Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாவது விவாதத்திலும் ஒபாமா வெற்றி

Featured Replies

[size=4]அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான பராக் ஒபாமாவும், மிற் றொம்னியும் நேரடியாக மோதிக்கொள்ளும் மூன்றாவது கடைசி விவாதம் நேற்று நடைபெற்றது.[/size]

[size=4]இந்த விவாதத்திலும் பராக் ஒபாமாவே வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.[/size]

[size=4]ஒபாமா 53 வீதமும் மிற் றொம்னி 24 வீதமும் ஆதரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, இதனால் தேர்தல் வெற்றி ஒபாமா பக்கம் சாய்ந்துள்ளது.[/size]

[size=4]மிற் றொம்னியின் உடல் அசைவு, மொழி யாவும் விவாதத்தை எதிர் கொள்ளும் நிலையை அவருக்கு வழங்கவில்லை என்றும் மிகவும் வெறுப்புடனேயே அவர் பங்கேற்றார் என்றும் கூறப்படுகிறது.[/size]

[size=4]இந்த விவாதத்தில் றொம்னி எடுத்த தாக்குதல் அமெரிக்காவின் படைத்துறை பின்னடைவை சுட்டிக்காட்டியது.[/size]

[size=4]1917 ல் ரஸ்யாவிற்கு பின்னணியில் நின்ற அமெரிக்கா 1947 ற்கு பின் உலகில் தன்னை விஞ்ச வேறு யாரும் இல்லாதளவுக்கு விமானப்படை, கடற்படை கப்பல்கள் என்று பலத்துடன் விளங்கியது. [/size][size=4]ஆனால் கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் ஒபாமா அந்த முதன்மையை கைவிட்டுவிட்டார் என்று குற்றம் சுமத்தினார்.[/size]

[size=4]மேலும் அவர் அல் குவைடா அல்ல ரஸ்யாவின் எதிர்ப்பே இப்போது முக்கியம் என்றும் வாதிட ஆரம்பித்தார்.[/size]

[size=4]ஆனால் அவரை மறித்த ஒபாமா கூறும்போது றொம்னி 1980 களில் ரஸ்யா – அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே பனிப்போர் நிலவிய காலத்து கனவுகளில் இருக்கிறார்.[/size]

[size=4]பனிப்போர் முடிவடைந்து நீண்ட காலமாகிவிட்டது, றொம்னி இன்னமும் அதிலிருந்து விடுதலை பெறவில்லை அதுதான் அவருடைய பிரச்சனை என்றார்.[/size]

[size=4]அதேநேரம் விவாதத்தில் இரண்டு தடவைகள் ஒஸாமா பின்லேடன் என்று உச்சரிப்பதற்கு பதிலாக மிற் றொம்னி ஒபாமா பின்லேடன் என்று உச்சரித்தார் ஆனால் அந்தத் தவறை மத்தியஸ்தரோ, மற்ற இருவருமோ திருத்தவில்லை.[/size]

[size=4]விவாதம் மிகவும் விறுவிறுப்பாக இருந்ததாகவும், பியரை அடித்துவிட்டு பார்க்க சிறப்பாக இருந்தாக நியூயோர்க் சிற்றி மது அருந்துவோர் சங்கம் தெரிவித்துள்ளதோடு தமது வாக்குகள் பராக் ஒபாமாவுக்கே என்றும் கூறியுள்ளனர்.[/size]

[size=4]அமெரிக்காவில் அதிகமானவர் மதுபோதகர்கள் என்பது தெரிந்து பியர் குடித்து, சிகரட்பற்றி ஒபாமா அவர்களுடைய வாக்குகளை எப்போதோ கவர்ந்துவிட்டார், ஆனால் மிற் றொம்னி அதை சரியாக செய்யவில்லை.[/size]

[size=4]பெரும்பான்மை மது அருந்துவோரை நோக்கி நான் உங்களில் ஒருவன் என்று கூறி வருவது ஒபாமாவின் வெற்றிக்கு பெரிதும் துணை புரியும்.[/size]

[size=4]தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் மதுபானம், புகைத்தல் இரண்டுக்கும் ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம் என்ற நிலைக்கு ஜனநாயகம் வளர்ந்துள்ளதை மறுக்க முடியவில்லை.[/size]

[size=4]http://www.alaikal.com/news/?p=115660[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இங்கும் இது தான் பேச்சு

அவருடைய கட்சியினர் எடுத்த முடிவுகளான ஈராக் ஆப். மீதான போர் தேவையற்றது முட்டாள்தனமானது அதற்காக சொன்னவை மக்களை முட்டாளாக்குபவை மக்களுக்கு பொய் சொல்லப்பட்டது என ஒபாமா கூறியதாக பேசிக்கொண்டார்கள்.

குறிப்பு: இது அமெரிக்க ஐனாதிபதி ஒருவருடைய வாயினால் வந்து இருப்பதால் எதிர்கால்த்தில்;அமெரிக்காவுக்கு எதிராக வராதா???

  • தொடங்கியவர்

[size=4]உலகத்தின் தலைமைத்துவ நாடென்ற ஸ்தானத்தை அமெரிக்கா தக்கவைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிபர் ஒபாமா தவறிவிட்டார் என ரொம்னி குற்றம்சாட்டியுள்ளார்.[/size]

[size=4]மத்தியகிழக்கு பிரதேசம் நெருக்கடியில் மூழ்கிப்போக ஒபாமா இடம்தந்துவிட்டார் என ரொம்னி சாடினார்.[/size]

[size=4]எதிர்த்து வாதாடிய ஒபாமா, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை சம்பந்தமான முக்கிய விவகாரங்கள் அனைத்திலுமே ரொம்னியின் நிலைப்பாடு தவறு என்று கூறியுள்ளார்.[/size]

[size=4]குறிப்பாக இராக் மீது அமெரிக்கா மேற்கொண்ட படையெடுப்புக்கு ரொம்னி ஆதரவு வழங்கியது தவறுதான் என்று அவர் குறிப்பிட்டார்.[/size]

[size=4]கருத்தொற்றுமை[/size]

[size=4]இந்த விவாதத்தின் பல கட்டங்களில் இரு வேட்பாளர்களின் கொள்கைக்கும் இடையே பொதுப்படையான ஒரு ஒற்றுமை காணப்பட்டிருந்தது.[/size]

[size=4]சிரியா தொடர்பிலும் ஆப்கானிஸ்தான் தொடர்பிலும் அமெரிக்காவின் கொள்கை பற்றிய இவ்விருவரது நிலைபாட்டையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.[/size]

[size=4]சீனாவின் வர்த்தக வழிமுறைகளை விமர்சிப்பதிலும், அதனால் அமெரிக்காவின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறுவதிலும் இவ்விரு வேட்பாளர்களும் ஒன்றுபட்டிருந்தனர்.[/size]

[size=4]http://www.bbc.co.uk/tamil/global/2012/10/121023_usdebate.shtml[/size]

இன்று இங்கும் இது தான் பேச்சு

அவருடைய கட்சியினர் எடுத்த முடிவுகளான ஈராக் ஆப். மீதான போர் தேவையற்றது முட்டாள்தனமானது அதற்காக சொன்னவை மக்களை முட்டாளாக்குபவை மக்களுக்கு பொய் சொல்லப்பட்டது என ஒபாமா கூறியதாக பேசிக்கொண்டார்கள்.

குறிப்பு: இது அமெரிக்க ஐனாதிபதி ஒருவருடைய வாயினால் வந்து இருப்பதால் எதிர்கால்த்தில்;அமெரிக்காவுக்கு எதிராக வராதா???

ரொமினி ஒரு் தனிப்பட்ட பேச்சை பற்றிக்குறிப்பிடவில்லை. பல இடங்களில் ஒபாமாவல் கூறப்பட்ட கருத்துகளை தனது பாணியில் திரித்து வெளியிட்டார். எனவே ஒபாமா விவாதத்தில் அந்த திரிப்புக்களை பச்சை பொய் என்று கூறினார்.

ஒபாமா(12 சென்னெட்டர்கள் என்று நினக்கிறேன் சரியான இலக்கத்தை குகுகிளில் தேடலாம்.) ஈராக் போரை எதிர்த்த செனெட்டர்களில் ஒருவர். இதில் ஆதரித்தவர்களில் பிரபலமானவர்கள், திருமதி கிளிண்டன், திரு கெரி போன்ற ஜனநாயக்கட்சியினர் உள்ளடங்குவர். இப்படி முழு அமெரிக்காவினதும் தீர்மானம் ஒன்றுக்கெதிராக போனதால், ஒபாமா அமெரிக்க எதிரி அல்லது யாழின் பாசையில் மற்றுக்கருத்தாளராக கனகாலம் கணிக்கப்பட்டார். இவர் நமக்கு இலங்கை போரில் உதாவார் என்று நினைத்து நானும், வேட்பாளர் தெரிவுத் தேர்தலில் திருமதி கிளின்டனுக்கே வாக்களித்திருந்தேன். இவரின் இந்த அதீத போர் எதிர்ப்புக்குணங்களால்தான் இவர் பதவிக்கு ஜனவரி 22 ல் வந்தார்; ஆனால் நோர்வே பிப்பரவரி 12 க்குமுதல் நோபல் சமாதானப் பரிசுபோட்டியில் இவரை சேர்த்துவிட்டது.

இவர் தேர்தல் வென்றபின், (பிரான்சில் என்று நினைக்கிறேன்) புஸ்சை பெயர் சொல்லாமல் அவரின் போர்குணங்ககளைத் தாக்கினார். இதை பின்னர் மத்திய கிழக்கு பயணங்களிலும் செய்தார். அப்படி ஒன்றில்தான், அமெரிக்கா "கடுமையாக நடந்தது, அமெரிக்கா உணர்வில்லாமல் நடந்து" என்று கூறியிருந்தார். இது பிரதானமாக, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை சந்தித்த பின் பேசிய பேச்சு. அதாவது போருக்கு உதவியதால், பிருத்தானியா, பிரான்சு, இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் எல்லாம் தலமை மாற்றம் ஏற்பட்டது. இவற்றை தான் உணர்வதாக ஐரோப்பிய தலைவர்களுக்கு சேதி சொல்லவே இந்த பேச்சு பிரதானமாக பேசப்பட்டது. இன்றைய தேர்தல் நேரம் இந்த ரக்கோட்டை திருப்பி போடமுடியாதானாலும் 2009 ல் ஐரோப்பிய நாடுகளை தன்(அகெரிக்கா) பின்னால் திரும்பவும் வரவைத்து ஈராக் போரை மூடவும், ஆப்கானிஸ்தான் போரை விஸ்தரிக்கவும், அமெரிக்க வங்கிகளால் வங்குறோத் அடைந்துவிட்ட ஐரோப்பிய வங்கிகளையும் திரும்ப கட்டியெழெழுப்ப புதிய சட்டங்கள் கொண்டுவரவும் இந்த பேச்சு ஐரோப்பிய தலைவர்களை நோக்கி செய்ய வேண்டியிருந்தது.

பேச்சுகளை அதே வசனங்களில் சொல்லியிருந்தால் ஒபாமாவால் அவை ஏன் சொல்லப்பட்டது என்பது விளங்க வைக்க தேவை வராது. அதனாலேயே, ரோமினி, ஒபாமா பங்கிரங்க மன்னிப்பு கோரி அமெரிக்க அதிக்கத்தை கரைத்துவிட்டார் என்று திரிக்கப்பட்ட குற்றம் சாட்டினார். உண்மையில் பேச்சின் நோக்கம் , போரைக்காட்டி ஆளும்கட்சிகளை விழுத்தி, 2009 முன்னர் பதவிக்கு வந்திருந்த ஐரோப்பிய புதிய தலைவர்களை, திரும்ப அமெரிக்க தலைமையை வலிய வந்து எற்றுக்கொள்ள செய்ததாகும். இதில் கனேடிய தலைவர் காப்பரை தவிர மற்றவர்கள் எல்லோரும் ஒபாமாவின் தலையமையை வெகு விரவில் ஏற்றுவிட்டார்கள்.

பேச்சு ஒபாமாவால் இன்று நேற்று பேசப்பட்டதல்ல. ஒரு கூட்டத்தில் பேசப்பட்டதல்ல. உண்மையாக மன்னிப்பு கோரும் வசனங்கள் உபயோகப்படுத்தபடவில்லை. அது எந்த நாட்டில் பேசியிருந்தாலும், பிரதானமாக, ஐரோப்பிய தலைவர்களை திரும்ப தன்னுடன் வரும்படி அமெரிக்கா விட்ட அழைப்பே அது.

  • தொடங்கியவர்

[size=4]ஒபாமா கடந்த இரண்டு விவாதங்களில் வென்றாலும் பல கணிப்புகளின் படி ரொம்னி முன்னணியில் உள்ளார்.[/size]

[size=4]ஆனால் இன்னரும் இரண்டு வாரங்கள் உள்ளன.[/size]

முதலாவது விவாதத்தில் ஒபாமா தோற்ற பின் ஏற்பட்ட சரிவு வீதம் சில நேரங்களில் பூச்சியமாகியிருக்கலாம். ஆனால் இது வரையில் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை. அதே நேரம் ரோமினியின் கட்சி விட்டு விட்டு வலுவடைந்துகொண்டே போகிறது.

இன்றைய கலொப் கருத்து கணிப்பின் படி மேலதிக சரிவு திரும்ப நின்றுவிட்டது.

ELECTION 2012 TRACKING

Oct 17-23, 2012 – Updates daily at 1 p.m. ET; reflects one-day change

REGISTERED VOTERS CHANGE

Obama 48% +1

Romney 47% -1

LIKELY VOTERS CHANGE

Romney 50% -1

Obama 47% +1

இந்த நிலையில் தொடர்ந்து நின்றாலே ஒபாமா வென்றுவிடுவார். இது அவருக்கு "எலெக்றோரல் கொலிச்" முறையில் வெற்றியை தரும். இதன் கீழ் போனால் தப்புவது கடினம்.

Edited by மல்லையூரான்

CNN) – A new poll taken after the final presidential debate indicates President Barack Obama has a slight edge over Republican challenger Mitt Romney in Ohio.

Forty-nine percent of likely voters in the state back Obama, compared to 47% who support Romney, according to the American Research Group survey released Friday.

The margin falls well within the sampling error, meaning the race is statistically tied in the Buckeye State, a crucial battleground in the 2012 presidential race.

Also in the poll, one percent of respondents said they prefer another candidate, while three percent said they are undecided.

ARG surveyed 600 likely voters in Ohio between October 23 and October 25. The poll has a sampling error of plus or minus eight percentage points.

ஓபாமாவின் சரிவு தொடர்ந்துகொண்டிருக்கும் போது முடிவை தீர்மானிக்கத்தக்க மானிலத்தில் அவரின் மேன்மை இன்னமும் மெல்லிய மட்டத்தில் உயர்வாக இருப்பத்தாக CNN கூறுகிறது. அதாவது தேர்தலில் அவர் வெல்லத்தக்க சந்தர்ப்பம் இன்னௌம் அழிக்கப்படவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.