Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 1

Featured Replies

வலைப்பதிவில் ஈழப்பிரச்சனை பற்றி எழுதும் இந்திய தமிழ் அன்பர்களுள் எமது பிரச்சனை பற்றி மிக தெளிவான அறிவோடும், ஆக்க பூர்வமாகவும் விமர்சிக்கும் ஒருவர் தமிழ்சசி.

ஈழம் குறித்தப் பதிவினை சில மாதங்களுக்கு முன்பு எழுதிய பொழுது, இவ்வாறு கூறியிருந்தேன்.

உலக நாடுகளின் ஆதரவை இரு குழுக்களுமே தற்பொழுது பெற வேண்டிய நிலையில் இருக்கின்றனர். கடந்த காலங்களில் Advantage - srilanka என்ற நிலை தற்பொழுது மாறியிருக்கிறது. புலிகள் எப்படி தங்களை சமாதானத்தை விரும்பும் குழுவாக வெளிப்படுத்த நினைக்கிறார்களோ அது போல ராஜபக்ஷ தான் சிங்கள தேசியவாதத்தை மட்டுமே முன்னிறுத்த வில்லை, தமிழர்களுக்கு கூட்டாச்சி உரிமைகளை கொடுப்பதிலும் தனக்கு ஆர்வமுள்ளது என்பதை தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தியாக வேண்டிய நிலையில் உள்ளார்

இரு நாடுகளின் ராஜதந்திர யுத்தம் பற்றி அந்தப் பதிவில் எழுதியிருந்தேன். இம் முறையும் இந்த ராஜதந்திர யுத்தத்தில் புலிகள் தோற்று தான் உள்ளனர். போர்க் களத்திற்கும், சமாதானக் கால செயல்பாடுகளுக்கும் இடையே இருக்கும் பெருத்த வேறுபாட்டினை இந்த நீண்ட சமாதானக் காலத்தில் (மறைமுக போர்க் காலம் என்று தான் சொல்ல வேண்டும்) புலிகள் உணர்ந்திருப்பார்கள். போர்க் காலங்களை விட இந்தச் சமாதானக் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு நிறைய பின்னடைவுகள் நேர்திருக்கின்றன என்று சொல்லலாம்.

சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கிய காலக்கட்டத்தை நோக்கிப் பின்நோக்கி செல்லும் பொழுது சிறீலங்கா அரசு எந்த நிலையில் இருந்தது என்பதையும், தற்பொழுது எந்த நிலையில் உள்ளது என்பதையும் கவனிக்க முடியும்.

யானையிறவு போரில் அரசு படைகள் தோற்று விட்ட சூழலில் தான் சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கியது. இராணுவ பலத்தில் புலிகளின் கை ஓங்கியிருந்தது. சிறீலங்கா அரசின் பொருளாதாரம் கடும் பின்னடைவைச் சந்தித்து இருந்தது. மிகவும் வலுவாக 7% பொருளாதார வளர்ச்சியுடன் ஒரு காலத்தில் முன்னேறிக் கொண்டிருந்த சிறீலங்கா, 2001ல் வெறும் 1.5% பொருளாதார வளர்ச்சி என்ற நிலைக்குச் சரிவடைந்து மிகக் கடுமையான நிதி நெருக்கடிகளையும் எதிர்கொண்டு இருந்தது. திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் வெளிநாட்டுக் கடன், மிகக் குறைந்த வருவாய், எந்த நலத்திட்டத்தையும் செய்ய முடியாத நிதி நிலை என ஒரு Bankrupt நிலைக்கு இலங்கைப் பொருளாதாரம் சென்று கொண்டிருந்தது. அன்றைய சூழலில் போர் தொடர்ந்திருந்தால் இன்று இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கும். இலங்கை சீர்குலைந்து போய் இருக்கலாம். ( இதற்கு நேர்மாறாக உலக நாடுகள் இலங்கைக்கு உதவி செய்திருக்கலாம் என்று நம்புவதற்கும் இடமுள்ளது. ஆனாலும் இவை யூகங்களே ).

2001-2005க்கு இடையேயான சமாதானக் காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் ஓரளவிற்கு தன்னுடைய ப்ழைய நிலையை மீட்டு எடுத்து விட்டது. கடந்த ஆண்டின் நிலவரப் படி சுமார் 5% பொருளாதார வளர்ச்சியை இலங்கை அடைந்து இருக்கிறது. இராணுவ ரீதியிலும், ஆயுத தளவாடங்களிலும் அரசின் பலம் அதிகரித்து உள்ளது. 2005ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 8% அதிகமாக இரணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுதங்களைத் தவிர இராணுவ வீரர்களின் பலம் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக 2001ல் 10,000மாக இருந்த விமானப் படை கடந்த ஆண்டு நிலவரப் படி சுமார் 18,000மாக உயர்ந்துள்ளது.

புலிகளின் இலகு ரக விமானங்கள் குறித்து எழுந்த விமர்சனம் அளவுக்கு இலங்கை அரசின் விமானப் படையின் பலமோ, பலமாக அதிகரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலம் குறித்தோ எதுவுமே எழுதப்படவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இலங்கை அரசு மேற்கொண்ட சில strategic நடவடிக்கைகள் புலிகளின் பலத்தை வெகுவாக குறைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக இரண்டு நடவடிக்கைகளைச் சொல்லலாம்

புலிகளின் அதே கொரில்லா உத்தியைப் பின்பற்றி புலிகளை தாக்குவது. இதனைச் செய்ய கருணா பிரச்சனையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது.

கருணா பிரச்சனை மூலம் புலிகளை வடக்கு, கிழக்கு எனப் பிளவுப் படுத்தலாம் என்பதாக முதலில் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்து, கருணா "இந்தியாவிலோ", வேறு ஏதோ "ஒரு நாட்டிலோ" பாதுகாப்பாக தஞ்சம் அடைந்து விட்டாலும் அந்தப் பிரச்சனையை அப்படியே இலங்கையின் உளவுப் பிரிவு தக்கவைத்துக் கொண்டது.

கருணா என்ற கவசத்தை அணிந்து புலிகளை திடீரென்று தாக்குவது என்ற அரசு உளவுப் பிரிவின் திட்டம் புலிகளை கடுமையாகப் பாதித்து இருக்கிறது. புலிகளின் முக்கியமான பிரமுகர்கள், இராணுவ தளபதிகள் இவர்களைக் குறிவைத்து நடந்து வரும் இந்தத் தாக்குதல் தமிழ் ஈழப் போராட்டத்தின் போர் சூழ்நிலையில் மோசமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கொள்சல்யன் தொடங்கி, கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட ரமணன் வரை புலிகளின் பல முக்கியமான தளபதிகள் இந்த சமாதானக் காலத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இன்று ஒரு அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளை புலிகளும் எதிர்கொண்டு இருக்கின்றனர். ஏனெனில் அவர்களும் ஒரு தனி அரசாங்கத்தை தமிழீழத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கொரில்லா நிலையில் இருந்து மாறுதல் பெற்று ஒரு தனி அரசாங்கத்தை அவர்கள் நிறுவி நடத்தி வரும் சூழ்நிலையில் புலிகளின் முக்கிய பிரமுகர்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல் தான் இலங்கையில் தற்பொழுது தொடர்ந்து நடந்து வரும் சண்டைகளுக்கு முக்கிய காரணம்.

மற்றொரு விடயம், புலிகளின் சார்பு நிலையில் இருந்த சில சிறந்த சிந்தனையாளர்களை அகற்றுவது, அதன் மூலம் அங்கு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துவது.

சமாதானக் காலத்தில், பேச்சுவார்த்தை போன்ற சூழ்நிலை நிலவும் பொழுது இந்தப் பிரச்சனையை சிறந்த வகையில் வெளிப்படுத்தும் சிறந்த சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பிற சமூகத்தினரும் மதிக்கும் எழுத்தாளர்கள் ஒரு சமூகத்தின் முக்கியமான ஆயுதம் என்றே அறியப்படுகிறார்கள். அவ்வாறு ஒரு முகத்தை தமிழ் ஈழ தமிழ் சமுதாயத்தில் வெளிப்படுத்தியவர் "தாரகி" என்று அழைக்கப்படும் தருமரத்தினம் சிவராம்.

தாரகி சிறந்தப் பத்திரிக்கையாளர், இராணுவ ஆய்வாளர் மற்றும் சிந்தனையாளர். இவரை கொழும்புவில் "அதிகப் பாதுகாப்பு மிக்கப் பகுதியாக" அறியப்பட்ட ஒரு பகுதியில் "சிறீலங்கா அரசு உளவுப்பிரிவினர்" கொன்றனர். இதன் மூலம் தமிழ் ஈழ சமுதாயத்தின் உணர்வுகளை வெளிப்படுத்திய ஒரு சிறந்த சிந்தனையாளரை அகற்றி விட்டனர்.

சமீபத்தில் கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தை உள்ளிட்ட தினமும் கொல்லப்படும் எத்தனையோ அப்பாவி மக்கள், திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி மாணவர்கள், ஜோசப் பரராஜசிங்கம், கொளசல்யன் தொடங்கி கடந்த மாதம் ரமணன் வரை சுட்டுகொல்லப்பட்ட சில முக்கியமான புலிகள் பிரமுகர்கள் எனப் பல "பயங்கரவாத" நடவடிக்கைகளை மேற்க்கொண்டிருந்த சிறீலங்கா அரசு மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் பலச் செயல்களும் இதையொட்டியே இருந்தன. லஷ்மண் கதிர்காமர் கொல்லப்பட்டதற்காக ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியங்களில் பயணம் செய்ய தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த இந்தத் தடைக்கு நியாயமான காரணம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. படுகொலைகள் ஒரு பயங்கரவாதச் செயல் என்ற வகையில் புலிகளின் அரசியல் படுகொலைகள் கண்டனத்திற்குரியது.

அதே நேரத்தில் "வரலாற்றில் புலிகள் ரத்தக்கறையை ஏற்படுத்தியிருப்பதாக" கருதும் பல நாடுகள், அமைப்புகள், சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தனி நபர்கள் புலிகள் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள அதே நியாயமான காரணங்கள் சிறீலங்கா அரசுக்கும் பொருந்தும் என்பதை எப்படி மறக்கிறார்கள்/மறைக்கிறார்கள் என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

"தாரகி" ஒரு அரசாங்கத்தின் அமைச்சர் அல்ல என்பதைத் தவிர ஒரு சிறந்த சிந்தனையாளராக, பத்திரிக்கையாளராக, சமூக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக வெளிப்பட்டுள்ளார். அவர் கொல்லப்பட்டது, பாரளுமன்ற உறுப்பினராக இருந்த பரராஜசிங்கம் கொல்லப்பட்டது, திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டது (அதனைச் உறுதிச் செய்த SLMM) எனப் பலச் சம்பவங்கள் நடைபெற்றப் பின்னர் சிறீலங்கா அரசு மீது தடை விதிக்க பல நியாயமான காரணங்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு இல்லாமல் அதனை வாய்மூடி மொளனமாக பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள், அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் குறித்த அவநம்பிக்கை எழுகிறது. சிறீலங்கா அரசுப் படைகள் மேற்கொண்ட பல அத்துமீறல்களில் "சிலவற்றையேனும்" காரணமாகக் கொண்டு புலிகள் மீது விதிக்கப்பட்ட அதே அளவிளான தடைகள் சிறீலங்கா அரசு மீதும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காமல் போனதன் காரணம் என்னவென்று எனக்கு தெரிந்தே இருப்பதால் இதன் அரசியல் என்னை வேதனைப்படுத்துகிறது/ எரிச்சல்படுத்துகிறது.

இந்தப் பிரச்சனைக்கு எத்தகைய தீர்வு தான் உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

புகைந்துக் கொண்டிருந்த இந்தப் பிரச்சனை விஸ்ரூபம் எடுத்தது கடந்த ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றப் பிறகு தான். மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற காலத்தில் நிலவியச் சூழ்நிலை கவனிக்கத்தக்கது. புலிகள் "ஆதரவு", "எதிர்ப்பு" என்ற உணர்வுகளை விலக்கிப் பார்க்கும் பலருக்கும் அப்பொழுது நிலவிய சூழ்நிலை தெளிவாகப் புரியும்.

மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற சூழ்நிலையில் நானும் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்குப் பிறகு எழுதிய சூழ்நிலையிலும் தமிழ் ஈழப் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதாகவே நான் நம்பினேன். முக்கியமான கட்டம் என்பது "தமிழீழம்" என்ற தனி நாட்டை நோக்கிய ஒரு முக்கியமான முன்னேற்றம், அல்லது சிறீலங்கா அரசு போர் நோக்கி நகரும் தீவிரம் இவை ஏதேனும் ஒன்று என்ற ரீதியில் தான் எனது பதிவில் அதனைக் குறிப்பிட்டிருந்தேன்.

அந்தக் காலக்கட்டத்தில் பல ஊடகங்களின் செய்தியை நோக்கினால், குறிப்பாக சிறீலங்காவில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" போன்ற ஆங்கில நாளிதழ்கள், சிறீலங்காவிற்கு வெளியே இருக்கும் சிறீலங்கா அரசு சார்பு ஏடுகளான "ஹிந்து" போன்ற நாளிதழ்களை கவனித்து வருபவர்களுக்கு இந் நிலை தெளிவாகப் புரிந்திருக்கும்.

புலிகளுக்கு உலக நாடுகள் மத்தியில் கிடைக்கும் அங்கீகாரம் "புலிகள்" எதிர்ப்பாளர்களை கவலை கொள்ள வைத்திருந்தது. மஹிந்த ராஜபக்ஷ போன்ற சிங்கள இனவாத தலைவர்கள் பதவியேற்றிருக்கும் சூழ்நிலையில் புலிகளின் நிலைக்கு பலம் சேர்ந்திருந்தச் சூழலில்

தான் இந்தப் போக்கு தடம் மாறியது.

பல நாட்டு உளவு அமைப்புகள், Strategists போன்றவர்கள் இணைந்து அமைத்த வியூகத்தில் புலிகள் சிக்கிக் கொண்டனர். இன்று பல நாடுகளின் தடை நோக்கி அவர்கள் செல்ல காரணமாக அமைந்ததும் இந்த வியூகச் சிக்கல் தான். வழக்கம் போல தங்களுடைய வியூகத்தை தெளிவாக அமைக்காமலேயே, நிறுவனப்படுத்தப்பட்ட நாடு என்ற ஒரே முகமூடியைக் கொண்டு இந்தப் பிரச்சனையை தங்களுக்குச் சாதகமாக சிறீலங்கா அரசு பயன்படுத்திக் கொண்டது.

முதலில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த "தமிழ் தேசம்" என்பதை கேள்விக்குள்ளாக்குவது, புலிகள் அனைத்து தமிழ் மக்களுக்குமான பிரதிநிகள் அல்ல என்று நிலை நிறுத்துவது என்ற போக்கில் தான் அரசின் உத்தி இருந்தது. அதற்கு அவர்கள் உருவாக்கிய கதாப்பாத்திரம் தான் "கருணா". "ஹிந்து" போன்ற சிறீலங்கா அரசு சார்பு ஊடகங்களில் "கிழக்கு மக்களின்" உரிமைகள் குறித்து தொடர்ந்து எழுதப்படுவதை இங்கே கவனிக்க வேண்டும்.

இவ்வாறு சிறீலங்கா அரசுக்கும், புலிகளுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையே நடக்கும் இந்தச் சதுரங்க ஆட்டத்தில் சிக்கிக் கொண்டவர்கள் திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் இருக்கும் நம்முடைய அப்பாவி தமிழ்ச் சகோதர/சகோதரிகள் என்பது தான் வேதனைப்படுத்தும் உண்மை

சிறீலங்கா அரசு விளையாட தொடங்கிய இந்த சதுரங்க ஆட்டத்தில் புலிகள் எடுத்த எதிர் நிலைப்பாடு குறித்து அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்

நன்றி தமிழ் சசி.

http://thamizhsasi.blogspot.com/2006/06/1.html

  • தொடங்கியவர்

பின்னூட்டம் 1 டி சே தமிழன்

/அதே நேரத்தில் "வரலாற்றில் புலிகள் ரத்தக்கறையை ஏற்படுத்தியிருப்பதாக" கருதும் பல நாடுகள், அமைப்புகள், சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தனி நபர்கள் புலிகள் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள அதே நியாயமான காரணங்கள் சிறீலங்கா அரசுக்கும் பொருந்தும் என்பதை எப்படி மறக்கிறார்கள்/மறைக்கிறார்கள் என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

"தாரகி" ஒரு அரசாங்கத்தின் அமைச்சர் அல்ல என்பதைத் தவிர ஒரு சிறந்த சிந்தனையாளராக, பத்திரிக்கையாளராக, சமூக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக வெளிப்பட்டுள்ளார். அவர் கொல்லப்பட்டது, பாரளுமன்ற உறுப்பினராக இருந்த பரராஜசிங்கம் கொல்லப்பட்டது, திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டது (அதனைச் உறுதிச் செய்த SLMM) எனப் பலச் சம்பவங்கள் நடைபெற்றப் பின்னர் சிறீலங்கா அரசு மீது தடை விதிக்க பல நியாயமான காரணங்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு இல்லாமல் அதனை வாய்மூடி மொளனமாக பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள், அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் குறித்த அவநம்பிக்கை எழுகிறது. சிறீலங்கா அரசுப் படைகள் மேற்கொண்ட பல அத்துமீறல்களில் "சிலவற்றையேனும்" காரணமாகக் கொண்டு புலிகள் மீது விதிக்கப்பட்ட அதே அளவிளான தடைகள் சிறீலங்கா அரசு மீதும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காமல் போனதன் காரணம் என்னவென்று எனக்கு தெரிந்தே இருப்பதால் இதன் அரசியல் என்னை வேதனைப்படுத்துகிறது/ எரிச்சல்படுத்துகிறது./

இந்த நிலைதான் எனக்கும் அடிக்கடி வருவது. நல்லதொரு பதிவு. நன்றி சசி.

http://www.elanko.net/pathivu/

பின்னூட்டம் 2 Rose Mary

I agree with you about the current situation and the problems that LTTE has to confront. however i beg to differ on why LTTE lost in the propaganda war when GOSL won. It is partially part of LTTE's lack of efficient representatives and propagandists in the west, and the rest is due to the mere "closed eye" politics of the west (read EU, Canada and USA).

I, you as well any other observer of srilankan politics know Kausalyan's assasination preceded Kadigamar's assasination, and Pararajasingam's assasination preceeded the assisasination attempt on Army top brass Fonseka. Yet, NO governernment on the west nor india gave the equivalent improtance to loss of both sides. there is a sort of supporting 'legitimate GOSL" from the west. If you look the history, even a single state NEVER supported a rebel organization unless the particular state gains something out of the rebellion for itself. The words, "democracy", "terrorism" and the pharses in the simliar line get spawned according to 'what is the best for us.' Hence, none can completely blame LTTE for the loss of propaganda war.

Yet, LTTE has a venue that it has not fully explored till this moment. identifying the interests of these countries or at least some of the powerful people in these countries and align themselves with their interests. This helps for LTTE. At least Thirumavalavan showed it as a good move, though his party lost in number of seats seats.

LTTE also wants to have a good propaganist firm to promote them in the west. AT least keep the western born spokepersons or prominent figures who can provide the children of the soil face in the west, like Vannessa Redgrave for Chechniyans, and Richard gere for Tibetians.

canadian situation is a little complecated, as the current conservative premier buffon is more eager to mimic his god fearing gay hating conservative US counterfart for his consistuency rather than alligning with GOSL. In EU's recent actions what many did not notice in the hullabulla of banning LTTE is that tightening GOSL with withholding of funds that was already promissed.

In one way, when i look LTTE's survival in the past, I do not think LTTE will loose much finantially, as it may have alternative finantial resources or mode to flow and follow money into its strips.

http://rosemayr.blogspot.com/

பின்னூட்டம் 3 தமிழ் சசி

Rosemary,

உங்களின் கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

தமிழ் ஈழப் பிரச்சனையை உலக நாடுகளிடம் கொண்டு செல்லக் கூடிய ஒரு நபரை, உலக நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்ளக் கூடிய திறமையுடைய ஒருவரை இது வரை புலிகள் உருவாக்கி கொள்ளவில்லை என்பதும் புலிகளின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணம்.

]புலிகளின் ஆலோசகராக அறியப்படும் ஆண்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் போன்றோர் இந்தப் பிரச்சனையை எந்தளவுக்கு பிற நாடுகளிடம் Diplomaticஆக அணுக முடிந்திருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது, தற்பொழுது இருக்கின்ற பெரிய இடைவெளி நமக்கு புரிகிறது.

சமாதானக் காலங்களில் தேவைப்படும் இத்தகைய திறமையுள்ள ஒருவரை எப்படி கண்டறியப் போகிறார்கள். ஏற்கனவே இருக்கும் சிலரை பயன்படுத்திக் கொள்ள முடியுமா ? என்ற கேள்விகள் எழுகின்றன.

சமாதானப் பேச்சுகளில் பங்கேற்கும் குழுவை கவனிக்கும் பொழுது கூட பலர் புலிகள் இயக்கத்தில் இருக்கும் முக்கிய தளபதிகள் தான். இதில் எந்த தவறும் இல்லை என்றாலும் இவர்களால் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை, பிற நாடுகளுடன் உறவினை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றைச் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

சமாதானக் குழு என்பது சில நாட்கள் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் குழு மட்டுமே அல்ல. தொடர்ச்சியாக பிற நாடுகளுடன் நல்லுறவை தொடர்ந்து பராமரிக்க தக்க அளவிலான Logistics அந்தக் குழுவிற்கு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் போனது ஒரு பெரிய இடைவெளியை புலிகளுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தியிருக்கிறது.

பின்னுட்டம் 4 டி சே தமிழன்

Rosemary யின் பின்னூட்டத்தை வாசிக்கும்போது வந்த எண்ணம் ஒன்று.

Rosemary கூறுவதுபோல, முற்றுமுழுதாக தமிழ்மக்கள்/புலிகள் பிரச்சாரத்தின் பலவீனமே சர்வதேசத்தின் பார்வை இப்படி கோணலாய் இருக்கின்றது என்று ஏற்றுக்கொள்ளமுடியாது என்றே நானும் நினைக்கின்றேன்.

....

உதாரணத்துக்கு புலிகளை முன்னிலைப்படுத்தாது (இதற்கு முன்னும் சில மாணவர் போராட்டங்கள் நடந்திருந்தன) கொலைகள் நிறுத்தப்படவும், சமாதானச் செயற்பாடுகள் விரைவில் ஆக்கபூர்வமாய் ஆரம்பிக்கவேண்டும் என்று... அண்மையில் இங்கே நடந்த உரிமைக்குரல் நிகழ்வில் கிட்டத்தட்ட 10 000 மக்கள் கலந்துகொண்டிருந்தாலும், அதைப் பற்றி சிறுசெய்திகளாய்த்தானும் இங்குள்ள வெகுசன ஊடகங்கள் மூச்சுவிடவில்லை (விதிவிலக்காய் தென்னாசிய ரீவி நிகழ்ச்சி ஒன்றின் செய்தியொன்றில் மட்டும் இந்நிகழ்வு பற்றிய செய்தி வந்திருந்தது). மாணவர்கள், இப்படி ஒரு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின

வணக்கம் சசி,

மாலனின் பின்னூட்டம் மிகவும் நகைப்புக் கிடமாகவும் கவலை அழிப்பதாகவும் இருக்கிறது.

இவர் ஜன நாயகம் என்று எதைக் கூறுகிறார் என்று விளங்கவில்லை.

சிறிலங்காவின் அரசை ஒரு ஜன நாயக அரசாக இவர் சொல்வது தான் மிகவும் கிழ்த் தரமான காழ்ப்புணர்வின் வெளிப்பாடாக நான் பார்க்கிறேன்.எட்டப் பட்ட உடன் படிக்கைகளை உதாசீனம் செய்து தமிழ் மக்களின் ஜன நாயகப்போராட்டங்களை இராணுவப்படு கொலைகளால் நசுக்கிக் கொண்டிருக்கும் ஒரு அரசை இவர் நாக் கூசாமல் எவ்வாறு ஜன நாயக அரசு என்று கூறுகிறார் என்று விளங்கவில்லை.இவர்கள் உண்மயிலயே புரியாமல் எழுதுகிறார்களா அல்லது புரிந்து கொண்டே இவ்வாறு எழுதுகிறார்களா என்று விளங்கவில்லை.

மாலன் நீங்கள் விளங்காமல் எழுதுகிறீர்கள் என்று நினைத்து ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையே புலிகள் பிரதிபலிகிறார்கள்.அவர்கள் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை இராணுவ வலிமை கொண்டு எட்டுவதற்காக அமைக்கப் பட்ட விடுதலை அமைப்பு. நாலு வருட பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழர்கள் பெற்றது கொலையும் ,இடம் பெயர்வும் தான்.போரைத்தொடங்கும் படி இன்று புலிகளை நிர்ப்பந்திப்பது தமிழ் மக்களே.

இன்று ஈழத்தில் பல்லாயிரம் மக்கள் தாங்களாக முன் வந்து ஆயுதப் பயிற்ச்சிகளைப் பெறுகின்றனர்.இங்கே புலத்தில் மக்கள் அலை அலயாக நிகழ்வுகளை நடத்துகின்றனர்.உண்ணாவிரதங்க

27 மறுமொழிகள்:

வழக்கம் போல விரிவான பதிவு. தொடருங்கள் ROSAVASANTH, at 2:07 PM /அதே நேரத்தில் "வரலாற்றில் புலிகள் ரத்தக்கறையை ஏற்படுத்தியிருப்பதாக" கருதும் பல நாடுகள், அமைப்புகள், சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தனி நபர்கள் புலிகள் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள அதே நியாயமான காரணங்கள் சிறீலங்கா அரசுக்கும் பொருந்தும் என்பதை எப்படி மறக்கிறார்கள்/மறைக்கிறார்கள் என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

"தாரகி" ஒரு அரசாங்கத்தின் அமைச்சர் அல்ல என்பதைத் தவிர ஒரு சிறந்த சிந்தனையாளராக, பத்திரிக்கையாளராக, சமூக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக வெளிப்பட்டுள்ளார். அவர் கொல்லப்பட்டது, பாரளுமன்ற உறுப்பினராக இருந்த பரராஜசிங்கம் கொல்லப்பட்டது, திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டது (அதனைச் உறுதிச் செய்த SLMM) எனப் பலச் சம்பவங்கள் நடைபெற்றப் பின்னர் சிறீலங்கா அரசு மீது தடை விதிக்க பல நியாயமான காரணங்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு இல்லாமல் அதனை வாய்மூடி மொளனமாக பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள், அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் குறித்த அவநம்பிக்கை எழுகிறது. சிறீலங்கா அரசுப் படைகள் மேற்கொண்ட பல அத்துமீறல்களில் "சிலவற்றையேனும்" காரணமாகக் கொண்டு புலிகள் மீது விதிக்கப்பட்ட அதே அளவிளான தடைகள் சிறீலங்கா அரசு மீதும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காமல் போனதன் காரணம் என்னவென்று எனக்கு தெரிந்தே இருப்பதால் இதன் அரசியல் என்னை வேதனைப்படுத்துகிறது/ எரிச்சல்படுத்துகிறது./

இந்த நிலைதான் எனக்கும் அடிக்கடி வருவது. நல்லதொரு பதிவு. நன்றி சசி. டிசே தமிழன், at 2:17 PM I agree with you about the current situation and the problems that LTTE has to confront. however i beg to differ on why LTTE lost in the propaganda war when GOSL won. It is partially part of LTTE's lack of efficient representatives and propagandists in the west, and the rest is due to the mere "closed eye" politics of the west (read EU, Canada and USA).

I, you as well any other observer of srilankan politics know Kausalyan's assasination preceded Kadigamar's assasination, and Pararajasingam's assasination preceeded the assisasination attempt on Army top brass Fonseka. Yet, NO governernment on the west nor india gave the equivalent improtance to loss of both sides. there is a sort of supporting 'legitimate GOSL" from the west. If you look the history, even a single state NEVER supported a rebel organization unless the particular state gains something out of the rebellion for itself. The words, "democracy", "terrorism" and the pharses in the simliar line get spawned according to 'what is the best for us.' Hence, none can completely blame LTTE for the loss of propaganda war.

Yet, LTTE has a venue that it has not fully explored till this moment. identifying the interests of these countries or at least some of the powerful people in these countries and align themselves with their interests. This helps for LTTE. At least Thirumavalavan showed it as a good move, though his party lost in number of seats seats.

LTTE also wants to have a good propaganist firm to promote them in the west. AT least keep the western born spokepersons or prominent figures who can provide the children of the soil face in the west, like Vannessa Redgrave for Chechniyans, and Richard gere for Tibetians.

canadian situation is a little complecated, as the current conservative premier buffon is more eager to mimic his god fearing gay hating conservative US counterfart for his consistuency rather than alligning with GOSL. In EU's recent actions what many did not notice in the hullabulla of banning LTTE is that tightening GOSL with withholding of funds that was already promissed.

In one way, when i look LTTE's survival in the past, I do not think LTTE will loose much finantially, as it may have alternative finantial resources or mode to flow and follow money into its strips. Rose Mary, at 2:27 PM Rosemary,

உங்களின் கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

தமிழ் ஈழப் பிரச்சனையை உலக நாடுகளிடம் கொண்டு செல்லக் கூடிய ஒரு நபரை, உலக நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்ளக் கூடிய திறமையுடைய ஒருவரை இது வரை புலிகள் உருவாக்கி கொள்ளவில்லை என்பதும் புலிகளின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணம்.

புலிகளின் ஆலோசகராக அறியப்படும் ஆண்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் போன்றோர் இந்தப் பிரச்சனையை எந்தளவுக்கு பிற நாடுகளிடம் Diplomaticஆக அணுக முடிந்திருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது, தற்பொழுது இருக்கின்ற பெரிய இடைவெளி நமக்கு புரிகிறது.

சமாதானக் காலங்களில் தேவைப்படும் இத்தகைய திறமையுள்ள ஒருவரை எப்படி கண்டறியப் போகிறார்கள். ஏற்கனவே இருக்கும் சிலரை பயன்படுத்திக் கொள்ள முடியுமா ? என்ற கேள்விகள் எழுகின்றன.

சமாதானப் பேச்சுகளில் பங்கேற்கும் குழுவை கவனிக்கும் பொழுது கூட பலர் புலிகள் இயக்கத்தில் இருக்கும் முக்கிய தளபதிகள் தான். இதில் எந்த தவறும் இல்லை என்றாலும் இவர்களால் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை, பிற நாடுகளுடன் உறவினை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றைச் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

சமாதானக் குழு என்பது சில நாட்கள் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் குழு மட்டுமே அல்ல. தொடர்ச்சியாக பிற நாடுகளுடன் நல்லுறவை தொடர்ந்து பராமரிக்க தக்க அளவிலான Logistics அந்தக் குழுவிற்கு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் போனது ஒரு பெரிய இடைவெளியை புலிகளுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சசி, at 3:47 PM Rosemary யின் பின்னூட்டத்தை வாசிக்கும்போது வந்த எண்ணம் ஒன்று.

Rosemary கூறுவதுபோல, முற்றுமுழுதாக தமிழ்மக்கள்/புலிகள் பிரச்சாரத்தின் பலவீனமே சர்வதேசத்தின் பார்வை இப்படி கோணலாய் இருக்கின்றது என்று ஏற்றுக்கொள்ளமுடியாது என்றே நானும் நினைக்கின்றேன்.

....

உதாரணத்துக்கு புலிகளை முன்னிலைப்படுத்தாது (இதற்கு முன்னும் சில மாணவர் போராட்டங்கள் நடந்திருந்தன) கொலைகள் நிறுத்தப்படவும், சமாதானச் செயற்பாடுகள் விரைவில் ஆக்கபூர்வமாய் ஆரம்பிக்கவேண்டும் என்று... அண்மையில் இங்கே நடந்த உரிமைக்குரல் நிகழ்வில் கிட்டத்தட்ட 10 000 மக்கள் கலந்துகொண்டிருந்தாலும், அதைப் பற்றி சிறுசெய்திகளாய்த்தானும் இங்குள்ள வெகுசன ஊடகங்கள் மூச்சுவிடவில்லை (விதிவிலக்காய் தென்னாசிய ரீவி நிகழ்ச்சி ஒன்றின் செய்தியொன்றில் மட்டும் இந்நிகழ்வு பற்றிய செய்தி வந்திருந்தது). மாணவர்கள், இப்படி ஒரு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின

வினித் ஏற்கனவே இப்படி ஒரு தலைப்பு இட்டு கருத்து வைக்கப்பட்டுள்ளது. :roll:

சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 2

கடந்த மாதம் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ரமணன் மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் புலிகளின் முன்னரங்க நிலைகளை (Forward Defence Line) பார்வையிட்டுக் கொண்டிருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கும், அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்கும் இடையே சில நூறு மீட்டர் இடைவெளி மட்டுமே இருக்கும் அந்தப் பகுதியில் சிறீலங்கா அரசின் பலமான இராணுவ முகாமும், முன்னரங்க நிலைகளும் உள்ளன.

புலிகளின் பகுதிக்கும், இராணுவ நிலைகளுக்கும் இடையே இருக்கும் யாருக்கும் உரிமை இல்லாத பகுதியில் மறைந்திருந்து நடத்தப்பட்ட ஸ்னைப்பர் தாக்குதலில் கர்னல் ரமணன் சுட்டுக்கொல்லப்பட்டார். புலிகளின் பகுதி மிகவும் பலமாக பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதும், இராணுவத்தின் உதவி இல்லாமல் இராணுவ முன்னரங்க நிலையில் இருந்து யாரும் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்த முடியாது என்பதும் தெளிவான நிலைமை. இந்த தாக்குதலை சிறீலங்கா இராணுவத்தின் deep penetration unit தான் செய்திருப்பார்கள் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.

நிலைமை இவ்வாறு இருக்க, இந்த தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என கருணாப் பிரிவு கூறிக் கொண்டது. இராணுவம் சமாதானக் கால ஒப்பந்தத்தை மீறி இவ்வாறு செய்ததை விடுதலைப் புலிகளின் இரு குழுக்களிடையேயான சண்டையாக மாற்ற அரசு தொடர்ந்து செய்து வரும் தந்திரங்களின் ஒரு உதாரணம் தான் இந்தத் தாக்குதல்.

சமாதானக் காலக்கட்டத்தில் கருணா என்றப் பிரிவை உருவாக்கி இராணுவம் செய்து வரும் இத்தகைய தந்திரங்களை முறியடிக்க, உலகின் கவனத்தை இந்தப் பிரச்சனையின் பக்கம் திருப்ப புலிகள் அதே வகையான உத்தியினை கடைபிடிக்க தொடங்கினர். இராணுவத்திரை மக்கள் குழுக்கள் என்ற அமைப்பினர் மூலம் தாக்க தொடங்கினர். இராணுவம் மீதான இந்த தாக்குதலை நிகழ்த்த அவர்கள் உருவாக்கிய குழுக்கள் தான் மக்கள் குழுக்கள் என்றாலும் இதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புலிகள் தெரிவித்தனர்.

ராஜபக்ஷ பதவியேற்றப் பிறகு குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் தொடங்கி அவருக்கு இந்த மக்கள் குழுக்கள் மூலம் புலிகள் கடும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். இதன் மூலம் சில முக்கிய விடயங்களை சாதிக்க புலிகள் எண்ணினர்.

ராஜபக்ஷ தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எந்த அவகாசமும் வழங்காமல், இந்தப் பிரச்சனையை சர்வதேச அளவில் அதிக கவனத்தைப் பெற வைப்பது. அதன் மூலம் ராஜபக்ஷ மற்றும் சிங்கள இனவாதக் குழக்களின் பிரச்சனைகளையும், தெற்கில் இருக்கின்ற முரண்பாடுகளையும் வெளிப்படுத்துவது.

மக்கள் குழுக்கள் என்ற பெயரில் தொடுக்கப்படும் தாக்குதல் தங்களால் நடத்தப்படவில்லை என்று கூறிக்கொண்டு, இராணுவம் கருணா பெயரில் நடத்துவதற்கு பதில் தாக்குதல் தொடுப்பது.

மக்கள் குழுக்கள் நடத்திய தாக்குதலை நாங்கள் நடத்த வில்லை என்று புலிகள் கூறிக்கொண்டதை யாரும் நம்ப வில்லை. இந்த தாக்குதலுக்கு புலிகள் தான் ஆயுதங்கள் வழங்குகின்றனர் என்பதும், புலிகளின் சிலப் பிரிவு இதனை தொடுத்திருக்கலாம் என்பதாகவுமே அனைவருக்கும் தோன்றியது. உலக நாடுகளும் இந்த தாக்குதலுக்கு புலிகளையே கண்டனம் செய்தன. என்றாலும் இதன் மூலம் புலிகள் மீது நடந்து வரும் தாக்குதல் கருணாவால் நடத்தப்படவில்லை, இராணுவம் தான் செய்து கொண்டிருக்கிறது என்பதும் வெளிப்படுத்தப்பட்டது. SLMM கூட இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் கருணாப் பிரிவு என்ற பெயரில் இராணுவம் செய்து கொண்டிருக்கும் தாக்குதல் தான் என்று குற்றம்சாட்டி இருந்தது.

புலிகளின் உள்பிரச்சனை எனக் கூறிக்கொண்டிருந்தமைக்கு மாறாக இதன் பிண்ணனியில் இருப்பது இராணுவம் தான் என்பதை உலகறிய வைத்ததில் புலிகளுக்கு நிச்சயம் வெற்றி தான். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் என சமாதானத்தில் அணுசரணையாளராக இருக்கும் அனைத்து நாடுகளுமே துணைப்படைகள் என்று கூறிக் கொண்டிருக்கும் பல ஆயுதக்குழக்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கின்றன. ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளில் கூட புலிகளின் நிலைக்கு கணிசமான வெற்றி கிடைத்தது. இந்தப் பேச்சுவார்த்தையே சமாதானக் கால உடன்படிக்கைகளை பலப்படுத்துவது குறித்து தான் நடைபெற்றது. ஜெனிவா மாநாட்டின் முக்கிய தீர்மானமான "துணை ஆயுதக் குழுக்களை" அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானமே, புலிகளின் கோரிக்கையை ஒட்டியே இருந்ததை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

இது அனைத்துமே புலிகளின் ராஜதந்திர செயல்பாடுகள் சரியான தடத்திலேயே சென்று கொண்டிருந்ததை வெளிப்படுத்தியது. அது மட்டுமில்லாமல் ராஜபக்ஷ போன்ற அனுபவம் இல்லாத ஒரு அரசியல்வாதி, ஜனாதிபதியாகிய பொழுது இத்தகைய சிக்கலான விடயத்தை பதவிக்கு வந்த உடனேயே எதிர்கொள்ள வேண்டி நேர்ந்த சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாகவே புலிகள் பயன்படுத்திக் கொண்டனர். இந்தப் பிரச்சனைகளை சமாளிக்க ராஜபக்ஷ தடுமாறியதை தெளிவாக காண முடிந்தது.

ரனில் ஜனாதிபதியாகி இருந்தால் சமாதானத்திற்கு வாய்ப்பிருந்திருக்கும் என்பதான ஒரு கருத்து நிலவி வருகிறது. ரனில் பிரதமராக இருந்த பொழுது நடந்த சமாதானப் பேச்சுவார்த்தை, Co-chairs ஏற்படுத்தப்பட்டது குறித்து என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்ற பெயரில் புலிகளுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்று திரட்ட ரனில் முயற்சி மேற்கொண்டிருந்தார். இதன் மூலம் புலிகளுக்கு ஒரு நெருக்கடியான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவரது திட்டம். அது மட்டுமில்லாமல் ரனில் வெற்றி பெற்றிருந்தால் சிறீலங்காவின் பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கைகளில் ஒரு continuity இருந்திருக்கும். இது புலிகளுக்கு சர்வதேச அளவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். மாறாக ராஜபக்ஷ வெற்றி பெற்றப் பிறகு சிறீலங்கா அரசு மீண்டும் புதியதாக வெளியுறவு கொள்கைகளை புதுப்பிக்க வேண்டிய நிலைக்குச் சென்றிருந்தது. இதனால் சிறீலங்கா அரசுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஒரு தேக்கம் நிலவியதை கவனிக்க வேண்டும்.

இவை தவிர சிறீலங்கா அரசு ராஜபக்ஷ தலைமையில் இருந்தாலும் சரி, ரனில் தலைமையில் இருந்தாலும் சரி சில விடயங்களில் (சிங்கள/புத்த இனவாத நிலைமையில்) பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இந்தியாவில் பாரதீய ஜனதா ஆட்சி செய்தாலும் சரி, காங்கிரஸ் ஆட்சி செய்தாலும் சரி பொருளாதார, வெளியுறவு கொள்கைகளில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டதில்லை. இத்தகைய விடயங்களில் ஒரு தொடர்ச்சி இருக்கத் தான் செய்கிறது. அவ்வாறே பாக்கிஸ்தானில் முஷ்ரப் ஆட்சி செய்தாலும் சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்தாலும் சரி காஷ்மீர் போன்ற விடயங்களில் அங்கு நிலைப்பெற்றிருக்கும் ஒரு பொதுவான நிலையில் இருந்து பெரிய மாற்றத்தை காண முடியாது.

இந் நிலையில் ராஜபக்ஷவிற்கு பதிலாக ரனில் வந்திருந்தால் எப்படி ஒரு அரசாங்கத்தின் கொள்கைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பது எனக்குப் புரியவில்லை. இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கு அதிக அதிகாரம் இருந்தாலும் தென்னிலங்கையில் இருக்கும் அரசியல் நிலைமைக்கு எதிராக ரனில் எதுவும் செய்திருக்க முடியாது. அதுவும் தவிர தென்னிலங்கையில் குறைவான ஆதரவை கொண்டிருக்கும் ரனில் எவ்வாறு தென்னிலங்கையில் இருக்கும் அரசியல் சக்திகளை புறக்கணித்து சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் சென்றிருக்க முடியும் ? ரனில் வந்திருந்தால் இன்று வெளிக்கொணரப்பட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதியின் "தென்னிலங்கை அரசியல் இனவாதம்" மறைக்கப்பட்டு ஒரு மிதவாத நிலை வெளிப்படுத்தப்பட்டிருக்கும

3 மறுமொழிகள்:

சசி,

//புலிகளின் முக்கியமான தோல்வியாக நான் கருதுவது, அவர்கள் கூற நினைப்பதை ராஜதந்திர ரீதியில் கூறாமல் தொடர்ந்து இராணுவ வழியிலேயே கூற முற்பட்டது. இலங்கை அரசும் புலிகளின் தாக்குதலை தொடர்ந்து ஊக்குவித்து கொண்டே இருந்தது. //

இத் தாக்குதல்களுக்குப் பின்னால் பெரிய இராஜதந்திர தந்திரோபாய காரணங்கள் இருக்கின்றன. இத்

தொலை நோக்குப் பார்வையில் நாடாத்தப்பட்டவை. இத் தாக்குதல்களை நடாத்தி இருக்காவிடின்

இன்று "சர்வதேசம் " என தங்களை அழைத்துக் கொள்ளும் ஏகாதிபத்தியவாதிகளின் கை இலங்கையில் ஓங்கி இருக்கும். ஆனால் இன்றைக்குப் பார்த்தீர்களா நிலமையை? இணைத்தலமை நாடுகள் எனக் கூறிக்கொள்ளும் நாடுகள் , கைக்கெட்டாவிட்டால், ச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்பது போல , தாங்கள் சமாதான முயற்சிகளில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்துள்ளன. நான் இவற்றையெல்லாம் நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன்.

//அது போல தற்பொழுது சர்வதேச மயமாகி விட்ட ஈழப் போராட்டத்தில் அரசியல் ரீதியிலான படுகொலைகள் பின்னடைவுகளை ஏற்படுத்துமே தவிர எந்த அனுகூலத்தையும் கொடுத்து விடாது.//

நான் இப்படி நினைக்கவில்லை. வெற்றி, at 12:14 AM வெற்றி,

இந்த தாக்குதல்களுக்கு பின் இருக்க கூடிய ராஜதந்திர நிலைகளை நான் ஒப்புக்கொள்கிறேன். அதனை என் பதிவிலும் குறிப்பிட்டு இருக்கிறேன். ஆனால் தாக்குதல்களையும், நாடுகளுடனான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்ற ராஜதந்திர நிலைகளையும் கொண்ட அணுகுமுறையை அமைத்து கொண்டிருக்க வேண்டும் என்பது தான் என் கருத்து. அவ்வாறு இல்லாமல் போனது தான் தற்போதைய பின்னடைவுக்கு காரணம்.

சர்வதேச சமூகத்தின் எண்ணத்திற்கு ஏற்ப நடக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்ச்செல்வன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்ததாக ஞாபகம். இத்தகைய அணுகுமுறையில் சில சாதகங்கள் இருந்தாலும் சர்வதேச நாடுகளை முற்றாக புறக்கணிக்கவும் முடியாது. தமிழ் சசி, at 12:41 AM This is one fork of the views that anyone who thinks Mr. Rajapakse is for peace must read

“Taming the Tigers” and “Targeting Tamils in Sri Lanka”

http://tamilweek.com/news-features/archives/409

After all, this is not from a LTTE sympathiser's blog. ஜூலியன், at 1:15 AM

Add a comment

Links to this post

வணக்கம் சசி,

உங்கள் அடுத்த பதிவு ,இன்றைய பேச்சுவார்த்தைகளின் முடிவில் எழுதுவீர்கள் என்று நினைத்தேன்.

அவசரப் பட்டு விட்டீர்கள்.அதெற்கென்ன மேலும் பதிவுகள் தொடரும் தானே.

நான் முன்னர் சொன்னது போல் ராஜதந்திர நகர்வுகள் வலுச் சம நிலைகளில் இருந்தே மேற்கொள்ளப்படலாம்.ஒரு நிலைக்கப்பால் இன்றய கணத்தில் இருக்கும் வலுச் சம நிலையால் மேலும் நகர்வுகளை மேற்கொள்ள முடியாத , முடிவுறும் தறுவாயில், இன்னொரு வலுச் சமனிலைக்கானா போர் மூழ்கிறது. நாம் இன்றிருக்கும் காலகட்டம் அவ்வாறான காலகட்டமே.

பல சம்பவங்கள் இனி தொடராக இடம் பெறலாம்.

மேலும் நீங்கள் புலிகளின் ,அன்றில் தமிழ் ஈழ மக்களின் நிறுவனங்கள் புலத்தில் இல்லாமை பற்றிக் குறிப்பிட்டீர்கள்.இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் இங்கு நிதர்சனமான நிலமை, தடையால் வெளிப்படையாக இயங்க முடியாமை ஒன்று.மற்றது போராட்டத்தின் மேல் அவாவும் ,நேர்மையும்,தியாக சிந்தை உடயவர்களையும் ,தகுதி ஆனவர்களையும் நியமிப்பது என்பது முயற்கொம்பான காரியம்.இவர்களுக்கான அங்கீகாரம் என்பது அந்த, அந்த நாடுகளின் வெளி உறவுக்கொள்கையினாலயே ஈற்றில் தீர்மானிக்கப்படுகிறது.இது ஒருவகையில் கோழியா ,முட்டையா முதலில் என்பதைப் போலான விடயம்.

இவை எல்லாவற்றையும் விட இனி விரியும் கள நிலமைகளே அடுத்த ராஜதந்திர நகர்வுகளுக்கானா அடித் தளத்தை இடப் போகின்றன.

இனித் தான் சதுரங்க ஆட்டத்தின் முன் நகர்வுகள் (opening moves) ஆரம்பம் ஆகப் போகிறது.அதற்குள்ளாகவே முடிவை எழுதிய மாலன் போன்றோர் , தமது பதிவுகளை மீள்பரீசீலனை செய்ய வேண்டிய நிலமை ஏற்படும்.

June 08, 2006 3:00 PM

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.