Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே பார்வையில் வரவு -செலவுத் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2013 பட்ஜெட் இன்று ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்படும்

இலங்கை அரசின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சம்பள உயர்வையும், நிவாரணங்களையும் மக்கள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் பரவலாக எதிர்பார்த் திருக்கும் நிலையில், பிற்பகல் 12.50 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் என்ற வகையில் இந்த வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கின்றார்.

இதையொட்டி நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியே யும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் நேற்று முதல் நாடாளுமன்றத்தினதும் அதைச் சூழவுள்ள பகுதிகளினதும் பாதுகாப்பை பொறுப்பேற்றுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரின தும் அறைகளும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவால் நேற்று துருவித் துருவி சோதனையிடப்பட்டன.

ஜனாதிபதியின் இன்றைய வரவு செலவுத் திட்ட உரை தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊடகவியலாளர்கள் அரச தகவல் திணைக்களத்தில் வைத்து ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரால் சோதனையிடப்பட்டு அங்கிருந்து நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

வரவுசெலவுத்திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளை முதல் டிசம்பர் மாதம் 8ஆம் திகதிவரை வரவுசெலவுத்திட்டம் மீதான விவாதம் இடம்பெற்று அது வாக்கெடுப்புக்கு விடப்படும்.

இந்த வரவுசெலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் கடந்த மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அச்சட்டமூலத்தின்படி அடுத்த ஆண்டின் மொத்த செலவுக்காக ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செலவுக்காக 28 ஆயிரத்து 950 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

08 நவெம்பர் 2012, வியாழன் 9:00 மு.ப

http://www.onlineuth...171593508413707

Edited by கறுப்பி

  • Replies 168
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13443747342033801358Nov-8-L.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பார்வையில் வரவு -செலவுத் திட்டம்

By General

2012-11-08 13:53:13

2013 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாட்டின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

பாராளுமன்றில் சமர்ப்பித்து உரைநிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

அவரது உரையின் பிரகாரம் வரவு -செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படுகின்ற விடயங்களை சுருக்கமாகத் தருகிறோம்.

2013 ஆம் ஆண்டு வடக்கில் மாகாண சபைத் தேர்தல்.

பாதுகாப்பு பிரிவினருக்காக 3 வருடங்கள் செல்லுபடியாகும் வகையில் நிவாரண வீட்டுக் கடன் வசதி. அதற்கென 2013 வரவு - செலவு திட்டத்தில் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வறிய பிரதேச மாணவர்களுக்காக சத்துணவும் சப்பாத்தும் வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் மாணவர்களுக்கு அரையாண்டுக்கு ஒரு தடவை சீருடை.

சுற்றுலாத்துறை வருமானமாக 2.5 பில்லியன் டொலர் எதிர்பார்க்கப்படுகிறது.

வறட்சியினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள் வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடன்கள் பெரும்போகம் வரை நீக்கம். வட்டி முற்றாக நீக்கம்.

நீர்ப்பாசன அபிவிருத்திக்காக 102 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

லக் சத்தொச விற்பனை நிலையங்களை ஆயிரமாக அதிகரிப்பதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திக்கு 2000 மில்லியன் ரூபா.

சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு ஹெக்ரெயர் ஒன்றுக்கான உதவித் தொகை 3 இலட்சத்திலிருந்து 3 இலட்சத்து 50 ஆயிரமாக அதிகரிப்பு

தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய, உற்பத்திகளின் தரத்தை முறையாகப் பேணிய பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு உதவி

ஆடைத் துறையிலிருந்து 5000 மில்லியன் டொலர் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.

2013 ஆம் ஆண்டில் பொலனறுவை, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நடத்தத்திட்டமிட்டுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கு 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்கத் தடை.

சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக 125 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

கல்வித் துறைக்கு 306 பில்லியன் ரூபா (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 வீதம்) ஒதுக்கீடு.

ஊடகவியலாளர், கலைஞர்களுக்கு வட்டியில்லா கடனைப் பெற்றுக்கொடுப்பதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு 25 வீத வரி

அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு 1500 ரூபாவாக அதிகரிப்பு

நிரந்தர வருமானமில்லாத 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5000 ரூபா

http://www.virakesari.lk/article/local.php?vid=1517

ஒரே பார்வையில் வரவு -செலவுத் திட்டம்

[size=5]சுற்றுலாத்துறை வருமானமாக [size=6]2.5 பில்லியன் டொலர்[/size] எதிர்பார்க்கப்படுகிறது.[/size]

[size=4]இந்த கணிசமான வருமானத்தில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு முக்கியமானது. அதேவேளை எம்மில் சில மக்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்தவண்ணம் உள்ளனர். நன்றிகள். [/size]

[size=6]TOURISTS TO "THINK AGAIN"[/size]

[size=5]http://www.yarl.com/forum3/index.php?showtopic=110857[/size]

[size=6]www.srilankacampaign.org[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை வரவு செலவு திட்டத்தில் சுகாதாரம் கல்விக்கு ஓரளவு நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கப்பட வேண்டியது அதே நேரம் பாதுக்காப்புக்கு தொடர்ந்தும் அதிக நிதி ஒதுக்கத்தான் வேண்டுமா என்பதனையும் ஆட்சியாளர்கள் சிந்தித்து அபிவிருத்தியை நோக்கி அந்த பணங்கள் திருப்பப் பட வேண்டும். விவசாயிகளின் வட்டிகள் இரத்து செய்யப்பட்டிருப்பது, மாணவர்களுக்கு பாதணி, உல் நாட்டில் பால் உற்ப்பத்தி மற்றும் பால்மா உற்பத்தியை ஊக்குவிக்க மேற்கொண்ட பொருட்களுக்கு அதிக வரி போன்ற நல்ல அம்சங்களையும் நாம் வரவேற்கின்றோம் .....

இந்த முறை வரவு செலவு திட்டத்தில் சுகாதாரம் கல்விக்கு ஓரளவு நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கப்பட வேண்டியது அதே நேரம் பாதுக்காப்புக்கு தொடர்ந்தும் அதிக நிதி ஒதுக்கத்தான் வேண்டுமா என்பதனையும் ஆட்சியாளர்கள் சிந்தித்து அபிவிருத்தியை நோக்கி அந்த பணங்கள் திருப்பப் பட வேண்டும். விவசாயிகளின் வட்டிகள் இரத்து செய்யப்பட்டிருப்பது, மாணவர்களுக்கு பாதணி, உல் நாட்டில் பால் உற்ப்பத்தி மற்றும் பால்மா உற்பத்தியை ஊக்குவிக்க மேற்கொண்ட பொருட்களுக்கு அதிக வரி போன்ற நல்ல அம்சங்களையும் நாம் வரவேற்கின்றோம் .....

நிதி ஒதுக்கினால் போதாது. செல்விடும் பணத்தில் நிதியாண்டில் வெட்டுவிழக்கூடாது. திட்டப்படி செலவிட வேண்டும். கொள்ளை அடிக்க கூடாது. கல்வி அமைச்சர் திசா நாயக்க நல்லவர் மாதிரி நடித்த ஒரு அடிமை. மேலும் 2007 ஆண்டு 5.4% GDP. இந்த ஆண்டு 4.1% GDP. கல்வித்தொகை உயர்வதாக மதிப்பிழந்த பணத்தை வைத்து கதை விடுகிறார்களாகும். சரியான கல்வித்துறை கருத்தாளர்கள் வெளிவிடும் புள்ளிவிபரம் தேவை.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMFன் ஆலோசனைக்கு அமைய தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாக இதனை அடையாளப்படுத்தலாம் - ஜே.வி.பி.

08 நவம்பர் 2012

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாக இதனை அடையாளப்படுத்த முடியும் என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. அரசாங்க ஊழியர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் எதிர்பார்புக்களை சூன்யமாக்கும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது என ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்நிய செலாவணி வரையறைகளை கவனிக்காது, தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழைய முறையில் தயாரிக்கப்பட்டு புதிதாக பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பண்டமாக வரவு செலவுத் திட்ட யோசனையை ஜே.வி.பி கட்சி நோக்குவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், வரவு செலவுத் திட்டத்தில் 750 ரூபா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

நிதி ஒதுக்கினால் போதாது. செல்விடும் பணத்தில் நிதியாண்டில் வெட்டுவிழக்கூடாது. திட்டப்படி செலவிட வேண்டும். கொள்ளை அடிக்க கூடாது. கல்வி அமைச்சர் திசா நாயக்க நல்லவர் மாதிரி நடித்த ஒரு அடிமை. மேலும் 2007 ஆண்டு 5.4% GDP. இந்த ஆண்டு 4.1% GDP. கல்வித்தொகை உயர்வதாக மதிப்பிழந்த பணத்தை வைத்து கதை விடுகிறார்களாகும். சரியான கல்வித்துறை கருத்தாளர்கள் வெளிவிடும் புள்ளிவிபரம் தேவை.

உலகிலே பல நாடுகள் கல்வியை வைத்து பணம் சம்பாதிக்கும் பொது இலங்கையில் ஆரம்பக்கல்வி முதல் உயர் கல்வி வரை இலவசம் தெற்காசிய நாடுகளின் சுகாதார சேவைகளை விட இலங்கையின் சுகாதரத்துறை பன்மடங்கு சிறந்தது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

[size=5]வரவு – செலவுத் திட்டம் பணக்காரர்களுக்கு உரியது: ஐ.தே.க[/size]

[size=4]வெளிநாட்டு வங்கிகளில் உள்ள நிதிகளை வேறு கணக்குகளுக்கு மாற்ற அனுமதியளித்துள்ள, பந்தய கார்களின் வரிகளை குறைத்துள்ள இந்த வரவு – செலவுத் திட்டம், நாட்டின் பெரும் பணக்காரர்களுக்கானது எனவும் இது பரந்துபட்ட மக்களுக்கு எந்தவொரு நிவாரணத்தையும் கொடுக்கவில்லை எனவும் ஐக்கிய தேசிய கட்சி கூறுகின்றது.

மக்கள் தொகையில் 99 சதவீதமானோரை இந்த வரவு – செலவுத் திட்டம் அந்தரத்தில் விட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறினார்.

இந்த வரவு – செலவுத் திட்டம் நாட்டின் சனத்தொகையில் 0.1 சதவீதமானோருக்காக கொண்டுவரப்பட்டது. யாருக்கு பந்தயக் கார்கள் தேவை? இது மக்களுக்கு உள்ள ஒரு பிரச்சினையா?

வெளிநாட்டு வங்கிகளிலுள்ள பணத்தை கேள்வியின்றி இலங்கைக்கு கொண்டுவர இது அனுமதியளிக்கின்றது. இது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுமென நான் நினைக்கின்றேன் என ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் விவசாயிகள், கடற்தொழிலாளர்கள், கடின வேலை செய்து உழைப்போருக்கு எந்தவித நன்மையும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கறுப்பு பணத்தை சுதந்திரமாக எடுத்துச் செல்லவும் கொண்டுவரவும் இந்த வரவு – செலவுத் திட்டம் வழி செய்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/52304-2013-.html

உலகிலே பல நாடுகள் கல்வியை வைத்து பணம் சம்பாதிக்கும் பொது இலங்கையில் ஆரம்பக்கல்வி முதல் உயர் கல்வி வரை இலவசம் தெற்காசிய நாடுகளின் சுகாதார சேவைகளை விட இலங்கையின் சுகாதரத்துறை பன்மடங்கு சிறந்தது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

இலங்கை ராஜபக்சா காலத்தில் திறந்து வைக்க பட்ட வரத்தக நிலையம் அல்ல.

1.)சுதந்திரத்தின் பின், அரசாங்கத்தின் இலவசம் என்ற ஏமாற்று வரும் முன்னர், இலங்கையின் 22 A தர பள்ளிகளில் 20 வடமாகாணத்தில் இருந்தது. மிகுதி இரண்டும் கொழும்பில் இருந்தது (றோயலும், சென் தொமசும்). பணம் படைத்த யாழ்ப்பாணத்தவர் முதலில் செய்ய முயல்வது ஒரு பள்ளி திறப்பது.(தமிழர்கள் பள்ளி திறப்பது சட்டங்களுக்கு எதிர் என்ற பின்னர் பலர் டூயூடறிகள் திறந்தார்கள்). வடமாகாணத் தேவையை ஈடு செய்ய ஆசிரியர்கள் தமிழ் நாட்டிலிருந்து கொண்டுவரப்படுவதுண்டு. இவற்றில் படித்த இலங்கை தமிழ் அறிஞ்ஞர்கள் தமிழ் நாட்டில் தமிழ் ஆய்வுகள் நடத்திக்கொண்டிந்தார்கள். இவற்றில் வந்து தங்கி சிங்களவர் படித்தார்கள். இலங்கையின் பட்டிப்பறவு யப்பானுக்கு சரிசமமாக இருந்தது. இலங்கையின் A/L இந்தியாவின் B.Sc க்கு சரி சமமாக பார்க்கப்பட்டது. இலங்கையில் சித்திபெறும் மருத்துவர், சட்டத்துறையினர், கணக்களர்கள் இங்கிலாந்தில் நேராக தொழில் ஆரம்பிக்க அனுமதிக்க பட்டிருந்தது.

இதை கச்சிதமாக சிதைக்க கன்னங்கரா 1969 ல் இலவச தாய் மொழிக்கல்வியை அறிமுகப்படுத்தி தமிழர்கள் பள்ளிகள் திறப்பதை தடுத்தார். பதியுதீன் தராதர கல்வியை அறிமுகப்படுத்தி தமிழர்களை படிக்க விடாமல் தடுத்தார். இன்று சர்வதேச நாடுகளில் ஒரு நாடும் A/L யை தவிர இ்லங்கை படிப்பை அங்கீகரிப்பதில்லை. அந்தக்காலத்தில் இலங்கையின் கல்வித்தரம் 87%. இன்று இலங்கை அரசு 90% ஏமாற்று அறிக்கை விடுகிறது. இது S.B. திசநாயாக்க 2007ம் ஆண்டின் 5.4% 2012 இல் 4.7% வீதமாக மாற்றியிருப்பதை உயர்கிறது என்று கூறியிருப்பது போன்றதே. நாடு பெருபான்மை இனத்தவரதே, அவர்கள் தங்கள் விருப்பம் போலத்தான் ஆழ்வர்கள் என்று வகுப்புவாதம் கக்கிய கன்னகராவால் இலவசகல்வி அறிமுகம் செய்யப்பட்டதன் காரணம் ஒரு இனத்துக்கு கல்வி மறுக்கவே. இதை த்மிழரசுக்கட்சி எதிர்த்துத்தான் பார்த்தது. அதில் இலங்கை பெருமைப்படலாம் என்றும் நினைக்கும் தமிழரின் அறிவை கன்னங்கரா தான் விரும்பியபடி சிதைத்துவிட்டார் எனபதுதான் பொருள்.

2.)1956 ஆண்டு வரை இலங்கைக்கு வெளிநாடுகள் கடன் பாக்கி கொடுக்க இருந்தது. இன்றைய மிகமுன்னேறிய தென் கொறியாவை பொருளாதாரத்தில் இலங்கை நிகர்த்திருந்தது. தனியார் வருமானம் தென் கொறியாவை விட நல்ல நிலையில் இருந்தது. இதில் சிங்களவர்களுக்கு பங்கில்லை. a. வெள்ளைக்கார முதலாளிகள், b). இலங்கைத் தமிழ் முகாமையாளர்கள் c). இந்திய தமிழ் தோட்டத்தொழிலாளிகள் தான் காரணமாக இருந்தார்கள். இன்று இலங்கை முகாமைத்துவ காரர்களுக்கு தேயிலையை விற்கமுடியாத அறிவு மட்டும்தான் இருக்கு. இதை இலங்கையின் பெருமை என்று நினைக்கும் தமிழர்களை J.R. வெளியேதுரத்த வேண்டும் என்று துரத்தி, அவர்கள் வெளிநாடுகளில் நாடற்ற பிச்சைகாரர்களாக வாழ செய்ததால் வரும் நினைப்பு.

3. 1968 இல் என்று நினக்கிறேன். ஐ.நா யாழ்ப்பாணத்து வைத்திய சாலைகளையும் பிறந்த பிள்ளைகளின் இறப்பு வீதங்களையும் கணக்கு பார்த்துவிட்டு லண்டன், நியூயோர் போன்ற மாநகரங்களை யாழ்ப்பாணம் தாண்டிவிட்டதாக புகழ்ந்திருந்தது. இன்று இலங்கையிலேயே மிகத்தாழ்ந்த நிலையில் இருப்பது யாழ்ப்பாண, வன்னி, மட்டக்களப்பு சுகாதார நிலைமைகள். இதை இலனகையின் பெருமை என்று நினைப்பவர்கள் அகதிநாடுகளில் மேற்குநாடுகளால் மருத்துவ காப்புறுகள் மறுக்கப்பட்டு அவதிப்பட்டவர்களே.

மற்றைய பெருமைகள்.

5.உலகில் போர்குற்றம் ஐ.நாவால் சாட்டப்பட்ட நாடுகளில் ஒன்று.

6.உலகில் பத்திரிகையாளர்கள் கொலையில் 4ம் இடம்.

7.உலகில் உழைப்பில்லாமல், படிப்பில்லாமல் பாலியல் தொழில் வேகமாக வளரும் நாடு.

8.உலகில் மூன்றதர நாடுகளில் ஒன்றாக கணிக்கப்படும் நாடு

9.உலகின் முன்னணி மூளை ஏற்றுமதி நாடு.

10. உலகின் மிகப்பெரிய அகதி ஏற்றுமதி நாடுகளில் ஒன்று.

.........

..........

மிகுதி

புள்ளிவிபரங்கள் தெரிந்தவர்கள் நிரப்ப விடப்பட்டுள்ளது

Edited by மல்லையூரான்

[size=6]வரவு – செலவுத் திட்டம் பணக்காரர்களுக்கு உரியது: ஐ.தே.க[/size]

[size=5]கறுப்பு பணத்தை சுதந்திரமாக எடுத்துச் செல்லவும் கொண்டுவரவும் இந்த வரவு – செலவுத் திட்டம் வழி செய்துள்ளது என்று அவர் மேலும் கூறினார். [/size]

[size=4]இதன் ஒரு பகுதி புலம்பெயர் தமிழர்களையும் குறி வைக்கும். பிளவுகளை ஏற்படுத்த, சில ஊடகங்களை பலப்படுத்த, சில பிரமாண்டமான நிகழ்வுகளை ஏற்படுத்த, பலரை வேண்ட என விழுதுகள் விட்டு வளரலாம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை அண்ணா நீங்கள் யாழ் பாணத்தை மட்டும் வைத்து ஏன் கணக்கு போடுகின்றிகள்? முழு இலங்கையையும் பாருங்கள் இலங்கை முழுவதும் தமிழர்கள் இருக்கினம் தானே அந்த வகையில் இலவச கல்வி மற்றும் மருத்துவத்தியின் பயனை சாகரும் அனுபவிக்கின்றார்கள் ஓன்று சிறுபான்மையினருக்கு அதிக அதிகாரம் தரப்பட வேண்டும் மற்றது மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் ஒரு அரசை முற்று முழுதாக எதிர்த்து நான் கட்சி நடத்தி விட முடியாது அந்த அரசு செய்கின்ற kondu வருகின்ற நல்ல திட்டங்களை பாராட்டி அதே நேரம் செய்கின்ற பிழைகளை சுட்டிக்காட்ட வேண்டும் அது தான் என்னுடைய அரசியலுக்கு அழகு அதனால் தான் budget இல் பல திட்டங்களை பாராட்டி அதே நேரம் பாதுகாப்பு தரப்புக்கு தொடர்ந்தும் அதிக நிதி ஒதுக்கப்படுவது மீள் பரிசிலனை செய்ய வேண்டும் என்று அறிக்கை விட்டுருந்தேன் :D

[size=6]வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்கத் தடை[/size]

[size=2]

[size=4]•2013 ஆம் ஆண்டு வடக்கில் மாகாண சபைத் தேர்தல்.[/size][/size][size=2]

[size=4]•பாதுகாப்பு பிரிவினருக்காக 3 வருடங்கள் செல்லுபடியாகும் வகையில் நிவாரண வீட்டுக் கடன் வசதி. அதற்கென 2013 வரவு – செலவு திட்டத்தில் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு[/size][/size][size=2]

[size=4]•ஆடைத் துறையிலிருந்து 5000 மில்லியன் டொலர் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.[/size][/size][size=2]

[size=4]• வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்கத் தடை.[/size][/size]

http://www.alaikal.com/news/?p=116717

மல்லை அண்ணா நீங்கள் யாழ் பாணத்தை மட்டும் வைத்து ஏன் கணக்கு போடுகின்றிகள்? முழு இலங்கையையும் பாருங்கள் இலங்கை முழுவதும் தமிழர்கள் இருக்கினம் தானே அந்த வகையில் இலவச கல்வி மற்றும் மருத்துவத்தியின் பயனை சாகரும் அனுபவிக்கின்றார்கள் ஓன்று சிறுபான்மையினருக்கு அதிக அதிகாரம் தரப்பட வேண்டும் மற்றது மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் ஒரு அரசை முற்று முழுதாக எதிர்த்து நான் கட்சி நடத்தி விட முடியாது அந்த அரசு செய்கின்ற kondu வருகின்ற நல்ல திட்டங்களை பாராட்டி அதே நேரம் செய்கின்ற பிழைகளை சுட்டிக்காட்ட வேண்டும் அது தான் என்னுடைய அரசியலுக்கு அழகு அதனால் தான் budget இல் பல திட்டங்களை பாராட்டி அதே நேரம் பாதுகாப்பு தரப்புக்கு தொடர்ந்தும் அதிக நிதி ஒதுக்கப்படுவது மீள் பரிசிலனை செய்ய வேண்டும் என்று அறிக்கை விட்டுருந்தேன் :D

நீங்கள் பராட்டிய விசயங்களை நான் ஒதுக்கிவிடவில்லை. நான் மேலதிக விபரம் தந்திருந்தேன். விளங்க அவ்வளவு கஸ்டமாக இருந்தால் இன்னும் ஒருமுறை முயற்சித்து பார்ப்போம்.:

மகிந்ததான் இன்று அரசு நடத்துகிறார். அவர் 2007 ம் ஆண்டு 5.4% கல்வி செலவை 4.7% வீதமாக மாற்றியிருக்கிறார். இதில் அவரை யாரவது பாராட்டுவது தனைத்தான் ஏமாற்றுவது. நீங்கள், இந்த பட்ஜட்டில், இலங்கை அரசின் பாராட்ட தக்க விசையமாக எனக்கு எடுத்துக் கூறிய விசையம். கன்னங்கராவின் அரசியல் தெரிந்தவரிடம் கேட்டால் தெரியும், மகிந்த அரசுக்கும் இலவசக்கல்விக்கும் தொடர்பில்லை என்பதும், அதை கன்னங்கரா கொண்டுவந்தது சிங்கள மக்களுக்கு நன்மைக்காவல்ல என்பதும். இலவசக் கல்வியை வைத்து நீங்கள் மகிந்தாவை புகழ்வது தற்கால அரசியல் செய்திகளை வாசிக்கிறீர்கள் இல்லை என்பதைத்தான் சொல்கிறது. மகிந்தா அரசாங்கம் இலவசக்கல்வியின் செலவீனத்தை வெட்டிக்கொண்டுவருகிறார்கள் என்பதுதான். உண்மை. அது விரைவில் இலங்கையில் பட்டப்படிப்பபை தனியார் மயப்படுத்த செய்யப்படும் முன் வினையாகும். இதனால்த்தான் பட்டப்படிப்புத்துறை மகிந்தவுக்கு எதிராகசெயல்ப்படுகிறது. பட்ஜட் செவீனத்தை பழைய நிலைக்கு திருப்பி எடுத்தால், அவர்கள் நினக்கிறார்கள், அரசு பட்டப்படிப்பை தொடாது என்று. ஆனால் திருவாளர்கள் 5%, 10%,15%... 95%கள் அவ்வாறு நினைக்கவில்லை. தேயிலை விற்றும் காசும் வாருவது கிடையாது. ஆகவே தனியார் மயப்படுத்தும் திட்டம் பல்கலைக்கழக வட்டத்திற்கு மேலே போய்த்தான் தீரும். அதை அவுசிலிருந்து புகழ்ந்து திருவாளர்கள் 5%, 10% 15,%...95% வீதங்கள் விட்டுக்கொடுத்துவிடுவார்கள் என்று நினைத்து பலன் வராது. இரண்டொரு வருடங்களில் மகிந்தா தனியார் மயப்படுத்தும் சட்டங்களை பாராளுமன்றத்தில் சமர்பிப்ப்பார். விரைவில் A/L சறுக்கியோர் சீன மொழியில் மருத்துவம் பட்டம் பெறலாம். அல்லது நாமலுடன் AC roomமிலிருந்து சட்டச்சோதனை எழுதிவிட்டு சட்டத்துறையில் வேலை செய்யலாம்.

அடுத்து நீங்கள் புகழ்ந்தது சுகாதாரம். நான் சிறுவனாக இருந்த போது கொழும்பு(யாழ்ப்பாணம் அல்ல) பெரியாஸ்பத்திரியில் இரண்டு "அன்ரன் பிறதேர்ஸ்" இருந்தை பற்றி சொல்வார்கள். உலகப்பிரசித்தி பெற்றிருந்த தமிழ் அறுவை சிகிச்சை நிபுணர்கள். அங்கு மருத்துவர், மருந்தாளர், தாதிகள் பக்கங்களில் கடமையாற்றியவர்கள் கிட்டத்தட்ட எல்லோரும் தமிழர்கள். ஜெயப்பூர், அப்போலோக்கள் மட்டும்மல்ல மலேசியாவில்(சிங்கபூர் பிரிய முதல்) மட்டுமல்ல "Colombo General" என்றால் மேற்கு நாடுகளுக்கு, யப்பனுக்கு நிகர்த்த தரம். இன்றைய நிலை, திறந்த அப்போலோவை கூட ஒரு திருவாளர் 100% வீதம் சட்டத்திற்கு முரணானதாக மாற்றி, முதல் ஒன்றுமே போடாமல், சுறா பிடித்ததுதான் இந்த அரசாங்கத்தில் நடந்த புகழத்தக்க சுகாதாரசேவை. இலவச வைத்திய சலைகள் எல்லாம் இந்த அரசாங்கத்தில் ஊழல் நிறைந்தவையாகிவிட்டன. யாழ்ப்பணம் பெரியாஸ்பத்திரியை யார் ஆழுகிறார்கள் என்பதை பற்றி யாழில் நிறைய படித்துவிட்டோம். இதிலிருந்து ஏன் மற்றைய பெரியாஸ்பத்திரிகளில் தனியார் ஆட்சிகள் நடக்காது என்று சந்தேகிக்காமல் முடியாது. அதை அரசு "தனியார் மயப்படுத்தலாம்" என்ற செய்தியை நான் இன்னமும் பட்டிக்கவில்லை. ஆனால் திருவாளர்கள் வீதங்களும், தேயிலை ஏற்றுமதியும், சீனா அரசாங்க கொடுப்பனவுகளும், தேவை ஏற்படில், அதை மாற்றும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதை தான் மகிந்தாவின் அரசின் புகழாக சொல்லாம்.

Edited by மல்லையூரான்

ஒரு அரசை முற்று முழுதாக எதிர்த்து நான் கட்சி நடத்தி விட முடியாது அந்த அரசு செய்கின்ற kondu வருகின்ற நல்ல திட்டங்களை பாராட்டி அதே நேரம் செய்கின்ற பிழைகளை சுட்டிக்காட்ட வேண்டும் அது தான் என்னுடைய அரசியலுக்கு அழகு

நீங்கள் ஈரானுடன் சேர்ந்து கொலோகோஸ்ட் நடவில்லை என்று கூறலாம். அதை நிறுவுபவர்களுக்கு ஈரானுடன் சேர்ந்து பரிசளிக்கலாம். ஆனால் கக்கீம், பிள்ளையான், தேவானந்தா யாரும் இன்னமும் ஒரு படி முன்னால் போகவில்லை. பல படிகள் சறுக்கிவிட்டாரகள். தேவானாந்தா என்றுமே முதலமைச்சர் ஆக வரமுடியாது. பிள்ளையானை கிழக்கில் முதலமைச்சர் பதவிக்கு ஒதுக்கிவிட்டது மட்டும் அல்ல ஒரு சிறு மந்திரி பதவி கூட கொடுக்கவில்லை. முட்டாள் மாதிரி தனக்கு சட்டத்தில் இருந்த பாதுகாப்பை கையெழுத்துபோட்டு கொடுத்து மகிந்தாவை ஆதரித்தான். கக்கீம் தேர்தலில் வெளி நின்றவர் ஆனால் உள்ளே போய் மகிந்தாவை ஆதரித்து தான் கேட்ட கப்பல் துறை, முதல் அமைச்சர் பதவி எல்லாம் போய் 13ம் திருதம் கூட அவர்களுக்கு எதிராக போக போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களுக்கு மேலதிக சீருடை பாதணி விவசாயிகளின் வட்டி தள்ளுபடி உள்ளூர் பால் உற்பத்தியை ஊக்குவித்தல் மானிய அடிப்படையில் உரம் என்று நல்ல அம்சங்களும் இருக்கின்றது பொருளாதார தேக்க நிலை எங்கு தான் இல்லை அமெரிக்கா தொடக்கம் இந்திய வரை கடன் கடன் கடன் என்னை பொருததவரை பாதுகாப்பு அமைச்சிற்கு அதிக நிதி ஒதுக்கிடு தவிர பெரும்பாலான அறிவிப்புகள் நல்லம் முக்கியமா எல்லா அறிவிப்புகளும் எல்லா மக்களையும் போய்ச்சேர வேண்டும் அது தான்

மற்றது இன்றும் தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பொது சுகாதாரத்துறை மேன்பட்டது தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

மற்றறொரு சிறப்பு திட்டம் வருமானம் இல்லாத முதியவர்களுக்கு 5000 இது முதியவர்களை மற்றவர்களில் தங்கி வாழும் சுமையை குறைக்கும் ஒரு வேலையாவது வயிறார உணவு உண்பார்கள் பிள்ளைகள் முதியோரை கைவிடுவது குறையும்

இபோளுதேல்லாம் கைதடி முதியோர் இல்லத்தில் வருவுகள் கூடி உள்ளனவாம் :(

[size=6]வரவு - செலவுத்திட்ட பற்றாக்குறை ரூ.507.4 பில்.[/size]

01(735).jpg

அமெரிக்கவை நான் புகழ வரவில்லை. அது இதில் தேவை இல்லாதது. அமெரிக்காவின் கடனை இலங்கையின் கடனுடன் ஒப்பிடுவது, பொன்னுருக்கி சாப்பிடுபவனை சொதிகூட இல்லாமல் சோறு சாப்பிடுபவனுடன் ஒப்பிடுவதுதான். ஆனைக்கு பானை சரி போலத்தெரிவதுண்டு.

தமிழ் மாணவர்கள் அல்ல சிங்கள மாணவர்கள் வாக்குறிதிகளில் கொடுக்கப்பட்ட பாடப்புத்தங்களுக்கு திண்டாடுகிறார்கள். பட்ஜட்டில் வரும் இந்த உடுப்பு வாக்குறிதிகள் யாருக்கு தேவை? பட்டப் படிப்பு தனியார் மயமாகப்போகிறது. இறால் போட்டு சுறாப்பிடிபதை புகழத்தான் வேண்டுமா? O/L எடுத்த மாணவர்களின் தாழ்களை திருத்த யாரும் அங்கில்லை என்பதுதான் உண்மை. பல்கலைகழக உத்தியோகத்தர்கள் சம்பளம் போதாமையால் மறுத்துவிட்டார்கள். வெளிவரும்/ வந்த மறுமொழிகள் தில்லுமுல்லுகள் நிறைந்ததாகத்தான் இருக்கும். யாரும் தட்டிகேட்க முடியாது.

விவாசிகளின் இன்றைய கடன் விபரங்களை தெரியாது அவர்களுக்கு என்றுமே எல்லா அரசாங்களும் கடன் கொடுத்துத்தான் வந்தது. டட்லிதான் இதில் பேர் போயிருந்தார். இது ஒன்றும் புதிதில்லை. இது GDP இன்று என்ன வீதம் முன்னர் என்ன வீதம் என்பதை ஒப்பிடுவிட்டு புகழ வேண்டும்.

car.jpg

மற்றறொரு சிறப்பு திட்டம் வருமானம் இல்லாத முதியவர்களுக்கு 5000 இது முதியவர்களை மற்றவர்களில் தங்கி வாழும் சுமையை குறைக்கும் ஒரு வேலையாவது வயிறார உணவு உண்பார்கள் பிள்ளைகள் முதியோரை கைவிடுவது குறையும்

இபோளுதேல்லாம் கைதடி முதியோர் இல்லத்தில் வருவுகள் கூடி உள்ளனவாம் :(

கடன் பட்ட விவசாயிகளுக்கு மகிந்த போக ஒரு இடம் கண்டுபிடித்திருக்கிறார் :)

சூரியபுரம், கோப்பில்ல ம்க்களும் அங்கு போய்விடத்தானாம் தீர்மானம். :rolleyes:

மாணவர்களுக்கு மேலதிக சீருடை பாதணி விவசாயிகளின் வட்டி தள்ளுபடி உள்ளூர் பால் உற்பத்தியை ஊக்குவித்தல் மானிய அடிப்படையில் உரம் என்று நல்ல அம்சங்களும் இருக்கின்றதுதான்

[size=4]பாடசாலை மாணவர்களுக்கான நிவாரணங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கும் போது , [/size]

[size=4]'கஷ்டப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் அலரி மாளிகைக்கு வரும் போது கிழிந்த பாதணிகளை அணிந்திருந்தனர். இதனைப் பார்த்த எனது மனம் சங்கடத்துக்குள்ளாகியது' என்றார்.[/size]

[size=4] :wub:[/size] :wub:

மற்றது இன்றும் தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பொது சுகாதாரத்துறை மேன்பட்டது தான்

எங்கோ இருந்த இலங்கை மாலைதீவுக்கு கீழே போகும் வரை மகிந்தாவின் 2013 வரவு செலவு திட்டத்தை புகழாமல் விடப்போவதில்லை. :unsure:

எல்லாச்செலவையும் வெட்டித்தான் பாதுகாப்பு செலவுக்கு கொடுக்க முடியும் என்பதை கணிதம் அறிந்தவர்கள் அறிவார்கள். மற்றவர்கள் அஸ்வருடன் சேர்ந்து மகிந்த நாமத்தை புகழ்வதுதான் சொல்ல வேண்டிய மந்திரம் என்றுதான் வாதாடுவார்கள். எல்லாவற்றையும் வெட்டித்தான் பாதுகாப்பு செல்வீனத்தை கூட்டினார். அதுதான் இந்த பட்ஜெட்டின் புகழ்சிக்குரிய இயல்பென்றுதான் நீங்களே சொல்கிறிர்கள்.

[size=4]பாடசாலை மாணவர்களுக்கான நிவாரணங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கும் போது , [/size]

[size=4]'கஷ்டப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் அலரி மாளிகைக்கு வரும் போது கிழிந்த பாதணிகளை அணிந்திருந்தனர். இதனைப் பார்த்த எனது மனம் சங்கடத்துக்குள்ளாகியது' என்றார்.[/size]

[size=4] :wub:[/size] :wub:

முட்டாள், மக்களின் அவலங்களை எனக்கு தெரியாது எங்கிறார். அதனால் தான் திட்டமில்லாத, உணர்ச்சிவசமான, மக்களை ஏமாற்றும் பட்ஜெட் போடுவதாக சொல்கிறார். :D

பாதிக்கப்பட்ட தமிழ்மக்களை கைவிட்டு படைகளுக்கு அள்ளிக் கொடுத்த பட்ஜெட்

இலங்கையின் 66ஆவதும் மஹிந்த அரசின் 8ஆவதுமான வரவு செலவுத் திட்டம் (நிதி நிலை அறிக்கை) நேற்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த இரண்டு வருடங்களைப் போன்றே இந்த நிதி நிலை அறிக்கையிலும், போரில் வெற்றி ஈட்டிய படையினருக்கு அதிக சலுகைகள் அறிவிக்கப்பட்டபோதும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித சலுகைகளோ, நிவாரணங்களோ வழங்கப்படவில்லை.

விண்ணுக்கு எகிறி வரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் இந்த நிதி நிலை அறிக்கை தரவில்லை. அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான சிறிய சம்பள அதிகரிப்புத் தவிர மக்களை மகிழ்விக்கக் கூடிய

வேறு எந்த அம்சங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லை.

நேற்று நண்பகல் 12.59 மணிக்கு மஹிந்த தனது நிதி நிலை அறிக்கை உரையை வாசிக்க ஆரம்பித்தார். 3.35 மணிக்கு அதனை நிறைவு செய்தார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலை வாய்ப்பின்மை, எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் இயற்கை அழிவுகளாகல் சர்வதேச பொருளாதாரத்துடன் சேர்ந்து இலங்கை பின்னடைவுகளைச் சந்தித்த போதும் நாட்டை மீளக் கட்டியெழுப்பி அபிவிருத்தியை நோக்கிக் கொண்டு செல்லப் போவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிதி நிலை அறிகையில் நிவாரணங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்படாததன் காரணத்தால் இது தேர்தலை இலக்கு வைத்தது அல்ல என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பொருள்களின் விலைக் குறைப்பு, போக்குவரத்துச் செலவுக் குறைப்பு என்பவற்றை எதிர்பார்த்திருந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஆனால், "இது வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட நிதி நிலை அறிக்கை'' என்று நிதி அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்றுமதிக்கான வரிக் குறைப்புக்கள் எதிர்பார்க்கப்பட்ட போதும் அவை கிடைக்கவில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://onlineuthayan.com/News_More.php?id=865591596409611557

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபை முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் - ஜனாதிபதி

09நவம்பர் 2012

மாகாணசபை முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் 66ம் வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் காணப்படும் மாகாணசபை ஆட்சி முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மாகாணசபை முறைமையில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் நாட்டுக்கு மக்களுக்கு காத்திரமான அதிகாரப் பகிர்வினை வழங்க முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிகாரப் பகிர்வானது நாட்டை பிளவுபடுத்தும் வகையில் அமையக் கூடாது எனவும் அது நாட்டை ஐக்கியப்படுத்த வேண்டுமெனவும் அவர் சுட்டிக்கட்டியுள்ளார். சகலருக்கும் சமவுரிமை, கல்வி, சுகாதார, தொழில் வாய்ப்புக்களையே நாட்டின் அனைத்து தரப்பினரும் கோரி நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மாகாண ரீதியான ஏற்றத்தாழ்வுகளை களைவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85240/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.