Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்புத் தமிழ்ச் சங்கம்: வீதிக்கு பெயர் வைப்பதில் இடையூறு

Featured Replies

[size=4] கொழும்புத் தமிழ்ச் சங்கம்: வீதிக்கு பெயர் வைப்பதில் இடையூறு[/size]

[size=4]121126173120_colombo_tamil_sangam_304x171_bbc_nocredit.jpg

கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது 70 ஆண்டுவிழாவை அண்மையில் கொண்டாடியது.

இலங்கையில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள கொழும்பு-6, வெள்ளவத்தை, 57ம் ஒழுங்கைக்கு 'கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஒழுங்கை' என்று பெயர்மாற்றுவதற்கு மேல்மாகாண முதலமைச்சர் ஏற்கனவே வழங்கியிருந்த அனுமதியை இறுதி நேரத்தில் வாபஸ் பெற்றுக்கொண்டமை தவறான நடவடிக்கை என்று மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா கூறுகிறார்.

'முதலமைச்சருக்கு முடிவை மாற்ற அதிகாரமில்லை': அலவி மௌலானாவீதியின் பெயரை மாற்றுவதற்கு ஏற்கனவே வழங்கிய அனுமதியை மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனக்கு அறிவிக்காமலேயே மீளப்பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அவர் ஏற்கனவே வழங்கிய அங்கீகாரத்தை மீளப்பெற்றுக்கொண்டதன் பின்னணியில் இனவாத விஷமிகளே இருப்பதாகவும் பிபிசி தமிழோசைக்கு ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார்.

கொழும்புத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள வீதியின் பெயரை மாற்றுவது தொடர்பான தீர்மானம் கொழும்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டு, சட்டப்படி கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் எல்லாம் பின்பற்றப்பட்டு, அதற்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சரின் அனுமதிகளையும் பெற்று இறுதியாக வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகிவிட்டதாக கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வேலணை வேணியன் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

சுமார் 70 ஆண்டுகளாக கொழும்புத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள குறித்த வீதியின் பெயர்சூட்டும் விழா நடக்க இருந்த இறுதி சந்தர்ப்பத்தில் கொழும்பு மாநகர மேயருக்கு கடிதம் அனுப்பியுள்ள மாகாண சபை முதலமைச்சர், காரணம் எதுவும் கூறாமல், முன்னர் வழங்கிய சம்மதத்தை மீளப்பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் மாநகர மேயர் உள்ளிட்ட தரப்பினர் மத்திய அரசின் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கூறினார்.

இதேவேளை, இந்தப் பிரச்சனையில் முதலமைச்சர் இறுதிக்கட்டத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டது ஏன் என்பதை அறிவதற்காக அவருடன் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.

http://www.bbc.co.uk...ilchangam.shtml[/size]

Edited by BLUE BIRD

27112012-md-hr-2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வட‌ கிழக்கில் உள்ள தமிழ் பெயர் எல்லாம் சிங்களமாய் மாறுது.முதலில் அதை தடுப்போம் பிறகு கொழும்பை பார்ப்போம் <_<

வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையின் கடைசி சிறு பகுதியே 57வது ஒழுங்கை.

சிறு துண்டாயினும் அதற்கு தமிழ் சங்க வீதி என்று பெயர் வைப்பது பொருத்தமானதே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.