Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த வாரம் இரவு வானில் ஒளி மழை

Featured Replies

இந்த வாரம் 13 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி  இரவில்  வானிலிருந்து ஒளி மழையாகப் பொழியும். வானிலிருந்து சர் சர் என்று ஒளிக் கீற்றுகள் கீழ் நோக்கி இறங்கும். ஆனால் இந்த ஒளிக்கீற்று எதுவுமே தரை வரை வராது.

சாதாரண நாட்களில் நீங்கள் இரவு வானில்  ‘ நட்சத்திரம் கீழே விழுவதை’ பார்த்திருப்பீர்கள். நுண்ணிய துணுக்கு ஒன்று காற்று மண்டலத்தில் நுழைந்த பின்னர் தீப்பற்றிக் கீழ் நோக்கி இறங்கும் போது ஏதோ ஒரு நட்சத்திரம் விழுவதைப் போலத் தோன்றும். மணல் துணுக்கு போன்ற வெறும் துணுக்கு தான் இப்படி ஆர்ப்பாட்டமான காட்சி காட்டுகிறது..சில சமயங்களில் இது கூழாங்கல் சைஸில் இருக்கலாம்.

Meteor+via+cumbrian+sky.jpeg

வானிலிருந்து இறங்கும் ஒளிக்கீற்று. இது  வெறும் துணுக்கு தான்.Credit Via Cumbrian Sky

ஆண்டில் குறிப்பிட்ட  சமயத்தில் இரவு வானில்  மணிக்குப் பல நூறு துணுக்குகள் வீதம் இப்படி  நெருப்புப் பொறிகளாகக் கீழே இறங்கினால் அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த மாதம் மேற்படி இரு தேதிகளில் வானில் இக்காட்சியைக் காணலாம். வானவியலார் இதற்கு ஜெமினைட் ஒளிமழை (Geminid Meteor Shower ) என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தத் துணுக்குகள் எங்கிருந்து வந்தன?  சாலை வழியே வலை போட்டு மூடாமல் குப்பை லாரி போனால் அந்த லாரியிலிருந்து வழி நெடுக குப்பை கீழே விழுந்தபடி செல்லும். அல்லது மணல் லாரி போனால் வழி நெடுக மணல் சிந்திக் கிடக்கும்

இந்த மாதிரியில் ஒரு வால் நட்சத்திரம் சூரியனைச் சுற்றி விட்டுச் செல்வதறகாக வரும் போதும் சூரியனைச் சுற்றி விட்டுத் திரும்பிச் செல்லும் போதும் அந்த வால் நட்சத்திரத்திலிருந்து எண்ணற்ற நுண்ணிய துணுக்குகள் வெளிப்படும். ஆகவே வால் நட்சத்திரம் சென்று விட்ட பிறகும் அது சென்ற  பாதையில் இந்த துணுக்குகள் மிதந்தபடி இருக்கும். விண்வெளியில் காற்று கிடையாது என்பதால் இவை அடித்துச் செல்லப்படாமல் அதே இடத்தில் இருக்கும்.

பூமியானது சூரியனைச் சுற்றி  வருகையில் இவ்விதத் துணுக்குகள் இருக்கும் இடத்தைக் கடந்து செல்லும். அப்போது இந்த்த் துணுக்குகள் பூமியின் காற்று மணடலம் வழியே இறங்கும். அப்போது இந்த ஒளிமழை நிகழும்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வாக்கில் பெர்சைட் ஒளிமழை (Perseid Meteor Shower )  நிகழும். அதே போல  நவம்பரில் Leonid Meteor Shower  நிகழும். டிசம்பர் மத்தி வாக்கில் ஜெமினைட் ஒளிமழை.தோன்றும். இந்த மாத மத்தியில்  இது காணப்படும் என்றாலும் 13 ஆம் 14 ஆம் தேதிகளில் தான் உச்சத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Asteroid+3200+Phaethon++geminid+showers.

ஜெமினைட் ஒளிமழைக்குக் காரணமாகக் கருதப்படும் பேயிதான் அஸ்டிராய்டின் சுற்றுப்பாதை

ஜெமினைட் ஒளிமழை உச்சம் இந்த ஆண்டு அமாவாசை தினத்தன்று நிகழ்வதால் வானவியல் ஆர்வலர்களுக்கு மிக வசதி. ஒளிமழைக் காட்சி இரவு வானில் நன்கு தெரியும். சில ஆண்டுகளில் இது  பௌர்ணமி வாக்கில் நிகழும். அப்படி ஏற்படும் போது ஒளிமழைக் காட்சி எடுப்பாக இராது.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும்பாலானவர்கள் கார் வைத்திருப்பர் என்பதால் ஒளிமழைக் காட்சியைக் காண்பதற்கு ஊருக்கு வெளியே -- சுற்றுவட்டாரத்தில் விளக்கு வெளிச்சமே இல்லாத பொருத்தமான திறந்த வெளிக்குப் போய் முகாமிட அவர்களால் இயலும்.ஜெமினைட் ஒளிமழையைக் காண்பதற்கு  இரவு ஒரு மணி முதல் மூன்று வரையிலான நேரம் உகந்தது என்று சொல்லப்படுகிறது.

எங்குமே வெளிச்சமில்லாத இடத்துக்கு சென்ற பின் அந்த இருட்டுக்கு உங்கள் கண்கள் பழகிக் கொள்ள சுமார் 20 நிமிஷம் ஆகும. அதன் பின்னரே உங்களால் வானிலிருந்து கீழ் நோக்கி இறங்குகின்ற ஒளிக்கீற்றுகளை நன்கு காண இயலும் என்று  இது தொடர்பான நிபுணர்கள் கூறியுள்ளனர். நகரில் வசிப்பவர்கள் நள்ளிரவில் எழுந்து மொட்டை மாடியில் நின்று பார்த்தால் சில ஒளிக்கீற்றுகளைத் தான் காண இயலும் என்று கூறப்படுகிறது.

இந்த ஒளிமழைக்கு ஜெமினைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் உண்டு. வானில் மிதுன ராசிக்கு ஆங்கிலத்தில் Gemini  என்று பெயர்.  அந்த ராசி உள்ள வான் பகுதியிலிருந்து இந்த ஒளிமழை வருவது போலத் தோன்றும். ஆகவே தான் இது Geminid  என அழைக்கப்படுகிறது

பெர்சைட் ஒளிமழை, லியோனிட் ஒளிமழை ஆகியவை  வால் நட்சத்திரங்களிலிருந்து வெளிப்பட்ட துணுக்குகளால் ஆனவை என்று அறியப்பட்டுள்ளது.

geminid+meero+shower.jpg

வானில் மிதுன Gemini ராசி உள்ள பகுதியிலிருந்து தான் ஒளிகீற்றுகள் கீழ் நோக்கிப் பாயும்.

ஆனால் ஜெமினைட் ஒளிமழைக்கான காரணம் அதாவது அந்த ஒளிமழையைத் தோற்றுவிக்கும் துணுக்குகள் எப்படித் தோன்றின என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை.

பொதுவில் ஒளிமழைக்கு வால் நட்சத்திரங்களின் துணுக்குகள் காரணமாக இருந்தாலும் ஜெமினிட் ஒளிமழைக்கு 3200 பேயிதான் என்னும் பெயர் கொண்ட அஸ்டிராய்ட் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதாவது இந்த அஸ்டிராய்ட் சூரியனை நெருங்கும் போது அதிலிருந்து வெளிப்பட்ட துணுக்குகள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த் அஸ்டிராய்ட் அவவப்போது சூரியனை சுற்றிவிட்டுச் செல்கின்றது.

http://www.ariviyal.in/2012/12/blog-post_12.html

Meteor shower

A meteor shower will be visible in the skies above Sri Lanka these days, according to the Sri Lanka Astronomical Association.

The Association said that last night and tonight (December 14) were the peak days of the shower. The best time to view it would be the early hours of the morning. 

http://www.dailymirror.lk/news/24249-meteor-shower.html

  • தொடங்கியவர்

இலங்கையின் வான்பரப்பில் இந்த நாட்களில் விண்கற்கள் பொழிவினை காணலாம் என்று இலங்கை வானியல் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாலை மற்றும் காலை நேரங்களில் விண்கற்கள் பொழிவதை தெளிவாக காணலாம் என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54734-2012-12-14-03-34-09.html

எனக்கு ஒவ்வொரு நாளும் வானிலிருந்து ஒளிக்கீற்று வருவதுபோல் ஓர் உணர்வு ................ :rolleyes:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு ஒவ்வொரு நாளும் வானிலிருந்து ஒளிக்கீற்று வருவதுபோல் ஓர் உணர்வு ................ :rolleyes:  :lol:

உங்கள் உணர்வில் அல்லது அவதானிப்பில் தவறில்லை. தினமும் பூமியின் வளிமண்டலத்துக்குள் சிறிய அளவிலான எரிகற்கள் நுழைகின்றன. அவை எரிந்து கொண்டு வளிமண்டலத்தில் உயர் வேகத்தில் பயணிக்கும் போதே ஒளிக்கீற்றுக்கள் தோன்றுகின்றன. அவற்றில் பெரும்பாலனவை நிலத்தையோ சமுத்திரத்தையோ அடைய முன் எரிந்து சாம்பலாகி காற்றில் கலந்து விடுகின்றன.

அதேவேளை ஆண்டுக் காலத்தில் சில பகுதிகளில் வளிமண்டலத்துக்குள் நுழையும் இந்த எரிகற்களின் எண்ணிக்கை வழமையை விட கூடவாக இருக்கும். அதற்குக் காரணம்.. தமக்கான சுற்றுவட்டப் பாதையில் பயணிக்கும் விண்கற்களில் சில.. சூரியனை அண்மிக்கும் போது.. அவற்றின் பாறைகள் சூரியனின் கதிர்ப்புகளால் வெப்ப மிகுதியால்.. பகுதியாக வெடித்துச் சிதறி மேலும் பல எரிகற்களாக மாறிப் பயணிப்பது தான். அவற்றில் சிலவும் மேலதிகமாக  பூமியின் வளிமண்டலத்துள் நுழையும் போது.. வழமைக்கு மாறாக அதிக ஒளிக்கீற்றுக்கள் வானில் தோன்றும். :)

Edited by nedukkalapoovan

 நன்றி நெடுக்ஸ் அருமையான விளக்கத்திற்கு...................நான் என் கண்ணில் எதோ பிழை என்று யோசித்துவிட்டேன்....................

ஏனனில்  தற்சமயம் என் வாழ்வின் முக்கால் பகுதி கணனியுடன் போகிறது .............வேலை,வேலையுடன் சேர்ந்த யாழ் ,அது போதாமல் இசை முயற்சிகள் ................உண்மையில் மூளை களைப்பதை  விட கண்ணே அதிகம் களைத்து விடுகிறது....................கண்ணாடி போடும் நிலை இதுவரை இல்லை .[கருப்புக்கண்ணாடியை தவிர ].........இனி வருமோ தெரியாது :D

நீங்கள் சொல்வது மிகச் சரி. உங்களுக்கு மட்டுமல்ல.. இன்றைய தலைமுறை ஆக்கள் எல்லோரிடமும் இது இருக்கிறது. குறிப்பாக பல சிறுவர் சிறுமியர்கள்.. கண்ணாடி அணியும் நிலைக்கு மிகச் சிறுவயதிலையே போய் விடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் கண்ணை ஓய்வின்றி வைத்து தொலைக்காட்சியில்.. கணணியில்.. தொடு திரைகளில்.. விளையாட்டுக்களை விளையாடுவதும் தான்.

கண் மட்டும் களைப்படையாமல்... கண் வில்லையை.. கண்ணின் அசைவுகளை கட்டுப்படுத்தும் தசைகளும் நீண்ட சுருக்கங்களின் விளைவாக சோர்வடைவதால்... கண் சார்ந்த பிரச்சனைகள் சிறுவர்கள் மத்தியில் பெருகிக் கிடக்கின்றன. பெற்றோரும் அறிவற்றவர்களாக நடந்து கொள்கின்றனர்.

எப்போதும்.. 30 நிமிடங்கள் திரைகளில் வேலை செய்தால்.. குறைந்தது 10 நிமிடம் ஆகாயத்தை அல்லது தொலை தூர வான் பொருட்களை பார்ப்பதன் மூலம் கண்ணை ஓய்வுக்கு கொண்டு வரலாம். ஆனால் பலர் அப்படி செய்வது குறைவு. குழந்தைகள் பல மணி நேரங்கள் திரை விளையாட்டுக்களில் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர். பெற்றோர் குழந்தைகளின் குழப்படியை குறைக்க இதனை ஒரு மார்க்கமாக பாவிக்கின்றனர். இவை தவறான அணுகுமுறைகளாகும்.

இருந்தாலும்.. எவர்  அறிவுரைகளை கேட்கிறார்கள். அவரவர் தங்களுக்கு தேவை என்று உணர்வதைச் செய்கிறார்கள்..பின்னர் பிரச்சனைகள் வந்த பின் தான்.. வைத்தியம் தேடி ஓடுகிறார்கள். வருமுன் காப்போம் என்ற ஆன்றோரின் வாக்கு இன்று செயலற்றுப் போயாச்சு. அதன் விளைவையும் நாம் காண்கிறோம்.  :)

மேலும் இப்படியான புதிய பிரச்சனைகளும் இனங்காணப்படுகின்றன..

Computer Vision Syndrome (CVS)

Staring at a computer monitor for hours on end has become a part of the modern workday. And inevitably, all of that staring can put a real strain on your eyes.

The name for eye problems caused by computer use is computer vision syndrome (CVS). CVS is not one specific eye problem. Instead, the term encompasses a whole range of eyestrain and pain experienced by computer users.

Research shows computer eye problems are common. Somewhere between 50% and 90% of people who work at a computer screen have at least some symptoms of eye trouble.

In addition, working adults aren't the only ones vulnerable to computer vision syndrome. Kids who stare at portable video games or who use computers throughout the day at school also can experience eye problems related to computer use, especially if the lighting and computer position are less than ideal.

If you have computer vision syndrome, you may experience some or all of these symptoms:

  • Blurred vision (பார்வைத் தெளிவின்மை)
  • Double vision (இரட்டைத் தோற்றம்)
  • Dry, red eyes (உலர் மற்றும் சிவப்பு நிற கண்கள்)
  • Eye irritation (கண்ணில் அரிப்பு)
  • Headaches (தலையிடி)
  • Neck or back pain (கழுத்து மற்றும் முதுகுப்புற தசைகளில் நோ)

http://www.webmd.com/eye-health/computer-vision-syndrome

Edited by nedukkalapoovan

எப்போதும்.. 30 நிமிடங்கள் திரைகளில் வேலை செய்தால்.. குறைந்தது 10 நிமிடம் ஆகாயத்தை அல்லது தொலை தூர வான் பொருட்களை பார்ப்பதன் மூலம் கண்ணை ஓய்வுக்கு கொண்டு வரலாம். ஆனால் பலர் அப்படி செய்வது குறைவு. குழந்தைகள் பல மணி நேரங்கள் திரை விளையாட்டுக்களில் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர். பெற்றோர் குழந்தைகளின் குழப்படியை குறைக்க இதனை ஒரு மார்க்கமாக பாவிக்கின்றனர். இவை தவறான அணுகுமுறைகளாகும்.

இருந்தாலும்.. எவர்  அறிவுரைகளை கேட்கிறார்கள். அவரவர் தங்களுக்கு தேவை என்று உணர்வதைச் செய்கிறார்கள்..பின்னர் பிரச்சனைகள் வந்த பின் தான்.. வைத்தியம் தேடி ஓடுகிறார்கள். வருமுன் காப்போம் என்ற ஆன்றோரின் வாக்கு இன்று செயலற்றுப் போயாச்சு. அதன் விளைவையும் நாம் காண்கிறோம்.  :)

 மீண்டும் நன்றிகள்.....நெடுக்ஸ்  30 நிமிடத்திற்கொருமுறை முயர்சித்துப்பார்க்கிறேன் ...உண்மையில் இந்தக்கருத்து என்னைப்போல்  பலருக்கு பயன்படும் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்......

இந்த விடயத்தில் என் குழந்தைகள் சம்பந்தமாக நான் மிகுந்த கவனம் ...................என் துணைவி என்னை விட கவனம் ............உண்மையில் சிறு வயதில் குழந்தைகள் கண்ணாடி போடுவது மேல்கூறிய காரணங்களின் பிரகாரம் என்றால் அது ஏற்கமுடியாது [சிலருக்கு பரம்பரை சம்பந்தமான சில நோய்களினால் கட்டாயம் தேவை ]........பெற்றோர்கள் இந்த விடயத்தில் கவனமாய் ,அவதானமாய் இருக்கவேண்டும் .......

சிறுவயதில் கண்ணாடி அணிவதற்கு பல காரணங்கள் இருந்தாலும்.. அளவுக்கு அதிகமானோர் அணிய வேண்டிய நிலை தோன்ற இதுவும் ஒரு காரணியாக உள்ளமை மறுக்கப்பட முடியாத விடயம். பரம்பரைக்கு அப்பால் சூழல் காரணிகளும் எமது உடல் நிலை சார்ந்து பல்வேறு தாக்கங்களைச் செய்கின்றன. அதனை நாம் நிராகரித்து வாழ முனைவது தவறு. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.