Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு கருணாநிதி திடுக் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை:"இலங்கை தமிழர்களை, வெறுப்பேற்றும் வகையில், சிங்கள அரசு செயல்படுகிறது. இந்திய அரசும் இதை, கண்டுகொள்ளாமல் உள்ளது' என, தி.மு.க., தலைவர், கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவின் உதவிகளைப் பெறும், இலங்கை அரசு, சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆதரவையும் பெற்று வருகிறது. தமிழர்களை கொன்று குவித்த இடங்களில், போர் நினைவுச் சின்னம் மற்றும் அருங்காட்சியகத்தை அமைத்து, தமிழர்களை வெறுப்பேற்றும் வகையில் சிங்கள அரசு செயல்படுகிறது.

இந்தியாவில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுக்கின்றன. ஆனால், தமிழகத்தில் தான், இலங்கை வீரர்கள் பயிற்சி பெறுவார்கள். தமிழக கட்சிகள் என்ன செய்யும் பார்க்கலாம் என, அந்நாட்டு அமைச்சர் சவால் விடுகிறார். இதற்கு, பதில் சொல்லாமல், இந்திய அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதனால், மத்திய அரசின் மீது பெரும் ஐயமும் ஏற்படுகிறது. இலங்கையின், வடகிழக்கு பகுதியில் சிங்கள ராணுவத்தை குவித்திருப்பதோடு, சிங்களவர்களின் குடியேற்றமும் நடந்து வருகிறது. தமிழர்களை இன படுகொலை செய்துவிட்டோம் என்ற மனசாட்சி கூட இல்லாமல், ராஜபக்ஷே அரசு செயல்படுகிறது. ஐ.நா.,சபை மற்றும் உலக நாடுகள் எல்லாம் கண்டித்துள்ள போர்குற்றங்களை செய்த இலங்கை அரசு, வெற்றிபெற்றுவிட்டதாக எண்ணிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், டெசோ மாநாட்டில் நிறைவேற்றிய, இலங்கை தமிழர்களின் நல்வாழ்வு தீர்மானங்களுக்கு உயிர்கொடுக்க, இம்மாத இறுதியில், ஐ.நா.,சøபில், அவற்றை சமர்பிக்க உள்ளோம். இதன்பிறகாவது, இலங்கை தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என, நம்புவோம்.

இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

இதனால், மத்திய அரசின் மீது பெரும் ஐயமும் ஏற்படுகிறது.

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

[size=1]

[size=4]அவர்களுக்கும் இலவச தொலைகாட்சி கொடுத்திருந்தால் ..........[/size][/size][size=1]

[size=4]வேடிக்கை பார்ப்பதை நிறுத்தி விட்டு சன் டிவி பார்ப்பார்கள்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

தினமலர் பத்திரிகையினை நடாத்துபவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவானவர்கள்.

[size=5]இன்னும் டெசோ தீர்மானங்களை ஐ. நா. சபையில் கொடுக்கவில்லையா?

கடந்த மாதம் ஐ. நா. சபையில் கொடுப்பதாக கொலைஞர் கும்பல் அறிக்கைகள் விட்டது இன்னொரு ஏமாற்று நாடகமா? [/size]

[size=4]வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - கருணாநிதி [/size]

அறிக்கையின் நாயகனே உன் அடுத்த அறிக்கை என்னையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.