Jump to content

வால்காவிலிருந்து கங்கை வரை: ராகுல்ஜி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]வால்காவிலிருந்து கங்கை வரை(1) : ராகுல்ஜி[/size]

பேராசிரியர் ராகுல சங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ இந்தியாவில் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்திய நாவல். மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் இவைகளை இருபது கதைகளாகப் படைத்துள்ளார் ராகுல்ஜி.

இவைகள் வெறும் கதைகளல்ல. சரித்திரத்தை படிக்கும் சலிப்போ, தத்துவத்தைக் கற்கும் சிரமமோ இல்லாமல் வெகு இயல்பான , சுவையான நடையில் கூறப்பெற்றுள்ள அறிவுப் பெட்டகம் இந்தப் புத்தகம்.

கி.மு 6000 த்திலிருந்து 20 நூற்றாண்டு வரை உள்ள காலங்கள் ஆதாரபூர்வமாக அலசப் பெற்றுள்ளன.

உலகின் மிகப்பெரும் அறிஞரான ராகுல்ஜீ, 36 மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். அறிவுத் தேடலில் உலகின் மூலை முடுக்கெல்லாம் சுற்றித்திரிந்தவர். வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தவர். தனது உழைப்பால் சேகரித்துக்கொண்டவற்றை 150 நூல்களாக மக்களுக்கு வழங்கியவர். ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ என்ற நூலை இணைய வாசகர்களுக்காக தொடர் பதிவுகளாகத் தருவதில் மகிழ்ச்சிய்டைகிறோம்.

-இனியொரு

நிஷா

அத்தியாயம் 1 பகுதி1

இடம் : வால்கா நதிக்கரைப் பிரதேசம்

இனம்: ஹிந்தோ ஐரோப்பியர்

காலம் : கி.மு. 6000

எத்தனையோ நாட்களுக்குப் பிறகு இன்றுதான் சூரியனைக் காண முடிந்திருக்கிறது. மத்தியான வேளை ஆனால் இன்னும் உச்சிக்கு நேரே சூரியன் வரவில்லை. பொழுது புலர்ந்து நான்கு ஐந்து மணி நேரமாகியும் சூரியனுடைய ஒளியில் அவ்வளவு உஷ்ணத்தைக் காணோம். அவனை- சூரியனை மேகங்கள் மறைக்கவில்லை. பனிப்படலங்களும் மூடவில்லை. பெரிய காற்றோ புயலோ கிடையாது. இந்த நிலையில் உடம்பைத் தொட்டுக்கொண்டிருக்கும் அவனுடைய கிரகணங்கள் மனதுக்கும் தேகத்திற்கும் எவ்வித ஆனந்ததைக் கொடுக்கின்றன!

சரி நாலா பக்கங்களிலும் இருக்கும் காட்சிகளை நோக்க்குவோமே!

மேலே நீலநிறமான ஆகாயம்; கீழே க்ற்பூரத்தைப் போன்ற பனிப்படலங்கள் கவ்விக்கொண்டிருக்கும் பூமி. கடந்த இருபத்துநான்குமணிநேரமாகப்பனி விழாததால், பூமியின் மீது படிந்திருக்கும் பனித்திரள் கொஞ்சம் கெட்டியாகிவிட்டது. பனி மூடிய இந்தப்பூமி எங்கும்வியாபித்திப்பதாக நீங்கள் நினைத்துவிடவேண்டாம். அதேஇருமருங்கிலும்மலைகளின் மீதுள்ள மரக்கூட்டங்களின் நடுவே சில மைல்கள் தூரம் மேடும் பள்ளமுமாக, வடக்கிலிருந்துதெற்கு நோக்கி வெள்ளிப்பலகை மாதிரி கிடக்கிறது இந்தப் பூமி.

வாருங்கள்; இனி அந்த மரக்கூட்டங்களைக்கொஞ்சம் நெருங்கிப்பார்ப்போம். இங்கே இரண்டு விதமான விருட்சங்கள் அதிகமாயிருக்கின்றன. ஒரே வண்மை நிறமாயும் ஆனால் இலைகளே இல்லாத கொம்புகள்-கிளைகள் உள்ளனவாயும் நிற்பன ஒரு வகை; ஓங்கி வளர்ந்து,ஆனால் அடர்ந்த கிளைகளையும் ஊசியைப் போன்ற முனையான இலகளையும் உடைய தேவதாருவிருட்சங்கள் மற்ற வகை. அடர்ந்த கிளைகள் அந்த மரங்களை அப்படியே மூடிக்கொண்டிருப்பதும். கண் கொள்ளாக் காட்சியாயிருக்கிறதல்லவா?

தனிமையில் இருக்கும் நாம், கொஞ்சம் உற்றுக் காதுகொடுத்துக்கேட்போமா? பட்சிகளின் சப்தமாவது கேட்கிறதா? மிருகங்களின் இரைச்சலாவது கேட்கிறதா? சிறிய வண்டுகளின் ரீங்காரமாவது கேட்கிறதா? இல்லை. பயங்கரம் நிறைந்த நிசப்தத்தியின் ஆட்சி ஆரண்யமெங்கும் நிலவியிருக்கிறது.

சரி வாருங்கள் அதோ மலையின் மீதூயர்ந்து வளர்ந்திருக்கும் தேவதாருமரத்தின்மீது ஏறி நாலா பக்கங்களின் காட்சிகளைப் பார்ப்போம் யார்கண்டார்கள்? பனிக்கட்டி தேவதாரு விருட்சங்கள் இவைகளையயல்லாமல் வேறு ஏதாவது அந்தப் பக்கம் தென்படாதா?அப்படி ஒன்றையும் காணோம் .எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய மரங்களும், பனியுந்தானா? புற்களோ ,புதர்களோ இந்தக் காட்டில் முளைக்கவே செய்யாதா?

ஆனால் இவைகளைப்பற்றியெல்லாம் அபிப்பிராயம் கூறுவதற்காக நாம் இங்கு வரவில்லையே ? பனி சூழ்ந்த இரண்டு பாகங்களைக் கடந்து கடைசிப் பாகத்துக்கு நாம் வந்திருக்கிறோம்.இந்த வருஸ்ம் பனியும் அதிகமென்று சொல்வதையும் நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா? இவ்வளவு பனியிலும் நின்று கொண்டிருக்கிற இந்த மரங்கள் எவ்வளவு பருமனாயிருக்கின்றன! அளந்து பார்ப்பதற்கு கூட நம்மிடம் சாதனம் இல்லை ஆனால் சுமாராகச் சுற்றளவு எட்டு முழம் இருக்குமல்லவா? அதற்கு மேலும் இருக்கும்.

இந்த உயரமான மரத்தில் ஏறி நிற்கும் நாம் என்ன பார்க்கிறோம்? அதே பனிப்படலம் . அதே மரங்களின் கூட்டம். மேடு பள்ளமான அதே மலைப்பிரதேசம்! அதே புகை; ஆம் உண்மையிலேயே புகைதான் இந்த நிசப்தமான வளர்ந்ததரத்தில் புகை எங்கிருந்து வந்தது? நமக்கு ஆச்சரியமாயும். ஆனால் சந்தோசமாயும் இருக்கிறதல்லவா? வாருங்கள், போய்ப் பார்த்து விடுவோமே!.

புகை கிளம்புவது உண்மைதான் . ஆகாயம் நிர்மலமாயிருப்பதனாலும் ,நாம் உயரத்தில்நிற்பதாலும் சமீபமாகத்தெரிகிறது. இருந்தாலுமென்ன? நெருங்கி வந்து விட்டோம். பிண நாற்றமும் மாமிசவாசனையும் நம்முடைய மூக்குக்கு முதல் விருந்தாகக் கிடைத்திருக்கிறது. அதோ சப்தம்: ஆம் சிறு குழந்தைகளின் சப்தம்: ஜாக்கிரதை; நாம் ரொம்ப மெதுவாக நடக்கவேண்டும். காலடிச் சத்தங்கூடக் கேட்கக்கூடாது. மூச்சும் மெதுவாகவிட்டால் நல்லதுதான்.யார் கண்டார்கள்! நம்மை வரவேற்பதில், அவர்களைப் பார்க்கிலும் அவர்களுடைய நாய்கள் முந்திக்கொண்டால்?

இந்தக் குழந்தைகளைப் பார்த்தீர்களா? உண்மையிலேயே சின்னஞ்சிறிய குழந்தைகள். அதோ யாவற்றிலும் பெரிய குழந்தைக்கு எட்டு வயதிருக்கும்.சின்ன குழந்தைக்கு ஒரு வயது இருக்குமல்லவா?

ஆம் ஒரே வீட்டில் ஆறு குழந்தைகள்; இது வீடில்லையே; மலையின் இயற்கைக் குகை உட்பக்கம் ஒரே இருட்டாகவல்லவா இருக்கிறது! இது எவ்வளவு அகலமும் நீளமும் இருக்கும்? எவ்வளவும் இருக்கட்டுமே! நீளத்தையும் அகலத்தையும் பார்ப்பதற்காகவா நாம் வந்திருக்கிறோம்?

இனி இங்கு வசிப்பவரைக் கவனிப்போம். ஒரு பழுத்த கிழவி, அழுக்குப் படிந்து வெண்மையாய், ஆனால் சடை மாதிரி கற்றை கற்றையாக விரிந்து. அவளுடைய முகத்தையே மூடிக்கொண்டிருக்கின்றன , ரோமங்கள்! தன்னுடைய கைகளினால் அந்த ரோமக்கற்றைகளை விலக்குகிறாள். அவளுடைய புருவ ரோமங்களும்கூட ஒரே வெண்மை நிறம். அவளுடைய வெண்மையான முகத்தில் விழுந்துள்ள சுருக்கங்கள் அவளுடைய வாய்க்குள்ளிருந்து வெளிக் கிளம்புவன போன்று காட்சியளிக்கின்றன.

புகையும் நெருப்பும் வெளித் தோன்றும் அந்தக் குகைக்குள்ளே தான் குழந்தைகளும் கிழவியும் வசிக்கிறார்கள்.அவளுடைய உடம்பில் எந்த ஓர் ஆடையையும் காணோம்.குழந்தைகளின் சப்பதத்தைக்கூட அவளால் கேட்கமுடிகிறது. இந்த நேரத்தில் ,ஒரு குழந்தை கத்துகிறது.அவளுடைய கண்கள் அந்தப் பக்கம் திரும்பின, கிட்டத்தட்ட ஒன்று- ஒன்றரைவயதுள்ள இரண்டு குழந்தைகள்; ஒன்று ஆண் குழந்தை; மற்றது பெண். மஞ்சள் படிந்த வெண்மையும்மிருதுவுமான ரோமமும் பெரிய நீல நிறமான விழிகளையுமுடைய அந்தப் பையன் அழுது கொண்டிருக்கிறான்.வாயில் ஓர் எலும்பை வைத்துச் சுவைத்துக் கொண்டிருக்கும் சிறு பெண் பக்கத்தில் நிற்கிறாள்.

http://inioru.com/?p=31510

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஷா

அத்தியாயம் 1 பகுதி2

இடம் : வால்கா நதிக்கரைப் பிரதேசம்

இனம்: ஹிந்தோ ஐரோப்பியர்

காலம் : கி.மு. 6000

“அகின்! இங்கே வா, நான் இங்கே இருக்கிறேன் என்று தன்னுடைய நடுங்குங் குரலில் கிழவி பையனை அழைக்கிறாள். ஆனால், அகின் எழுந்திருக்கவில்லை. இந்தச் சமயத்தில் எட்டு வயதுப் பையன் அகினைத் தூக்கி கிழவிக்குச் சமீபத்தில் விட்டு,”அம்மா! ரோசனா எலும்பைப் பறித்து கொண்டாள். அதனால் அகின் அழுகின்றான்” என்றான்.

rock-shelter.jpg

கிழவி த்ன்னுடைய வற்றிப்போன கைகளால் அகினைத் தூக்கினாள். இன்னும் அவன் அழுது கொண்டுதானிருக்றான். அகினுடைய கண்களிலிருந்து பொங்கி வழியும் கண்ணீர், அவனுடைய அழுக்குப் ப்டிந்த கன்னத்திலே பெரிய ரேகைகளை உண்டாக்கிச் செல்லுகிறது! கிழவி அவனை முகத்தோடு அணைத்துக்கொண்டு .” அகின்! அழாதே, ரோசனாவை அடித்து விடுவோம்” என்று பனி சேர்ந்திருக்கும் பூமியைத் தன்னுடைய கையால் அறைந்தாள். ஆனால் அகினுடைய அழுகையோ கண்ணீரோ நின்றபாடில்லை. தன்னுடைய கையால் அவனுடைய கண்ணீரைத் துடைத்தாள். அந்தச் சிறிய அழகிய வதனத்தின் கண்ணீரைத்துடைத்ததால். அவளுடைய கையில் படிந்திருந்த அழுக்கு சில கறுப்புக் கோடுகளைத் தீட்டிற்ரேயொழிய, பையனுடைய அழுகை நிற்கவில்லை. மாமிசப் பசையேயில்லாது, பை மாதிரி நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும் அவளுடைய ஸ்தனத்தின் நுனியை அகினுடைய வாயில் வைத்தாள். பையனும் உடனே அழுகையை நிறுத்திக் கொண்டான்.

அது என்ன சப்தம்? ரொம்ப சமீபத்தில் கேட்கிறதே! மனிதக் குரல். ஆம், இனிமையான இளம் குரல் யாரையோ அழைப்பது போல் கேட்கிறதல்லவா?

“அகின்!அகின்!”

சப்தத்தைக் கேட்ட அகின், அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டே அழ ஆரம்பித்துவிட்டான்.

தலையில் வுறகுச் சுமையுடன் வேகமாக வந்த இரண்டு பெண்கள் தங்களுடைய சுமையைக் குகைக்குப் பக்கமாகப் போட்டுவிட்டு ஒருத்தி ரோசனாவையும், ஒருத்தி அகினையும்தூக்கி அணைத்துக்கொண்டார்கள். இரு பெண்களும், அந்த இரண்டு குழந்தைகளின் தாய்கள் மாத்திரமல்ல,இருவரும் உடன் பிறந்த சகோதரிகள் என்பதையும் அவர்களுடைய முகச்சாயல் நமக்குத் தெரிவிக்கிறதல்லவா ? நீல நிற விழிகளுங்கூட ஒரே மாதிரிதான்; ஒன்று-ஒன்றரை வயது வித்தியாசந்தானிருக்கும். இது நமக்குப் பெரிய மாறுதலாகத் தென்படவில்லை.அவர்களுடைய வதனங்களின் முழு அழகும் வெளிக்குத்தெரியக் கூடாதென்பதற்காகவே நீண்ட சுருள்சுருளான மிருதுவான தலைரோமங்கள் அந்த வதனங்களை மூடிக் கொண்டிருக்கின்றனபோல் தோன்றுகிறது.இப்பொழுது அவர்களுடைய அழகிய கைகளால் அந்த ரோமக்கற்றைகளை விலக்கியபின் பாருங்கள். கிரகணம் நீங்கிய பின் பொலிவோடு விளங்கும் பூரணச் சந்திரன் மாதிரி இருக்கின்றன அவர்களுடைய முகங்கள்.

அகினுடைய தாய், நெஞ்சில் வலது ஸ்தனத்தைச் சேர்த்துக்கட்டியிருக்கும் ரோமங்கள் அடர்ந்த தோலைக் கழற்றிக்கீழே போட்டு, அதன்மீது உட்கார்ந்து கொண்டு மடியில் வைத்து அணைத்துக் கொள்கிறாள் தன் மகனை. அகினுக்கு பரமசந்தோசம். அந்தச் சிறிய வாயின் வெளியே தோன்றும் முத்துப்போன்ற பற்களைப் பாருங்கள்.அவனுடைய உச்சி மீதும், கன்னங்களிலும் அவன் தாய் கொடுக்கும் ஒவ்வொருமுத்தத்துக்கும் அவன் சிரிப்பதைப் பாருங்களேன்! சில மாதங்களாக விடாது தொடர்ந்து பனிபெய்துகொண்டிருந்ததால்,ஆகாரத்துக்குத் தட்டு ஏற்பட்டதில் அவளுடைய சரீரம் மெலிந்திருந்தாலும் அழகையிழந்துவிடவில்லை,முகத்திலும் அதேபொலிவுதான்.அவள் தன்னுடைய மிருதுவான கரிய நுனியுள்ள ஸ்தனத்தை அகினுடைய வாயில் வைத்தாள்.

இப்பொழுது அந்தச் சின்னக் குழந்தையின் கண்கள் பாதிமூடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள்.அந்தச் சின்னஞ்சிறு கால்கள், மெதுவாக, ஆனால் எவ்வளவு ஒய்யாரமாக ஆடுகின்றன! தாயினுடைய மடியிலே, அந்தக் குழந்தை அனுபவிக்கும் ஆனந்தத்தைப் பாருங்கள். அவனுடைய வலது கையின் சின்னஞ்சிறு விரல்கள் அவளுடைய இடது ஸ்தனத்தின் கரிய நுனியயை வருடிக்கொண்டிருப்பதைப் பார்த்தீர்களா?

இந்த ஏகாந்தமான குகையிலே இவர்களை . அவர்களுடைய அலுவல்களைக் கவனிக்க விட்டுவிட்டு. நாம் அடுத்த காட்சியைப் பார்ப்போமா?

2

volga-river.gif

அதோ, அநேகம் பாதங்கள் வழி கூடிப்போவதை நாம் பார்க்கிறோம். சப்தம் கேட்காமலிருப்பதற்காகத் தானா அந்தப் பாதங்கள் தோலால் மூடப்பட்டிருக்கின்றன? அவைகள் எங்கு நோக்கிச் செல்லுகின்றன? நாமும் தொடர்ந்து போவோம். ஒரு பக்கமாகத் திரும்பி மலைக் காட்டுக்குள் புகுந்துவிட்டன. நாம் இவ்வளவு வேகமாக நடந்தும் அந்தப் பாதங்களைத் தொடர்வது கடினமாயிருக்கிறதல்லவா? அவைகளும் நின்ற பாடாயில்லை.

பனி படர்ந்த பூமி, காடடர்ந்த மலைவரிசை, அப்பால் பனிப்படலங்கள், இவ்விதமாக நாம் கடந்து இதுவரை வந்திருக்கிறோம். அதோ தெரிகிறதே அந்த மனிதக் கூட்டத்திற்குப் பின், நீல நிறமான இந்த ஆகாயம் நிர்மலமாயில்லாவிட்டால் அவர்களை நாம் பார்க்கவே முடியாது போயிருக்கும். நாமும் வெகு வேகமாக நடந்து அவர்களைச் சமீபித்து விட்டோம். அவர்களுடைய உடம்பின் மேல் மூடப்பட்டிருக்கிறதே, அந்த ரோமங்கள் அடர்ந்ததோலின் நிறத்திற்கும், இந்தப் பனிநிறத்திற்கும் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா? அவர்களுடைய கைகளிலிருக்கும் ஆயுதங்கள் கூட ஒரே வெண்மையாய்த்தான் தோற்றமளிக்கின்றன. வாருங்கள், கொஞ்சம் நெருங்கிப் போய்ப் பார்ப்போம்.

முன்னே வழி கூட்டிச் செல்லும் அந்தப் பெண்ணுக்கு வயது நாற்பதற்கு மேல் ஜம்பதுக்குள்ளிருக்கும். திறந்திருக்கும் அவளுடைய புஜத்தைப் பார்த்தாலே அவள் நல்ல சரீரக்கட்டு உடையவள் என்பது தெரிகிறதல்லவா? இவளுடைய தலைரோமம்,முகச்சாயல்,ஏன் ஒவ்வோர் அங்கமுங்கூட, அந்தகுகையிலே பார்த்த இரண்டு யுவதிகளையும் ஒத்திருக்கிறதல்லவா? ஆனால் இவள் கொஞ்சம் பருமன் ,பருவத்திலும் மூப்பு. இடது கையில் நீண்ட கூர்மையான கம்பு; வலது கையில் தோலிலே நன்றாகத் தீட்டிக் கூர்மையாக்கப்பட்ட கல்-அம்பு. இவளுக்குப் பின்னே ,நான்கு ஆடவர்கள், இரண்டு பெண்களும் செல்கின்றனர்.

ஆடவர்களில் ஒருவன் பெரியவளுக்குக் கொஞ்சம் அதிகமான வயதுடையவனாயிருக்கிறான். ஏனையோர்களுக்கு, பதினாங்கிலிருந்து இருபத்தாறு வயதுவரை இருக்கும்.

பெரியவனுடைய முகச்சாயல், ரோமம், அங்கங்கள் எல்லாம் அந்தப்பெரியவளுடைய தோற்றத்தையே ஒத்திருக்கின்றன. சரீரக்கட்டிலும் அவளைப் போலவே பலவான் தான் . அதே மாதிரி ஆயுதங்களே அவனுடைய கைகளிலும் இருக்கிறன. பாக்கி மூன்று ஆடவர்களுடைய தோற்றம், புஜபலம் இவளை ஒத்திருந்தாலும்,இவளைப் பார்க்கிலும் அதிக இளமையாயிருக்கிறார்கள்.

வயதிலும் வித்தியாசம். அதே ஆயுதங்கள் தான் இவர்கள் கைகளிலுமிருக்கின்றன. பெண்கள் இருவரில் ஒருத்திக்கு இருபத்திரண்டு வயதிருக்கும். மற்றொருத்திக்குப் பதினாறு வயதிருக்கும். முன்னமே நாம் குகையில் அந்தக் கிழவியைப் பார்த்திருக்கிறோமல்லவா? நம்முடைய மனக்கண் முன்னே, அவளுடைய முகச்சாயலோடு இவர்கள் எல்லோருடைய தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவர்கள் யாவரும் ஒரே குடும்பத்தவர்தான் என்று நிச்சயிக்க முடிகிறதல்லவா?

http://inioru.com/?p=31631

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எவ்வித ஆய்வு செய்யாத கற்பனையின் பால் எழுதப்பட்ட நாவல் என்று தான் சொல்லலாம் இதை. இன்னும் ஏன் மாயையிலே உழல்கிண்றீர்கள் அர்ஜூன் .யதார்த்தாக யோசித்தீர்களானால் இப்படியான குப்பைகளைத் தூக்கிப் போட்டுவிடலாம். இவர் சிறந்த எழுத்தாளர் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை ஆனால் இவர் போன்றோரும் வரலாறுகளைத் திசை திருப்பவும் மாற்றி எழுதவும் வல்லமை கொண்டவர்கள். இப்படியானவர்களாலும் தான் எமக்கு இந்நிலை.

Link to comment
Share on other sites

பேராசிரியர் ராகுல சங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ இந்தியாவில் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்திய நாவல். மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் இவைகளை இருபது கதைகளாகப் படைத்துள்ளார் ராகுல்ஜி.

இவைகள் வெறும் கதைகளல்ல. சரித்திரத்தை படிக்கும் சலிப்போ, தத்துவத்தைக் கற்கும் சிரமமோ இல்லாமல் வெகு இயல்பான , சுவையான நடையில் கூறப்பெற்றுள்ள அறிவுப் பெட்டகம் இந்தப் புத்தகம்.

கி.மு 6000 த்திலிருந்து 20 நூற்றாண்டு வரை உள்ள காலங்கள் ஆதாரபூர்வமாக அலசப் பெற்றுள்ளன.

உலகின் மிகப்பெரும் அறிஞரான ராகுல்ஜீ, 36 மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். அறிவுத் தேடலில் உலகின் மூலை முடுக்கெல்லாம் சுற்றித்திரிந்தவர். வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தவர். தனது உழைப்பால் சேகரித்துக்கொண்டவற்றை 150 நூல்களாக மக்களுக்கு வழங்கியவர். ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ என்ற நூலை இணைய வாசகர்களுக்காக தொடர் பதிவுகளாகத் தருவதில் மகிழ்ச்சிய்டைகிறோம்.

Jurrassic park நான் மிகவும் ரசித்து பார்த்த ஒருபடம் .அதை நான் பார்க்கும் போது உண்மையில் இப்படிஎல்லாம் இருந்துருக்குமா என்று யோசிக்கவேயில்லை .3D எப்ப வரும் என்று பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கு எழுதவேண்டிய கருத்து மாறி அர்ஜுனுக்கு எழுதப்பட்டு விட்டது மன்னிக்கவும் அர்ஜுன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல்ஜி நன்றாகக் கதை எழுதியவர்தான். அவரது "சிந்து முதல் கங்கை வரை" யையும் படித்திருக்கின்றேன். நீங்களும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் மெசோ அக்கா.

சுமேரியர் வழித்தோன்றல்தான் தமிழர்கள் என்பது போல ராகுல்ஜியும் ஆரியர் எங்கிருந்து வந்தனர், திராவிடர்கள் (கரிய நிறமும், விகாரமான முகங்களுடன் வெளித்தெரியும் பற்களும் கொண்ட கட்டையான மனிதர்கள் - நாம் இல்லை!) எவ்வாறு இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு விரட்டப்பட்டார்கள். குமரன் (முருகக்கடவுள்) எப்படித் தோன்றினார் என்றெல்லாம் கதை எழுதியிருக்கின்றார்.

படித்துப் பார்த்தும் நம்பிக்கை வராவிட்டால் நல்ல கதை படித்தோம் என்று விட்டுவிடவேண்டியதுதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் திராவிடர் பற்றிய கூற்றை நீங்களும் நம்புகிறீர்கள் என்பதை உங்கள் வியாக்கியானம் சொல்கிறது. உங்கள் மேல் தனிப்பட எனக்குக் கோபம் இல்லை. திராவிடர் பற்றி இவர் அகழ் வாய்வும் செய்யவில்லை எப்படி ஒரு இனத்தின் நகர்வை எழுத முடியும். யாரோ எழுதி வைத்ததை வாசித்தாரா ?? அந்த யாரோ அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதரா என்றெல்லாம் யோசிக்கவே மாட்டீர்களா. நீங்கள் அவரைப் பற்றி முதலில் எழுதியிருந்ததைப் பார்த்துவிட்டே நான் எழுத வேண்டி வந்தது. அவர் ஒரு ஆரியர் என்பதையாவது ஒத்துக்கொள்வீர்களா ??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் திராவிடர் பற்றிய கூற்றை நீங்களும் நம்புகிறீர்கள் என்பதை உங்கள் வியாக்கியானம் சொல்கிறது. உங்கள் மேல் தனிப்பட எனக்குக் கோபம் இல்லை. திராவிடர் பற்றி இவர் அகழ் வாய்வும் செய்யவில்லை எப்படி ஒரு இனத்தின் நகர்வை எழுத முடியும். யாரோ எழுதி வைத்ததை வாசித்தாரா ?? அந்த யாரோ அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதரா என்றெல்லாம் யோசிக்கவே மாட்டீர்களா. நீங்கள் அவரைப் பற்றி முதலில் எழுதியிருந்ததைப் பார்த்துவிட்டே நான் எழுத வேண்டி வந்தது. அவர் ஒரு ஆரியர் என்பதையாவது ஒத்துக்கொள்வீர்களா ??????

நான் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்படாத எந்தக் கதைகளையும் நம்புவதில்லை. அதற்காக நான் விரும்புவதை மட்டுமே தெரிவு செய்து படிப்பதுமில்லை!

ஆரியர், திராவிடர் என்ற இனமே இல்லை. அதெல்லாம் ஆங்கிலேயர் இந்தியர்களைப் பிரிக்கவென்றும், தங்களை இனத்தால் உயர்வானர்கள் என்றும் காண்பிக்கச் செய்த கட்டுக்கதை என்றும் ஒரு கட்டுரை படித்திருந்தேன்.

நான் சமதர்மக் கொள்கைகள்தான் மனித குலத்தின் சமச்சீரற்ற நிலைமைகளை மாற்றும் என்பதையும், போட்டிச் சந்தையுள்ள முதலாளித்துவம்தான் பொருளாதார விருத்தியையும் புதிய கண்டுபிடிப்புக்களையும் மனித குலத்திற்கு தரும் என்பதையும் நம்பும் திராவிட இனத்தில் பிறந்த ஆரிய சிந்தனையுள்ளவன் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடன் நான் சண்டைக்கு வரவில்லை கிருபன் நீங்களாகவே திருந்தினால்த் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், கதை முடியக் கருத்திடுகிறேன்!

பகிர்தலுக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடன் நான் சண்டைக்கு வரவில்லை கிருபன் நீங்களாகவே திருந்தினால்த் தான்

உங்கள் கதை மதம் பரப்ப என்று வந்து கதவைத் தட்டுபவர்களின் கதை மாதிரி இருக்கின்றது. மூளைச் சலவை செய்யப்பட்டு மாயைக்குள் மூழ்கி இருப்பவர்களுக்கு உதவி செய்து நல்வழி காட்டுகின்றேன் என்று சொல்லி இன்னொரு மாயைக்குள் தள்ளிவிடுவதுதான் வாருங்கள் என்கிறீர்கள்..

வரலாறு என்பது வெறும் கதையாடல்களில், கட்டுரைகளில் நிறுவப்படுவதில்லை. கடினமான அகழ்வாராய்ச்சிகள், தடயங்கள், சமூகவியல் ஆய்வுகள் என்பனவற்றை விஞ்ஞானபூர்வமாக்ச் செய்து, அந்தத் துறைகளில் ஆராய்ச்சிகள் செய்யும் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் உள்ளவர்களால் ஒப்புதல் செய்யப்பட்ட கட்டுரைகள், புத்தகங்கள் மூலம்தான் உருவாக்கப்படவேண்டும்.

இல்லையென்றால் எல்லாமே வெறும் உருசிகரமான கதைகள்தான்.

ராகுல்ஜி வரலாற்றை கதையாகத் தந்துள்ளேன் என்கின்றார். ஆனால் அதை நம்மவேண்டியதில்லை. எல்லாவற்றையும் நான் நம்பவும் இல்லை! ஆகவே எதுவித தவறுகளும் செய்யாத நான் திருத்துவதற்கு எதுவுமில்லை.

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், கதை முடியக் கருத்திடுகிறேன்!

பகிர்தலுக்கு நன்றிகள்!

யாழ் களத்தில் Feb 2005 இல் எழுதிய கருத்து.

வரலாற்றின்படி ஆரியர் வொல்கா நதிக்கரையிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியே வந்து, கைபர் கணவாய் ஊடாக இந்திய உபகண்டத்தை அடைந்தனர். இது திராவிடரை தெற்கு நோக்கி இடம்பெயர வைத்தது. ராகுல சங்கிருத்தாயன் என்ற பெளத்த முனிவர் எழுதிய "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகம் படித்தால் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம். அதிலுள்ள எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாவிடினும், அப்புத்தகம் ஆரிய, திராவிட கருத்துக்களை அறிய முதற்படி என்பது என் கருத்து.

http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=3381&view=findpost&p=59124

Link to comment
Share on other sites

[size=5]இராகுல் ஜி : Mahapandit Rahul Sankrityayan.[/size]

[size=5]அதுவும் மாற்றம் செய்த பெயர் : [/size][size=5]The author (original name [/size]Kedarnath Pandey[size=5]) was so deeply influenced by [/size]Buddhism[size=5] that he adopted it along with the name [/size]Rahul[size=5] (The name of [/size]Gautam Buddha[size=5]'s son). This influence is also felt in his stories [/size]Bandhul Mall[size=5] (490 BC, 9th story) and [/size]Prabha[size=5].[/size]

யாழ் களத்தில் Feb 2005 இல் எழுதிய கருத்து.

வரலாற்றின்படி ஆரியர் வொல்கா நதிக்கரையிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியே வந்து, கைபர் கணவாய் ஊடாக இந்திய உபகண்டத்தை அடைந்தனர். இது திராவிடரை தெற்கு நோக்கி இடம்பெயர வைத்தது. ராகுல சங்கிருத்தாயன் என்ற பெளத்த முனிவர் எழுதிய "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகம் படித்தால் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம். அதிலுள்ள எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாவிடினும், அப்புத்தகம் ஆரிய, திராவிட கருத்துக்களை அறிய முதற்படி என்பது என் கருத்து.

http://www.yarl.com/...indpost&p=59124

[size=4]கீழே உள்ள குறிப்பின்படி ஆசியாவில் இருந்துதான் ஐரோப்பா சென்றார்கள் என உள்ளது. [/size]

[size=5](ஐரோப்பாவின் மிக நீண்ட நதி - வொல்கா) [/size][size=5]The downstream of the Volga, widely believed to have been a cradle of the Proto-Indo-European civilization, was settled by Huns and other Turkic peoples in the first millennium AD, replacing Scythians. The ancient scholar Ptolemy of Alexandria mentions the lower Volga in his Geography (Book 5, Chapter 8, 2nd Map of Asia). He calls it the Rha, which was the Scythian name for the river. Ptolemy believed the Don and the Volga shared the same upper branch, which flowed from the Hyperborean Mountains.[/size]

[size=5]Subsequently, the river basin played an important role in the movements of peoples from Asia to Europe. A powerful polity of Volga Bulgaria once flourished where the Kama river joins the Volga, while Khazaria controlled the lower stretches of the river. Such Volga cities as Atil, Saqsin, or Sarai were among the largest in the medieval world. The river served as an important trade route connecting Scandinavia, Rus', and Volga Bulgaria with Khazaria and Persia.[/size]

http://en.wikipedia.org/wiki/Volga_River#Human_history

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்குக் காலம் மாறி,மாறி வந்து கொண்டிருக்கும், புவியின் வெட்ப, தட்ப நிலைக்கேற்ப, இரண்டு விதமான மனித நகர்வுகளுக்கும், சாத்தியங்கள் இருந்திருக்கலாம்!

ஆனால், கடைசியாக, வேத கால ஆரம்பத்தில், ஏற்பட்ட நகர்வுகள், வடக்கிலிருந்து, தெற்கு நோக்கியதாகவே இருந்திருக்க அதிகமான சான்றுகள், உள்ளன!

குதிரைகளின், தோற்றம், இங்கு தான் ஆரம்பிக்கின்றது!

உதாரணங்கள், அசுவமேதயாகம், இந்திரனின் வாகனம் 'வெண்புரவி' போன்றன!

ஹரப்பா, மொகஞ்சிதாரோ, நாகரீகத்தில் எல்லா விதமான விலங்குகளும், உள்ளன! ஆனால், குதிரை மட்டும் இல்லை!

திராவிடர்களைத் தாசர்கள் என அழைத்ததுவும்,இந்தக் காலத்திலேயே ஆரம்பித்தது!

தாசர்களின், தெற்கு நோக்கிய நகர்வும், இந்தக் காலப் பகுதியிலேயே, ஆராம்பிக்கப் பட்டிருக்க வேண்டும்!

ஆயினும் 'வருணாச்சிர தர்மம்' வேதத்தில் வேறு அர்த்தத்தில் தான் கூறப்பட்டது, என்று கீதை வியாக்கியானம் சொல்கின்றது!

பிறப்பால் அன்றி, ஒருவனது வாழும் முறையாலும், ஒருவன் பிராமணனாகலாம் என்று கீதை கூறுகின்றது!

ஆனால் இது பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றமாகவும் இருக்கலாம்!

ஏனெனில், எமது மதத்தின், தனிச் சிறப்பே, எதையும் உள்வாங்கிக் கொண்டு, மேலே நகர்ந்து செல்வது தான்!

நன்றிகள், அகூதாவுக்கும், கிருபனுக்கும்!

Link to comment
Share on other sites

[size=4]

ஆனால், கடைசியாக, வேத கால ஆரம்பத்தில், ஏற்பட்ட நகர்வுகள், வடக்கிலிருந்து, தெற்கு நோக்கியதாகவே இருந்திருக்க அதிகமான சான்றுகள், உள்ளன![/size]

[size=4]குதிரைகளின், தோற்றம், இங்கு தான் ஆரம்பிக்கின்றது!

உதாரணங்கள், அசுவமேதயாகம், இந்திரனின் வாகனம் 'வெண்புரவி' போன்றன!

ஹரப்பா, மொகஞ்சிதாரோ, நாகரீகத்தில் எல்லா விதமான விலங்குகளும், உள்ளன! ஆனால், குதிரை மட்டும் இல்லை!

[/size]

[size=4]குதிரைகள் அப்பொழுது இல்லாமல் இருந்திருக்கலாம். [/size]

[size=1]

[size=4]அதாவது குதிரைகள் கி.மு.4000 ஆண்டுகள் தொடக்கத்திலே மட்டுமே மனிதர்களுடன் இணையத்தொடங்கியது. அத்துடன் குதிரை என்பது வேறு சிறிய நாய் போன்ற விலங்குகளில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த மிருகம். [/size][/size]

[size=1]

http://en.wikipedia.org/wiki/Horse[/size]

Link to comment
Share on other sites

இணைப்பதற்கு நன்றி கிருபன்...இதனை 13 வயதில்; வாசிக்க கூடாத வயதில் வாசித்து இருக்கின்றேன். இப்ப மீண்டும் வாசிக்க வித்தியாசமான உணர்வுகளைத் தரும் என்று நினைக்கின்றேன்.

60 வயதின் பின் ஒரு ஆண்டியாக, பிச்சை எடுத்துக் கொண்டு தென் இந்தியா முழுக்க சுற்ற வேண்டும் என்று ஆவல் இருக்கு. ஒரே மனைவி பிள்ளைகளுக்கும் சொல்லுவேன். இப்ப யோசிக்கும் போது, இந்த பயணக் கட்டுரை தான் இப்படியான ஆசையை விதைத்துள்ளதோ என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][/size]

[size=4]குதிரைகள் அப்பொழுது இல்லாமல் இருந்திருக்கலாம். [/size]

[size=1][size=4]அதாவது குதிரைகள் கி.மு.4000 ஆண்டுகள் தொடக்கத்திலே மட்டுமே மனிதர்களுடன் இணையத்தொடங்கியது. அத்துடன் குதிரை என்பது வேறு சிறிய நாய் போன்ற விலங்குகளில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த மிருகம். [/size][/size]

[size=1]http://en.wikipedia.org/wiki/Horse[/size]

நன்றிகள், அகூதா!

உண்மையாக இருக்கலாம்!

ரிக் வேதகாலம், கிறிஸ்துவுக்கு முன்பு, ஐயாயிரத்துக்கும், மூவாயிரத்துக்கும் இடைப்பட்டது, என்று கணித்துள்ளார்கள்!

ஆனால், ஐரிஸ் மன்னர்களிடம், அசுவமேத யாகத்தை ஒத்த நிகழ்வு, இருந்ததாகக் கூறுகின்றார்கள்!

அதாவது, பட்டத்து ராணியைக், குதிரைக்குப் பரிசாக அழிப்பது!

இதுவும், வடக்கிலிருந்தும் தெற்கு நோக்கிய, நகர்வையே உறுதிப் படுத்துகின்றது!

ஆனால், சமஸ்கிரிதம் எவ்வாறு தோன்றியது, என்பதற்கு விடை கண்டால், பல மர்மங்கள் துலங்கலாம், என எண்ணுகின்றேன்!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நிஷா

அத்தியாயம் 1 பகுதி3

இடம் : வால்கா நதிக்கரைப் பிரதேசம்

இனம்: ஹிந்தோ ஐரோப்பியர்

காலம் : கி.மு. 6000

 

 

lone-rock-art.jpg

 

ஆயுதம் ஏந்திய கைகள், வேகமான நடை, பெரியவள் முன்னே செல்ல அவளைத் தொடர்ந்து ஏனையோர் செல்லும் முறை இவைகளைக் கவனிக்கும் நமக்கு இவர்கள் ஏதோ யுத்தத்தை நாடிப் போகிறவர்கள் மாதிரித் தெரிகிறது. நாமும் தொடர்ந்தே செல்வோம். வாருங்கள்.

தலைமை தாங்கி முன்னே போகும் பெரியவள். (இனி அவளைத் தாய் என்றே அழைப்போம். தாய் என்பது அந்தக் காலத்தில் குடும்பத் தலைவியைக் குறிக்கும்) இப்போது பள்ளத்தாக்கில் இறங்கி இடதுபக்கம் திரும்பி நடக்கிறாள். மற்ற யாவரும் அவளைத் தொடர்கின்றனர். அவளுடைய கால்கள் மெதுவாகத் தேய்த்துத் தேய்த்துச் செல்கின்றன. தோல்களைக் கட்டியிருப்பதால் காலடிச் சப்தம் கூடக் கேட்கவில்லை இப்போது. அவர்கள் தொடர்ந்திருக்கும் சிறிய மலைக் கூட்டங்களின் மீது செல்கின்றார்கள். அதே மெதுவான நடை. கைகளாலும் அந்த மலைகளைத் தொட்டுத் தொட்டுக் கொண்டு நடக்கின்றார்கள். வெகு தூரம் வளைந்தும், சுற்றியும் வந்த அவர்களுடைய பயணமும் முடிந்து விட்டதா என்ன? அவர்கள் ஏன் நிற்கின்றார்கள்? குகை! இதைத் தேடியா இவர்கள் இவ்வளவு தூரம் வந்தார்கள்? இதுதான் இவர்களுடைய வசிப்பிடமா? இல்லை. இல்லை. குகையின் வாசலில் பனி படர்ந்திருக்கும் பூமியைக் குனிந்து உற்று உற்று நோக்குகிறாள் அந்தத் தாய். எந்த ஒரு அடையாளமும் தென்படவில்லை. இப்போது அவள் மாதிரம் குகையின் உள்ளே மெதுவாக அடியெடுத்து வைத்து நடக்கிறாள். கொஞ்ச தூரம் சென்றவுடன் குகை கொஞ்சம் வளைந்து செல்கிறது. வெளிச்சமும் குறைவு. நான்கு புறத்தையும், பூமியையும் உற்றுக் கூர்ந்து கவனித்துச் செல்லும் அவளுடைய கண்களுக்கு வெளிச்சம் குறைந்து விட்டதும் சிரமத்தைக் கொடுக்குமல்லவா? கொஞ்சம் நின்று நிதானித்துக் கண்களை சரிப்படுத்திக் கொண்ட அவள் இப்போது மேலும் மெதுவாக அடியெடுத்து வைத்துச் செல்கிறாள். கொஞ்ச தூரம் சென்றவுடன் அவள் என்ன கண்டாள்? மூன்று கரடிகள் – ஆண், பெண், அவற்றின குட்டி ஆக உருப்படி மூன்றும் தலைகளைப் பூமியில் புதைத்துக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருக்கின்றன. இறந்து கிடப்பவை போன்று. ஏனெனில் உயிரோடு இருக்கின்றன என்பதற்கான எந்த அடையாளத்தையும் காணோம்.

 

மெதுவாக அடியெடுத்து வைத்துத் திரும்பி வரும் அவளுடைய முகத்தோற்றத்தைப் பாருங்கள். நெஞ்சிலே பொங்கி வரும் ஆனந்தத்தை வெளியே காண்பிக்கின்றதல்லவா? அதிலும் ஒருவிதப் பீதி கலந்திருக்கிறது. ஆம் தூங்கிக்கொண்டிருக்கும் அந்த துஷ்ட மிருகங்கள் விழித்துக் கொண்டால்?

வரவையெதிர்பார்த்து வெளியே காத்து நின்ற இவளுடைய பரிவாரம், இவளின் முகத் தோற்றத்தில் இருந்து, தங்களுடைய உழைப்பிற்கு ஊதியம் கிட்டி விட்டதாய் தெரிந்து கொண்டனர். வந்த அவளும் தன்னுடைய கையை நீட்டி அதில் மூன்று விரல்களைக் காட்டினாள்.

 

இவளோடு, பெரியவன், அவனுக்கு அடுத்தவன் இருவரும் தங்கள் தங்கள் ஆயுதங்களை எச்சரிக்கையாகத் தாங்கிக் கொண்டு தாய்க்குப் பின்னே திரும்பவும் குகைக்குள் அடி மேல் அடி வைத்து ஒருவர் பின் ஒருவராய்ச் செல்கின்றனர். கூர்மையான நீண்ட தடிகளை வலக் கரங்களில் பிடித்துக் கொண்டு, தாய் ஆண் கரடியையும் பெரியவன் பெண் கரடியையும், இளையவன் குட்டியையும் நெருங்கினர். மறு வினாடி அவர்களின் கூரிய ஆயுதங்கள் கரடிகளின் இருதயத்தில் பாய்ந்தன. ஆனால் பாவம், அந்த மிருகங்கள் தங்கள் உடம்பைக்கூட அசைக்கவில்லை. அவைகளின் ஆறுமாத பனிக்கால நித்திரை கலைவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் பாக்கி இருக்கிறது! ஆயுதபாணிகளான இவர்கள் அதைக் கவனிக்க முடியுமா? முன் ஜாக்கிரதையாகத்தானே அவர்கள் காரியம் செய்ய வேண்டும்? வேகமாக பாய்ச்சிய ஆயுதங்களை இப்படியும் அப்படியுமாக நாலைந்து தடவை அசைத்தார்கள். ஏன்? அந்தப் பிராணிகள் உயிருடன் விழித்துக் கொண்டால் ஆபத்தல்லவா? இப்போது பயம் தீர்ந்து விட்டது. அவர்கள் தங்கள் பிராணிகளின் முன்னங்கால்களையும், முகத்தையும் சேர்த்துப் பிடித்து இழுத்து வாசலுக்கு கொண்டு வந்து சேர்க்கின்றனர். எல்லோருடைய முகத்தையும் பாருங்களேன். என்ன ஆனந்தம்! எவ்வளவு சந்தோஷம்! ஒரே ஆரவார சப்தம்!

 

தாய், தன் உடம்பில் கட்டப்பட்டிருக்கும் தோலுக்குள் இருந்து ஒரு கத்தியை எடுத்தாள். அது கூர்மையாகத் தீட்டப்பட்டிருக்கும் கல். அதைக் கொண்டு பெரிய கரடியின் வயிற்றுப் பாகத்தைக் கிழிக்கிறாள். கிழிப்பதோ கரடியின் தோலை. ஆயுதமோ கல். அது எவ்வளவு கூர்மையாயிருந்தால் தான் என்ன? பழக்கமும் நல்ல பலமும் இருப்பதால் தானே முடிகிறது. வயிற்றைக் கீறிய அவள், ஈரலில் ஒரு துண்டை வெட்டித் தன் வாயில் போட்டுக் கொண்டாள். மற்றொன்றை பதினான்கு வயதுடைய சிறிய பையனின், வாயில் வைத்தாள். மற்றவர்கள் அந்த மிருகங்களின் சமீபத்தில் உட்கார்ந்திருந்தார்கள். மெதுவான பாகங்களை வெட்டி வெட்டி அந்தத் துண்டுகளை ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டு வருகிறாள். இந்த விதமாக, ஒரு பிராணியின் மெதுவான பாகம் தீர்ந்து, அடுத்த மிருகத்தின் உடலில் தன் ஆயுதத்தைப் பிரயோகிக்கிறாள். இந்த நேரத்தில் பதினாறு வயதுடைய இளையவள், கொஞ்சம் விலகிப்போய், சிறிது பனித்துண்டையெடுத்து வாயில் போட்டுக் கொள்கிறாள். அதே சமயம் ஆடவர்களில் பெரியவனும், அவளுக்கு சமீபம் சென்று, தன்னுடைய வாயிலும் சிறிய பனிக்கட்டியைப் போட்டுக் கொண்டு அவள் கரங்களைப் பிடிக்கிறான். கொஞ்சம் நாணிய அவள் உடனே அமைதியாகி விட்டாள். இறுகத் தழுவிக் கொண்ட அவனும் அவளும் இன்னும் கொஞ்சம் விலகிச் சென்று விட்டனர்.

 

சிறிது நேரத்தில், பனிக்கட்டிகளைக் கையில் ஏந்திக் கொண்டு அவர்களிருவரும் கூட்டத்துக்குத் திரும்ப வந்தனர். இருவருடைய கன்னங்களும், கண்களும் இப்போது அதிகமாகச் சிவந்திருக்கின்றன.

 

அந்தப் பெரியவன் ‘அம்மா, நான் அறுக்கிறேன். நீ ரொம்பக் களைத்துப் போய் விட்டாய்’ என்றான்.

 

அவனிடம் கத்தியைக் கொடுத்த தாய் குனிந்து, பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவர்களில் இருபத்தி நான்கு வயதுடைய ஆடவனின் முகத்தில் முத்தமிட்டு விட்டு அவனுடைய கைகளைப் பற்றினாள். உடனே இருவரும் வெளியில் சென்று விட்டார்கள்.

 

மூன்று பிராணிகளின் ஈரல்களையும் மெதுவான மாமிசத் துண்டங்களையும் யாவரும் தின்றுவிட்டனர். நான்கு மாதங்களாக ஒரே நித்திரையில் ஆழ்ந்திருந்த அந்த மிருகங்களினிடம் ஈரல் எங்கே இருக்கப்போகிறது? ஆனாலும் அந்தச் சிறிய குட்டிக் கரடியினுடைய மாமிசம் மிருதுவாகவும் ருசியாகவும் இருந்திருக்குமல்லவா? கூடிய மட்டும் மாமிசத் துண்டுகளைத் தின்ற அவர்கள், இளைப்பாறுவதற்காக அந்த இடத்திலேயே சிறிது படுத்துப் புரண்டனர்.

 

இனி அவர்கள் தங்கள் வீட்டுக்கு – ஆம் குகைக்குச்; செல்ல வேண்டும். பெரிய கரடிகள் ஒவ்வொன்றினுடைய நான்கு கால்களையும் தோல் கயிற்றினால் சேர்த்துக் கட்டி, அவற்றினூடே கம்புகளைக் கொடுத்து ஒவ்வொன்றுக்கும் இரண்டு பேர் வீதம் நான்கு ஆடவரும் தங்கள் தோள்களில் தூக்கிக் கொண்டார்கள். குட்டியை ஒரு பெண் தூக்கிக் கொண்டாள். தாய் தன்னுடைய ஆயுதங்களை கையிலேந்தியவளாய் முன்னே செல்ல, மற்றவர்களும் அவளைத் தொடர்ந்தனர்.

அந்த மாக்கள் (காட்டு மனிதர்கள்) அப்போது என்ன நேரம் எத்தனை மணி இருக்கும் என்பதை அறிய மாட்டார்கள். ஆனால், ‘இன்று நல்ல நிலவாயிருக்கும்’ என்பது மாத்திரம் அவர்களுக்குத் தெரியும். இப்போது சூரியனுடைய ஒளி ரொம்பவும் குறைந்து விட்டது. அப்பொழுதுதான் அஸ்தமித்துக் கொண்டிருந்ததால், இன்னும் லேசான வெளிச்சம் இருந்தது. அவர்களும் தங்கள் பாதையில் முன்னேறிய வண்ணம் சென்றனர். கொஞ்ச நேரத்தில் ஆகாயம் பூமி எங்கும் ஒரே வெண்மை நிறமாகக் காட்சியளிக்க ஆரம்பித்து விட்டது. ஆகாயத்தில் நிலவின் ஒளி, கீழே பனிப்படலம் படிந்த பூமி.

 

வழிகூடிச் செல்லும் இந்தக் காட்டு மனிதர் கூட்டங்களுக்கு அவர்களுடைய வீடு இன்னும் வெகு தூரத்தில் இருப்பது தெரியும். வேகமாக நடக்கின்றனர். ஆயுதம் ஏந்திய கையினளாய், அந்தத் தாய் தலைமை தாங்கி யாவருக்கும் முன்னே நடக்கிறாள். இரவானதால் நாலாய் பக்கங்களிலும் தன்னுடைய கண்களின் பார்வையை விட்டெறிந்து கூர்மையாக நோக்கிய வண்ணம் நடந்து கொண்டிருக்கிறாள். ஓர் இடத்தில் திடீரென்று நின்ற அவள், காது கொடுத்து கேட்க ஆரம்பித்தாள். ஏனையோர் மௌனமாக நிற்கின்றனர். இந்த நேரத்தில் பதினாறு வயதுள்ள பெண் இருபத்தாறு வயதுள்ள வாலிபனிடம் ‘உர், உர், பரூக், பரூக்’ என்று சத்தமிட்டு, ‘அதிகம் அதிகம் யாவரும் ஜாக்கிரதை’ என்று ஜாடை காட்டி ஆவேசத்தோடு அலறினாள்.

 

தூக்கி வந்த சவங்கள் தோள்களிலிருந்து இறக்கப்பட்டன. உடனே யாவரும் தங்கள் தங்கள் ஆயுதங்களை ஏந்தி, முதுகுக்கு முதுகு தொடும்படியாக வட்;ட வடிவில் வியூகம் வகுத்து திசைகள் தோறும் நோக்கியவர்களாய் நின்றனர். சிறுவன் வியூகத்துக்கு நடுவில் நிற்கிறான். கொஞ்ச நேரத்தில் ஏழெட்டு ஓநாய்கள், தங்களுடைய நீளமான நாக்குகளைத் தொங்க விட்டுக் கொண்டும், ‘உர், உர்’ என்று கத்திக் கொண்டும், இந்த மனித மிருகக் கூட்டத்தின் வியூகத்தைச் சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்தன. இவர்களுடைய கைகளிலுள்ள ஆயுதங்களைப் பார்த்த அந்த ஓநாய்கள் யுத்தம் ஆரம்பிப்பதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்பார்ப்பன போல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் வியூகத்தின் நடுவே நின்ற பதினான்கு வயதுச் சிறுவன், தன்னுடைய நீண்ட தடியோடு சேர்த்துக் கட்டியிருந்த கம்பை எடுத்து அதில் தோல் கயிற்றைக் கட்டி அதை ஒரு முறுக்கேற்றிய வில்லாக்கி, எங்கே தான் மறைத்து வைத்திருந்தானோ ஒரு கூர்மையான கல் அம்பு, அதையும் வில்லையும் வட்டத்தில் நிற்கும் இருபத்து நான்கு வயதுடைய ஆடவனின் கையில் கொடுத்து அவனை வியூகத்தின் நடுவில் தள்ளிவிட்டு, அவனுடைய ஸ்தானத்தில் தான் நின்று கொண்டான். இருபத்து நான்கு வயதுடைய ஆடவன் தன்னுடைய வில்லில் நாணேற்றி, கல் அம்பைப் பூட்டி வியூகத்தின் நடுவே நின்ற வண்ணம் குறி வைத்து ஒரு ஓநாயின் மீது ஏவினான். அந்தப் பாணம் அதன் ஒரு புறத்து விலாப்பக்கத்தில் பாய்ந்து விட்டது. உடனே கீழே விழுந்த அந்த ஓநாய், சமாளித்துக் கொண்டு வியூகத்தின் மீது பாய ஆரம்பித்ததோ இல்லையோ, அவன் மற்றொரு பாணத்தையும் அதன் மீது ஏவிவிட்டான். இந்த அம்பு சரீரத்தில் பெரிய காயத்தை மாத்திரமா உண்டுபண்ணியது? அதனுடைய உயிரையும் கொள்ளை கொண்டு விட்டது. பிணமாக விழுந்த அந்த ஓநாயின் சரீரத்தில் இருந்து வழிந்தோடும் ரத்தத்தை மற்ற ஓநாய்கள் நக்கிக் கொண்டும் கடைசியில் அதைக் கிழித்துத் தின்னவும் ஆரம்பித்து விட்டன.

 

இந்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக நினைத்த மாக்கள் (மனித மிருகங்கள்) தங்களுடைய வேட்டைப் பொருளை தோள்களில் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாகத் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். இப்பொழுது, தாய், இடையிடையே கூர்ந்து கூர்ந்து பார்த்துக் கொண்டும், காது கொடுத்துக் கேட்டுக் கொண்டும் யாவருக்கும் பின்னேயும், மற்றவர்கள் முன்னுமாக நடக்கின்றனர். இன்று பனியில்லாததால், நிலவின் ஒளியிலே இவர்கள் பாதை தெரிந்து வேகமாக நடக்க முடிகிறது. இவர்களுடைய குகை இன்னும் அரை மைல் தூரம் கூட இராது. இவ்வளவில் அந்தத் துஷ்ட மிருகங்கள், ஓநாய்கள் திரும்பவும் இவர்களை வளைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன. இவர்களும் தங்கள் சுமையை இறக்கி வைத்து ஆயுதங்களைத் தயார் செய்து பல அம்புகளைக் குறிவைத்து ஏவினார்கள். ஓயாமல் மிகவும் வேகமாக வளைய வந்து கொண்டிருக்கும் ஓநாய்களில் ஒன்றைக் கூட இவர்களுடைய அம்புகள் தொடவில்லை. இரு கட்சிக்கும் பலமான போராட்டம் நடக்கிறது. ஆம் வாழ்க்கைப் போராட்டம் அல்லவா? இந்த நேரத்தில் எப்படியோ நான்கு ஓநாய்கள் ஒரு மொத்தமாகப் பதினாறு வயதுள்ள மங்கை மீது பாய்ந்துவிட்டன. பக்கத்தில் நின்ற தாய் தன்னுடைய ஈட்டியால்- முனையுள்ள கம்பால் ஓர் ஓநாயைக் குத்தி விழுத்தாட்டினாள். ஆனால் பாக்கி மூன்றும் தாங்கள் பாய்ந்திருந்த மங்கையின் தொடையில் பெரிய காயத்தை உண்டாக்கி விட்டன. அவள் பூமியில் சாய்ந்தது தான் தாமதம், அவளுடைய வயிற்றைக் கடித்துக் குடலையும் வெளியே இழுத்து விட்டன. எல்லோருடைய கவனமும் இவளைக் காப்பாற்றுவதில் முனைந்திருக்கும் போது மற்றும் மூன்று ஓநாய்கள் தருணம் பார்த்து, இருபத்துநான்கு வயதுள்ள ஆடவனின் மீதும் பாய்ந்து பூமியின் மீது சாய்ந்து விட்ட அவனுடைய சரீரத்தில் பல காயங்களை உண்டுபண்ணிவிட்டன. அவனுடைய வயிற்றையும் கிழித்து விட்டன. இப்போது எல்லோருடைய கவனமும் இந்தப் பக்கம் திரும்பியது. அந்தப் பக்கமும் முன்னே கீழே தள்ளப்பட்டு குடல் சரிந்து கிடக்கும் பதினாறு வயதுப் பெண்ணின் சரீரத்தை அந்த ஓநாய்கள் இன்னும் கொஞ்ச தூரம் இழுத்துக் கொண்டு சென்று தின்ன ஆரம்பித்து விட்டன. இந்த சமயத்தில், இவர்களில் யாரோ ஓர் ஆள் பெரியவளால் குத்தப்பட்டு விழுந்து கிடக்கும் ஓநாயின் வாயில் தடியை செலுத்த, இன்னொருவன் அதன் முன்னங்கால்களைப் பிடித்திழுக்க, மற்றவர்கள் அதன் சரீரத்தில் இருந்து பெருகியோடும் ரத்தத்தைக் குடிக்க ஆரம்பித்தனர். தாய் அதனுடைய தொண்டையின் நரம்பை வெட்டி இவர்களுக்கு உதவி செய்தாள். இந்தப் போராட்டமும், கொலையும், புசிப்பும் சில நிமிஷங்களில் நடந்திருக்கின்றன. ஓநாயின் ரத்தத்தைக் குடிப்பதில் முனைந்திருக்கும் இந்த மனிதக் கூட்டத்திற்குப் பதினாறு வயது மங்கையின் சரீரத்தைப் பூராவும் தின்ற பின்னே அந்த ஓநாய்கள் தங்களைத் தாக்க ஆரம்பிக்கும் என்று தெரியுமாதலால் ஆவியை விட்டுக்கொண்டிருக்கும் ஆடவனையும் அங்கே போட்டுவிட்டு தங்களுடைய வேட்டைப் பொருள்களான மூன்று கரடிகள், ஓர் ஓநாய் இந்த நான்கையும் தூக்கிக் கொண்டு, ஓட்டமும் நடையுமாக அவர்கள் தங்கள் குகைக்கு வந்து சேர்ந்தனர்.

 

இங்கு குகையில் நெருப்பு ஜோதி மயமாக எரிந்து கொண்டிருக்கிறது. அக்கினியின் வெளிச்சத்திலேயே இரண்டு பெண்களும் எல்லாக் குழந்தைகளும் நித்திரை செய்கிறார்கள். காலடிச் சப்தம் கேட்ட கிழவி, ‘நிஷா…! வந்து விட்டீர்களா?’ என்று கேட்டாள்.

 

‘ஆமா’ என்று சொல்லிக் கொண்டே தாய் தன்னுடைய ஆயுதங்களை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு மார்பைச் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் தோலையும் கழற்றினாள். மற்றவர்களும் தூக்கி வந்த உடல்களைக் கீழே கிடத்திவிட்டு தங்கள் தங்கள் ஆயுதங்களையும் கட்டியிருந்த தோல்களையும் ஒரு பக்கத்தில் வைத்து யாவரும் இப்போது நெருப்பின் உஷ்ணத்தில் தங்களது உடலைச் சூடேற்ற முனைந்தனர்.

 

நித்திரையில் ஆழ்ந்திருந்த குழந்தைகளும் பெண்களும் விழித்து விட்டனர். எவ்வளவு அயர்ந்த தூக்கத்தில் இருந்தாலும் சிறு சப்தத்தையும் கூடக் கேட்டு எழுந்து விடுவது இவர்களின் இளமையில் இருந்து வரும் பழக்கம்.

 

வெகு கவனத்தோடும் பிரயாசையோடும், தாய் இது வரை குடும்ப பாரத்தை ஏற்று நடத்திவந்தாள். மான், முயல், மாடு, ஓநாய், ஆடு, குதிரை முதலிய மிருகங்கள் இங்கு பனி ஆரம்பமாவதற்கு முன்பே, தெற்கே உஷ்ணப் பிரதேசத்தை நாடிச் சென்றுவிடுவது வழக்கம். இவர்களும், அதே போல் போயிருக்க வேண்டியவர்கள் தான். ஆனால் அந்தச் சமயத்தில் பதினாறு வயதுள்ள மங்கை நோய்வாய்ப்பட்டு இருந்தாள். அந்தக் காலத்து மனித தர்மப்படி, ‘ஒருவருக்காக மற்றவர்களையும் ஆபத்துக்கு உட்படுத்தக் கூடாது’ என்பதுவே குடும்பத்தை நடத்தும் பெரியவளின் – தாயின் கடமையாயிருந்தது. ஆனால் அன்று அவளுடைய இதய பலவீனம், இன்று ஒன்றுக்கு இரண்டு மனித உருவங்களைப் பறி கொடுக்கும்படி செய்து விட்டது. இந்த ஆரண்யத்தை நோக்கி திரும்பவும் மிருகங்கள் வந்து சேர்வதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். இந்த இரண்டு மாதங்களுக்குள் இன்னும் எத்தனை ஜீவன்களை இழக்க வேண்டியிருக்குமோ? யார் கண்டார்கள்? மூன்று கரடி, ஒரு ஓநாய் இந்த நான்குமா இந்தப் பரிவாரம் பூராவுக்கும் இரண்டு மாதங்களுக்கு காணும்?

 

குழந்தைகளுக்குப் பரம சந்தோஷம், ஏனென்றால் அவர்களுடைய வயிறு முதுகெலும்போடு ஒட்டிக்கிடந்தது. தாய் முதலில் ஓநாயினுடைய ஈரலை வெட்டிவெட்டிக் குழந்தைகளுக்கு கொடுத்தாள். அவைகள் அவசர அவசரமாக அவற்றை மென்று விழுங்கிக் கொண்டிருக்கின்றன. பிறகு தோலுக்குச் சேதமில்லாமல் அதை உரித்தாள். ஏனெனில், தோல் அவர்களுக்கு ரொம்ப உபயோகமுள்ள வஸ்து. மாமிசத்தை அறுத்து அறுத்து நெருப்பில் வாட்டினாள். பசியோடு காத்திருந்த கூட்டம் சுட்டும் சுடாமலும் எடுத்துக் கவ்வுகின்றன. சிலர் கழுத்துப் பாகத்தின் மெல்லிய மாமிசத்தை அறுத்துக் கொடுக்கும்படி தாயைக் கெஞ்சிக் கேட்கின்றனர். அப்பொழுது தாய் ‘இன்று வயிறு நிறையச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள், நாளையிலிருந்து இவ்வளவு கிடையாது’ என்று சொல்லும் போது எவ்வளவு பொறுப்புடன் சொல்லுகிறாள்.

 

குகைக்குள் உள்ளே சென்ற தாய் ஒரு தோல் பாத்திரத்தைக் கொண்டு வந்து பரிவாரத்தின் முன்னே வைத்து ‘இதில் மது இருக்கிறது, யாவரும் குடியுங்கள், ஆடுங்கள், பாடுங்கள், சந்தோஷம் கொண்டாடுங்கள்’ என்று உத்தரவிட்டாள்.

 

சிறிய குழந்தைகளுக்கு உறிஞ்சிக் உறிஞ்சிக் குடிக்கத்தான் கிடைத்தது. பெரியவர்களுக்குக் கொஞ்சம் அதிகம் கிடைத்தது. சொல்லவா வேண்டும்? கொஞ்ச நேரத்தில் அவர்களுடைய கண்கள் சிவப்பேறி விட்டன. போதை தலைக்கேறி விட்டது. ஆனந்தத்தின் உச்சியில் அளவளாவ ஆரம்பித்து விட்டனர். பாடினர் சிலர், கட்டையோடு கட்டையைத் தட்டித் தாளம் போட்டனர் சிலர். ஆடினர் சிலர். இந்த இரவு அவர்களுக்குச் சந்தோஷமாயிருப்பதில் அதிசயமில்லை.

 

இங்கு நடைபெறுவது ‘தாயின் ராஜ்யம்’ ஆனால் அநியாயமோ உயர்வு தாழ்வோ இல்லாத ராஜ்யம். கிழவியையும் ஆடவர்களில் பெரியவனையும் தவிர்த்து, மற்ற எல்லோரும் அந்தத் தாயின் குழந்தைகள். தாயும் அந்தப் பெரியவனும், கிழவியின் மகனும், மகளும், ஆகையால் அங்கே என்னுடையது என்ற பேதமே கிடையாது. ஏனெனில் அந்தப் பேதம் – உன்னுடையது, என்னுடையது என்ற பேதம் பிறப்பதற்கு இன்னும் காலமிருக்கிறது. ஆனால் ஒரு விஷயம், இங்கே – இந்த இராஜ்யத்தில், எல்லா ஆடவர் மீதும் தாய்க்குத்தான் முதலாவது அதிகாரம். அதுவும் ஒரே மாதிரியான சமமான அதிகாரம், வித்தியாசம் கிடையாது.

மகனும், புருஷனுமாயிருந்த இருபத்து நான்கு வயதுடைய ஆடவன் இறந்துவிட்டதால், அவளுக்கு, தாய்க்குத் துக்கம் இல்லாமல் இல்லை. இருந்தாலும், அந்தக் காலத்து மனித வாழ்க்கை முக்கியமாக நிகழ்காலத்திலேயே கவனம் செலுத்துவதாய் இருந்தது. தாய்க்கு இரண்டு நாயகர்கள் இருந்தனர். மூன்றாவது புருஷன் – பதினான்கு வயதுப் பையன் தயாராகிக் கொண்டிருந்தான். இன்னும் அவளுடைய ராஜ்யத்தில் எத்தனை குழந்தைகள் அவளுடைய கணவன் ஸ்தானத்திற்கு வருவார்களோ யார் கண்டார்கள்? இருபத்து ஆறு வயதுடைய ஆடவனைத் தாய் நேசித்தாள். ஆகையால் பாக்கி மூன்று பெண்களின் கணவன் ஸ்தானத்திற்கு, ஐம்பது வயதுக் கிழவன் தான் மிஞ்சியிருக்கின்றான்.

 

பனிக்காலம் விடைபெற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டது. இக் காலத்தில், கிழவியின் உடலை விட்டு அவள் ஆவியும் விடைபெற்றுக் கொண்டது. குழந்தைகளில் மூவரை ஓநாய் விழுங்கி விட்டது. ஆடவர்களில் பெரியவன் பனி உருகி நதியில் போய்விட்டான். இந்த விதமாக தாயின் பரிவாரம் பதினான்கிலிருந்து ஒன்பதுக்கு சுருங்கி விட்டது.

 

http://inioru.com/?p=31979

Link to comment
Share on other sites

நன்றாக போகின்றது......................

 

இப்படி பொறுமையாக வாசிக்க முடியுது இல்லை.  டொரன்டோ நூலகத்தில் இப் புத்தகம் உள்ளது.........எடுத்து வாசிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நிஷா

அத்தியாயம் 1 பகுதி3

இடம் : வால்கா நதிக்கரைப் பிரதேசம்

இனம்: ஹிந்தோ ஐரோப்பியர்

காலம் : கி.மு. 6000

3

 

usda-russia-300x150.jpg

 

வசந்த காலம், கடந்த ஆறு மாதங்களாக மொட்டையாய் நின்ற மரக் கிளைகளில் சிறிய இலைகள் துளிர் விடுகின்றன. பனி உருகி பசும்புல்லால் போர்த்தியது போன்று காட்சியளித்துக் கொண்டிருக்கிறது பூமி. திசை முழுதும் புத்தியுரும் புதிய களையும் பெற்று விளங்கின. காற்றிலே நல்ல வாசனை எங்கும் பரவிக் கொண்டிருக்கின்றது. அநேக விதப் பட்சிகள் மரக்கிளைகளில் அமர்ந்து இனிய சப்தமிடுகின்றன. எங்கும் வண்டுகளின் ரீங்காரம், பனி உருகி வரும் நீரோட்டக் கரைகளில் அமர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான நீர்ப்பறவைகள் புழுக்களைத் தின்பதில் கவனத்தைச் செலுத்துகின்றன. ஆணும் பெண்ணுமான ஜோடி அன்னங்கள் காதலில் திளைத்திருக்கின்றன. ஆங்காங்கு மான் கூட்டங்கள் குதித்து விளையாடுகின்றன. ஆடுகள், மாடுகள் முதலிய மிருகங்கள் ஒருபுறம் கவலையற்று மேய்ந்து கொண்டிருக்கின்றன. அவைகளை விழுங்குவதற்காகச் சமயத்தை எதிர்பார்த்துப் புலிகளும் ஓநாய்களும் மற்றொரு புறத்திலே பதுங்கியிருக்கின்றன.

 

பனிக்காலத்தில் உறைந்திருந்து, இப்போது உருகிப் பெருக்கெடுத்தோடும் நதிகளைப் போல மனிதர்களின் பரிவாரங்களும், தங்கள் ஆயுதங்கள், குழந்தைகள், தோல் முதலிய தட்டுமுட்டுச் சாமான்கள் இவைகளைத் தூக்கிக் கொண்டும் நெருப்பைக் காப்பாற்றிக் கொண்டும், திறந்த வெளிகளில் வசிக்க ஆரம்பித்தனர். இவர்களுடைய நாய்கள் கடித்துக் கொண்டுவரும் ஆடு, ஓநாய் இவைகளைக் கொண்டோ அல்லது இவர்களே ஆயுதங்களின் உதவியால் பிராணிகளைக் கொன்றோ தங்கள் ஆகாரத்தைத் தேடிக் கொள்கின்றனர். நதிகளிலும் மீன்கள் ஏராளம். வால்கா நதிப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் மீன் பிடிப்பதில் சமர்த்தர்கள்.

இப்பொழுதும் இரவில் குளிர் இருக்கிறது. ஆனால் பகல் உஷ்ணமாயிருக்கும். ஏனைய குடும்பங்களைப் போல் நிஷாவின் பரிவாரமும் வால்கா நதிப் பிரதேசத்;தைத் தங்கள் வாசஸ்தலமாக்கிக் கொண்டார்கள். நிஷாவைப் போலவே மற்ற குடும்பங்களுக்கும் தாய் தான் தலைவி. தகப்பன் அல்ல. மேலும் அங்கு யாருக்கும் யார் தகப்பன் என்று கூறுவது முடியாத காரியம். நிஷாவிற்கு எட்டுப் பெண் மக்களும் ஆறு ஆண் மக்களும் பிறந்தனர். அவர்களில் நான்கு பெண்களும் மூன்று ஆண்களும் இப்பொழுதும் – நிஷாவின் ஐம்பத்தைந்து வயதிலும் உயிருடன் இருக்கிறார்கள். இந்த ஏழு பேரும் நிஷாவின் புத்திர புத்திரிகள் என்பதற்கு, அவர்களைப் பிரசவித்த நிஷாவே சாட்சியாயிருக்கிறாள். ஆனால் இந்த ஏழு பேருக்கும் தகப்பன் யார் என்று சொல்வது முடியாது. ஏனெனில் நிஷாவின் தாய் – நாம் முன்னே சந்தித்த கிழவி – குடும்பத்தின் தாயாய்- தலைவியாய் இருந்து பரிவாரத்தை நடத்தி வரும்பொழுது, மங்கைப் பருவமாயிருந்த நிஷாவுக்கு அவளுடைய சகோதரர்களும் புத்திரர்களும் நாயர்களாயிருந்தனர். பல தடவை, இவளோடு சேர்ந்து ஆடியும், பாடியும் இவளுடைய காதலுக்கு உரியவர்களாவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

 

பின்பு நிஷா குடும்பத்தின் தலைவியாக ஆனதும் அவளுடைய சகோதரர்களோ அல்லது புத்திரர்களோ அடிக்கடி மாறிவரும் அவளுடைய காதல் வேட்கையை தடுப்பதற்கு சக்தியற்றவர்களாகிவிட்டனர். ஆகையால் இப்பொழுது ஜீவந்தர்களாயிருக்கும் நிஷாவினுடைய மக்கள் ஏழு பேரில், யாருக்கு யார் தகப்பன் என்று எப்படிச் சொல்ல முடியும்? நிஷாவின் குடும்பத்தில், இப்பொழுது அவளே தான் குடும்பத்தின் தாய் – தலைவியாயிருக்கிறாள். ஆனால் இந்தத் தலைமை இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தான். ஒன்றிரண்டு வருடங்களில் இவளுடைய பெண் மக்களில் பராக்கிரமசாலியான லேக்கா பரிவாரத்தின் தலைவியாகி விடுவாள். அப்பொழுது சகோதரிகளுக்குள் அவசியம் சண்டை உண்டாகும். இதே போல் லேக்காவின் சகோதரிகளும் ஒன்று அல்லது இரண்டு பரிவாரங்களை ஸ்தாபிப்பதில் வெற்றி பெறவும் முடியும். ஒவ்வொரு வருஷமும் குடும்பத்தின் சில நபர்கள் துஷ்ட மிருகங்களால் தாக்கப்பட்டும், வால்கா நதியின் வெள்ளத்தில் இழுக்கப்பட்டும் குறையும் போது, அந்தக் குடும்பத்தின் எண்ணிக்கை குறையாமல் காக்க வேண்டியது தலைவியின் கடமை.

பல சுக்கிலங்கள் ஒரு சுரோணிதத்தில் கலக்க வசதியிருப்பதைப் போல, பல சுரோணிதங்கள் ஒரு சுக்கிலத்தில் கலக்க முடிந்தால்தான் குடும்ப அபிவிருத்தி தடைப்படும்.

 

குடும்பத் தலைவி நிஷா, பலமுறை வேட்டைகளில் தன் மகள் லேக்காவினுடைய சாதுர்யத்தையும், பலத்தையும் பார்த்திருக்கிறாள். மலைகளின் மீது மான்களைப் போன்று அவளால் ஏற முடியும்! ஒரு சமயம் தேன் குடிக்கும் கரடிகள் கூட ஏற முடியாத அவ்வளவு உசரமான ஒரு மலை உச்சியில் ஒரு பெரிய தேனிறாட்டு (தேன்கூடு) தென்பட்டது. இதைப் பார்த்த லேக்கா மரங்களோடு மரங்களைச் சேர்த்துக் கட்டி ஓர் இரவில் அவற்றின் மீது பல்லியைப் போன்று ஊர்ந்து ஊர்ந்து உச்சியை அடைந்து, நெருப்பினால் அந்தத் தேனீக்களைத் துரத்திவிட்டுத் தேன் கூட்டில் பெரிய துவாரத்தையும் போட்டு விட்டாள். கீழே சொட்டிய தேனை ஒரு தோல் பாத்திரத்தில் பிடிக்க, அது உத்தேசம் இருபது படிக்குக் குறைச்சல் இல்லை. லேக்காவினுடைய தைரியமான இச் செய்கையானது, நிஷா குடும்பம் மட்டுமல்லாமல், அடுத்த பரிவாரங்களும் அவளைப் புகழும்படிச் செய்து விட்டது. ஆனால் நிஷாவுக்கு இது சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. ஏனெனில், நிஷாவின் யௌவனப் புத்திரர்கள் லேக்காவினுடைய ஆணையைச் சிரமேற் கொள்ளத் துடித்துக் கொண்டிருப்பதையும், நிஷாவின் வேண்டுகோள்களைக் கூட உதாசீனம் செய்வதையும், நாளடைவில் நிஷா கவனித்து வந்தாள். தன்னை வெளிப்படையாக எதிர்ப்பதற்கு தன் மகளுக்குத் தைரியம் ஏற்படாதிருப்பதையும் நிஷா தெரிந்திருக்கிறாள். தன்னுடைய வழியில் பெரிய முட்டுக்கட்டையாய் இருக்கும் லேக்காவை ஒழித்து விடுவதற்கு நிஷா பல வழிகளைப்பற்றி யோசித்தாள். ‘நித்திரையில் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொன்றுவிட்டால் என்ன?’ என்று கூட அவளுக்கு ஒரு சமயம் தோன்றிற்று. ஆனால், தன்னைப் பார்க்கிலும் லேக்கா பலசாலியென்பதும் நிஷாவுக்கு நன்றாகத் தெரியும். இதற்கு வேறொருவருடைய உதவியைப் பெறுவதென்றாலோ யாரும் இவளுக்குச் சகாயம் செய்ய மாட்டார்கள் என்பதும் நிஷாவுக்குத் தெரியும். நிஷாவினுடைய புத்திரர் யாவரும் லேக்காவினுடைய காதலுக்கும் தயவுக்கும் காத்திருப்பவர்கள். பெண் மக்களோ லேக்காவுக்குப் பயப்படுபவர்கள். இதில் வெற்றி பெறாவிட்டால் தன்னுடைய பிராணனை லேக்கா வதைத்து விடுவாள் என்பதும் அவளுக்குத் தெரியும்.

 

ஒரு சமயம் நிஷா தனிமையாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று அவள் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. லேக்காவை ஒழித்துவிடுவதற்கு அவள் ஒரு வழி கண்டுபிடித்துவிட்டாள்.

 

சூரியன் உதயமாகிக் கொஞ்ச நேரமானாலும், வெயில் அதனுடைய சக்தியைத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டது. தங்களுடைய தோல் குடிசைக்குப் பின்னே நிஷாவின் குடும்பத்தாரில் சிலர் நிர்வாணமாகப் படுத்திருக்கின்றனர். சிலர் வெயில் காய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நிஷா மாத்;திரம் தனியாகக் குடிசைக்கு முன்னே உட்கார்ந்திருந்தாள். அவளுக்குச் சமீபம் லேக்காவினுடைய மூன்று வயதுப் பையன் விளையாடிக்கொண்டிருந்தான். நிஷாவினுடைய இரண்டு கைகளிலும் சிவந்த பழங்கள் நிறைய இருந்தன.

 

வால்கா நதி பிரவாகமாக அவளுக்குச் சமீபத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. நிசாவினுடைய குடிசை வரை பூராவும் வால்கா நதியின் மணல் பிரதேசம்.

 

விளையாடிக் கொண்டிருக்கும் பையனுக்கு முன்னே, நிசா தன்னுடைய கைகளிலிருக்கும் பழங்களில் ஒன்றை எறிந்தாள். பையன் அதை ஓடி எடுத்துத் தின்றான். அடுத்து மற்றொன்றைக் கொஞ்சம் எட்டி எறிந்தாள்; அதையும் தின்றான். அடுத்து வேகவேகமாய்ப் பழங்களைப் போடத் தொடங்கினாள். பையனும் ஓடிஓடி வேகமாக எடுப்பதும் புசிப்பதுமாயிருந்தவன், ஒரு சமயம் ஓடிய வேகத்தில் கால் தவறி வால்கா நதி வெள்ளத்தில் விழுந்துவிட்டான். அந்தத் திசையை நோக்கிய வண்ணம் நிசா சப்தமிட்டாள். கொஞ்ச தூரத்தில் உட்கார்ந்திருந்த லேக்கா, ,தன்னுடைய குழந்தையைக் காணாததால் வேகமாக ஓடி வந்தாள்; பையன் தண்ணீருக்குள் முழுகுவதும் மேல் வருவதுமாய் வெள்ளத்தில் போய்க் கொண்டிருக்கிறான். உடனே லேக்கா நதியில் குதித்து வேகமாக நீந்திப் போய்த் தன் மகனை எடுத்தாள். தண்ணீரை நிறையக் குடித்துவிட்டதால் குழந்தை அசைவற்றிருந்தது. லேக்கா குழந்தையுடன் திரும்ப நீந்திக் கரையேற வேண்டும். பெருகிவரும் வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரையேறுவது கஸ்டம் தான். மற்றும் ஒரு கையில் குழந்தை! ஒரு கையாலும் காகளாலும் அவள் நீந்திக் கொண்டிருக்கிறாள். பனியுறைந்த அந்தத் தண்ணீர்வேறு. அவளுடைய சரீரத்தில் முள் மாதிரிக் குத்துகிறது. இந்தச் சமயத்தில்பலமான கைகள் த்ன்னுடைய கழுத்தைப்பிடித்து நெருக்குவது தெரிந்து இது யார் என்பதை லேக்கா உடனே தெரிந்து கொண்டாள். ஏனென்றால் சில நாட்களாக நிசாவினுடைய மாறிவரும் மனோநிலையை லேக்கா அறிந்திருந்தாள். தன் வழியில் உள்ள இந்த முள்ளை லேக்காவை ஒழிப்பதற்கு நிசா தீர்மானித்துவிட்டாள். இப்பொழுதுங்கூட லேக்கா தன் பராக்கிரமத்தை நிசாவிடம் காட்டமுடியும். ஆனால் ஒரு கையில் குழந்தை இருக்கிறது. இருந்தாலும் கழுத்துப் பிடிப்பையும் பொருட் படுத்தாமல் நீந்துவதில் வேகத்தைச் செலுத்தும் லேக்காவினுடைய துணிவையும் தைரியத்தையும் நோக்கிய நிசா தன்னுடைய மார்பகத்தை அவளுடைய சிரசின் மீது வைத்து அழுத்த ஆரம்பித்தாள். இதனால் ஒரு முறை லேக்கா தண்ணீருக்குள்ளும் அமிழ்ந்து விட்டாள். இப்படியும் அப்படியுமாக லேக்கா அடித்துக் கொண்டதால் குழந்தை அவளுடைய கையிலிருந்து நழுவி விட்டது. திரும்பவும் குழந்தையைப் பற்றுவதற்கு அவளால் இயலவில்லை. எப்படியோ அவளுடைய கைகள் நிசாவினுடைய கழுத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டன. லேக்கா இப்போது மூர்ச்சையாகிவிட்டாள். அந்தச் சரீரம் நிசாவிக்கு ஒரு சுமையாகி விட்டது. இந்தச் சுமையோடு நீந்திக் கரையேறுவது நிசாவினால் முடியாத காரியம். முயற்சித்தாள்; இருந்தும் பயனென்ன? முயற்சி வெற்றி பெறவில்லை. இருவரும் தங்களைக் கூட்டாக வால்கா நதிக்குச் சமர்ப்பித்துக் கொண்டார்கள்.

பரிவாரத்தின் அடுத்த வீரப்பெண் ரோசனா. நிசா குடும்பத்தின் தலைவியாகி விட்டாள்.

 

——————————————–

 

இது இற்றைக்கு 361 தலைமுறைக்கு முந்திய மனிதகுலத்தின் கதை. அந்தக் காலத்தில் ஹிந்து, ஈரான், ஐரோப்பாவினுடைய சகல சாதிகளும் ஒரே குடும்பமாயிருந்தன. மனித குலத்தின் ஆரம்ப காலம் அது.

 

http://inioru.com/?p=32861

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திவா

 

hunter-gatherers.png

 

 

“திவா! வெயில் ரொம்ப அதிகம். உன்னுடைய உடம்பைப் பாரேன். எவ்வளவு வியர்வை.வா இந்தப் பாறைமீது உட்காருவோம்.”

 

” நல்லது, சூரஸ்வா! இதோ வந்துவிட்டேன்” என்று கூறிய திவா சூரஸ்ரவாவோடு ஒரு பெரிய தேவதாருவின் நிழலிலே அகலமான கல்லின் மீது உட்கார்ந்தாள்.

 

நல்ல வெயில் காலம்; அதுவும் மத்தியான வேளை; தலை வெடிக்கும் இந்த வெயிலில் மிருகங்களின் பின்னே ஓடிவந்த திவாவின் நெற்றியில் கூட வியர்வையைக் காணோமே! சிரமத்தின் அறிகுறியாக அவளுடைய முகத்தில் முத்துப் போன்ற வியர்வைத் துளிகள் தோன்றாமலில்லை. ஆனால் சிரமங்கள் தீர்வதற்கு இங்கு வெகுநேரம் செல்லாது. இது அப்படிப்பட்ட பிரதேசம். அடிவாரத்திலிருந்து உச்சிவரை மலைகள் பசுமையாய் அலங்கரித்து நிற்கின்றன.

 

வானளாவி நிற்கும் தேவதாரு மரங்கள் தனது அடர்ந்த கிளைகளாலும் கூர்மை பொருந்தி நெருக்கமாயுள்ள இலைகளாலும் சூரிய கிரணங்கள் பூமியில் படாதவாறு தடுத்து நிற்கின்றன. பூமியின் நடுநடுவே புதர்களும் பலவித செடிகொடிகளும், முளைத்தும் படர்ந்தும் கிடக்கின்றன. அங்கு உட்கார்ந்த சிறிது நேரத்திலே,அந்த மனித ஜோடி- நங்கையும் நம்பியும் தங்கள் சிரமத்தையே மறந்து விட்டார்கள்.

 

அவர்களைச் சுற்றிச் செடிகள் தோறும் மலர்ந்திருக்கும் வண்ண மலர்களும். அவற்றின் நறுமணமும், அவர்களுடைய மனத்தைக் கவர்ந்து விட்டன. பார்வையைக் கொஞ்சம் தூரத்தே செலுத்திய யுவன். தன்னுடைய வில் அம்பு முதலிய ஆயுதங்களைக் கல்லின் மீது வைத்துவிட்டுச் சலசலவெனச் சப்தமிட்டு ஓடிக்கொண்டிருந்த நதிக் கரையிலே மண்டிக் கிடந்த பல நிறமலர்க்கூட்டங்ளை நோக்கி நடந்தான். விதவிதமாக வாசனை வீசும் அம்மலர்களை ஒவ்வொன்றாகப் பறிக்கத் தொடங்கினான். யுவதியும் தனது ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு த்ன்னுடைய நீண்ட அழகிய கூந்தலைத் தடவினாள். அதன் ஈரம் இன்னும் உலரவில்லை. அப்பொழுது மரக்கிளைகளிலிம், புதர்களிலுமிருந்து எழும் பறவைகளின் இனிய ஓசை. அவளது இதயத்தைக் கவர்ந்ததோடு மட்டுமில்லை, கிளறியும் விட்டது. அதோ. மலர் கொய்து கொண்டு இருக்கும் யுவனின் மீது அவள் பார்வை விழுந்தது.

 

அவனுக்கும் இவளைப் போலவே அழகிய மிருதுவான கூந்தல். ஆனால் திவா தன்னுடைய கூந்தலோடு அதை ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை. ஏன்? அது அவளுக்கு மிக்க அழகாகத் தென்பட்டதுதான் காரணம். அவனுடைய முகத்திற்கு எடுப்பாய் அமைந்துள்ள மீசையின் அழகையும், அதற்கு மேகுள்ள எடுப்பான மூக்கையும். அகன்ற நெற்றியின் காந்தியையும் அவளுடைய கண்கள் அமைதியாகப் பருகிக் கொண்டிருக்கின்றன.

 

அடுத்து அவ்விழிகள் அவனது புஜங்களைத் தொட்டதில் என்ன ஆச்சரியம்! அப்பொழுது அவளுக்கு முந்திய சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. முன்னொரு நாள். நீண்ட கோரத் தந்தங்களையுடைய முரட்டுப் பன்றியின் விலா எலும்பை ஒரு கல்லால் செய்த கத்தியின் உதவியால் ‘நரநர’ வென்று ஒடித்த இந்த உருண்டு திரண்ட புஜங்கள். இன்று பூக்களைக் கொய்யும்போது எவ்வளவு மிருதுவாய்த் தெரிகின்றன! ஆயினும் ஓடி ஓடித் திரளும் சதைகளும் , சதைகள் திரளும்போது நரம்புகள் நிமிர்வதும் அந்தப் புஜங்களின் பராக்கிரமத்தை இப்பொழுதும் வெளிக்குத் தெரிவிப்பன போல் காட்சியளிக்கின்றன.

 

ஓடோடியும் சென்று அந்தப் புஜங்களை முத்தமிடலாமா என்று நினைத்தது அவள் நெஞ்சம். அடுத்து அவனுடைய தொடைகள் திவாவின் கண்களுக்கு இலக்காயின. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அந்தச் சதைகள் திரண்டு ஆடுவதைப் பாருங்கள். அவைகள் திவாவிற்கு ஒரு அபூர்வப் பொருளாய்த் தோன்றுவதில் ஆச்சரியமில்லையல்லவா? சூரஸ்ரவன் பல தடவை அவளுடைய காதலைப் பெறுவதற்கு முனைந்திருக்கிறான்; வாயினாலன்று; சைகையால்.

 

நடனத்தில் தன்னுடைய சாதுர்யத்தையெல்லாம் காட்டி , அவளைச் சந்தோசப்படுத்தி விடலாமென நினைத்தான்.ஆனால் ,அப்பொழுதெல்லாம் அவள். அவளுடைய சம்பூரண மேனி, பரிவாரத்தின் இதர வாலிபர்களுக்கே உரிமைப் பொருளாயிருந்தது. திவாவின் சிவந்த உதடுகளை ஒட்டி முத்தமிடுவது அந்த யுவர்களின் உதடுகள்தான். நடனமாடும்போது அவளுடைய நீண்ட அழகிய கைகளோடு பின்னிக்கிடப்பது அவர்களுடைய கைகள்தான்.அவளுடைய நீல விழிகளோடு படிந்து கிடப்பது அவர்களுடைய கண்களே தான்.

 

அவளுடைய மார்பையும் தோளையும் தழுவி ஆலிங்கனம் செய்வது அந்த வாலிபர்களின் மார்பும் தோள்களும்தான். அப்பொழுதெல்லாம்,பாவம், சூரஸ்ரவனுக்கு, திவாவின் ஒரு முத்தம், ஓர் ஆலிங்கனம், ஏன், அவளுடைய காதல் பார்வையுங்கூடக்கிடைக்கவில்லை. ஆனால் இன்று திவாவின் இதயத்தில்?

 

http://inioru.com/?p=33280

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வால்காவிலிருந்து கங்கை வரை(6) : ராகுல்ஜி

 

 

தன்னுடைய உள்ளங்கைகளில் புஸ்பங்களை நிரப்பிக் கொண்டசூரன், திவாவை நோக்கி வந்தான். திவாவின் மிதக்கும் விழிகள், அவனுடைய திறந்து கிடக்கும் அவயவங்களையும், அவற்றின் பூரணப் பொலிவையும் அப்படியே பருகிக் கொண்டிருக்கின்றன. அவளூடைய அகன்ற மார்பும் அதற்கு உள்ளடங்கிய வயிறும் அவளை ஆகர்சிப்பதில் ஆச்சரியமில்லையே! ஆனால் இவற்றைப் பார்த்த அவளுடைய இதயத்தில் கொஞ்சம் துக்கமும் உண்டாயிற்று. இதுவரை இந்தக் கட்டழகன் மீது கவனம் செலுத்தாதிருந்து விட்டோமே என்று நினைத்தது அவளுடைய நெஞ்சம். உண்மையில் குற்றம் அவளுடையதல்ல. சூரனுடைய வாய்க்குப் பூட்டப்பட்டிருந்த அவனுடைய கூச்சமும் நாணமுமே குற்றவாளிகள். தட்டினால்தானே கதவு திறக்கும்.

 

அருகில் வந்த சூரனைப் பார்த்த திவா, புன்சிரிப்புடன் ” எவ்வளவு அழகும் மணமும் பொருந்தியிருக்கின்றன இந்தப் புஸ்பங்கள்” என்றாள்.

 

“மின்னுகின்ற உன்னுடைய கூந்தலில் இவைகளைச் சூட்டினால் இன்னும் அதிக அழகாயிருக்கும்”

 

“அப்படியானால் எனக்காகவா இந்தப் புஸ்பங்களையெல்லாம் கொண்டுவந்திருக்கிறாய்”?

 

“ஆமாம் திவா! உனக்காகவேதான். உன்னையும் இந்தப் புஸ்பங்களையும் சேர்த்துப் பார்க்கும்போது அப்சர மங்கையின் ஞாபகம் வந்தது.”

 

“அப்சர மங்கைகளா, அவர்கள் யார்?”

 

“அவர்கள் நீரில் வசிப்பவர்கள். சந்தோசம் ஏற்படும் போது, இதயத்தில்பொங்கிவரும் ஆசையைத் தெரிந்து அவையாவற்றையும் பூர்த்தி செய்விப்பார்கள். கோபம் வந்துவிட்டாலோ, உயிரையும் விட்டு வைக்கமாட்டார்கள்.

 

“அப்படியானால் நீ என்னையும் அந்த அப்சரஸ் என்று நினைக்கிறாயா?”

 

“ஆமாம்: ஆனால் கோபமடைபவளல்ல.”

 

“ஆனால், இதுவரை உன் மீது நான் ஆசை காட்டவே இல்லையே?”

 

இப்போது திவாவின்முகம் சடக்கென்று வேறுபட்டது. அவளுடைய இதயத்திலே பொங்கும் தாபக்கனல் பெருமூச்சாக வெளிப்பட்டது.

 

“இல்லை! திவா! நீ ஒரு பொழுதும் என் மீது கோபம் கொண்டது கிடையாது. நமது குழந்தைப்பருவத்தை நினைத்துப் பார்.”

 

“அப்பொழுது கூட என்ன! நீ நாணிக் கோணிக் கொண்டு தானே இருந்தாய்?”

 

“அன்றும் நீ என்னைக் கோபிக்கவில்லையே?”

 

” அந்தக் காலத்தில் நானே உன்னை வலிய முத்தமிட்டேன்.”

 

“ஆம்! அந்த முத்தங்கள் எவ்வளவு இனிமையாயிருந்தன!”

 

ஆனால், எனது உருண்ட ஸ்தனங்கள் பூரித்துத் திரண்டெழுந்து, பரிவாரத்தின் வாலிபர்களையெல்லாம் எனது நெஞ்சையும் முகத்தையும் நோக்கி ஏங்கச் செய்கின்ற இக்காலத்தில் நான் உன்னை மறந்தே போய்விட்டேன்.” அதற்கு மேல் அவளுடைய உதடுகள் அசைய மறுத்து விட்டன. கொஞ்சம் மெளனமாய் நின்றாள்.

 

“தி! அது உன்னுடைய குற்றமில்லையே.”


 

“வேறு யாருடைய குற்றம்?”

 

“என்னுடைய குற்றம்; முழுக்க முழுக்க அது என்னுடைய குற்றம். அந்த வாலிபவர்கள் உன்னிடம் வேண்டி ந்ன்றார்கள். நீ அள்ளீ அள்ளிக் கொடுத்தாய். அவர்கள் முத்தம் கேட்டார்கள். நீ முத்தம் கொடுத்தாய். ஆலிங்கனத்துக்கு யாசித்தார்கள்; நீ ஆலிங்கனம் செய்தாய். நம்முடைய கூட்டத்தில். வேட்கையில் விதுரனும் நாட்டியத்தில் சதுரனும் திடசரீரனும், அழகனுமான எந்த வாலிபனுடைய விருப்பத்தையும் நீ இதுவரை அசட்டை செய்ததில்லையே”

 

“ஆனால் நீ எந்த வகையிலும் அவர்களுக்குக் குறைந்தவனல்லவே. உனது ஆசையை நான் எப்பொழுதாவது நிறைவேற்றியிருக்கிறேனோ?”
ஆனால் திவா! எனது ஆசையை நான் வெளிப்படுத்தியதில்லையே.”

 

“வார்த்தையினாலல்ல. இப்பொழுதென்ன? இளமையில் நாம் ஒன்று கூடி விளையாடுவோமே, அப்பொழுதுங் கூட நீ வாய் திறக்க மாட்டாயே ஆனால் உன்னைமறந்து விட்டதாக- வஞ்சித்துவிட்டதாக இன்று தான் உணர்ந்தேன். சூர்! கொஞ்சம் என்னைப் பார், இந்த திவா(பகல்) அந்த சூரை (சூரியனை) எப்பொழுதாவது மறக்கிறதுண்டோ? இல்லை சூர்! இனி உன்னை நான் மறக்கவே மாட்டேன்.”
“அப்படியானால் நீ பலும் நான் பலோனுமாக ஆகிவிடுவோமா!”

 

“ஆம் சூர்! இதோ உன்னுடைய இந்த அழகிய அதரங்களுக்கு விருந்தளிக்கிறேன்.”

 

சின்னஞ் சிறு குழந்தைகளைப் போல் நிர்வாணமாய் அந்த அழகிய யெளவன உருவங்களின் செவ்விதழ்கள் அப்படியே ஒன்றிக்கிடக்கின்றன. சிவந்த கன்னங்களோடு கன்னங்கள். நீல விழிகளோடு விழிகள்.

 

நீ என்னுடைய தாயின் மகன். அப்படியிருந்தும் இது வரை உன்னைமறந்தே விட்டேன். “திவாவினுடைய நீல விழிகள் நீரைத் துளிர்த்தன. சூரனுடைய சிவந்த கன்னங்கள் அதைத் துடைத்தன.

 

“திவா! இல்லை; என்னை மறக்கவே இல்லை நீ, பெரியவளாக ஆக உன்னுடைய குரல். கண்கள், உன்னுடைய ஒவ்வொரு அங்கமும் எனக்கொருபுதிராய்த் தோன்றின , ஆகவே நான் உன்னிடமிருந்து விலகியே நின்றேன்.”

 

” என் மனத்திலிருந்தில்லை.”

 

“ஆனால் திவா!…”

 

“இல்லை இப்பொழுது சொல்: இனிமேல் என்னிடம் வெட்கப்படமாட்டாயே?”

 

இல்லை, இனி நாணவே மாட்டேன்; இந்தப் புஸ்பங்களை உன் கூந்தலில் சூடட்டுமா?”

 

 

http://inioru.com/?p=33409

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வால்காவிலிருந்து கங்கை வரை(7) : ராகுல்ஜி


 

சிறிய குச்சியால் அவளுடைய கூந்தலை வகிர்ந்து அதில் சிவப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள், இந்நிறப் புஷ்பங்களை வரிசையாகச் சூட்டினாள். எந்தப் புஷ்பத்துக்குப் பக்கத்தில் எதை வைத்தால் அழகு மிளிரும் என்பதைக் கூட அவன் தெரிந்திருந்தான். சூட்டிய பின் அந்தக் கூந்தலை அவளுடைய முதுகுப் பக்கம் விரித்து விட்டான். வெயில் காலத்தில் இந்த வால்கா நதிப் பிரதேச யுவர்களும் யுவதிகளும் அடிக்கடி தண்ணீரில் குதித்து நீந்தி விளையாடுவது வழக்கம். திவாவின் கூந்தல் இன்னும் ஈரமாகவே இருந்தது. அதில் சில ரோமங்களைக் கொண்டு உச்சியில் வட்டமாகக் கட்டி அதன் மத்தியில் புஷ்பக் குஞ்சத்தைச் செருகினான். அவளை அப்படியேயிருக்கச் செய்து கொஞ்சம் தள்ளிப் போய் நின்று அவள் முகத்தை நோக்கினான். அவனுக்கு அது பொலிவுற்று விளங்கியது. இன்னும் சிறிது எட்டிப்போய் நின்று பார்த்தான். முகப் பொலிவு மிகுந்தே தோன்றிற்று. ஆனால் புஷ்பங்களின் நறுமணம் அங்கு எட்டவில்லை. ஓடோடியும் வந்து அவள் பக்கத்தில் அமர்ந்தான். அவளுடைய கன்னங்களோடு தன் கன்னங்களை ஒற்றினான். திவா தன்னுடைய நீல விழிகளை அவனுடைய விழிகளில் புதைத்தாள். அவளுடைய வலக்கரம் அவனுடைய தோளைப் பிணைத்தது. அவன் தன்னுடைய இடக்கரத்தால் அவளைத் தழுவிக் கொண்டான்.

 

‘திவா! இந்தப் புஷ்பங்கள் இப்பொழுதுதான் அழகைப் பெற்றிருக்கின்றன’

 

‘மலரா அல்லது நானா?’


அவனால் பதில் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் தயங்கி, ‘நான் சிறிது விலகிப் போய்ப் பார்த்தேன் திவா! நீ எவ்வளவு அழகுடன் விளங்கினாய்! இன்;னும் கொஞ்ச தூரம் சென்று நோக்கினேன். அப்பொழுதும் உன்னுடைய சோபை, உன்னுடைய காந்தி மிக மிகப் பிரகாசமாகவே தோன்றியது’

 

‘அதோ அந்த வால்கா நதிக்கரையிலிருந்து நோக்குவாயானால்?’


‘முடியாது: அவ்வளவு தூரத்திலிருந்து முடியாது’ சூரனுடைய முகம் சடக்கென்று மாறிவிட்டது. அவன் விழிகளில் நீர் ததும்பியது.


‘திவா! நான் தூரப் போகப் போக இந்தப் புஷ்பங்களைத்தான் காண முடிகிறது. அதன் அழகை அனுபவிக்க முடியவில்லை’

 

‘அப்படியானால் தூரத்தில் இருந்து என்னைப் பார்க்க விரும்புகிறாயா? அல்லது பக்கத்திலேயே இருக்க விரும்புகிறாயா?’


‘பக்கத்தில் இருக்கத்தான் திவா! பகலோடு சேர்ந்தால் தானே சூரியன் பிரகாசிக்கிறான்’

 

‘நீ இன்று என்னோடு நாட்டியம் ஆடுவாயா?’

 

‘நிச்சயமாக ஆடுவேன்’


‘இன்று நீ என்னோடு தங்குவாயா?’


‘கட்டாயம் தங்குவேன்’

 

‘இரவு பூராவும்?’


‘நிச்சயமாக’

 

‘அப்படியானால் நான் இன்று வேறு எந்த வாலிபர்களையும் அண்ட விடமாட்டேன்’ என்று சொல்லியவாறே அவனைத் தழுவிக் கொண்டாள்.


வேட்டையாடிக் களைத்த அநேக யுவ-யுவதிகள் அங்கு வந்தனர். அவர்கள் வரும் காலடிச் சத்தம் கேட்டும் கூட, இவர்களிருவரும் அப்படியே, ஆலிங்கனம் செய்த வண்ணமே நின்றனர்.

 

‘திவா, இன்று சூரனைத் தோழனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாயா?’ என்று கேட்டாள் அவர்களில் ஒரு யுவதி.

 

திவா:- ‘ஆம். இதோ இந்தப் புஷ்பங்களைப் பார். சூரன் தான் இவற்றை எனக்குச் சூட்டினான்’

 

யுவ:- ‘சூர! நீ புஷ்பங்களைக் கொண்டு நன்றாக அலங்கரிக்கிறாயே, என்னுடைய கூந்தலிலும் அலங்கரிக்க மாட்டாயா?’

 

திவா:- ‘இன்றைக்கு முடியாது: இன்றைக்கு அவன் எனக்குச் சொந்தம்.’

 

யுவ:- ‘அப்படியானால் சூரன் நாளை என்னுடையவன்’


திவா:- ‘நாளைக்கா? இல்லை. நாளைக்கும் என்னுடையவனே’


யுவ:- ‘தினந்தோறும் அவன் உனக்கே சொந்தமா? அது சரியில்லை திவா.’


திவா தன்னுடைய தப்பிதத்தை உணர்ந்து கொண்டாள். ‘தினந்தோறுமில்லை. இன்றைக்கும் நாளைக்கும் மட்டுந்தான்’ என்றாள்.


கொஞ்சங் கொஞ்சமாகப் பல யுவர்களும் யுவதிகளும் அங்கு வந்து கூடினர். ஒரு பெரிய கருப்பு நாய் சூரனுடைய கால்களை வந்து நக்கிற்று. அப்பொழுதுதான் அவனுடைய ஆடுகள் அவன் ஞாபகத்துக்கு வந்தன. உடனே திவாவிடம் ஏதோ சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

 

 


 

2


 

ஒரு பெரிய விசாலமான குடிசை. அதன் சுவர்கள் மரங்களாலானவை. புல்லால் வேயப்பட்ட கூரை. கல்லால் செய்யப்பட்ட கத்திகள். எவ்வளவுதான் கூர்மையாயிருந்தாலும், இவ்வளவு மரங்களையும் அவற்றைக் கொண்டு வெட்டுவது முடியாத காரியம். ஆனால் மரங்களை வெட்டுவதற்கு அவர்களுக்கு நெருப்பும் உதவி செய்கிறது. அந்தக் கல் கத்திகள் – அநேக காரியங்களுக்கு – ஆயுதமாக உபயோகமாகிறதென்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் இவ்வளவு பெரிய குடிசையைக் கட்டியிருக்கிறார்களே? ஆச்சரியம் தான்.


 

primitive-man.jpg

 

அந்தக் குடிசையில் தான் நிஷா ஜனங்கள் (நிஷா என்ற பெயருடைய பழைய காலத்துப் பெண்ணின் பரம்பரை) பூராவும் வசிக்கின்றனர். யாவரும் ஒரே குடும்பமாக. இந்தக் குடும்பத்திற்கு – சமூகத்திற்கு ஒரு பெண் தலைவி. இந்தச் சமூகத்தை ஒரு பஞ்சாயத்து நிர்வகிக்கிறது. அந்தப் பரிவாரத்தினுடைய வாழ்க்கையின் எந்த அம்சமும் இந்தச் சபையின் நிர்வாகத்திற்கு அடங்காததல்ல. வேட்டையாடுதல், நடனம் ஆடுதல், காதல் செய்தல், குடிசை கட்டுதல், தோலினால் பாத்திரங்கள் கருவிகள் செய்தல். எல்லாக் காரியங்களையும் இந்தச் சபைதான் நடத்துகிறது. இந்தச் சபையில் தாய்க்குத்தான் முதல் ஸ்தானம். நிஷா – ஜனங்களின் இந்தக் குடிசையில், ஆண்களும் பெண்களுமாக 150 பேர் வசிக்கன்றனர்.

 

அப்படியானால் இத்தனை பேரும் ஒரே குடும்பமா? இல்லை. இதில் பல குடும்பங்கள் இருக்கின்றனவென்றே சொல்ல வேண்டும். ஏனெனில், தாய் உயிருடனிருக்கும் போதே அவளுடைய மக்களில் பலர் ஒரு சிறிய குடும்பம் போலாகி விடுகின்றனர். ஒவ்வொரு குழந்தையும் அவர்கள் தாயின் பெயராலேயே அழைக்கப்படுவதால், பல குடும்பங்களாகவே தோன்றுகின்றது. உதாரணமாகத் திவாவையே எடுத்துக் கொள்வோம். அவளுக்குத் தாயில்லை. அவள் அநேக குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டாள். அவளுடைய குழந்தைகள் யாவும் திவா புத்திரர்கள்- புத்திரிகள் என்றே அழைக்கப்படுகின்றனர்.


இப்படியிருந்த போதிலும் இவர்களுக்குச் சொந்தமான உடைமை (மாமிசம் – பழங்கள் முதலியன) எதுவும் கிடையாது. சமூகத்தின் ஒவ்வொருவரும் அவர்கள் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி சேர்ந்தே தான் தேட வேண்டும். சேர்ந்தே தான் அனுபவிக்க வேண்டும். ஒன்றும் கிடைக்கவில்லையானால் சேர்ந்தேதான் பட்டினி கிடக்க வேண்டும். சமூகத்திற்கல்லாமல் தனிப்பட்ட யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. சமூகத்தின் ஆணையை, சமூகத்தின் பழக்க வழக்கங்களைக் காப்பாற்றுவது அவர்கள் ஒவ்வொருவருடைய மனதுக்கும் பிடித்ததாகவும் சுலபமானதாகவுமேயிருந்தது.

 

இங்கு இவர்கள் கட்டியிருக்கிறார்களல்லவா குடிசை, இதுவும் நிரந்தரமானதல்ல. இந்தப் பிரதேசத்தில் மிருகங்கள், காய் கனிகள் கிடைக்கும் வரைதான் இங்கே தங்குவார்கள். அப்பால் வேறொரு பிரதேசத்திற்குப் போய்விடுவார்கள். அடுத்து எந்தப் பிரதேசத்திற்கு இந்த மிருகங்கள் போயிருக்கும் என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் இது இவர்களுக்குத் தொன்றுதொட்டு வரும் பழக்கம். இங்கிருந்து இவர்கள் போய்விட்டபின் இந்த வீட்டின் கூரை விழுந்து விட்டாலும் மரங்களாலும் கற்களாலும் கட்டப்பட்டிருக்கும் சுவர்கள் பல வருடங்களுக்கு அப்படியே இருக்கும்.

 

இவர்கள் அடுத்த பிரதேசத்திற்குப் போனவுடன், குடிசை கட்டுவதற்கு இவர்களுக்குத் தேவையானது புற்கள் தான். பழைய சுவர்களில் புற்களைப் போட்டு வேய்ந்து குடிசைகளைக் கட்டிக் கொள்கிறார்கள். இந்தக் குடிசையில் ஒரு பக்கம் சாமான்களை வைத்துக் கொள்வதற்கும், மற்றப் பக்கம் சமைத்துக் கொள்வதற்குமாக ஒதுக்கிக் கொள்கிறார்கள். மண்டை ஓடுகளையும் பாத்திரங்களாக உபயோகப்படுத்துவார்கள். பச்சை மாமிசத்தைச் சமைத்துச் சாப்பிட அவர்கள் விரும்புவதில்லை. வால்கா நதியின் இந்தப் பிரதேசத்தில் தேன் அதிகமாகக் கிடைக்கிறது. ஆகையால் தேன் குடிக்கும் கரடியும் இங்கு அதிகம். நிஷா – ஜனங்களுக்குத் தேனின் மீது மிகுந்த பிரியம். தேனை ருசிக்காக மட்டுமல்ல. போதைப்பொருளாகவும் கருதி அருந்துவார்கள்.


இவர்களுக்குப் பாடவும் தெரியும். ஆண்களும் பெண்களும் இனிமையாகப் பாடுவார்கள். எல்லா வேலைகளையும் இவர்கள் சேர்ந்து செய்வதோடு திருத்தமாகவும் அழகாகவும் செய்கிறார்கள். சேர்ந்து கூட்டமாக வேலை செய்யும் பொழுதெல்லாம் சங்கீதம் முக்கிய ஸ்தானம் பெறும். சங்கீதம் வேலையின் சிரமத்தை மறைத்துவிடுகிறது அல்லவா? ஆனால் இவர்கள் இன்று பாடுவது, வேலை செய்யும் போது எல்லோரும் சேர்ந்து பாடுவார்களே அந்தமாதிரிப் பாட்டுகளாகத் தெரியவில்லை. இங்கே முறைவைத்த மாதிரி ஒரு தடவை பெண்கள் மிருதுவான குரலில் சேர்ந்து பாடுகிறார்கள். அதைத் தொடர்ந்து ஆண்கள் தங்கள் கம்பீரமான குரலில் சேர்ந்து பாடுகிறார்கள். நாமும் சென்று பார்ப்போமே.


குடிசையினுள் ஒரு புறத்தில் சமூகத்தின் ஆண், பெண், குழந்தைகள், விருத்தர்கள் யாவரும் ஒரேயிடத்தில் கூடியிருக்கின்றனர். நடுவே பூமி தோண்டப்பட்டிருக்கிறது. அதில் தேவதாருக்களின் விறகுகளைப் போட்டு நெருப்பு ஜோதி மயமாய் எரிந்து கொண்டிருக்கிறது. பெண்களும் ஆண்களும் மாறி மாறிப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன பாடுகிறார்கள்? எதைப் பற்றிப் பாடுகின்றார்கள்? இதோ கேளுங்கள்:

 

‘தீ…யே…வ….ரு…வா…யே!’

 

அக்கினியையா இவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்? ஆம், அதோ பாருங்கள். சமூகத் தலைவியும், சபை அங்கத்தினர்களும் நெருப்பில் மாமிசம், காய்கனிகள், தேன் முதலியவற்றைச் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பௌர்ணமி தினத்தில் இவர்கள் அக்கினி தேவனை நோக்கி ‘ எங்கள் சமூகத்திற்கு வேட்டையில் மிருகங்களும், காய்கனிகளும், தேனும் நிறையக் கிடைப்பதற்கு அருள் செய்ய வேண்டும். மிருகங்கள் முதலிய எதிரிகளால் எங்கள் சமூகத்திற்கு யாதொரு தீங்கும் நேரிடக்கூடாது’ என்று பிரார்த்தனை செய்கிறார்கள். அவனுக்கு நன்றி செலுத்துவதற்காக, இந்தப் பொருட்களை சமர்ப்பிக்கிறார்கள். அதோ பாருங்கள். சமூகத்தலைவி தேனை நெருப்பிலே வார்க்கிறாள். யாவரும்; எழுந்து நிற்கின்றனர். பிறந்த கோலத்தோடு யாவரும் திறந்த மேனியர்களாய், நிர்வாணமாய் நிற்கின்றனர். பனிக்காலமோ கடந்து விட்டது. இந்த வெயில் காலத்தில் மிருகங்களின் தோலைத் தங்கள் உடம்பின் தோலோடு இறுகக் கட்டிக் கொள்வதை வீண் தொந்தரவான காரியமாகக் கருதுகிறார்கள். ஆனால் திறந்து கிடக்கும் இவர்களது உடலின் ஒவ்வோர் அங்கமும் எவ்வளவு அழகாயிருக்கின்றன. இவர்களில் யாருக்காவது தொந்தி தள்ளிக்கொண்டிருக்கின்றதா?


எங்கேயாவது சதைகள் துருத்திக் கொண்டிருக்கின்றனவா? இல்லவே இல்லை. அழகு என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும். இதற்குத்தான் ஆரோக்கியம் என்று பெயர். எல்லோருடைய முகங்களும் ஒரே மாதிரி இருக்கிறதல்லவா? ஆம்;: இவர்கள் எல்லோரும் நிஷாவின் சந்தானங்கள். தந்தை, சகோதரர், புத்திரர் இவர்களுக்கு ஜனித்த குழந்தைகள். யாவரும் ஆரோக்கியமாகவும் பராக்கிரமசாலிகளாயுமிருக்கின்றனர். இவர்களுடைய இந்த உலகத்தில் ஆரோக்கியமற்றவர்களுக்கும் பலவீனர்களுக்கும் இடம் கிடையாது. இயற்கையோடும் மிருகங்களோடும் போராடி, பலவீனர்கள் வாழ முடியாது.

 

சமூகத் தலைவி எழுந்து சாமான்கள் வைத்திருக்கும் பக்கம் செல்கிறாள். மற்றவர்கள் ஒவ்வொருவரும் மண்ணால் செய்த பாத்திரங்கள், மண்டை ஓடுகள், மாட்டுக் கொம்புகள் இவற்றை வைத்துக் கொண்டு மண்ணால் மெழுகப்பட்ட பூமியின்மீது உட்கார்ந்திருக்கின்றனர். கள்ளும் தேனும் நிறைந்த பாத்திரங்களைத் தலைவி கொண்டு வருகிறாள். ஆண்கள், பெண்கள், யுவதிகள், யுவர்கள், விருத்தாப்பியர், சிறார்கள் என்ற வித்தியாசமின்றி யாவரும் ஒரே இடத்தில் கூட்டமாக உட்கார்ந்து, மதுவருந்தி ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது இவர்களுக்கு ஒரு நியமம் என்பதில்லை. யௌவனப் பருவத்தில் இவற்றைப் பூரணமாக அனுபவித்து விட்டதாகக் கருதும் எத்தனையோ விருத்தாப்பியர்கள், இந்த விழாவிலிருந்து ஒதுங்கியிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் தங்களது வாழ்க்கையின் அந்திப் பருவத்திலிருக்கும் அந்த விருத்தர்கள் அந்த அமிருதத்தின் ருசியைச் சிறிதேனும் அனுபவிக்கட்டுமே என்று கருதி, யுவதிகள் சிலர் அவர்களுக்கு ஊட்டிக் கொண்டிருக்கின்றனர்.


திவாவைப் பார்த்தீர்களா? அவளுடைய கரங்கள் இன்று துருவனுடைய தோள்களைப் பின்னிக் கிடக்கின்றன. சூரன் மற்றொரு யுவதியின் அருகே அமர்ந்திருக்கிறான்.


போஜனம், குடி, பாட்டு, நடனம், ஒரே களியாட்டம். இது முடிந்ததும் அந்த விசாலமான பாகத்தில் காதலர்கள் நித்திரை செய்வர். அதிகாலையில் எழுந்து விடுவர். வேலையில் ஆண், பெண் என்ற வித்தியாசமே இல்லை. சிலர் வீட்டுக் காரியங்களைப் பார்ப்பார்கள். சிலர் வேட்டையாடச் செல்வார்கள். சிலர் காய்கனிகள் பறிப்பார்கள். இவர்களுடைய குழந்தைகள் தாய்மார்களின் மடியிலே சில, விருட்சகங்களின் நிழலிலே சில, நதிக்கரையின் மணல் மேட்டிலே சில. இவ்விதமாகக் குதித்து விளையாடி ஆனந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

நிஷாவினுடைய ஆட்சிக் காலத்தைப் பார்க்கிலும் இப்பொழுது இங்கே விருத்தர் முதல் யாவரும் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழ்கிறார்கள். இந்தச் சமூகம் இதிலிருக்கும் ஒரு தாயினுடைய தலைமையின் கீழிருந்தாலும் அந்தத் தாயின் ராஜ்யம் இங்கில்லை. இங்கே பல தாய்மார்களின் குடும்பங்கள் சேர்ந்த ஒரு கூட்டுச் சமூகமிருக்கிறது. இங்கே ஒரு தாயின் சர்வாதிகாரமில்லை. ஒரு சபையின் ஆட்சியிருக்கிறது. ஆகவே எந்த நிஷாவுக்கும் தன் மகள் லேக்காவை வால்கா நதியில் மூழ்கடித்துக் கொல்ல வேண்டிய அவசியம் இங்கில்லை.

 

http://inioru.com/?p=33743

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், கிருபன்!

 

கொஞ்சம் கதை, சூடு பிடிக்கிற மாதிரித் தெரியுது!

 

வாசித்து முடியக் கருத்தைப் பகிர்கின்றேன்! :D

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வால்காவிலிருந்து கங்கை வரை(8) : ராகுல்ஜி


 
 
primitive.jpg
 
இப்போது திவா, நான்கு புத்திரர்களுக்கும் ஐந்து புத்திரிகளுக்கும் தாயாகிவிட்டாள். நாற்பத்தைந்து வயதுப் பிராயத்தில் அவள் நிஷா பரிவாரத்தின் தலைவியாக்கப்பட்டாள்.
 
கடந்த இருபத்தைந்து வருஷங்களில் நிஷா சமூகத்தின் எண்ணிக்கை மூன்று மடங்கு பெருகிவிட்டது. அதற்காக இவள் அடிக்கடி பகவானுக்கு நன்றி செலுத்துவது வழக்கம். சூரன் தன்னுடைய சந்தோஷத்தை தெரிவிப்பதற்கு அறிகுறியாய், இவளுடைய கன்னங்களில் முத்தமிடும் போது, இது அக்னி தேவனின் அன்பு, பகவானின் கருணை என்று இவள் கூறுவாள். அக்னி பகவானின் பக்தர்களுக்கு யாதொரு குறைவுமில்லை. அவர்கள் வாசஸ்தலத்தின் அருகே வால்கா நதி பெருக்கெடுத்தோடுவதைப் போல், தேனும் மதுவும் பெருக்கெடுத்தோடும். அவர்கள் வாழும் வனத்தே நானாவித மிருகங்கள் தானாகவே வந்து மேயும் என்பது இவர்களின் நம்பிக்கை.
 
நிஷா சமூகத்துக்கு இப்போது ரொம்பக் கஷ்டம், பருவ காலத்திற்கு தக்கபடி இவர்கள் பிரதேச் விட்டுப் பிரதேசம் செல்லும் போது அந்தக் காடுகள் இவர்கள் வேட்டையாடுவதற்குப் போதவில்லை. அதுமட்டுமல்ல இப்போது இவர்கள் குடிசைகள் கூட அதிக எண்ணிக்கையில் கட்ட வேண்டியதிருக்கிறது.
 
ஜன வளர்ச்சிக்குத் தக்கபடி விசாலமான காடுகளும் வேண்டுமல்லவா? இப்பொழுது அவர்கள் புதிதாகக் குடிசை போட்டுள்ள காட்டிற்கு வடக்குப் பக்கத்தில் உஷா ஜனங்களின் காடு இருக்கிறது. இந்த இரண்டு வனங்களிற்குமிடையில் யாருக்கும் சொந்தமில்லாத பொது இடமிருக்கிறது. நிஷா சமூகத்தார் இந்தப் பொதுக்காட்டையும் கடந்து உஷா சமூகத்தாருடைய வனத்திலும் வேட்டையாடுவதற்குப் பலமுறை சென்றிருக்கிறார்கள். இவ்விதம் அத்துமீறிப் போவது நல்லதன்று, சண்டைக்கு அடிகோலுவதாகும் என்பதும் நிஷா சமூகத்தாருக்குத் தெரியாமலில்லை. ஆயினும் இவர்களுக்கு வேறுவழியில்லை. ஒருநாள் திவா, சமூகக் குழுவில் ‘பகவானுடைய கிருபையால் நம்முடைய சமூகம் ஜன எண்ணிக்கையில் பெருகிவிட்டது. இவர்களுடைய போஷிப்பிற்கு இந்த வனாந்தரங்களைத் தவிர்த்து வேறு மார்க்கமில்லை. நிஷா சமூகத்தாராகிய நமக்கு வால்கா நதியிலுள்ள மீன்கள் எப்படியோ அப்படியே தான், அந்த வனங்களிலுள்ள விலங்குகளும். ஆகையால், நாம் இந்த வனங்களிலுள்ள கரடிகள், மான்கள், பசுக்கள், குதிரைகள் முதலிய விலங்குகளை வேட்டையாடாமல் முடியாது’ என்று எடுத்துச் சொன்னாள்.
 
நிஷா சமூகத்தார் செய்யும் இந்தக் காரியம் அநியாயம் என்று உஷா சமூகத்தாருக்குப்பட்டது. இவர்கள் குழு நிஷா சமூகக் குழுவிடம் பலமுறை இது விஷயமாகப் பேசியது. ‘நாம் எத்தனையோ மழைக் காலத்தை இந்தக் காடுகளில் கழித்திருக்கிறோம். எந்தக் காலத்திலும் நம் இரு சமூகங்களிற்கிடையிலும் யுத்தம் நடந்ததே கிடையாது’ என்று விபரமாக உஷா சமூகக் குழு நிஷா சமூகக்குழுவிடம் எடுத்துச் சொல்லியது. இது நியாயமான விஷயம் தான், ஆனால் பட்டினியால் சாகும் போது நிஷா சமூகக்குழு நியாயத்தை கடைப்பிடிக்க முடியுமா? நியாயமும் சட்டமும் பலனற்றுப் போகும் போது, காட்டுமிராண்டிச் சட்டத்தை (மிருகத்தனத்தை) கடைப்பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இரு சமூகமும் உள்ளுக்குள் இதற்குத் தயார் செய்ய ஆரம்பித்தன. இந்தச் சமூகத்தின் ரகசியம் அந்தச் சமூகத்திற்கோ, அந்தச் சமூகத்தின் ரகசியம் இந்தச் சமூகத்திற்கோ தெரிய வசதியில்லை. ஏனெனில் கொள்ளல்-கொடுத்தல், சாவு, வாழ்வு யாவும் ஒரு பரிவாரத்திற்கு வெளியே நடப்பதில்லை.
 
ஒரு நாள் நிஷா சமூகத்தின் ஆட்கள் சிலர், உஷா சமூகத்தின் வனத்திற்கு வேட்டையாடச் சென்றனர். மறைந்திருந்த உஷா சமூகத்தினர் உடனே தாக்க ஆரம்பித்தார்கள். இவர்களும் எதிர்த்தனர். ஆயினும் எண்ணிக்கையில் இவர்கள் குறைவு. எதிர்பார்க்கவும் இல்லை. ஆகையால் நிஷா சமூக ஆட்கள் இறந்தவர்களை அங்கேயே போட்டுவிட்டு காயம் பட்டவர்களை மட்டும் தூக்கிக் கொண்டு ஓட்டமெடுத்தனர். இது நிஷா சமூகத்தின் தலைவிக்கு எட்டியது. குழு கூடியது. சர்ச்சை நடந்தது. அப்பால் சமூகம் பூராவும் ஆண் பெண் அடங்கலும் சேர்ந்த சபை கூடியது. அதற்கு முன் எல்லா விஷயங்களும் தெரிவிக்கப்பட்டன. இறந்தவர்களின் பெயர்கள் சொல்லப்பட்டன. காயம்பட்டவர்களைத் தூக்கிக் கொண்டுவந்த காண்பித்தார்கள். விருத்தர் முதல் யுவ-யுவதியர்கள் வரை, ‘கொலைக்குக் கொலை: பழிக்குப் பழி’ என்று சமூகத்தை தூண்ட ஆரம்பித்தனர். மகாசபையும் கொலைக்குப் பதில் கொலை செய்வதற்கு, பழிக்குப் பழி வாங்குவதற்கு அனுமதி கொடுத்துவிட்டது.
 
நடனத்துக்கு உபயோகமாகும் வாத்தியங்கள் யுத்த வாத்தியங்களாயின, குழந்தைகளையும் விருத்தர்களையும் பாதுகாப்பதற்காகச் சில நபர்களை மட்டும் வைத்துவிட்டு, மற்ற யாவரும் களத்திற்கு கிளம்பி விட்டனர். அவர்களுடைய மார்புகளிலே கனத்த தோலால் செய்யப்பட்ட கவசங்கள், கைகளில் கல், மரம், தோல் இவைகளால் செய்யப்பட்ட வில், அம்பு, ஈட்டி முதலிய ஆயுதங்கள், முன்னே வாத்தியம் முழங்க பின்னே இந்தப் படை செல்கிறது. சமூகத்தாய் திவா தலைமை தாங்கி முன்னே நடக்கிறாள். இவர்களுடைய வாத்தியங்களின் ஓசையும், இவர்கள் போடும் கோலாகல இரைச்சலும், அந்த வானத்தையே அதிரும்படி செய்கின்றன. அவ்வனத்தில் வாழும் பட்சிகளும் மிருகங்களும் பயத்தால் இங்குமங்கும் ஓட்டமெடுத்தன.
 
இப்போது இவர்கள் தங்கள் வனத்தை கடந்து பொது இடத்திற்குப் போய்விட்டார்கள். இவர்களுடைய வனம், அவர்களுடைய வனம், பொது இடம் இவைகளின் எல்லையை வரையறுக்கும் எந்த அடையாளமும் இல்லையானாலும் கூட வேட்டையாடித்திரியும் இந்த இரு சமூகத்தையும் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்களின் எல்லை நன்றாகத் தெரியும். பொய் சொல்லவும் மாட்டார்கள். ஏனெனில் அந்தக் காலமனித சமுதாயத்திற்குப் பொய்யென்பது தெரியாத பொருள். அதைக் கற்றுக் கொள்ளும் திறமையையும் அந்தச் சமுதாயம் பெற்றிருக்கவில்லை. வேட்டையாடிக்கொண்டிருந்த உஷா சமூக ஆட்கள் தகவலைச் சமூகத்திற்கு தெரிவித்தனர். உடனே எல்லோரும் ஆயுதம் ஏந்தி யுத்த களத்திற்கு வந்துவிட்டனர். உண்மையில் உஷா சமூகத்தினர் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றுதான் விரும்பினர். ஆனால் அவர்களின் எதிரிகள் இந்நியாயத்திற்கு தயாராயில்லை. உஷா சமூகத்தாருடைய வனத்தில் இரு சமூகத்தாருக்கும் யுத்தம் மூண்டது. கல்லால் செய்யப்பட்ட கூர்மையான அம்புகளை மழைபோன்று வருஷிக்கிறார்கள். கல்லாலும், மரத்தாலும், எலும்பாலும், கொம்புகளாலும் செய்யப்பட்ட விதவிதமான ஆயுதங்களை உபயோகித்துப் பயங்கரமாகச் சண்டை போடுகிறார்கள். ஆயுதங்களை இழந்து விட்டவர்கள் தங்கள் கைகளையும் கால்களையும் பற்களையும் உபயோகித்துச் சண்டை செய்கிறார்கள்.
 
நிஷா சமூகத்தாரின் எண்ணிக்கை உஷா சமூகத்தாரின் எண்ணிக்கையைப் போல் இரண்டு மடங்கு இருந்தது. ஆகையால் அவர்களை உஷா சமூகத்தார் வெற்றி காண்பதென்பது முடியாத காரியம். ஆயினும் யுத்தம் செய்து தானேயாக வேண்டும். ஒரு சிறு குழந்தையாவது உயிரோடிருக்கும் வரை யுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. உஷா சமூகத்தினர் மூன்றில் இரண்டு பகுதியினர் யுத்த காலத்திலேயே மடிந்து விட்டனர். பாக்கி ஒரு பகுதியினரும் வால்கா நதிக்கரையில் சண்டை செய்து கொண்டே உயிர் விட்டனர். குடிசையில் கிழவர்களையும் குழந்தைகளையும் காத்து நின்றவர்கள், அவர்களையும் கூட்டிக்கொண்டு குடிசையைவிட்டு ஓட நினைத்தனர். ஆனால் காலம் கடந்து விட்டது. யுத்தவெறி பிடித்த நிஷா சமூகத்தினர் அவர்களை விரட்டிப்பிடித்துக் கொன்று குவித்தனர். பால்மணம் மாறாப் பாலகர்களைக் கல்லில் மோதிக் கொண்றார்கள். விருத்தர்களின் கழுத்தில் கல்லைக் கட்டி வால்கா நதிப் பிரவாகத்தில் அமிழ்த்திக் கொன்றார்கள்.

அவர்களின் குடிசைகளிலும் சாமான்களை அப்புறப்படுத்திவிட்டுப் பாக்கியுள்ள குழந்தைகள் பெண்கள் யாவரையும் குடிசைக்குள் அடைத்து நெருப்பை வைத்தார்கள். ஜோதிமயமாய் எரியும் நெருப்பின் நடுவே முனகும் அவர்களின் தீனக்குரலைக் கேட்டு இவர்கள் ஆர்ப்பரித்தார்கள். பிறகு அக்னி பகவானுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள். எதிரிகள் சேகரித்து வைத்திருந்த காய்கனிகள், மாமிசம், மது இவற்றால் அக்னி தேவனையும் தங்களையும் திருப்தி செய்து கொண்டனர். தலைவி திவா ரொம்ப மகிழ்ச்சியோடிருக்கிறாள். இன்றைய யுத்தத்திலே அவள், தாய்மாரின் மார்போடு அணைக்கப்பட்டிருந்த மூன்று குழந்தைகளைப் பறித்துக் கல்லிலே மோதிக் கொண்றாள். அந்தக் குழந்தைகளின் தலைகள் கல்லிலே அடிபட்டு நொறுங்கும் சப்தத்தைக் கேட்டு கெக்கலி கொட்டிச் சிரித்தாள். யுத்தம் முடிந்து விட்டது. எதிரிகளின் சூறையாடிய பொருட்களை தின்று முடித்ததும் நாட்டியம் ஆரம்பமாயிற்று. அந்த நெருப்பின் ஒளியிலே நடனம் ஆடினர். திவா இன்று தனது இளைய புத்திரனோடு நடனமாடுகிறாள். நிர்வாணமாய் ஆடும் அந்த இரண்டு உருவங்களும் நடனமாடிக்கொண்டிருக்கும் போதே ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்கின்றனர். ஆலிங்கனம் செய்கின்றனர். இன்று திவாவின் காதலுக்கு அவள் மகன் வசு இலக்காகியிருக்கிறான் என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டனர். வெற்றி வெறியில் திளைத்திருக்கும் தாயின் காதலை மகனும் அலட்சியம் செய்ய விரும்பவில்லை.

நிஷா சமூகத்திற்கு இப்போது வேட்டையாடுவதற்குக் காடு நான்கு மடங்காகிவிட்டது. மழைக் காலத்தைப்பற்றி இனி அவர்களுக்கு கவலை கிடையாது. ஆனால் ஒரு கவலை மாத்திரம் அவர்களை இப்போது தொத்திக் கொண்டது. இறந்து போன உஷா ஜனங்களின் ஆவிகள் உயிரோடிருக்கும் போது செய்ய முடியாத காரியங்களையெல்லாம் இப்போது செய்ய முயலுகின்றன. எரிந்து போன அவர்களது குடிசைகள் இப்போது பேய் வாழும் இடமாக மாறிவிட்டன. அந்த வழியாகத் தனிமையில் நடப்பது நிஷா சமூகத்தாருக்கு முடியாத காரியம். வேட்டையாடும் போது எத்தனையோ முறை ஜோதிமயமாக எரியும் நெருப்பையும், அதன் முன்னே நிர்வாணமாக அநேகர் நடனமாடுவதையும் பார்த்ததாகப் புகார் சொல்லியிருக்கிறார்கள். இந்த வனத்தை விட்டு அடுத்த பிரதேசத்திற்குப் போகும் போது அந்த மயான பூமி வழியாகவே தான் செல்ல வேண்டும். அப்போது கூட்டமாகவும், பகலிலும் நடந்து கடக்கின்றனர். திவாவும்கூட பலமுறை, அநேக இரவுகளில் பால் மணம் மாறாத குழந்தைகள் பூமியிலிருந்து எழும்பித தன் கைகளைப் பின்னுவதாகக் கனவு கண்டு அலறி விழித்திருக்கிறாள்.



4


திவா இப்பொழுது பெரிய கிழவியாகிவிட்டாள். வயதும் எழுபதுக்கு மேல்ஆகிவிட்டது. நிஷா சமூகத்திற்கு இப்போது அவள் தலைவி இல்லை. ஆயினும் எல்லாருடைய மதிப்பிற்கும் பாத்திரமான கிழவியாகியிருக்கிறாள். அவள் தலைமை வகித்திருந்த அந்த 20 வருஷங்களில் வளர்ந்து வரும் இந்தச் சமூகத்தின் ஷேமத்திற்காக வெகு பிரயாசைப்பட்டிருக்கிறாள். பல யுத்தங்களை நடத்தி இருக்கிறாள். இந்தச் சண்டைகளில் சிலரை இழந்தது வாஸ்தவம் தான். ஆனால் ஒவ்வொரு யுத்தத்தின் முடிவிலும் வெற்றியையே கண்டிருக்கிறாள். இப்போது இந்தச் சமூகத்திற்கு தேவைக்குப் போதுமான பெரிய வனமிருக்கிறது. இவைகள் யாவும் பகவானுடைய கிருபையால் கிடைத்ததாகவே நினைப்பாள். இருந்தாலும் கல்லிலே மோதிக் கொன்றாளே, அந்தக் குழந்தைகள் – பால் மணமே மாறாத பாலகர்கள் – அடிக்கடி அவளுடைய நித்திரையைப் பங்கப்படுத்தி விடுகின்றனர்.

பனிக்காலம், மாதக் கணக்காகத் தொடர்ந்து பெய்யும் பனியினால், வால்கா நதி உறைந்து ஒரே பனித் தகடாய்க் காட்சியளிக்கிறது. அந்த வனாந்தரத்திலுள்ள மரங்கள் இலைகளையும் கூட இழந்து நிற்கின்றன. புல் பூண்டுகள் புதர்கள் யாவும் பனி மயம். நிஷா சமூகத்திலே ஜனத்தொகை முன்னைவிடப் பெருகிவிட்டது. ஆகவே அவர்களுக்கு ஆகாரப் பொருள்களும் அதிக அளவில் தேவையல்லவா? ஆனால் ஜனங்களின் பெருக்கத்துக்குத் தக்கபடி உழைக்கும் கைகளும் அதிகரிக்கின்றன. கிடைக்கும் பொழுது உணவை நிறைய சேகரிப்பதில் சிரமம் எதுவுமில்லை. குளிர்காலத்தில் வேட்டை நாய்களின் உதவியினால் எப்படியாவது வேட்டை மிருகங்கள் கிடைத்து விடுகின்றன. பனி ஆரம்பித்தவுடனே இந்த வனத்திலுள்ள விலங்குகள் அடுத்த பிரதேசத்திற்கு- பனியில்லா பிரதேசத்திற்குப் போய்விடுவது வழக்கம். ஆனால் நிஷா- சமூகத்தாருக்கு இப்போது ஒரு புதுமுறை தென்பட்டது. இந்த வனத்திலுள்ள புல் பூண்டுகளின் விதைகள், பூமியில் உதிர்த்து மறுபடியும் முளைப்பதைப் பார்த்த இவர்கள், விதைகளைக் கூட்டிச் சேர்த்து அவற்றை ஈரமான நிலங்களிலே தூவி விட்டனர். அவை முளைத்துப் பசுமையாக வளர்ந்திருந்தன. பசுமையைக் கண்ட மிருகங்கள் இன்னும் கொஞ்ச நாள் அதிகமாக இந்த வனத்தில் தாமதித்தன.

ஒரு நாள் துருவனுடைய நாய் ஒரு முயலைப் பின் தொடர்ந்தது. துருவனும் தன்னுடைய நாய்க்குப் பின் வேகமாக ஓடினான். வியர்வை வடிய ஆரம்பித்தது. தன்னுடைய தோல் கவசத்தை அவிழ்த்துத் தோளில் போட்டுக்கொண்டு ஓடினான். எவ்வளவுதான் வேகமாக ஓடியும் அவனால் அவனுடைய நாயைத் தொடர முடியவில்லை. பனி படர்ந்திருப்பதால் நாயினுடைய அடிச்சுவடு பூமியில் தெரிகிறது. ஆனால் நாயைக் காணவில்லை. வியர்த்து களைத்து விழுந்து கிடந்த ஒரு மரத்தின் மீது சிறிதே உட்கார்ந்தான். வியர்வை கூடப் பூரணமாக அடங்கவில்லை. அதற்குள் அவனுடைய நாய் குரைப்பது கேட்டது. வேகமாக அந்தச் சப்தம் வந்த திசையை நோக்கி ஓடினான். நாய் நின்ற இடத்தை அவன் நெருங்கியதும் ஒர் அழகிய யுவதி தேவதாரு மரத்தில் சாய்ந்துகொண்டு நிற்பதைக் கண்டாள். அவளுடைய மார்பகத்தை வெண்மையான தோல் கவசம் அலங்கரித்துக் கொண்டிருந்தது. அவளுடைய வெள்ளைத் தோல் தொப்பிக்குள்ளிருந்து பொன்னிறமான கேசங்கள் வெளிவந்து பிடரியில் புரண்டன. அவளுடைய காலடியில் அந்த முயல் குட்டி இறந்து கிடந்தது. துருவனைப் பார்த்த அவனுடைய நாய் அவனுக்கு சமீபத்தில் வந்து உரக்க உரக்கக் குரைக்க ஆரம்பித்தது. ஆனால் துருவனுடைய கண்கள், அந்த அழகியின் முகத்தைவிட்டு அகலவில்லை. அவளும் புன்முறுவலோடு ‘நண்பா! இது உன்னுடைய நாயா?’

‘ஆம், இது என்னுடைய நாய் தான். ஆனால் உன்னைநான் இதுவரை பார்த்ததே இல்லை?’

‘நான் குரு சமூகத்தைச் சேர்ந்தவள். இந்த வனமும் குரு சமூகத்தினுடையது தான்’

‘குரு சமூகத்தினரின் வனமா?’ அவனுடைய இதயத்தில் எண்ணங்கள் மோத ஆரம்பித்தன. குரு ஜனங்கள் நிஷா ஜனங்களுக்குப் பக்கத்து வனவாசிகள்.

பல வருடங்களாக இந்த இரு சமூகத்திற்குமிடையில் சுமூகமான உறவு கிடையாது. பலமுறை இரு சமூகத்திற்கும் யுத்தம் கூட நடந்திருக்கிறது. ஆனால் குரு ஜனங்கள் நிஷா ஜனங்களைக் காட்டிலும் கொஞ்சம் புத்திசாலிகள். ஆகவே யுத்தத்தில் வெற்றியைக் காண முடியாதபோது, அவர்கள் அடிக்கடி தங்கள் பாதங்களைத் திறமையாக உபயோகித்திருக்கிறார்கள். கைகள் வெற்றியை அளிக்க முடியாதபோது கால்களின் உதவியினால் உயிர்களை காப்பாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம் தானே? நிஷா சமூகத்தார் குரு சமூகத்தை அழித்துவிட வேண்டும் என்று நிச்சயம் செய்து கொண்டிருந்தாலும் இதுவரை அவர்களுடைய எண்ணத்தைக் காரியத்தில் ஈடேற்ற முடியவில்லை. சிந்தனையில் மூழ்கி அவன் மென்மையாய் நிற்பதைப் பார்த்து யுவதி பேசத் தொடங்கினாள்.

‘இந்த முயலை உன்னுடைய நாய் தான் கொன்றது. ஆகையால் இதை நீ எடுத்துக் கொள்’

‘இருந்தாலும் இது குரு சமூகத்தாரின் வனத்திலல்லவா இறந்து கிடக்கிறது?’

‘ஆம். அதனாலென்ன? நாயின் எஜமானுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டே தான் நான் நின்றேன்.’

‘எதிர்பார்த்துக் கொண்டா?’

‘ஆம். வந்தவுடன் இந்த முயலைக் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காகவே’

குரு என்ற பெயரைக் காதில் கேட்டவுடனேயே துருவனுடைய மனத்தில் துவேஷ உணர்ச்சி தான் எழுந்தது.

ஆனால் அழகியினுடைய அன்பு நிறைந்த பேச்சு துவேஷ உணர்ச்சியைத் துரத்திவிட்டது. அவன் நன்றியறிதலோடு,

‘இந்த முயல் என்ன, என்னுடைய நாயையுமல்லவா நீ எனக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறாய். இது எனக்கு ரொம்ப பிரியமுள்ள நாய்.’

‘ஆம். நல்ல அழகான நாய்.’

‘எத்தனை பேர் கூட்டத்திலிருந்தாலும் சரி, எனது குரலைக் கேட்டதும் எனக்குச் சமீபம் ஓடி வந்துவிடும்!’
‘இதனுடைய பெயர்?’

‘சாம்பு’

‘உன் பெயர் நண்ப?’

‘துருவராஸவ, ரோசனா … சூனு.’

‘ரோசனா-சூனு! என்னுடைய தாயின் பெயரும் ரோசனா தான். அவசரமில்லையானால், இங்கே கொஞ்சம் உட்காரேன்’

துருவன் உடனே தன்னுடைய கவசம், ஆயுதங்கள் இவைகளைப் பூமியில் வைத்துவிட்டு அவளுடைய பாதங்களின் அருகே உட்கார்ந்தான்.’உன்னுடைய தாய் இருக்கிறாளல்லவா?’

‘இல்லை, நிஷா ஜனங்களுடன் நடைபெற்ற யுத்தத்தில் அவள் கொல்லப்பட்டுவிட்டாள். அவள் என்மீது ரொம்பப்பிரியமாயிருந்தாள். இந்த வார்த்தைகள் அழகியினுடைய வாயிலிருந்து வரும்போதே, அவளுடைய கண்களும் நீரைத் தாரை தாரையாக உகுக்க ஆரம்பித்தன. துருவனுடைய இதயமும் உருகிவிட்டது. அந்தக் கண்ணீரைத் தன் கைகளால் துடைத்துக் கொண்டே, ‘யுத்தம் ரொம்பக் கொடியது’ என்றான்.

‘ஆம், ஒரு விதத்திலா? நமது அன்புக்கு உரியவர்கள் எத்தனை பேரை இழக்க வேண்டியிருக்கிறது!’

‘இந்த யுத்தத்திற்கு முடிவே இல்லையா, இனிமேலும் தொடர்ந்து கொண்டேதானிருக்குமா?’

‘துருவ! அது எப்படி நிற்கும்? ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை வேரோடு அழிக்காதவரை யுத்தம் நிற்குமா?’

‘நிஷா சமூகத்தவர் திரும்பவும் எங்கள் மீது யுத்தம் ஆரம்பிக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன். துருவ! உன்னைப் போலொத்த வாலிபர்கள் தானே அங்குமிருப்பார்கள்?’

‘உன்னைப் போலொத்த யுவதிகள் தானே குரு சமூகத்திலுமிருக்கிறார்கள்?’

‘இப்படியிருந்தும் நாம் ஒருவரையொருவர் வெட்டிக் கொள்ளத் துணிகிறோம். இந்த நினைவுதான் இவர்களுக்கு எப்படி உண்டாகிறது?’

இன்னும் மூன்று நாட்களில் குரு குலத்தின் மீது தனது நிஷா சமூகத்தார் யுத்தம் தொடுக்க நிச்சயித்திருப்பது துருவனுக்கு நினைவு வந்தது. இது ஞாபகத்திற்கு வந்தவுடன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் அந்த யுவதி கூறினாள்.

‘ஆனால் இப்போது நாங்கள் யுத்தம் செய்ய மாட்டோம்.’

‘யுத்தம் செய்ய மாட்டீர்களா? ஏன்? குரு சமூகத்தார் சண்டை செய்யமாட்டார்களா?’

‘எங்கள் சமூகத்தாரின் எண்ணிக்கை ரொம்பக் குறைந்து விட்டது. வெற்றியடைவோமென்றே நம்பிக்கை எங்களுக்குக் கிடையாது’

‘அப்படியானால் என்ன செய்வீர்கள்?’

‘இந்த வால்கா நதிப் பிரதேசத்தை விட்டு விட்டுப் போய்விடுவோம். துருவ! இந்த நதி நமக்கு எவ்வளவு பிரியமானது! நான் இனிமேல் இதைப் பார்க்க முடியாது. இதனாலே இன்று நான் ஆசைதீரப் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.’

‘இனிமேல் இந்த நதியை நீ பார்க்கவே முடியாதா?’

‘முடியாது. எப்படி முடியும்? இதில் நீந்தவும் முடியாது. இதில் நீந்துவது ஆனந்தமாயிருக்கும்!’

ஒரு பெருமூச்சு விட்டாள். துக்கத்தால் அவளுடைய தொண்டை தளுதளுத்தது. துருவனுடைய முகமும் துக்கத்தால் சுருங்கியது. கோபத்தால் அவளுடைய உதடுகள் துடிக்க ஆரம்பித்தன. ‘கொடுமை. பெரிய அநீதி இந்த யுத்தம்’ என்றது அவன் வாய்.

‘ஆனால் துருவ! இது சமூக தர்மம்.’

‘சமூக தர்மமா? இல்லை? இல்லை, இது மிருக தர்மம்.’

 

- தொடரும் -
 
 http://inioru.com/?p=35488

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.