Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா தமிழர்களுக்கு வழங்கியிருக்கும் தெளிவான செய்தி - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தமிழர்களுக்கு வழங்கியிருக்கும் தெளிவான செய்தி - யதீந்திரா

கடந்த பத்தி, 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறு அமையக் கூடும் என்பதில் கவனம் செலுத்தியிருந்தது. அந்த அவதானம் தவறானதல்ல என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. நடந்து முடிந்த பூகோள கால மீளாய்வின்போது, (Universal Periodic Review) ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளினால் 210 பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. இதில் 100 பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்திருக்கிறது. அதற்கான காரணங்களையும் இலங்கை தெளிவுபடுத்தியிருக்கிறது. உண்மையில் பலரும் எதிர்பார்த்தது போன்று, மேற்படி மீளாய்வின்போது இலங்கை பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளவில்லை. இதற்கான காரணம், இந்தியா தனது முன்னைய நிலைப்பாட்டிலிருந்து சற்று பின்வாங்கியிருப்பது ஆகும்.

இந்தியா, ஆரம்பத்தில் காண்பித்திருந்த உறுதிப்பாட்டை முக்கியமான இறுதி விவாதத்தின்போது உறுதிப்படுத்தியிருக்கவில்லை. பலருக்கும் அதிர்ச்சியை எற்படுத்தும் வகையில் இறுதி நேரத்தில் தனது முன்னைய நிலைப்பாட்டை இந்தியா தளர்த்திக் கொண்டது. இது தமிழ்ச்சூழலில் வழமைபோலவே உணர்ச்சிவசமான சலசலப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தியா குத்துக்கரணம் அடித்துவிட்டது - காலை வாரிவிட்டது போன்ற அங்கலாய்ப்புக்கள் தமிழர் தரப்பில் காணப்படுகின்றன.

இந்தியா குறித்து ஒரு தெளிவான பார்வை இருந்திருப்பின் இவ்வாறான அங்கலாய்ப்புக்களுக்கு அவசியம் இருந்திருக்காது. இந்தியா குறித்து தெளிவான ஒரு பார்வை தமிழர் தரப்புக்கு அவசியம். இந்தியா இப்போதும் எங்களுக்கு பின்னால்தான் நிற்கிறது என்று, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்த பின்னணியில், இந்தியாவின் மேற்படி நடவடிக்கை நிகழ்ந்துள்ளது. புதுடில்லி சென்று திரும்பியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவினர், இந்தியா குறித்து அபரிதமான நம்பிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில், அவை அனைத்தும் இந்தியாவின் மேற்படி முடிவால் செல்லாக் காசாகியுள்ளது. மேலும் இந்தியா இதன் மூலம், தமிழர்களுக்கு ஒரு தெளிவான செய்தியையும் வழங்கியிருக்கின்றது. அது என்ன செய்தி?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்று முடிந்த, பூகோள கால மீளாய்வின் போது இலங்கை அதிக நெருக்கடிகளை சந்திக்கக்கூடும் என்றே பலரும் எதிர்பார்த்திருந்தனர். இலங்கை மட்டத்தில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் அவ்வாறானதொரு எதிர்பார்ப்பே இருந்தது. இதற்கு காரணம் பூகோள கால மீளாய்வில் இலங்கை தொடர்பான அறிக்கையை தயாரிக்கின்ற மூவர் அடங்கிய குழுவில் இந்தியாவும் ஓர் உறுப்பு நாடாக இருந்தமையாகும். ஏற்கனவே இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை இந்தியா ஆதரித்திருந்த நிலையில், மேற்படி பூகோள கால மீளாய்வின் போதும் இந்தியா கடுமையாக நடந்துகொள்ளும் என்பதே அனைவரதும் கணிப்பாக இருந்தது. ஆரம்பத்தில் இந்தியாவும் அத்தகையதொரு சாதகமான சமிக்ஞையையே காட்டிருந்தது.

பூகோள கால மீளாய்வு தொடர்பான முன்னைய கலந்துரையாடலில் 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதன் ஊடாக, அரசாங்கம் தமிழ் மக்களின் மனக்குறைகளை போக்கும் வகையில் செயலாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்த இந்தியா, வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டியதன் அவசியம், வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்திற்கு இடையூறற்ற வகையில் இராணுவக் குறைப்பு ஆகியவை குறித்தும் அழுத்தமாக வலியுறுத்தியிருந்தது. இந்தியாவின் மேற்படி அறிவிப்பு இராஜதந்திர உலகில் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. புலம்பெயர் தமிழ் சூழலிலும் கூட, இந்தியாவின் மேற்படி அறிவிப்பு கனதியான வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழர் பேரவை இந்தியாவின் மேற்படி அறிவிப்பை வரவேற்றிருந்ததுடன், இந்தியா தொடர்ந்தும் தமிழர் பிரச்சனை தொடர்பில் தலையீடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தியிருந்தது.

ஆனால் இறுதி நேரத்தில் இந்தியா எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டது. இதேவேளை இந்தியாவால் கைவிடப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களையும் அமெரிக்கா மிகவும் அழுத்தமாக வலியுறுத்திருக்கின்றது. அமெரிக்கா 13வது திருத்தச் சட்டம் குறித்து நேரடியாக கருத்துத் தெரிவிக்காது விட்டாலும், 18வது திருத்தச் சட்டத்தின் ஊடாக அரசாங்கம் அதிக அதிகாரங்களை தன்வசப்படுத்தியிருப்பதை கண்டித்திருக்கிறது. தவிர, வடக்கு கிழக்கில் இராணுவ நீக்கம், மனித உரிமை மீறல்கள் தொடர்பான சுதந்திரமான விசாரணை ஆகியவற்றையும் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றது. அமெரிக்கா இலங்கை தொடர்பான தனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியை காட்டிவருகின்ற சூழலில்தான், இந்தியா தனது முன்னைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியிருக்கின்றது. என்ன காரணத்தால் இந்தியா இத்தயைதொரு முடிவை எடுத்திருக்கக் கூடும்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அமெரிக்க பிரேரணையை இந்தியா ஆதரித்திருந்த நிலையில், இரு நாடுகளின் உறவிலும் ஒரு விரிசல் ஏற்பட்டிருந்தது உண்மை. இவ் விரிசல் மேலும் அதிகரிக்குமாயின் இலங்கையை தன் கண்காணிப்பில் வைத்துக்கொள்வது கடினமாகலாம். அத்துடன், ஒரு கட்டத்தில் இலங்கை தன் கையை மீறிச் சென்றுவிடவும் கூடும் என்று இந்தியா கணித்திருக்க வாய்ப்புண்டு. இந்தியாவைப் பொறுத்தவரையில், இது ஒரு அச்ச உணர்வு சார்ந்த விடயமல்ல, மாறாக தற்காப்பு உணர்வு சார்ந்ததாகவே இருக்க வேண்டும். அண்மைக்காலமாக சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்துச் செல்லுகின்ற சூழலில், பாக்கிஸ்தானின் பிரசன்னமும் அதிகரித்திருக்கிறது. எனவே இத்தகையதொரு சூழலில். இலங்கையின் மீதான மேற்குலக அழுத்தங்களுக்கு சமாந்தரமான அழுத்தங்களை பிரயோகிப்பதிலிருந்து விலகியிருப்பது சிறப்பானதென்று இந்தியா கருதியிருக்கக் கூடும். இந்தியா இறுதி நேரத்தில் மேற்கொண்ட முடிவின் ஊடாக இத்தகையதொரு படமே தெரிகிறது.

எனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தனது நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டதன் மூலம் தமிழர்களுக்கு வழங்கியிருக்கும் தெளிவான செய்தி என்னவென்றால் - தற்போதைய சூழலில் இலங்கை அரசை முற்றிலுமாக பகைத்துக் கொள்ளும் வகையில் இந்தியா எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளப் போவதில்லை என்பதே அந்தச் செய்தி. இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருக்கிறது. இன்றைய சூழலில் கொழும்பிலிருந்து அதிகம் அன்னியப்படுவது பொருத்தமான ஒன்றல்ல என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியா இதன்மூலமும் இலங்கைக்கு ஒரு எச்சரிக்கை குறிப்பையும் வழங்கியிருக்கிறது - இந்தியா மனங்கொண்டால் இலங்கையை சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்த முடியும். எனவே இந்திய நலன்களுக்கு முரணாக இலங்கை செல்லுமிடத்து அதனைச் செய்வதற்கு இந்தியா ஒரு போதும் தயக்கம் காட்டாது என்பதையும் இந்தியா மறைமுகமாக உணர்த்தியே இருக்கிறது எனலாம். இதனை இலங்கையும் நன்கு அறிந்தே செயற்படுகிறது.

ஆனால் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடயங்களை பார்த்தால், ஒரு விடயம் வெள்ளிடைமலை. நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து விடயங்களும் இந்திய-இலங்கை நலன்களை மையப்படுத்தியதாக இருக்கின்றதேயன்றி, தமிழர் நலனை முன்னிறுத்தியதாக இல்லை. கொழும்மை அதிகம் பகைத்துக் கொள்ளாத ஓர் அணுகுமுறையை இந்தியா கொண்டிருக்கிறதெனின், இந்தியாவின் ஊடாக எத்தகைய உதவியை எதிர்பார்க்கலாம் என்பது குறித்து தமிழர் தலைமை சிந்திப்பது அவசியம். தவிர, நாங்கள் கூறியவற்றை மன்மோகன் சிங் மிகவும் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தார். அவரது பதிலில் ஒரு உறுதி தெரிந்தது என்றவாறு கதைகள் சொல்லிக்கொண்டிருப்பதை விடுத்து, தமிழர்களின் தலைமையாசனத்தை கைப்பற்றியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தெளிவான, பகிரங்கமான அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா குறித்து அபரிமிதமான நம்பிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதைவிடுத்து நிலைமைகளை துல்லியமாக மதிப்பிட்டு அதற்கேற்ப செலாற்றுவதே இன்றைய தேவையாகும்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு தீர்வு அவசியம் என்னும் கருத்தை இந்தியா கொண்டிருக்கிறது. ஆனால் அந்த ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இந்தியா ஒரு போதுமே கூறப்போவதில்லை. அதனை கூறவேண்டிய பொறுப்பு தமிழர் தலைமையான கூட்டமைப்பிற்கே உண்டு. ஆனால் இந்தியா ஆங்காங்கே வெளிப்படுத்திவரும் கருத்துக்களை தொகுத்துப் பார்த்தால், 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான ஒரு தீர்வில் தமிழர் தரப்பு உறுதியாக இருப்பின் அதற்கு இந்தியா உதவ முன்வரலாம் என்றே தெரிகிறது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் அவ்வாறானதொரு உறுதியான நிலைப்பாடோ, ஆகக் குறைந்தது அதற்கான உடன்பாடு கூட இல்லை.

கடந்த பத்தியில் குறிப்பிட்டது போன்று, 13வது திருத்தச் சட்டம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரையில், அதன் பனிப்போர் கால மூலோபாயத்தின் விளைவான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வெளியீடுகளில் ஒன்றாகும். இன்றைய இந்தியா, மூலோபாய ரீதியாகவும், நாடுகளுக்கு இடையிலான உறவுரீதியாகவும் முற்றிலும் வேறுபட்டதொரு இந்தியாவாக இருக்கிறது என்பதை தமிழ் தலைமை கவனிக்க வேண்டும். எனவே பனிப்போர் கால இந்தியாவிடம் எதிர்பார்த்ததை, இன்றைய இந்தியாவிடம் கூட்டமைப்பு எதிர்பார்ப்பது கூட்டமைப்பின் அரசியல் இயலாமையையே நிரூபிக்கின்றது.

எனவே இந்தியா வழங்கியிருக்கும் தெளிவான செய்தியை கருத்தில் கொண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பயணிப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதே இன்றைய காலத் தேவையாகும். அடுத்தவர்கள் எங்களுக்கான தீர்வை சொல்லுவார்கள் என்னும் கற்பனையில் கயிறு திரித்துக் கொண்டிருந்தால், 1970ம் ஆண்டு, தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்கள் கூறிய அதே வாசகத்தை, இன்னும் ஒரு சில வருடங்களில், திருகோணமலை காளிகோவில் முன்றலில் நின்று கொண்டு, இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா சொல்ல வேண்டிவரும். தமிழர் அரசியல் எதிர்கொண்டிருக்கும் இன்றைய இக்கட்டான நிலைமையை துல்லியமாக மதிப்பிட்டு, விரைந்து செயற்பட தவறின் இத்தயைதொரு சூழலை வரலாறு பதிவு செய்யக் கூடும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=ba70f102-3346-4a1a-980c-adab56d91271

[size=4]ஏற்கனேவே கடந்த மார்ச் மாதம் (2012) தமிழர் தரப்பு அடுத்த 2013, மார்ச் மாத நீண்ட நாட்களை கொண்ட அமர்விலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறி இருந்தனர் ![/size]

[size=4]

இந்தியா, ஆரம்பத்தில் காண்பித்திருந்த உறுதிப்பாட்டை முக்கியமான இறுதி விவாதத்தின்போது உறுதிப்படுத்தியிருக்கவில்லை. பலருக்கும் அதிர்ச்சியை எற்படுத்தும் வகையில் இறுதி நேரத்தில் தனது முன்னைய நிலைப்பாட்டை இந்தியா தளர்த்திக் கொண்டது. இது தமிழ்ச்சூழலில் வழமைபோலவே உணர்ச்சிவசமான சலசலப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தியா குத்துக்கரணம் அடித்துவிட்டது - காலை வாரிவிட்டது போன்ற அங்கலாய்ப்புக்கள் தமிழர் தரப்பில் காணப்படுகின்றன.
[/size]

[size=4]

எனவே இந்தியா வழங்கியிருக்கும் தெளிவான செய்தியை கருத்தில் கொண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பயணிப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதே இன்றைய காலத் தேவையாகும். அடுத்தவர்கள் எங்களுக்கான தீர்வை சொல்லுவார்கள் என்னும் கற்பனையில் கயிறு திரித்துக் கொண்டிருந்தால், 1970ம் ஆண்டு, தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்கள் கூறிய அதே வாசகத்தை, இன்னும் ஒரு சில வருடங்களில், திருகோணமலை காளிகோவில் முன்றலில் நின்று கொண்டு, இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா சொல்ல வேண்டிவரும். தமிழர் அரசியல் எதிர்கொண்டிருக்கும் இன்றைய இக்கட்டான நிலைமையை துல்லியமாக மதிப்பிட்டு, விரைந்து செயற்பட தவறின் இத்தயைதொரு சூழலை வரலாறு பதிவு செய்யக் கூடும்.
[/size]

[size=4]அந்த சூழலை எவ்வாறு தடுக்கலாம்? [/size]

[size=1]

[size=4]கூட்டமைப்பினர் சீனா சென்றமை, இன்று வந்த ஐ.நா. உள்ளக அறிக்கை, நவி பிள்ளை "எந்த நேரமும் பிரச்சனை வரலாம்" என கூறியமை, பிரதம நீதியரசர் மீதான நடவடிக்கை, பாகிஸ்தான் ஆழமாக கால்வைப்பது, சீன தலைவர் மாற்றம் ....[/size][/size]

[size=1]

[size=4]என பல மாற்றங்கள் நிலைமையை மாற்றியவண்ணம் உள்ளன. [/size][/size]

[size=4]ஏற்கனேவே கடந்த மார்ச் மாதம் (2012) தமிழர் தரப்பு அடுத்த 2013, மார்ச் மாத நீண்ட நாட்களை கொண்ட அமர்விலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறி இருந்தனர் ![/size]

[size=4][/size]

[size=4][/size]

[size=4]அந்த சூழலை எவ்வாறு தடுக்கலாம்? [/size]

[size=1][size=4]கூட்டமைப்பினர் சீனா சென்றமை, இன்று வந்த ஐ.நா. உள்ளக அறிக்கை, நவி பிள்ளை "எந்த நேரமும் பிரச்சனை வரலாம்" என கூறியமை, பிரதம நீதியரசர் மீதான நடவடிக்கை, பாகிஸ்தான் ஆழமாக கால்வைப்பது, சீன தலைவர் மாற்றம் ....[/size][/size]

[size=1][size=4]என பல மாற்றங்கள் நிலைமையை மாற்றியவண்ணம் உள்ளன. [/size][/size]

[size=5]தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இராஜதந்திர தொடர்புகளை ஒரு நாட்டிலுள்ள முக்கிய கட்சிகள் அனைத்துடனும் பேணி வந்தால் (உதாரணத்துக்கு ஒபாமாவுக்கான தமிழர் போன்று குறுகிய வட்டத்துக்குள் மாட்டுப்பட்டு நில்லாமல்), இந்த சூழலை வெல்லலாம்.

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை - இன்று மனிதாபிமானம் உள்ள எவரும் மறுக்க முடியாது.

தமிழ் மக்களுக்கு திட்டமிட்ட முறையில் தீங்கிளைத்த தரப்புக்கள் மூவர்.

(1) சிங்கள பயங்கரவாதிகள்

(2) இந்தியக் காட்டுமிராண்டிகள்

(3) இஸ்லாமிய சந்தர்ப்பவாத மதவாதிகள்

தமிழின விரோத மனப்பான்மையுடன் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு இன்று ஆதரவாக இருக்கும் இந்தியக் காட்டுமிராண்டிகள், இஸ்லாமிய சந்தர்ப்பவாத மதவாதிகள் தவிர, சிங்கள - இந்திய அரச பயங்கரவாதிகளின் போலிப் பிரச்சாரங்களினால் ஏமாந்துள்ள ஏனையோரை உரிய முறையில் அணுகினால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை அவர்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் மிக அதிகம். இவர்கள் அனைவரையும் அணுக வேண்டியது தமிழ் பிரதிநிதிகளின் கடமை.

இந்த ஏனையோர் சிங்கள - இந்திய அரச பயங்கரவாதிகளின் போலிப் பிரச்சாரங்களாலும், இவர்களின் கைகூலிகளாக - இடைத் தரகர்களாக இருக்கும் ஒருசில தமிழரின் போலிப் பிரச்சாரங்களாலும், ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த சூழலை இராஜதந்திர ரீதியில் முறியடிப்பது தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு அவசியமான ஒன்று.

இதைச் செய்யவேண்டியது குறிப்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அனைவரினதும் முக்கிய கடமைகளில் ஒன்று. அது போல தமிழ் உணர்வாளர்களும் முயல வேண்டும்.[/size]

[size=4]யத்தேந்திரா தனது எதிர்வு கூறல்கள் சரியாகிவிட்டத்தாக கூறிக்கொண்டு தனது வழமையான கச்சேரியை ஆரம்பித்திருக்கிறார். யத்தேந்திரா அன்றன்று பத்திரிகைகளை வாசித்துவிட்டு எதிர்வு கூறுகிற பரிதாபத்தில்தான் இன்றும் வாழ்ந்து வருகிறார். இதனால் அவர் நாளைய பத்திரிகைகளை வாசித்துவிட்டு நாளை இதை திரும்ப வேண்டிய நிலையில் இருக்கிறார். ஆனால் அவர் கூறுவது என்றுமே சரிவருவது கிடையாது.

போரின் பின்னர் கூட்டமைப்பு தனது அங்கத்தவர்களின் பாதுகாப்புக்கு கூட இந்தியாவிடம் ஓடியது. இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. கிருஸ்ணா தான் வெளிவிவகார மந்திரியானவுடன் இலங்கை பிரச்சனைக்கு இலங்கைத்தான் தீர்வு வழங்க வேண்டும் என்றார். பே(ர்) ஆசிரியர் பீரிசு இந்தியாவில் நின்று கூட்டறிக்கையாக இலங்கை, பிரச்சனைகளை தீர்க்கும் என்றார். ஆனால் அவர் இலங்கை திரும்பியவுடன், அரசு அது பீரிசின் தனிப்பட்ட அபிப்பிராயம் என்றுவிட்டது.

யத்தேந்திரா பிரதேச சபை தேர்தல் முடிய, கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியிருக்கும் ஆணை இலங்கை தருவதை வாங்குவதாகும் என்று எழுதினார். சோனியாவையும், மலையாளிகளையும் விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் "இந்தியாவின் புவிசார் அரசியலும் பாதுகாப்பு கொள்கையும்" என்று பீத்தின்னர். ஆனல் தமிழ் நாடு தேர்தலின் பின் எல்லாம் தவிடுபொடியாகத்தொடங்கியது, வைகோ,சீமான், நெடுமாறன் சேர்ந்து கருணாநிதியை விழுத்தியதின் பின் இந்திய பாதுகாப்பு கொள்கையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. அதாவது 4 மணித்தியால உண்ணாவிரதத்தால் தி.மு.காவின் பாதுகாப்பு நிலைக்கவில்லை என்றதை கருணநிதி பிரணாப்புக்கு சொன்னார். இதனால் பிரணாப் தேர்தலில் பாதுகாப்பாக இருக்க ஜனாதிபதி பதவிக்கு போய்விட்டார்.

பிரணாப்பை ஜனாதிபதி பதவியில் பாதுகாப்பாக அமர்த்திவிட்ட கருணாநிதி உண்ணவிரதம் பாதுகாப்பில்லை என்பதால் இலங்கை தமிழர் பாதுகாப்பு மகாநாடு கூட்டி தன்னை பாதுகாக்க வெளிக்கிட்டார். ஆனல் குழப்பகாரி மம்தாஜி காங்கிரசின் பாதுகாப்பை இழித்து கிழித்துவிட்டா. இப்போ சந்தரப்ப வாதி கருணாநிதியை மிரட்டுவதை தனது பாதுகாப்பு கொள்கையாக வைத்திருந்த காங்கிரஸ்அகில இந்திய பாதுகாப்பு கொள்கையில் பாரிய மாற்றம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளபட்டிருக்கிறது.

இதில் எள்ளவும் விளக்கமில்லாத யத்தேந்திரா, கூட்டமைப்பு இலங்கை கொடுப்பதை வாங்க வேண்டும் என்று பத்தி பத்தியாக வரைந்தவர், இப்போது 13ம் திருத்தை இந்தியா விரும்புகிற படியால் கூட்டமைப்பு அதை கேட்க வேண்டும் என்கிறார். அதில் அவர் தனக்கு கிடைத்த சந்தர்பத்தில் தனது வழமையான கூட்டமைப்பு தாக்குதலையும் மறக்கவில்லை. "இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்த பின்னணியில், இந்தியாவின் மேற்படி நடவடிக்கை நிகழ்ந்துள்ளது. புதுடில்லி சென்று திரும்பியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவினர், இந்தியா குறித்து அபரிதமான நம்பிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில், அவை அனைத்தும் இந்தியாவின் மேற்படி முடிவால் செல்லாக் காசாகியுள்ளது." என்று கூறி கூட்டமைப்பை தாக்கிமுடித்திருக்கிறார். [/size]

[size=4] பாவம் யத்தேந்திரா! கூட்டமைப்பு இந்தியா போகும் போது எல்லோருடைய(யத்தேந்திரவினதும்) எதிர்பார்ப்பும் மகிந்தா, இந்தியாவை கூட்டமைப்பு மீது அழுத்தம் போட்டு அதை தெரிவுக்கு குழுவுக்குள் தள்ளவைத்து விடுவார் என்பதே. ஆனல் அதற்கு மாறாக சம்பந்தர் வெளிவிட்ட அறிக்கையின் படி இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை போலிருக்கு. கடந்த ஜனவரியில், மாட்டுப்பொங்கள் புக்கையை அதக்கிய கிருஸ்ணா அந்த வாயால் கூறியது கூட்டமைப்பு தெரிவுக்கு குழுவுக்கு கூட்டமைப்பு போக வேண்டும் என்பது. சம்பந்தர், இந்த முறை போய்வந்து, இந்தியாவை அதிலிருந்து "U turn" அடிக்க வைத்திருந்தார். [/size]

[size=4]மேலும் இந்தியா தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்று தருவதில் ஆரவமாக இருக்கிறதென்றார். இதில் எல்லோருக்கும் விளங்கிய விடையம், இந்தியாவுக்கும், இலங்கை மாதிரியே, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அழுத்தம் இருக்கிறது. அவர்களுக்கு ரூசியா தவிர பாதுகாப்பு சபையில் யாரும் இல்லை. இதனால் மேற்கு நாடுகளுக்கு அடிபணிய வேண்டியிருக்கிறது. இதனால் இலங்கைக்குள் நுளைய பார்க்கும் மேற்கு நாடுகளை தாஜாபண்ண, தமிழ்நாட்டை சூக்காட்ட இந்தியா, அமெரிக்காவின் பிரேரணக்கு வாக்களித்தது. அதேநேரம் படாத கஸ்டப்பட்டு இலங்கையையும் காப்பாற்றியது. ஆனால் குத்தி பெடியனான இலங்கை ஆத்தை படுகிற பாட்டை உணர்ந்து ஆத்தைக்கு ஒரு சின்ன ஆறுதலும் கொடுக்க வரவில்லை. இதனால் இந்தியா எவரும் எதிர்பார்க்காத படி இலங்கையை நொவெம்பர் கூட்டத்தொடரில் காப்பாற்றவில்லை. மாறாக, ஆர்மபத்தில், தனது 13ம் திருத்ததையும் அதன்பின்னால் வரும் வடமாகணத்தேர்தலையும் தனது கயாக அங்கே வைத்தது. யத்தேந்திராவுக்கு அடிக்கடி அம்னீசியா. அதனால் 2008ம் ஆண்டின் கூட்டத்தொடரிலும், போர் முடிந்த பின்னர், மேற்கு நாடுகளினால் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளிலும் இந்தியா எப்படி ஈழத்தமிழர்களை கருவறுத்து என்பதை மறந்துவிட்டார். எனவே நொவெம்பர் கூட்டத்தொடர் இந்தியாவின் இன்னொரு மாற்றமே.

நொவெம்பர் கூட்டத்தொடரில் இந்தியா கேட்டவை வடமாகாண தேர்தலும், 13ம் திருத்தமும். ஆனால் இவற்றை வலியுறுத்தி இந்தியா வைக்கப்பட்ட பரிந்துரரைகளில் ஒன்றையும் வைக்க வில்லை. இந்தியா ஆரம்பத்திலும் இலங்கையின் மனித உரிமைகளை பற்றி பெரிதாக பிரஸ்தாபித்திருந்ததாக செய்திகள் வெளி வந்தில்லை. எனவே இந்தியா மனித உரிமை மீளாய்வு கூட்டத்தில், முன்னுக்கு பின் முரணாக நடந்தது என்பது சரியாகப்படவில்லை. ஆனால் 2008 மாதிரி இலங்கையை காப்பாற்றவில்லை. நொவெம்பர் தொடரில் இடைநடுவில் என்ன நடந்தது என்ற கேள்விக்கு இந்தியாவோ அல்லது இலனகையோ பதில் அளிக்க வரவில்லை.

சில நிகழ்சிகளை பார்க்கலாம்.

1. சபுகஸ்கந்தை மூடப்பட்டது.

2.புலம் பெயர் மக்கள் சீனாவோடு கூட்டு வேண்டும் என்று கூச்சல் போட்டது.

3.சீனா கூட்டமைப்பை கூப்பிட்டு பேசியது.

4.சீனா யாழ்ப்பணம் போய் கூட்டமைப்பு நம்ப தகுந்த வகையில் தீர்வொன்றை நோக்கி பயணிக்கிறதென்றது.

5.அம்பாந்தோட்டையில் இந்தியாவுக்கு ஒரு குறந்தறை காணியை இலங்கை கொடுத்தது.

இவற்றின் கூட்டு மொத்தமாக, இலங்கை, கூட்டத்தொடரின் இடநடுவில், ஏதாவது புதிய வாக்குறுதிகளை இந்தியாவுக்கு கொடுத்திருக்கலாம். 19ம் திருத்தம் 13+ஆக வரும் என்று கூறியிருக்கலாம். ஆனால் இந்தியா 13ம் திருத்தததை இலங்கைக்கு வாங்கி கொடுக்கும்; ஆனால் அதைப்பெற்று கொள்ளத்தான் கூட்டமைப்புக்கு அரசியல் தெரிய வேண்டும் என்பது யத்தேந்திராவின் அப்பாவித்தன்மான அரசியல் ஆலோசனை.

யத்தேந்திரா இதை எழுதியது, தான் ஏற்கனவே எள்ளிநகையாடிவிட்டதும், கூட்டமைப்பு இந்தியாவில் இருந்து கோண்டுவந்ததுமான, அபரிமிதமான அந்த நம்பிக்கை வைத்தே. ாவர் நியனப்பது, தற்சமயம், ஒருநாள் குருடன் அடித்த மாதிரி இந்தியா 13ம் திருத்த்தை வாங்கி கொடுத்துவிட்டால், அது யத்தேந்திராவின் ஆலோசனையை இத்தனை நூற்றாண்டுகளுக்கு பின் கூட்டமைப்பு கேட்டு நடந்தால் என்றிருந்திருக்கும். ஆனால் யத்தேந்திராவுக்கு தெரியும், இன்றைய அரசியல் நிலைமைகளின் படி, சிராணிக்கு முடிவு கட்டிய பின், அதே கையோடு முடிவு கட்டப்படப்போவது 13ம் திருத்தம் என்பது. ஆகவே, இந்த தடவையும், 13ம் திருத்தம் போனபின்னர், தனது ஆலோசனைப்படி, கூட்டமைப்பு 13ம் திருத்தத்தை இந்தியாவிடம் மறுத்துவிட்டது என்று கூறாலாம் என்று நம்பிக்கையாக இருந்தார்,. இது நேற்றைய வரைக்கும் ஊடகங்களில் போன செய்த்திகளின் படி யத்தேந்திரா அறிந்து வைத்திருந்த அரசியல்.[/size]

[size=4]ஆனால் இன்றைய ஊடக செய்திகள் வேறு. இப்போது கூட்டத்தொடர் முடிந்துவிட்டது. வழமை போல இலங்கைக்கு இந்தியாவை தேவை இல்லை. ஆகவே இலங்கை கூட்டமைப்பு இந்தியாவை கேட்டொ கேட்கமலோ, இந்தியாவுக்கு எதிரான பாதையை ஆரம்பித்துவிட்டது. ஆதவது 13ம் திருத்ததை நேராக மறுத்தால், இந்தியாவுடன் மட்டுமல்ல முரண்பாடு வரலாம்: மேற்கு நாடுகள் கூட அதை பெரிது படுத்தலாம். எனவே இலங்கை 19ம் திருத்தத்தின் மூலம் ஒரு புதிய அரசியல் அமைப்பை கொண்டு வரபோகிறது. இதற்கு உள்நாட்டில் இருக்க கூடிய ஒரே ஒரு இடைஞ்சலான, சிராணி இனி பதவியில் இருக்க மாட்டா. எனவே இதை 13ம் திருத்ததுடன் தொடர்புபடுத்தி ஒருவரும் தீர்ப்பு வழங்க்கப் போவதில்லை. இதை யாரும் எதிர்க்கவும் முடியாது.

அதாவது கூட்டமைப்பு கேட்காவிடாலும் 13ம் திருத்தம் இலங்கையில் ஒரு இடமும் போய்விடாது. அதை இருக்க வைத்துக்கொண்டு, 19ம்திருத்தால் அதை 13ம் + ஆக்கிவிட்டத்தாக நடித்துகொண்டு, 19ம் திருத்தை 13ம் திருத்ததிற்கு முரணாக ஆக்கி 19ம்பதை மட்டும் சட்டமாக மாற்றிவிடதிட்டம் போடுகிறது. 19ம் பது 5 மாகாணங்களுடன் புதியதாக இருக்கும். அதாவது யத்தேந்திராவின் ஆலோசனையை கூட்டமைப்பு கேட்கிறதோ இல்லையோ, இந்தியா 13ம் திருத்தை காக்கிறதோ இல்லையோ, யத்தேந்திரா எதிர்பார்க்கும் படி இன்னொருதடவை கூட்டமைப்பை கூறைகூற, அவருக்கு இந்த விடையத்தில் சந்தர்ப்பம் கிடைக்காது. கூட்டமைப்பு பா.உ களேதான் 19ம் திருத்தம் இந்தியாவின் சதி என்கிறார்கள். எனவே இன்றைய ஊடகங்களின் செய்திப்படி "இந்தியாவின் மேற்படி முடிவால் யத்தேந்திராவின் ஆராய்வு செல்லாக் காசாகியுள்ளது"[/size]

[size=6]Sri Lanka To Be Tried For Genocide Against Tamils: [/size]

[size=6]How Will Cuba And Its Allies Respond?[/size]

[size=5]An unprecedented move by internationalists and activists for human rights and justice, one that could inspire controversy among left oriented governments and peoples´ solidarity committees, will take place next spring.[/size]

[size=5]“In April 2013, a panel of international experts will be convened as Judges of the ‘Permanent People’s Tribunal’ to examine reports submitted by many specialized working groups on the accusation of the crime of Genocide against the Government of Sri Lanka and on the accusations against various international actors who had supported and prepared the conditions for the Sri Lankan Government to implement this alleged crime,” stated the Rome-based ‘Permanent People’s Tribunal’ (PPT) on November 3. (1)[/size]

[size=5]The case for genocide[/size]

[size=5]Here are excerpts of the PPT statement concerning the need to investigate the possibility that Sri Lankan governments have been committing genocide against the Tamil people for decades.“This possibility has become a necessity now, due to the mass of new evidence (substantial, quantitative and qualitative) that has come to light since [2010 session]. [/size]

[size=5]At the time we held the ‘Dublin Tribunal’, the real casualty figures remained largely hidden. The official UN figure did not exceed 8000 civilian casualties, while some of the British and French press carried reports estimating the total number of casualties at ‘up to 20,000′. In fact, the Sri Lanka Government maintained a position of ‘zero civilian casualties’ for the full period of the final military offensive!“However, soon after the Dublin Tribunal, like a dam bursting, details of terrible atrocities and a more realistic estimation of the magnitude of the massacre started surfacing in media. The effective embargo in the international media that existed during the eight months of the military offensive – which had helped to prevent a humanitarian opposition to the war to emerge – was starting to break down, eight months after the end of the military project. One month after the Tribunal – in February 2010 – appearing on Australia’s ABC Television, the former UN spokesman in Sri Lanka [/size]Gordon Weiss[size=5] contradicted the UN estimate of ‘no more than 8,000 casualties’ stating that ‘anything between 10,000 to 40,000’ civilians may have died during the final siege. Sometime later the Experts’ Panel appointed by the [/size]UN Secretary General[size=5] used the 40,000 figure as its own estimate.[/size]

[size=5]havanatimes.org[/size]

[size=5]By Ron Ridenour -[/size]

http://www.eelamview.com/2012/11/13/sri-lanka-to-be-tried-for-genocide-against-tamils-how-will-cuba-and-its-allies-respond/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தமிழர் விரோததேசம். இதை எப்போதும் மனதில் வைத்திருங்கள். இந்தியா எமக்கு நல்லதுசெய்யும் என யாராவது மனப்பால் குடிப்பவர்களாகவிருந்தால், அது கிழவி சாமத்தியப்படும் என எதிர்பார்ப்பதற்குச் சமம். மேலும் இந்தியாவுடன் ஒட்டி உறவாடும் தமிழர்கள் அனைவரும் தமிழின விரோதிகளே. இதில் கூத்தமைப்பும் அடக்கம், அதை விடுத்து சீனாவுக்கு உங்கள் அரசியல் கரங்களை நீட்டுங்கள். பாகிஸ்தானை அரவணையுங்கள். இந்தியர்கள் பாகிஸ்தானை, தங்கள் ஜென்ம விரோத நாடாக நினப்பதுபோல் இந்தியாவை நாமும் நினைப்பதுமட்டுமல்லாது, எமது சந்ததிகளையும் அதுவழியே செல்ல விடுங்கள். எமது தொப்புள்கொடி உறவுகளாம் தமிழ்நாட்டுத் தமிழ் சகோதரர்களது துயர்களில் பங்கு கொள்ளுங்கள்.

எதிர்காலத்தில் இந்தியா எமைமேலும் சிதைக்க இன்னுமோர் போலி ஆயுதக்குழுவை உருவாக்கும் அவர்களை உள்நெருங்க விடாதே.

[size=6]இந்தியா தமிழர் விரோததேசம் உன் பேரனுக்கும், பேரனின் பேரனுக்கும் சொல்லிவளர்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.