Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த ரத்து! மக்கள் வாக்கெடுப்பிற்கு கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த ரத்து! மக்கள் வாக்கெடுப்பிற்கு கோரிக்கை

images77.jpg

13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை ரத்து செய்வது தொடர்பாக மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை அடிப்படையாக வைத்து நாடு அரசியல் அழிவை நோக்கிச் செல்வதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

திவி நெகும திட்டம் முதன்முறை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது காணப்பட்ட எதிர்ப்புக்களுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்வைப் பார்க்கும் போது இதன் ஆபத்தான நிலை தெரிகிறது. எனவே, உடனடியாக இதனை பொது மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்து மக்கள் தீர்ப்பின் மூலம் முடிவு காண வேண்டும் என ஜனாதிபதியிடம் விமல் வீரவங்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

எபீடியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா.. :D வாக்கெடுப்பில் சிங்களவன் எதிராத்தான் வாக்கு போடுவான்.. மக்கள் ஆணை என்று சொல்லி ரத்து செய்யலாம். இந்தியாவுக்கும் மூஞ்சியிலை கரியைப் பூசினமாதிரி ஆகும்..! :rolleyes:

[size=2]இலங்கை அரசியலமைப்பிலிருந்து 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான அரசாங்கத்தின் உள்ளார்ந்த பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் கண்டுவருகின்றன ௭ன்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். [/size]

[size=2]தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்தியாவும் அமெரிக்காவுமே தடையாக உள்ளன. குறிப்பாக இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து உதவிகளையும் ஊக்குவிப்புக்களையும் வழங்காமல் இருந்தால் இலங்கையின் தேசியப் பிரச்சினை தீர்ந்து விடும். உள்நாட்டை பொறுத்த மட்டில் 95 வீதமானோர் சிங்களவர்களேயாவர். [/size]

[size=2]௭னவே இம் மக்களுக்கு அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளும் அடிபணிந்தே ஆக வேண்டும் ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில், [/size]

[size=2]இந்தியா பலவந்தமாக இலங்கை அரசியலில் ஊடுருவி 13– வது திருத்தச் சட்டத்தை தேசிய யாப்பில் பதித்து பிரிவினைவாதத்திற்கு நிலையான வித்திட்டது. குறிப்பாக அப்போதைய அரசாங்கம் பிரிவினை வாதத்தின் கைபொம்மையாகவே செயல்பட்டது. ௭வ்வாறாயினும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நாம் ஆரம்ப காலம் தொட்டே ௭திர்த்து வந்தோம். இதனை இலங்கை அரசியலமைப்பிலிருந்து இல்லாதொழிக்க வேண்டும் ௭ன்றும் குரல் கொடுத்து வந்தோம். [/size]

[size=2]இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு தற்போது நடவடிக்கை ௭டுத்து வருகின்றது. 13வது திருத்தத்திற்கு தற்போது காணப்படுகின்ற மாகாண சபை முறைமைக்கு ௭திராகவும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் விமர்சனங்கள் மேலோங்கியுள்ள நிலையில் இதனை ரத்துச் செய்வதற்கான அரசாங்கத்தின் உள்மட்ட பேச்சுவார்த்தைகள் மேலோங்கியுள்ளன. இலங்கையை பொறுத்த வரையில் 95 வீதமானவர்கள் சிங்கள மக்களேயாவர். இவர்களின் ஆணையை மீறி புதிய விடயங்களை ஏற்படுத்த முயற்சிப்பது முடியாத காரியமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் மற்றும் மேற்குலக சக்திகளும் செயற்பட்டு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தடையாக உள்ளன. [/size]

[size=2]குறிப்பாக இலங்கையில் பிரிவினை வாதத்தை இந்தியாவே கூட்டமைப்புடன் இணைந்து ஊக்குவித்து வருகின்றது. ௭னவே இலங்கைக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்பின் இந்தியா மௌனமாக ஒதுங்கி நின்றால் அதுவே போதும் ௭னக் கூறினார்.[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=1214

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]-------[/size]

[size=2]குறிப்பாக இலங்கையில் பிரிவினை வாதத்தை இந்தியாவே கூட்டமைப்புடன் இணைந்து ஊக்குவித்து வருகின்றது. ௭னவே இலங்கைக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்பின் இந்தியா மௌனமாக ஒதுங்கி நின்றால் அதுவே போதும் ௭னக் கூறினார்.[/size]

http://www.virakesar...al.php?vid=1214

இதனை... தமிழ்மக்கள் மீது, போர் தொடுக்க முதல் சொல்லியிருந்தால்... தமிழர்களும் வரவேற்றிருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.