Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச அழுத்தம் நீதியானதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அழுத்தம் நீதியானதா?

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது தடை விதித்திருக்கிறது. இத் தீர்மானம் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாலும் ஒரே மனதுடன் ஏற்கப்பட்டிருக்க வேண்டும். முன்னர் பி(F)ன்லாந்து, டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA), ஐக்கிய இராச்சியம் (UK) இரண்டினதும் அழுத்தத்துக்கு அந்த மூன்று நாடுகளும் அடிபணிந்ததால் இத்தீர்மானம் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாலும் ஒரே மனதுடன் ஏற்கப்பட்டது. இது செய்தி.

சர்வதேச அழுத்தங்கள் ஏன் உபயோகிக்கப் படுகின்றன? எப்படி உபயோகிக்கப் படுகின்றன? அவை நீதியானவையா? அவை பாரபட்சம் அற்றவையா? அண்மைக்கால நிகழ்வுகள் சிலவற்றைக் கீழே காணலாம்.

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. திரவியம் தேடி திரைகடல் ஓடியதும், திரவியம் இருந்த நாடுகளை அடிமைப்படுத்தியதும், திரவியம் எடுத்து முடிந்ததும் அந்நாடுகளை வறிய நாடுகளாக்கி சுதந்திரத்தைக் கொடுத்து கைவிட்டதும், அந்நாடுகள் தம் பிடிக்குள்ளேயே இருக்கவேண்டும் என்பதற்காக அவற்றை வளம்படுத்த என உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் மூலம் கடன் வழங்குவதும், கொடுக்கும் கடன் இவ்வாறுதான் செலவு செய்யப்படவேண்டும், அதன் மூலம் பெறும் உபகரணங்கள், கருவிகள் அனைத்தும் குறிப்பிட்ட நாடுகளிலிருந்தே பெறவேண்டும் என்று கடனாளிக்கே சட்டதிட்டங்கள் போடுவதும் வரலாற்று உண்மைகள். இத்தகைய மேற்கத்தய சிந்தனை, பொருளோ அன்றி பொருள்வளமோ அற்ற நாடுகளின் சித்தத்துக்கு மாறுபட்டாலும் மாற்று வழியின்றி வளமற்ற நாடுகள் ஒரு முடிவிலியில் மாட்டுப்படுகின்றன.

பொருள்வளம், மனிதவளம் உள்ள நாடுகளில் எவ்வித சர்வதேச அழுத்தத்துக்கும் இதுவரை மசியாமல் இருப்பது சீனா மட்டும்தான். அமெரிக்க டொலருக்கும் சீன யுவானுக்கும் இடையே உள்ள நாணய மாற்று வீதம் சீனாவுக்கே சாதகமாக இருப்பதால் அதை மாற்ற சர்வதேச சமூகம் எடுத்த முயற்சி இதுவரை பலனளிக்கவில்லை. இந்தியப் பிரதமர்களில் திருமதி இந்திரா காந்தியின் காலத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு உதிரிப்பாகங்கள் கொடுக்காமல் அழுத்தம் கொடுக்க சர்வதேச சமூகம் எடுத்த முயற்சி அன்று பலனழிக்கவில்லை. இப்பொழுது ஈரான் நாட்டுக்கு பொருளாதாரத் தடை விதிக்கவோ, அல்லது போர் தொடுக்கவோ சர்வதேச சமூகம் ஆதாரங்கள் தேடுகின்றன. வாய்ச் சண்டையில் ஈரானும் சர்வதேச சமூகமும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஜனநாயகமும், பத்திரிகைச் சுதந்திரமும் மத்திய கிழக்கு நாடுகளில் இல்லை என்று கூக்குரலிட்ட சர்வதேச சமூகம், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்கப்படிருந்த ஹமாஸ் இயக்கம் மக்களால் சர்வதேச கண்காணிப்பாளர்கள் முன் தேர்தலில் ஜனநாயகரீதியில் பெரும்பான்மைக் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சர்வதேச அழுத்தத்தின் விளைவு மூன்று மாதம் பலஸ்தீன பொதுமக்களுக்கு அரச ஊதியம் இல்லை. பத்திரிகைச் சுதந்திரம் வேண்டி ஆரம்பிக்கப் பட்ட அல் ஜசீரா தொலைக்காட்சி ஊடகத்தின் ஈராக்கிலிருந்த ஒளிபரப்பு நிலையம் கூட ஈராக் எதிர்ப்பு கூட்டமைப்பு நாடுகளால் குண்டு வீசித் தகர்க்கப்பட்டது. இவைகூடச் செய்திகளே.

இது உலகக் கிண்ண உதைபந்தாட்ட திருவிழாக்காலம். கொரியா நாட்டுப் போரினால் இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் வட கொரியா, தென் கொரியாவாக இரண்டாக இருக்கிறது. ஆனால் அதே காலம் இரு நாடுகளாகப் பிளவுபட்ட வியட்னாம் ஒரே நாடாகி விட்டது. 2006 உலகக் கிண்ண உதைபந்தாட்ட திருவிழாக்காணும் ஜேர்மனி கூட இரு நாடுகளாகப் பிளவுபட்டு ஒரே நாடாகி விட்டது. இங்கிலாந்தில் நடந்த 1966 உலகக் கிண்ண உதைபந்தாட்ட திருவிழாவில் 16 நாடுகள் பங்கேற்றன. 16வது இடம் ஆபிரிக்காவிலிருந்து நியூசிலாந்து வரை உள்ள 70க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒன்றுக்கு ஒதுக்கப்பட்டது. கடைசிப் போட்டிக்கு அவுஸ்திரேலியாவும், அவுஸ்திரேலியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தால் தடைசெய்யப் பட்ட வட கொரியாவும் தகுதி பெற்றன. அந்த ஆட்டம் வடகொரியா மீது அவுஸ்திரேலியாவின் தடையினால் அவுஸ்திரேலியாவில் இடம்பெறாமல் பக்க சார்பற்ற கம்புச்சியா (கம்போடியா)வில் நடைபெற்றது. வட கொரியா வென்றது. அவுஸ்திரேலியாதான் வெல்லும் என்ற எண்ணத்துடன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து, வட கொரிய வீரர்களுக்கு எவ்வாறு நாட்டுக்குள் புகும் அனுமதி (Visa) வழங்குவது, அந்நாட்டின் கொடி பறக்கவிட எவ்வாறு அனுமதிப்பது, அந்நாட்டின் தேசீய கீதம் இசைக்க எவ்வாறு அனுமதிப்பது, போன்ற பல தர்மசங்கடமான நிலைகளுக்குள் தள்ளப்பட்டது. இவற்றைச் செய்யாவிடின் FIFA வேறு நாடொன்றுக்கு 1966 உலகக் கிண்ண உதைபந்தாட்ட திருவிழாவை மாற்றிவிடுமே! அது நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றிவிடுமே! எல்லாவற்றையும்விட நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கப்போகிறதே! என்ற பயங்கள் மேலிட முதல் ஆட்டத்துக்கும், இறுதி ஆட்டத்துக்கும் மட்டும்தான் தேசிய கீதம் இசைப்பது, வட கொரியா பங்குபற்றும் முதல் சுற்று ஆட்டங்களைப் பிரபல்யமற்ற சிறிய நகரான Middlesboroughவில் வைப்பது போன்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டந்தின் தரத்தை இறக்கியதும், இரண்டாம் சுற்றுக்கும் சென்று இங்கிலாந்து மக்களின் ஆதரவையும், பாராட்டையும் வட கொரிய வீரர்கள் பெற்றதும் வரலாற்று உண்மை.

எனவே, சர்வதேச அழுத்தங்கள் சர்வதேச சமூகத்தின் பொருளாதார வளத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. சுய அரசியல் இலாபங்களுக்காகவும் அவை பயன்படுத்தப் படுகின்றன. ரஷ்யா பல நாடுகளாகத் துண்டாடப்பட்டவுடன் Cold War முடிந்து விட்டது. இப்பொழுது நடப்பது பயத்தை அடிப்படையாகக் கொண்ட உலக அரசியல். அணு ஆயுத பயம், இரசாயன ஆயுத பயம், சர்வதேச சமூகத்தின் சொல்வழி நடக்காத நாடுகளை எல்லாம் பயங்கரவாத நாடுகளென முத்திரை குத்துவது, மரபுவழிப் போர் தவிர்ந்த நியாயமான கோரிக்கைகளை வேண்டி நடத்தும் போர் முறைகளையும் பயங்கரவாதம் என பரப்புரை செய்வது போன்றவற்றால் தம் நாட்டு மக்களையும் பயப்படுத்தி ஆட்சிபீடத்தில் நீடிப்பது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதும் பயங்கரவாத இயக்கம் என தடை போடப்பட்டுள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகளின் வானளாவிய பொருளாதார வளர்ச்சி அந்நாடுகளை வல்லரசுகள் ஆக்கி விடப் போகிறதே என்ற சர்வதேச சமூகத்தின் பயம் தான் காரணமா? இதைத் தடுக்க சர்வதேச சமூகத்தின் தளமாக்க இலங்கையின் நிலையற்ற அரசியலை உபயோகிக்கும் எண்ணமா? இலங்கையின் பொருள்வளம் சர்வதேச சமூகத்துக்குத் தெரியாதா? இலங்கையின் பொருள்வளம் நிச்சயமாக காரணமில்லை. சில வேளை இலங்கையில் பொருள்வளம் உள்ளது என்று சர்வதேச சமூகத்தின் புலனாய்வுச் செய்மதிகள் தெரிவித்துள்ளனவா?

சர்வதேச அழுத்தங்கள் ஏன் உபயோகிக்கப் படுகின்றன? எப்படி உபயோகிக்கப் படுகின்றன? அவை நீதியானவையா? அவை பாரபட்சம் அற்றவையா? உங்களின் சிந்தனைக்கு.....

-தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த காலத்திலேயும் சர்வதேசம் நம் பக்கம் சாயும் என நினைக்க வேண்டாம்.நம்முடைய வலிமையே நம்மைக் காப்பாற்றும்.

ஓம் ஓம் சர்வதேச சமூகம் "பயணத் தடை" "தனிநபர் தடை" "அமைப்பு தடை" "தடை நீக்கம்" என்று நல்லா பராக்காட்டுது எங்களை. சிங்களவன் அங்காலை வலு கிரமமா 5...10...15 என்று போட்டுத்தள்ளிறான்.

ஓரே அடியா பெரிய வெட்டு வெட்ட வந்தா எதிர்த்து தடுப்பம் எண்டு போட்டு கொஞ்சம் கொஞ்சமா கீறி கீறி இரத்தை ஓடவிட்டு மெதுவாக சாகடிக்கிறாங்கள். நாங்களும் பொறுமையின் விழிம்பிலை மாதக்கணக்கு முடிஞ்சு வருடக்கணக்கா நிக்கப்போறம் போலை கிடக்கு. உப்பிடியே விட்டா உந்த விழிம்பிலேயே வைச்சு எல்லாரும் சேந்து எங்களுக்கு சமாதி கட்டிப்போடுவங்கள்.

ஓரே அடியா பெரிய வெட்டு வெட்ட வந்தா எதிர்த்து தடுப்பம் எண்டு போட்டு கொஞ்சம் கொஞ்சமா கீறி கீறி இரத்தை ஓடவிட்டு மெதுவாக சாகடிக்கிறாங்கள். நாங்களும் பொறுமையின் விழிம்பிலை மாதக்கணக்கு முடிஞ்சு வருடக்கணக்கா நிக்கப்போறம் போலை கிடக்கு. உப்பிடியே விட்டா உந்த விழிம்பிலேயே வைச்சு எல்லாரும் சேந்து எங்களுக்கு சமாதி கட்டிப்போடுவங்கள்.

எல்லாத்துக்கும் காரணம் இருக்கு... காலப்போக்கில் தெரிந்து கொள்ளுவீங்கள்.....!

மக்கள் மனங்களில் இப்போதான் ஒரு தெளிவான நோக்கம் தெரிகிறது.... ஒருகாலத்தில் (சில மாதங்களுக்கு முன்னால்) சிங்களவனோடு சமாதானமாய் ஒத்துவாழலாம் எண்டவை எல்லாம் இப்ப சண்டைதான் சரியான முடிவு என்று வேறை சோல்லுகினம்.... !

நீதியோ இல்லையோ எங்களுக்கு இதுதான் தீர்வு என்று சொல்லி விட்டு அதை தமிழர் ஏற்கவில்லை என்றால் எதையும் செய்திருக்கலாம். இது சும்மா ஆயுத விற்பனையை மேம்படுத்த உதவி செய்திருக்கினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.