Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலதும்,பத்தும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரதி அக்கா யாயினி அக்கா..இங்கு பல சுவையான அறிவுபூர்வமான தகவல்களை தரும் இருவருக்கும் பாராட்டுக்கள்..

  • Replies 584
  • Views 41.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

154124_525042834196203_1028574999_n.jpg

 

பென்குயீன் பற்றிய தகவல்கள்.

 

1. பறவையினத்தை சார்ந்த இவைகளால் பறக்கமுடியாது.

 

2. தன் வாழ்நாளின் 75 சதவிதத்தை நீருக்கடியிலே உணவு தேடுவதற்காக கழித்துவிடும்.

 

3. நீரில் நீந்தி செல்வது பறப்பது போன்றே இருக்கும்.

 

4. இதன் உடல் அமைப்பு நன்கு நீந்துவதற்கு ஏதுவாக இருக்கும் இவை மணிக்கு சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.

 

5. இவைகளால் நீருக்கடியில் சுவாசிக்க முடியாது ஆனால் அதிக நேரம் மூச்சை அடக்கிகொள்ளும் திறனுடையது.

 

6. இதன் உடல் வெப்பநிலையும் மனிதர்களை போல் தான். திமிங்கலங்களை போல் தோலின் அடிபகுதி முழுவதும் கொழுப்பால் சூழபட்டிருக்கும். ஆயிரக்கணக்கான பென்குயின்கள் ஒன்றிணைந்து நின்று கொண்டு வெப்பத்தை பெற்றுக்கொள்ளும்.

 

7. இவற்றின் உணவு மீன்கள்,மற்றும் இறால்கள், இதன் அலகின் முன்பகுதி வளைந்து காணப்படும் இவை வழுக்கும் தன்மையுள்ள மீன்களை தவறவிடாமல் பிடித்துகொள்ளும்.

 

8. இவை நன்னீரை குடிக்காது மற்றும் நன்னீரில் வாழாது. கடல் நீரை மட்டுமே குடிக்கும். இதன் உடலில் உள்ள ஒரு சுரப்பியின் மூலம் தண்ணீரில் உள்ள உப்பை பிரித்து தனியே வெளியேற்றிவிடும்.

 

9. மூடு வந்துவிட்டால் முதலில் முட்டையிடுவதற்கு அழகான இடத்தை தேர்வு செய்யும். பின் நல்ல ஆண் துணையையை தேடும். அதன்பின் இரண்டும் சேர்ந்து பாடும் அதாவது பின்னர் குரல் மூலம் துணையை கண்டுபிடிக்க. இந்த சொந்தம் பெரும்பாலும் வருடகணக்கில் தொடரும்.

 

10. பொதுவாக இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். அதன்பின் பெண் பறவை இரைதேட செல்லும் அதுவரைக்கும் ஆண்தான் அடைகாக்கும்.(சில நேரங்களில் பெண் பறவை திரும்பி வர இரண்டு வாரங்கள் கூட
ஆகலாம்).-------------என்ன புத்தி ,என்ன பண்பு ,,என்ன பொறுமை ..---மனிதன் செய்யத் தவறுவதை அது செய்கிறது

 

11. பொதுவாக இவை இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். அதன் பின் பென் பறவை இரைதேட செல்லும் அதுவரைக்கும் ஆண்தான் அடைகாக்கும்.(சில நேரங்களில் பறவை திரும்பி வர இரண்டு வாரங்கள் கூட ஆகலாம்). குஞ்சு பொரித்து வெளியே வந்ததும் கத்தும், பெற்றோர்கள் அதன் குரலை கேட்டு பின்னர் அடையாளம் கண்டுகொள்ளும்.

 

12. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்ததும் அவற்றை பிற பறவைகளிடம் ஒப்படைத்து விட்டு கடலுக்குள் சென்று உணவு தேட ஆரம்பிக்கும்.

 

13. பொதுவாக இதற்கு நல்ல பாதுகாப்பு முறை கிடையாது. சீல்கள் தான் இதன் முதல் எதிரி.

 

14. மனிதர்களை போல் நன்றாக பொழுதுபோக்க கரணம் அடிக்கும், சர்பிங் பண்ணும்….

 

15. 17 வகையான பென்குயின் இனம் உள்ளது.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தபால்பெட்டி ஏன் சிவப்பாயிருக்குது?
 ஏன்னா அதுக்கு சிவப்பு பெயின்ட் அடித்திருக்கிறாங்கள் :lol:
  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவர்.

 

 

545226_593206147372324_1973435040_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

800px-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%

 

 

பாரி.....வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச்செயலே காரணம் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

406160_468099163238857_1334044306_n.jpg

 

ஆழிக்குமரன் ஆனந்தன் (வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர் ஆவார். ஏழு உலகசாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்[மேற்கோள் தேவை].பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாம...ியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்[மேற்கோள் தேவை]. ஒர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) தீநேர்ச்சியின் (விபத்தின்) விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை.இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார். குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தைஇறப்பு ஆகஸ்து 6, 1984ஆங்கிலக் கால்வாய். எத்தனை பேர் அறிவோம் இவரை எம் மண்ணின் சாதனை தமிழன் ஒரு முறை நினைத்து பார்போம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்தக் கவிதையை ஒரு கதையினிடையே வாசித்திருந்தேன்...புதுக் கவிதையாம்...ஒரு மண்ணாங்கட்டியும் புரியவில்லை :D ...புரிந்தவர்கள் அர்த்தம் கூறவும்
 
"ஊற்றுக்கண் உடைபட்டு சலங்கை சிதறி பசு மாட்டு நெய்.
பிடி ஒரு பாத்திரம்.வாலிபமா?வாசலிலா? விலா நோக சிரிப்பீர்.
மரம் நடுவான்.தண்ணீர் ஊற்றுவான்.நள்ளிரவில் நட்சத்திரம்
சிரிக்கும்.புரியும் புகை வானில் கலக்கும். கன்னியின் அதரத்தில்
இறுதி மூச்சு. நிஜம் எது? நிழல் எது? விற்பனைக்கு சந்தைக்கு
வந்த அடிமாடே,பதில் சொல்."
 
பி;கு; எப்படி எழுதி இருந்ததோ அப்படியே நானும் எழுதியுள்ளேன்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நல்ல குடும்பம் என்பது ஒரு நல்ல தராசு மாதிரி.கணவன் கோபப்பட்டால் மனைவி என்னும் தட்டு சற்று கீழே போக வேண்டும்.அதே போல் மனைவி கோபப்பட்டு பேசினால் கணவன் என்னும் தட்டும் கீழே இறங்க வேண்டும்.
சிறந்த குடும்பத்தில் சினம் என்பது ஒருவழிப் பாதையல்ல.இருவழிப் பாதை.
இதை உணர்ந்தால் குடும்பம் குயில் கூவும் சோலை
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
"பசி" மொழி
 
வாளினும் கூர்மையானது பசி. 
                                                          இங்கிலாந்து
 
வயிற்றை ஏமாற்றவே முடியாது.
                                                              செர்பியா
 
வயிறுதான் நம்மை உழைக்கத் தூண்டுகிறது.
                                                                                   இங்கிலாந்து
 
பசி ஒரு கட‌ன்கார‌ன்;வாங்காமல் மீள மாட்டான்.
                                                                                           ஜெர்மனி
பசியுள்ள கண்,நெடுந்தூர‌ம் பார்க்கும்.
                                                                     அயர்லாந்து
 
பசியுள்ள குதிரை அடிப்புல்லையும் காலி ஆக்கிவிடும்.
                                                                                                     பிரான்ஸ்
பசியுள்ள கொக்கு,பலமாகக் கொத்தும்.
                                                                       ஜெர்மனி
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மர‌ணம் பயங்கர‌மானதா...?
 
வாழ்க்கையை நாம் அதிகமாக விரும்புகின்றோம்.மர‌ணத்தை அதைவிட‌ அதிகமாக வெறுக்கின்றோம்.வாழ்க்கையின் மீது நாம் வைத்த விருப்பத்தில் ஆயிர‌த்தில் ஒரு பங்கு கூட‌ மர‌ணத்தில் வைப்பது இல்லை.ஒன்றை நாம் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம்.வாழ்வும் மர‌ணமும் ஒன்றேடொன்று பின்னிப் பிணைந்தது.அவற்றை நாம் பிரிக்க முடியாது என்பதை!
 
மர‌ணம் வாழ்க்கையின் சிகர‌ம்.நாளைக்கே சாகத் தயார் என்ற மன உறுதி படைத்தவர் தான் தனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் உற்சாகத்தோடு வாழ முடிகிறது.மர‌ணம் வாழ்க்கையில் ஒரு முறை தானா வருகிறது...?
வாழ்நாளில் நாம் பல தட‌வை அந்த அனுபவத்தை பெறுகிறோம்.
 
ஒவ்வொரு நாளும் நாம் உறங்குவது கூட‌ ஒரு மர‌ண அனுபவம்தான்.நட்பின் மர‌ணம்,காதலின் மர‌ணம் என்று எத்தனையோ விச‌யங்களில் முற்றுப்புள்ளி விழுவதும் உண்டு.மர‌ணம் ஒரு மகத்தான உறக்கம்.அதுவும் நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதைத் தான் நம்மால் நம்ப முடிவது இல்லை.அதனால்தான் மர‌ணம் பயங்கர‌மாகத் தெரிகிறது.நீரோட்டம் பல திருப்பங்களைக் கட‌ப்பது போல் வாழ்வில் மர‌ணமும் ஒரு திருப்பம்.அது இயல்பானது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எப்போது சிந்திக்க வேண்டும்...?
 
பெண்கள் சிரிக்கும் போது
ஆண்கள் அழும் போது
கார‌ண‌ம் இல்லாமல் ஒருவர் புகழும் போது
நண்பர்கள் விலகும் போது
பெற்றோர்கள் கண்டிக்கும் போது
 
.................................................................................................................................
 
பிரித்தல் பெருக்கல் இவற்றின் உதவியைக் கொண்டு பயத்தை எளிதில் வென்று விட‌லாம்.
எப்படி...?
பயத்தை நூறால் பிரிக்க வேண்டும்.தைரியத்தை நூறால் பெருக்க வேண்டும்.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

I'm ready for Spring! How 'bout you?"

 

62964_604067359618658_610028963_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

71799_558367647509888_1372557871_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எதற்கும் வருத்தப்பட வேண்டாம்...உங்கள் கடந்த கால அனுபவங்களில் இருந்து நீங்கள் பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள்...அந்தப் பாடங்களை அடிக்கடி நினைத்துப் பாருங்கள்...அவை உங்கள் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக அமையட்டும்...ஒரு போதும் கடந்த காலத்தை பற்றிய கவலையில் முழ்காதீர்கள்."நான் அப்படி செய்திருந்தால் இப்படி ஆகியிருப்பேன்.இப்படி செய்திருந்தால் அப்படி ஆகியிருப்பேன்" என்று எண்ணுவதெல்லாம் வீணான சிந்தனையாகும்.நேரம் வீண்,சக்தி வீண்.ஏனெனின் கவலை சக்தியை கரைத்து விடுகிறது.வெறெதையும் அது செய்வதில்லை.உண்மை எதுவெனில் எந்த ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும் அது ஆண்ட‌வனின் விருப்பம்.ஒரு சிறு துரும்பின் அசைவு முதல் பிர‌பஞ்ச‌த்தில் பிர‌மாண்ட‌ இயக்கம் வரை கட‌ந்த காலம்,நிகழ்காலம்,மற்றும் எதிர்காலத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியும்,ஒவ்வொரு கார‌ண காரியமும் ஆண்ட‌வனால் இப்படித் தான் நிகழ வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிற‌து.ஆண்ட‌வனின் விருப்பத்தை மாற்ற எந்த மனிதனாலும் இயலாது.ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஆண்ட‌வனின் திருவருள் மறைந்துள்ளது என்பதைக் கண்ட் உணர்ந்து உங்களுக்குள்ளேயே ஒரு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்வது அறிவுடைமையாகும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மனிதனுக்கும் கழுதைக்கும் என்ன வித்தியாசம்?
கோபம் வந்தால் மனிதனை கழுதை என்று திட்டலாம் :lol: ஆனால் கழுதையைப் பார்த்து மனிசன் என்று திட்ட முடியாது :lol:  :D
 
.............................................................................................................................................................................
 
வீரனின் ஒரு துளி ரத்தம்
பெண்ணின் ஒர் துளி கண்ணீர்
எழுத்தாளனின் ஒரு துளி மை
                           இவை எல்லாவற்றையும் விட
உழைப்பாளியின் ஒரு துளி வியர்வைக்கு சக்தி அதிகம்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி தவறு செய்கின்றவன் அப்பாவி.

ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கின்றவன் மூடன்.

ஒரு தவறும் செய்யாதவன் மரக்கட்டை.

தன்னை அறியாமல் தவறு செய்து,தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

 

.................................................................................................................................................................

 

வெறிச்சோடிய மனத்துடன் எதிர்காலம் புரியாமலே வேதனையுடன் நான் :(

பிறந்தது ஏன் :lol:

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி தவறு செய்கின்றவன் அப்பாவி.

ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கின்றவன் மூடன்.

ஒரு தவறும் செய்யாதவன் மரக்கட்டை.

தன்னை அறியாமல் தவறு செய்து,தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

 

.................................................................................................................................................................

 

வெறிச்சோடிய மனத்துடன் எதிர்காலம் புரியாமலே வேதனையுடன் நான் :(

பிறந்தது ஏன் :lol:

 

இப்பதான் விளங்குது.. ஏன் அடிக்கடி மரக்கட்டை எண்டு பேச்சு கிடைக்கிறதெண்டு.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நாள் என்பது இரவையும் சேர்த்து தான்.
பூ என்பது காம்பையும் சேர்த்து தான்.
கடல் என்பது நுரையையும் சேர்த்து தான்.
வாழ்க்கை என்பது ரணங்களையும் சேர்த்து தான்.
 
அறிந்து கொள்வாய் ஆண்மகனே அழகு மட்டும் வாழ்க்கையல்ல
வானவில் வானமாகி விடாது.
வானவில்லுக்கு ஆயுள் அற்பம்.
 
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது பெரிய யதார்த்த உண்மை.கல்லை சிற்பமாக்கின்ற திறமை,மண்ணை பண்டமாக மாற்றுகின்ற கலை,பொன்னை நகையாக வடிக்கின்ற வித்தை‍_அத்தனை திறமைகளின் மொத்த வடிவமே ஒரு பெண்.ஒரு ஆணை மனிதனாய் மாற்றுகிற மந்திரம் அவளுக்கு மட்டுமே தெரியும்.
  • கருத்துக்கள உறவுகள்

நம்மிடையே இருந்து மறைந்து கொண்டு போகும் பெருக்கு மரத்தின் இலை.ஐந்துவிரல்களைப்போல் இல்லையா....??

6709_539376632762823_814523897_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

379214_308497545919461_1857394536_n.jpg

 

'எரிநட்சத்திரம்' அறிவோம்!
 
ரஷ்யாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு எரிநட்சத்திரம் பெரிய பீதியை ஏற்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.

ரஷ்ய விஞ்ஞானிகள் 'இத்தனை மணிக்கு விழும் எனக் கணித்த நேரத்துக்கு முன்னமே விழுந்து விட்டது. யூரல் மலைப் பகுதியில் உள்ள செல்யபின்ஸ்க் என்ற இடத்தில் இந்த எரிநட்சத்திரம் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது.

 

அந்த நிகழ்வின்போது நிலநடுக்கத்தை போன்ற அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றது. பூமியை நோக்கி மிகவேகமாக பாய்ந்து வந்து பயங்கர வெடிச் சத்தத்தோடு வெடித்துள்ள இந்த எரிநட்சத்திரம் ஏற்படுத்திய அதிர்வலைகள் பல கட்டடங்களின் கண்ணாடியை நொறுக்கியது; மேற்கூரைகளும் இடிந்துள்ளன.
 
எரி நட்சத்திரங்கள் அளவில் சிறியவை; இவை இங்கேதான் விழும், எவ்வளவு நேரத்தில் விழும் என சொல்வது பலசமயங்களில் நடக்காமலே போய்விடும். ஒரு எரிநட்சத்திரம் இன்று இரவு பூமியை அடையும் என்றும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிட்டு இருந்தார்கள் வானியல் வல்லுனர்கள். அதற்கு முன்னாடியே வந்து, 'உள்ளேன் அய்யா' சொல்லி இருக்கிறது இந்த எரிநட்சத்திரம். அதேசமயம், ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றிருக்கிறது நாசா.

ரஷ்யாவில் விண்ணில் இருந்து விழுந்த எரிநட்சத்திரத்தால் உண்டான சிதறல்களால் 3,000 கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1000 பேருக்கு மேலானோர் காயம் அடைந்துள்ளனர். அந்த ரணகளத்திலும் எரிநட்சத்திரம் விழுவதை பலபேர் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்திருக்கிறார்கள். அவை யூடியூபில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

 

எது எரிநட்சத்திரம்..?

அணுவை விட அளவில் பெரிதாக, விண்கல்லை விட அளவில் சிறிதாக இருக்கும் பிரிவு வான்வெளி பிள்ளைதான் எரி நட்சத்திரம். விண் எரிகல் என்றும் இதைச் சொல்லலாம். METEOR என ஆங்கிலத்தில் குறிக்கப்படும் இந்த எரிநட்சத்திரம், கிரேக்க மொழியில் காற்றில் மிதக்கும் திடப்பொருள் என்று அர்த்தம் மீசோஸ்பியர் எனும் பகுதியில் இருந்து வரும். இவை கூழாங்கல் அளவில்கூட இருக்கும்; இவை பூமியை நோக்கி வரும்பொழுது, RAM அழுத்தம் எனும் பாய்ம ஊடகத்தில் ஏற்படும் இழுவிசையால் எரிந்து ஆவியாகி எரிந்து விழுகிறது. இவை அவற்றில் இருக்கும் தனிமங்களை பொறுத்து பல கலரில் தோன்றும் சோடியம் (ஆரஞ்சு) இரும்பு (மஞ்சள்) சிவப்பு (சிலிகேட்). சில சமயம் ஷவரில் நீர் கொட்டுவது போல பல ஏறி நட்சத்திரங்கள் ஒரே சமயத்தில் விழும்.

 

முகநூல் பகிர்வு
- பூ.கொ.சரவணன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
காதல் மொழிகள்
 
காதலின் தூதுவர்கள் கண்கள்
                                                       லத்தீன்
 
காதலில் கச‌ப்பும்,தேனும் கலந்தே இருக்கும்.
                                                                                  பிளாட்ஸ்
 
காதலர் கண்களுக்கு ரோஜா தான் தெரியும்.முட்கள் தெரியாது.
                                                                                                                     ஜப்பான்
 
தடைகள் தான் காதலுக்கு அதிக மதிப்பை கொடுக்கும்.
                                                                                                    வோகல்
 
திருமணத்தின் சூர்யோதயம் காதல்.
                                                                      பிரென்ஞ்
 
ஊனையும்,உயிரையும்,உணர்வையும் கட‌ர்ந்து தோன்றும் அன்பே காதல்.
 
 
                                                                                                                      நாமக்கல் கவிஞர்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Birth is like a Dot

Life is like a Line

Love is like a Triangle

But friendship is like a circle

Because

Circles don't have End.

 

 

.....................................................................................................................................

 

 

நீ நேசிக்கும் ஒன்று
உன்னை விட்டுப் பிரிந்தாலும்
உன் நேச‌ம் நிஜமானால்
அது உன்னை மீண்டும் 
தேடி வரும்
 
 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நாங்கள் சந்தோசமாய் இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை.
டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம் வாங்கிக்கொண்டு
ஓடி விடுவார்கள்
தீட்டுக் கறை படிந்த
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச் சந்தையில்
சகாயமாகக் கிடைக்கிறது
இச்சைய தணிக்க
இர‌வில் எப்படியும் இருட்டு வருகிறது
கால் நீட்டித் தலை சாய்க்க
தார் விரித்த ப்ளாட்பார‌ம் இருக்கிறது
திறந்த வெளிக் காற்று
யாருக்குக் கிடைக்கும்?
எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது.
எதுவும் கிடைக்காத போது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீர‌ணமாகி விடுகிறது.
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோச‌மாய் இருக்கிறோம்.
...........................................................................................................................................................................................................
எனக்குப்பிடிக்கும்
என்றறியாமலே
ஒலியெழுப்புகின்றன
பறவைகள்,
நான் விழுந்து
எழாத போதும்
விடிந்து விடுகிறது
பொழுது
கவிதையின் கணமொன்றை
கண்கள் துழாவ
காலடியில் பாய்ந்து மறைகிறது
கணங்கள் பிர‌வாகம்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
புல்லை விட அற்பமானது -மனிதனின் கவலை
எது விசம் பெரியவர்களின்- வார்த்தைகளை அலட்சியப்படுத்துவது
குருடனைக் காட்டிலும் குருடன் -பேராசைக்காரன்
மிகப் பெரிய எதிரி -சோம்பேறித்தனம்
மனிதனுக்கு பாதுகாப்புக் கவசம்- பொறுமை
உலகத்திலேயே கூர்மையான ஆயுதம் மனிதன்- கோபத்தில் பேசுகின்ற வார்த்தை.
மனிதன் நிதானம் தவறி கோபப்படும் போது அவன் வெளிப்படுத்தும் எல்லா வார்த்தைகளுமே கூர்மையான ஆயுதங்கள் தான்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உலகத்தில் உள்ள அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்
 
பசி வந்தால் பத்தும் மறந்து போகும்.காதல் வந்தால் பசியும் மறந்து போகும் :lol:
மனைவிக்கு பயப்படாத ஆண் பிரம்மச்சாரி :D
நீங்கள் ஒரு நிமிசம் கோபப் பட்டால் அறுபது செக்கன் சந்தோசத்தை இழக்கிறீர்கள்.உங்கள் ஆயுளில் ஒரு நாள் குறைகிறது :(
.............................................................
 
நட‌க்கும் போது காலில் குத்திய முட்களை விட‌
வாழ்க்கையைக் கட‌க்கும் போது மனதில் குத்திய முள்ளே வலித்தது
 
பலன் பார்ப்பதற்குள்
ரேகை மறைத்தது
மின்னல்
...........................................................................................................................................................................................
தலைக்கணம் கொள்!
 
என்னைப் பொறுத்த வரையில்,ஒரு மனிதன் தலைக்கணம் இல்லாமல் இருப்பதை விட‌, தலையில்லாமல் இருப்பதே மேல்.
 
கர்வங்கள் யாருக்கு வரும்? காரியங்கள் ஆற்றுகின்றவருக்கே,கர்வப்படும் படும்படி காரியம் எதையும் இந்த உலகத்தில் எவன் ஆற்ற‌வில்லையோ அவன் தன்னைச் சுமந்த கர்ப்பையை கவுர‌ப்படுத்தாத ஜட‌ம்.அவன் பிறப்பு அநாவசியமான ஒன்று.
 
தன்னைப் பற்றிய தலைக்கணம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்தால் தான் அவன் தலையெடுக்க இயலும்.
 
இதை சொன்னது நானில்லை கவிஞர் வாலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.