Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க தேர்தல் - அதிபர் விவாதம் -2

Featured Replies

நாளை அதிபர் ஒபாமாவுக்கும், முன்னைய மாநில ஆளுனர் ரோமினியுக்குமிடை யில் அதிபர் போட்டிக்கான இரண்டாவது விவாதம் நடைபெற இருக்கிறது.

ஒபாமா, குடியரசுகட்சியின் மாநிலங்களையும் வட கரொலினாவையும் தவிர எல்லா ஜனநாயகட்சி மாநிலங்களையும், கட்சி சரா மாநிலங்களையும் வெல்லுவார் என்று எதிர் பார்த்துக்கொண்டிருந்த நேரம் முதலாவது விவாதம் நடை பெற்றது. விவாதத்தில் ஒபாமா பாரிய தோல்வியை சந்தித்து தேர்தல் கருத்து கணிப்புகளில் விரைவாக சரிவை சந்திக்க தொடங்கினார். இனி கீழே சென்றால் அவரால் வெல்ல முடியாது என்ற நிலை வந்தபின் மேலதிக சரிவு நின்றுவிட்டது அல்லது சில மிக மெல்லிய ஏற்றம் காணப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது விவாதம் வருகிறது. இந்த விவாதம் திரும்ப சரிவை கொண்டு வந்தால் தேர்தலில் வெல்வது ஒபாமாவுக்கு முடியாமல் போய்விடும்.

விவாதம் நளைக்கு, கிழக்கு நேரப்படி இரவு 9 மணிக்கு, நியூயோர்க், லோங் ஐலண்ட் லிருக்கும் கொஃப்ஸ்ரா பல்கலை கழகத்தில் நடை பேறும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

இன்றைய விவாதத்தில் எந்தப்பக்கமும் பெரிய சாதனையை நிலை நாட்டவில்லை. போன விவாத கருத்துகளே திரும்பவும் விவாதிக்க பட்டது. மத்திய வகுப்பு தொழில் இல்லாமல் தவிக்கிறது. யாரால் தொழில்களை உண்டாக முடியும் என்பதுதான் பிரதான விவாதம். கேள்விகள் எதுவாக இருந்தாலும் பதில் இந்த விடயத்தில் திரும்பத்திரும்ப வந்து நின்றது.

ரோமினி பெங்காசியில் அமெரிக்க தூதுவர் கொல்லப்பட்டதை தேர்தலுக்கு உபயோகப்படுத்தினார். இதை சிலர் விரும்பவில்லை. இன்றைய விவாதத்தில் அது அவருக்கு எதிராக திரும்பிவிட்டது. இது உப அதிபர் விவாதத்திலும் ரையனுக்கு சரிவை கொடுத்தது. இதை குடியரசு கட்சியினர் அல்ல விவாதத்தில் கொண்டுவருகிறார்கள். கேள்வியை கேட்பவர்கள்தான் கொண்டுவருகிறார்கள். ரோமினி முதல் விவாதத்தில் அதிக கடுமையாக நடந்து கொள்வது நன்றாக அமைவது கண்டு, பெங்காசி கொலை விவரங்களை ராஜாங்க அமைச்சு அறிய முதலே அதை அரசியலுக்குள் இழுத்துவிட்டார். கடந்த இரண்டு விவாதங்களிலும் அது குடியரசு கட்சிக்கு தீங்காக அமைந்துவிட்டது.

விவாதத்தில் வெற்றியீட்டவில்லையானால் அது ரோமினி மீது திரும்பவும் பழைய நம்பிக்கையீனங்கள் மேலெழ வசதி உண்டாகும். எனவே இன்றைய நாள் ரோமினிக்கு இழப்பு என்றுதான் கொள்ள வேண்டும். விவாதத்தில் தோல்வியை தழுவாத வரைக்கும் ஒபாமாவின் மதிப்பு தொடர்ந்து உயர வழி இருக்கு. எனவே இன்றைய நாளை ஒபாமாவுக்கு நன்மையான நாளாகத்தான் கொள்ள வேண்டும்.

ஒபாமா, ரோமினி நம்பத்தகாதவர் என்பதை வலியுறுத்தினார். அதை வாக்காளர்கள் நம்பியிருந்தார்களானல் கருத்து கணிப்புகளில் ரோமினி திரும்ப கீழே போவார். இதை செய்வது ஒபாமாவுக்கு நூல் கயிற்றில் நடப்பது போன்றது. கரணம் தப்பினால் மரணம். ஆனால் போன விவாதம் அவரை இந்த பாதைக்கு செல்ல வைத்தது. வாக்காளர்கள் இதை விரும்பினார்களா என்பது சிலநாட்களுக்குள் தெரிய வரும்.

Edited by மல்லையூரான்

[size=5]அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதம் ஒபாமா வெற்றி[/size]

[size=4]நேற்றிரவு நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கச்சிதமாகப் பேசி மிற் றொம்னியை வெற்றி பெற்றுள்ளார்.[/size]

[size=4]46 வீதமானவர்கள் ஒபாமா வெற்றி பெற்றதாகவும் 39 வீதமானவர்கள் மிற் றொம்னி வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தனர்.[/size]

[size=4]அதேவேளை பொருளாதாரம் தொடர்பான கருத்துக்களை முன் வைக்கும்போது ஒபாமா 58 வீதம் வெற்றியையும், மிற் றொம்னி 40 வீதம் வெற்றியையும் பெற்றிருந்ததாக சி.என்.என் கருத்து தெரிவிக்கிறது.[/size]

[size=4]முதலாவது விவாதத்தில் மிற் றொம்னி வெற்றி பெற்றதாக 67 வீதமும் ஒபாமா வென்றதாக 25 வீதமும் கூறியிருந்தது.[/size]

[size=4]மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த விவாதம் பராக் ஒபாமாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் முக்கிய விவாதம் என்பது கவனிக்கத்தக்கது.[/size]

[size=4]அதேவேளை இரண்டு வெள்ளையர்கள் போட்டியிட்டால் ஊடகங்கள் உண்மையான வெற்றியை நேர்மையாக அறிவிக்க முடியும், ஆனால் கறுப்பரும் – வெள்ளையரும் மோதுவதால் நிறவாத சிக்கல்கள் உருவாகாமல் கச்சிதமாக செயற்பட வேண்டிய நெருக்குவாரம் ஊடகங்களுக்கு இருக்கிறது.[/size]

[size=4]ஆகவேதான் ஒரு தடவை பந்தை மிற் றொம்னி பக்கமாகவும், மறு தடவை பராக் ஒபாமா பக்கமாகவும் தட்டி வருகின்றனர்.[/size]

[size=4]அதே நேரம் விவாதத்தின் நடுவராக பணியாற்றியவர் றொம்னி பேசும்போது அவரை பல தடவைகள் நிறுத்தி கருத்தை நிறைவு செய்ய முடியாதவாறு செய்தார் அதேவேளை பராக் ஒபாமாவுக்கு அவர் அத்தகைய அணுகுமுறையை செய்யவில்லை இது ஒருவகையான பக்கச் சார்ப்பு நிலைப்பாடு என்கிறார் கோப்பன்கேகன் பல்கலைக்கழக விரிவுரையாளர் மெற்ற நூக கிளவுஸ் கொய்.[/size]

[size=4]இந்த விவாதத்தில் பங்கேற்ற மிற் றொம்னி சிறப்பாக வாதாடினார் ஆனால் சில இடங்களில் அவர் நிலை தடுமாறியதாக நோக்கர்கள் தெரிவித்தனர்.[/size]

[size=4]அதேநேரம் லிபியாவில் அமெரிக்க கொன்சலேற் தர தூதுவர் கொல்லப்பட்டபோது ஒபாமா என்ன சொன்னார் என்ற விடயத்தை றொம்னி மேசையில் போட்டு அவரை தடுமாற வைத்தார்.[/size]

[size=4]அந்தப் படுகொலை விவகாரத்தில் ஒபாமா கொலைஞர்களை பிடிக்க அமெரிக்கா தயாராகிவிட்டது என்று கூறினார், ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்பில் உள்ள ஓட்டைக்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை.[/size]

[size=4]நேற்று கிளரி கிளின்டன் அந்தக் கொலைக்குரிய தவறுக்கு தான் பொறுப்பெடுப்பதாகக் கூறிய பின்னர், றொம்னி கருத்தை மாற்றி ஒபாமா என்ன சொன்னார் என்ற கோணத்தில் விவாதித்தார்.[/size]

[size=4]இரண்டு தடவைகள் அவர் பராக் ஒபாமாவை அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று கூறியது அவரது விவாதத்தரத்தை வீழ்த்தியது, காரணம் வெற்றியை தீர்மானிப்பது மக்கள் மிற் றொம்னி அல்ல.[/size]

[size=4]அமெரிக்க அதிபர் தேர்தலில் நடைபெற்ற விவாதங்களில் இது முக்கியமான விவாதம் என்றும், இதுபோல சூடு பறந்த விவாதங்களை முன்னைய தேர்தல்களில் காணவில்லை என்றும் டேனிஸ் ஆய்வாளர் சலோற்றா கார்டர் கூறுகிறார்.[/size]

[size=4]மேலும் அவர் கூறும்போது இன்றைய விவாதம் ஒபாமாவுக்கு தேர்தல் வெற்றியை தருவதற்கு போதுமானதாக உள்ளது என்றும் கூறினார்.[/size]

[size=4]கடுமையாக முயற்சியெடுத்து, ஒபாமா இந்த வெற்றியை பெற்றுள்ளார் என்று ராய்டர் செய்தித்தாபனம் ஒபாமாவின் நேற்றைய வாதத்திறனை பாராட்டியுள்ளது.[/size]

[size=4]அதே நேரம் பொக்ஸ் நியூஸ் நிருபர் விவாதம் வெற்றி தோல்வியின்றி முடிந்ததாகக் கூறியுள்ளார்.[/size]

[size=4]தேர்தலுக்கு முன்னர் இன்னொரு விவாதம் நடைபெறவுள்ளது, அதிலும் வெற்றிபெற வேண்டிய நிலை உள்ளது.[/size]

[size=4]அடுத்து வரும் 20 தினங்கள் 24 மணி நேரமும் பாடுபட்டால்தான் அடுத்த நான்கு வருடங்கள் பராக் ஒபாமா அதிபராக வலம் வரலாம்.[/size]

http://www.alaikal.com/news/?p=115223

  • தொடங்கியவர்

[size=4]அதேவேளை இரண்டு வெள்ளையர்கள் போட்டியிட்டால் ஊடகங்கள் உண்மையான வெற்றியை நேர்மையாக அறிவிக்க முடியும், ஆனால் கறுப்பரும் – வெள்ளையரும் மோதுவதால் நிறவாத சிக்கல்கள் உருவாகாமல் கச்சிதமாக செயற்பட வேண்டிய நெருக்குவாரம் ஊடகங்களுக்கு இருக்கிறது.[/size]

[size=4]ஆகவேதான் ஒரு தடவை பந்தை மிற் றொம்னி பக்கமாகவும், மறு தடவை பராக் ஒபாமா பக்கமாகவும் தட்டி வருகின்றனர்.[/size]

அலைகள் தங்களின் ஆசிரியர்கள் விவாதத்தை பார்க்காமல் கருத்து எழுதுவது போல் எழுதியிருப்பது அவர்களுக்கு அவமானம். நிச்சயமாக போன விவாத்ததில் ஓபாமா தோற்றார். இந்த விவாத்தில் சில இடங்களில் ரோமினி தடுமாறினார். முதல் கேள்வியிலேயே ரோமினி மட்டுறுத்தினரின் கருத்துக்கு செவி சாய்க்காமல் தனக்கு அளிக்க பட்ட நேரத்திற்கு மேலே சென்றார். இது பின்னர் தேவைப்படும் போது ஒபாமாவும் தனது கருத்துக்களை முடிக்க தேவையான நேரத்தை கொடுக்க வேண்டிய நிலையில் மட்டுறுத்தினரை போட்டது.

  • தொடங்கியவர்

நேற்று முடிவடைந்த விவாதத்தில் யார் வென்றது, யார் தோற்றது என்ற விவாதம் இன்னும் ஓரிரு நாட்களுக்கு தொடரப்போவதாக இருக்க, இரண்டு வேட்பாளருமே யாரின் கவனத்தை வெல்ல இந்த விவாதத்திற்கு போனார்களில் அதை வெல்வதில் இருவருமே தோற்றுவிட்டார்கள் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். நேற்று 80 கேள்விகளுக்கு மேலாக தயார் படுத்த பட்டிருந்தது. அங்கு வந்திருந்தவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்க முடியாமல் திண்டாடுவோரே.

தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் குழுமியிருந்தோருக்கும் அங்கே போயிருந்தவர்களும் இந்த விவாதத்தால் தாம் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவு எந்த விதத்திலும் இலகுவாக்கப்படவில்லை என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்து. அதாவது இருவரில் ஒருவரும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை தரவில்லை என்பதுதான் முடிவெடுக்காத வாக்காளரின் கருத்துகள். ஒருவேளை இவர்கள் எதை கேட்டும் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை அடைய முடியாதவர்களோ தெரியாது. ஆனால் நேற்றைய இரவு இவர்களை ஒபாமா பக்கமோ அல்லது ரோமினே பக்கமோ தம்வசம் இழுக்கவில்லை.

Townhall கூட்டம் போன்ற விவாத அமைப்பு, பல்கலை கழக கேட்போர் மண்டபம், ஒபாமா பக்கம் சரிந்த மட்டிறுத்தினர், கேள்விகள் கேட்போர் மாணவர்களும், ஆசிரியர்களும் (கேள்விகளை ஒபாமாவுக்காக தாயாரித்திருந்தனர்) ஒபாமாவுக்கு விவாதத்தை இலகுவாக்கியிருந்தது. வர இருக்கும் விவாதம் வெளிநாட்டு கொள்கையில் இருப்பதால் அதையும் ரோமினியால் வெல்ல முடியாது என்பது தான் இப்போதைய அபிப்பிராயம்.

HEMPSTEAD, NY -- If former Massachusetts Gov. Mitt Romney controlled the terms of the debate two weeks ago in Denver, the opposite was true here last night. It was President Obama on offense for much of the night, and it was Romney playing defense. The overall outcome at Hofstra University wasn't as one-sided or decisive as it was two weeks ago. Indeed, the GOP presidential nominee was strong on the economy and litigating Obama's four years in office, and he brought plenty of energy. But just like we saw in Denver, the body language told the real story: You had Republicans, not Democrats, complaining about the moderator; there was the Romney campaign saying afterward, “What we really meant to say was XYZ”; and you saw Obama lingering with the crowd after the debate (when it was Romney who did that two weeks ago). Also, unlike Obama’s performance in Denver, there were some uncomfortable moments for Romney (the exchange on Libya, “binders full of women,” Obama’s my-pension-isn’t-as-big-as-yours line) that have the potential to be problematic for his campaign over the next couple of days.

*** Issue terrain matters: If we learned anything last night, as well as in Denver, it’s that the issue terrain matters. While the first two questions last night -- on a young college student’s job prospects and on gas prices -- were right up Romney’s alley, many more of the following questions were tailor-made for Obama. Pay equality for women. Immigration. George W. Bush. And Obama used those questions, which didn’t surface two weeks ago, to draw his sharpest contrasts with Romney. In fact, a good chunk of the debate was an exercise in micro-targeting, particularly for the president. You saw both Obama and Romney making their pitches to female voters and Latinos, who happen to be two of the most important demographic groups in this election. Yesterday, we wrote that the town-hall debate was an opportunity for Romney to make more inroads with female voters, especially those in the suburbs. Our question: Did a debate that shined a spotlight on the Lilly Ledbetter Act, abortion, and contraception end up helping Romney with women?

*** Libya rattles Romney: Perhaps the sharpest exchange of the night was over Libya, a topic that has dogged the Obama administration over the past few weeks. Obama said, “The day after the attack, governor, I stood in the Rose Garden and I told the American people and the world that we are going to find out exactly what happened, that this was an act of terror.” Romney later interjected, “I want to make sure we get that for the record, because it took the president 14 days before he called the attack in Benghazi an act of terror.” Obama fired back, “Get the transcript.” Well, here is the transcript -- and here’s what Obama said in that Rose Garden speech: “No acts of terror will ever shake the resolve of this great nation, alter that character, or eclipse the light of the values that we stand for.” Now Romney would have been on safer ground if he charged that Obama didn’t call it a coordinated terrorist attack by al Qaeda-affiliated elements, and the Romney spinners after the debate made that point. But Romney used a different term -- “act of terror” -- and Obama DID SAY that. And afterward, Romney appeared rattled after he allowed himself to get caught up on the losing end of a semantic argument. Romney was not the same candidate after that moment.

http://firstread.nbc...ights-back?lite

Edited by மல்லையூரான்

[size=4]ஒபாமா வைத்தியம் பாட்டி வைத்தியம் தான். மிஞ்சிப்போனால் சுக்கு மிளகு திப்பில் சேதமாகும். ராம்னி வைத்தியம் அதிரடி ஆப்பரேஷன். அநேகமாக பேஷண்ட் அவுட்டாகி விடலாம். ஆனால் ’ஆப்பரேஷன் சக்ஸஸ்’ என்று அவர் கூரை மீதேறிக் கூவுவார். இதுதான் யதார்த்தம்.

கடோசிகடைசியாக ‘அந்த 47 பாயிண்ட்கள்’ பிரம்மாஸ்திரத்தை ஒபாமா வீசியது அவரிடம் இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனம் இருப்பதை நிரூபித்தது. “When Romeny is talking about the 47%, who do you think he is referring to?" என்று ஆடியன்ஸைக் கேட்ட கேள்வி மரண அடி.

அடுத்த டிபேட் 3 க்கு ஆடியன்ஸ் கவச குண்டல ரத கஜ துரக பதாதிகளுடன் வருவது நல்லது.[/size]

[size=4]http://losangelesram.blogspot.ca/2012/10/2012-2.html

எது எப்படியோ, நவம்பர் எலெக்‌ஷனில் ரத்தம் தெறிக்கப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்![/size]

  • தொடங்கியவர்

அகுத: இப்படி ஒரு வலிமையான விவாத வருணனையை உலகத்தின் எந்த ஊடகமும் வெளிவிட்டிருக்க முடியாது. எப்படி இதை கண்டு பிடித்தீர்கள் என்று ஆச்சரிய படுகிறேன்.

குடியரசு கட்சி யானையை விவாத மேடைக்கு இழுத்து வந்து துச்சாதனன் செய்யாத வேலை செய்துவிட்டார் எழுத்தாளர்.

சிரிச்சு நெஞ்சு நோகுது.

[size=3]“எதற்காகவடா அவர்களே கேட்காதபோது மிலிட்டரிக்கு இன்னும் 2 ட்ரில்லியன் டாலர்கள் தர நினைக்கிறாய், பாதகா? எப்படியடா ஏற்கனவே 5 ட்ரில்லியன் டாலர்கள் சைஸில் காசித்துண்டில் ஓட்டை விழுவதை சமாளிப்பாய்? யானைக்குக் கோவணம் கட்ட நினைப்பவன் ஒரு முழத்துணியும் ஒரு துருப்பிடித்த கஜக்கோலும் மட்டும் வைத்திருந்தால் போதுமா? எங்கே இருந்து அளவெடுப்பாய்? எட்டி உதைத்தால் தாங்குவாயா? ஏணி உண்டா? எப்படி அதைத் தைப்பாய்? எட்டி எட்டிக் குதிப்பாயா? எம்பிப் பார்ப்பாயா? அதற்குக் குஞ்சலம் உண்டா? பார்டர் கிடையாதா? லைனிங்குக்கு என்ன செய்வாய்? ‘டர்ர்ர்’ரென்று கிழியும்போது எப்படியடா ஒட்டுப் போடுவாய்?” - ப்ரீஸ்கூலில் கணக்கு பாடத்தை ‘ஆப்ஷ’னில் விட்டுவிட்டதால் ராம்னியிடம் இதற்கெல்லாம் பதில் இல்லை[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.