Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் பணத்தாசை காட்டி மக்களை வெடிபொருட்களிடம் சிக்கவைக்கும் படையினர்!

Featured Replies

முல்லைத்தீவில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்வாதரத்தினைக் கொண்டு நடத்த முடியாமல் வாழும் மக்களுக்கு பணத்தாசை காட்டி ஆபாத்தான வெடிபொருட்களிடம் சிக்க வைக்கும் நோக்கில் படையினரும் காவல்துறையினரும் இணைந்து துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு உள்ளனர்.

மேற்படி துண்டுப்பிரசுரங்கள் முல்லைத்தீவில் உள்ள பல பாகங்களிலும் வினையோகிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் ஒன்று கூடும் பொது இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

ஆபத்தான வெடிபொருட்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பது போல தயாரிக்கப்பட்டுள்ளள மேற்படி துண்டுப்பிரசுரம் மக்களை ஆபத்தான பாதைக்கு கூட்டிச் செல்லும் என்று அப்பகுதி பொது அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளது.

‘அபாயகரமான வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் வைத்திருப்பது ஆபத்தானது அப்பான மக்களே’ என்னும் தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள மேற்படி துண்டுப்பிரசுரம் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பாக படையினருக்கோ அல்லது காவல்துறைக்கோ அறிவிக்கும் படியும், அவ்வாறு அறிவிப்பதன் மூலம் சுமார் ஆயிரத்தி 500 ரூபாவில் இருந்து 10 ஆயிரம் ரூபாவினை பணப்பரிசாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

th.jpgஇவற்றிலும் மக்கள் இனங்காட்டும் வெடி பொருட்களினால் ஏற்படும் ஆபத்துக்கள் எவ்வளவு அதிகமானதோ, அதற்கேற்ப பரிசாக வழங்கப்படும் பணத்தின் தொகையும் அதிகரிக்கும் என்றும் குறித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பல பகுதிகளில் இருந்த வெடிபொருட்கள் அகற்றப்படாமல் உள்ளது. இவ்வாறான ஆபத்தான பகுதிகளுக்கு மக்கள் பணப்பரிசினைப் பெற்றுக் கொள்வதற்காக பொது மக்கள் சென்று ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் தேடி வருகின்றனர்.

பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி படையினரும் காவல்துறையினரும் இவ்வாறு மக்களை ஆபத்தான வெடிபொருட்களிடம் சிக்க வைப்பது கண்டிக்கத்தக்க விடையம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கண்ணிவெடிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரச சார்பற்ற அமைப்புக்களும், வடமாகான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரும் மேற்படி விடையத்தில் உள்ள ஆபத்தினை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதனால் ஏற்படும் ஆபத்தினையும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=37785

[size=4]இது கூட சிங்கள அரசின், சர்வதேச விதிமுறைகளை மீறும் செயல். ஆனால் வழமை போல மெழுகால் பூசப்பட்டுள்ளது. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு முள்ளிவாய்க்கால் போர் முடிவில் புலிகள் இயக்கத்தின் கீழ் இருந்து வேலை பார்த்தவர்களை வந்து பதியும் படி அறிவித்தல் வழங்கியபின்பு, அப்படி வந்தவர்களை கைது செய்து தடுப்பு முகாம்களில் சில காலங்கள் வைத்திருந்தார்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காப் படையினரின் பணப்பரிசுக்கு ஆசைப்பட்டு ஆபத்தான ஆயுதங்களை தேடும் கிளிநொச்சி மக்கள்

[ வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012, 07:59 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ]

ஆயுதங்கள் வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அவற்றை ஒப்படைத்தால், அதற்கு கணிசமான பணப்பரிசு வழங்கப்படும் என்று சிறிலங்காப் படையினர் அறிவித்துள்ளதால், கிளிநொச்சியில் ஆபத்தான வெடிபொருட்களைத் தேடும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட முற்பட்டுள்ளனர்.

கிளிநொச்சிப் படைத் தலைமையகத்தினால், வெளியிடப்பட்டுள்ள துண்டுபிரசுரம் ஒன்றில், ஆயுதங்கள், வெடிபொருட்களை வைத்திருப்பது சட்டவிரோதம் என்றும் அவற்றை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்கள் வெடிபொருட்களை வைத்திருப்போர் அவற்றை சிறிலங்கா படையினரிடம் ஒப்படைத்தால், அவற்றின் சேதக்கணிப்புக்கு அமைய பணப்பரிசு வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வீடு வீடாக சிறிலங்காப் படையினர் விநியோகித்து வரும் இந்தத் துண்டுபிரசுரத்தில், ஆயுதங்களுக்கு வழங்கப்படும் பணப்பரிசு பற்றிய விபரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தற்கொலைஅங்கி மற்றும் கனரக அல்லது இலகு இயந்திரத் துப்பாக்கிக்கு 15 ஆயிரம் ரூபா வரையும், ஆர்பிஜி உந்துகணை செலுத்தி மற்றும் ரி-56 ரகத் துப்பாக்கிக்கு 10 ஆயிரம் ரூபா வரையும், கைத்துப்பாக்கி, கிளைமோர், கவசஎதிர்ப்புக் கண்ணிவெடி போன்றவற்றுக்கு 5 ஆயிரம் ரூபாவும், கைக்குண்டுக்கு 2 ஆயிரம் ரூபாவும், இதில் உள்ளடக்கப்படாத ஆயுதங்களுக்கு அவற்றின் சேதக்கணிப்பின் அடிப்படையிலும் பணப்பரிசு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காப் படையினர் அறிவித்துள்ள இந்தப் பணப்பரிசுக்கு ஆசைப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல வறிய குடும்பங்கள் ஆயுதங்கள் வெடிபொருட்களை தேடத் தொடங்கியுள்ளன.

போரின் போது கைவிடப்பட்ட பெருமளவு ஆயுதங்கள், வெடிபொருட்கள் அகற்றப்படாமல் கிடக்கும் நிலையில், அவற்றை சிறிலங்கா படையினரிடம் கையளித்து பணப்பரிசைப் பெறுவதற்கான ஆபத்தான முயற்சியில் பொதுமக்கள் இறங்கியுள்ளனர்.

சிறிலங்காப் படையினர் பொதுமக்களை பண ஆசை காட்டி ஆபத்துக்குள் தள்ளுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20121122107322

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.