Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

Tigers admit 'temporary' crisis

By Frances Harrison

BBC correspondent in Colombo

Tamil Tiger leaders in Sri Lanka have for the first time admitted there is a crisis in the ranks, but insist it is only temporary.

The rebels initially denied there was a split in their organisation triggered by the comments of a senior commander in the east of the island.

It is still not yet clear how serious are the problems facing the rebels.

They are renowned for their rigid discipline and secrecy, and public expressions of dissent are rare.

Emergency meeting

This could be just the public airing of regional grievances by a powerful commander in the east - but it could also be something more.

A pro-rebel website, Tamilnet, quoted the head of the Tigers' political wing, saying the crisis was only temporary and would be resolved soon.

No other details were given, but the situation did prompt the Sri Lankan prime minister to go into an emergency meeting with officials and diplomats.

And the head of the international truce monitors has flown to rebel headquarters in the north of the island for discussions he described as constructive.

The crisis seems to revolve around Colonel Karuna, a Tiger commander in eastern Sri Lanka, who also took part in peace talks with the government.

It is thought Colonel Karuna is unhappy that the bulk of the rebel fighters come from the east and yet all the top leadership comes from the north of Sri Lanka.

But why such grievances should surface now is a mystery, just as the country is gearing up for general elections next month.

  • Replies 2.2k
  • Views 133k
  • Created
  • Last Reply

இயக்கத்தில் பிளவா? விடுதலைப் புலிகள் மறுப்பு!

வியாழன், 4 மார்ச் 2004

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையை ஏற்க மறுத்து தனித்து செயல்பட அதன் கிழக்குப் பகுதி தளபதி கர்னல் கருணா முடிவெடுத்திருப்பதாக வந்த செய்திகளை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளது!

இது தொடர்பாக இலங்கையின் கிழக்குப் பகுதியில் கொக்கடிச் சோலையில் இருந்து வெளிவரும் தமிழ் அலை நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தாங்கள் தமிழீழத்தின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலும், மட்டக்களப்பு தளபதி கர்னல் கருணா வழிகாட்டுதலின் படியும் நடந்து வருவதாக அப்பகுதி புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர் கூறியுள்ளார்.

தமிழீழ விதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறுவது என்றோ, தனித்து செயல்படுவது என்றோ எந்தவிதமான முடிவையும் தாங்கள் எடுக்கவில்லை என்றும், தமிழ் மக்களிடையே அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதாக திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுவதாக கர்னல் கருணாவிற்கு நெருக்கமான இரண்டாம் கட்ட தளபதிகள் கூறியதாக தமிழ் அலை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைக்கும் அதன் கிழக்கு பிரிவிற்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக இலங்கையில் கடைபிடிக்கப்பட்டு வரும் போர் நிறுத்தம் பாதிக்கப்படலாம் என்றும் இலங்கை வானொலி நேற்று செய்தி அளித்தது. அதற்கு இந்த மறுப்பை விடுதலைப் புலிகளின் கிழக்கு பிரிவு அளித்துள்ளது.

webulagam.com

மட்டக்களப்புப் பிரச்சனை தற்காலிகமான ஒன்று என்றும் மிக விரைவில் தேவையான மாற்றங்கள் வரும் என்றும் சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களுடனான கலந்துரையாடலின் போது தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்...இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கெளசலியனும் மற்றும் புலித்தேவனும் கலந்து கொண்டுள்ளார்கள்...!

இதற்கிடையில் புலிகள் இயக்கத்தலைவருடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மத்திய குழுவுடன் இணைந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட விசேட தளபதி ரமேஷ்,அப்பிரதேச அரசியல் பொறுப்பாளர் கெளசலியன் மற்றும் சிரேஷ்ட தளபதிகள் மேற்கொண்டு வருவதாகவும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாக புலிகளின் இணையத்தளத்தை மேற்கோள் காட்டி தமிழ் நெற் செய்தி வெளியிட்டுள்ளது....!

(Tamilnet news in tamil)

இதன் பிரகாரம் மட்டக்களப்பில் ஏதோ பிரச்சனை உள்ளதென்பதையும் அது தற்காலிகமானது என்பதையும் அது மிகவிரைவில மாற்றங்கள் வாயிலாக தீர்க்கப்பட்டுவிடும் என்பதையும் புலிகள் ஒத்துக் கொண்டுள்ளனர்....!(-Our view)

TCSLMMMeet.jpg

Batticaloa crisis temporary - Thamilchelvan

[TamilNet, March 04, 2004 09:56 GMT]

Head of the Sri Lanka Monitoring Mission (SLMM) Major General (retd.) Trond Furuhovde and his deputy Hagrup Haughland met Head of the LTTE Political Wing, S.P.Thamilchelvan in Kilinochchi Thursday morning, LTTE peace secretariat website said. LTTE Batticaloa district Head of the Political Wing, Kousalyan, and Director of LTTE Peace Secretariat Puleedevan also participated in the discussions.

Thamilchelvan told the SLMM delegation that the "crisis is only a temporary one and a resolution will be reached soon," according to the LTTE site.

Thamilchelvan also told the SLMM delegation that Batticaloa-Amparai Special commander Ramesh, Batticaloa district Political Head, Kausalyan, Senior commanders are discussing matters with the LTTE Leader Pirapaharan and members of the LTTE Central Committee.

(Tamilnet)

:evil: :idea: :!:

இயக்கத்தில் பிளவா? விடுதலைப் புலிகள் மறுப்பு!

வியாழன், 4 மார்ச் 2004

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையை ஏற்க மறுத்து தனித்து செயல்பட அதன் கிழக்குப் பகுதி தளபதி கர்னல் கருணா முடிவெடுத்திருப்பதாக வந்த செய்திகளை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளது!

இது தொடர்பாக இலங்கையின் கிழக்குப் பகுதியில் கொக்கடிச் சோலையில் இருந்து வெளிவரும் தமிழ் அலை நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தாங்கள் தமிழீழத்தின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலும், மட்டக்களப்பு தளபதி கர்னல் கருணா வழிகாட்டுதலின் படியும் நடந்து வருவதாக அப்பகுதி புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர் கூறியுள்ளார்.

தமிழீழ விதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறுவது என்றோ, தனித்து செயல்படுவது என்றோ எந்தவிதமான முடிவையும் தாங்கள் எடுக்கவில்லை என்றும், தமிழ் மக்களிடையே அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதாக திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுவதாக கர்னல் கருணாவிற்கு நெருக்கமான இரண்டாம் கட்ட தளபதிகள் கூறியதாக தமிழ் அலை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைக்கும் அதன் கிழக்கு பிரிவிற்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக இலங்கையில் கடைபிடிக்கப்பட்டு வரும் போர் நிறுத்தம் பாதிக்கப்படலாம் என்றும் இலங்கை வானொலி நேற்று செய்தி அளித்தது. அதற்கு இந்த மறுப்பை விடுதலைப் புலிகளின் கிழக்கு பிரிவு அளித்துள்ளது.

webulagam.com

அப்ப இப்பத்தைய view படி பிளவு இல்லையாக்கும்..

அங்க பிளவு கிளவு ஒன்றும் இல்லை...சாதாரண கருத்துக் குழப்பம்....! அது விரைவில் தெளிந்திடுமாம்....!..இதையே வைச்சு நீங்கள் தொடங்கிடுவிங்களே குழப்ப அரசியல்....!

:twisted: :P :)

குருவிகாள்.. நீங்கள் போட்ட செய்திகள்தான் இரண்டும்.. எனக்கும் இவைகளுக்கும் சம்மபந்தமே இல்லை..

உண்டு.. இல்லை இரண்டும் நீங்களே தவிர என்னுடைய கணிப்புப்படி வேறு பாரதூரமானதென்று மூடி மறைக்கப்பட்டிருக்கு..

:idea: :?: :!:

கருணா அம்மான் இப்பவும் தலைமையுடன் தான் செயற்படுகிறார் தயவு செய்து தவறான பரப்புரைகளை தவிருங்கள்.

  • தொடங்கியவர்

"எமக்குள் பிளவு இல்லை' விடுதலைப் புலிகளின்

மட்டு. அம்பாறை அரசியல் பிரிவு தெரிவிப்பு

பிரபாவின் தலைமையில் கருணாவின் வழிகாட்டலுடன் செயல்படுகின்றோம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் பிளவு இல்லை. இயக்கத்துக்குள் பிளவு என்று சில ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று புலிகளின் கிழக்கு தளபதி கேணல் கருணா அம்மானின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக தமிழ் நெட் செய்தி வெளியிட்டுள்ளது.

"எமது தேசியத் தலைவரின் நேரடி ஆணையின் கீழ் நாங்கள் செயல்படுவோம்' என்று அந்த பேச்சாளர் சொன்னதாகவும் "தமிழ் நெட்' இணைய தளம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து வெளிவரும் புலிகளின் ஆதரவுப் பத்திரிகையான "தமிழ் அலை' நாளிதழும் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பிரிவை மேற்கோள் காட்டி மறுப்புச் செய்தியொன்றை நேற்று வெளியிட்டிருந்தது. ""விடுதலைப்புலிகளின்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் அவரின் இலட்சியப்பற்றுறுதியோடு கிழக்கு தளபதி கேணல் கருணா அம்மானின் வழிகாட்டலுடன் செயற்பட்டு வருகிறோம் எமக்கிடையில் எந்தப் பிளவுகளும் இல்லை' என்று முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைமையை விட்டு கிழக்குத் தளபதி கேணல் கருணா அம்மான் விலகிவிட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களுடன் தொடர்பு கொண்ட போதே இத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் செயற்படுகிறோம். பிரிந்து தனியாக செயற்படுவதென்று முடிவு எடுக்கவில்லை.

கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பாதுகாப்பு அபிலாஷைகள் மன உணர்வுகள்என்பவற்றை

நிறைவேற்ற கேணல் கருணா அம்மானின் தலைமையில் உறுதியோடு செயற்படுவோம் என்றும் மக்கள் மத்தியில் வீணான பீதியையும் அச்சத்தையும் தோற்றுவிக்கும் வகையில் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே சகல முடிவுகளும் எடுக்கப்படும் என்றும் அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதேவேளை இயக்கத்துக்குள் பிளவு என்று புதன் இரவு வானொலிகள் ஒலிபரப்பிய செய்தியை கவலையோடு கேட்ட மக்கள் பலரும் அந்த செய்தியின் உண்மைத் தன்மையை அறிவதில் அதிக ஆர்வம் காட்டியதை அவதானிக்க கூடியதாயிருந்தது.

சில பத்திரிகைகளும் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன. இதனால் அவர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்திருந்தது.

பலரும் இச் செய்தியை நம்ப மறுத்தனர். ஒரு சிலர் இயக்கத்துக்குள்ளும் பிரதேச வாதம் தலை தூக்கி விட்டதா? என்று கேட்டு பெருமூச்சு விட்டனர்.

இத்தனை வருடங்களாக கட்டிக்காத்து வந்த பிரதேசங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டிக் காக்க வேண்டும். தமிழினத்தின் விடிவுக்கு ஒற்றுமை தான் பலம் கொடுக்கும் என்றும், இனத்தின் விடுதலைக்காக பாடுபடும் பலரும் தமக்குள் பேசிக்கொண்டதையும் அவதானிக்கக் கூடியதாயிருந்தது.

வன்னி சென்றனர்

இதேவேளை மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரமேஷ் அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன், தளபதி ராம், உட்பட அரசியல் துறையை சேர்ந்த உறுப்பினர்கள் சிலரும் வன்னி சென்றுள்ளதாக தெரியவருகிறது

நன்றி - வீரகேசரி

தாத்தா சின்னதா உள்ளதை ஊதிப் பெரிப்பிக்கிறதில உந்த ஊடகங்களை விட்டா ஆருக்கு இருக்கு அந்தச் சக்தி...அதுவும் இலங்கை இந்திய சில மேற்குலக ஊடகங்கள்....!

பிளவு என்பது பொய்....அதில் எந்த முரண்பாடும் இல்லை...ஆனால் சிறிய கருத்துக்குழப்பம் நிலவுகிறது...அது எங்கும் வழமையானதே...அது விரைவில் தீர்க்கப்பட்டுவிடும் என்றுதான் செய்திகள் சொல்கின்றன...! இதையே சாட்டா வைச்சு புலி எதிர்ப்பு சக்திகள் சின்னப் பிரச்சனைக்குப் பெரிய உருவம் கொடுக்க முனைகின்றன....!

ஒன்று மட்டும் உண்மை புலிகள் பலவீனமானால் அது தமிழ் மக்களாகிய எமக்குத்தான் நட்டம்.....! அங்கு வடக்கும் கிழக்கும் மலையமும் கொழும்பும் என்று எந்த வேறுபாடும் எழ முடியாது என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்வது அவசியம்....!

:twisted: :idea: :!:

  • தொடங்கியவர்

புலிகளுடன் பேசுவோம் என்பதில் மாற்றமில்லை மங்கள சமரவீர

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவின் விடயம் இயக்கத்திற்குள் ஏற்பட்ட உள்ளக விடயம். இது குறித்து நாம் கருத்து கூறவில்லை. அது தொடர்பான விபரங்களை சேகரித்து வருகின்றோம். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண புலிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும். அது தொடர்பாக முன்னணியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று காலை நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் சுதந்திர கட்சி பேச்சாளர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கொழும்பு தாஜ் சமுத்திராஹோட்டலில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கிழக்கு மாகாணத்தில் புலிகள் இயக்கத்திற்குள் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

santhi.jpg

சலீம் நானா: உங்களை அதிரவைத்த சேதி ஒன்று சொல்லுங்கோ?

பறுவதம் பாட்டி: கட்டையிலே போகிற வயது எனக்கு. என்னை எதுவும் பாதிக்காது. ஆனால் கந்தர் அம்மான்தான் ரேடியோ செய்தியை கேட்டு அதிர்ந்து போனார். ஆறு ஆயிரம் போராளிகளுடன் கருணாஅம்மான் தனி வழி போகத் தீர்மானித்து விட்டார். வன்னியிலுள்ளவர்கள் சகல சம்பத்துகளையும் அம்பாளித்துக் கொண்டு மேலும் ஆயிரம் போராளிகளை அனுப்பு என்று கேட்கிறார்கள். அதற்கு இணங்க மறுத்தே கருணா அம்மான் தனி வழிபோகத் தீர்மானித்திருக்கிறார் என்பதே அந்த செய்தி.

சலீம் நானா: நெருப்பு இல்லாமல் புகையாதே ஏதோ நடந்திருக்கிறது. பொட்டு அம்மான் ஆட்கள்தான் யூ.என்.பி. வேட்பாளரையும் ஈ.பி.டி.பி. ஆதரவாளர்களையும் கொன்றிருக்கிறார்கள் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

பண்டா ஐயா: இந்த கொலைகள் ரி.என்.ஏ.யின் வெற்றியை கிழக்கில் பாதிக்கும் தானே! கிழக்கு புலிகளுக்கு இந்தக் கொலைகள் வீண் அவப் பெயரை தந்திருக்கும் தானே!

சலீம் நானா: இந்த அவப்பெயரை துடைக்க இப்படி ஒரு செய்தி நாடகம் ஆடப்பட்டிருக்கிறது என்பது தான் என் கணிப்பு.

பறுவதம்பாட்டி: பிரதேச வாதம் தேர்தல் காலங்களில் சக்கை போடு போடும் இதனை உள் நோக்கத்தோடு சிலர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பறுவதம் பாட்டி: உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சேதி எது?

சலீம் நானா: புதன் இரவு எம்பிலிப்பிட்டியாவில் நடந்த சுதந்திர முன்னணியின் கூட்டத்தில் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ஸ பேச எழுந்த பொழுது அங்கு திரண்டிருந்த மகாஜனங்கள் எதிர்காலப் பிரதமருக்கு ஜெயவேவா என்று கோஷித்து கரகோஷம் செய்திருக்கிறார்கள்.

இதனை கேட்டு நான் புல்லரித்துப் போனேன்.

பண்டா ஐயா: இந்தக் கூட்டத்தில் ஜே.வி.பி. யின் பிரதம தோழர் சோமவன்ஸ அமரசிங்கா பேசும்வரை காத்திருந்து விட்டு அவர் போனபின்னர்தான் ஜனாதிபதி கூட்டத்துக்கு வந்திருந்தார். அதாவது ஐந்து மணி நேரம் கழித்துத்தான் வந்திருந்தார்.. இது உங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்றல்லவா நான் நினைத்தேன்.

சலீம் நானா: இது பச்சைக்கார ஊடகங்களின் சரடு. வேறு ஜோலி இருந்ததாலேயே தலைவி தாமதித்து வர நேர்ந்தது.

பறுவதம் பாட்டி: ஜே.வி.பி. தோழர் என்ன பேசினார்?

பண்டா ஐயா: கடன் வாங்குவதற்காக உலக வங்கியும் ஐ.எம்.எப். நிறுவனமும் போடும் கண்டிஷன்களுக்கு நாங்கள் தாளம் போடத்தேவைஇல்லை. உலகில் வேறு நிதி நிறுவனங்கள் உள்ளன. குறைந்த வட்டிக்கு இவை எங்களுக்கு கடன் தரத் தயாராக இருக்கின்றன.

பறுவதம்பாட்டி: வடகிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று சொல்லும் அமெரிக்கா முதலில் வடகிழக்கில் ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும். அமெரிக்காவுக்கு விடுக்கும் கோரிக்கை இதுதான் என்று தோழர் பேசியிருக்கிறார்.

சலீம் நானா: இங்கு பேசிய உங்கள் தலைவி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற சகலரும் உதவ வேண்டும். வன் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். ஊழல் மோசடிகளற்ற அரசை நிறுவுவேன் என்றும் சபதம் செய்திருக்கிறார்.

பண்டா ஐயா: லங்கா ஒறிக்ஸ் ஆராய்ச்சி நிறுவனமொன்று தேர்தல் பிரசாரங்களை நோட்டமிட்டு இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்று கணிப்பீடு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

சலீம் நானா: உங்கள் கட்சிதான் மீண்டும் ஆட்சிபீடம் ஏறும். என்று சொல்லியிருக்கும். அதுதான் இங்கே சொல்லுகிறீர்.

சலீம் நானா: நானும் அதனை படித்தேன். தமிழ் கூட்டமைப்புடன் சேர்ந்தால்தான் இவர்கள் மீண்டும் ஆட்சிபீடம் ஏற முடியும் என்று தான் கணிப்பீடு சொல்லியிருக்கிறது.

இவர்களின் கணிப்பீட்டின்படி சுதந்திர முன்னணிக்கு பேரியல் ஆட்களையும் சேர்த்து 105 ஆசனங்கள் கிடைக்கும் முன்னணியின் ஆதரவுக் கட்சியான ஈ.பி.டி.பி.க்கு ஒன்று கிடைக்கும் எனவே மொத்தம் 105 சீட்.

ஐக்கிய தேசிய முன்னணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் இ.தொ.கா. வையும் சேர்த்து 98 ஆசனங்கள் கிடைக்கும் என்று தான் கணித்திருக்கிறது.

தமிழர் கூட்டமைப்புக்கு 21 ஆசனங்கள் கிடைக்கும். சமாதானம் முன்னெடுக்கப்படுவதை விரும்புபவர்களான இவர்கள் ஐ.தே.மு. உடன் சேர்ந்து 119 எம்.பி.களோடு ஆட்சிபீடம் ஏறுவார்கள் என்கிறது இந்த லங்கா ஒறிக்ஸ்.

பறுவதம் பாட்டி: தனிக்கட்சி என்று பார்க்கும் பொழுது சுதந்திர முன்னணிக்கு 105 ஆசனங்கள் இருப்பதால் ஜனாதிபதி முதலில் ஆட்சியை அமைக்குமாறு சுதந்திர முன்னணியைத்தான் அழைப்பார். அவர்கள் ஆட்சியை அமைக்க ஓ.கே. தெரிவித்துவிட்டு ஆறுமுகனுடனும் ஹக்கீமுடனும் பேரம் பேசுவார்கள். கூடவே ஐ.தே.மு. விலிருந்து சிலரை விலைக்கு வாங்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். எனவே தேர்தல் முடிந்தாலும் புதிய ஆட்சியை அமைப்பதிலும் சிக்கல் தோன்றும் போகிற போக்கைப் பார்த்தால் எல்லாம் சிக்கலாகத்தான் இருக்கப்போகிறது.

ஆட்சியமைக்க தமிழர் கூட்டமைப்பின் ஆதரவை ரணில் கோரினால் புலிகள் கண்டிசன்கள் போடுவார்கள் இதுவும் சிக்கல் தான்

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

அதிகாரப் பரவலாக்கல் கிடைக்கவே கிடையாது! ஜே.வி.பி. தலைவர் திட்டவட்டமாக அறிவிப்பு

அதிகாரப் பரவலாக்கல் கிடையவே கிடையாது என்று ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறார். அதிகாரப் பரவ லாக்கல் குறித்துப் பேசுவதை நிறுத்துமாறும் அவர் கோரியிருக்கிறார். அதி காரப் பரவலாக்கல் குறித்து ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பேசிவருகை யிலேயே சோமவன்ஸ அமரசிங்க அதிகாரப் பரவலாக்கலை நிராகரித்திருக் கிறார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் "பிஸ்னஸ் டுடே" என்னும் மாத சஞ்சி கைக்கு வழங்கியிருக்கும் செவ்வியிலேயே ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க இவற்றைத் தெரி வித்திருக்கின்றார்.

தேசியப் பிரச்சினையைப் பொறுத் தவரை அதிகாரப் பரவலாக்கல், பிரிவினை அல்லது அதிகாரப் பங்கீடு அல்லது ஏனைய திட்டங்கள் குறித்து மக்கள் பேசுகின்றனர். ஆயினும், அனைவரும் அதிகாரப் பகிர்வின் கைதி களாகியுள்ளனர். தயவுசெய்து அதி காரப் பகிர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துங்கள் என்றே நாம் கூறுகின் றோம் என்று அவர் செவ்வியில் கூறி யிருக்கிறார்.

பிரபல பத்திரிகையாளரான லுசியான் ராஜகருணாநாயக்க அச்சஞ்சிகைக்காக ஜே.வி.பி. தலைவரைச் செவ்வி கண்டிருக்கிறார்.

செவ்வியில் அதிகாரப் பரவலாக் கல் தொடர்பாக ஜே.வி.பி. தலைவரிடம் எழுப்பப்பட்ட வினாக்களும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

லுசியான் ராஜகருணாநாயக்க:- அதி காரப் பரவலாக்கல் என்னும் சொல் ஜே.வி.பியின் பிரச்சினைகளை ஏற் படுத்தியிருப்பதை நான் அறிவேன். ஆயினும், அதிகாரப் பரவலாக்கலின் பெறுபேறாகவே பல மாகாண சபை களில் ஜே.வி.பி. இடம்பெற்றிருக்கி றது. 13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்துக்கு மேலும் பலமளிப்பது அல்லது அதனை அமுல்படுத்துவது தொடர்பாக நீங்கள் ஏன் சிந்திக்கக் கூடாது? தீர்வின் ஓர் அம்சமாக அது இருக்காதா?

சோமவன்ஸ அமரசிங்க:- 13ஆவது அரசமைப்புச் சட்டதிருத்தத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் நாங்களும் எதிர்த்தோம் என்பதை மறந்து விடவேண்டாம். விடுதலைப் புலிகளும் அதனை எதிர்த்தார்கள் என்பது மிக வும் முக்கியமான விடயமாகும். அத னால் அது ஒரு நல்ல தீர்வாக இருக் காது என்று நாம் தீர்மானித்தோம். அதுதொடர்பாக நாம் எமது சுதந்திர மான கொள்கையைக் கொண்டிருக்கி றோம். இது ஒரு சிக்கலாகப்போகி றது. ஏனெனில், புலிகளுக்கு என்ன தேவை என்பது தொடர்பாக, பிரிவினை தொடர்பாக நாம் முதலாவது நடவடிக்கையை எடுத்திருக்கின்றோம். 13 ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் யோசனையை வழங்கியிருக்கிறது. இம்மண்ணில் அது நிலைபெற்றிருக் கிறது. அதனாலேயே நாம் எதிர்க்கி றோம்.

லுசியான் ராஜகருணாநாயக்க:- ஆனால், இந்தியா அதில் முக்கிபங்கு வகிக்கவில்லையா?

சோமவன்ஸ அமரசிங்க:- ஆம், அது வெற்றிபெறும்; அதுசெயற்படும் என்று இந்தியா கூட நினைத்தது. கடந்த காலங்களில் இந்தியா ஏராள மான தவறுகளைச் செய்திருக்கிறது. ஆரம்ப காலத்திலேயே விடுதலைப் புலிகளை இந்தியா வளர்த்தது. அது மிகப்பெரிய தவறாகும். இந்தியா விலேயே பிரிவினைவாதம் ஒரு பிரச்சினையாக இருக்கையில் இலங்கையில் பிரிவினைவாத அமைப்பு ஒன்றுக்கு அவர்கள் உதவினார்கள், ஒத்துழைத்தார்கள். இதனால், இந்தியாவில் ஏற்படக்கூடிய எதிர் விளைவுகள் குறித்து அவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். இப்பொழுதாவது இந்த சிறையிலிருந்து நாம் வெளிவரவேண்டும். அதிகாரப் பகிர்வு ஒரு சிறை. - இவ்வாறு அவர் செவ்வியில் தெரிவித்திருக்கி றார்.

நன்றி - சூரியன் வெப்தளம்

நன்றி - சூரியன் வெப்தளம் இல்லை உதயன் வெப் தளம்.

  • தொடங்கியவர்

நன்றி - சூரியன் வெப்தளம் இல்லை உதயன் வெப் தளம்.

நான் அந்த செய்தியை எடுத்தது சூரியன் வெப்தளத்தில இருந்து தான்.

http://sooriyan.com/index.php?option=conte...&id=102&Itemid=

  • தொடங்கியவர்

அடுத்த ஐனாதிபதியாகும் எண்ணத்தில் அநுரா பண்டாரநாயக்க

தாம் பதவிக்கு வந்ததும் ஐனாதிபதி ஆட்சிமுறையை முற்றாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு பிரதான கட்சிகளும் கூறிவருகின்ற போதிலும், அடுத்த ஐனாதிபதியாகத் தெரிவாகக்கூடிய தகுதி தனக்கே இருப்பதாக அநுரா பண்டாரநாயக்க பத்திரிகையொன்றிற்குப் பதிலளித்துள்ளார்.

கொழும்பில் வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிகைக்குப் பேட்டியளிக்கும் போது, எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் தமது கூட்டணிக் கட்சியில் போட்டியிடுவதற்கு தனக்கு மட்டுமே தகுதி இருப்பதாகத் தெரிவித்துள்ள அநுரா, இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை, பொதுத் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரின் கருத்துவேற்றுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக அவதானிகள் கருத்துக் கூறியுள்ளார்கள். ஐனாதிபதி ஆட்சியை இல்லாமற்செய்வது, சமாதானத்தைத் தொடருவது, புலிகளுடன் மட்டும் பேசுவது, இடைக்கால நிர்வாக அலகை ஏற்றுக் கொண்டு பேச்சு நடத்துவது, அதிகாரப் பரவலாக்கத்தை கருத்திற் கொள்வது, பிரதமர் கதிரையில் யார் அமர்வது போன்ற ஏராளமான பிரச்சனைகள் இக்கட்சியின் பலராலும் பலவிதமான கருத்துபேதங்களுக்கு மத்தியில் ஊசலாடுவதாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

அடுத்த ஐனாதிபதியாகும் எண்ணத்தில் அநுரா பண்டாரநாயக்க

தாம் பதவிக்கு வந்ததும் ஐனாதிபதி ஆட்சிமுறையை முற்றாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு பிரதான கட்சிகளும் கூறிவருகின்ற போதிலும், அடுத்த ஐனாதிபதியாகத் தெரிவாகக்கூடிய தகுதி தனக்கே இருப்பதாக அநுரா பண்டாரநாயக்க பத்திரிகையொன்றிற்குப் பதிலளித்துள்ளார்.

கொழும்பில் வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிகைக்குப் பேட்டியளிக்கும் போது, எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் தமது கூட்டணிக் கட்சியில் போட்டியிடுவதற்கு தனக்கு மட்டுமே தகுதி இருப்பதாகத் தெரிவித்துள்ள அநுரா, இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை, பொதுத் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரின் கருத்துவேற்றுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக அவதானிகள் கருத்துக் கூறியுள்ளார்கள். ஐனாதிபதி ஆட்சியை இல்லாமற்செய்வது, சமாதானத்தைத் தொடருவது, புலிகளுடன் மட்டும் பேசுவது, இடைக்கால நிர்வாக அலகை ஏற்றுக் கொண்டு பேச்சு நடத்துவது, அதிகாரப் பரவலாக்கத்தை கருத்திற் கொள்வது, பிரதமர் கதிரையில் யார் அமர்வது போன்ற ஏராளமான பிரச்சனைகள் இக்கட்சியின் பலராலும் பலவிதமான கருத்துபேதங்களுக்கு மத்தியில் ஊசலாடுவதாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

நன்றி - புதினம்

ரணில் - சந்திரிகா அதிகாரப்போட்டியே இன்னும் தீரவில்லை. அடுத்த முறையாவது ஜனாதிபதியாகலாம் என்று ரணில் நினைத்துக் கொண்டிருக்கின்றார். அதற்கிடையில் அநுரா வேறு. எல்லாம் அண்ணன் எப்போ எழும்புவான் திண்ணை எப்போ காலியாகும் என்ற மனப்போக்குதான்.அதிகாரபோட்டி

  • தொடங்கியவர்

நான் இந்த செய்துயை எடுத்தது சூரியன் வெப்தளத்தில் இருந்துதான். இதே செய்தியை உதயனிலும் பின்பு பார்த்தேன்.

  • தொடங்கியவர்

Thamils in Mattakalappu Condemn the Activities of Karuna - Thursday, March 04, 2004 at 15:06

Thamil people in Mattakalappu strongly criticise the act of LTTE's Mattakalapu leadership which leads the cadres under their command deviated from the Vanni leadership.

Since the Mattakalapu leadership of LTTE fails to obey the command of Vanni leadership, 63 in-charge persons from Mattakalapu left the Mattakalapu leadership, went to Vanni and joined with the Vanni leadership.

Mattakalappu-Amparai special commander Mr.Ramesh, Mattakalapu-Amparai Political wing in-charge Mr.Cowsalyan, Military wing commander Mr. Ram, Administration in-charge Mr. Piraba and some other key leaders of the Mattakalapu District left Mattakalapu leadership and showed their loyalty to the National leadership.

It is also learnt that lots of cadres form the East are fleeing to Vanni through jungles in-order to join with the Vanni leadership. Senior cadres of the LTTE Jeyanthan Battalion are said to be vacated three camps and fled to Vanni last night.

நன்றி - ஈழம் நேசன் http://english.eelamnation.com/news_item.a....asp?NewsID=554

  • தொடங்கியவர்

Balakumar to Visit Mattakalapu - Thursday, March 04, 2004 at 15:07

Mr. Balakumar and two other senior officials from LTTE are expected to visit Mattakalapu very soon.

In order to settle the dispute between the leadership of Mattakalapu and Vanni, Mr. Balakumar may carry out a very strong negotiating mechanism very soon, reliable sources said.

நன்றி - ஈழம் நேசன் http://english.eelamnation.com/news_item.a....asp?NewsID=555

.....எல்லாம் சரி ஆனால் கருணாஅம்மான் ஏன் என்னம் வாய்துறக்கவில்லை....

:shock: :roll: :oops: :) :!: :?:

  • தொடங்கியவர்

Sri Lankan Tamil Tigers in crisis

_39920725_tamils_ap_203body.jpg

The rift could cast a shadow over peace moves

Tamil Tiger rebels in Sri Lanka are facing a major crisis after one of their leaders split to form his own breakaway group.

Rebel sources confirmed that Colonel Karuna, a commander in the east, had broken ranks after facing the threat of disciplinary action.

The Tigers' leadership earlier admitted there was a crisis in the movement, but insisted it was only temporary.

The BBC's Frances Harrison in Colombo says the rift is unprecedented.

Independence move

It is not yet clear why Colonel Karuna, a Tiger commander in the east, has split away.

He was thought to be unhappy that the bulk of the rebel fighters come from the east and yet all the top leadership comes from the north of Sri Lanka.

He told the Associated Press that he had asked the government to negotiate a separate ceasefire agreement for areas under his faction's control.

"We think it's very important to have a separate defence pact with the security forces," Colonel Karuna told AP at his jungle hide-out in Batticaloa.

Our correspondent says this is a virtual declaration of independence from the rebel leader, Velupillai Prabhakaran, a man who was brooked no dissent in the past.

Few could have predicted the crisis, she says, in a disciplined and secretive guerrilla movement like the Tigers.

Colonel Karuna was part of the Tamil Tiger team taking part in peace talks.

Rival groups

His move could complicate peace moves, putting the Norwegian mediators and the Sri Lankan government in a difficult position.

If they negotiate with Colonel Karuna, they will incur the wrath of the northern leadership, our correspondent says.

Rebel sources say it is not clear yet whether some of the thousands of men and women under his command will join him in splitting from the main Tigers group.

That would seriously complicate the peace process by dividing the rebel movement into two rival groups in the north and east of Sri Lanka.

It is not clear why such grievances should surface now, just as the country is gearing up for general elections next month.

Election issue

A pro-rebel website, Tamilnet, earlier quoted the head of the Tigers' political wing, saying the crisis was only temporary and would be resolved soon.

The reports of a rift in the Tigers' leadership prompted Sri Lankan Prime Minister Ranil Wickramasinghe to hold an emergency meeting with officials and diplomats on Wednesday.

And the head of the Norwegian-led Sri Lankan Monitoring Mission, Trond Furuhovde, flew to the north for a crisis meeting with the Tiger leadership on Thursday.

"They had a good constructive meeting," SLMM peace monitor spokeswoman Agnes Bragadottir said.

The peace process is in a state of limbo at present with the prime minister and President Chandrika Kumaratunga divided on the best way of bringing an end to a conflict that has killed more than 60,000 people.

The debate over the peace process is expected to be one of the main issues in the forthcoming parliamentary elections.

Last Updated: Thursday, 4 March, 2004, 20:51 GMT

http://news.bbc.co.uk/2/hi/south_asia/3532481.stm

Sri Lanka rebels seek truce

From correspondents in Batticaloa

March 5, 2004

THE breakaway group of Sri Lanka's Tamil Tiger rebels has asked the government to negotiate a separate truce, the dissident faction's leader said today.

"We think it's very important to have a separate defence pact with the security forces," head of the breakaway group Vinayagamoorthi Muralitharan said at his hide-out in Thoppigala jungle in Batticaloa, 220km east of Colombo.

Muralitharan, also known as Karuna, said his faction had approached the government about negotiating a separate truce in areas controlled by the group.

Muralitharan yesterday said that his group is breaking away from the main rebel faction headed by Velupillai Prabhakaran who runs affairs from the Wanni region of the island's north.

Prabhakaran signed a ceasefire agreement with the Sri Lankan Prime Minister Ranil Wickremesinghe in February 2002 to end a 19-year-old civil war.

http://www.news.com.au/common/story_page/0...55E1702,00.html

If Prabha attacks we will retaliate!

-Former Eastern Tiger leader warns

[04th March 2004]

Karuna, the former eastern military leader of Tamil Tigers has warned his former chief that he will retaliate if he was attacked. He has made this comment when a correspondent of a media institution interviewed him in one of his eastern hideouts.

Karuna has split from the control of Tiger leader owing to the heated political situation following the killing of eastern candidates who contest for the forthcoming election. These assassinations are alleged conducted by Tiger intelligence cadres personally commanded by Pottuamman. Since he as eastern military leader of Tigers was pointed as responsible for these cold blood killings Karuna has decided deviate from Tiger command and to operate on his own.

Answering the media correspondent of his future relationship with Tamil Tiger leader Prabhakarana Karuna has said that he will never interfere with Prabhakaran and his operation will be independent. “If he (the Tiger leader) attempts to interfere with our affairs in the east, that won’t be tolerated. If he attacks we will retaliate” Karuna has insisted.

He has written to Norway that he was resigning from the organization as the responsibility of the murders in the East are put on their account and all the foreign tours and other activities of the organization are being given to a selected few of the organization. As such he has said that he no longer represents Velupillai Prabhakarans view but would operate as a separate unit in the East. This situation would weaken the authority the tiger organization had in the East. Attempts made by SLMM officials to meet Karuna have not been successful.

http://www.lankatruth.com/full_story_page/..._04032004_1.htm

:cry:

:cry:
முட்டாக்குப் போட்டுக்கொண்டு வந்தால் தெரியாது எண்ட நினைப்பு இவருக்கு..

:) :P :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.