Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

http://www.bbc.co.uk/

பிபிஸி இது உங்கட வெப்சைட்டா? :)

அடங் கொக்கா மக்கா. நல்ல காலம் நம்ம BBC அதாவது பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனத்தோட (British Broadcasting Corporation - BBC) தலைவருக்கு தமிழ் தெரியாது. இல்லைன்னா இத படிச்சுட்டு என்னை வெட்டி போட்டிருவார். இந்த வெப்சைட்டை நான் ஒரு நாளைக்கு நிறைய வாட்டி படிப்பேன். அவ்வளவு தான் எனக்கும் அந்த வெப்சைட்டுக்கும் சம்மந்தம். அது சரி ஏன் கேட்டீங்க?

  • Replies 2.2k
  • Views 133k
  • Created
  • Last Reply

ஐயோ தாத்ஸ் நீங்கள் வேற ரென்சனைக் கூட்டாதீங்கள்.

உந்த இராவணன் நான் போட்ட படத்தையும் எடுத்துப் போட்டார்.

பத்து தலையில் ஒரு தலையை விட்டுவிட்டு மிகுதி ஒன்பது தலைகளையும் கொய்து எறியுங்கள்.எங்கே நமது யாழ் கள வீர வீராங்கனைகள்..

நான் இப்ப வேற வெப்சைட் பக்கம் போறதே இல்லை.

உடன் செய்திகளை இங்கேயே பார்க்கலாம் தானே?

நன்றி பிபிஸி..

நான் சொன்னது எங்கட பிபிஸியை :)

பத்து தலையில் ஒரு தலையை விட்டுவிட்டு மிகுதி ஒன்பது தலைகளையும் கொய்து எறியுங்கள்.எங்கே நமது யாழ் கள வீர வீராங்கனைகள்

ரெண்டு தலையையே வைச்சு சமாளிக்கேலாமல் கணணி உறைஞ்சு போய் நிக்குது. :wink:

  • தொடங்கியவர்

In pictures: Breakaway Tamil Tiger rebel

_39937843_leader.jpg

1 of 6

Breakaway Tamil Tiger commander Colonel Karuna invites the BBC to his Meenagam camp in the east of Sri Lanka. (Photos by Sriyantha Walpola)

_39937833_troops.jpg

2 of 6

He shows off hundreds of his heavily-armed fighters - he says 2,000 of them are female and 3,000 are male.

_39937847_training.jpg

3 of 6

The former bodyguard of Tamil chief Velupillai Prabhakaran denies he has betrayed the rebel movement.

_39938035_guns.jpg

4 of 6

He claims he is defending the rights of his fighters who have not reaped the benefits of peace they are owed.

_39937831_drink.jpg

5 of 6

The BBC's Frances Harrison says it is clear he is not a lone individual, as alleged by Tiger leaders when they expelled him.

_39937845_talk.jpg

6 of 6

But it is too early to tell if he will secure an independent rebel administration in the east, says our correspondent.

From: www.bbc.co.uk

http://www.tamilaustralian.com/audio/tamil...il20040310.smil

நேற்று, பிரிட்டிஷ் து}துவரைச் சந்தித்த பின்னர் தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்(10.03.04)

தமிழ்நாதம்

உறைஞ்சா நல்ல சுடுதண்ணிலை போட்டெடுங்கோ. :)

சரி பிரதேச வாதம் பிரதேச வாதம் எண்டிறியள் ஆர் அதை வளற்தது? என ஆராய்து சொல்லுங்கோ பாப்பம் .

:oops:

அட படங்களையெல்லாம் பாக்க ஒரு அஞ்சு ஆறு பேர் தான் அம்மானோட இருக்கினம் போல :) :P :mrgreen:

சரி பிரதேச வாதம் பிரதேச வாதம் எண்டிறியள் ஆர் அதை வளற்தது? என ஆராய்து சொல்லுங்கோ பாப்பம் .

:oops:

ஓ..! நான் கேள்வி கேட்டது சிவாஐpனிக்கு பிடிக்கேலையா?

  • தொடங்கியவர்

ஓ *துவுக்கா மன்னிக்கணும் சிவாஜினிக்கா?

மோகன், இராவணன் மற்றும் தணிக்கை அதிகாரிகள்,

செய்திகள் தணிக்கை செய்வதை பொறுத்தவரை எனக்கு ஆட்சேபணை கிடையாது. ஏன் அவை எனது சொந்த கருத்துக்கள் அல்ல. அவற்றிற்கு வெளியிட்ட செய்தி நிறுவனங்கள் தான் பொறுப்பு. பிரபல்யமான செய்திநிறுவனங்களின் செய்திகளை தான் இங்கு போடுகின்றேன். இது உங்கள் சொந்த இணையத்தளம் என்பதால் அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளாத போது அவற்றை தணிக்கை செய்து கொள்ளலாம். நீங்கள் தடை செய்த இணையதளதில் இருந்து எந்த செய்தியையும் நான் இங்கே போடவில்லை. அங்க செய்தி BBC (பிரிட்டிஷ் செய்தி நிறுவனம்) வெளியிட்டது.

இக்களமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தணிக்கை பற்றி என் தாழ்வான கருத்து.....

தணிக்கை என்பது தரம் பற்றிய வினாவுதல்!!!!!!!!!!!!!!!

ஒருவகையில் தியாக வினை அது!!!!!!!!!!!!!!

ஆம் பயனற்றதை வடித்து எடுத்துவிடும் வேள்வி அது!!!!!!!!!!

ஆக, தணிக்கை என்பது பன்னாடையின் பணி...........

ஆயிரம் களநோக்கர்களுக்காக ஐந்து ஜீவன்கள் ஏன் இந்த பாவச்சுமையை தணிக்கை சிலுவையில் ஏந்தி யாழ் களத்தில் மரிக்கவேண்டும்.

ஒரு வகையில் இது....

80க்கு முன் குடாநாட்டில் வீட்டைச்சுற்றி எழுப்பிய ஏழு அடி உயர கிடுகு வேலிகள் உலகத்திலிருந்து தம்மை தனித்துவப்படுத்தும் என எண்ணி தனிமைப்பட்டுப்போன சந்ததியின் மிச்சசொச்சங்கள்தான் இன்னும்.......இங்கும்........ இணையத்திலும்............

நான் ரசித்த கருத்துப்படம் ஒன்று. இந்த வார விகடன் இதழில் வெளிவந்தது.

p143.jpg

நான் ரசித்த கருத்துப்படம் ஒன்று. இந்த வார விகடன் இதழில் வெளிவந்தது.

p143.jpg

ஆஆஆஆ இவனொருத்தன். :)

528889794404bc87e04e32.gif

இக்களமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தணிக்கை பற்றி என் தாழ்வான கருத்து.....

தணிக்கை என்பது தரம் பற்றிய வினாவுதல்!!!!!!!!!!!!!!!

ஒருவகையில் தியாக வினை அது!!!!!!!!!!!!!!

ஆம் பயனற்றதை வடித்து எடுத்துவிடும் வேள்வி அது!!!!!!!!!!

ஆக, தணிக்கை என்பது பன்னாடையின் பணி...........

ஆயிரம் களநோக்கர்களுக்காக ஐந்து ஜீவன்கள் ஏன் இந்த பாவச்சுமையை தணிக்கை சிலுவையில் ஏந்தி யாழ் களத்தில் மரிக்கவேண்டும்.

ஒரு வகையில் இது....

80க்கு முன் குடாநாட்டில் வீட்டைச்சுற்றி எழுப்பிய ஏழு அடி உயர கிடுகு வேலிகள் உலகத்திலிருந்து தம்மை தனித்துவப்படுத்தும் என எண்ணி தனிமைப்பட்டுப்போன சந்ததியின் மிச்சசொச்சங்கள்தான் இன்னும்.......இங்கும்........ இணையத்திலும்............

வர வர யாழ் களபிரக்கிராசி மாற்றை (மட்டுறுத்தனர்) அராஐகம் தாங்க முடியேலை. :evil:

அட படங்களையெல்லாம் பாக்க ஒரு அஞ்சு ஆறு பேர் தான் அம்மானோட இருக்கினம் போல
அம்மான் தனிமணிதர் எண்டுதானே சொன்னாங்கள்.. ஒருவேளை கிறாபிக்ஸாலை விளையாடியிருப்பாங்களே..?

:) :P :D

சரி கதையோடை கதையாய் இதை விட்டிடாதேங்கோ. நான் கேட்ட கேள்விக்கு பதில் தாங்கோ ஆரும்.

புலனாய்வுப்பிரிவு கம்பன் மாஸ்ரர் கருணா குழுவால் தாக்கப்பட்டுள்ளார்

நேற்று மீனகம் வளாகத்தில் நடைபெற்ற போராளிகளுக்கான பொதுக்கூட்டத்தில் தளபதி றாபட்அவர்களை கருணா என்ற முரளீதரன் மிகவும் இம்சைப்படுத்தியுள்ளார். மீனகம் வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கூடலில் றாபட்டிடம் தலைவரின் படத்தைக்கொடுத்துக் கிழித்தெறியும்படி உத்தரவிட்டுள்ளார். தளபதி றாபட் தலைவரின் படத்தைக் கிழிக்க மறுத்து கண்ணீர் சிந்தி நிற்க அந்தக்கூடலில் உரையாற்றுமாறு பணித்துள்ளார். அதையும் மறுத்த றாபட் கருணாவினால் மிகவும் இம்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள

இன்னும் செய்திகள் தொடரும்....

- புளியம்தீவிலிருந்து முகுந்தன் -

tamilwebradio.com

இந்த மட்டக்களப்பு பிளவு செய்தி வந்தபோது இரண்டுநாட்கள் அப்படி ஒன்றுமில்லை.. என மறுப்புத்தெரிவித்தவையளிலை இந்த தமிழ்வெப்றேடியோவும் ஒண்டல்லோ.. அப்ப இந்த புளியந்தீவு முகுந்தன் எங்கைபோயிருந்தவர்..?

:!: :?: :idea:

அதெல்லாம் விடுங்கோ தாத்ஸ். வானொலி பெயர் மாற்றம் பற்றி உங்கள் கருத்து?

  • தொடங்கியவர்

மட்டு-அம்பாறை பிரச்சனைகளுக்குள் முஸ்லிம் சமூகத்தை இழுப்பதற்கு முயற்சி: முஸ்லிம் காங்கிரஸ்

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தற்போது தோன்றியிருக்கும் சில பிரச்சினைகளுக்குள் முஸ்லிம் சமூகத்தையும் இழுப்பதற்கு சில முகவர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக, முஸ்லிம் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தப் பிரச்சினைக்குள் முஸ்லிம்களையும் சம்பந்தப்படுத்தி, நிலைமையை மேலும் மோசமாக்க இந்த முகவர்கள் முயற்சிகள் மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரசின் சூரர் கவுன்சில் தலைவர், இத்தகைய சதிக்குள் தாம் சிக்கிக்கொள்ளப் போவதில்லை எனவும், முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்களுடன் இணைந்து, உரிமைகளைப் பெற்று வாழ்வதற்கே விருப்பம் கொண்டுள்ளனர் என்றும் தெரவித்துள்ளார்;.

முஸ்லிம் காங்கிரசின் தலைவர்களுள் ஒருவரான பஷீர் சேகுதாவூத் தலைமையில் நேற்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே சூரர் கவுன்சில் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம்களது பாதுகாப்பையும், உரிமைகளையும் ஐனாதிபதியோ, பிரதமரோ உறுதிப்படுத்திவிட முடியாது என்றும் அங்கு குறிப்பிட்ட அவர், சிங்களப் பேரினவாதத்தைக் கக்கும் Nஐ.வி.பி.யுடனும், அதற்குத் தலைமையேற்றுள்ள ஐனாதிபதியுடனும் கூட்டமைத்துள்ள முஸ்லிம் தலைவரகள் முஸ்லிம்களது உரிமைகளைப் பெற்றுத்தரப் போவதாகக் கூறுவது கேலிக்கூத்தாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் வாக்களிப்பதற்கு இணக்கம்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன.

இதன்படி, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக, முகமாலை சிறீலங்காப் படைச் சோதனைச் சாவடியை 500 மீற்றர் பின்னகர்த்துவதற்கு குடாநாட்டுப் படைத்தளபதி மேஐர் ஜெனரல் சுசில் சந்திரபால இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், யுத்த சூனியப் பிரதேசத்தின் அளவு அதிகரிப்பதால், இப்பகுதிக்குள் வாக்களிப்பு நிலையத்தை அமைப்பதன் மூலம், மக்கள் அதிக சிரமங்கள் இன்றி வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தேர்தலில் வாக்களிக்க வரும் பொதுமக்களை தாமதிக்கச் செய்யும் வகையில், படையினர் சோதனை நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளமாட்டார்கள் எனவும், குடாநாட்டுப் படைத்தளதி உறுதியளித்துள்ளார்.

யாழ் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலருடன் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது இவ்விதமிருக்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த சூனியப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையத்தை அமைப்பது தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடலொன்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மோனகுருசாமி தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் வாக்களிப்பதற்கான வாக்களிப்பு நிலையங்களை யுத்த சூனியப் பிரதேசத்தில் அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்ட போதிலும், அதற்கு ஈ.பி.டி.பி., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியன எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

யுத்த சூனியப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டால், தேர்தல் மோசடிகள் இடம்பெறலாம் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர்கள் இந்தச் சந்திப்பில் தெரிவித்தனர்.

எனினும், இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பி.கிருஷ்ணானந்தலிங்கம், இந்த விவகாரம், மட்டக்களப்பு மாவட்டத்தோடு மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு சிக்கலல்ல என்றும், மொத்தமாக நான்கு தேர்தல் மாவட்டங்களில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படவேண்டியிருப்ப

இந்த மட்டக்களப்பு பிளவு செய்தி வந்தபோது இரண்டுநாட்கள் அப்படி ஒன்றுமில்லை.. என மறுப்புத்தெரிவித்தவையளிலை இந்த தமிழ்வெப்றேடியோவும் ஒண்டல்லோ.. அப்ப இந்த புளியந்தீவு முகுந்தன் எங்கைபோயிருந்தவர்..?

:!: :?: :idea:

ஆரும் கடத்திக் கொண்டு போய் வைச்சிருந்திருப்பினம் தாத்தா. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.