Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசூலிப்பு

Featured Replies

modern-art101.jpg

வெய்யிலைக் கண்டால் தான் வெளியிலே சென்று இதமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. கடந்த இரு மாதங்களாகக் குளிருக்குப் பயமில்லாமல் வீட்டை விட்டு எங்காவது போய்வர விருப்பமாயிருந்தது. பாரீஸில் அப்படியும் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கிறது .இது கூட மனசுக்கு இதமான காலநிலையாகவே இருக்கிறது.இப்படியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பார்த்து இந்தக் கோடைகால விடுமுறையில் பூங்காக்களைத் தேடிச் சென்று சுத்தமான காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.எமது சுற்றாடலில் வசிப்பவர்களும் அங்கு வருவார்கள்.அப்போது தான் அயலவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க நேரம் கிடைத்தது போலிருக்கும்.

அங்கிருந்து உரையாடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் தன் மகளுக்குக் கட்டாயம் பருவமடைந்ததற்கான சடங்கைச் செய்ய வேண்டும் என்றார்.அந்தச் சிறுமிக்கு பதினொரு வயது.அது நடந்து ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்ட போதும் அவரது கவலையெல்லாம் மகளுடைய சாமத்தியச்சடங்கை ஒரு கொண்டாட்டமாகத் தாங்கள் செய்யாமல் விட்டால் , மற்றவர்கள் தங்களை மதிக்க மாட்டார்கள் என்பதாக இருந்தது.அடுத்த வருடத்திலாவது அக் கொண்டாட்டத்தை நடத்தியே தீருவது என்பதே அவர் பேச்சாயிருந்தது.

எதற்கு அந்த அநாவசிய வேலை?அது உடலில் இயற்கையாக நடக்கும் ஒரு செயற்பாடு.அப்படியான சடங்கொன்றைச் செய்ய ஏன் கஷ்ரப்பட வேண்டும்? எங்கள் பழக்கவழக்கம் , கலாச்சாரம் எனும் சாட்டுப்போக்குகள் நமக்கு இப்போது என்ன அவசியத்துக்கு? என்று நான் அவருடன் கதைத்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘அது எப்பிடிச் செய்யாமல் இருக்கிறது?” என்பது தான் அவரது அழுத்தமான கேள்வி.

அது பற்றி மகளுக்குத் தெளிவு ஏற்படுத்துவதும் பயப்பிட எதுவுமில்லை என்று உரையாடவதும் தானே தாய் செய்ய வேண்டியது.அசெளகரியமாக உணர்ந்து கொள்ளும் மகளை ஆதரவாக அரவணைப்பதும் அது பற்றிப் பேசுவதுமல்லவா செய்ய வேண்டியது.ஆனால் பெற்றோர் உடனடியாக பெரும் எடுப்பில் ஒரு கொண்டாட்டம் செய்வது தான் பிரதான வேலை என்று ஓடித்திரிவார்கள்.

பலரும் இந்த நீராட்டுவிழா பற்றிப் பேசிவிட்டார்கள்.ஆனாலும் வெகுசனம் மத்தியில் அது மாற்றப்படாத எண்ணம் தான். புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரும் சனி ,ஞாயிறு என்றால் கிலி கொள்கிறார்கள்.அவை ஓய்வெடுக்க வேண்டி விடுமுறை நாட்களாயிருந்தாலும் எம் மக்கள் ஏதாவதொரு சாட்டுச் சொல்லிக் கொண்டாட்டங்களைச் செய்யத் தொடங்கிவிடுவார்கள். நல்ல குளிர் காலத்தில் தான் இந்தப் பிரச்சனைகள் சற்று ஓய்ந்திருக்கும்.ஒரே நாளில் இரண்டு மூன்று விழாக்களுக்குச் சுற்றிச் சுழன்றோடுபவர்களெல்லாம் இருக்கிறார்கள்.

நேரம் விரயமாவது ஒருபுறமெனில் அதற்கான ஆடை ,அணிகலன்கள் வாங்குவது , அன்பளிப்புச் செய்யப் பணம் ஒதுக்குவது என்று சிரமங்களை அடைகிறார்கள். கோபிப்பார்கள், குறைநினைப்பார்கள் என்று எல்லாக் கொண்டாட்டத்திலும் தலைகாட்டுவதே கடமை எனப் பலர் துன்புறுகின்றனர். ஆயினும் நெருக்கமானவர்களின் வைபவங்களில் உளமாரப் பங்கெடுப்பதென்பது வேறு.ஆனால் புறுபுறுத்துக் கொண்டே சென்று வருபவர்கள் தான் பலரும்.ஆனாலும் அதே துயரத்தை விரைவில் மற்றவர்களுக்கும் அவர்கள் வழங்கத் தயாராகிவிடுவர்.ஒரு மகிழ்ச்சி தரும் கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதை இனிய அனுபவமாக உணராமல் அதுவொரு துன்பமாக மற்றவர்களால் நினைக்கப்படுகிறது. அதற்குக் காரணங்கள் அவை வெறும் பணச்சடங்குகளாகப் இருக்கின்றன. அவரவர் பவிசும் பவரும் காட்ட இக்கொண்டாட்டங்களை நடாத்துகின்றனர்.

வருடாவருடம் வந்து கொண்டிருக்கும் பிறந்த நாளை மண்டபம் வாடகைக்கு எடுத்துச் செய்கின்றனர்.அதுவும் நாற்பது ,ஐம்பது ,அறுபது, வயதான கொண்டாட்டங்கள் நடாத்தப்படுவதும் நடக்கின்றது.கத்தோலிக்கரென்றால் ஞானஸ்நானம், முதல்நன்மை என்று இன்னும் நீள்கிறது.திருமணங்கள் போட்டி போட்டுப் பெரும் எடுப்புகளுடன் கடன்பட்டு நடத்தப்படுகின்றன.

தங்கள் பெண்பிள்ளைகள் பருவமடைந்தால் அது ஒன்றிரண்டு வருடங்களாகத் திட்டம் போடப்பட்டு நடத்தும் விழாவாகிவிடுகிறது.தற்போதைய உணவுகளால் பெண்கள் சிறுவயதிலேயே தம் முதல்மாதவிடாயை அடைந்துவிடுகின்றனர்.பத்துப் பதினொரு வயதுச் சிறுமிகள் இச்சடங்கிற்கான காரணம் என்ன என்ற கேள்வியையே யோசிக்க முடியாமல் இருக்கின்றனர்.அவர்கள் சிறுவயதிலிருந்து சென்று வரும் விழாக்கள் அது வழமை தானே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.தமது உறவுச் சிறுமிகள், தமிழ் நண்பிகள் அலங்கரிக்கப்பட்டு அந்நிகழ்வின் கதாநாயகியாக நிற்பது கவர்ந்திருக்கலாம்.விதம் விதமாகப் போட்டோவும் வீடியோவும் எடுப்பது பிடித்திருக்கலாம்.பெற்றோர் செய்வது சரியென்று நம்பலாம்.ஆனால் அக்குழந்தைகளின் பெற்றோர் எல்லாம் அறிந்தும் அக்கொண்டாட்டத்தைச் செய்கின்றனர்.பல ஆண்டுகளாக உறவினர்களதும் நண்பர்களதும் விழாக்களுக்குச் சென்று அன்பளிப்பாகக் கொடுத்ததை வசூலிக்க இது ஒரு வாய்ப்பென்று கணக்குப் போடுகின்றனர்..பல மாதங்களாக மண்டபம் தேடி அலைகின்றனர். அழைப்பிதழ்களை அச்சடிக்கின்றனர். தமது பெண் குழந்தையை சில நூறு பேர் முன்னிலையில அலங்கரித்து க் காட்சிக்கு நிறுத்துகின்றனர்.இவை போதாதென்று பார்ப்பனனை அழைத்து விளங்காத மந்திரங்களைச் சொல்ல வைத்து காசும் கொடுத்துவிடுகின்றனர்.அச்சிறுமியை மண்டபத்தின் நடுவில் நிறுத்தி தமக்கான வரவுகளை வசூலித்துக் கொள்கின்றனர்.இதைத் தவிர வேறென்ன உண்டு?

பலரும் சொல்லும் காரணம் இது தான், ‘உறவுகள், ஊரவர்கள் ஒன்று சேர்வது’.நண்பர்களை உறவுகளைச் சந்திக்க ஒன்றாக உணவருந்திக் களிக்க ஒரு நாளைத் தீர்மானித்து ஒன்று சேரலாமே.அவ்வாறான உறவுகளும் நட்புகளும் மகிழ்ச்சியாக ஒன்று சேரத் தயாராவதில்லை.அவரவர்கள் தாம் கொடுத்த பணத்தை வாங்குவதற்குக் கணக்குப் போட்டபடியே தான் காசை மடித்து என்பலப்பில் வைக்கிறார்கள்.சனங்கள் தமக்குள் அப்படித் தான் கதைத்துக் கொள்கிறார்கள். இத்தனை வருடங்களாகக் கஸ்ரப்பட்டு உழைத்துக் கொண்டு போய்க் கொடுத்த காசை திரும்ப வாங்க வேண்டுமென்கிறார்கள்.

இன்னும் அதிக வேதனையைத் தருவது தமது பெண்குழந்தைகளைக் காட்சிப் பொருளாக்கிக் காசை வசூலிப்பது தான்.புலம்பெயர்ந்து வந்த பின்னர் கூட தேவையற்ற இச்சடங்கை ஏன் செய்ய வேண்டுமென்று பிள்ளைகளே சிந்திக்க முடியாதளவு இதெல்லாம் நம் கலாச்சாரம் என்று சொல்லிச் சொல்லி அவர்களைச் சுயமாகச் சிந்திக்க முடியாதவாறு தான் வளர்த்து வருகின்றனர்.

இங்கு கொண்டாட்டங்கள் என்பது வெறும் கொடுக்கல் வாங்கல்களை வைத்துச் செய்யப்படும் வியாபாரங்களாகி விட்டன.தமது பகட்டைக்காட்டும் அளவு கோல்களாக்குகின்றனர்.

http://thoomai.wordp...9/03/வசூலிப்பு/

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

பூப்புனித நீராட்டுவிழாவைப் பற்றி பல முற்போக்குப் பதிவுகள், கதைகள், கட்டுரைகள் வந்தாலும், இதை எமது கலாச்சாரத்தின் அடையாளமாகப் பலர் உணர்கின்றார்கள் என்பது உண்மையே. அத்தோடு சிறுமிகளும் saree party என்று இவ்விழா வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.

முஸ்லிம் சமூகத்து பெண்களில் சிலர் முக்காடு (பர்தா, ஹையாப்) அணிவது பெண்ணடிமைத்தனம் என்று தெரிந்தும் மேற்கு நாடுகளில் தமது அடையாளத்தை முன்னிறுத்த முக்காடுகளை அணியவே விரும்புகின்றனர். அதற்காக அவர்கள் பெண்ணடிமைத்தனத்தை ஆதரிக்கின்றார்கள் என்று அர்த்தம் இல்லை.

இதைப் போலவே காரண காரியங்கள், அடிமுடி தேடுதலை விட்டுவிட்டு சாமத்தியச் சடங்கை தமிழர் சமூகத்தில் முக்க்கியமான ஒன்றாகத் தொடர்ந்தும் பகட்டுடனும் பெருமையுடன் செய்வார்கள். அதைத் தடுக்க முனையும் தீவிரப் பெண்ணிலைவாதிகள் எதிர்காலத்தில் அருகிவிடுவார்கள்!

  • தொடங்கியவர்

முன்னய காலங்களில் இல்லாததை விட இத்தகைய முன்நிறுத்தல் அதிகளவு துரித்திக்கொண்டு நிற்பதற்கு என்ன காரணம் ?? ஏதோ ஒரு சக்தி அவர்களை மூளைச்சலவை செய்கின்றதல்லவா ??

  • கருத்துக்கள உறவுகள்

முன்னய காலங்களில் இல்லாததை விட இத்தகைய முன்நிறுத்தல் அதிகளவு துரித்திக்கொண்டு நிற்பதற்கு என்ன காரணம் ?? ஏதோ ஒரு சக்தி அவர்களை மூளைச்சலவை செய்கின்றதல்லவா ??

மூளைச்சலவை என்பதை விட மேற்கின் அடக்குமுறைக்கு எதிர்ப்புக்காட்ட ஒரு அடையாளமாகவே முக்காட்டை "முன்னேறிய முஸ்லிம்" பிரிவினர் பாவிக்கின்றனர். முன்னேறாத பிரிவினர் மீது முக்காடைப் போடுமாறு திணிப்பு நடக்கின்றது. ஆனால் இது பெருமளவில் மேற்கு நாடுகளுக்கு வெளியேதான்.

மீண்டும் தலைப்புக்க வந்தால், புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர் தமது கலாச்சார பண்பாடுகளை பேணிப்பாதுகாக்க சாமத்தியச் சடங்குகளைப் பாவிக்கின்றனர்.

மேற்கின் அடக்குமுறை எந்தவகையில் இங்கு வருகின்றது ?? தங்களது மதசின்னங்களையே வெளிப்படுத்தாத ஐரோப்பியர்கள் ( சகிப்புத்தன்மை ) இவர்களது முன்னிறுத்தல்களால் அருவருப்பு அடைந்துள்ளார்கள் . பிறான்சில் இத்தகைய முன்னெடுப்புகளால் வேற்று இனமக்கள் சலிப்படைந்துள்ளனர் . இங்கு நீங்கள் கூறிய மூன்றாம் தரப்பில் இந்த முன்னிறுத்தல்கள் திணிக்கப்படுகின்றது . இதற்கு பலியாபவர்கள் அதிகம் ஆபிரிக்கர்களே . மேலும் நீங்கள் கூறிய இரண்டாவது கருத்து , ஒரு பெண்ணின பருவ வளர்சியை மருத்துவரீதியாக எடுக்காது , கலாச்சாரம் என்ற போர்வையில் ஒருவகையான அந்தப்பெண்ணிற்கான விளம்பர யுக்தியாக எடுக்கலாம்தானே ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டும் ஒன்றுபோலவே எனக்கு படுகிறது, இரண்டையும் அமோதிக்கிறேன். இங்கே இருந்து கொண்டு இந்திய சொர்க்கம் என்பவர்களினதும், மிடில் ஈஸ்ட் சொர்க்கம் எபவர்களினதும் தொல்லை கூடிபோயவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கின் அடக்குமுறை எந்தவகையில் இங்கு வருகின்றது ?? தங்களது மதசின்னங்களையே வெளிப்படுத்தாத ஐரோப்பியர்கள் ( சகிப்புத்தன்மை ) இவர்களது முன்னிறுத்தல்களால் அருவருப்பு அடைந்துள்ளார்கள் . பிறான்சில் இத்தகைய முன்னெடுப்புகளால் வேற்று இனமக்கள் சலிப்படைந்துள்ளனர் . இங்கு நீங்கள் கூறிய மூன்றாம் தரப்பில் இந்த முன்னிறுத்தல்கள் திணிக்கப்படுகின்றது . இதற்கு பலியாபவர்கள் அதிகம் ஆபிரிக்கர்களே . மேலும் நீங்கள் கூறிய இரண்டாவது கருத்து , ஒரு பெண்ணின பருவ வளர்சியை மருத்துவரீதியாக எடுக்காது , கலாச்சாரம் என்ற போர்வையில் ஒருவகையான அந்தப்பெண்ணிற்கான விளம்பர யுக்தியாக எடுக்கலாம்தானே ??

மேற்கில் வலதுசாரிச் சிந்தனையுள்ளவர்கள் மிகச் சிறுபான்மையினர் அல்ல. எனவே அரசுகள்/நிறுவனங்களின் கொள்கைகள் சமத்துவத்தை வலியுறுத்தினாலும் எல்லோரும் சமத்துவமாக நடாத்தப்படுவதில்லை. மேற்குநாடுகள் பிற கலாச்சாரப் பின்னணிகளில் உள்ளவர்களை தமது கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களயும் பின்பற்றவேண்டும் என்று சட்டங்களை இறுக்குவது, அந்தக் கலாச்சாரங்களை/அடையாளங்களை முதன்மையானதாகக் கருதுபவர்களுக்கு அடக்குமுறையாகத்தான் தோன்றும்.

தமிழர்களும் வருடாவரும் கோவில் உற்சவங்களில் தேரினை வீதிவலம் கொண்டு வரும்போது திறந்த மேனியினராக நின்று தேங்காய் உடைப்பதை பெருமையாகக் கொள்வதில்லையா? இதைப் பார்க்கும் வேற்றினத்தவன் (முஸ்லிமாகவும் இருக்கலாம்) அருவருப்புக்கொள்ளக்கூடும். ஆனால் அதைப்பற்றி திறந்தமேனித் தமிழன் சிந்திக்கமாட்டான். ஏனெனில் அவனுக்கு தனது கலாச்சாரம் பெருமையானது.

வட கொரியா போன்று மேற்கு நாடுகள் இல்லை. இங்கு தனிமனித சுதந்திரங்கள் தாராளமாக உண்டு. எனவே பல்வேறு இனத்தினரும் தங்கள் கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களை தமது தனித்துவத்தைப் பேண தொடர்ந்தும் முயற்சிப்பார்கள். நாம் வேற்றுமையில் ஒற்றுமை கண்டால்தான் மனிதர்களை மனிதர்களாகக் காணுவோம். இல்லையேல் சிலர் எங்களிலும் மேலாகத் தெரிவார்கள். சிலர் எங்களிலும் கீழாகத் தெரிவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.