Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொம்பிளைப் பிள்ளைகள் கேளுங்கோ

Featured Replies

நண்பர்களுக்கு ஓரிரு வார்த்தைகள்.

எல்லாருக்கும் மணிவாசகனின் வணக்கங்கள். இந்தக் கவிதையும் கொஞ்சம் நீளமாத் தான் போச்சுது. அதுக்காக கோவிச்சுக் கொண்டு இடையிலை நிப்பாட்டிப் போடாமை முழுக்க வாசியுங்கோ சும்மா ஆக்களைக் கவரத் தான் இப்படித் தலைப்பு ஒண்டு போட்டனான். அதுக்காக ஆம்பிளைப் பிள்ளையள் வாசிக்காமை விட்டிடாதேங்கோ. ஆம்பிளைப் பிள்ளைகள் பொம்பிளைப் பிள்ளைகள் எல்லாம் என்ரை கவிதையை முழுசா வாசிச்சுப் போட்டு என்ரை கவிதை மாதிரி நீளமா உங்கடை விமாசனத்தை எழுதுங்கோ. நல்ல பிளைளைகள் தானே. இப்ப கவிதையைத் தொடங்கட்டே?

சீர்தூக்கிப் பாருங்கள்

சீரழிவாய்ப் போய்விட்ட

சீதனம் செய்துவிட்ட

சிறுமையினைப் பாரென்று

சினந்திருக்கும் பெண்களுக்கு

சந்தோச வாழ்க்கைக்கு

சாபமாய்ப் போய்விட்ட

சவக்கிடங்கைப் பாரென்று

சலித்திருக்கும் பெண்களுக்கு

அடுக்காத செயலாலே

அழிந்தவர்கள் பெண்களென்று

ஆண்மகரைத் திட்டிநிற்கும்

அன்பான பெண்களுக்கு

தமிழரிடை பரவிவிட்ட

தறிகெட்ட வழக்கத்தால்

இனிமையான வாழ்க்கையினை

இழந்தவர்கள் நாங்களும்தான்

அநியாயச் சடங்காலே

ஆடவர்க்கு அழிவேது

அலட்சியமாய்க் கேட்போர்க்கு

அடியேன்நல் உதாரணமாம்

சீர்கெட்ட சீதனத்தால்

சிதைந்தவர்பெண் மட்டுமென்ற

சிந்தனையை உம்மிடத்தில்

சிதைத்துவிடும் எந்தன்கதை

தறிகெட்ட வழக்கத்தால்

தகர்ந்தவர்பெண் மட்டுமென்ற

தர்க்கத்தைத் தவிர்ப்பதற்காய்

தருகின்றேன் என்கதையை

இளமைப் பருவத்தின்

இனிய கனவுகளை

இதயத்தில் சுமந்தவனாய்

இசைபாடித் திரிந்தவன்நான்

எதிர்கால வாழ்வுபற்றி

எத்தனையோ எண்ணங்கள்

என்னவளைப் பற்றித்தான்

ஏராளம் கற்பனைகள்

பணக்காரி தேவையில்லை

பகட்டுகளும் தேவையில்லை

பல்கலை சென்றுபெற்ற

பட்டமும் தேவையில்லை

பதியாகப் பாவித்து

பணிந்திடவும் தேவையில்லை

எஜமானாய்ப் பாவித்து

எனக்குழைக்கத் தேவையில்லை

தலைவன்நீ என்றுசொல்லி

தவறிழைக்கும் போதெல்லாம்

தஞ்சாவுூர்ப் பொம்மையாகத்

தலையாட்டத் தேவையில்லை

தவறொன்று செய்துவிட்டால்

தட்டிக் கேட்கவெண்டும்

பிழையொன்று செய்துவிட்டால்

பிழையென்று சொல்லவெண்டும்

இன்பமோ துன்பமோ

இணையாகப் பகிர்ந்துகொள்ள

உற்றதுணை ஒன்றைத்தான்

உண்மையிலே தேடிநின்றேன்

என்துணையாய் வரப்போகும்

என்னவளைப் பற்றியெந்தன்

அடிமனதில் பதிந்திட்ட

ஆயிரமாம் கற்பனைகள்

தமிழர் குடும்பத்தில்

தலைமகனாய்ப் பிறந்ததனால்

ஆசைக் கனவெல்லாம்

ஆகாயக் கோட்டையாச்சு

கல்யாணச் சந்தையிலே

கழுத்தை மெல்லநீட்டுதற்காய்

அடுக்கடுக்காய் காத்திருந்த

அன்பான சோதரிகள்

அவர்தம் வாழ்க்கையினை

அழகாக அமைப்பதற்காய்

அடிமனதில் பதிந்திருந்த

ஆசைகளை எரித்துவிட்டேன்

சகஉதர வாழ்க்கைக்காய்

சகலதையும் மறந்தேநான்

எட்டாத கொப்பொன்றை

எட்டிப் பிடித்துவிட்டேன்

வந்தவளைப் பற்றியும்நான்

வரைந்திடுவேன் நான்குவரி

வரைந்து முடிப்பதற்குள்

வந்துவிட்டால் பெருஞ்சமர்தான்

பலலட்சம் சொத்துள்ள

பணக்காரி என்மனைவி

வளமான குடும்பத்தின்

வாரீசாம் என்மனைவி

பணத்திற்கு மட்டுமல்ல

பகட்டிற்கும் குறைவில்லை

செல்வத்தில் மட்டமல்ல

செருக்கிற்கும் குறைவில்லை

அணிகலனில் மட்டுமல்ல

ஆணவத்தில் குறைவில்லை

தங்கத்தில் மட்டுமல்ல

தலைக்கனத்தில் குறைவில்லை

பணம்கொடுத்து வாங்கியதால்

பரிகாசம் செய்கின்றாள்

விலைகொடுத்து வாங்கியதால்

வீணனாகப் பார்க்கின்றாள்

கணவனென்னை மதிக்கவில்லை

கர்வத்தால் மிதிக்கின்றாள்

புருசனென்று பார்க்கவில்லை

புல்லென்று தூற்றுகின்றாள்

கைநீட்டி வாங்கியதால்

கைகட்டி நிற்கின்றேன்

பலலட்சம் வாங்கியதால்

பதிலின்றி நிற்கின்றேன்

விலைபோன காரணத்தால்

விதியைநொந்து நிற்கின்றேன்

தீனி போடமட்டும்

திறக்கின்றேன் என்வாயை

என்கதையைக் கேட்டதுமே

எதற்காக அழுகின்றீர்

என்னைப்போல் வாழ்விழந்தோர்

ஏராளம் இவ்வுலகில்

இச்சடங்கு இனிமேலும்

இருக்கவேண்டாம் இம்மண்ணில்

அடுத்தவர்நல் வாழ்க்கைக்காய்

அழித்திடுவோம் இந்நிலையை

தமிழ்மக்கள் மகிழ்ச்சியினை

தடுத்துநிற்கும் இவ்வழக்கை

ஒழித்துவிட வேண்டுமென்றால்

ஒன்றுபட்டு முயலவேண்டும்

ஆவேசம் கொண்டதனால்

அறிவிழந்து நிற்கின்றீர்

அமைதியாய்ச் சிந்தித்து

அணிதிரள வந்திடுவீர்

உங்கள் மகனுக்கு

உரியதுணை தேடுங்கள்

வியாபாரச் சந்தையிலே

விற்பனைக்கு வைக்காதீர்

அடுக்காத வழக்கத்தை

அழிப்பதற்காய் உம்முடனே

அணிதிரள எப்போதும்

ஆண்மக்கள் நாம்தயாரே.

அன்புடன்

மணிவாசகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையோ அருமை.. மணிவாசகனின் கவிவரிகைள் உண்மை சொல்லுது...

திருமணச்சந்தையில் நிற்கும் ஒவ்வொரு ஆண்மகனும் இதை செவிமடுத்தால்.. தலைமகன்கள் தலைகளும் தப்பிக்கொள்ளும். ஆண்மகனாய் அண்ணன் சீதனம் இன்றி பெண்ணெடுத்தால் அல்லவோ.. தங்கைகளை சீதனம் இன்றி கட்டி வைக்க முன்வரலாம்.. பாவப்பட்ட ஜென்மங்கள் ஆண்கள் ..

விலை கொடுத்து வாங்கிய துணையை பண்டமாய் நடந்திறார் போலும்.

பணம்கொடுத்து வாங்கியதால்  

பரிகாசம் செய்கின்றாள்  

விலைகொடுத்து வாங்கியதால்  

வீணனாகப் பார்க்கின்றாள்  

அன்பால் இணைந்திருந்தால் அதன் நிலையே வேறாய் இருந்திருக்கும்.. அன்பால் இணைந்து இனி இல்லறத்தில் நல்லாட்சி செய்ய வாழ்த்துக்கள்.

அற்புதமான, அழகான, மெய்யான வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்ட அருமையான கவிதை வரிகள் மணிவாசகன் அண்ணா.

உங்களின் வாழ்க்கைக்கும் இப்படியொரு சோதனையா?

அது சரி... இப்படியெல்லாம் நினைத்துவிட்டு அதாவது: உங்கள் வரிகளிலிருந்து....

பணக்காரி தேவையில்லை

பகட்டுகளும் தேவையில்லை

பல்கலை சென்றுபெற்ற

பட்டமும் தேவையில்லை

இவ்வாறு பல கற்பனைகளை வைத்துக்கொண்டு. :D

'கைநீட்டி வாங்கியதால்

கைகட்டி நிற்கின்றேன்

பலலட்சம் வாங்கியதால்

பதிலின்றி நிற்கின்றேன்

பணம்கொடுத்து வாங்கியதால்

பரிகாசம் செய்கின்றாள்

விலைகொடுத்து வாங்கியதால்

வீணனாகப் பார்க்கின்றாள்"

இப்படிப் பணம் கொடுத்து வாங்கிவிட்டீங்களே?? :P

என்னைப் பொறுத்தமட்டில் சீதனம் வேண்டுபவர்கள் வலது குறைந்த ஆண்மகன்கள் தான். காரணம் வேலை செய்து மனைவி, பிள்ளைகளைப் பார்க்க கஸ்ரம் தானே. அது தான்....... :P :lol:

யதார்த்தமாக உண்மையைக் கூறும் உங்கள் கவிதை அருமை.. மணிவாசகன். திருமணத்துக்காக காத்து நிற்கும் ஒவ்வொரு ஆண்மகனும் இதனை உணர்ந்து நடந்தால் ஏன் இந்தப் பிரச்சினை.

பணம்கொடுத்து வாங்கியதால்  

பரிகாசம் செய்கின்றாள்  

விலைகொடுத்து வாங்கியதால்  

வீணனாகப் பார்க்கின்றாள்

ம்ம் பணம் கொடுத்து வாங்கிய பொருளுக்கு உரிய மதிப்பை தருகிறார்கள் போலும். நல்ல அழகான வரிகள். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தங்களோடு வடித்த இனிய கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்.

மணிவாசகன் என்று பெயர்கொண்டதாலா உங்கள் கவிதைகளும் திருவாசகம்போல் தித்திக்கின்றன?

பொம்பிளைப் பிள்ளைகளைப் பற்றி எழுதினால் முதலில் வாசிப்பது ஆண்பிள்ளைகள்தான் என்பதை எப்படி மறந்தீர்கள்?

ஆனால் ஒன்று TRAITOR கேட்டவற்றைத்தான் நானும் கேட்போமென்று படிக்கும்போது எண்ணினேன். எனக்கு அவர் அந்த வேலையை வைக்காமல் செய்துவிட்டார்.

நீண்ட கவிதை என்றாலும் அலுக்கவில்லை அல்வா போலிருந்தது.

நன்றிகள்.

மிக அருமை மணிவாசகன் நீங்கள் வெற்ரோன் hPவியில் கவி படித்தவரா?

  • தொடங்கியவர்

கருத்துச் சொன்ன உறவுகள் அனைவருக்கும் நன்றி

(ஊர்த் தமிழிலை கதைக்கட்டோ?)

என்ன கரைச்சலாப் போச்சுது. ஒரு கவிதையை கற்பனையிலை எழுதவிடமாட்டீங்களே? ஒராள் என்னண்டா உன்ரை மனிசி இப்படியோ எண்டு கேக்குது. இன்னொராள் என்னண்டா நீ ஏன் சீதனம் வாங்கினனீ எண்டு சண்டைக்கு வருது. ஏனப்பா கரைச்சல் (அன்புத் தொல்லை) தாறீங்கள். சரி சரி கோவிக்காமல் தொடாந்து ஏதாவது கேளுங்கோ. ஏலக்கூடிய மட்டும் பதில் தாறன்.

ஆனாத் தம்பி விசு உம்மடை கேள்விக்குப் பதில் சொல்லப் பயமாக் கி;டக்குது. ஏனண்டால் நீர் இருக்கிற இடம் அப்படி (புத்து கித்து எண்டு சொல்லுறீர்)

அன்புடன்

மணிவாசகன்

என்துணையாய் வரப்போகும்

என்னவளைப் பற்றியெந்தன்

அடிமனதில் பதிந்திட்ட

ஆயிரமாம் கற்பனைகள்

நன்றி மணிவாசகன்கவிதை அருமை

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கற்பனைகள் வரும் ஆனால் அந்த கற்பனைகள் நிஐமாக அமைவது இல்லை

வாழ்த்துக்கள் கவிதைக்கு அழுதே போட்டேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாணிக்கவாசனின் உள்ளத்தின் உணர்வுகளை அருமையாக கவி பிரதிபலித்துள்ளது. பாராட்டுக்கள்

எனது பார்வையில் சீதனம்

ஆண் இனமே சற்று நில்லும்

நீர் என்ன சந்தையில்

விற்கும் கத்தரிக்காயா?

புனித மண வாழ்க்கையை

வியாபாரம் ஆக்காதீர்

பட்டம் எதற்கு பெறுகிறீர்

பல லட்சம் கேட்பதற்கா?

பேரம் பேசி வாழ்க்கை

தொடங்கும் நீர்

பெண்ணின் மனத்தை

எப்படி புரிவீர்?

பொருள் கொடுத்து

வாங்கும் உமக்கு

காலைக் காப்பி

கொடுக்க வேண்டுமா?

காலைத் தொட்டு

வணங்க வேண்டுமா?

இல்லை காலைத் தான்

பிடிக்க வேண்டுமா?

இத்தனையும் செய்து விட்டு

வேலைக்கும் ஓட

வேண்டுமா?

உமது பிள்ளை தனை

பார்க்க வேண்டுமா?

அந்திப் பொழுது சாய்ந்தால்

பாயும் உமக்கு விரிக்க வேண்டுமா?

ஆதிக்க வர்க்கமே சற்று

ஆழ்ந்து சிந்தியும்

விலை கொடுத்து வாங்கும்

உம்மை எப்படியெல்லாம் பராமரிக்கின்றோம் 8)

சீர்கெட்ட சீதனத்தால்

சிதைந்தவர்பெண் மட்டுமென்ற

சிந்தனையை உம்மிடத்தில்

சிதைத்துவிடும் எந்தன்கதை

தறிகெட்ட வழக்கத்தால்

தகர்ந்தவர்பெண் மட்டுமென்ற

தர்க்கத்தைத் தவிர்ப்பதற்காய்

தருகின்றேன் என்கதையை

பெண்கள் மட்டுமில்லை ஆண்களும் சீதனத்தால் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். இப்படி எல்லோரையும் பாதிக்கும் சீதனக்கொடுமை நமக்கு தேவை தானா?

மணிவாசகன் உங்கள் வாசகங்களை தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க காத்திருக்கின்றோம்.

துளசி உங்கள் பதில் கவிதையும் நன்றாக இருக்கின்றது. புலத்தில் இருக்கும் பெண்ணின் இயந்திரமான வாழ்க்கையை சலிப்புடன் பல கேள்விகளுடன் எழுதியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

அருமை! அருமை..! அத்தனையும் உண்மை! அருமை!

தவறொன்று செய்துவிட்டால்

தட்டிக் கேட்கவெண்டும்

பிழையொன்று செய்துவிட்டால்

பிழையென்று சொல்லவெண்டும்

இன்பமோ துன்பமோ

இணையாகப் பகிர்ந்துகொள்ள

உற்றதுணை ஒன்றைத்தான்

உண்மையிலே தேடிநின்றேன்

நல்ல கவிதை மணிவாசகன்.,

அருமையான கருத்துக்கள். நீங்கள் சொல்வது மாதிரி ஆண்கள் பெண்கள் எல்லாரும் சேர்ந்தால் தான் இந்தக் கொடுமையை அழிக்கலாம்.

தொடர்ந்து எழுதுங்கள்

சீதனம் என்பது சிறுமை

அச்சிறுமையை ஒழிப்பது பெருமை.

சீதனம் என்பது இன்று ஒரு கெளரவ பிரச்சனையாகிட்டுது. :twisted: :twisted: :twisted: :twisted: நன்றி மணிவாசகன் ஆழமான கவிவரிகளுக்கு வாழ்த்துக்கள்

ம் அருமையான கவிதை அடி மனதின் வேதனையோ ?

என்னை கவர்ந்த வரிகள். இன்றைய நிலையில் விலைபோன ஆண்களெல்லாம் இதுதான் நிலை. வெளியில் சொல்ல வெட்கப்பட்டு வேதனையுடன் வாழ்கின்றார்கள். (அதற்காக நானும் அப்படித்தான் என்று நினைக்காதீர்கள். நான் காதலித்து திருமணம் செய்தவன் :lol::lol: )

விலைபோன காரணத்தால்

விதியைநொந்து நிற்கின்றேன்

தீனி போடமட்டும்

திறக்கின்றேன் என்வாயை

  • தொடங்கியவர்

பரணி,

ஐஐயோ! நீங்கள் கலியாணம் முடிச்சவரா? உங்கடை நல்ல கருத்துக்களையும் ஆக்கங்களையும் பாத்திட்டு என்ரை பேரப் பிள்ளைக்குப் பேசுவம் எண்டு இருந்தனான்.

அன்புடன்

மணிவாசகன்.

கவிதை நல்லாயிருக்கு மணி அங்கிள் ( உங்கட பெயர் நீளம் கூடிட்டு அதான் குறைச்சு போட்டன் கோவிக்க மாட்டீங்க தானே) :wink: :P

இந்த கவிதையில வார மாதிரி கற்பனை மட்டும்தான் பல ஆண்களால செய்ய முடியும்

ஆனால் பணம் எண்டவுடன் கற்பனையை தூக்கி உடைப்பில போட்டுட்டு சீதனச் சந்தையில விலை போற ஆண்களுக்கு உங்கட கவிதை ஒரு பாடமா இருக்கட்டும்

அது சரி அந்த மாதிரி விலை கொடுத்து வாங்கிய கணவன் எண்டா உபசரிப்பா செய்வினம் :evil: உதாசீனமல்லோ செய்வினம் :wink:

தொடர்ந்து எழுதுங்கள் :P

வணக்கம் தாத்தா,

உங்களுக்குத் தொண்ணுhறு வயசா? ஆனா ஐபிசியிலை உங்கடை குரல் நல்ல இளமையா இருக்கே? அதன் ரகசியம் என்ன?

  • தொடங்கியவர்

பிள்ளை நித்திலா,

நல்ல நேரம் ஆச்சி (அதுதான் என்ரை மனிசி) கொம்பியுட்டர் பக்கம் வாறதில்லை.( மவுஸ் பிள்ளையாரின்ரை வாகனமாம் அதை வைச்சு விளையாடக் கூடாதாம்.) . அவ என்ரை பெரைச் சுருக்கினதைக் கேள்விப்பட்டால் உன்னை உண்டு இல்லை எண்டு ஆக்கிப் போடுவா. (பேரைச் சுருக்கினால் ஆயுசு குறைஞ்சிடுமாம்)

பிள்ளை காவியா,

ஐபிசியிலை வாறது என்ரை பேரப் பேடியன். (தாத்தான்ரை பேரை அவருக்கும் வைச்சது)

அன்புடன்

மணிவாசகன்

பிள்ளைகள் கவனியுங்கோ

OK நீங்கள் சொன்னதை அப்படியே நம்புறன். சரியா

சும்மா ஒரு கதைக்கு சொல்லவும் விட மாட்டன் என்டுறீங்கள்.

எப்ப பேசலாம் என்று சொன்னால் பேசி முடிச்சிடலாம் மணி அண்ணா

பரணி,

ஐஐயோ! நீங்கள் கலியாணம் முடிச்சவரா? உங்கடை நல்ல கருத்துக்களையும் ஆக்கங்களையும் பாத்திட்டு என்ரை பேரப் பிள்ளைக்குப் பேசுவம் எண்டு இருந்தனான்.

அன்புடன்

மணிவாசகன்.

திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. யாழ் தந்த உறவுதான் அது

வணக்கம் மணிவாசகன்,

இளவட்டத்தில் நீங்கள் சொல்லும் கருத்துக்களால் கவரப்பட்ட நான் உங்கள் கவிதையினையும் மிகவும் ரசித்தேன்

வாழ்த்துக்கள்

மணிவாசகா,

பதிலெழுதத் தொடங்கி இடையில் நிற்பாட்டியதற்கு மன்னிக்கவும்.

உண்மையில் சீதனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் மட்டும் தான் என்பது போலக் கருத்துச் சொல்லும் அனைவரும் வாசிக்கவேண்டிய கவிதை.

உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்தது போலவே மனைவி அமைய வாழ்த்துக்கள். ( பாட்டா போல் கதைத்தாலும் நீங்கள் யாரென்பது கழுகிற்குத் தெரியும்.)

  • தொடங்கியவர்

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

அன்புடன்

மணிவாசகன்

  • 3 weeks later...

நல்ல கவிதை

சீதனம் கேட்பவர்களைச் சொல்லுங்கள். நான் வீட்டிற்குள் போய்க் குடியிருக்கிறேன்.

  • 3 weeks later...

பணக்காரி தேவையில்லை

பகட்டுகளும் தேவையில்லை

பல்கலை சென்றுபெற்ற

பட்டமும் தேவையில்லை

பதியாகப் பாவித்து

பணிந்திடவும் தேவையில்லை

எஜமானாய்ப் பாவித்து

எனக்குழைக்கத் தேவையில்லை

சீதனப் பேயினால் எத்தனையோ பெண்களின் கனவுகள் மட்டுமல்ல ஆண்களின் ஆசைக் கனவுகளும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.