Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

அட இவங்கள் வேற தொல்லை தாங்கமுடியுதில்லையடா

இந்த நேரத்திலும்(மா) :D உங்களுக்கும் பத்திரிகைகளுக்கும்இணையங்கள

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அப்பாடா இப்பதான் கொஞ்சம் செய்தி கசிந்திருக்கு பிபிசி க்கு....கடவுளே இந்தக் கணணி யுகத்திலும் பிபிசி இன்னும் முன்னேறினதாத் தெரியல்ல... :roll:  :lol:  பெரிசா கருத்துச் சுதந்திரம் ஜனநாயகம் பேசி ஈராக்கில யுத்தம் மட்டும் நடத்தினம்...அதிலையும் எத்தனை பொய்களோ....பக்கச் சார்புகளோ....எத்தனை மறைப்புக்களோ...பாவம் அந்த அப்பாவி மக்கள்....நல்லா இருக்கு மேற்குலக மனித தர்மம்.....???!

பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் இந்த பக்கச்சார்புகள், மறைப்புகள் உடனேயே இயங்குகின்றன. அவற்றுடன் ஒப்பிடும்போது மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊடகம் இயன்றளவு வெளிப்படையாகவும், நடுநிலைமையாகவும் இயங்குவதாக நினைக்கின்றேன்.

பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் இந்த பக்கச்சார்புகள், மறைப்புகள் உடனேயே இயங்குகின்றன. அவற்றுடன் ஒப்பிடும்போது மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊடகம் இயன்றளவு வெளிப்படையாகவும், நடுநிலைமையாகவும் இயங்குவதாக நினைக்கின்றேன்.

அது தவிர செய்தி தெரிந்தாலும் அங்கு சென்று வதந்திகளற்ற நேரடிச்செய்தி சேகரித்து அனுப்புவதுதான் முக்கியம் "BBC" இற்கு..

இதை வரவேற்கும் பக்குவம் இங்கு நம்மவரிடம் இல்லை BBC(பிபிஸி)

:D :P :D

  • தொடங்கியவர்

யாழ். தேர்தல் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட சிங்களவர்கள் யாழ். பயணம்  

ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, வேட்பாளர் ஆனந்தசங்கரி உட்பட பேரினவாதத்திற்குத் துணைபோகும் சிலர் கொடுத்த கடுமையான அழுத்தத்தின் விளைவாக, யாழ். தேர்தல் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட, 10 சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் அறிவித்துள்ளது.  

 

தேர்தல் வன்செயல்களைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்தின் இத்திடிர் முடிவு தமிழ்ப்பகுதிகளில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி உட்பட வேறுசில வட்டாரங்களினாலும் கொடுக்கப்பட்ட அழுத்தத்தை அடுத்தே நிலையத்தின் தலைவர் பாக்கிய சோதி சரவணமுத்து சிங்களக் கண்காணிப்பாளர்களை வடக்கே அனுப்பும் முடிவுக்கு வந்தார் எனக் கூறப்படுகிறது.

இதுவரை நடைபெற்ற எந்தத் தேர்தல்களின்போதும் சிங்களக் கண்காணிப்பாளர்களை வடக்குக்கு இந்நிலையம் அனுப்பவில்லை. சர்வதேசக் கண்காணிப்பாளர்களோடு உள்ளுர் தமிழ்க் கண்காணிப்பாளர்கள் சிலர் சேர்ந்தே கடந்த காலங்களில் வடக்கின் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர்.

ஆனால், உள்ளுர் தமிழ்க் கண்காணிப்பாளர்களில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், சிங்கள மற்றும் முஸ்லிம் கண்காணிப்பாளர்கள் வடக்கில் பணியாற்ற அழைக்கப்பட வேண்டும் என்றும், டக்ளஸ் தேவானந்தா அண்மைக் காலத்தில் வலியுறுத்தி வந்தார். சுயேட்சை வேட்பாளர் ஆனந்தசங்கரியும் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.  

இந் நிலையில் சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் ஐவர் மட்டுமே தேர்தல் வன்செயல்களைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தினால் இம்முறை வடக்கில் பணியில் அமர்த்தப்படுவர் எனக் கூறப்பட்டு வந்தது.

எனினும், தேர்தலுக்கு இரண்டு நாள் இருக்கையில், இறுதி நேரத்தில், பத்து சிங்களக் கண்காணிப்பாளர்களை வடக்கே பணிக்கு அவசர அவசரமாக அனுப்பிவைக்க நிலை யத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

தேர்தல் வன்செயல்களைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தினால் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஐவருக்கு மேலதிகமாக சிங்களக் கண்காணிப்பாளர்கள் பத்துப்பேர் இம்முறை வடக்கில் கண்காணிப்பில் ஈடுபடுவர். தமிழர்கள் எவரும் இந்தக் கண்காணிப்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்தப் பத்து சிங்கள கண்காணிப்பாளர்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து, யாழ். தொகுதியில் நடந்த வன்முறைகளை ஆராயவுள்ளதால், இது யாழ். தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாக அமையுமென்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு ஆசனங்களையும் கைப்பற்றும் பட்சத்தில், சிங்களக் கண்காணிப்பாளர்களின் கூற்றை வைத்து, தேர்தல் முடிவுகளை செல்லுபடியற்றதாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக அவதானிகள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

 

தமிழினமே ஏன் இந்த நிலை உனக்கு...தன்னினத்தையே இன்னோர் இனம் கொண்டு கண்காணிப்பவன் நாளை உங்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் போவதற்காய் தேர்தலில்....என்னே வேடிக்கை...சன நாய் அகத்தின் மாஜாலாம் கோலோஞ்சி விட்டதோ.....வெறும் 15 கள்ள வாக்குகளால் பாராளுமன்றம் போய் சுகபோகம் கண்டபோது எந்தச் சிங்களவன் கண்காணித்தானோ.....????! ஏதோ நடக்கட்டும்....எமக்கும் வாக்குச் சீட்டுக்கும் தொடர்பே வேண்டாம் என்றுதானே அறுத்துவிட்டோமே....???!

நன்றி புதினம்...!

சிங்களப் பகுதிகளில் தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு பார்வையாளர்கள் !

தமிழர் பகுதியில் தேர்தலை கண்காணிக்க சிங்கள பார்வையாளர்கள் !

ஏன் என்று நினைக்கின்றீர்கள்?

  • தொடங்கியவர்

அது தவிர செய்தி தெரிந்தாலும் அங்கு சென்று வதந்திகளற்ற நேரடிச்செய்தி சேகரித்து அனுப்புவதுதான் முக்கியம் "BBC" இற்கு..

இதை வரவேற்கும் பக்குவம் இங்கு நம்மவரிடம் இல்லை BBC(பிபிஸி)

:D :P :D

விமர்சனங்களை, மற்ற பக்கத்து செய்திகளை பார்க்கும் பக்குவம் அவற்றிற்கு ஆக்கபூர்வமான முறையில் பதில் எழுதும் பக்குவம் எம்மிடையே இல்லை என்பது வருதத்திற்குரிய உண்மைதான்.

  • தொடங்கியவர்

LTTE Wants 140 Cadres Moved to East Soon

Bandula Jayasekara in Colombo, SLT 6.00 A.M Thursday 1 April. The Sri Lanka Monitoring Mission (SLMM) has made a request from the Peace Secretariat in Colombo to move 140 LTTE cadres from the North to the East, immediately. The request was made from the Peace Secretariat yesterday. (31st). However, the Peace Secretariat had informed the SLMM that according to the ceasefire agreement signed between the government and the LTTE, LTTE has to give them two weeks notice to process the request.

After the split between LTTE's eastern commander Karuna Amman and its leader Vellupillai Prabhakran several northern cadres have being sent to the east by the LTTE leadership. A senior official of the peace secretariat told The Lanka Academic that LTTE (Karuna) has accused the peace secretariat of aiding and abetting Prabhakaran, saying that the Secretariat had allowed northern cadres to move to the east. He said that the Secretariat have no other option, but to act according to the ceasefire agreement. However, Varathan , spokesman for Karuna Amman said, " The ceasefire agreement clearly states that cadres could be moved, but, it does not say that it could be done in preparation for war. What we see now is a clear military build up by the northern cadres in the Verugal area in the east

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரளவுக்கு பெரும்பான்மையான தமிழ் ஊடகங்கள் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான கருத்துகளை முன்னிலைப்படுத்தி கருத்துகளை வெளியிடுகின்றன என்று கொள்ளமுடியும்

அதேவேளை இரண்டு பக்கத்து கருத்துகளையும் வெளியிடுவதால் மட்டுமே B.B.C போன்ற ஊடகங்களை நடுனிலமை ஊடகங்கள் என்று கூறிவிட முடியாது தமது நேரடியான அல்லது மறைமுகமான முதலாளிகளைத் திருப்திப்படுத்துவதில் அது வெளியிடும் செய்திகளின் சாராம்சம் தங்கியிருக்கிறது

இதற்கு பல விதமான செய்திகளை உதாரணம் காட்டலாம்

  • தொடங்கியவர்

நாளை இரவு 10 மணிமுதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்த தீர்மானம்?

பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை முடிவடைந்து வாக்குப்பெட்டிகள் வாக்குக் கணக்கெடுப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டவென நாளை இரவு 10 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த பாதுகாப்பு கவுன்சில் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளை மறுதினம் சனிக்கிழமை நிலைமையை அவதானித்த பின் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா அல்லது கைவிடுவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.

இதேவேளை ஊரடங்குச் சட்டம் குறித்து அச்சம் கொண்டுள்ள பொது மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெரும் அக்கறை செலுத்தி வருகின்றனர். இதனால் சந்தையில் உணவு பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. ஒரு கிலோ சீனியின் விலை 45 ரூபா வரை உயர்ந்துள்ளது. பருப்பு, கிழங்கு, காய்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. சீனியின் இறக்குமதித் தீர்வை ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும் சீனியின் விலை இன்னும் குறைவடையாமைகுறித்து நுகர்வோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் ஒப்புதல் அளிக்கவேண்டும். பதவிக்கு வந்தால் அமுல்படுத்தவும் வேண்டும் என்கிறது ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில்

வடகிழக்கு இணைப்பு தொடரவேண்டுமா இல்லையா என்பது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பை கிழக்கு மாகாணத்தில் உடனடியாக நடத்துவதற்கு ஜனாதிபதியையும் பிரதமரையும் பகிரங்க ஒப்புதல் வழங்குமாறும் பதவிக்கு வந்தால் அமுல்படுத்துமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் கோரிக்கை விடுத்துள்ளது.

"பாராளுமன்ற தேர்தல்2004 முஸ்லிம்களின் விருப்பு?' என்ற தலைப்பில் கவுன்சில் தலைவர் ஏ.எச்.ஜீ.அமீன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாளை நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணி ஆகியவை முன் வைத்திருக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் வடக்குகிழக்கு முஸ்லிம்கள் சார்பில் முஸ்லிம் கவுன்ஸிலால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எவையும் உள்ளடக்கப்படாமை விசனத்திற்குரியதாகும்.

முஸ்லிம்களின் வாக்குகள் வேண்டுமெனில் இவ்விரு முக்கிய கட்சிகளின் தலைவர்களான ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரையும் பிரதமர் ரணிலையும் கீழுள்ள எமது கோரிக்கைகளுக்கு பகிரங்க ஒப்புதல் வழங்குமாறும் பதவிக்கு வந்தால் அமுல்படுத்துமாறும் கோருகிறோம்.

சமாதான பேச்சுவார்த்தைகளில் தனியான சுதந்திர முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும்.

இரண்டாயிரம் முஸ்லிம்களை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதன் மூலம் கிழக்கு வாழ் முஸ்லிம்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதுடன் உறுதி செய்யப்படவும் வேண்டும். அரசாங்கத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை மீறி முஸ்லிம்களின் பூர்வீக பூமியான மஜீத் நகரி (குரங்குபாஞ்சான்) லும், முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில் ஏனைய பகுதிகளிலும் புலிகளால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களை நீக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

வடக்கிலிருந்து இனச் சுத்திகரிப்புக்குள்ளான முஸ்லிம்களையும் கிழக்கில் இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களையும் சகல வசதிகளுடனும் மீள் குடியேற்றவும் அவர்களது புனரமைப்புக்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.

எதிர்வரும் தேர்தலில் கிழக்கு முஸ்லிம்கள் எவ்வாறு தமது வாக்குப்பலத்தை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட எமது கவுன்ஸில் தீர்மானித்துள்ளது. எமது இக்கோரிக்கைகளுக்காக ஐ.ம.சு.மு. ஐ.தே.மு. என்பவற்றின் பதிலை முழு இலங்கை வாழ் முஸ்லிம்களும் விஷேடமாக கிழக்கு வாழ் முஸ்லிம்கள் ஆர்வத்துடன் அவதானித்து நிற்கின்றனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்விடயங்களை உள்ளடக்கி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு நாம் அனுப்பி வைத்த மடல்களுக்கு தகுந்த பதில் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறோம்.

எமது இக்கோரிக்கைக்கு ஆக்கபூர்வமான, செயற்திறன்மிக்க தொடர்ச்சியான ஆதரவை முஸ்லிம்களிடம் வேண்டி நிற்கிறோம்.

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

இராஜன் சத்தியமூர்த்தியின் ஈமக்கிரியைகள் இன்று

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சி வேட்பாளர் இராஜன் சத்தியமூர்த்தியின் இறுதிச் சடங்குகள் இன்று வியாழன் மாலை நாவலடியில் நடைபெறும்.

அன்னை பூபதியின் சமாதிக்கு அருகில் அமரர் சத்திய மூர்த்தியின் சடலம் அடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் அமைப்பினரால் நீக்கப்பட்டுள்ள கருணா அம்மான், அமரர் இராஜன் சத்தியமூர்த்திக்கு மாமனிதர் பட்டம் வழங்கியிருப்பதாக மட்டக்களப்பு நகரில் ஒலிபெருக்கி மூலம் நேற்று அறிவிக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சி வேட்பாளர் இராஜன் சத்தியமூர்த்தி, அவரின் மைத்துனர் கனகசபை ஆகியோரி2சடலங்கள் செவ்வாய் மாலையிலிருந்து புதன்கிழமை நண்பகல் வரை திருமலை வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பெருமளவு பொதுமக்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள்.

இன்று வியாழக்கிழமை படையினரின் கட்டுப்பாட்டிலில்லாத கரடியனாறு, கொக்கட்டிச்சோலை ஆகிய இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

பின்னர் பட்டிருப்பு பாலத்தினூடாக ஊர்வலமாக களுவாஞ்சிக்குடி, செட்டிபாளையம், ஆரையம்பதி, காத்தான்குடி ஊடாக மட்டக்களப்பு நகருக்கு எடுத்து வரப்பட்டு காந்தி சதுக்கத்திலும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நாவலடிக்கு எடுத்துச் செல்லப்படும்.

மட்டக்களப்பு வர்த்தகர் சங்கம் அதன் தலைவராக இருந்த இராஜன் சத்திய மூர்த்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று வியாழன் பி.ப. 12 மணிக்கு பின் வர்த்தக நிலையங்களை மூடுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் இளைஞர் குழு வர்த்தக நிலையங்களை பூட்டி திறப்புகளை எடுத்துச் சென்றுள்ளதாக புகார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அநாமதேய பிரசுரங்களாலும் வீண் வதந்திகளாலும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை செவ்வாய் பிற்பகல் நடமாடிய இனந்தெரியாத இளைஞர் குழுவொன்று சில வர்த்தக நிலையங்களை பூட்டுமாறு வற்புறுத்தி திறப்புகளை எடுத்துச் சென்றிருப்பதாக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரபல ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பாதுகாப்பு உத்தியோதகத்தர் சின்னையா ரவீந்திரராஜா, வர்த்தகர்களான மனோகரன் சதீஸ்குமார், வைரமுத்து மார்க்கண்டு ஆகியோரே முறைப்பாடு செய்துள்ளனர்.

புதன்காலை மட்டக்களப்பு கள்ளியங்காட்டிலுள்ள ஆடைத்தொழிற்சாலையிலிருந்து இளைஞர் குழுவினர் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த போது ஸ்தலத்திற்கு பொலிஸார் சென்று தடுத்ததுடன் பொருட்களை திருப்பியும் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் 4 புலிகள் கைதாகி விளக்க மறியலில்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவடிமுன்மாரி கோட்ட இராணுவத் தளபதி சச்சு மாஸ்டர் உட்பட நான்கு விடுதலைப் புலி உறுப்பினர்கள் காத்தான்குடி பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய் மாலை கைது செய்யப்பட்ட இவர்களை மட்டக்களப்பு நீதிவான் எம்.எச்.எம்.அஜ்மீர் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சச்சுமாஸ்டர் என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை மகேந்திரன் (32 வயது), சாமித்தம்பி வரதன் அல்லது மயூரன் (26 வயது), வேலாப்போடி வரதகுமார் அல்லது மனோகர் ( 19 வயது), அரசமணி சுரேஷ் அல்லது குருபரன் அல்லது கதீஸ்வரன் (19 வயது) ஆகிய நால்வருக்கும் எதிராக அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் பிரயாணம் செய்த டொல்பின் வாகனம் கைக்குண்டுகள்4, ரி 56 ரக துப்பாக்கிரவைகள்73, 22 இன உயிருள்ள ரவைகள்1, ரி 56 ரக மகசின்7, பச்சை நிற பூச்சஸ்2, எல்.எம்.ஜி ரூல் ஹிட்1, ஒயில் போத்தல்2, கறுப்பு சீலை1, கறுப்பு நிற வயர்கள்2 துண்டு, புலிகள் இயக்க இலக்க தகடு1, சயனைட் குப்பி1 ஆகியன நீதிமன்றில் சான்று பொருட்களாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலிருந்து கொடுக்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து மஞ்சந் தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்பாகவுள்ள பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து சோதிக்கப்பட்டபோதே ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

மட்டக்களப்பு நகரிலிருந்து கொக்கட்டிச் சோலை நோக்கி சென்றபோதே தடுக்கப்பட்டிருக்கிறது.மட்ட

  • தொடங்கியவர்

04-p5.jpg

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

santhi.jpg

"நிரந்தர சமாதானமும், சந்தோஷகரமான வாழ்வும் கிடைக்க என்னோடு இணைந்து வாருங்கள்''

இப்படித்தான் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரத்தை முடித்து வைத்துப் பேசுகையில் நாட்டு மக்களை நோக்கி அழைப்பு விடுத்திருக்கிறார்.

பேச்சுவார்த்தையை முன்னெடுத்து சமாதானத்தை நிலை பெறச் செய்து புதிய நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு எங்களுக்கு ஆணை தாருங்கள்'' என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரத்தை முடித்து வைத்துப் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

நாட்டு மக்கள் எல்லோரும் சமாதானத்தையே விரும்புகின்றார்கள் என்பதை நாடி ஓட்டம் பிடித்து தலைவர்கள் இருவரும் நிதர்சனமாக கண்டறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதையே காட்டியிருக்கிறது.

பறுவதம் பாட்டி: ஆட்சி பீடம் ஏறும் கட்சி விடுதலைப் புலிகளுடன் கட்டாயம் பேச்சுவார்த்தைகளை தொடக்கத்தான் வேண்டியிருக்கும் அப்படித்தானே!

பண்டா ஐயா: மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்று 85.3 சதவீதமான மக்கள் புலிகளுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அபிப்பிராயம் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளது.

பறுவதம் பாட்டி: எஞ்சிய வீதத்தினர் பேசக்கூடாது என்கிறார்களா?

பண்டா ஐயா: 4.8 சதவீதமே நோபேச்சு' என்கிறது. மிகுதி பேசலாம் பேசாமல் விடலாம். ஆகப் போவது எதுவும் இல்லை என்ற ரகம்.

பறுவதம் பாட்டி: பேசக்கூடாது என்பவர்களில் சிங்களவர்களும் இருக்கிறார்கள். முஸ்லிம்களும் இருக்கிறார்கள்.

சலீம் நானா: தமிழர்களும் இருப்பார்களே!

பண்டா ஐயா: யாருமே புலிகளுடன் பேசக்கூடாது என்று சொல்லவில்லையாம்.

சலீம் நானா: பேச வேண்டும் என்று 84 சதவீத மக்களிள் சுமார் 64 சதவீதமானோர் சில நிபந்தனைகளை முன்வைத்துத் தான் புலிகளுடனான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டுமென்று கருத்துக் கூறியிருக்கிறார்கள். கண்டிஷன் தேவையில்லை என்று சொல்லுகின்ற ரகம் 13.3 மட்டும் தானாம். 19.3 சத வீதம் நடுநிலையாம். கண்டிஷன் தேவை என்ற ரகத்தில் சிங்களவர்கள் 66 சதவீதம், முஸ்லிம்கள் 23 சதவீதம், மலையகம் மற்றும் இதர தமிழர்கள் 18.8 வீதம்.

சலீம் நானா: இதிலிருந்து என்ன தெரிகிறது?

நியாயமான சில நிபந்தனைகளை பேச்சுவார்த்தையின்போது முன்வைப்பேன் என்ற எங்கள் தலைவியின் நிலைப்பாட்டை பெரும்பான்மையான தென் இலங்கை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதைத்தான் சுட்டு நிற்கிறது.

பறுவதம் பாட்டி: நிபந்தனைகள் என்றால் சில்லெடுப்புத்தான் போங்கள்.

சலீம் நானா: நான் அதனை சொல்ல வரவில்லை. பதவியில் ஏறப்போவது எங்கள் கட்சிதான் என்பதை கூறவே இந்த விகிதாசாரத்தை தந்தேன்.

வாழ்க்கைச் செலவை குறைப்பது, வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்குவதில் உருப்படியாக நடவடிக்கை எடுக்கக் கூடிய கட்சிகூட எங்கள் கட்சிதான் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

பண்டா ஐயா: தேர்தலில் மூன்றாவது சக்தியாக வெற்றி பெற்று விளங்கப் போவது யார் தெரியுமா?

சலீம் நானா: ஹெல உறுமய பிக்குகள் இந்த தேர்தலில் தங்களுக்கு 36 ""சீட்டுக்கள்'' கிடைக்கும் என்று பேப்பர்களில் பணம் கொடுத்து விளம்பரம் போட்டிருக்கிறார்கள். ஒரு கோடியே 20 லட்சம் பேர் இந்த ÷தர்தலில்வாக்களிப்பார்கள். இவர்களில் 90 லட்சம்பேர் பௌத்தர்கள், இவர்களில் 18 லட்சம் பேராவது எங்களது வேட்பாளர்களுக்கு "வோட்' போடுவார்கள் என்றும் இந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பறுவதம் பாட்டி: என் கணிப்பு ஆகக்கடியது 4தான்! இதில் ஒன்று தேசியப்பட்டியல் எம்.பி.

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

நான் இங்கே செய்திகளை போடுவதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. எனது நோக்கம் நாம் ஒரு பக்கத்து செய்திகளை மட்டும் பார்க்காமல் அனைத்து பக்க செய்திகளையும் பார்த்து அவற்றை அலசி ஆராய்ந்து ஆரோக்கியமான முறையில் கருத்து பரிமாற்றம் செய்யவேண்டும் என்பதுதான். நாம் எதை ஆதரிப்பதாக இல்லை எதிர்பதாக இருந்தாலும் அவற்றை சரியான முறையில் கருத்தாக முன்வைக்க வேண்டும்.ஆனால் சிலர் இந்த கருத்தை மூடவேண்டும் என்றும் சிலர் வாயை பொத்தி கொண்டு இருக்கவேண்டும் சொல்கின்றார்கள். இதுதவிர மறைமுகமான சில செய்திகளும் தனிப்பட்ட தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

இவை அனைத்தையும் பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன். உங்கள் கருத்தை இங்கே எழுதுங்கள். பகிரங்கமாக எழுத விரும்பாதவர்கள் தனிப்பட்ட செய்தியாகவும் அனுப்பலாம். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். அதுவரை தற்காலிகமாக ஒரு நாளுக்கு கருத்து எழுதுவதையோ செய்தியை பிரசுரிப்பதையோ மனவருத்தத்துடன் நிறுத்துகின்றேன்.

BBC.. ஓடுவதால் பயனில்லை.. நின்று பயப்படாமல் உங்கள் கருத்தை முன்வையுங்கள்..எத்தனையோ மிரட்டல்கள் அவதூறுகளை பொய்ப்பிரச்சாரங்களையும் தவிடுபெடியாக்கித்தான் இதுவரை காலூன்றி நிக்க முடிந்தது.. உங்களில் முழு நம்பிக்கை வைத்து உண்மையான பக்க சார்பற்ற இருபக்கக்கருத்துக்களையும் வையுங்கள்.. அது எப்போதும் வெற்றியைத்தரும்.. குறிப்பிட்ட ஒருவரல்ல.. இங்கு பலரும் கோழைத்தனமான தனிப்பட்ட தாக்குதல் பிரச்சாரத்தை கையாள்பவர்கள்.. தற்போது நடக்கும் பிளவு பெருத்தமைக்கான காரணமும் பொய்ப்பிரச்சாரத்தால் விரைவாக வெண்றுவிடலாம் என்று போட்ட தப்புக்கணக்குத்தான்.. மிரட்டல் உருட்டல்..பொய்ப்பிரச்சார கணிப்பை களமாடும் வாசகர்களிடம் விட்டுவிட்டு தெடர்ந்து எழுதுங்கள்.. செய்திகள் கொண்டுவந்து போடுங்கள்..

நன்றி..

பத்தாண்டுகளுக்கு முன்னர், ஒரு நாள் - "மாத்தையா தலைமையிலான சதி முயற்சியை எவ்வாறு உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது?" என்று கேட்டபோது, பொட்டம்மான் இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார் - ?திறமை அரைவாசி அதிஸ்ட்டம் அரைவாசி?. இந்த அதிஸ்டம் பற்றி என்னிடம் ஒரு தனிப்பட்ட ஒரு கருத்து உண்டு.

அது ? நெஞ்சில் வஞ்சகம் இல்லாதவர்களுக்கு, நேர்மையின் பக்கம் இருப்பவர்களுக்கு, ஒரு சீரிய நேரான பாதையில் துன்பங்களைத் தாங்கி முன்னேறுகிறவர்களுக்கு மட்டும் பொருத்தமான நேரத்தில், பொருத்தமான வடிவத்தில் துணைநிற்கும். சில சமயங்களில் அது அவர்களை விட்டு விலகி இருப்பது போல் தோன்றும், ஆனால் அதன் அர்த்தம், அவர்களை அது கைவிட்டுவிட்டது என்பதல்ல, மாறாக அது வேரொரு ? புதிரான - வடிவத்தில் அவர்கட்கு உதவுகின்றது என்பதுவேயாகும். இப்போது ஒரு விடயம் தெளிவாகப் புரிகிறது. ?இந்தத் தடவை அந்த அதிஸ்டம் ஒரு வித்தியாசமான வடிவத்தில் வேலை செய்திருக்கிறது? என்பது தான் அது. உங்களைக் கொண்டுவித்தே உங்கள் துரோகத்தனத்தை உலகிற்குச் சொல்லுவித்ததன் மூலம் - பழி விழுந்து விடாமல் பிரபாகரனையும், பிளவுபட்டுவிடாமல் போராட்டத்தையும் பாதுகாத்திருக்கிறது.

அந்த அதிஸ்டம் இன்னொரு அளப்பரிய காரியத்தையும் செய்திருக்கிறது. பாராமுகமாக? அலட்சியமாக? அக்கறையற்று இருப்பது போல இருந்த ? அல்லது, கருத்து ஒருமைப்பாடின்மை காரணமாக சற்றே விலகி இருந்த - சொற்ப தமிழர்களையும் வாங்திறந்து பேச வைத்திருக்கிறது ? நெருங்கி வர வைத்திருக்கிறது. உங்கள் துரோகத் தனத்தைக் கண்டு அப்படியானவர்கள் கூட எவ்வளவு கொதித்துப் போயிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?... அந்த வகையில் நன்றி ? அதிஸ்டத்திற்கும் உங்களிற்கும்.

உங்களைப்பற்றி பல குற்றச்சாட்டுகள் வருகின்றன. நிதி மோசடி என்பதிலிருந்து கொலை மற்றும் தகாத உறவு வரை ஒரு நீண்ட குற்றப்பட்டியல் மக்கள் மன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் உண்மை இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். உண்மை இருந்தாலும் நீங்கள் அதை ?இல்லை?யென மறுக்கலாம். அதனால், அது பற்றி நான் இங்கு சொல்ல எதுவுமேயில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செல்ல நீங்களே அடுக்கிய காரணப்பட்டியல் பற்றி உங்களுக்கு சில கருத்துக்கள் வொல்ல விரும்புகின்றேன்.

அம்மான்,

தலைவர் உங்களுக்கு எதைச் செய்யத் தவறினார்?... என்ன குறை வைத்தார்?... என்னைப் பொறுத்த வரையில், உங்கள் விடயத்தில் அவர் பக்கசார்பாக நடந்துகோண்டார் என்று நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு ஒரு வகையில் உண்மை என்று கூடச் சொல்ல முடியும். எவ்வாறெனில் - மரபு வழிப் போரில் உங்களை விட அனுபவம் மிக்க? யுத்த முனைகளிலே உங்களை விட அதிக வெற்றிகளைக் குவித்த? வெற்றிகரமான படைநகர்த்தல்களில் உங்களை விட நிச்சயமாகத் திறமை வாய்ந்த? எத்தனையோ தளபதிகள் தன்னிடம் இருந்த போதும் - மட்டக்களப்பிலிருந்து உங்களைக் கொண்டு வந்து - தமிழீழத் தரைப்படையின் தலைமை - கள ஒருங்கிணைப்புத் - தளபதியாக உங்களை நியமித்தார். அந்த கையில், அது - இதுவரை நீங்களே பார்திராத கருணாவை தலைவர் பார்த்திருக்கிறார் என்று தானே அர்த்தம்?... தமிழீழத்தின் முழு தரைப்படை நகர்த்தல்களையுமே கையாளும் வல்லமை மிக்க தளபதியாக அவர் உங்களைப் பார்த்தபோது, நீங்களோ - பிரதேச வாதம் பேசிக்கொண்டு - உங்களை நீங்களே மட்டக்களப்பு-அம்பாறை என்ற சிறிய வட்டத்திற்குள் சுருக்கிக் கொண்டுவிட்டீர்கள். இத்தகைய ஒரு பொறுப்பை உங்களிடம் வழங்கும் போது, தலைவர் அவர்கள் இரண்டு வி;யங்களைக் கருதியிருக்கலாம் என்று நான் நம்புகின்றேன். முதலாவது ? பால்ராஜ்ஜூம் தீபனும், சொர்ணமும் பானுவும், ஜெயமும் விதுசாவும் - இவர்கள் போன்ற ஏனைய அனுபவம் மிக்க தளபதிகளும் - அதையிட்டுப் பொறாமைப்படாமல் தனது நியமனத்தை மனப்ப10ர்வமா ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர்கள் மீதிருந்த நம்பிக்கை. இரண்டாவது ? சிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உங்களை வளர்த்து உயர்த்தி, அத்தகைய ஒரு பெரும் பொறுப்பு நிலையில் அமர்த்திப் பார்க்க வேண்டும் என்ற ஆதங்கம். அத்தகைய ஆதங்கத்தொடு உங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவரை, ?தனக்கு நிகராக யாரும் வளர்ந்து விட அவர் விடமாட்டார்? என்று Hindu பத்திரிகைக்காரனிடம் நீங்கள் கூறியது, பார்த்துப் பார்த்து வளர்த்த பிள்ளை முதுகிலே அல்ல, நெஞ்சிலே குத்திவிட்ட பச்சைத் துரோகம் இல்லையா?

இந்தியாக்காரனிடம் எதையோ எதிர்பார்த்து Hindu பத்திரிiகைகாரனுக்கு நீங்கள் அளந்த கதை, அண்டப்புளுகு என்பது இந்தியாக்காரனுக்கே தெரியும். புலிகளின் படைகளை கெரில்லா யுத்தக் குழுக்கள் என்ற நிலையிலிருந்து மரபு வழிப் போரணிகளாக வளர்த்துவிட்ட பெருமை உங்களையே சாரும் என நீங்கள் கதை விடுகின்றீர்கள். அது ஒரு சர்வ முட்டாள்தனம் என்று உங்களுக்குப் புரியவேயில்லையா?... மட்டக்களப்புக் காடுகளுக்குள் கெரில்லாத் தாக்குதல்கள் கூட நடத்தமுடியாமல் - நீங்கள் பதுங்கிக்கிடந்த நாட்களிலேயே, சொந்தத் தொழிற்சாலைகளில் பீரங்கிகள் தயாரித்து ? வடக்குப் போர் முனைகளில் - மரபுவழிச் சமர்களை நடாத்தியவர் பிரபாகரன் என்பது உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா?... யுத்தகளங்களில் நவீன தொழில்நுட்பங்களை நீங்களே அறிமுப்படுத்தியதாக இன்னொரு கதை அளந்துள்ளீர்கள். சமர்க்களங்களில் பிரபாகரன் அறிமுகப்படுத்திய நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் எங்கிருந்து புலிகளிடம் வந்து சேர்ந்தன என்பதுவே உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. ரொமெல் அவன் இவனென்று இரண்டாம் உலகயுத்த காலத்து பழைய ? உலுத்துப் போன ? புத்தகங்களில் படித்து, நீங்களே தான் புலிகளுக்கு யுத்த உத்திகளைச் சொல்லிக் கொடுத்ததாகவும் நீங்கள் ஒரு கதை அளக்கின்றீர்கள். உங்களுக்குத் தெரியுமா?... பிரபாகரன் எப்படி கட்டுநாயக்காவைத் துவம்சம் செய்தார் என்பதை அறிய நவீன உலகத்து உச்ச வல்லரசின் ?ஐங்கோண?க்காரர்களே அவதிப்படுகின்றார்கள் என்பது. ?There must be few military geniuses in the North; at least one must be there for sure? என்று ஒரு ?ஐங்கோண? அதிகாரி எங்கள் ஆட்களிடமே வாய்விட்டுச் சொல்லியிருக்கிறார். அந்த military genius யார் என்பது உங்களுக்கும், எங்களுக்கும் எல்லோருக்குமே தெரியும்.

இங்கே ஆகப் பெரிய நகைப்பு என்ன தெரியுமா?... ?ஜெயசிக்குறு?வை நீங்கள் தான் முறியடித்ததாகவும், ?ஓயாத அலைக?ளை நீங்கள் தான் நடாத்தியதாகவும், ஆனையிறவை நீங்கள் தான் பிடித்ததாகவும் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தாக்கம் மிகுந்த திருப்புமுனைகளை ஏற்படுத்திய இராணுவ வெற்றிகளின் சூத்திரதாரி நீங்கள் மட்டுமே என்று - விசியமறியாத வெளிநாட்டு media காரர்களும், சில தமிழ் ஆய்வாளர்களும் விசியமறிந்தவர்கள் போல எழுதுசிற கற்பனைக் கதைகளை உண்மையென்று நீங்களே நம்பிவிடுவது தான்.

வடக்குச் சண்டையை வெல்லுவதற்கு நீங்கள் ஆள்கொடுத்ததாக ஒரு பழைய கணக்ககை நீங்கள் இப்போது காட்டுகின்றீர்கள். அது நீங்கள் பிரதேசவாதம் பேசும் ஒரு வடிவம். நான் இங்கே இன்னொரு விதமான தர்க்கத்தை முன்வைக்கின்றேன். ?வடக்குச் சண்டைக்காக மட்டக்களப்பிலே முகாம்களை மூடி எதிரி யாழ்ப்பாணத்திற்குப் படைகளை நகர்த்துகின்றான். இந்தச் சண்டையில் எவ்வளவு அதிகமான இழப்பை நாம் அவனுக்கு ஏற்படுத்துகின்றோமோ, அதைவிட அதிக படைகள் அவனுக்கு மேலும் தேவைப்படும். அப்போது மேலும் மேலும் முகாம்களை மூடி அவன் மட்டக்களப்பில் நிலங்களைக் கைவிடுவான். அதேசமயம், எதிரிக்கு இங்கே அதிக இழப்பை ஏற்படுத்தவேண்டுமானால், எம்மிடமும் வலுவான படை இருக்க வேண்டும். ஆகவே நாமும் படைகளை வடக்கிற்கு நகர்த்துவது நன்மை பயக்கும்? என்று தலைவர் உங்களுக்குத் தகவல் அனுப்பியிருந்ததாக ?ஜெயசுக்குறு?வின் ஆரம்ப காலத்தில் காலத்தில் நீங்களே ஒரு நாள் என்னிடம் கூறியிருக்கின்றீர்கள். நீங்கள் அதை சொல்லியிருக்காவிட்டாலும் அது ஒன்றும் விளங்கிக்கொள்வதற்குக் கடினமான போரியல் சூட்சுமம் அல்ல. ஆகவே ? வடக்கைப் பாதுகாக்க மட்டும் மட்டக்களப்புப் போராளிகளை அனுப்பியதாக நீங்கள் முன்வைக்கும் வாதம் உப்புச்சப்பற்றது. அதே யாழ்ப்பாணம் மற்றும் வன்னிச் சண்டைகளை நான் இன்னொரு விதமாகப் பார்க்கின்றேன். அது உண்மையில் மட்டக்களப்புக்கான சண்டை. ஆனால், வடக்கில் பிடிக்கப்பட்டிருக்கிறது. நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். நானும் பிரதேசவாதம் பேச முடியும். ?எங்கள் வீடுகளின் மேல் பீரங்கிக் குண்டுகளைத் தாங்கி? எங்கள் பாடசாலைகளின் மேல் விமானக் குண்டுகளைத் தாங்கி? எங்கள் உடல்களின் மேல் துப்பாக்கிக் குண்டுகளைத் தாங்கி? எங்கள் வாழ்வுகளைச் சீரழித்து? நாங்கள் நு}ற்றுக்கணக்கில் உயிரிழந்து? நாங்கள் ஐநு}ராயிரம் பேர் ஒரே இரவில் அகதிகளாகி? எங்கள் யாழ்ப்பாணத்தை எதிரியிடம் பறிகொடுத்து? ? கடைசியில் மீட்டெடுத்தது உங்கள் மட்டக்களப்பைத்தானே!? இப்படியாக நானும் பிரதேசவாதம் பேசமுடியும் அல்லவா?... ஆனால் நான் அப்படிப் பேசப்போவதில்லை. ஏனெனில் - இது தமிழீழத்திற்கான போர் தமிழீழத்தின் எல்லாப்பிரதேச மக்களுமே - ஏதோ ஒரு அளவீட்டில்;, ஏதோ ஒரு பரிமாணத்தில், ஏதோ ஒரு கால கட்டத்தில் இந்தச் போரில் தங்கள் தங்கள் பங்களிப்பை ஏதோ ஒருவகையில் வழங்கியுள்ளார்கள் என்பதில் எனக்கு எந்தவிதமான குழப்பமும் கிடையாது. எங்கள் நாட்டை மீட்பதற்காக - நாங்கள் எல்லோரும் சேர்ந்து, நாங்கள் எல்லோருமே இழப்புகளைத் தாங்கி, நாங்கள் எல்லோருமே போராடி, நாங்கள் எல்லோருமே வெற்றிகளைப் பெற்றோhம்.

இங்கே இன்னொரு வரலாற்றுப் போக்கையும் தாங்கள் தயவுசெய்து கவனிக்க வேண்டும். போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இயக்கத்தின் பொறுப்புக்களில் எல்லாம் வல்வெட்டித்துறைக்காரர்களே இருந்தார்கள். அப்போது புலிப்படையில் யாரும் வல்வெட்டித்துறை வாதம் பேசியதல்லை. பின்பு - மெல்ல மெல்ல அதில் வடமராட்;சிக்காரர்கள் நியமனம் பெற்றார்கள். அப்போது புலிப்படையில் யாரும் வடமராட்சி வாதம் பேசியதல்லை. பின்பு ? மெல்ல மெல்ல யாழ் மாவட்டத்தார் பொறுப்புக்களுக்கு வந்தார்கள். ஒரு காலத்தில் தமிழீழத்தின் எல்லா மாவட்டத் தளபதிகளாகவும் யாழ்ப்பாணத்தாரே இருந்தார்கள். அப்போது புலிப்படையில் யாரும் யாழ்ப்பாண வாதம் பேசியதில்லை. இவ்வாறாக இருந்து வந்த ஒரு காலகட்டத்தில் தலைவருக்கு அடுத்த நிலைக்கு மாத்தையா நியமனம் பெற்றார்: அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பின்பு ஒரு கட்டத்தில் தலைவருக்கு அடுத்தபடியான தளபதியாக பால்ராஜ் நியமனம் பெற்றார். அவர் வன்னியிலிருந்து வந்தவர். பின்பு ஒரு காலகட்டத்தில் அந்தப் பொறுப்பு தளபதி சொர்ணத்திற்கு வழங்கப்பட்டது: அவர், திருக்கோணமலையிலிருந்து வந்தவர். கடைசியாக ஒரு காலகட்டத்தில் அத்தகைய ஒரு தளபதியாக நீங்கள் நியமனம் பெற்றீர்கள்: நீங்கள் மட்டக்களப்பிலிருந்து வந்திருந்தவர். உங்களுக்கு உதவியாக தளபதி தீபன் நியமிக்கப்பட்டார்: அவர் வன்னியைச் சேர்ந்தவர். இவ்வாறாக, போராட்டத்தின் படிநிலை வளர்ச்சிக்கேற்ப - அநுபவம், ஆற்றல், செயற்திறனின் அடிப்படையில் கடமைகள் வழங்கப்பட்டு - பொறுப்புக்களில் பொருத்தமானவர்கள், பொருத்தமான நேரங்களில் அமர்த்தப்பட்டு வந்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் தலைவர் அதை மிகச் செவ்வனவே செய்து வந்திருக்கிறார். அன்று மாத்தையாவும் இன்று நீங்களும் - உங்களுக்குக் கிடைத்த பொறுப்பு, அதன் மூலம் உங்களுக்குக் கிடைத்த வசதிகள், அதை வைத்து நீங்கள் தேடிய செல்வாக்கு, இவற்றின் உச்சப் பெறுபேறான புகழ், இவை எல்லாமும் சேர்ந்து ? உங்கள் தலைக்குப்பின்னால் ஒரு அகற்றப்படமுடியாத பேரொளிச் சக்கரத்தைச் சுழல விட்டிருப்பதாக நம்பி உங்களை நீங்களே குழப்பிக் கொண்டீர்கள். ஆனால், பிரபாகரனோ, அன்றும், இன்றும், என்றும் மிகத் தெளிவான படிமுறை வளர்ச்சியினு}டாக போராட்டத்தை நகர்த்திச் செல்கினறார்.

திருவாளார் கருணா அவர்களே,

உங்களைக் கொல்லுவதற்கு புலிகளின் ?கொலைப் படைகள்? அலைந்து திரிவதாக நீங்கள் ஒரு செய்தியை பரப்பியிருக்கின்றீர்கள். அதில் உண்மை இருக்கலாம், அல்லது பொய் இருக்கலாம். தலைவரும் தமிழினமும் உங்களைத் தண்டிக்கலாம் அல்லது மன்னிக்கலாம். அதைப்பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு மனிதனின் மிகப்பெரிய நீதிமன்றம் மனச்சாட்சி அல்லவா அம்மான்.... இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் அது உங்களை வதைக்காதா?... எங்கோ ஒரு மூலையில் நீங்கள் தப்பிப் பிளைத்து இருந்துவிட்டால், உங்களுக்கு ஒரு 80? 90 வயது இருக்கும் போது ? நோய்வாய்ப்பட்டோ அல்லது வயது வந்தோ மரணம் தவிர்க்கமுடியாதது என ஆகி - சாவுப் படுக்கையில் இருக்கும் போது, ?ஒரு நேர்மையான - சரியான மனிதனாக நான் வாழ்ந்தேனா?? என்று ஒரு கேள்வியை உங்களை நோக்கியே நீங்கள் கேட்க மாட்டீர்களா?... ?எனக்கு சோறு போட்ட மக்களுக்கு நான் விசுவாசமாக வாழ்ந்தேனா?? என்று ஒரு சுயவிசாரணை செய்யமாட்டீர்களா?... அப்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும் என்பதை இப்போது யோசித்துப் பாருங்கள். தமிழ் தேசிய இனம் உங்களை மன்னித்தாலும், உங்களுக்குள்ளேயே இருக்கும் முரளீதரன் என்ற தமிழனின் மனச்சாட்சி உங்கள் முகத்தில் காறித் துப்பாதா?...

சரி?. நாளைக்கு நடப்பது எல்லாவற்றையும் விடுங்கள்?.

நல்ல ஒரு நல்ல நிலா நாளில் -

உங்களைச் சுற்றி நீங்கள் வைத்திருக்கும் பரிவாரங்களையெல்லாம் விட்டுவிட்டு - தரவையில் நீங்கள் விதைத்து வைத்திருக்கும் மாவீரர் துயிலுமில்லத்திற்குப் போங்கள். நீண்டு கிடக்கும் கல்லறை வரிசைகளின் ஊடக ?

தன்னந் தனியனாக - மெதுவாக நடவுங்கள்.

ஒவ்வொரு கல்லறைகளின் மீதிருக்கும் பெயர்களையும், அந்த நிலா வெளிச்சத்தில் ஒவ்வொன்றாகப் படியுங்கள்.

பிரபாகரனின் பெயராலும், தமிழீழத் தேசியத்தின் பெயராலும் -

நீங்கள் சேர்த்தெடுத்து வளர்த்தெடுத்த அந்த ஒவ்வொரு போராளியின் முகத்தையும் உங்கள் மனக்கண்ணில் கொண்டு வந்து பாருங்கள்.

ஏக்கத்தைத் தேக்கிய விழிகளோடு உங்களைப் பார்த்து ?

?ஏன் அம்மான் இப்படிச் செய்துவிட்டீhகள்?? என்று அவர்கள் கேட்பதை உங்கள் மனச்சாட்சி உங்களுக்கு உணர்த்தும்.

அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவீர்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீங்கள் உருவாக்கியுள்ள இன்றைய இக்கட்டான சூழல் சுமூகமாகவும் - வேகமாகவும் தீர்வுக்கு வர ஒரே வழிதான் உண்டு அது உங்கள் மன அரங்கில் மாற்றம் நிகழ வேண்டும். 20 ஆண்டு காலமாக எந்த மக்களுக்காகப் போரடினீர்களோ அந்த மக்களுக்காக... கடந்த 20 ஆண்டு காலமாக நீங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு சரியான அர்த்தத்தை ஏற்படுத்துவதற்காக? ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் மனதிலும் மட்டக்களப்பு மண்ணிலும் ஏற்படுத்துங்கள். மனமிரங்கி உங்களுக்கு மன்னிப்பளிக்கத் தயாராய் இருக்கும் தலைவரின் கருணையை ஏற்று ஏதாவது ஒரு வெளி நாட்டில் போய் நீரா அக்காவுடனும் குழந்தைகளுடனும் குடும்பம் நடாத்தினாலும் சரிதான்: அல்லது போராளி ரஞ்சனை அனுப்பியது போல, சோடாவில் சயனைட் கலந்து நீங்களே குடித்தாலும் சரிதான்.

நன்றி

குளைக்காடான்.

அரசியல்துறை

தமிழீழ விடுதலைப்புலிகள்

தமிழீழம்

29-03-04

[align=center:a110557eb8]தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அபிலாசையை வெளிப்படுத்துவோம்.[/align:a110557eb8]

இரு தசாப்தங்களைக் கடந்து பல ஆயிரக்கணக்கான மக்களினதும் போராளிகளினதும் உயரிய அர்ப்பணிப்புகளாலும் வீரம் செறிந்த போராட்டத்தாலும் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று பெரும் வளர்ச்சியடைந்து திருப்புமுனையானதோர் கட்டத்தை அடைந்திருக்கிறது. நாம் எமது பாரம்பரிய தாயகத்தில் நிம்மதியாகவும் கௌரவமாகவும் சுதந்திர மனிதர்களாக வாழ விரும்பினோம். ஆனால் காலங்காலமாக ஆட்சிக்குவந்த சிறீலங்கா ஆட்சியாளர்களால் எமது சுதந்திரமான கௌரவமான வாழ்வு மறுக்கப்பட்டு அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்

நான் இங்கே செய்திகளை போடுவதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. எனது நோக்கம் நாம் ஒரு பக்கத்து செய்திகளை மட்டும் பார்க்காமல் அனைத்து பக்க செய்திகளையும் பார்த்து அவற்றை அலசி ஆராய்ந்து ஆரோக்கியமான முறையில் கருத்து பரிமாற்றம் செய்யவேண்டும் என்பதுதான். நாம் எதை ஆதரிப்பதாக இல்லை எதிர்பதாக இருந்தாலும் அவற்றை சரியான முறையில் கருத்தாக முன்வைக்க வேண்டும்.ஆனால் சிலர் இந்த கருத்தை மூடவேண்டும் என்றும் சிலர் வாயை பொத்தி கொண்டு இருக்கவேண்டும் சொல்கின்றார்கள். இதுதவிர மறைமுகமான சில செய்திகளும் தனிப்பட்ட தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

இவை அனைத்தையும் பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன். உங்கள் கருத்தை இங்கே எழுதுங்கள். பகிரங்கமாக எழுத விரும்பாதவர்கள் தனிப்பட்ட செய்தியாகவும் அனுப்பலாம். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். அதுவரை தற்காலிகமாக ஒரு நாளுக்கு கருத்து எழுதுவதையோ செய்தியை பிரசுரிப்பதையோ மனவருத்தத்துடன் நிறுத்துகின்றேன்.

BBC.. ஓடுவதால் பயனில்லை.. நின்று பயப்படாமல் உங்கள் கருத்தை முன்வையுங்கள்..எத்தனையோ மிரட்டல்கள் அவதூறுகளை பொய்ப்பிரச்சாரங்களையும் தவிடுபெடியாக்கித்தான் இதுவரை காலூன்றி நிக்க முடிந்தது.. உங்களில் முழு நம்பிக்கை வைத்து உண்மையான பக்க சார்பற்ற இருபக்கக்கருத்துக்களையும் வையுங்கள்.. அது எப்போதும் வெற்றியைத்தரும்.. குறிப்பிட்ட ஒருவரல்ல.. இங்கு பலரும் கோழைத்தனமான தனிப்பட்ட தாக்குதல் பிரச்சாரத்தை கையாள்பவர்கள்.. தற்போது நடக்கும் பிளவு பெருத்தமைக்கான காரணமும் பொய்ப்பிரச்சாரத்தால் விரைவாக வெண்றுவிடலாம் என்று போட்ட தப்புக்கணக்குத்தான்.. மிரட்டல் உருட்டல்..பொய்ப்பிரச்சார கணிப்பை களமாடும் வாசகர்களிடம் விட்டுவிட்டு தெடர்ந்து எழுதுங்கள்.. செய்திகள் கொண்டுவந்து போடுங்கள்..

நன்றி..

மேனை பிபிசி உதுக்கெல்லாம் சோரக்கூடாது

தாத்தா சொல்லுறது மெய் கண்டியளோ

அந்தாள் இந்த களத்திற்கு ஒரு பழையகட்டை

எத்தினை பேரை பாத்திருக்கும் இங்கை...

உவையின்ற கதையொண்டும் எடுபடல்லை எண்டவுடன தொடங்கிடுவினம் 'துரோகி' எண்டு.

உதை விட்டால் அவையளுக்கும் வேறவழி தெரியாது....

இல்லாத ஊருக்கு போய்காட்டுறன் எண்டினம்.

சிவ... சிவா..

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை.

BBC பெயரில் எழுதாவிட்டால்... உங்களுக்குதானே கன தொப்பி இங்கு உள்ளது மாத்த வேண்டியதுதானே... ;) :) :idea:

இங்கு சில கேள்விகளை நான் முன்வைக்கின்றேன். இந்த கேள்விகளுக்கு ஆம் என்ற விடை உங்களிடம் இருந்தால் மேலே செல்லுங்கள் இல்லை என்ற விடை உங்களிடம் இருக்குமாயின்...............????????

முதலாவது தமிழர்களாகிய நாம் இலங்கையில் உரிமைமறுக்கப்பட்டவர்களாக வாழுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோமா?

ஆம் என்றால்

அந்த உரிமைகளை வென்றெடுப்பதுதான் இன்று எங்களின் முன்னுள்ள பிரதான இலக்கு, நோக்காக இருக்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோமா?

ஆம் என்றால்

அந்த உரிமைகளை காந்தீய வழிமுறைமூலம் வென்றெடுக்கப்பட முடியாது என்பதை ஏற்றுக்கொள்கின்றோமா

ஆம் என்றால்

அந்த காந்தீயவழிமூலம் வென்றெடுக்கப்படமுடியாத உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய வல்லமை கொண்ட ஒரே சக்தி விடுதலைப்புலிகள் என்பதை ஏற்றுக்கொள்கின்றோமா

ஆம் என்றால்

அந்த சக்தியையும் அந்தப்போராட்டத்தையும் தாங்கிக்கொள்ளவேண்டிய தார்மீக பொறுப்பு நம் ஈழத்தமிழன் எல்லோருக்கும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்கின்றோமா?

ஆம் என்றால்

இந்த சக்தியை தாங்கி வைத்திருக்கும் மக்களை குழப்புவதன் மூலம் அந்த போராட்டத்தை வலுவிழக்கச் செய்யலாம் என்பதை ஏற்றுக் கொள்கின்றோமா?

ஆம் என்றால

இந்த சக்தியையும் போராட்டத்தையும் அழித்துஒழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஏராளமான வெளிச் சக்திகள் அன்றுதொட்டு இன்றுவரை பல்வேறுவழிகளில் முயன்றுகொண்டு வருகின்றன என்பதை தெரிந்து வைத்திருக்கின்றோமா?

ஆம் என்றால்

அந்த மக்களை கடந்த காலங்களில் பல்வேறுபட்ட திரிபட்ட செய்திகளை பலவழிகளிலும் வழங்கி பல குழப்பங்களை விளைவிக்க முயன்றதை நாம் அறிவோமா

ஆம் என்றால்

அவர்கள் இன்றுள்ள சூழ்நிலையில் மேலும் பலகுழப்பங்களை விளைவிக்க முயல்கின்றார்கள், முயல்வார்கள் என்பதை எம்மால் காண முடிகின்றதா?

ஆம் என்றால்

அந்த சக்திகளை இனங்கண்டு அவர்களின் நோக்கம்களை இனங்கண்டு அவர்கள் செய்திகளை இனங்கண்டு கொள்ளாது அவர்கள் செய்திகளை மீளபிரசுரித்து அவர்களுக்கு மேலும் வாசகர்களைத் தேடிக்கொடுப்பது நமது உரிமைகளை வென்றெடுக்க எந்த விதத்திலாவது உதவுமா?

இதற்குரிய விடையை நீங்களே சொல்லுங்கள்.

உண்மையை உலகம் முழுவதற்கும் உறுதிபட எடுத்துக்கூறுவோம்!

இன்று தமிழினம் ஜனநாயக ரீதியில் ஒன்றுபட்ட போராட்டசக்தியாக - பலம்மிக்க சக்தியாகத் திகழ் கிறது. நாளை நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த உண்மையை உலகம் முழுவதற்கும் உறுதிபட எடுத்துக்கூறுவோம் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் அனைத்துத் தமிழ்மக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

தமிழ்த் தேசியத்துக்கு வலுச்சேர்த்து ஒன்றுபட்ட போராட்ட சக்தியைக் காத்திரமானதாக்குவதற்குத் தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக

  • தொடங்கியவர்

உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை.

BBC  பெயரில் எழுதாவிட்டால்... உங்களுக்குதானே கன தொப்பி இங்கு உள்ளது மாத்த வேண்டியதுதானே... ;) :)  :idea:

அன்பகம், உண்மை என்பது நமக்கு சாதகமான செய்திகளை மட்டும் பார்ப்பது அல்ல.

புது தொப்பியை போட்டு அரசியல் கருத்து எழுதப் போவதில்லை. நான் BBC என்ற பெயரிலேயே அரசியல் கருத்து எழுதி வருகின்றேன். இதை நீங்கள் களப் பொறுப்பாளர்களை கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

மணிமாறனின் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன்.அதே சமயம் 20 வருட போராட்ட ஆதரவை ஒரு சிலரது கருத்து குழப்பிவிடும் என்பது என்னால் ஏற்கமுடியாதது.

அப்படி குழம்புவோர் என்றும் அடிக்கடி குழம்பிக்கொண்டிருப்பவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.