Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களுக்கான யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் அவசரமானதும் அவசியமானதுமான அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களுக்கான யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் அவசரமானதும் அவசியமானதுமான அழைப்பு

university%20of%20jaffna.jpg#

மதிப்பிற்குரிய தேசிய தலைவர் தலைமையில் தனி நாட்டை நோக்கிய ஆயுதப்போராட்டம் ஆனது 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டது.இந்த ஆயுதப்போரட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். பல இலட்சம் அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள பேரினவாத அரசால் கொன்று அழிக்கப்பட்டனர்.

பன்னாட்டு சமூகத்தின் பூரண ஆதரவுடன் சிறிலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது மிகப்பெரும் இன அழிப்பு போரை நாடாத்தி முடித்தது. தமிழ் மக்களாகிய எங்களின் பேசும் குரல் ஆகிய விடுதலைப்புலிகளின் ஆயுத வழிப்போராட்டம் மௌனிக்கபட்டு மூன்றரை ஆண்டுகள் கடந்த விட்டன. பன்னாட்டு சமூகத்தின் உயர் நிறுவனம் ஜ.நா கூட தமிழ் மக்கள் விடயத்தில் அமைதியாக இருந்து விட்டது. தமிழ் மக்களாகிய நாங்கள் இன்று மேய்ப்பவர் அற்ற மந்தைகளாக அலைந்து திரிகின்றோம்.

தாயகத்தில் இன்று சிங்கள அரசு பலவேறுவகையான இன அழிப்பை மேற்கொண்டு வருகின்றது. அது பல்வேறு வடிவங்களில் தமிழர் தாயகம் எங்கும் வியாபித்து தனது பேரினவாதத்தின் கோர முகத்தினை காட்டிக்கொண்டு இருக்கின்றது. சிங்கள குடியேற்றம் இராணுவத்திற்கு பலவந்தமாக பெண்களை இணைத்தல் போன்ற எண்ணற்ற அட்டூழியங்களை தமிழர் தாயகம் எங்கும் நிகழ்த்தி வருகின்றது. இதற்கு எதிராக பன்னாட்டு சமூகங்கள் வெறுமனே அறிக்கைகளை விட்டுக்கொண்டு காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கின்ன.

தமிழ் மக்கள் மீது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்புக்கு எதிராக யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் எங்களால் இயன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றோம். கடந்த காலங்களில் எங்களிற்கு முன்னர் கல்வி கற்ற மாணவர்கள் எத்தனையோ விலைமதிப்பில்லா தியாகங்களை எமது உரிமைப்போரிற்காக செய்தனர். அன்றைய காலத்தில் பேசும் குரல் பக்க பலமாக மாணவர்களின் உணர்ச்சிகளோடு சேர்ந்து நின்றது. அனால் இன்று நாம் சிங்கள பேரினவாத அரசிற்கு எதிராக முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளிற்கும் எங்களுக்கு மேலதிக பக்க பலமாக யாரும் இல்லை. பல்கலைக்கழத்தில் துணைவேந்தர் உட்பட பெரும்பாலான விரிவுரையாளர்கள் சிங்கள அரசினதும் கைக்கூலி அமைச்சரதும் கைப்பொம்மைகளாக உள்ளனர். எனவே அநேக சந்தர்ப்பங்களில் எங்களுக்கு எதிரான செயற்பாடுகளையே மேற்கொண்டனர் இதனால் நாங்கள் பலவகையான பாதிப்புக்களை எதிர் கொண்டோம். இருப்பினும் நாங்கள் ஒரு போதும் அச்சமடையப்போவதில்லை.

இன்றைய சிங்கள பேரினவாத அரசின் திறந்த வெளி சிறைச்சாலைக்குள் நின்று தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டுக்கொண்டு இருக்கம் இன அழிப்பை இயன்றவரை சிங்கள அரசிற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றோம். எங்களால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ஆர்ப்பட்டம் கூட்டங்களின் போதும் பல நூற்றுக்கணக்கான இராணுவம் மற்றும் பொலீஸார் மற்றும் புலனாய்வாளர்கள் சுற்றி நிற்க பலவகையான கெடுபிடிகளை தாண்டியே முன்னெடுக்க வேண்டி இருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மாவீரர் நிணைவேந்தல் நிகழ்வுகளின் போது நாங்கள் படும் துயரங்கள் கொஞ்சமல்ல. எங்கள் ஒவ்வொரு மாணவர்களிற்கும் இன்றுவரை பாதுகாப்பாக இருந்த ஒரே ஒரு இடம் மாணவ மாணவியர் விடுதி தான் ஆனால் அதுவும் இன்று இல்லாமல் போய்விட்டது.

சிங்கள அரசின் இவ்வாறான அடாவடி தனங்களை கண்டு நாங்கள் பயப்படவில்லை மாறாக எங்கள் உணர்வுகள் மேலும் பல மடங்காக அதிகரித்து காணப்படுகின்றது. தடி அடி செய்தும் பிஸ்டல்களாலும் எங்களை அடிமையாக்கி விடலாம் என்று சிங்கள அரசு கனவு காண்கின்றது. மாவீரத்தெய்வங்களின் தியாகங்கள் எங்கள் கண் முன்னே நிற்கின்றது எனவே நாங்கள் ஒருபோதும் எங்கள் உரிமையை வென்றெடுக்க பின் நிற்க்கப்போவதில்லை சாத்தியமான சகல வழிகளிலும் உரிமை போரை முன்னெடுத்து செல்வோம். தாயகத்தில் எங்களால் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு போராட்டத்திற்கும் அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல புலம் பெயர் உறவுகளாகிய தாங்கள் அணைவரினதும் ஒத்துழைப்பை காலத்தின் தேவை கருதி வேண்டி நிற்கின்றோம்.

ஆனால் புலம்பெயர் தேசத்தில் காணப்படும் தற்போதைய நிலையினை எண்ணி நாங்கள் பெரும் வேதனையும் கவலையும் அடைகின்றோம்.அதாவது தாங்கள் வாழும் தேசத்தில் காணப்படும் பிரிவினைகள் அதாவது கடந்த மாவீரர் எழுச்சி நிகழ்சிகளை இரண்டு பிரிவாக மேற்கொண்டு மாவீரர்களின் தியாகங்களை மதிக்காமல் நடைபெறும் நிகழ்வுகள். இதனால் தங்களது தேசத்தில் வாழும் மக்களும் குழம்பி போயுள்ளனர். யாரை நம்புவது என்ற பெரும் குழப்பத்தில் தங்கள் தேசத்தில் உள்ள மக்கள் தவிக்கின்றனர். இவ்வாறான குழப்பங்களை சிங்கள அரசு மிகத்திறமையாக மேற்கொண்டு வருகின்றது.. இந்த சதி முயற்சிகள் எங்கள் மாணவர் கட்டமைப்பை சிதைப்பபதற்கும் சிங்கள அரசு பல வழிகளில் முயன்று தோல்வி கண்டுள்ளது.எங்கள் பலத்தை குறைப்பதற்கு பல மில்லியன்களை செலவு செய்தது. இன்றும் செலவு செய்து கொண்டு இருக்கின்றது. அதாவது 21 தேசத்துரோகிகளை மாத சம்பளம் கொடுத்து தனது வேலைகளை செய்து வருகின்றது. ஆனால் இவை எல்லாம் எங்கள் முன் தோற்றுக்கொண்டு இருக்கின்றது.

சிங்களத்தின் இந்த தோல்விக்கு பிரதான காரணங்களாக

1 மாவீரர்களின் உயரிய தியாகம்

2 தனி நாட்டிற்கான உயரிய இலக்கு.

3 மதிப்பிற்குரிய தேசியத்தலைவரின் வழிகாட்டல்.

இந்த காரணங்களிற்கு முன்னால் சிங்களத்தின் சதிகள் தோற்று போய்விடும். இதனாலேயே சிங்கள இராணுவம் சுற்றி நிற்க மாவீரர்களிற்கு ஒரு தலைமையின் கீழ் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்க நிகழ்வு எங்களால் முன்னெடுக்கப்பட்டது. அதனையும் தாண்டி சிங்கள இராணுவத்திற்கு எதிராக ஆர்ப்பட்டமும் செய்ய முடிந்தது. தாங்கள் ஒவ்வொருவரும் பார்த்திருப்பீர்கள் எங்கள் மீது சிங்கள இராணுவம் நடாத்தும் தாக்குதல்கள். ஆனால் அவை எங்களுக்கு வலிகளை தரவில்லை. ஏன் எனில் எங்களிற்கு மேலே சொல்லப்பட்ட காரணங்கள் அடி மனதில் உள்ளது. ஆகவே மேலே சொல்லப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தங்கள் தேசங்களில் உள்ள அமைப்புக்கள் காலத்தின் தேவை கருதி விரைவாக ஒன்றிணையுமாறு மிகத்தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம். இல்லையேல் நாங்கள் வாங்கும் ஒவ்வொரு தாக்குதல்களும் பயனற்றதாகி போய்விடும்.

தாங்கள் அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் எங்கள் உரிமைப்போராட்டம் இலக்கினை நோக்கி விரைவாக முன்னெடுக்க முடியும். தாயகத்தில் காணப்பட்ட எங்கள் உறவுகள் நிம்மதியாக துயில் கொண்ட ஆலயங்களை பாருங்கள். பேரினவாத அரசு தனது கொலை வெறியை ஆடி இருக்கின்றது. மாவீரர்களது குடும்பங்கள் இன்று ஒரு நேர சாப்பாட்டிற்கே அல்லல்படுகின்றார்கள்... முன்னாள் போராளிகள் படும் துன்பங்கள் எங்களால் சொல்ல வரிகள் இல்லை குறிப்பாக பெண் போராளிகள் விதவைகள் படும் வேதனைகள் உலகத்தில் எந்த பகுதியிலும் நடைபெறவில்லை. இவை அனைத்தையும் தெரிந்த பிறகும் தாங்கள் பிரிந்து செயற்படுவது எங்கள் மனங்களில் பெரும் வேதனை அளிக்கின்றது. எங்கள் விடுதலைப்போர் விரைவாக முன்னெடுத்து செல்ல வேண்டிய மிக முக்கியமான ஒரு உலக ஒழுங்கில் நாங்கள் அனைவரும் பயணித்துக்கொண்டு இருக்கின்றோம். இந்த நிலையில் பிரிந்து செயற்படுவதன் மூலம் நாங்கள் எங்கள் இலக்கினை அடைய முடியாது அதனைவிடவும் பிரிந்து நிற்பதன் மூலம் சிங்கள அரசின் சதிகளுக்கு நாங்கள் அனைவரும் தெரியாமல் துணைபோகின்றோம்.

எனவே பெரும் மதிப்பிற்குரிய புலம் பெயர் உறவுகளே.

மாணவர்களாகிய எங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை பன்னாட்டு சமூகத்திற்கு தெளிவுபடுத்தும் செயற்திட்டத்தினூடாக தாங்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு மிகத்தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம். இதனை ஒரு ஆரம்ப புள்ளியாக எடுத்து விரைவான இலக்கை நோக்கி ஒன்றிணைய முடியும் என்ற நம்பிக்கை மாணவர்களாகிய எங்களிடம் இருக்கின்றது.

மதிப்புக்குரிய புலம் பெயர் தேசத்தில் வாழும் பெற்றோர்களே....

தாங்கள் அனைவரும் தங்களால் இயன்ற பணிகளை செய்து கொண்டிருக்கின்றிர்கள். மாணவர்களாகிய எங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் படங்களை பாத்திருப்பீர்கள். நாங்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பிள்ளைகளை போன்றவர்களே.நாங்களும் தங்கள் பிள்ளைகளை போல் கல்வி கற்கவேண்டும் என்ற அவா உள்ளது ஆனால் சிங்கள பேரினவாத அரசின் காட்டுமிராண்டித்தனம் எங்களை விடுவதாக இல்லை. எனவே எங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களிற்காக வீதியில் இறங்கி தாங்கள் வாழும் தேசங்களில் வாழும் மக்களிற்கு தெரியப்படுத்துங்கள்.

அன்புக்குரிய புலம்பெயர் இளையோர்களே.....

உங்களால் தான் பிரிவினைகளை ஒன்றிணைக்க முடியும். ஒன்று சேர்ந்து பாடுபடுங்கள். நிச்சயம் பிரிந்து நிற்பவர்களை ஒன்றிணைக்க முடியும். தாங்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் உயர் கல்விகூடங்களில் சேர்ந்து கற்கும் பிற இன மாணவர்களிற்கு தெளிவு படுத்தங்கள் எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களிற்கு வெறுமனே அறிக்கைகளை விட்டுக்கொண்டு இருக்க வேண்டாம் விரைவாக செயற்படுங்கள் தாங்கள் விரைவாக செயற்படுவதன் மூலம் மாவீரர்களின் கனவுகளை விரைவு படுத்த முடியும்.......

எனவே காலத்தின் தேவை கருதி யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகமாகிய நாம் இந்த உயரிய வேண்டுகோளை தங்கள் முன் வைத்தருக்கின்றோம்.. எங்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை விரைவாக செயற்படுத்துவீர்கள் என்று நம்பி இருக்கின்றோம். நாங்கள் தாயகத்தில் மிகவும் எழுச்சியான மனத்தைரியத்தோடு இருக்கின்றோம்.

இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையோடும் மாவீரரின் தியாகத்தை கனவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடும்.

யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம்

நன்றி - eeladhesam.com

Edited by nochchi

532202_305354086235177_656340131_n.jpg

இந்த அடக்கு முறையை சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்லக் கூடிய பொறுப்பு புலம் பெயர்ந்த மக்களின் பிரதிநிதிகளின் பாரிய கடமை.

[size=5]"யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்: உலகளாவிய தமிழ் இளையோர் அவை"[/size]

399974_305690659534853_1019029648_n.jpg

[size=5]"யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்: உலகளாவிய தமிழ் இளையோர் அவை"[/size]

[size=5]கண்டன அறிக்கை விடுவதில் தவறில்லை.

ஆனால் பட ஆதரங்களுடன், படுகொலை ஆதரங்களுடன் சிங்கள இந்திய அரச பயங்கரவாதிகளின் கூட்டு தமிழின அழிப்பை சக சர்வதேச மாணவ அமைப்புக்களின் கவனத்துக்கும், வெளிநாடு ராஜதந்திரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லாதவரை இந்த அறிக்கைகளால் ஒரு பயனும் இல்லை.[/size]

[size=1]

[size=5]முக நூல் - மனோ கணேசன் [/size][/size]

[size=1]

[size=5]Jaffna University Students Arrested in Jaffna reported to Civil Monitoring Commission (CivilMC) said DPF leader Mano Ganesan, convener of Civil Monitoring Commission (CivilMC)

(Pls Share)

Jaffna University Student Union Secretary Paramalingam Dharshananth of the Art Faculty and Ganeshalingam Sutharshan of the Medical Faculty have been arrested by the Jaffna police. Both have been picked up by the Police from their respective residences early as 1.30am today (01/12/12).

Also Jaffna district Kopay police have arrested Kanagasabapathy Jenami Jeyan of the Art Faculty and Shanmugam Solomon of the Art Faculty, yesterday (31/11/12) noon .

All four students, reported to have been brought to Colombo from Jaffna.

This is the fallout to the series of incidents occurred in last few days in Jaffna.

Army entered university student hostel on early this week and assaulted the students. The next day, a protest march of the students in vicinity of the university was also came under attack. In this melee, a vehicle of Saravanabavan MP was damaged. And the editor of the Uthayan newspaper was physically attacked.

Students who received injuries were hospitalized at the Jaffna hospital. They came under threat by armed men while receiving treatment inside the hospital. Thus the students voluntarily returned home.

The army is accusing the students of conducting remembrance day inside Jaffna university in the last week of November.

The students maintain that they have the right to remember their fallen and dead. They also argue that JVP in the south is permitted to hold public ceremonies and large marches in the south every year in the months of April and November in remembrance of their fallen comrades who took up arms against the Srilankan state in 1971 and 1989.[/size][/size]

68818_225070137625128_883473660_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.