடைக்கப்பெற்ற பதில் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டும், மக்கள் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடையங்களை கருத்தில் கொண்டும் எம்மால் கடந்த 10.10.2012 அன்று இவ்வருட (2012) மாவீரர் நாள் நிகழ்வுகளை பொறுப்பேற்று செய்துமுடிப்பதற்கான 23 பேர் கொண்ட "மாவீரர் நாள் 2012ற்கான ஏற்பாட்டுக் குழு" அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் ஊடாக ஆரம்பக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த கட்டத்தினை நோக்கி உறுதியாக நகர்கின்றோம். இவ்வருடமும் கடந்த வருடத்தைப்போல் " ஈகப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில்" நடைபெறவுள்ள தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

எமது தாயகத்திற்காக தம்மையே அர்ப்பணித்த மாவீரர்ச் செல்வங்களை நினைவுகூரும் இந்த நன்நாளில் அவர்களின் தியாகத்தை எம் நெஞ்சங்களில் சுமந்தவர்களாக அனைவரும் ஓரிடமாக ஒன்றுகூடி ஒரு கணம் அவர்களுக்காக தலைகளை குனிந்து அகவணக்கம் செலுத்தி, அவர்களின் கல்லறைகளிலும், திருவுருவப் படங்களிலும் மலர்களை தூவி வணங்குவதே அம் மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாகும்.

எமது மக்கள் சிந்திய இரத்தமும், எமது மாவீரர்கள் புரிந்த தியாகமும் வீண்போகாது இருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

தற்போது செயற்பாட்டில் உள்ள தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டுக்குழுவானது, யாரையும் ஒதுக்கியோ, யாரையும் புறம்தள்ளியோ செயற்படவில்லை. சுயநலமற்று இதயசுத்தியோடு தகிழ்த் தேசிய விடுதலையை நேசிக்கும் அனைவரையும் இணைத்தே செயற்படுகிறது.

இதுவரை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் ஏதாவது தவறுகள் நடைபெற்றிருந்தால் அதனை சுட்டிகாட்டும் கடமை தேசியத்தை நேசிக்கும் அனைவருக்கும் உள்ளது. இதே போன்று தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் மக்களாகிய நீங்கள் வழங்க முடியும்.

எம்மால் மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக செயற்படுத்தப்படும் சகல பணிகளும் ஊடகங்கள் ஊடாக அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் என்பதையும், அவை எம்மால் அனுப்பப்பட்டவைதான் என்பதை உறுதிப்படுத்த எமது இணையத்தளத்தில் http://www.tnrf.co.uk/ சென்று அவற்றை உறுதி செய்து கொள்ளலாம் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். மாவீரர்களை நினைவுகொள்ளும் நிகழ்வான தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு தொடர்பான விபரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை எமது இணையத்தளத்திலும் http://www.tnrf.co.uk/2012/10/12/maveerar-naal-uk/ சென்று பார்வையிடலாம்.

மேலும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பான விபரங்கள் அறிய 0208 9085580 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது admin@tnrf.co.uk எனும் மின்னஞல் முகவரி ஊடாகவோ தொடர்புகொண்டு தெளிவுபெற்றுக்கொள்ளலாம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

நன்றி

ஊடகப்பிரிவு

தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்

ஐக்கிய இராச்சியம்

tnrfmedia@gmail.com

2012MN-TNRF27NOV-NEWs550778-001.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=68313&category=TamilNews&language=tamil

பிரித்தானியா தமிழீழ தேசிய மாவீரர் நாள் இடம் அறிவிப்பு

[size=2]

அக் 14, 2012[/size]

[size=1]

[/size]

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் நடாத்தும் "தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2012" இடம் மற்றும் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

131012%20002.jpg

புதிய தலைமை செயலக குழுவின் கூட்டம் .

இப்பதான் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் எப்பவோ முடிந்து அவர்கள் மாவீரர் தினம் இடம்பெறும் இடமும் அறிவித்து விட்டார்கள். இன்னும் ஏன் இன்னொரு கூட்டம் ????

புரியவில்லை...இரண்டு இடங்களில் நடக்கவிருக்கின்றதா? ஆம் எனில், ஏன்?

குழப்பங்கள் தீர்ந்தது: லண்டனில் மாவீரர் தினம் இம்முறை எக்ஸெல் மண்டபத்தில் !

[size=3]

14 October, 2012 by admin[/size][size=3]

[size="2"]excel-27.jpg2009ம் ஆண்டுக்குப் பின்னர், புலம்பெயர் நாடுகளில் பல குழப்பமான சூழல் காணப்பட்டது யாவரும் அறிந்ததே. குறிப்பாக லண்டனில் மாவீரர் தினத்தில் பல குழப்பங்கள் காணப்பட்டது. ஆனால் இம் முறை வழமைபோல மாவீரர் தினம் லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். எக்ஸெல் மண்டபத்தின், கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் இணைந்த பாரிய மண்டபத்தை ஏற்பாட்டாளர்கள் பதிவுசெய்துள்ளனர். சுமார் 50,000 ஆயிரம் மக்களை உள்ளடக்கக்கூடிய வழமையான மண்டபத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் வழமைபோல நடைபெறவுள்ளது இம்முறை மாவீரர் தினம்(நவம்பர் 27) விடுமுறை தினத்தில் வருவதால், மேலதிகமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

நவம்பர் 27ம் நாள் காலை 10.30 மணிக்கு மண்டபம் திறக்கப்பட்டு, 11.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளது. எக்ஸெல் மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால், பிரித்தானியாவின் ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் எம்.பீக்கள் பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். குறிப்பாக தமிழ் நாட்டில் இருந்து பல தமிழ் உணர்வாளர்கள் இதில் பங்கேற்ற இருக்கிறார்கள். புலம்பெயர் தமிழ் மக்கள் பிளவுபட்டு இருப்பதாகவும், மாவீரர் தின நிகழ்வுகள் இம்முறையும் இரண்டாக நடக்கும் எனவும், இலங்கை அரசு, எண்ணியிருந்தவேளை சிங்கள அரசுக்கு மேலும் ஒரு சாட்டையடி வீழ்ந்துள்ளது.

பல ஆண்டுகளாக லண்டனில் மாவீரர்தின நிகழ்வுகள் எக்ஸெல் மண்டபத்திலேயே நடைபெற்று வந்தது. இதற்கு அமைவாக பொலிசாரும் மற்றும் மண்டப அதிகாரிகளும் தற்போது அனுமதியை வழங்கியுள்ளனர். லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் நடைபெறவுள்ள மாவீரர் தினத்தை குழப்ப, சில சக்திகளை இலங்கை அரசு ஏவி விட்டிருந்தது யாவரும் அறிந்த விடையம். இச் சக்திகளை உடைத்து, பாரிய மண்டபத்தில் மீண்டும் மாவீரர் தின நிகழ்வுகள் வெற்றிகரமாக நடக்கவுள்ளது. தமது இளமைக்கால நினைவுகள் அனைத்தையும் துறந்து, தமிழீழம் காணப் போராடி மடிந்து, வித்துக்களான மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் நாளை நெஞ்சில் நிறுத்தி, நாம் புலம்பெயர் மக்களின் சக்தியை வெளியுலகிற்கு காட்டும் நாள் இது. சிங்கள அரசுக்கும் , மற்றும் அனைத்துலக சமூகத்திற்கும் தமிழ் மக்கள் இந் நாளில் ஒரு செய்தியை தெளிவாகச் சொல்லவேண்டும்.

அதற்கு மக்களே அணி திரண்டு வாருங்கள் எக்ஸெல் மண்டபத்தை நோக்கி ![/size][/size]

[size=3]

maaveerar-2012-27.jpg[/size]

ஆண்டவா இந்த முறையாவது குழப்பம் இல்லாமல் லண்டனில் நிகழ்வு நடக்க கடவுளை வேண்டுகிறேன்

தெளிவா குழப்புறீங்கள்.. :rolleyes:

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்

பிரித்தானியாவில் நிகழவுள்ள மாவீரர் நிகழ்வு தொடர்பான அனைத்து செய்திகளையும் இதே திரியில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

பிரித்தானியாவில் பல ஆண்டுகளின் பின்பு மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வு நடைபெற இருக்கின்றது. வியப்பாக இருக்கலாம், பல ஆண்டுகளாக தேசிய நினைவெழுச்சி நாள் எனும் பெயரிலேயே நடைபெற்று வந்த நிகழ்வு இப்பொழுது முதல்முறையாக மாவீரர் நாள் எனும் அர்த்தமுள்ள பெயரில் வீரமுடன் நடைபெற இருக்கின்றது.

இந்த மாற்றத்திற்கு முன்வந்து மிக தைரியமாக எதையும் எதிர்கொள்வோம் என உழைத்த அனைவரும் மிகவும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

சாகப் பயந்தவன் தரித்திரம் சாகத் துனிந்தவன் சரித்திரமாவான் எனும் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக செயல்ப் படுத்தப்பட்டிருக்கின்றது.

மிக தந்திரமாக இதுவரை செயலாற்றியவர்கள் தகுந்த சமயம் பார்த்து மாற்றம் கொண்டுவந்தது மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை உருவாக்கியிருக்கின்றது.

பல தடைகள் உடைத்தே இந்த வருட மாவீரர் நாள் மிக சிறப்பாக நடைபெற இருக்கின்றது. இதை குழப்புவதற்கு இறுதி நாள்வரை எதிரி முயற்சி செய்வான் என்பது அனைவரும் அறிந்தது.

குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் அனைத்து பிரித்தானிய மக்களும் எக்செல் மண்பத்தில் திரண்டு வந்து எமது மாவீரர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்தி உறுதி மொழி எடுத்துக்கொள்வோம்.

தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

Revolutionary Students Of Tamileelam

info@rste.org

www.rste.org

tnrf.co.uk வலைத்தளத்தில் இன்னமும் புதிய இடம் பற்றிய அறிவிப்பு வரவில்லையே?

tnrf.org .uk எனும் தளத்தில் புதிய இடத்துக்கான அறிவிப்பு இருக்கிறது!

ஓர் அமைப்புக்கு ஏன் இரண்டு வலைத்தளங்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.