Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபாமா VS மஹிந்த

Featured Replies

[size=4]அமெரிக்காவின் 44 ஆவது ஜனாதிபதியாக நியமனம் பெற்ற ஜனாதிபதி பராக் ஒபாமா மீண்டும் தேர்தலில் வென்று 45 ஆவது ஜனாதிபதியாகவும் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.[/size]

[size=2]

[size=4]பராக் ஒபாமாவின் இந்த மீள் வெற்றியானது, சர்வதேச சமூகத்தை அமெரிக்காவை நோக்கித் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ரோம்னிக்கும், ஒபாமாவுக்குமிடையில் தேர்தல் போட்டி கடுமையாக இருந்தாலும் ஒபாமா தனது வசீகர முகத்தாலும், பேச்சாற்றலாலும் அமெரிக்க மக்க ளின் மனங்களைக் கவர்ந்துவிட்டார். [/size][/size]

[size=2]

[size=4]ஒபாமாவின் ஆட்சிக்காலம் நடை பெற்றபோதுதான் "தீவிரவாதத்துக்கு எதிரான போர்', "அரபுலக வசந்தப் புரட்சி' என்பன தீவிரமடைந்தன. பராக் ஹுசைன் ஒபாமா என்றவுடன் அவர் ஜனாதிபதியானாலும் அரபு நாடுகளுடன் நேசம் கொள்வார். இஸ் லாமிய தீவிரவாத அமைப்புகளைப் பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டார் என்றெல்லாம் கருதப்பட்டது.[/size][/size]

[size=2]

[size=4]ஆனால், இரட்டைக் கோபுரத் தாக்குதலினால் கொள்ளைபோயிருந்த அமெரிக்காவின் மானத்தை ஒசாமா பின்லேடனைக் கண்டுபிடித்து அழித்ததன் மூலம் ஓரளவு காப்பாற்றிக் கொடுத்த ஒபாமா அரபு நாடுகளிலும் இஸ்லாமிய வசந்தப் புரட்சியை முடுக்கிவிட்டார்.[/size][/size]

[size=2]

[size=4]இப்போது ஒபாமா தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொட்டிருக்கிறார். நிச்சயம் அவரது முத லாவது பதவிக்காலத்தை விட இரண்டாவது பதவிக்காலம் சற்றுக் கடுமையானதாக கடினமானதாக இருக்கும். ஏனெனில், பொருளாதாரப் பிரச்சினைகள், வேலைவாய்ப்பு என்றவாறான உள்நாட்டு நெருக்கடிகளில் சிக்கித்தவித்த ஒபாமா, ஒருமாதிரியாக மீண்டும் ஜனாதிபதிஆகிவிட்டார். [/size][/size]

[size=2]

[size=4]எனவே அந்தப் பிரச்சினைகளைக் கையிலெடுத்துக்கொண்டு அதிரடியான திட்டங்களில் இறங்கக்கூடும். "வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாக இருப்போம்'' என்ற ஒபாமாவின் வாசகங்கள் இனி அடுத்த நான்கு வருடங்களுக்கு செய்திகளைச் சொல்லப்போகிறது.[/size][/size]

[size=2]

[size=4]சரி, இனி விடயத்துக்கு வருவோம். ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலம் இலங்கையில் எந்த வகையில் தாக்கங்களைச் செலுத்தப் போகின்றது என்பதைப் பற்றி இப்போது ஆராய்வோம். விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான மூன்று தசாப்த காலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசு அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்திருந்தது. [/size][/size]

[size=2]

[size=4]சர்வதேச சமூகம் இலங்கை விடயத்தில் அப்போது தலையிட்டபோது, போரை முடிக்கும்வரை அமைதியாக இருக்குமாறும், போர் முடிந்த கையோடு தமிழருக்கு அரசியல் தீர்வு உடனடியாக கொண்டுவரப்படுமென்றும் அப்போது இலங்கை அரசு சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்திருந்தது.[/size][/size]

[size=2]

[size=4]இலங்கையின் அந்த உறுதிமொழியை நம்பி ஏமாந்த சர்வதேச சமூகம்தான் இப்போது அந்த உறுதிமொழிகள் என்னாயிற்று என்று கேள்விகளை எழுப்பத்தொடங்கியிருக்கின்றது. [/size][/size]

[size=2]

[size=4]சிலசமயம் அமெரிக்க ஜனாதிபதியாக ரோம்னி தெரிவுசெய்யப்பட்டிருந்தால் இந்தக் கேள்விகளிலிருந்து தப்பித்துக்கொண்டிருக்கலாமென்று இலங்கை நினைத்தால் அதுவும் தவறுதான். ஏனெனில், குடியரசுக் கட்சி சீனாவுடன் கடுப்பைக் கொண்டிருக்கும் ஒரு கட்சி. இலங்கை அரசு சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நெருங்கிய நட்பு ரோம்னி அமெரிக்க ஜனாதிபதியாகியிருந்தால் ஆபத்தில் முடிந்திருக்கும் என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்.[/size][/size]

[size=2]

[size=4]சரி, விடயத்துக்கு வருவோம். இப்போது ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தில் இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துக் கவனம்செலுத்தவேண்டும்.[/size][/size][size=2]

[size=4]சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் விடயத்தில் ஒபாமா நிர்வாகம் கடும்போக்கைத்தான் கடைப்பிடித்து வருகிறது. [/size][/size]

[size=2]

[size=4]இதனால் தான் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராகத் தனது நேச சக்திகளை இணைத்துக்கொண்டு தீர்மானமொன்றை நிறைவேற்றியது அமெரிக்கா. இறுதிப் போர் நடந்து முடிந்தது முதல் இன்றுவரை சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அளித்த வாக்குறுதிகள் ஒன்றுமே நிறைவேற்றப்படவில்லை. [/size][/size]

[size=2]

[size=4]இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நீதியான விசாரணை, தமிழர்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு, வடக்கு, கிழக்கிலிருந்து படைக்குறைப்பு, ஆயுதப்படை களின் ஆயுதக்களைவு என்று உத்தரவாதமளித்த எதனையும் இலங்கை அரசு முறையாக நிறைவேற்றாத காரணத்தினால்தான் ஒபாமாவின் இரண்டாவது நிர்வாகம் அதாவது, இந்த இரண்டாவது ஆட்சிக்காலம் இலங்கைக்குச் சங்கடம் மிகுந்ததாக அமையப்போகிறது.[/size][/size]

[size=2]

[size=4]பிளேக்கின் காய்நகர்த்தல்களை எதிர்பார்க்கலாம்[/size][/size]

[size=2]

[size=4]இலங்கை தொடர்பில் மிகுந்த ஞானம் உள்ள அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமைச்சர் றொபர்ட் ஓ பிளேக், ஒபாமாவின் இந்த இரண்டாவது ஆட்சிக்காலத்தில் உயர்ந்த பதவி ஒன்றுக்கு மாற்றப்படும் சாத்தியம் உள்ளது. [/size][/size]

[size=2]

[size=4]இலங்கையின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை எப்போதுமே வலியுறுத்திவரும் பிளேக், இலங்கையின் இறுதிப் போரின்போது அதன் இறுதிக் காலங்களின்போது தொடர்பில் இருந்தவர். எனவே, இலங்கை தொடர்பான அவரின் காய்நகர்த்தல்கள் அமோகமாக இருக்கப்போகின்றன.[/size][/size]

[size=2]

[size=4]அடுத்ததாக, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்செல் சிசன் அம்மையாரையும் நாம் சாதாரணமாகக் கருதிவிட முடியாது. அரபுலக வசந்தம் தொடர்பில் அவர் மேற்கொண்ட அணுகுமுறைகளும், மதிநுட்பங்களும் ராஜாங்கத் திணைக்களத்தில் அவருக்குப் பெரு மதிப்பைக் கொடுத்திருக்கிறது. இலங்கை விடயம் அரபுலக வசந்தம் போன்றளவு பாரதூரமானதாக இருக்கப்போவதில்லை.[/size][/size]

[size=2]

[size=4]எவ்வாறாயினும் இதற்கெல்லாம் அப்பால் இலங்கைக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்னவெனில், அமெரிக்க புதிய வெளிவிவகார அமைச்சராக சுசான் ரைஸ் வரப்போவதுதான்.[/size][/size]

[size=2]

[size=4]இப்போதைய அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் எதிர்வரும் ஜனவரி மாத மளவில் ஓய்வுபெறவுள்ள சூழ்நிலை யில் இப்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதுவராக இருக்கும் சுசான் ரைஸ் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படலாமெனக் கூறப்படுகிறது. [/size][/size]

[size=2]

[size=4]எப்படியோ அமெரிக்காவின் முக்கிய இராஜதந்திரிகளான செனட்டர் ஜோன் கெரி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொம் டொனிலன் ஆகியோரும் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படத் தகுதியானவர்கள்தான். [/size][/size]

[size=2]

[size=4]ஆனால் சுசான் ரைஸ் இவற்றுக்கு ஒருபடி மேலே ஜனாதிபதி ஒபாமாவின் நம்பிக்கையைப் பெற்றவராகக் காணப்படுகிறார். இதனால்தான் தூதுவர் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அதிகாரத்தை ஒபாமா வழங்கி சுசான் ரைஸை உயர் நிலையில் வைத்திருக்கிறார்.[/size][/size]

[size=2]

[size=4]சுசான் ரைஸ் ஆபிரிக்க அமெரிக்கப் பெண்மணி. வெளிவிவகார அமைச்சு இவருக்குக் கிடைத்தால் அமெரிக்காவின் இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது ஆபிரிக்க அமெரிக்க பெண்மணியாக இருப்பார். ஏனெனில் ஜோர்ஜ் (ஜூனியர்) புஷ் ஆட்சியில் கொண்டலிஸா ரைஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவிவகித்திருந்தார். அவர் ஆபிரிக்க அமெரிக்கராவார்.[/size][/size]

[size=2]

[size=4]சுசான் ரைஸ் மீது லிபியா தொடர்பிலும், இஸ்லாத்துக்கெதிரான வீடியோ தொடர்பிலும் விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் தீவிரவாதத்துக்கெதிரான போர் என்ற கொள்கையின் கீழ் ஒபாமாவின் ஆதரவை ரைஸ் இழக்கவில்லை. எனவே, சுசான் ரைஸ் வெளிவிவகார அமைச்சராக நியமனம் பெற்றால் இலங்கையின் தலையில் இடிவிழுந்த கதையாகத்தான் இருக்கும். [/size][/size]

[size=2]

[size=4]ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச ரீதியில் பல்வேறு விடயங்களில் தலையீடுகளை மேற்கொள்ள சுசான்ரைஸ் பெரும் பங்குவகித்திருக்கிறார். குறிப்பாக இலங்கை விடயத்தில் அவர் மிகவும் கறாரானவர். [/size][/size]

[size=2]

[size=4]இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் கடந்த காலங்களில் அவர் பிடித்து வந்த கடும்போக்கு கொள்கைகள் அவர் வெளிநாட்டமைச்சராக வந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப்பார்க்கத் தேவையில்லை. எனவேதான் ஒபாமாவின் இந்த இரண்டாவது பதவிக்காலம் இலங்கைக்குப் பல்வேறு வழிகளில் நெருக்கடி தரும் ஒரு காலமாக இருக்கப்போகிறது.[/size][/size]

[size=2]

[size=4]எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனி வாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக இலங்கை அரசு பெரிதாக எதனையும் செய்துவிட வாய்ப்பில்லை. நாட்டின் நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்குமிடையிலான போர் உக்கிரமாகி அதனால் ஏற்படும் விளைவுகளின் தாக்கம் இந்த ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு இருக்கும்.[/size][/size]

[size=2]

[size=4]இதற்கு அப்பால் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளின் அமுலாக்கம் என்ற பெயரில் வித்தைகாட்டி கடந்த தடவை ஜெனிவாவில் தப்பித்துக்கொண்ட இலங்கை, மார்ச் மாதம் என்ன பதிலைத் தரப்போகின்றது என்பதை அமெரிக்கா கழுகுக் கண்களால் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. [/size][/size]

[size=2]

[size=4]எப்படியோ உலக பொலிஸ் காரனான அமெரிக்காவிடம் தெரிந்தோ தெரியாமலோ சிக்கித் தவிக்கிறது இலங்கை. இதனால்தான் ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாகி விடக்கூடாது என்று இலங்கையும் மனதுக்குள் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தது.[/size][/size]

[size=2]

[size=4]பராக் ஒபாமாவின் இந்த இரண்டாவது ஆட்சிக் காலத்திலாவது இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க அமெரிக்காவின் அழுத்தம் முறையாகக் கிடைக்குமா? இதற்கு காலம்தான் பதில் கூறவேண்டும்.[/size][/size]

[size=2]

[size=5]- - குத்தூசி [/size][/size][size=2]

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5390141216257726#[/size]

Susan Rice 220px-Susan_Rice%2C_official_State_Dept_photo_portrait%2C_2009.jpg 27th United States Ambassador to the United Nations Incumbent Assumed office

January 22, 2009 President Barack Obama Preceded by Zalmay Khalilzad 12th Assistant Secretary of State for African Affairs In office

October 9, 1997 – January 20, 2001 President Bill Clinton Preceded by George Moose Succeeded by Walter Kansteiner Personal details Born Susan Elizabeth Rice

November 17, 1964 (age 47)

Washington, D.C., U.S. Political party Democratic Party Spouse(s) Ian Cameron [size=4](1992–present)[/size] Children 2 Alma mater Stanford University

New College, Oxford

http://en.wikipedia.org/wiki/Susan_Rice

சுசான் ரைசுக்கு மக்கெயின், கிரகாம் போன்ற குடியரசுவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காங்கிரசில் அவவின் தெரிவை இவர்கள் ஆதவைக் கூட்டி எதிர்ப்பார்கள்.

  • தொடங்கியவர்

[size=4]செனட்டர் ஜோன் கெரி அவர்கள் கூட இராஜாங்க செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படலாம். [/size]

ricekerry.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவில் வாழும் தமிழர்க்குச் சார்பாக ஒபாமா ஒரு துரும்பைகூடக் கிள்ளிப்போட மாட்டார். இன்னமும் நான்கு வருடங்களின் பின்பு பாருங்கள். ஈழத்தமிழர்கள் இ,லவுகாத்த கிளியாக ஒபாமா விடையத்தில் ஏமாந்தேபோவார்கள். அமெரிக்கா தனது பூகோள நலன் பொருளாதார நலன் போன்றவற்றின் மேம்பாட்டிற்காக ஈழத்தமிழர் தலையில் அணுகுண்டு போட்டால் நல்லது நடக்கும் எனக் கருதுமாகவிருந்தால் அதையும் செய்யத் தயங்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவை தவிர்த்து வேறு யாருமே ஈழத்தமிழர்பிரச்சனையில் தலையிடமுடியவில்லை. தலையிட முடியாது! பூகோள ரீதியாக,வாணிப ரீதியாக இதுதான் நிஜம்.

  • தொடங்கியவர்

[size=4]வரும் நாட்களில் ஒபாமா மியான்மார் / பர்மா செல்லவுள்ளார். [/size]

[size=1]

[size=4]இந்த நாட்டின் மீது பூகோள ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சீனா இந்தியாவை மீறி நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தியது. [/size][/size]

[size=5]As President Obama heads to Myanmar, Cambodia, and Thailand on Saturday, China is keeping a wary eye on the latest US move in the sometimes bruising tussle between the two giants for influence in the region.[/size]

[size=5]“The US is trying to compete with China to make friends with Asian countries, but this does not have to be a zero-sum game,” argues Liu Feitao, an expert on US policy in Asia at the Chinese Institute for International Studies, a think tank linked to the Foreign Ministry in Beijing.[/size]

[size=5]The Chinese government has not yet reached a final judgment on the US policy of rebalancing its security emphasis toward the Asia-Pacific region, Chinese scholars say, nor has it developed a strategy to deal with it.[/size]

[size=5]“They tell us that rebalancing is not aimed at containing or encircling China and we would like to believe it,” says Dr. Liu.[/size]

[size=5]But officials have expressed serious reservations. “The United States must … convince China … that there is no gap between its policy statements on China and its true intentions,” Deputy Foreign Minister Cui Tiankai wrote in an article earlier this year.[/size]

http://www.csmonitor.com/World/Asia-Pacific/2012/1116/How-China-views-Obama-s-trip-to-Myanmar

  • தொடங்கியவர்

obama.jpg

[size=5]சிங்களம் ஒரு நாள் கொடுத்த மரியாதை [/size]

  • தொடங்கியவர்

[size=4]வரும் நாட்களில் ஒபாமா மியான்மார் / பர்மா செல்லவுள்ளார். [/size]

[size=1][size=4]இந்த நாட்டின் மீது பூகோள ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சீனா இந்தியாவை மீறி நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தியது. [/size][/size]

[size=5]தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் இந்தியாவின் தலையீட்டை ஊக்குவிக்கும் அமெரிக்கா[/size]

[size=4]இந்தியா, சீனா ஆகியன மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களின் செல்வாக்கைப் பெற்றுக் கொள்வதற்கு போட்டி போடும் அதேவேளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் மியன்மார் மீதான தனது பிடியினை சற்றுத் தளர்த்தி உள்ளது என்பது முக்கியமானதாகும்.[/size]

[size=4]கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களின் கொடுமையாலும், ஜனநாயக விதி முறைகேட்டிற்காகவும், அணுஆய்வு நடவடிக்கைகளின் செயற்பாட்டிற்காகவும் உலகின் "தீய' நாடுகள் என கியூபா, சிம்பாப்வே, வடகொரியா என்ற வரிசையில் மியன்மõரையும் வரிசையிட்டு வந்த அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் அண்மையில் நேரடியாக மியன்மாருடன் பேச்சுகள் நடாத்த தீர்மானித்துள்ளதாக கூறுகின்றது.[/size]

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=9572:2011-11-08-00-32-53&catid=293:article&Itemid=542

  • தொடங்கியவர்

[size=5]The trip to Thailand, Myanmar and Cambodia should give President Obama a chance to expand on an approach to Asia that has been seen as too security-oriented at the expense of trade and economic matters. When he announced his pivot to Asia in 2011, it was a sign that the United States was not ceding anything to China. [/size]

[size=5]Since then, most of the attention has been on expanded military cooperation, including an agreement to base 2,500 Marines in Australia. The administration also promised to deploy 60 percent of its naval forces in the Pacific by 2020, up from about 50 percent today. The Washington Post reported on Friday that the Pentagon is training a counterterrorism battalion in Cambodia, though that country has not faced a serious militant threat in nearly a decade.[/size]

http://www.nytimes.com/2012/11/17/opinion/president-obama-goes-to-asia.html?hp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.