Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tamil-Daily-News-Paper_75582087040.jpg

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்.

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை 11 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.

சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

கடந்த 1937ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி சேலம் மாவட்டம் பூலாவாரியில் பிறந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் கடந்த 1957ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 1958ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை பூலாவாரி ஊராட்சி தலைவராக இருந்தார். அதன் பிறகு அவர் 1970-76ல் பஞ்சாய்தது யூனியன் தலைவராக இருந்தார். பின்னர் 1973ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தார்.

1962 முதல் 2011 வரை 6 முறை எம்.எல்.ஏவாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 முதல் 84 வரை மேல்சபை உறுப்பினராகவும் இருந்தார். 4 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

சேலம் திமுக வட்டாரத்தில் பெரிய சக்தியாக இருந்த அவர் 1989ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். பிறகு 1990-91, 96-2001, 2006-2011 ஆகிய காலகட்டகங்களில் வேளாண் அமைச்சராக இருந்தார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சங்ககிரியில் அதிமுக வேட்பாளர் விஜயலக்ஷ்மியிடம் தோற்றார்.

அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு நில அபகரிப்பு வழக்குகளில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அதை நீதிமன்றம் ரத்து செய்தது. வழக்குகளில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.

அவரது மரணத்தையடுத்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களும் கட்சி கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறும் திமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதே தினத்தில் தான் திமுக மூத்த தலைவரான முரசொலி மாறனும் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தற்ஸ் தமிழ்-

ஆழ்ந்த இரங்கல்கள் .............இவரது ஆன்மா இறைவனுள் இளைப்பாறக்கடவதாக

  • கருத்துக்கள உறவுகள்

சேலம் தி மு க வின் கோட்டை சரிந்தது

ஆழ்ந்த இரங்கல்கள்!

கருணாநிதியின் அசைக்க முடியாத தூண்களில் ஓன்று

தி மு க வின் காப்பரண்களில் ஓன்று

சரிந்தே போனதடா

நாங்கள் எல்லாம் இருக்கும் போது தலைவருக்கு ஏதும் ஆக விட்டிடுவோமா என்று கேட்டாயே?

இன்று தலைவனையே கதிகலங்க வைத்து சென்றாயே.....

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி தெரிவிக்கும் அளவுக்கு இவர் பொருத்தமான ஆள் கிடையாது...

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதி கண்ணீர் விட்டு அழுதார்.

வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டதும் கருணாநிதி உடனடியாக போரூர் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், திமுக மிகப் பெரிய தூணை இழந்து விட்டது. ஒரு போர்ப் படை தளபதியை திமுக இழந்துள்ளது. அவருடன் பழகிய நாட்களை மறக்க முடியாது. என்னில் பாதி அவர். மாறன் மறைந்த அதே நாளில் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டார் என்றார்.

3 நாள் துக்கம்.. கொடிகள் அரை கம்பத்தில்:

அவரது மரணத்தையடுத்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களும் கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறும் திமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை மறைந்தார்.

அவரது மறைவினையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ராமதாஸ் இரங்கல்:

வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி, திமுகவின் மூன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்.

வீரபாண்டியாரின் மறைவு திமுகவுக்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தா.பாண்டியன் இரங்கல்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

திமுக சேலம் மாவட்டச் செயலாளராகவும், மாநிலத் தலைமைக்குழுவின் முக்கிய பொறுப்புக்களிலும், திமுக அமைச்சரவையிலும் தொடர்ந்து அமைச்சராகப் பொறுப்பேற்றுப் பணிபுரிந்து வந்த மூத்த அரசியல்வாதி வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டு, ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தார்க்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

திருமாவளவன்...

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

வீரபாண்டியார் 6 முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் சட்டமேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திறம்பட மக்கள் பணியாற்றியவர். பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்து சாதனைகள் பல புரிந்தவர். அவரை இழந்து வாடும் திராவிட இயக்கத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

Thatstamil

[size=4]ஆழ்ந்த அனுதாபங்கள் [/size]

[size=3] திமுகவின் சேலம் 'தூணாக' விளங்கிய மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் பயணம் சலசலப்புகளோடும் சர்ச்சைகளோடும் பயணித்த ஒன்று...[/size][size=3]

[size=3]திமுகவில் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து பணியாற்றக் கூடிய திமுக தலைவர்கள் சிலர்தான்.. அந்த வகையில் பேராசிரியர் அன்பழகன், கருணாநிதி ஆகியோருக்கு அடுத்த நிலை தலைவராக இருந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். 1957ம் ஆண்டு திமுகவில் உறுப்பினராக இருந்தாலும் 1958ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு பதவியில் இருந்து வந்திருக்கிறார்.[/size][/size]

அரசியல் வாழ்க்கை

[size=3]சேலம் மாவட்டம் பூலாவரி கிராமத்தில் 1937-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ம் நாள் பிறந்த இவர் சேலம் மாவட்ட திமுக மாவட்ட செயலராகவும், திமுகவின் உயர்மட்டக் குழுவிலும் இருந்தார்.[/size]

[size=3]1957-ம் ஆண்டும் முதல் அரசியலில் இருந்த இவர், 1958-ம் ஆண்டு பூலாவரி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962-ம் ஆண்டு முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். அதன்பிறகு, 1967, 1971 என 15 ஆண்டுகள் உறுப்பினராக செயல்பட்ட இவர் மீண்டும் 1989–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், 1996 மற்றும் 2006 ஆண்டு நடைபெற்ற தேர்தல்களிலும் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978-ம் ஆண்டும் முதல் 1984-வரை சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மூன்று முறை விவசாயத்துறை அமைச்சராகவும்(1990–1991, 1996–2001, 2006–2011) இருந்த இவர். 2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட இவர் அங்கு தோல்வியை தழுவினார்.[/size]

[size=3][தொகு][/size]

Edited by யாழ்அன்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி தெரிவிக்கும் அளவுக்கு இவர் பொருத்தமான ஆள் கிடையாது...

ஏன்..?

  • கருத்துக்கள உறவுகள்

சேலம்: வீரபாண்டி ஆறுமுகம் மறைவு திமுகவிற்கு மிகப்பெரிய இழப்பு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மிகப்பெரிய போராளியை திமுக இழந்து தவிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெள்ளிக்கிழமை காலை உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொந்த ஊரான பூலாவரியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு திமுக தலைவர்களும், தொண்டர்களும் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை பூலாவரிக்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீரபாண்டி ஆறுமுகம் வாழ்நாள் முழுவதும் போராளியாக திமுகவுக்கு உழைத்தவர் என்றார். பல சோதனைக் காலங்களில் திமுகவுக்கு அரனாக இருந்தவர். அவரது மறைவின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய சேனாதிபதியை இழந்து விட்டது என்றும் தெரிவித்தார்.

Thatstamil

வீரபாண்டி ஆறுமுகம்... சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக மீடியாவில் பரபரப்பாக சித்தரிக்கப்பட்டாலும், திமுகவுக்காகவும், தான் பிறந்த மாவட்டத்துக்காகவும் உண்மையாக உழைத்தவர் அவர்.

தனது 54 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவர் சந்தித்த சோதனைகள் கொஞ்சமல்ல.

இன்று முரசொலி வெளியிட்டுள்ள வீரபாண்டியாரின் அரசியல் வாழ்க்கை சுவடுகளிலிருந்து சில பகுதிகள்...

1955ஆம் ஆண்டில் திமுகவில் உறுப்பினராக சேர்ந்து, 1956ஆம் ஆண்டு பூலாவாரி கிளைக்கழக செயலாளராக, வட்டக் கழகப் பரிதிநிதியாக, மாவட்டக் கழகப் பிரதிநிதியாக, பின்னர் தலைமைச் செயற்குழு உறுப்பினராக, பொதுக்குழு உறுப்பினராக இருந்து 1974ஆம் ஆண்டு முதல் சேலம் மாவட்டக் கழகச் செயலாளராகப் பொறுப்பேற்று, தொடர்ந்து 38 ஆண்டு காலமாக திமுகவில் பணியாற்றி வந்த வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், சேலம் மாவட்டம், பூலாவரியில் சோலை - சின்னம்மாள் தம்பதியினருக்கு மகனாக 26.01.1939ஆம் ஆண்டு பிறந்தார்.

1963ல் அண்ணா தலைமையில் நடைபெற்ற விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று மூன்று மாத சிறைவாசம் கோவை சிறையிலும், அரசு அலுவலகங்களில் இந்தி கட்டாயமாக்கப்படுவதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று மூன்று மாத சிறைவாசம் கோவை சிறையிலும், 1981, 1985, 1987 ஆகிய ஆண்டுகளில் இலங்கைத் தமிழர்களுக்காகவும் 1986ல் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் என திமுக அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் தலைமையேற்று கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர்.

1976ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள் தனது மூத்த மகள் மகேஸ்வரியின் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து முடிந்த சற்று நேரத்திற்குள்ளாக இவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பல்வேறு வழக்குகளில் சேலம் சிறையில் வைக்கப்பட்டார். ஆறுமாத காலம் சேலம் சிறையிலும், பின்னர் எட்டுமாத காலம் மதுரை சிறைக்கும் மாற்றப்பட்டார்.

கையில் விலங்குச் சங்கிலி

சேலம் சிறையில் இருந்தபோது மத்திய உளவுத்துறையும், தமிழக காவல்துறையும், வருமான வரித்துறை உயர் அதிகாரிகளும் இவரை அழைத்து திமுக தலைவர் கலைஞர் குறித்து பொய்யான வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தினர். அதற்கு இவர் ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் சேலம் சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார்.

அப்போது சேலம் சிறைச்சாலையில் இருந்து மதுரை சிறைச்சாலை வரை கையில் விலங்கு மாட்டி, அமர்கின்ற இருக்கைப் பலகையில் விலங்குச் சங்கிலியைப் பூட்டி வைத்தார்கள். பிறகு இவர் மீது போடப்பட்ட பல்வேறு வழக்குகளுக்கு மதுரையில் இருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கிறபோதெல்லாம் இவரை கையில் விலங்குச் சங்கிலி போட்டே அழைத்துச் சென்றனர்.

1976ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள் வீரபாண்டி ஆறுமுகம் மூத்த மகள் மகேஸ்வரியின் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து முடிந்த சற்று நேரத்திற்குள்ளாக வீரபாண்டி ஆறுமுகம் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தாயார் மீது சாராய வழக்கு..

வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் கைது செய்து சிறையில் இருந்தபோது, புதுமணத் தம்பதிகளான இவரது மகள் மகேஸ்வரி மற்றும் மருமகன் காசி ஆகியோரை விசாரணைக்கென துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று வாரக்கணக்கில் வைத்து துன்புறுத்தினார்கள்.

அதோடு, இவரது தாயார் சின்னம்மாள் சாராயம் விற்றுக் கொண்டிருந்தார் என அவருடைய தலைக்கு மேல் சாராயத்தை வைத்து ஐந்து கிலோ மீட்டர் நடத்தியே அழைத்துச் சென்று பொய் வழக்கு போட்டனர்.

மனைவியை சித்திரவதை செய்த போலீஸ்

இவரது மனைவி அரங்கநாயகியை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மாதக் கணக்கில் வைத்து சித்திரவதை செய்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது போடப்பட்ட வழக்கின் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று கூறி, இவருடைய சகோதரி பாப்பாத்தியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, இவருடைய வீட்டிற்கு யாரும் வரக்கூடாது என்று காவல்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வந்தவர்களை விரட்டியதோடு, அதையும் மீறி வீட்டிற்கு வந்தவர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மத்திய அரசு சேலத்தில் இரயில்வே கோட்டம் அமைக்கப்படும் என்று முதலில் அறிவித்து பின்னர் அதனை தவிர்க்க முடிவெடுத்தபோது, மத்திய அரசு அறிவித்தவாறு சேலம் கோட்டம் அமைத்தே தீர வேண்டும் என வலியுறுத்தி, இரயில் நிறுத்தப் போராட்த்தை இவர் தலைமையேற்று நடத்திய பின்னரே சேலம் இரயில்வே கோட்டம் அறிவிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டது.

இவரது கொள்கைப் பிடிப்பினையும், திமுகவுக்கு உரமூட்டும் உழைப்பினையும் பாராட்டிடும் வகையில் திமுக சார்பில் 20.09.2012 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இவருக்கு திமுக தலைவர் கலைஞர் பெரியார் விருதினை வழங்கிச் சிறப்பு செய்தார்.

Thatstamil

[size=4]ஆழ்ந்த அனுதாபங்கள் ![/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.