Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதுவரையில் 49 எலும்புக்கூடுகள் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

04=1-960-60(1)(1).jpg

(சுபுன் டயஸ்) 
மாத்தளை வைத்தியசாலையின்  வளவிலிருந்து இதுவரையில் 49 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகளின் போதே இவ்வெலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இந்த பாரியளவிலான புதைகுழி தொடர்பில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளதால் அதிகாரிகள் தமது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இவை எப்போது புதைக்கப்பட்டன?, இங்கு புதைப்பதில் தொடர்பானவர்கள் யார்? போன்ற கேள்விகளுக்கு இன்றும் விடை காணப்படாமல் உள்ளது. 

இவர்கள், 1971ஆம் ஆண்டு பயங்கரவாதத்தின் போது கொல்லப்பட்டவர்களா அல்லது 1987 மற்றும் 1989ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் நிலவிய பயங்கரவாத நடவடிக்கைளின் போது கொல்லப்பட்டவர்களா என்பது தொடர்பில் பல ஊகங்கள் உள்ளன. 

இரண்டு வாரங்களுக்கு முன்னர் பக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி கிடங்குகள் தோண்டப்பட்டபோதே இந்த மர்மமான எலும்புக்கூடுகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்...

மாத்தளை மனித புதைகுழியை அம்பலப்படுத்தவும்: ஜே.வி.பி

மண்டையோடுகள் மீட்பு விவகாரம்; சி.ஐ.டி. விசாரணை 

மாத்தளையில் 24 மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் மீட்பு

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54796--49-.html

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் மத்திய பகுதியில் உள்ள மாத்தளையில் 60 உடலங்களுடன் கூடிய பெரிய மனிதப் புதைகுழி ஒன்று கடந்த மாதம் அளவில் அகழப்பட்டுள்ளது.

 

இந்த மனித உடலங்கள் ஜே வி பி யினரினதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற போதும்.. இது 1940 களில் ஏற்பட்ட மண் சரிவால் ஏற்பட்ட புதைகுழியாகா இருக்கலாம் என்கிறார் சிறீலங்காவின் பொலிஸ் பேச்சாளர்.

 

அதேவேளை ஆஸ்பத்திரி வட்டாரங்கள் அங்கு கொப்பளிப்பான் நோயாளிகளினது உடலங்களின் எச்சங்களும் இருப்பதாகச் சொல்கின்றன.

 

ஆனாலும்.. இதுவரை இது குறித்த சரியான விபரங்கள் வெளியிடப்படும் அளவிற்கு இந்த மனித எச்சங்கள் மீதான பகுப்பாய்வுகள் பூர்த்தியாகவில்லை.

 

இதே நிலையில்.. இப்படியான பல புதைகுழிகளை சிறீலங்கா சிங்கள அரசும்.. தமிழர் விரோத தமிழ் கூலிக்குழுக்களும்.. இந்தியப்படைகளும் சிறீலங்கா பூரா தமிழர்களுக்கு எதிராகவும் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

============

 

If it is a grave of people who were killed during the JVP insurrection, this would unfortunately be nothing new in Sri Lanka.

There are believed to be dozens of similar sites from that era, a time in which 60,000 or more young people are said to have disappeared.

 

Large numbers may be buried in the same area in the north where thousands of civilians perished in shelling towards the end of the war against Tamil Tiger insurgents in 2009 - but where no open process of excavation has been permitted.

 

http://www.bbc.co.uk/news/world-asia-20726027

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊடகச் செய்திக்கும் பிபிசி செய்திக்கும் இடையில் உள்ள பதப் பிரயோகத்தைப் பாருங்கள்.

 

இவர்கள் ஜே வி பி கிளர்ச்சியை பயங்கரவாதம் என்று எழுத்துகிறார்கள். ஆனால் பிபிசி..

 

எதிர்காலத்தில் இந்த ஊடகங்களில் இருந்து செய்தி இணைக்கும் உறவுகள்.. சொற் தணிக்கை செய்து இணையுங்கள். இந்த ஊடகங்கள் நாசூக்காக நஞ்சை விதைப்பன. பேரினவாதத்திற்கும் அரச பயங்கரவாதத்திற்கும் துணை போவனவும் கூட..!

 

http://www.bbc.co.uk/news/world-asia-20726027

Edited by nedukkalapoovan

There are allegations that the bodies are those of Sinhalese guerrillas who fought a bloody left-wing insurgency more than 20 years ago.

 

எலும்புக்கூடுகள் இலங்கையில் கண்கள் எங்கே?அது ஜப்பானில்.

 
இது யூ என் பீக்கு வைத்த ஆப்பு. நீங்களும் கொலை செய்து புதைத்துள்ளீர்.ஆகவே எங்கள் கொலைகளை பற்றிக் கேள்விகேட்டால் உள் நாட்டிலேயே உங்களை நாறடிப்போம் என்ற தொனியில் போகப் போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.