Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் அகதிக் கோரிக்கையா? ஆயிரம் முறை யோசித்தே முடிவெடுங்கள்!

Featured Replies

[size=3][size=4]ஒரு காலத்தில் அகதிகளின் சொர்க்கபுரியாக, மனிதாபிமானம் நிறைந்த அன்பால் உபசரிக்கும் ஒரு நாடாகத் திகழ்ந்த கனடாவின் இன்றைய அகதியாளர் தொடர்பான கொள்கை மிகவும் கடுமையானதொன்றாகவும், அகதிகளிற்கான வசதிகள் பலதை மறுப்பதாகவும் இருக்கின்றது.[/size][/size]

[size=3][size=4]கடந்த காலங்களில் ஒரு அகதிக்கோரிக்கையாளர் சமூகநல உதவிகளைப் பெறுவதுடன், அவரது அகதிக்கோரிக்கை ஏற்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. அத்தோடு அந்த அகதி தனது குடும்பத்தினரை வரவழைப்பது கூட மிகச் சுலபமாக இருந்தது. இப்போதோ எல்லாமே தலைகீழ்.[/size][/size]

[size=3][size=4]இந்தப் புதிய கட்டுப்பாடுகள் இந்த வருடமே நடைமுறைக்கு வந்துள்ளதால் இனிவரும் அகதிகளிற்கே பல தலையிடிகள் காத்திருக்கின்றன.[/size][/size]

[size=3][size=4]2013ம் ஆண்டில் உள்வாங்கப்படும் குடிவரவாளர்களில் அகதிகளின் தொகையான 265.000 பேரில் அங்கீகரிக்கப்பட்டு உள்வாங்கப்படுவோர் தொகை 9,000 ஆகும். கடந்த காலங்களில் குறிப்பாக 2009ம் ஆண்டில் 34,000 பேர் அகதிகளாக விண்ணப்பித்தார்கள் என்பதும் 2013ம் ஆண்டுத் தொகையுடன் ஒப்பிடும் போது 75 வீத விழுக்காட்டால் அகதிகள் தொகை குறைக்கப்பட்டுளளது என்பதும் கண்கூடு.[/size][/size]

[size=3][size=4]இனிவரும் காலங்களில் அகதிகளாக வருவோரின் விண்ணப்பங்கள் அதிகூடிய விரைவில் பரிசீலிக்கப்பட்டு அவர்கள் அங்கீகரிக்கப்படாவிட்டால் ஒரு வருட காலத்திற்குள்ளேயே திருப்பியனுப்பும் வகையில் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுவிட்டன.

அத்தோடு சமூக நலக் கொடுப்பணவுகள், வைத்திய நலச் சேவைகள் என்பன கூட ஏறத்தாள ஒட்டுமொத்தமாக மறுக்கப்படுகின்றன.[/size][/size]

[size=3][size=4]ஏதவாது மிகவும் அவசர நோய் அல்லது மற்றையவர்களிற்குப் பயன்படக்கூடிய தொற்றுநோய் உண்டானால் மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்ட வைத்தியசேவைகள் வழங்கப்படுகின்றன. ஆகதியாக வருபவர் 15 நாட்களிற்குள் தனது முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தைத் சமர்ப்பிக்க வேண்டும். 45 நாட்களிற்குள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு விசாரணைகள் இயன்ற விரைவில் பூர்த்தியாக்கப்பட்டுவிடும். அத்தோடு குழுவாக வருபவர்களை 14 நாட்கள் தடுத்து வைக்கவும், நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி மீண்டும் 6 மாதங்கள் தடுத்து வைக்கவும் வகை செய்யப்படுகிறது.[/size][/size]

[size=3][size=4]அத்துடன் இலவச சட்ட உதவிகள் வழங்குவதிலும் பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் செய்யப்படுவதற்கான காரணமே அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பயணுப்புவற்காவே. ஆகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர் 12 மாத காலத்திற்குள் திருப்பியணுப்பப்பட வேண்டும் என்பதில் கனடிய அரசு திடமான முடிவெடுத்து அதைச் செய்து வருகிறது.[/size][/size]

[size=3][size=4]அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் அகதிகள் விசாரணைச் சபையிடம் மீளாய்வு விண்ணப்பத்தை சமர்ப்பிற்பதற்கு பல கடப்பாடுகளை சட்டம் விதித்துள்ளது. எனவே மீளாய்வு என்பது ஒரு பகற்கனவே. ஆனால் சகல அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களும் உச்சநீதிமன்றத்தை நாடலாம். ஆனால் அதற்கான தாராள பணத்தைச் செலவளிக்க வேண்டும்.[/size][/size]

[size=3][size=4]அகதிக்கோரிக்கை ஏற்கப்பட்டவரோ அல்லது விசாரணைகள் மற்றும் மீளாய்வுகளிற்கு விண்ணப்பித்து விசாரணைகள் 6 மாதங்களிற்கு மேலாகச் செல்கின்றன என்ற காரணத்திற்கு தகுதியுடையவர்களோ அவர்களது விசாரணை முடியும் வரை தற்காலிக வேலை செய்யும் அனுமதிப் பத்திரத்திற்கு தகுதியுடையவர்களாகிறார்கள்.[/size][/size]

[size=3][size=4]1999ல் இருந்து 2009ம் ஆண்டு வரையில் கடந்த 10 ஆண்டு காலப்பகுதியிலும் சிறீலங்காவிலிருந்து வருகை தருபவர்களில் அகதிகளாக அங்கீகரிக்கப்படுவது 77வீதமாக இருந்தது. 100 பேரில் 77 பேர் உடணடியாக அங்கீகாரம் பெறுவரும் மிகுதியுள்ளோரில் பெரும்பாண்மையினர் மீளாய்விற்கு விண்ணப்பித்து அகதிகளாக அங்கீகரிக்கப்படுவதும் நடைமுறையிலிருந்தது.[/size][/size]

[size=3][size=4]ஆனால் 2009ம் ஆண்டுப் போரின் முடிவின் பின் இந்தத் தொகை பெருமளவு சரிந்து அங்கீகரிக்கப்படுவோர் தொகை குறைந்து விட்டது.

ஆனால் இப்போது எல்லாமே தலைகீழ்.[/size][/size]

[size=3][size=4]இந்த மாற்றம் அவுஸ்திரேலியாவில் அகதிகள் விவகாரத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தையொத்த கடுமையானதொரு மாற்றம் என்றாலும் இந்த அகதிகள் தொடர்பான மாற்றங்களை வெளியிட்ட கனடியப் பிரதமர், கனடியக் குடிவரவு அமைச்சர், கனடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் அந்த அறிவிப்புக்களை தமிழர்கள் அண்மையில் கனடாவிற்கு வந்த கப்பல்களின் மேல்த்தளத்தில் இருந்தே பத்திரிகையாளர்களிற்கு விடுத்தனர்.[/size][/size]

[size=3][size=4]கப்பல்களையும் அகதிகளையும் குழுமமாக அனுப்பியவர்களிற்கே கனடாவின் இந்த அகதிகள் பற்றிய புரிந்துணர்வு மாற்றத்தின் பெருமை போய்ச் சேரும்.[/size][/size]

[size=3][size=4]மேலே நாங்கள் கூறியவை எமது மொழிநடை, எமது சேர்ப்புக்கள். ஆனால் கனடிய அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் இந்த இணைப்பில் நீங்கள் பூரண விபரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். அழுத்துங்கள் ஆராயுங்கள் தீர்மாணியுங்கள்.

harper-ocean-lady-cp-00204979.jpg[/size][/size]

[size=3][size=4]http://www.canadamirror.com/wp-content/uploads/2012/11/vic-and-jk1.bmp[/size]http://www.canadamir...anada/2180.html[/size]

கனடிய அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் இந்த இணைப்பில் நீங்கள் பூரண விபரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். அழுத்துங்கள் ஆராயுங்கள் தீர்மாணியுங்கள்.

http://www.cic.gc.ca...gees/reform.asp

http://www.cic.gc.ca...ugees/index.asp

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான். என்று கப்பலில் அனுப்பும் முட்டாள்தனத்தைச் செய்தார்களோ, அன்றிலிருந்து எல்லாமே மாற்றப்பட்டு விட்டது. ஒவ்வொரு மனிதனாக வரும்போது அரசாங்கம் அதைப் பெரிய விடயமாக எடுக்கவில்லை. ஆனால் கப்பல் வந்தபிற்பாடு பிரதமரே அதை முக்கியவிடயமாகப் பார்க்கின்றார்.

அவுஸ்ரேலியாவில் உள்ள செயல்களும் இன்றைக்கு அங்கு குடியேற முடியாத நிலைமையைத் தான் செய்கின்றது. கப்பலில் போவதும், பிற்பாடு திரும்பி வருவதும் வெறும் பிழைப்புக்காகத் தான் குடியேற முயற்சிகக்pன்றார்களே தவிர, உயிர் ஆபத்து காரணம் அல்ல என்ற செய்தியையே அவுஸ்ரேலியாவுக்குச் சொல்கின்றது. இதன் பின்ணனியில் சிங்கள அரசு இருக்கலாம்.

நவ்லி தீவில் அடிப்படை வசதி இல்லை என்றால் கூட பொறுத்துத் தான் ஆக வேண்டும். ஏனென்றால் நீங்கள் சொல்கின்ற காரணம் அகதி.. உயிர் ஆபத்து, அவுஸ்ரேலியா அரசாங்கம் நீங்கள் உண்மை சொல்கின்றீர்களா, இல்லையா என்பதைப் பரிசோதிக்கின்ற களமாகவே அதைப் பார்க்கின்றது. உண்மையாக உயிர் ஆபத்தை எதிர்நோக்குகின்றவன் அங்கே வாழத்தான் பார்ப்பான். ஒரு 6 மாதம், ஒரு வருடம் சமாளிகக் முடியாதா?

கனடாவிற்கு வருகின்றவர்கள் சிலர் அமெரிக்கச் சிறைகள் 1,2 வருடங்கள் இருந்து விட்டுத்தான் வருகின்றார்கள். அங்கே சிறைகளில் எப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதை விட நவ்லித்தீவு எவ்வளவோ பரவாயில்லை.

கப்பலில் வந்தவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக சிலரைக் காட்டிக் கொடுக்கவும் செய்தனர். கனடா அரசு தாய்லாந்திலும் ஆபிரிக்காவிலும் அதை வைத்துத் தான் சோதனைச் செய்தன( அதைப் பற்றி அவர்கள் சில தமிழ் அமைப்புக்களிடம் பகிர்ந்து கொண்டனர்)

நீங்கள் இப்படிச் செய்கின்ற செயல்களால், உங்களுக்குப் பிறகு உயிராபத்தை எதிர்நோக்குகின்றவன் பாதிக்கப்படுகின்றான் என்பதையும் மறவாதீர்கள். சில கஸ்டங்கள், சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டால் அதைச் சமாளித்து வெற்றி பெறுங்கள். அதைக் கண்டு நீங்கள் ஓடுவதால், பாதிக்கப்படுவது நீங்கள் மட்டுமல்ல..

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலில் வந்த 3 வீதத்துக்கும் குறைவானவர்களுக்கே அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மிகுதி ஆட்களின் வழக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அல்லது நிலுவையில் உள்ளது. நிராகரிக்கப்பட்டவர்களுக்கு என்னமும் 2 தடவைகள், அல்லது மனிதஉரிமை மனு சமர்ப்பிக்கலாம் என்பதால் இப்போதும் வசிக்கின்றார்கள். ஆனால் அவை எவ்வளவு துாரம் வெற்றியைத்தரும் என்று தெரியாது. வேணுமென்றால் காலத்தை இழுக்கலாம். ஆனால் எதுவுமே செய்ய முடியாது. நாட்டை விட்டு வெளியேற முடியாது. யாரையும் அழைக்க முடியாது. கல்வி நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் உண்டு...

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகள் தொடர்பான மாற்றங்களை வெளியிட்ட கனடியப் பிரதமர், கனடியக் குடிவரவு அமைச்சர், கனடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் அந்த அறிவிப்புக்களை தமிழர்கள் அண்மையில் கனடாவிற்கு வந்த கப்பல்களின் மேல்த்தளத்தில் இருந்தே பத்திரிகையாளர்களிற்கு விடுத்தனர்.

[size=3][size=4]கப்பல்களையும் அகதிகளையும் குழுமமாக அனுப்பியவர்களிற்கே கனடாவின் இந்த அகதிகள் பற்றிய புரிந்துணர்வு மாற்றத்தின் பெருமை போய்ச் சேரும்.[/size][/size]

உலகில் பல நாடுகளில் யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் அகதிகளையும் இந்த கப்பல் பாரதூரமாகப் பாதித்துள்ளது. கனேடிய மக்களின் மிக மோசமான வெறுப்பைச் சம்பாதித்த சம்பவம் இது. இந்தக் கப்பல் தொடர்பான செய்திகளில் இடப்பட்ட பின்னூட்டங்கள் மிக வெறுப்பை பதிவுசெய்தது. கப்பலில் இவ்வளவு தொகையாக வந்தது ஒன்று இரண்டாவது இங்கே கனேடிய அரசு கப்பலில் உள்ளவர்கள் சிலர் செத்திருக்கலாம் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் பசியில் இருக்கலாம் என்று பல்வேறு யூகங்களை போட்டு அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வாரக்கணக்காக இப்படியான செய்திகள் வந்த கடசியில் கப்பல் மிக முன் ஏற்பாட்டுடன் வந்தது மிக அதிர்ச்சி. அதை விட வந்தவர்கள் தம் ஆழுக்கு 35 -40 ஆயிரம் கனேடி டாலர் கொடுத்துதான் வந்ததாக பேட்டி கொடுத்ததும் மக்களாலோ அல்லது அரசாலோ இதை அகதிகள் வருகையாக ஏற்கமுடியாது என்பது உண்மையே. இது உண்மையான அகதிகளையும் சேர்த்துப் பாதித்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அகதிகளுக்கும் இதற்கு முன் வந்த அகதிகளுக்கும் என்ன வித்தியாசம்? அன்று தனித்தனியாக வந்தார்கள்.. இன்று குழுமமாக வந்துவிட்டார்கள்.. தார்மீக ரீதியில் எந்த மாற்றமும் இல்லை.

உண்மையான அச்சுறுத்தல் காரணமாக வந்தவர்கள் ஒரு பகுதியினரே.. மீதமுள்ளவர்கள் பொருளாதார அகதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம். ஆனால் அரசு உங்களிடம் மாதம் மாதம் 100 டொலர் வாங்கும்போது தெரியாத வலி, வருட இறுதியில் 1200 டொலராக வாங்கும்போது இருக்கின்றதல்லவா? எல்லோரும் வாழ வேண்டும் என்பதை இப்படிக் கெடுப்பது சரியான வழியல்ல.

இரண்டாவது ஒரு மக்கள் கூட்டம் குழுவாக வருகின்றார்கள் என்றால் , ஒரு அமைப்புச் சார்பாகவே வருகின்றார்கள் என்பதும், அவர்களை யாரோ ஒழுங்கமைத்துத் திட்டமிட்டு அனுப்புகின்றார்கள் என்ற சந்தேகத்தை அரசு பெறுகின்றது. அதைத் தான் இந்தச் சட்டங்களும் சொல்கின்றன. கூட்டாக வந்தால் சிறை கிடைக்கலாம்.

உயிர் ஆபத்து என்று வருகின்றவர்கள் எப்படிக் குழுவாகச் சேர்ந்து வரமுடியும் என்பது அரச வாதம். அதுவும் ஒருவகையில் சரியான கேள்வியுமாகும்

மற்றும்படி எந்த நிலமையில் வருகின்றார்கள், உண்மையானவர்களா, பொய்யா என்பது பற்றி விமர்சிக்கப் போவதில்லை. அது எங்களின் சமூகம் என்பதால்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது உண்மைதான்.. இனிமேல் வரப்போகிறவர்களுக்குப் பாதிப்பு. இந்தக் கப்பல் விடயத்தை ஹார்ப்பர் அரசு ஒரு அரசியலாக்கிவிட்டது.

ஆனால் வந்த அகதிகளில் பலர் தாயகத்திற்குச் சுற்றுலா சென்று வருகிறார்கள். இவர்களால் பல கொள்கை மாற்றங்களும் ஏற்பட்டுவிட்டன.

ஆக‌, உண்மைத்த‌ன்மை இல்லாத‌ என்த‌க் காரிய‌மும் நீண்ட‌ நாட்க‌ளுக்கு நிலைக்காது என்ப‌த‌ற்கு இது ஒரு ந‌ல்ல‌ உதார‌ண‌ம்.

நீங்கள் சொல்வது உண்மைதான்.. இனிமேல் வரப்போகிறவர்களுக்குப் பாதிப்பு. இந்தக் கப்பல் விடயத்தை ஹார்ப்பர் அரசு ஒரு அரசியலாக்கிவிட்டது.

ஆனால் வந்த அகதிகளில் பலர் தாயகத்திற்குச் சுற்றுலா சென்று வருகிறார்கள். இவர்களால் பல கொள்கை மாற்றங்களும் ஏற்பட்டுவிட்டன.

ஆக‌, உண்மைத்த‌ன்மை இல்லாத‌ என்த‌க் காரிய‌மும் நீண்ட‌ நாட்க‌ளுக்கு நிலைக்காது என்ப‌த‌ற்கு இது ஒரு ந‌ல்ல‌ உதார‌ண‌ம்.

புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தான் சுற்றுலா சென்று வந்தார்கள் ஆனால் அரசால் பாதிக்கப்பட்டவர்கள் 20 30 வருடமாக இலங்கை செல்லவில்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தான் சுற்றுலா சென்று வந்தார்கள் ஆனால் அரசால் பாதிக்கப்பட்டவர்கள் 20 30 வருடமாக இலங்கை செல்லவில்லை. :rolleyes:

அதுசரி.. :D எனக்குத் தெரிந்து கனபேர்.. செல்லடி, விமானத் தாக்குதல் என்று எழுதிக் குடுத்தவை.. இப்ப சுற்றுலா போகினம்.. :D

அதுசரி.. இப்ப அதெல்லாம் இல்லைதானே.. போகலாம் தான்.. ஆனால் சிற்றிசன்ஷிப்பையும் கழட்டிக் குடுத்துட்டுப் போனால் இன்னும் நல்லம்.. :D

புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தான் சுற்றுலா சென்று வந்தார்கள் ஆனால் அரசால் பாதிக்கப்பட்டவர்கள் 20 30 வருடமாக இலங்கை செல்லவில்லை. :rolleyes:

உங்களைப் போல எல்லாரையும் நினைக்கக் கூடாது. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.